Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > மஹா பெரியவா கருணை – நிறைவேறிய மற்றொரு பிரார்த்தனை! Righmantra Prayer Club

மஹா பெரியவா கருணை – நிறைவேறிய மற்றொரு பிரார்த்தனை! Righmantra Prayer Club

print
ம் பிரார்த்தனை கிளப்பில் சமர்பிக்கப்பட்ட பிரார்த்தனை நிறைவேறிய மற்றொரு நிகழ்வு இது. மதுரையை சேர்ந்தவர் நம் தள வாசகி சுந்தரி வெங்கட் அவர்கள். ஓர் தனியார் நிறுவனத்தில் கணக்கராக பணிபுரிகிறார். நமது தளத்தை தினசரி தவறாமல் படித்து நம் தளம் வலியுறுத்தும் கருத்துக்களை தவறமால் கடைபிடித்துவருபவர்களில் ஒருவர். நம் தளத்தின் மீது அவர் வைத்திருக்கும் பற்றும் மதிப்பும் அவரது வார்த்தைகளிலேயே உணர்ந்துகொள்ள முடியும்.

20frParamacharya_AR_635197gசில வாரங்களுக்கு முன்னர், ‘அவசரம்’ என்று குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அதில், அவரது தங்கை மகள் ஹரிணி (வயது 10), விளையாடும்போது மாடிப்படியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாகவும், தலையில் பலத்த அடிபட்டுவிட்டதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், நினைவு சற்று தவறி இருப்பதாகவும் கூறி, அவளுக்காக பிரார்த்தனை செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். அவர் அந்த மின்னஞ்சலை கண்டவுடன் அவரை தொடர்புகொண்டு பேசினேன்.

“மஹா பெரியவாவை உடனே வேண்டிக்கொள்ளுங்கள்” என்று நான் அவரிடம் பரிந்துரை செய்வதற்கு முன்னரே அவர்கள் அவரிடம் சரணடைந்துவிட்டனர் என்பதை பேசும்போது தெரிந்துகொண்டேன்.

ஹரிணி பரிபூரணமாக குணமடைந்தவுடன் அவளை காஞ்சியில் உள்ள மஹா பெரியவாவின் அதிஷ்டானத்திற்கு அழைத்து சென்று தரிசித்துவிட்டு வாருங்கள் என்றேன்.

அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டுவிடும் என்பதை அவரிடம் பேசும்போதே புரிந்து கொண்டேன். அந்தளவு அவர் மஹா பெரியவா அவர்கள் மீது அசைக்க முடியாத பக்தி மட்டுமல்ல பேரன்பும் கொண்டிருந்தார்.

அவரது பிரார்த்தனை கோரிக்கை கடந்த அக்டோபர் 6, 2013 அன்று நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் வைக்கப்பட்டு பிரார்த்திக்கப்பட்டது. வேத அத்யபகர் திரு.சத்தியமூர்த்தி ஸ்வாமி அவர்கள் அந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருந்தார்.

இதோ பிரார்த்தனை சமர்பிக்கப்பட்ட அடுத்த சில வாரங்களில் ஹரிணி பரிபூரண குணமடைந்து பள்ளிக்கு செல்ல துவங்கிவிட்டாள். இதை ஒரு மிகப் பெரிய அதிசயம் என்று தான் சொல்வேன். ஏனெனில், விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் ஹரிணி அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நேரம் அவள் எத்தனை பெரிய ஆபத்தில் இருந்தாள் என்பதை சுந்தரி அவர்களும் சரி நானும் சரி நன்கறிவோம். தலையில் ஏற்படும் காயம் சாதாரணமானது அல்ல. இருப்பினும் மஹா பெரியவா அவர்களை சரணடைந்த காரணத்தால், மிகப் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டு, குழந்தை காப்பாற்றப்பட்டாள்.

இது குறித்து சுந்தரி வெங்கட் அவர்கள் நமக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தை இத்துடன் தருகிறேன்.

============================================================

பிரார்த்தனையின் பலன்

ஒரு குழந்தைக்கு கிடைத்த மஹா பெரியவா அவர்களின் ஆசியும் கருணையும் !

வணக்கம் அன்பர்களே…

ரைட்மந்த்ரா தளம் துவக்கப்பட்ட நாள் முதல் நான் அதன் தீவிர வாசகி. பிரார்த்தனை கிளப் துவக்கப்பட்டது முதல் இந்த பகுதியில் இடம்பெறும் அனைத்து பிரார்த்தனைகளையும் படித்துவிடுவேன். மறக்காமல் பிரார்த்தனை செய்வேன்.

