நாத்திகத்தில் ஊறிய தந்தையின் மகளாகப் பிறந்த நான், இருபத்து மூன்று வயது வரை எந்த ஆலயத்துக்கும் சென்றறியேன். பின்னர், வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்ட பின்னர் கொண்ட கணவரையும் பெற்ற தாய் தந்தையரையும் பிரிந்து வாழும் சூழ்நிலை ஏற்பட்டது. வேற்றூரில் அனாதை விடுதி ஒன்றில் குழந்தையுடன் தஞ்சமடைந்தேன். அங்கே நடக்கும் அநியாயங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் வெளியேறினேன்.
இளநிலை ஆசிரியப் பணிக்கு பயிற்சி பெற்றிருந்தும் ஒரு பாமரப் பணியாளாக, அடிமையாக,சமையற்காரியாக வேலை செய்து கொண்டு துன்பத்தில் சிக்கி மீள்வதற்கு வழி தெரியாமல் அனுதினமும் கண்ணீரில் கரைந்துகொண்டிருந்தேன்.
அவ்வப்போது ஒய்வு கிடைக்கும் நேரத்தில், காஞ்சி பெரியவரின் வித விதமான படங்களை (வார, மாத இதழ்களில் வெளியானவைகளை) நீளமான ஒரு நோட்டில் ஒட்டிவைப்பது வழக்கம். ஒரு முறை, ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்கள் என் வீட்டில் படுத்திருப்பது போலவும் அவருடைய கால்களை பிடித்துவிடுவது போலவும் கனவு வந்தது.அன்றைய தினத்தில் இருந்து அவர் மீது பெரும் பக்தி ஏற்பட்டது.
துன்பத்தின் உச்சியில் இருந்த ஒரு நேரத்தில், என்னுடைய ஆசிரியப் பயிற்சி சான்றிதழையும் ஸ்ரீ சுவாமிகளின் பட ஆல்பத்தையும் சேர்த்து பழைய பேப்பர் கடையில் போட அனுப்பிவிட்டேன். ஆனால்,கடைக்காரரோ படங்கள் அடங்கிய சான்றிதழையும் நான் தவறுதலாக அனுப்ப்விட்டதாக கருதி, அதை என்னிடமே திரும்ப கொண்டுவந்து கொடுத்துவிட்டார். இதற்கு ஏதோ காரணம் இருக்கிறது என்று அதை பத்திரமாக வைத்துக்கொண்டேன்.
அடுத்த சில மாதங்களுக்குள்ளேயே சற்றும் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. என் எதிரியான தீயவனுக்கு தண்டனையும் எனக்கு இந்த துன்பத்திலிருந்து விடுதலையும் கிடைத்தது. சென்னையில் என் சகோதரன் எனக்கு ஆதரவும் அடைக்கலமும் கொடுத்தான்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆசிரியரப் பணியில் சேர்ந்தேன். (சான்றிதழ்கள் கைவசம் இருந்ததால் பிழைத்தேன்). ஐம்பது வயதுக்கு மேல் பி.லிட், பி.எட். பட்டதாரியானேன். பல நூல்களை வெளியிட்டுள்ளேன். சமூக சேவை அமைப்புக்களில் சேர்ந்து தொண்டு செய்கிறேன்.
ஓரிரு முறையே தரிசித்திருந்தாலும் என்னுடைய இன்றைய வாழ்வு அவர்கள் அருளாசியால் கிடைத்தது என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.
(பல முன்னணி வார மாத இதழ்களில் இவர் தொடர்கள் எழுதி வருகிறார். புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறார்)
‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ என்னும் நூலில் புலவர் அனு வெண்ணிலா, சென்னை – 83
================================================================
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
================================================================
[END]
இனிய காலை வணக்கம்., காலையில் குருவின் மகிமையை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி. 50 வயதிற்கு மேல் பி லிட் , பி எட் பட்டதாரி ஆனது குருவின் மகிமையை தவிர வேறு எவ்வாறு இருக்க முடியும். மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த தனது பக்தைக்கு கனவில் வந்து காட்சி கொடுத்த மகான் , தனது பக்தைக்கு பரிபூரண ஆசி வழங்கி இருக்கிறார்.
குரு மகிமையை படிக்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது. இன்று நான் குரு சரித்ரா ஒருவாரத்தில் படித்து முடிப்பதற்காக ஆரம்பித்து விட்டேன். குருவின் அருளால் எல்லோருடைய கோரிக்கைகளும் நிறைவேற பிரார்த்திக்கிறேன்
குருவே சரணம்
நன்றி
உமா
குருவே சரணம்
காஞ்சி மகா பெரியவர் பற்றி படிக்கும் போதெல்லாம் மனம் அமைதி அடைகிறது..
குரு தரிசனம் தினமும் பெற ஆவலாய் உள்ளோம்.
சமய ஒற்றுமைக்கு இவ் உண்மை நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு
பாரிஸ் ஜமால்,
நிறுவனத் தலைவர். பிரான்ஸ் தமிழ் சங்கம்
பாரிஸ். பிரான்ஸ்
நன்றி ஜமால் அவர்களே.
தளத்தை நீங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
– சுந்தர்
சுந்தர் சார் காலை வணக்கம்
அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை
நன்றி
குரு மகிமை அற்புதம்.
மகா பெரியவா அவர்களை நேரில் பார்த்து ஆசீர்வாதம் வாங்கினாலோ அல்லது அதிச்டணம் சென்று வந்தாலோ தான் நமக்கு நம் வினைகள் அகலும் என்பது இல்லை.
அவர் நினைவை எந்நேரமும் மனதில் சுமந்து இருந்தாலே நமக்கு என்ன தேவையோ அது தக்க நேரத்தில் நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்.
குருவருளும் திருவருளும் பெற்று மகிழ்வோம்
வாழ்க வளமுடன்
எழுத்தாளர் திரு பாலகுமாரன் கூறியது
எல்லா செயல்களையும் நீங்கள் பிறரிடமிருந்து கற்றுக் கொள்கிறீர்களே அன்றி எதையும் நீங்களாக அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொண்டதை நேர்த்தியாக செய்கிறீர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், வாழ்வின் அறிவு என்பது சக உயிரினமிடத்திருந்தே வருகிறது. தலை வாருதலிலிருந்து காலணி அணிவது வரை மற்றவர்கள் சொல்லி தந்துதான் அறிந்து கொள்கிறீர்கள் என்கிற போது வாழ்வின் ஆதாரமாக உள்ள ஆத்ம தாகத்தை, உயிரின் தவிப்பை, தன் இருப்பை அறிவது என்பதை எவரும் அறியாமல் நீங்களாக உணர்ந்து கொள்ள முடியுமா? இதை நானாக தெரிந்து கொள்வேன் என்று இறுமாந்து திரிவது நல்லதா. கடவுள் அறிதல் அல்லது தன்னை அறிதல் என்கிற விஷயத்திற்கு வெகு நிச்சயம் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறார். அந்த வழிகாட்டிக்கு குரு என்று பெயர்.
குருவடி சரணம்.