Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > எது நல்ல உணவு? எது சத்தான உணவு? MUST READ & MUST SHARE

எது நல்ல உணவு? எது சத்தான உணவு? MUST READ & MUST SHARE

print
மக்கு தெரிந்த ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவம் இது. அவருடன் எங்கே வெளியில் சென்றாலும், கால் டாக்ஸி தான் புக் செய்வார். பஸ் வசதி இருக்கும் இடத்திற்கு போவதென்றால் கூட கால்டாக்ஸி (ஏ.சி.) தான். ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் போன்ற இடங்களுக்கு சென்றால் லிப்ட் தான். படியேறும் வழக்கம் கிடையாது. எப்போதுமே ஏ.சி.யில் இருக்க வேண்டும் என்பார். எப்போது பிரயாணம் சென்றாலும் பெப்சி, மிராண்டா, லிம்கா போன்ற பானங்களில் ஏதேனும் ஒன்றில் பெரிய பாட்டில் (2 லிட்டர்) வாங்கிக்கொள்வார். அப்படியே குடித்து கொண்டே வருவார். போகும்போது ஒரு பாட்டில். வரும்போது ஒரு பாட்டில். அதில் பாதி அவர் தான் குடிப்பார். மற்றவர்களுக்கு ஏதோ ஒப்புக்கு கொஞ்சம் கொடுப்பார். பல நேரங்களில் இரவு டிபனை செய்யவேண்டாம் என்று சொல்லி. பீஸா (family size) ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. ஒரு முறை நாம் இருக்கும்போதே இந்த கூத்து நடந்தது. சாப்பிடும்போது கோக் பெப்ஸி இருக்கவேண்டும் என்பார். அவர் வீட்டு பிரிஜ்ஜில் எப்போதும் இரண்டு மூன்று கோக் டின்கள் இருக்கும். இது தவிர லேஸ், குர்குரே, ஸ்நாக்ஸ் என்று அத்தனையும் சாப்பிடுவார். பணிநிமித்தம் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வரும் பழக்கம் உள்ளவர் என்பதால் இது போன்ற பழக்கங்கள் அவருக்கு தொற்றிவிட்டது என்று தெரிகிறது. மேலும் அவர் அலுவலகத்தில் மதியம் சாப்பிடும்போது அனைவரும் கோக் பெப்சி இல்லாமல் சாப்பிடுவது கிடையாது என்று வேறு சொன்னார்.

Sedentary-Living copy

இப்படி தாறுமாறான உணவுப் பழக்கத்தால் அவரது எடை வேறு கன்னாபின்னாவென்று அதிகரித்தது. ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் ஒரு கிலோ எடை கூடியது போல இருப்பார்.

இதெல்லாம் மிகவும் ஆபத்து என்று நாம் எச்சரித்தோம். மெத்தப் படித்தவர், அதிகம் சம்பாதிப்பவர் என்பதால் நமது அறிவுரை காதுகளுக்கு எட்டவில்லை.

சமீபத்தில் ஒரு நாள் நமக்கு அவர் மனைவி நமக்கு ஃபோன் செய்து, “அண்ணா… அவருக்கு காய்ச்சல் வந்து டாக்டரிடம் காண்பித்தோம். எந்தவித மருந்துக்கும் காய்ச்சல் குறையவில்லை. டாக்டர் சுகர் டெஸ்ட் எடுக்கவேண்டும் என்று சொன்னார். எடுத்துப் பார்த்ததில் சுகர் 320 இருக்கு. (நார்மல் 140). என்ன செய்றதுன்னே தெரியலே… கண்டிப்பா இனி இன்சுலின் போட்டுக்கணும் மெடிசின்ஸ் எடுத்துக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாரு… ரொம்ப ஃபீல் பண்றாரு… ரெண்டு நாளா ஆபீஸ் போகலை… நீங்க கொஞ்சம் வாங்கண்ணா!” என்றார்.

“நான் அப்போவே வார்ன் பண்ணினேன்… உங்க ஃபுட் ஹாபிட்ஸ் எதுவும் சரியில்லேன்னு… இது ரொம்ப டேஞ்சர்னு… கேட்டாத் தானே… சரி… சரி… கவலைப்படவேண்டாம் நான் நேர்ல வந்து அவர் கிட்டே பேசுறேன்!” என்றோம்.

(இவரைப் போன்றவர்களுக்கு நம் தளம் பற்றி தெரியாதா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். தெரியும். ஆனால் நிச்சயம் தளத்தை பார்க்கவேண்டும் என்று நான் எப்படி நிர்பந்திக்க முடியும்? பார்ப்பதும் பயனடைவதும் அவரவர் விருப்பம்.)

ஆண்களுக்கு இவ்வித பாதிப்பு என்றால் பெண்களுக்கு இந்த மாதிரி SEDENTARY LIFE-STYLE (உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை) என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்? அது பற்றி வேறொரு பதிவில் சொல்கிறோம். அது இன்னும் அதிர்ச்சி தரக்கூடியது.

மேற்கூறிய நண்பர் போலவே பலர் சர்க்கரை நோயை அணைத்துக்கொள்ளும் விளிம்பில் இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக தங்கள் உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். (ஏதாவது ஆலோசனை தேவை என்றால் நம்மை தயங்காது தொடர்புகொள்ளவும்!)

அவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் படிக்கவேண்டிய ஒரு பதிவு இது.

இப்போது  தான் தெரியும். இன்று APRIL 7, WORLD HEALTH DAY யாம். சரியான நேரத்தில் தான் பதிவு வந்திருக்கிறது.

=======================================================================

ல்லோரும் சாப்பிடுகிறோம். நிறைய சாப்பிடுகிறோம். அதையும் நிறைய பணம் கொடுத்து வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் எதை சாப்பிடுகிறோம்? நாம் சாப்பிடுவது உண்மையில் என்ன? இது பற்றி அவசியம் அனைவரும் தெரிந்துகொண்டு, சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

பிரபல சித்த மருத்துவர் டாக்டர் சிவராமன் அவர்கள் “எது நல்ல உணவு?” என்ற தலைப்பில் பேசிய வீடியோவிலிருந்து சுருக்கமாக சில பாயிண்ட்டுகள் எடுத்து அளிக்கப்பட்டு முகநூலில் சுற்றிக்கொண்டிருந்தது. படித்தபோது மிகவும் பிடித்துப்போனது. இதை இன்னும் சற்று விரிவாக தரலாமே என்று கருதி அவர் பேசிய பல வீடியோக்களை பார்த்து கேட்டு இந்த பதிவை தயார் செய்திருக்கிறோம்.

அவசியம் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய படித்து பின்பற்றவேண்டிய ஒன்று இது. அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினருக்கு ஏன் உங்கள் தலைமுறையினருக்கே செய்யும் உதவி.

siva, vikatan profileஉணவே ஒரு சிறந்த மருந்து தான்… சாப்பிட வேண்டியதை சாப்பிட்டால்!

ங்கில மருத்துவத்தின் ஆதிக்கத்தினால் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் குறைய ஆரம்பித்தன. ஆனால் ஆங்கில மருத்துவம் உடனடி நிவாரணம் தந்தாலும் பக்கவிளைவுகளை அதிகம் ஏற்படுத்துகிறது என்பதால் இப்போதெல்லாம் பாரம்பரிய மருத்துவமுரைகலான சித்தா ஆயுர்வேதம் இவற்றுக்கு தான் மக்கள் முதலில் வருகின்றன. காரணம் கடந்த 40 ஆண்டுகளாக இது தொடர்பாக கொஞ்ச கொஞ்சமாக ஏற்பட்ட விழிப்புணர்வு. நாள்பட்ட நோய் என்றால் பாரம்பரிய மருத்துவமுரைகளும் உடனடி சிகிச்சை என்றால் (விபத்து அவசர சிகிச்சை) என்றால் நவீன மருத்துவமும் சிறந்தது.

நாள்பட்ட நோய்களுக்கு நாள்பட்ட சிகிச்சை தான் சிறந்தது. உ.ம். தோல் நோய் போன்றவை. டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் சிறந்தது.

டி.பி., பிளேக், காலரா போன்றவைகள் இன்று பிரச்னை அல்ல. இன்று பிரச்னைகள் வாழ்வியல் நோய்கள். அதாவது நீரிழவு நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய் போன்ற (non-communicable diseases) இவை தான். முன்பெல்லாம் சர்க்கரை நோய் நூற்றில் ஒருவருக்கு இருக்கும். வயதானால் ஹைப்பர் டென்ஷன் வரும் என்பார்கள். ஆனால் இன்று இவை சர்வ சாதாரணம். புற்றுநோயெல்லாம் நாம் சினிமாவில் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இன்று? ஒவ்வொரு வீட்டிலும் இது சர்வசாதாரணம் ஆகிவிட்டது.