தன்னை நம்பி வரும் பக்தர்களை இரட்சிப்பதிலும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதிலும் மஹா பெரியவா அவர்களின் கருணை அளப்பரியது. அது குறித்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி, என் தங்கை மகள் ஹரிணி (10) விடுமுறைக்காக என் வீட்டிற்கு வந்திருந்தாள். விளையாடும்போது மாடிப்படியில் இருந்து இடறி விழுந்துவிட்டாள். பின்னந்தலையில் அடிபட்டு மயக்க நிலைக்கு போய்விட்டாள். என் செய்வதென்று தெரியாத நிலையில், மருத்துவமனையில் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நான் ரைட்மந்த்ரா FOUNDER சுந்தர் அவர்களை தொடர்புகொண்டு ஹரிணிக்காக பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர் அடுத்து வந்த வாரம், வேத அத்யபகர் திரு.சத்தியமூர்த்தி ஸ்வாமிஅவர்களின் தலைமையில் பிரார்த்தனை நடத்தினார்.

கூட்டுப் பிரார்த்தனையின் வலிமையையும், மஹா பெரியவா அவர்களின் கருணையும் சேர்ந்துகொள்ள திரு.சத்தியமூர்த்தி ஸ்வாமிகளின் அவர்களின் பிரார்த்தனை நிறைவேறி குழந்தை ஹரிணி காப்பாற்றப்பட்டாள். தற்போது ஹரிணி நன்றாக உள்ளால். பள்ளி செல்கிறாள்.

பிரார்த்தனை செய்த அனைத்து நல்லுலங்களுக்கும், ரைட்மந்த்ரா ஆசிரியருக்கும், சத்தியமூர்த்தி ஸ்வாமிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

என் மகள் கோமதி பி.ஈ. மூன்றாம் ஆண்டு படித்துவருகிறாள். அவளது சிறப்பான எதிர்காலத்திற்கு உங்கள் அனைவரையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

சுந்தரி வெங்கடாசலம்,
மதுரை

============================================================
இந்த வார பிரார்த்தனை கிளப்பிற்க்கு தலைமை தாங்குபவர்: சமூக சேவகர் திரு.ரகுபதி அவர்கள்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு இவர் ஒரு கலங்கரை விளக்கம் !

டாக்டர்.கே.ரகுபதி. அடிப்படையில் ஒரு NATUROPATHY மருத்துவர். நரிக்குறவர் இன குழந்தைகளின் நலனுக்காகவும் அவர்களின் கல்விக்காகவும் தன்னையே அற்பணித்துக் கொண்டவர் இவர். சைதாப்பேட்டையில் அண்ணாசாலைக்கு வெகு அருகில் இவருக்கு உரிமையும் அனுபவப் பாத்யதையும் உள்ள ஒரு பிரதான இடத்தில், ஆதரவற்ற குழந்தைகல் மற்றும் நரிக்குறவர் இன குழந்தைகளுக்காக ஒரு பிரம்மாண்ட கட்டிடம் எழுப்பி அதில் அக்குழந்தைகளுக்கு உணவு, உடை, இருப்பிடும் அளித்து கல்வியும் கற்பித்து வருகிறார். பலவித சிரமங்களுக்கு இடையே இந்த பணியை திரு.ரகுபதி செய்து வருகிறார்.

DSC_7768
நமது ஆண்டுவிழாவில் திரு.ரகுபதி கௌரவிக்கப்படுகிறார்

இங்கு கல்வி பயிலும் நரிக்குறவ இன குழந்தைகளுக்கு உண்ண உணவும், தங்குமிடமும் இலவசம். பல மாணவர்கள் இங்கு தங்கி படிக்கிறார்கள். நரிக்குறவ இனத்து குழந்தைகள் மட்டுமல்ல…. ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோர் இருந்தும் அவர்களால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் என பல குழந்தைகள் இங்கு தங்கி படிக்கின்றனர். சென்னை தவிர மேலும் பல பல மாவட்டங்களில் இவருக்கு இது போன்ற பள்ளிகள் இருக்கின்றன. வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள இவரது இந்த சீர்த்திருத்தப் பள்ளிகளில் படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 650 க்கு மேல் இருக்கும்.

நம் தளம் சார்பாக இதுவரை இங்கு பண்டிகை மற்றும் விஷேட நாட்களில் ரெகுலராக அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. இந்த தீபாவளியை முன்னிட்டு கூட இங்குள்ள குழந்தைகளுக்கு நம் தளம் சார்பாக வடை, பாயசத்துடன் கூடிய தீபாவளி விருந்து அளிக்கப்படவிருக்கிறது.

சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு கல்வியறிவே இல்லாமல் போய்விடக்கூடிய ஒரு சமூகத்தின் பால் அக்கறைகொண்டு அவர்களின் குழந்தைகளுக்கு உணவுடன் தங்க இடம் கொடுத்து ஒருவர் இலவசக் கல்வி கற்பிக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. இப்படிப்பட்ட ஒருவரை பார்த்ததே நாம் செய்த பாக்கியம் தான்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கூட்டமைப்பு தலைவராக உள்ள திரு.ரகுபதி இது தவிர மேலும் முதியோர் இல்லம், கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கான இல்லம், பால் பண்ணை, பசுமைத் தோட்டம், என பலவற்றை நடத்தி வருகிறார்.

திருவள்ளுவர் பால் மிகவும் ஈடுபாடு கொண்ட திரு.ரகுபதி தனது கல்வி நிறுவனங்கள் பலவற்றுக்கு திருவள்ளுவர் பெயரையே வைத்திருக்கிறார்.

 நமது தளம் சார்பாக நடைபெற்ற ஒரு அன்னதானத்தின் போது... திரு.ரகுபதி

நமது தளம் சார்பாக நடைபெற்ற ஒரு அன்னதானத்தின் போது… திரு.ரகுபதி

தாழ்த்தப்பட்ட, ஆதரவற்ற மற்றும் நரிக்குறவர் இன குழந்தைகளின் கல்வி மேம்பாடுக்காக தம்மை அற்பணித்துக்கொண்ட திரு.ரகுபதி, அந்த இன பெண் ஒருவரையே திருமணம் செய்துகொண்டார்.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். திருவள்ளுவர் குருகுலத்தில் உள்ள குழந்தைகளுடனேயே பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார். அவருக்கு என் நன்றி.

தீபாவளியை முன்னிட்டு நாம் அன்னதானத்திற்கு செல்லும்போது கூட இங்கு கூட்டு பிரார்த்தனை நடத்திவிட்டு தான் அன்னதானம் செய்ய உத்தேசித்திருக்கிறோம்.

நமது ஆண்டுவிழாவிற்கு வருகை தந்திருந்த இவரை வரவேற்று உபசரித்தும், மேடைக்கு அழைத்தும் கௌரவித்தோம். அன்று இரவு அவர் ரயிலில் வெளியூர் செல்லவேண்டியிருந்தது. அந்த பரபரப்பிலும் தயங்காது நம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

============================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

இந்த வார கோரிக்கை இடம்பெற்றிருக்கும் இருவரும் நம் நெருங்கிய நண்பர்கள். நமது பணிகளில் துணை நிற்பவர்கள்.

முதலாவதாக தனக்கு கழுத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறும் சாந்தி அவர்களை கடந்த ஆறு மாதங்களாக நானறிவேன். மிகவும் தர்ம சிந்தனை மிக்கவர். சில மாதங்களுக்கு முன்பு, ‘பிரேமவாசம்’ – ஆதரவற்ற, மனவளர்ச்சி குன்றிய மாற்றுதிறன் வாய்ந்த குழந்தைகளுக்கு ஸ்கூல் யூனிபார்ம் தேவை பற்றி தளத்தில் நாம் சொன்னபோது, ஒரு மிகப் பெரிய தொகையை அனாயசமாக அளித்தவர். அதற்கு அடுத்து தான் கஷ்டத்தில் நெருக்கடியில் இருந்த காலகட்டத்திலும் நம் தளத்தின் பணிகளில் தவறாது உதவியவர். அறச் சிந்தனை உடைய இவரைப் போன்றவர்கள் எந்த குறையும் இன்றி சந்தோஷமாக இருப்பது மிக மிக முக்கியம்.

அடுத்து, திரு.மனோகரன். மனோகரன் அவர்களை பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. நமது பணிகளில் பெரிதும் துணையிருப்பவர். மார்ச் மாதம் திருவேற்காட்டில் நாம் உழவாரப்பணி துவங்கியதில் இருந்து இன்று வரை அனைத்து உழவாரப்பணிகளிலும் தவறாது கலந்துகொள்பவர். நமது தளத்தின் மிகத் தீவிர வாசகர். நம் நெருங்கிய நண்பர். தனது கருத்துக்களை கமெண்ட் பகுதியில் ரெகுலராக அளித்து உங்களை உற்சாகபடுத்துபவர்.

============================================================

கழுத்திலும் கையிலும் வலியும் வேதனையும் நீங்கவேண்டும்!

Hi Sundar,

I have severe neck pain due to “Cervical Spondylosis”. Also having swelling across right hand. I have to go for work daily as my family and other situation demands.

when i work for long hours (if it is required at my office – when i have no option) the swelling got severe also Nerve pain occurs. I tried english medicines and doctors. Now I am getting treatment from Accupuncture and Ayurveda.

I trust Prayers for my health will be really helpful to me.

Thank you so much for all the prayers!

Regards,
Shanthi,
Coimbatore

============================================================

வாகன விபத்து – உரிய நஷ்ட ஈடு கிடைக்க வேண்டும் !

நண்பர் சுந்தர் மற்றும் ரைட்மந்த்ரா குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கம்.

கடந்த 2006 ஆம் வருடம் எனது இடது கால் தொடை எலும்பு TATA மினி வேன் ஒன்று மோதியதில் முறிந்தது. பொறுப்பில்லாத வாகனம் சரியாக ஓட்டத்தெரியாத ஒருவன் மூலம் அந்த விபத்து நிகழ்ந்தது. மிகவும் பாதுகாப்பாக பெட்டிக்கடை ஒன்றில் பேப்பர் வாங்க நின்று கொண்டிருந்த என் மீது வேன் மோதி நான் தூக்கி வீசப்பட்டேன். இறைவன் கருணையாலும் என் அப்பன் அருணாசலத்தின் மகிமையலும், சில லட்சங்களில் செலவிற்கு பிறகு, நான் இன்று தங்களுடன் இணைந்துள்ளேன். ஆனால் அந்த விபத்தில் சிக்கி நான் தேறி வர எடுத்துக்கொண்ட 7 மாத காலம் நானும் மனைவியும் குழந்தைளும், பட்ட அவஸ்தையை இப்போது நினைத்தால் கூட மறக்க முடியவில்லை.

இந்த விபத்தினை மறைப்பதற்கு அந்த டிரைவர் என்னென்னமோ செய்து வருகிறார். என்னிடம் இருக்கும் டாக்குமெண்டை வைத்து விசாரணை நடத்த உத்தரவு கேட்டுள்ளேன். அடுத்தவாரம் விசாரணைக்கு உத்தரவு வந்துள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல செய்தி ….. எல்லாம் நான் rightmanthra உடன் சேர்ந்து உள்ளதாலும், உழவாரப்பணிக்கு என்னை அர்பணித்ததாலும் நடந்துள்ளது.

எனக்கு வரவேண்டிய நியாயமான ஈட்டுத்தொகை கிடக்க பிரார்த்தனை செயும்படி பணியுடன் கேட்டுக்கொள்கிறேன் .

அடுத்தவாரம் வழக்கு விசாரணைக்கு மகா பெரியவா, அருளும் தங்களின் ஆசிர்வாதமும் வேண்டுகிறேன்.

என்றும் தங்களுடன் ,
-மனோகர்
திருவள்ளூர்.

============================================================

நம் பொது பிரார்த்தனை

வேண்டாம் இனி இப்படி ஒரு விபத்து

இரண்டு நாட்களுக்கு முன்னர் (அக்டோபர் 29) பெங்களூரில் இருந்து தனியாருக்கு சொந்தமான சொகுசுப் பேருந்து (ஜப்பார் டிராவல்ஸ்) ஒன்று பயணிகளை ஏற்றிக்கொன்டு ஐதராபாத்துக்கு சென்றபோது, ஆந்திர மாநிலம் மெகபூப் நகரில் சிறுபாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்தது. உடனே டீசல் டேங்க் வெடித்து சிதறி பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது என்பதை அறியும் முன்னரே பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தவர்கள் அனைவரும் தீயில் கருகி பலியாகிவிட்டனர்.

bus fire

மொத்தம் 45 பேர் இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். தீபாவளி நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு விபத்து நேர்ந்திருப்பது ஆந்திர மக்களை மிகவும் சோகத்திலாழ்த்தியுள்ளது. விபத்தில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினர் மன அமைதி பெற வேண்டியும் இறைவனை பிரார்த்திப்போம்.

============================================================
கோவையை சேர்ந்த நம் வாசகி சாந்தி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கழுத்து பிரச்னையும், கைகளில் ஏற்படும் வீக்கமும் நிரந்தரமாக குணமாகி அவர் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழ பிரார்த்திப்போம். அதே போல நண்பர் மனோகரன் அவர்களுக்கு விபத்து ஏற்படுத்திய வழக்கில் அவருக்கு உரிய நஷ்ட ஈடு கிடைக்க பிரார்த்திப்போம். ஆந்திர மாநில பேருந்து விபத்தில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், இனி இப்படி ஒரு விபத்து நிகழவே கூடாது என்றும் இறைவனை பிரார்த்திப்போம்.

============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : நவம்பர் 3, 2013 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : ‘ஆட்டோகிராஃப்’ – ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன்!

 

8 thoughts on “மஹா பெரியவா கருணை – நிறைவேறிய மற்றொரு பிரார்த்தனை! Righmantra Prayer Club

  1. டியர் சுந்தர்ஜி

    சுந்தரி வெங்கட்டின் பிரார்த்தனை ரைட் மந்த்ரா பிரார்த்தனா கிளப் மூலம் நிறைவேறியதை படித்து மிக்க மகிழ்ச்சி. எல்லாம் மஹா பெரியவரின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை. குழந்தை ஹரிணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    கோவையை சேர்ந்த நம் வாசகி சாந்தி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கழுத்து பிரச்னையும், கைகளில் ஏற்படும் வீக்கமும் நிரந்தரமாக குணமாகி அவர் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழவும் நண்பர் மனோகரன் அவர்களுக்கு விபத்து ஏற்படுத்திய வழக்கில் அவருக்கு உரிய நஷ்ட ஈடு கிடைக்கவும் ஆந்திர மாநில பேருந்து விபத்தில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், இனி இப்படி ஒரு விபத்து நிகழவே கூடாது என்று இறைவனை பிரார்த்திகிறேன்.

    சமூக சேவகர் திரு.ரகுபதி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்

    நன்றி
    உமா

  2. சுந்தர்ஜி
    திரு. ரகுபதி அவ்ர்கள் இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவது குறித்து மிக்க மகிழ்ச்சி. இவரைப்போன்று பிறர் நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டவர்களால் நம் தளம் ஆசீர்வதிக்கப்படுவதற்கு நாம் கொடுத்து வைத்துள்ளோம்.
    இவருடன் இணைந்து நாமும் அனைவரின் பிரார்த்தனைக்கும் வேண்டுவோம்.

    ரைட் மந்திரா வாசகர்களுக்கும் திரு சுந்தர் அவர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !! நன்றி

  3. இந்த வார பிரார்த்தனை கிளப்பிற்கு என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட திரு.சுந்தர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் .

    வரா வாரம் பிரார்த்தனை கிளப்பில் இடம் பெரும் கதையை படிப்பதற்கு காத்திருப்போர்களில் நானும் ஒருவன் .

    ஆனால் இந்த வாரம் குழந்தை ஹரிணிக்கு கிடைத்த மஹா பெரியவா அவர்களின் ஆசியும் கருணையும் நிஜமான நகழ்வு .
    { இது கதையல்ல நிஜம் }

    குழந்தை ஹரிணிக்கு எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

    மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது .

    இந்த வார பிரார்த்தனை கிளப்பிற்க்கு தலைமை தாங்குபவர்: சமூக சேவகர் திரு.ரகுபதி அவர்களை வணங்கி வரவேற்கிறேன் .

    இந்த வாரம் பிரார்த்தனைக்கு கோவையை சேர்ந்த நம் வாசகி சாந்தி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கழுத்து பிரச்னையும், கைகளில் ஏற்படும் வீக்கமும் நிரந்தரமாக குணமாகி அவர் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழவும், ஆந்திர மாநில பேருந்து விபத்தில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், இனி இப்படி ஒரு விபத்து நிகழவே கூடாது என்று இறைவனை பிரார்த்தனை செய்வோம் .

    ஓம் சிவ சிவ ஓம் .

    -நன்றி
    மனோகர் .

  4. தாழ்த்தப்பட்ட, ஆதரவற்ற மற்றும் நரிக்குறவர் இன குழந்தைகளின் கல்வி மேம்பாடுக்காக தம்மை அற்பணித்துக்கொண்ட திரு.ரகுபதி,
    அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு ,நம் தளத்தில் வேண்டுகோள் விடுத்த சாந்தி அவர்கல் அறச் சிந்தனை உடைய இவரைப் போன்றவர்கள் எந்த குறையும் இன்றி சந்தோஷமாக இருக்கவும்…தி மனோகரன் சார் அவர்களுக்கு வரவேண்டிய நியாயமான ஈட்டுத்தொகை கிடக்கவும்…திருமதி சாந்தி அவர்களுக்கு கழுத்து வலி நீங்கவும் வாகன விபத்தில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினர் மன அமைதி பெறவும் …இதுபோன்ற கோரவிபத்துக்கள் தமிழ் நாட்டில் இனி நடக்காமல் இருக்கவும் இறைவனை பிரார்த்திப்போம்.

    இந்த கமண்ட் எழுதும் இந்த அரை மணி நேரத்துக்கு முன்னர் சாலையை கடக்க முயன்ற ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் கார் மோதி தூக்கி வீசப்பட்டார் அவரை நான்தான் 108க்கு பொன் செய்து அரைமணிநேரம் காத்தபின் ஆம்புலன்ஸ் சிக்னலில் மாட்டிக்கொண்டதாகவும் வரதாமதமாகும் என்று தெரிவித்தனர் அதனால் அவரை மோதிய அதே காரில் ஏற்றி எஸ் ஆர் எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன் பிரச்சினை என்னவென்றால் அவருடைய வலது கை முறிந்து தொங்குகிறது தலையில் பலத்த காயம் ,அவருக்கு மகன் யாரும் இல்லை ஒரே மகள் மனைவிக்கு எஸ் ஆர் எம் மருத்துவமனை எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை தினக் கூலி மனிதர்கள் காரில் அனுப்பிய 10 நிமிடத்திற்கு பிறகு அவர்கள் ஓடிவந்தனர் அழுகை மட்டுமே அவர்களின் பதிலாக இருந்தது ..அன்னாரின் குடும்பத்திற்காகவும் நம்தளம் சார்பாக பிரார்த்திக்க வேண்டும் ..

    1. மிகப் பெரிய சேவை. பாதிக்கப்பட்டவரின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றி.

      நிச்சயம் அவருக்காகவும் நம் பிரார்த்தனை உண்டு.

      – சுந்தர்

  5. என் அனுபவத்தைபோல், இந்த வாரம் குழந்தை ஹரிணிக்கு கிடைத்த மஹா பெரியவா அவர்களின் ஆசியும் கருணையும் கிடைத்துள்ளது. குழந்தை ஹரிணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வார பிரார்த்தனை கிளப்பிற்க்கு தலைமை தாங்கும் சமூக சேவகர் திரு.ரகுபதி அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.

    இந்த வாரம் பிரார்த்தனைக்கு கோவையை சேர்ந்த நம் வாசகி சாந்தி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கழுத்து பிரச்னையும், கைகளில் ஏற்படும் வீக்கமும் விரைவில் குணமாகி சந்தோஷமாக வாழவும், சகோதரர் மனோகரன் சார் அவர்களுக்கு வரவேண்டிய நியாயமான இழப்பு தொகை கிடக்கவும், ஆந்திர மாநில பேருந்து விபத்தில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், இனி இப்படி ஒரு விபத்து நிகழவே கூடாது என்று மகா பெரியவரை வணங்கி மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.

  6. இந்த வார பிரார்த்தனை கிளப்பிற்கு என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட திரு.சுந்தர் அவர்களுக்கு என் நன்றியை மீண்டும் தெரிவித்துகொள்கிறேன் .

    இந்த வார பிரார்த்தனை கிளப்பிற்க்கு தலைமை தாங்கிய சமூக சேவகர் திரு.ரகுபதி அவர்களுக்கு நானும் எனது rightmanthra குடும்பமாகிய அனைவரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

    கோவையை சேர்ந்த நம் வாசகி சாந்தி அவர்களுக்கும் .ஆந்திர மாநில பேருந்து விபத்தில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் ,எனக்காகவும் பிரார்த்தனை செய்த நண்பர்கள், வாசகர்கள்,உழவார பணிக்குழுவினர் ,மகளீர் அணி குழுவினர் ,மற்றும் rightmanthra sundar ஜி அவர்களுக்கும் நன்றி ,நன்றி ,நன்றி …
    -மனோகர்
    திருவள்ளூர் .

  7. சுந்தர்
    பிரமாதம். தங்கள் நம்பிக்கையும் உழைப்பும் செயலாக்கம் பெறுகின்றன. அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேற வேண்டுகிறேன்.
    சுவாமிநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *