பாலை வாங்கியவுடன் தன் காதில் சொருகியிருந்த பென்சிலை எடுத்த பால்காரர், என் கையில் வைத்திருந்த அட்டையில் அளவை குறித்துவிட்டு திருப்பித் தந்தார்.
“என்ன சார்… பென்சிலை வெச்சிருக்கீங்க? நல்ல பேனா ஒன்னை வாங்கிக்ககூடாது?”
“பேனால்லாம் யூஸ் பண்ணி பார்த்துட்டேன் சார். சமயத்துல எழுதாது. மை தீர்ந்துடும். ஆனா பென்சில் அப்படியில்லே. எனக்கு எழுதுறதுக்கு இது போல சௌகரியம் வேற கிடையாது. முக்கியமா இதுகிட்டே கழுத்தறுப்பு வேலை கிடையாது. மக்கர் பண்ணவே பண்ணாது. கடைசி வரைக்கும் உபயோகமா இருக்கும்! விலையும் மலிவு!!” என்றார்.
“அட ஆமா இல்லே…!” பென்சிலின் உபயோகத்தை வியந்துகொண்டே திரும்பி வந்தேன்.
பென்சில் உண்மையில் ஒரு ஆச்சரியமான படைப்பு தான்.
பென்சிலிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்!
ஒரு பென்சில் தயாரிக்கும் கம்பெனியில் அதன் உற்பத்தியாளர் ஒரு அழகான பென்சிலை தயாரித்துவிட்டு அதை ஒரு பாக்ஸில் போட்டு மூடி பேக் செய்வதற்கு முன்னர் அதனிடம் சொன்னார்….
“நான் ஒரு ஐந்து விஷயங்களை உன்னிடம் சொல்லப்போகிறேன். அதை நீ என்றென்றும் நினைவில் வைத்திருக்கவேண்டும். அப்படி செய்தால் இந்த உலகிலயே நீ சிறந்த பென்சிலாய் இருப்பாய்”.
“சொல்லுங்கள். நிச்சயம் கடைபிடிக்கிறேன்” என்றது பென்சில்.
ஒன்று : நீ பல மகத்தான விஷயங்களை செய்யமுடியும். ஆனால் வேறு ஒருவரின் கைகளில் நீ இருப்பாயானால்.
இரண்டு : நீ சிறந்த பென்சிலாய் இருக்கவேண்டும் என்பதற்காக அவ்வப்போது உன் உடலை சீவி உன்னை கூர்மையாக்குவார். அதை நீ ஏற்றுக்கொள்ளவேண்டும்.
மூன்று : நீ செய்யும் தவறுகளை உன்னால் திருத்த முடியும். அதற்கு உனக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.
நான்கு : உன்னுடைய மிக சிறந்த பலம், உன் தனித்தன்மை உனக்குள்ளேயே இருக்கும். வெளியில் அல்ல. (பென்சில் தனது எழுத்தை எழுத பயன்படும் GRAPHITE உள்ளே தான் இருக்கும்.)
ஐந்து : நீ எந்த இடத்திலெல்லாம் பயன்படுத்தப்படுகிறாயோ அங்கெல்லாம் உனது தடத்தை பதிக்கவேண்டும். அங்கு என்ன சூழ்நிலை இருந்தாலும் அந்த பாதை எத்தனை கடினமாக நீ பாட்டுக்கு உன் கடமையை செய்யவேண்டும்.
இதை ஒப்புக்கொண்ட பென்சில், அமைதியாய் பெட்டிக்குள் சென்றது.
இப்போது பென்சிலுக்கு பதில் உங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
ஒன்று : இறைவனின் கைகளில் நாம் நம்மை ஒப்படைத்தால் நம்மால் மகத்தான காரியங்களை சாதிக்க முடியும்.மற்றவர்களும் நம்மை சிறப்பாக பயன்படுத்துவார்கள்.
இரண்டு : வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல்வேறு துன்பங்களும் சோதனைகளும் நம்மை பட்டை தீட்டவே செய்யும். நாம் அந்த துன்பங்களை நமது நன்மைக்காகத் தான் என்று புன்னகையோடு ஏற்றுக்கொள்ளவேண்டும்.
மூன்று : பென்சில் எப்படி தான் செய்யும் தவறுகளை தனது மற்றொரு முனையில் உள்ள அழிப்பான் மூலம் திருத்திக்கொள்கிறதோ அதே போல நாமும் நாம் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும். (ஆனால் அந்த ‘அழிப்பான்’ சிறிது தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அழிப்பான் இருக்கிறதே என்று தவறு செய்யக்கூடாது. ஏனெனில், நிஜ வாழ்க்கையில் தவறுகளை திருத்திக்கொள்ள எல்லா நேரத்திலும் வாய்ப்பு கிடைக்காது. அது ஒரு LIMITED PERIOD OFFER!!)
நான்கு : நம்முடைய பலம், நமது தனித் தன்மை நமக்குளேயே இருக்கிறது. அதை வெளியில் தேடவேண்டாம்.
ஐந்து : எந்த சூழ்நிலையிலும் மக்கர் செய்யாது எழுதும் பென்சிலை போல, நாமும் எந்த சூழ்நிலையிலும் கலங்காது நமது கடமையை தொடர்ந்து செய்யவேண்டும்.
பென்சிலை குறித்த இந்த கருத்து, உங்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கட்டும். “இந்த உலகில் நாம் மிக மிக சாதாரணமான ஒரு நபர். நம்மால் என்ன செய்துவிடமுடியும்?” என்று ஒரு போதும் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள். நீங்கள் பிறந்த நோக்கத்தை நிறைவேற்ற உங்களால் மட்டுமே முடியும். ஏனெனில் நீங்கள் SOMEONE WHO IS VERY SPECIAL
இறைவனின் கைகளில் நம்மை ஒப்படைத்துவிட்டு கடமையை செய்வோம். பலனை அவன் பார்த்துக்கொள்வான்.
ஒரு சிறந்த எளிய கிஃப்டை உங்கள குழந்தைக்கு அளிக்க விரும்பினால், ஒரு நல்ல பென்சில் வாங்கி தாருங்கள். அப்படியே பென்சிலின் இந்த தத்துவத்தை அவனுக்கு கூறுங்கள்!
=============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=============================================================
[END]
///“இந்த உலகில் நாம் மிக மிக சாதாரணமான ஒரு நபர். நம்மால் என்ன செய்துவிடமுடியும்?” என்று ஒரு போதும் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள். நீங்கள் பிறந்த நோக்கத்தை நிறைவேற்ற உங்களால் மட்டுமே முடியும். ஏனெனில் நீங்கள் SOMEONE WHO IS VERY SPECIAL – ///
ஐந்து முத்தான கருத்துக்கள் அருமை …
சுந்தர் சார் இனிய காலை வணக்கம்
மிக மிக மிக அருமையான பதிவு சார்
நன்றி
Great Sundar sir …….! 🙂
நல்ல அருமையான கருத்துக்கள்.
நியாயமான ஐந்து நல்ல உவமானங்கள்.
எப்போதும் நினைவில் வைக்கும் படியான எளிய அருமையான உதாரணங்கள்.
நிச்சயம் நாம் எந்த ஒரு காரியத்தை துவங்கும் முன் பென்சில் தத்துவத்தை கைபிடித்தல் நன்றாக இருக்கும்
thankyou சுந்தர்
டியர் சுந்தர்ஜி
இனிய காலை வணக்கம். வழக்கம் போல் உங்களின் பென்சில் தத்துவம் மிக அருமை.
உங்கள் monday ஸ்பெஷல் very energetic special
நன்றி
உமா
Wonderful and Thought Provoking
“ஒரு சிறந்த எளிய கிஃப்டை உங்கள குழந்தைக்கு அளிக்க விரும்பினால், ஒரு நல்ல பென்சில் வாங்கி தாருங்கள். அப்படியே பென்சிலின் இந்த தத்துவத்தை அவனுக்கு கூறுங்கள்! ” – Nice
சுந்தர் சார்,
அருமையான பதிவு..
வணக்கம் ஜி.
பால்காரர் பென்சில் பயன்படுத்தினர் .பதிவின் முக்கிய கரு பென்சில் .
கதை திரைக்கதை ,வசனம் ,தத்துவம் ,நீதி ,கருத்துக்களை விளக்கிய விதம் அருமை .
பென்சிலை எல்லோர்க்கும் கொடுத்து ,கூர்மையாக்கி ,எழுதவைத்து ,தவாறான வரிகளை ,அழித்து தொடர்ந்து நாமும் எந்த சூழ்நிலையிலும் கலங்காது நமது கடமையை தொடர்ந்து செய்யவேண்டும் என்று எல்லோர் மனதிலும் ஆழாமாக பதியவைத்து விட்டீர்கள் ….
\\“இந்த உலகில் நாம் மிக மிக சாதாரணமான ஒரு நபர். -நம்மால் என்ன செய்துவிடமுடியும்?” என்று ஒரு போதும் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்.\\
=பாராட்டுக்களுடனும் வாழ்த்துக்களுடனும்
-மனோகர் .
உயர்திரு சுந்தர்ஜி ஐயா அவர்களுக்கு, அன்பு வணக்கம்.
பென்சில் கதை எல்லோரும் படித்துப் பயன்பெறும் கதை. பள்ளி மாணவர்களிடம் பேசும்போது ஒரு பென்சில் பாக்கெட் கொடுத்து அவர்களிடம் இந்த கதை சொல்வேன். மாணவர்களுக்கு நல்வழி காட்ட இது ஒரு அருமையான கதை.
பாரிஸ் ஜமால், நிறுவனத் தலைவர், பிரான்ஸ் தமிழ்ச சங்கம்
நன்றி!
எல்லாப் புகழும் இறைவனுக்கே…!!
– சுந்தர்
எவ்வளவு நிதர்சனமான உண்மை. சிறந்த ஒப்பீடு. மிகவும் அருமை ஜி.
நன்றி
ப.சங்கரநாராயணன்
சுந்தர்ஜி,
அருமையான பதிவு. Monday ஸ்பெஷல் சுப்பர்-பா .
ஒரு குழந்தையிடம் போய் நான் ஒரு ஐந்து விஷயங்களை உன்னிடம் சொல்லப்போகிறேன். அதை நீ என்றென்றும் நினைவில் வைத்திருக்கவேண்டும். அப்படி செய்தால் இந்த உலகிலயே நீ சிறந்த மாணவனாக இருப்பாய் என்றால் அந்த குழந்தையின் மனதில் நிற்காது ஆனால் ஒரு குழந்தையிடம் நல்லதை எடுத்து சொல்லி வளர்க்க பென்சில் உதாரணம் ஆழமாக பதிந்து விடும்.
வாழ்க வளமுடன். வளர்க உங்கள் தொண்டு.
மிகவும் நல்ல படைப்பு. நன்றி சுந்தர் சார்!
வணக்கம் ஐயா!
தங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது. எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள், ஏன் “ஜி” என்ற ஹிந்தி வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள்? நல்ல தமிழ் வார்த்தைகள் உள்ளதே, அதைப் பயன் படுத்தலாமே?
நன்றி.
சுந்தரேசன் எம்.
என் மீதுள்ள அன்பின் காரணமாக அவர்கள் மனதுக்கு தோன்றியவாறு அழைக்கிறார்கள். மேலும் ‘ஜி’ என்னும் பதம் தட்டச்சு செய்வது சுலபம். இதில் நான் என்ன செய்ய முடியும்?
தங்கள் அன்புக்கு நன்றி.
– சுந்தர்
As usual a simple but powerful article!!
Regards
R.HariHaraSudan
“HE WHO KNOWS THE SELF KNOWS ALL”
சுந்தர் சார்,
வழக்கத்தை விட சிறந்த பதிவை தந்துள்ளிர்கள்.
நன்றியுடன் அருண்
சுந்தர் ஜி,
பென்சில கூட ஊக்கு உடைந்து போகும்.
ஊக்கு உடைஞ்சா என்ன? பென்சில் அத்தோடு அழிந்துவிடுகிறதா? இல்லை நாம் தான் அதை தூக்கி போட்டுவிடுகிரோமா? மறுபடியும் சீவி பயன்படுத்துவதில்லையா? பென்சிலுக்கு ஊக்கு உடைவது போலத் தான் மனிதனுக்கு ஏற்படும் கஷ்டங்களும் தோல்விகளும். அவன் மறுபடியும் தன்னை கூர் தீட்டிக்கொண்டு முன்னேறவேண்டும். எத்தனை முறை ஊக்கு உடைந்தாலும்….
– சுந்தர்