ஏன் இப்படி ஆனது என்றால் நமது வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாற்றம் தான். அனைவரும் ஏதோ ஒரு வித மன அழுத்ததுக்குள் வாழ்ந்து வருகிறோம். சரியான உணவுத் தேர்வு இல்லை. தனிப்பட்ட ஒழுக்கங்கள் இல்லை. உடற்பயிற்சி செய்வதில்லை. Sedentary Lifestyle. அதாவது உடலுழைப்பு இல்லாத வேலைச் சூழல். இவற்றின் காரணமாக மேற்கூறிய வாழ்வியல் நோய்கள் அதிகரித்துவிட்டன. இன்று இந்திய மருத்துவத் துறைக்கே சவாலாக விளங்குபவை இந்த வாழ்வியல் நோய்கள் தான்.

இந்த வாழ்வியல் நோய்களை மருந்துகளை மட்டுமே வைத்து குணப்படுத்த முடியாது. அதற்கு ஒரு ஹோலிஸ்டிக் அணுகுமுறை தேவை. அது பாரம்பரிய மருத்துவமுறைகள் தரும்.

உணவு தான் மருந்து என்பதில்லை. உணவும் ஒரு மருந்தே.

மருந்து என்பது நாம் எபோதாவது எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால் உணவு அப்படி அல்ல. தினமும் மூன்று வேலை எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்று. உணவு என்பதை மனமகிழ்ச்சிக்காகவும், ருசிக்காகவும், எனர்ஜிக்காகவும் சாப்பிடுகிறோம். எந்த உணவும் ஒன்று நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கவேண்டும். அல்லது நோய் இருந்தால் அதை வெளிய்யேற்ற வேண்டும் அல்லது நாம் சாப்பிடும் மருந்துக்கு துணை புரியவேண்டும். அல்லது நோயை தடுக்கும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும். இது தான் உணவு.

நம்முடைய பாரம்பரிய உணவுகள் அனைத்துமே மேற்கூறிய functional foods தான். உதாரணத்துக்கு இட்லி. இட்லியில் ப்ரோட்டீன், மற்றும் கார்போஹைட்ரேட் இரண்டுமே உள்ளது. இட்லி மாவு புளிக்கும்போது கிடைக்கும் நொதியில் பல நல்ல விஷயங்கள் சேர்கின்றன. இட்லியைவிட ஒரு சிறந்த காலை உணவு இருக்க முடியாது.

நம்முடைய சிறு தானியங்களான குதிரைவாலி, சாமை, வரகு, கம்பு இவற்றிலெல்லாம் நிரம்ப சத்துகளும் நார்ச்சத்துக்களும் உள்ளன.

Indian Millets

உணவாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயத்தின் மூலமாக ஒரு நாளைக்கு நமக்கு தேவையான கலோரிகள் கிடைக்கின்றன. ஒரு நோய் வராமல் தடுக்கக்கூடிய எதிர்பாற்றல் இருக்கிறது. ஏதாவது ஒரு நோய் வந்து மருந்துகள் உட்கொண்டிருந்தால் அதற்கு துணையாக இருக்கிறது.

சித்த மருத்துவத்தில் அறைகுறை அறிவு உள்ள போலிகளும் இருக்கிறார்கள். ஆண்மைக் குறைவு உள்ளிட்ட விஷயங்களை அவர்களை ஒரு marketing factor ஆக்கிவிட்டார்கள். சித்த மருத்துவம் என்றாலே அது மட்டும் தான் என்கிற அளவுக்கு அவர்களது செயல்பாடுகள் அமைந்துவிட்டன. ஆனால் ஆண்மைக்கு குறைவுக்கு, மலட்டுத் தன்மைக்கு சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.

Millets Rm

உணவை ஸ்கிப் செய்வதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்று பார்த்தால் நிறைய உண்டு. பலர் ஸ்கிப் செய்வது அதாவது தவிர்ப்பது காலை உணவு. காரணம் காலையில் அனைவரும் ஒருவித உற்சாகத்தில் இருப்பார்கள். பரபரப்பில் இருப்பார்கள். மேலும் உடல் எடையை குறைக்கிறேன் என்று காலையில் சாப்பிடாமல் போவார்கள். போனவுடனே ஒரு 11.00 மணியளவில் பசிக்கும். ஒரு puff மட்டும் சாப்பிடலாம் என்று வாங்கி சாப்பிடுவார்கள். அப்புறம் ஏதாவது ஒரு cool drinks சாப்பிடுவார்கள். அப்புறம் மதியம் ஏதோ சாப்பிடுவார்கள் இரவு…பேய்ப் பசியில் கூடுதலாக சாப்பிடுவார்கள். எனவே உணவை தவிர்ப்பது என்பது மிகவும் தவறான விஷயம். உணவை ஸ்கிப் செய்வதற்கு பதில், தேர்ந்தெடுத்து சாப்பிடவேண்டும்.

காலை உணவு என்பது மூளைக்கும் உடலுக்கும் உற்சாகம் தரக்கூடிய உணவாக இருக்கவேண்டும். உம். இட்லி, தோசை, பொங்கல், சோளப் பணியாரம் இவைகளை சாப்பிடலாம். காலை உணவு பெரும்பாலும் சிறுதானிய உணவாக இருப்பது சிறந்தது. திணை, ராகி, கம்பு, சோளம் போன்றவற்றால் ஆன உணவு வகைகள்.

Idly dosa pongal

மதியம்… மதிய உணவுகள் என்று போகும்போது, நிறைய காய்கறிகளை எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் பலபேர் செய்யக்கூட்ய தவறு என்னவென்றால்.. ஹோட்டல் முதலானவற்றுக்கு செல்லும்போது முதலில் சூப் சாப்பிடுவார்கள். அது மிகப் பெரிய தவறு. வெளிநாடுகளில் குளிர்ந்த பிரதேசத்தில் இருப்பார்கள். பேசுவதற்கு ஒரு ஹோட்டல் செல்வார்கள். அப்போது பசியை தூண்டுவதற்கு அவர்கள் சூப் முதலான APPETIZER களை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் நாமோ ஹோட்டலுக்கு போவதே பேய்ப் பசியில். சூப் என்று சொன்னவுடன் அவர்கள் அரைமணிநேரம் கழித்து எடுத்து வருவார்கள். வயிறு ஏற்கனவே புண்ணாகியிருக்கும். சூடான காரமான சூப் உள்ளே சென்றவுடன் மேலும் புண்ணாகிவிடும்.

சூப் நல்லது தான். அதை இடையில் எடுத்துக்கொள்ளவேண்டும். நமக்கு தான் ரசம் இருக்கிறதே. ரசத்தைவிட அருமையான சூப் இருக்கமுடியுமா என்ன?

எடுத்தவுடன் முதலில் சாப்பிடவேண்டியது பழங்கள். நல்ல பழத்துண்டுகள் முதலில் சாப்பிடவேண்டும். அப்புறம் கொஞ்சம் வேக வைத்த காய்கறிகள். காய்கறிகளை பொறுத்தவரை ஒவ்வொரு காய்கறிக்கும் ஒரு பலன் உண்டு. வெண்டைக்காய், அவரைக்காய், கத்திரிக்காய், பீன்ஸ் என ஒவ்வொரு காய்கறிக்கும் ஒரு பலன் உண்டு. காய்கறி நிறைவாக வைத்துக்கொண்டு அரிசி உணவை குறைவாக எடுத்துக்கொள்ளவேண்டும். இவை அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு கடைசீயாக கண்டிப்பாக மோர் சாதம் சாப்பிடவேண்டும். மோர் சாதத்தை ஸ்கிப் செய்யக்கூடாது. மோர் கண்டிப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும். மோர் ஒரு சிறந்த ANTACID. பல நல்ல அமிலங்களை வயிற்றுக்குள் சுரக்கும்.

மாலை நேரத்தில் சுண்டல் போன்றவைகளை சாப்பிடலாம்.

பானங்கள் என்று எடுத்துக்கொண்டால் தேனீர் தாரளமாக சாப்பிடலாம். தேநீர் ஒரு அற்புதமான பானம். ஆனால் அதில் பால் சேர்ப்பது தான் பிரச்னையே.

இரவு உணவை பொறுத்தவரை மிக எளிதில் ஜீரணிப்பது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். உதாரணத்துக்கு : ஆப்பம், இடியாப்பம் போன்றவைகளை சாப்பிடலாம். இரவு உணவுகளை பலர் தந்தூரி உணவுகளை சாப்பிடுகிறார்கள். நம்ம ஊருக்கு அது ஏற்றதல்ல.

இன்றைக்கு நாம் சாப்பிட்டு வரக்கூடிய பெரும்பாலான உணவு வகையில் வேறு மாநிலங்களில் இருந்தோ அல்லது வேறு நாடுகளில் இருந்தோ வந்தவை. நாம் பரம்பரியாமாக சாப்பிட்டு வரக்கூடிய இட்லி, தோசை, பொங்கல் முதலியவை ஒரே நாளில் வந்தவை அல்ல. இவை நமது உணவுமுறையில் இடம்பிடிக்க பல நூற்றாண்டுகள் ஆயின.

ஆனால் இப்போது நாம் சாப்பிடக்கூடிய பல உணவுகள் கடந்த 20 ஆண்டுகளில் வந்தவையே.

எல்லோருடைய வீட்டிலும் நீரிழவு, ரத்தக் கொதிப்பு, இதயக் கோளாறு என்று ஏதேனும் ஒரு NON-COMMUNICABLE DISEASE இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் மாறிவிட்ட உணவு பழக்கவழக்கங்கள், சுத்தமாக சிதிலமடைந்துவிட்ட சுற்றுச்சூழல், சிதைந்து போய்விட்ட மனமகிழ்ச்சி. இவை தான் காரணம். அதாவது உணவு, சுற்றுச் சூழல், மனம்.

இவற்றில் சுற்றுச் சூழல் ஓரளவு தான் நம் கையில் இருக்கிறது.

ஆனால், கையில் உள்ள நம்மால் கண்ட்ரோல் செய்யக்கூடிய விஷயங்கள் உணவு மற்றும் மனம்.

அப்படி நமது கட்டுப்பாட்டில் உள்ள உணவை தேர்ந்தெடுத்து செய்தோமென்றால் அதை மருந்தாக, நோய் தடுப்பு மருந்தாக, ஒருவேளை நோய் இருந்தால் அதன் தீவிரம் தெரியாமல் இருக்க, பாரம்பரியமாக எங்கள் குடும்பத்தில் எனது பாட்டிக்கு, எனது அம்மாவுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. எனது தாய்மாமனுக்கு கான்சர் இருக்கிறது. எனக்கு அது வராமல் தடுக்க என்ன செய்யலாம் – இந்த முடிவுகளை நாம் தேர்ந்தெடுக்கும் உணவு வகைகளை கொண்டு கட்டுப்பட்டுத்தலாம்.

எப்படி என்றால் உணவை குறித்த அக்கறையும் மெனக்கெடலும் மிகவும் குறைந்துவிட்டது. நம்முடைய PRIORITY யில் அது இல்லை. “எனக்கு நேரமில்லை. டயமில்லை. என்னால என்ன செய்ய முடியும்? நான் ஓடிகிட்டே இருக்கேன். காலைல நானும் ஓடுறேன். என் மனைவியும் ஓடுறாங்க. எல்லாரும் ஓடுறோம். என்ன இருக்கோ அதைத் தான் கொடுக்க முடியும் என்று  நிர்பந்தத்துக்குள் அனைவரும் வருகிறார்கள். இரவு நான் வரும்போதே சாப்பிட்டு வந்துடுறேன். இல்லே நைட் ஒன்றரை மணி வரைக்கும் நான் வேலை பார்த்துகிட்டு இருக்கவேண்டியிருக்கு. நைட் அதனால் நான் புல் மீல்ஸ் சாப்பிடுறேன் என்று சொல்லக்கூடிய கூட்டம் இன்று பெருகிவிட்டது. இதனால் நோய்களை அவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள்.

 திரு.சிவராமன் அவர்கள் உரையின் சாராம்சம் பின்வருமாறு.

* நூடுல்ஸ் உடல்நலனுக்கு தீங்கானது.

* PROCESSED CHICKEN மிகவும் ஆபத்து. கிட்டத்தட்ட 106 கெமிக்கல்ஸ் அதில் சேர்க்கப்படுகிறது. அது FDI அப்ரூவ்டாக இருக்கலாம். ஆனால் நம் உடம்பு அவற்றை அப்ரூவ் செய்துள்ளதா என்றால் இல்லை.

* சூப் சாப்பிடுவதாக இருந்தால் இடையே சாப்பிடவேண்டும். துவக்கத்தில் அல்ல. மேலும் ரசத்தை விட சிறந்த சூப் எதுவும் இல்லை.

* BOTTLED DRINKS எதுவும் உடல் நலனுக்கு ஏற்றதல்ல. இயற்கையான பழச்சாறு இதில் இருக்கிறது என்று சொல்லி விளம்பரப்படுத்துப்பட்டு வரும் NATURAL FRUIT DRINKS கூட உடலுக்கு நல்லதல்ல. ஒரு தோட்டத்து மாம்பழமும் பாட்டிலில் கிடைக்கும் மாம்பழ சாறும் ஒன்றல்ல. மாம்பழத்தைவிட பல மடங்கு இனிப்பும் உப்பும் அதில் சுவைக்காக சேர்க்கப்படுகின்றன. இந்த பாட்டில் குளிர்பானங்களின் ஆதாரமாக இருக்கக்கூடிய PULP என்பது எப்படி தயாரிக்கப்படுகிறது என்று எவருக்கும் தெரியாது. பலவித ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டே அந்த பல்ப் தயாரிக்கப்படுகிறது. பழச்சாறு வேண்டும் என்றால் நேரடியாக ஜூஸ் கடைக்கோ அல்லது பழத் துண்டுகளை கொண்டோ நாம் தயாரிக்கவேண்டும்.

* வெளிநாட்டிலிருந்து வந்தது என்றால் அது நல்லதுக்கு என்ற பொருள் இல்லை.

* ஆலிவ் ஆயில் குறித்து கூறப்படும் யாவும் கட்டுக்கதைகள். வெளிநாடுகளில் அது ஒரு seasoning agent மட்டுமே.

* தேங்காய், தேங்காய் எண்ணை உடலுக்கு மிகவும் நல்லது. அதில் இருக்கக்கூடிய லாரிக் அமிலம் என்பது மாரடைப்பை கட்டுப்படுத்தக் கூடியது. தேங்காய் எண்ணையை தவிர அந்த அமிலம் இருக்கக்கூடிய ஒரே பொருள் தாய்ப்பால் தான்.

papaya_guava* பப்பாளி, கொய்யா இவற்றுக்கு இணை வேறு எந்தப் பழமும் இல்லை. வெளிநாட்டு பழங்களான கிவி ப்ரூட் போன்ற விலை அதிகமுள்ள பழங்கள் பின்னே ஓடவேண்டாம். நாட்டுப் பழங்களே என்றும் நல்லது.

* கேரட்டை விட இரண்டாயிரம் மடங்கு அதிக சத்து முருங்கை கீரையில் உள்ளது.

* சிறுதானியங்கள் அனைத்தும் LOW GLYCEMIC INDEX உள்ளவை. அதாவது சர்க்கரை நோயை வரவிடாது. சர்க்கரை நோயளிகளுக்கும் நல்லது.

*  வெள்ளை மோகம் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று. வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை இப்படி. கஞ்சாவைப் போல வெள்ளை சர்க்கரை தடை செய்யப்படவேண்டிய ஒன்று. புற்றுநோயாளிகள் தவிர்க்க வேண்டிய ஒன்று வெள்ளை சர்க்கரை. பாரம்பரிய உப்பு மிகவும் நல்லது. கடைகளில் விற்கப்படும் சுத்தீகரிக்கப்பட்ட வெள்ளை வெளேர் உப்பு பயனற்றது. ஆபத்தானது. மினரல் சத்து அதில் அறவே இல்லை.

* மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் உள்ளிட்ட எதுவும் ஆபத்து.

* பாரம்பரியத்தை மறந்துவிட்டு புதிதாக வருவது எல்லாம் நல்லதுக்கு என்று நினைத்தால் சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்வதாக அர்த்தம்.

Groundnut balls* சாக்லேட் பிஸ்கெட்டுக்கு பதிலாக கடலை உருண்டை, எள்ளுருண்டை ஆகியவற்றை குழந்தைக்கு வாங்கிக்கொடுங்கள். இதில் உள்ள சத்து வேறெதிலும் கிடையாது. நீங்கள் யாரு வீட்டுக்கு சென்றாலும் இவற்றையே வாங்கிச் செல்லுங்கள்.

கடலை மிட்டாய்  அதன் புரதத்தால் உடம்பை வளர்க்கும்; அதன் துத்தநாகச் சத்தால் நோய் எதிர்ப்பாற்றல் தரும்; அதில் சேர்க்கப்படும் வெல்லம் பிற மிட்டாய்களில் சேர்க்கப்படும் வெள்ளை சீனியைக் காட்டிலும் இனிப்பானதும் சிறந்த தும்கூட. இனிப்புடன் இரும்பு முதலான கனிமங்கள் நிறைந்தது. மிட்டாயுடன் மிக நுண்ணிய அளவில் சில நேரங்களில் சேர்க்கப்படும் சுக்குத் தூள் கடலையின் பித்தத்தையும் இனிப்பின் கபத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது. காலை அவசரத்தில் அரைகுறையாய்ச் சாப்பிட்டுப் போகும் குழந்தைக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் நூடுல்ஸோ, ஒரு பாக்கெட் மில்க் பிஸ்கட்டோ, மில்க் சாக்லேட்டுகளோ கொடுக்காத ஊட்டச் சத்தை மூன்று கடலை மிட்டாய்கள் தந்துவிடும்.

Millet Sweets
சிறுதானிய மிட்டாய்

* கோதுமை மாவை கடையில் வாங்காமல் கோதுமையை வாங்கி அரைத்துக்கொள்ளுங்கள்.

* மேல்நாட்டு உணவு வகைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டாம். நமது சீதோஷ்ண நிலைக்கும் சூழலுக்கும் அது ஏற்றதல்ல.

* நமது பாரம்பரிய உணவுவகைகளே என்றும் சிறந்தது.

ஆதாரம் : சென்னை புத்தக கண்காட்சியில் டாக்டர்.கு.சிவராமன் அவர்கள் ‘உணவே மருந்து’ என்கிற தலைப்பில் ஆற்றிய உரை, சன் டி.வி. காலை வணக்கம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற அவரது சந்திப்பு, மற்றும் தந்தி தொலைகாட்சி பேட்டிகள், இதர உரைகள். இப்படி பலவற்றை பார்த்து, கேட்டு இந்த பதிவை தயார் செய்திருக்கிறோம்.

(நம் தளம் சார்பாக விரைவில் ஒரு சிறப்பு பேட்டிக்காக திரு.கு.சிவராமன் அவர்களை சந்திக்கவிருக்கிறோம்.)

=======================================================================

Also check :

கைவிட்ட ஆங்கில மருந்து, கைகொடுத்த நம்ம ஊர் மருந்து! MUST READ!!

தொப்பைக்கு இனி குட்பை! MUST READ!!

புற்றுநோயை ஆரத்தி எடுத்து வரவேற்கும் உணவு பழக்கவழக்கங்கள் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!!

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’! READ IT AGAIN & AGAIN!!

எயிட்ஸ் – தேவை ஒரு புரிதல் – ‘சொல்லத் துடிக்குது மனசு’ !

குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிசத்தின் அறிகுறியும் அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்

சீரான சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும் உணவுப் பொருட்கள்!

சிகரெட்டை நிறுத்த முடியவில்லையா? இதோ ஒரு எளிய டெக்னிக்!

இயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்!

மருத்துவ அதிசயம் — டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி இலைச் சாறு!

=======================================================================

[END]

16 thoughts on “எது நல்ல உணவு? எது சத்தான உணவு? MUST READ & MUST SHARE

  1. எது நல்ல உணவு எது சத்தான உணவு என்பதை பற்றி பாயிண்ட் by பாயிண்ட் ஆக எழுதி அசத்தி விட்டீர்கள்.

    நம் வாசகர்களின் உடல் நலத்திலும் அக்கறை கொண்டு பதிவை அளித்ததற்கு நன்றி.

    திரு.சிவராமன் அவர்கள் உரையின் சாராம்சம் அனைவரும் பின்பற்றி நோயில்லா வாழ்க்கை வாழ்வோம். அவரது பேட்டியை ஆவலுடன் பதிவாக எதிர் நோக்குகிறோம்.

    அனைவருக்கும் இந்த பதிவை refer செய்கிறேன்.

    நன்றி
    உமா வெங்கட்

  2. நம் பாரம்பிரிய உணவுகள்,காய்கறிகள்,பழங்களின் அருமை/பெருமைகள் மற்றும் உணவு பழக்கத்தின்
    முக்கியத்துவதை விவரிக்கும் முத்தான இப்பதிவு, நாம் மட்டும்மில்லாமல் நம் குடும்ப அங்கத்தினர் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டிய ஒன்றாகும்.

    நம் முன்னோர்கள் கடைபிடித்த உணவு பழக்கத்தை முறையாக பின்பற்றினாலே ஆரோக்கியமான வாழ்வோடு எந்த நோயும் அண்டாது.

    தற்போது சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது. இந்த மாற்றம் வரவேற்க்கதக்கது. அதே போல் இயற்கை விவசாயத்தில் சாகுபடியாகும் சிறுதானியங்கள்,பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் நமது உணவுமுறை அமைவது இன்னும் சிறப்பு.

  3. அருமையான விழிப்புணர்வு பதிவு. வெளிநாட்டு உணவுகளில் மூழ்கிக் கொண்டிருக்கும் நமக்கு, நம் பாரம்பரிய உணவின் மகத்துவத்தை எடுத்துச் சொல்லியிருக்கும் திரு.சிவராமன் அவர்களுக்கு நன்றிகள். கடந்த ஆண்டு திருப்பூர் புத்தகத் திருவிழாவில் சிவராமன் சாரின் “ஆறாம் திணை” புத்தகம் வாங்கினேன். உண்மையாகவே, கடந்த ஆண்டு முதல் எங்கள் வீட்டில் உணவுப்பழக்கம் மாறிவிட்டது. கம்பு, திணை, சாமை, குதிரைவாலி ஆகிய சிறுதானியங்கள் அதிகமாக சேர்த்துக் கொள்கிறோம். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

    உணவு பற்றிய விழிப்புணர்வை கையில் எடுத்திருக்கும் உங்கள் முயற்சிக்கு எனது நன்றிகள் அண்ணா !

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

    1. எவ்ளோ நல்ல கழித்து உங்கள் கமெண்ட் பார்க்கிறோம்
      எப்படி இருக்கீங்க.
      இந்த பதிவு படிப்பதற்கு முன்னமே நீங்கள் சத்தான உணவு வகைக்கு மாறி உள்ளது வரவேற்க வேண்டிய விஷயம்.
      நம் வீட்டிலும் கடந்த 6 மாதங்களாக தான் சிறு தானிய உணவு இல்லை.
      அதற்குமுன்னால் காலையில் சிறு தானிய உணவு தான்.
      காலை உணவை ஸ்கிப் பண்ணும் பழக்கம் என்னிடம் பல வருடங்களாக உண்டு. பதிவை படித்ததும் என் நினைவே எனக்கு வந்தது.
      எல்லோருக்கும் உபயோகமான பதிவு.
      நன்றி

      1. அவர் சிறு தானிய உணவெல்லாம் சாப்பிட்டு ஆளு புஸ்புஸ்னு இருக்குறதா தகவல்.

        1. திரு விஜய் அவர்களின் பேரம்பாக்கம் 2013 நியூ இயர் போடோவையும், 2015 ரைட் மந்த்ரா அலுவலகத் திறப்பு விழாவில் நேரில் பார்த்ததையும் வைத்தே சிறு தானிய உணவுகள் எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

          நன்றி
          உமா வெங்கட்

  4. சுந்தர் அண்ணா..

    மிகவும் உபயோகமான தகவல்கள். அனைவரும் பின்பற்ற வேண்டியதும் கூட..தங்கள் உழைப்பின் பின்னால் மலர்ந்த இந்த பதிவுக்கு கோடான கோடி நன்றிகள். அனைவரும் சுற்றத்தாரிடமும்,நண்பர்களிடமும் பகிர வேண்டிய செய்திகள்.

    திரு.சிவராமன் அவர்களின் பேட்டியுடனான பதிவை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.

    மிக்க நன்றி அண்ணா.

  5. அருமையான தகவல்கள் .
    நமக்கு மட்டும் அல்ல நமது குடும்பத்த்தினருக்கும் நண்பர்களுக்கும் மிகவும் தேவையான பதிவு.

    வாழ்க வளமுடன்
    நன்றி

  6. Thank you for the nice information. Just i comeacroos simiilar topic internet last week.
    Please read knockdiabetes.com for ayurvedic medicine for diabeties and watch some video feom Dr. Hegde Spech in IVU 42 wordl fest at Cheenai in Youtube. for more about food…

    Hats off your article and Keep rocking
    Regards
    Vivek

  7. சுந்தர்ஜி
    வளரும் நம் சந்ததியர்களுக்கு மிகவும் பயன் உள்ள ஒரு நல்ல உணவு பழக்கவழகங்கள். இம்முறை பின்பற்றி எல்லோரும் பயன் பெற நம் சுந்தர்ஜி அவர்களுக்கு நன்றி.
    ஒரு சரியான நேரத்தில் ஒரு விழிபுணர்வு .
    இன்றைய காலகடத்தில் நாம் நம பழக்கவழகங்கள் மாற்றவிட்டால்
    பின் பயங்கர விளைவுகள் சந்திக நேரிடும்.

  8. வணக்கம் சுந்தர். எதை செய்தாலும் ஆராய்ந்து சரியாக விளக்கமாக சொல்வது தான் உங்கள் வழக்கம்.அதுபோல இந்த கட்டுரையும் உள்ளது .இரண்டுஅல்லது மூன்று தலைமுறைகள் இப்படி சென்றுதான் மீண்டும் பழைய உணவுக்கு வரும் போல் இருக்கிறது . நன்றி.

  9. சுந்தர்

    மிகவும் அருமையான பதிவு.
    இதை பார்த்து நம் சகோதரர்கள் மாறுவார்கள்.

    கண்ணன். வை

  10. வாழ்க வளமுடன்

    உணவு மனிதனை மாற்றும்

    நம்முடைய உடலின் செரிமானத்திற்கு சைவ உணவு சிறந்தது

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *