Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!

ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!

print
சென்னை, கிண்டியை அடுத்துள்ள பரங்கிமலையை சேர்ந்த ஆங்கிலோ இந்தியர்கள் திரு.ஹப்டன் மற்றும் அவரது மனைவி ஷெரில் இருவரும் அருகில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்களாக பணி புரிந்து கொண்டிருந்தனர். நடுத்தர மக்களுக்கே உரிய எதிர்கால கனவுகளோடு வாழ்ந்து வந்த குடும்பம் அது.

ஒரு நாள் மகள் டெனிஸ் வந்து, “அம்மா… புதுசா ஒரு பிசினஸ் ஐடியா எனக்கு தோணியிருக்கு. எத்தனை நாளைக்கு இப்படி கஷ்டப்படுறது? வேலையை விட்டுட்டு வந்தா முழுமூச்சா அதுல இறங்கிடலாம்… ” என்று கூற, “இருக்குற வேலையயை விட்டுட்டா சாப்பாட்டுக்கு என்ன பண்றது?” இது அம்மாவின் யதார்த்தமான கேள்வி.

DSCN0486

“அதை பத்தி நாம ஏம்மா கவலைப்படணும்? கர்த்தர் இருக்கார். ஒரு ரெண்டு மூணு மாசம் கஷ்டப்படுவோம். அதுக்கு அப்புறம் நிச்சயம் நல்ல காலம் பிறக்கும்”

பதினாறு வருடங்களாக பார்த்து வந்த வேலையை திடீரென எந்த நம்பிக்கையில் விடுவது? ஒரு வழியாக யோசித்து மகள் சொல்ற மாதிரி ரிஸ்க் எடுத்து தான் பார்ப்போமே என்று, தான் செய்து வந்த ஆசிரியர் பணியை உதறினார் ஷெரில்.

ஒரே ஒரு செகண்ட் ஹாண்ட் தையல் மிஷின் மற்றும் ரூ.500/- இது தான் அவர்கள் முதலீடு. (நூல் கண்டு, ஊசி, காடா துணி இவற்றை வாங்க). இன்று இவர்களது நிறுவனத்தின் ஆண்டு டர்ன் ஓவர் எவ்வளவு தெரியுமா???? சுமார் 35 லட்ச ரூபாய்!

DSCN0463

இது என்ன பிரமாதம் என்று நினைக்கவேண்டாம். உண்மை தான். யார் வேண்டுமானாலும் பிஸ்னஸில் ஜெயித்து இப்படி பல லட்சங்களை ஒரு சில ஆண்டுகளில் டர்ன் ஓவர் செய்யலாம்.

ஆனால், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்டோர், முதியவர்கள் ஆகியோர்களுக்கு தனது நிறுவனத்தில் வேலை போட்டு கொடுத்து அவர்கள் வீட்டில் அடுப்பெரிய காரணமாக இருக்கிறார் ஷெரில் ஹப்டன். அங்கே தான் அவர் வித்தியாசப்படுகிறார்.

DSCN0467

சிறு சிறு சோதனைகளுக்கே துவண்டுவிடும் பெண்களுக்கு மத்தியில், திருமதி.ஷெரில் ஹப்டன் அவர்களை பற்றி கேள்விப்பட்டதில் இருந்து அவரை எப்படியாவது சந்தித்துவிடவேண்டும் தணியாத ஆவல் நமக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஜனவரி மத்தியில் ஒரு நாள் அவரிடம் பேசி நமது தளத்தை பற்றி கூறி, அவரது சந்திப்புக்கு அப்பாயிண்ட்மெண்ட் பெற்று பரங்கிமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றோம்.

“இப்படி ஒருவரை சந்திக்க போகிறோம்…. வர முடியுமா?” என்று கேட்டபோது, நம் தளத்தின் சாதனையாளர் சந்திப்புக்கு வருவதாக சொல்லியிருந்த நண்பர் முகுந்தன் என்பவர் உடன் வர ஒப்புக்கொண்டார்.

DSCN0481

இது போன்ற சந்திப்புக்களில் நாம் சந்திக்க விரும்பும் நபருக்கு என்ன வாங்கி செல்வது என்பது மிகப் பெரிய தடுமாற்றமாக இருக்கும். மதுரா டிராவல்ஸ் பாலன் அவர்களை சந்தித்ததில் இருந்து இது போன்ற சாதனையாளர் சந்திப்புக்கு சால்வை வாங்கி செல்ல நமக்கு விருப்பமில்லை. “இந்த சால்வையில் ஏன் தம்பி பணத்தை வேஸ்ட் செய்யனும்?” என்று கூறி நம்மை யோசிக்க வைத்தார்.

அவரிடமே “அப்போ இது போன்ற சந்திப்புக்களுக்கு செல்லும்போது என்ன தான் வாங்கிட்டு போறது சார்?” என்று கேட்க, அவர் அப்போது கொடுத்த ஐடியா தான் பழங்கள் வாங்கிச் செல்வது.

“மாதுளை, ஆப்பிள், திராட்சை உள்ளிட்ட பழங்களை அனைவரும் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள். எனவே பழங்கள் வாங்கிச் சென்று ஒரு சின்ன தட்டில் வைத்து கொடுத்துவிடுங்கள்” என்றார்.

அவர் சொன்னது சரியெனப்பட, அது முதல் இது போன்ற சந்திப்புக்களுக்கு பழங்கள் தான் வாங்கி செல்கிறோம். மேலும் பழங்கள் மங்களகரமானவை அல்லவா?

DSCN0459

நாம் சென்றதும் ஷெரில் ஹப்டன் அவர்கள் வரவேற்று அமரவைத்தார். பரஸ்பர நல விசாரிப்பு பின்னர், அவருக்கு பழங்கள் தந்து கௌரவித்தோம்.

தொடர்ந்து, “வாங்க நாம நம்ம யூனிட்டுக்கு போவோம்” என்று கூறி பக்கத்து தெருவில் இயங்கி வரும் அவரது யூனிட்டுக்கு அழைத்து சென்றார்.

இன்று மருத்துவமனைகள், பியூட்டி பார்லர்கள், மற்றும் ஸ்பா சென்டர்கள் உபயோகிக்கும் மேஸ்க்குகள், டிஸ்போஸபிள் டிஸ்யூக்கள், ஃபேசியல் கவுன், பிரா , பேண்டீஸ், குழந்தைகள் மற்றும் பெண்களின் நாப்கின், இவற்றை தயாரிக்கும் ஒரு நிறுவனமாக வளர்ந்து பலருக்கு வேலை கொடுத்து அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார் திருமதி.ஷெரில் ஹப்டன்.

“வேலை பார்த்த ஸ்கூல்ல போய் என்னோட ரிசைக்னேஷன் லெட்டரை கொடுத்தவுடனே, உனக்கென்ன புத்தி கித்தி பிறண்டு போச்சா? நல்ல வேலையை விட்டுட்டு நாப்கின், உள்ளாடைகள் இதெல்லாம் தயாரிக்க போறேன்னு சொல்றியே?” அப்படின்னாங்க.

பேசாம நம்ம முடிவை மாத்திக்கலாமான்னு நான் யோசிச்சப்போ என் மக தான் விடாப்பிடியா இருந்து நாம இந்த புது பிஸ்னஸை ஆரம்பிச்சே தீரனும்னு ஒத்தைகால்ல நின்னா.

திறக்கப்பட்டது கதவு மட்டுமல்ல... பிரேமாவின் வாழ்க்கையும் தான்!
திறக்கப்பட்டது கதவு மட்டுமல்ல… பிரேமாவின் வாழ்க்கையும் தான்!

என் வீட்டுல்ல பிரேமான்னு ஒரு அம்மா இருந்தாங்க. என் பொண்ணை வளர்த்ததுல அவங்களுக்கும் பெரிய பங்கு உண்டு. சர்க்கரை நோய் அதிகமாகி அவங்களோட ஒரு காலை எடுத்துட்டாங்க. இனிமே உங்களை வெச்சி காப்பாத்த முடியாதுன்னு அவங்க மருமகன் மகளோட சேர்த்து வீட்டை விட்டு விரட்டிவிட்டுட்டான். “என்னை ஏதாவது ஹோம்ல கொண்டு போய் சேர்க்க முடியுமா?” ன்னு என் கிட்டே கேட்டாங்க.

DSCN0474 copy

முன்னே பின்னே தெரியாதவங்களுக்கு வேலை கொடுக்குறதை விட நம்ம பிசினஸ்ல இவங்களை மாதிரி ஆளுங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தா அவங்களுக்கு உதவியா இருக்குமேன்னு பிரேமாவையே முதல் ஆளா வெச்சி ‘DREAM WEAVERS’ என்கிற நிறுவனத்தை துவக்கினோம்.

ஏதோ ஒரு தைரியத்துல இறங்கிட்டோமே தவிர, பெரிய முதலீட்டுக்கெல்லாம் எங்களுக்கு வழியே இல்லை. ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’னு கையில் இருந்த கொஞ்சம் பணத்தை போட்டு ஏதோ ஆரம்பிச்சோம்.

ஒரு விபத்துல கணவரை பறிகொடுத்துட்டு ரெண்டு குழந்தைகளோட அனாதையா நின்ன ஒரு பெண் அறிமுகமானாங்க. அவங்களுக்கு என்னோட டாட்டர் டெனிஸ் தான் துணி தைக்கிறதுக்கும் டிசைன் பண்றதுக்கும் கத்து கொடுத்தா. வேலையும் கொடுத்தா.

பியூட்டி பார்லர்களில் தேவைப்படும் யூஸ் அண்ட் த்ரோ உடைகளுக்கான சாம்பிளை எடுத்துகிட்டு நானும் என் பெண்ணும் ஏறாத ப்யூட்டி பார்லர்களே சென்னையில இல்லே. பல இடங்களில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம்.

DSCN0494

“எங்க பொருட்களை வாங்குறது மூலமா நீங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கும் கைவிடப்பட்டோர்களுக்கும் முதியவர்களுக்கும் வேலைவாய்ப்பு தர்றீங்க. அதுக்காகவாவது வாங்கிக்கோங்க” என்று கெஞ்சினோம். ஹூம்…ஹூம்… பலர் எங்களையோ அல்லது நாங்க கொண்டு வந்த சாம்பிளையோ பார்க்க கூட தயாரா இல்லே.

வேலையை ரிசைன் பண்ணப்போ ஸ்கூல்ல சொன்ன வார்த்தைகள் தான் நினைவுக்கு வரும். அவசரப்பட்டுடோமோன்னு ஒரு கணம் கண்ணெல்லாம் கலங்கும். “இல்லேம்மா… நாம நிச்சயம் ஜெயிப்போம்” அப்படின்னு என் பொண்ணு தான் ஆறுதல் சொல்லுவா.

நீண்ட போராட்டத்துக்கு பிறகு ஒன்னு ரெண்டு BULK ORDERS கிடைச்சது. அதுல வந்த லாபத்துல மேற்கொண்டு ரெண்டு மெஷின் வாங்கிப்போட்டோம். ‘பாரதி யுவ சக்தி டிரஸ்ட்’ என்கிற அமைப்பு அமைப்பை சேர்ந்த திருமதி. லக்ஷ்மி வெங்கடேசன் அவர்கள் மூலமா எங்களுக்கு வங்கிக் கடன் கிடைச்சது. பிஸ்னசை மேலும் கொஞ்சம் விரிவுபடுத்தினோம்.

DSC00078

இன்னைக்கு சென்னையில இருக்குற பெரும்பாலான பியூட்டி பார்லர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு நாங்கள் தயாரிக்கும் டிஸ்போஸபிள் மெட்டீரியல்ஸ் தான் போகுது.

ஆயுஷ், சஞ்சீவனம் உள்ளிட்ட முன்னணி HEALTH CARE நிறுவனங்களும் இதுல அடக்கம்.

வேற எங்கேயும் வேலை பார்க்க முடியாதவங்களுக்கு எங்க கம்பெனியில வேலை போட்டு கொடுத்திருக்கோம். கை, கால் நல்லா இருக்குறவங்க எங்க வேணும்னாலும் போய் பிழைச்சுக்குவாங்க. ஆனா மாற்றுதிறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் நிலைமை தான் பரிதாபம். ஆகையால, எங்க நிறுவனத்துல வேலைக்கு அவங்களை தான் பெரும்பாலும் வெச்சிருக்கோம்.

DSC00079

சர்வேதேச மார்க்கெட்டை பிடிக்க என் மகள் துபாய் போயிருக்கா. அங்கே ஒரு கம்பெனியில வேலை பார்த்துகிட்டே எங்க பொருட்களுக்கு சர்வேதேச மார்கெட்டை பிடிக்க முயற்சி பண்ணிக்கிட்டுருக்கா…” என்றார்.

இவர் நிறுவனத்தை நாம் சுற்றி பார்த்தபோது, பல தருணங்களில் கண்கள் கசிந்தது. இவரது பணியாளர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தான் காரணம்.

DSC00091

மாற்றுத் திறநாளிகள், முதியோர், உடல் நலக் குறைவினால் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாதவர்கள் இப்படிப்பட்டவர்கள் தான் இவரது நிறுவனத்தில் இருக்கின்றனர். ஒவ்வொருவர் பின்னணியிலும் ஒரு சோகக்கதை இருக்கிறது.

பி.காம் படிப்பை கரஸ்பாண்டன்ஸில் படித்துக்கொண்டே இங்கு டெய்லராக வேலை பார்க்கும் சுஷ்மிதாவின் அப்பா ஆட்டோ ஓட்டுகிறார். அம்மா உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருக்கிறார். அப்பா ஆட்டோ ஓட்டி சம்பாதிப்பது குடும்பத்திற்கு போய்விட, இவர் சம்பாதிப்பது முழுவதும் அம்மாவுக்கு மருந்துகள் வாங்கவே சென்றுவிடுகிறது.

இன்னொருவர் விஜயாம்மா. இங்கு உதவியாளராக பணிபுரிகிறார். அவரது மகன் (வயது 27) இரு கண்களிலும் பார்வையற்றவர். அருகில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனி ஒன்றில் பாக்கேஜிங் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். அந்த குடும்பத்திற்கு உதவும் பொருட்டு விஜயாம்மாவுக்கு இங்கு வேலை போட்டு கொடுத்து, தங்குவதற்கு ஒரு போர்ஷனும் கொடுத்திருக்கிறார் ஷெரில். (வாடகைக்கு விட்டா எப்படியும் ரூ.5000/- மாத வாடகை கிடைக்கும். ஆனால் அதற்கு ஆசைப்படாமல் கண் தெரியாத ஒரு பிள்ளையை வைத்துக்கொண்டு கஷ்டப்படும் ஒரு வயதான தாய்க்கு உதவும்பொருட்டு இதை செய்திருக்கிறார் ஷெரில்.)

DSC00103

இன்னொருவர் கதை மிகவும் உருக்கமானது. ஃபிலோமினாவுக்கு 80 வயது. தனது அக்காவின் பேரக்குழந்தைகளை எடுத்து வளர்த்துவருகிறார். குடியால் சீரழிந்த குடும்பம் அது. அப்பா எங்கோ சென்றுவிட, அம்மா வேறு எவருடனோ சென்றுவிட்டாள். பிள்ளைகள் கடைசியில் அநாதையாகிவிட்டார்கள். நெஞ்சு வெடித்து அந்த பிள்ளைகளின் பாட்டி போய் சேர்ந்துவிட, அனாதையான தனது அக்காவின் பேரக்குழந்தைகளை ஃபிலோமினா எடுத்து வளர்த்து வருகிறார். அக்குழந்தைகள் அருகே உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவருக்கோ வயது 80. வாங்கும் ஊதியம் முழுதும் மருந்து மாத்திரைகளுக்கே சென்றுவிடுகிறது.

இந்நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் கதை இப்படித் தான். இவர்களை போன்றவர்களுக்கு வேலை கொடுத்து ஏதோ தம்மால் முடிந்த அளவு அவர்களின் சுமையை இறக்கி வைக்கிறார் ஷெரில்.

DSC00086

இதில் உச்சகட்ட சோகம் என்றால், சில ஆண்டுகளுக்கு முன்னர் லட்சக்கணக்கில் செலவு செய்து தனது அன்பு மகள் டெனிஸ்ஸின் திருமணத்தை ஷெரில் நடத்திவைத்தார். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் எதுவும் இல்லை அல்லவா? ஒரு குழந்தை பெற்றுள்ள அந்த பெண்ணுக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. இங்கே அவரது அம்மா ஷெரில் குழந்தையை பார்த்துக்கொள்ள, சொந்த வாழ்க்கையின் சோகத்தை மறக்க, துபாயில் வேலை செய்துகொண்டே தனது DREAM WEAVERS நிறுவனத்திற்காக சர்வதேச சந்தையில் மார்கெட்டிங் செய்து வருகிறார் டெனிஸ்.

“ஏம்மா அவங்க இங்கே இருந்தா உங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்குமே?” என்றோம்.

“இல்லே… சார்… பிசினஸுக்கு வாங்கிய பாங்க் லோனெல்லாம் நிறைய இருக்கு. அவ அங்கே ஏதாவது சம்பாதிச்சா தான் நான் இங்கே அதையெல்லாம் கட்டமுடியும். தவிர, சரவேதேச மார்கெட்டை பிடிக்க அது சரியான இடம். அங்கே இருந்தா ஈசியா அது முடிஞ்சிடும்” என்றார்.

இவரது நிறுவனம் தயாரிக்கும் அனைத்தும் பொருட்களும் சுற்றுச் சூழலை பாதிக்காத ECO-FRIENDLY பொருட்கள் தான்.

இது மட்டுமல்ல, EVENT MANAGEMENT எனப்படும் நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு ஆகியவைகளையும் இவரது நிறுவனம் செய்கிறது.

Dream Weavers
திருமதி.ஷெரிலின் மகள் டெனிஸ் யூனிட்டில் பணியாளர்களுடன்… (Photo coutesy : Rediff.com)

இவரது மகள் டெணிஸ், ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், டிஸ்போஸபிள் கப்புகள் மற்றும் இதர பொருட்களை பார்த்தபோது, ஏன் நாம் இதே கான்செப்ட்டை மற்ற விஷங்களிலும் அப்ளை செய்யக்கூடாது என்று ஒரு பொறி தோன்றியது.
அன்றிரவு வீட்டில் விழித்திருந்து தனது கனவுகளுக்கு வடிவம் கொடுக்க தொடங்கினார். தையல் மிஷினில் பல மாடல்களை தைத்து பார்த்தார்.

ஒரு கட்டத்தில் நம்பிக்கை ஏற்பட்ட பிறகு யூனிட்டை நிறுவனமாக மாற்றி தொழில் தொடங்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. தொழில் துறை உரிமத்தை பெற பல அரசாங்க அலுவலகங்களுக்கு நடையாய் நடந்தனர் இருவரும். பல மட்டங்களில் பல அலைகழிப்புக்களுக்கு பிறகு ஒரு வழியாக உரிமம் கிடைத்தது.

“இப்போது 50 சிறிய நிறுவனங்கள், 15 பெரிய நிறுவனங்கள், எங்கள் வாடிக்கையாளர்கள். பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் ஒவ்வொரு மாதம் 2 முதல் 4 லட்ச ரூபாய் வரை மதிப்புள்ள பொருட்களை சப்ளை செய்கிறோம்.”

“இப்போது எங்களிடம் ஏற்றுமதி-இறக்குமதி லைசன்ஸ் கூட உண்டு!”

திருமதி.ஷெரிலிடம் விடைபெறும்போது, “எங்கள் கனவு நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்று தெரியும். அதனால தான் DREAM WEAVERS னே பேர் வெச்சோம்!” என்றார் சிரித்துக்கொண்டே.

என்ன சொல்வது…

WHAT YOU THINK YOU BECOME!

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (குறள் 56)பொருள் : உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.

ஷெரில் ஹப்டன் ஆசிரியராகவே தனது பணியை தொடர்ந்திருந்தால் அது அவரது குடும்பத்தை மட்டுமே முன்னேற்றியிருக்கும். ஆனால், இன்று பிரேமா, சுஷ்மிதா, ஃபிலோமினா, விஜயாம்மா போன்றர்களின் வீட்டில் அடுப்பெரிந்துகொண்டிருக்காது. இருண்ட அவர்களது வாழ்க்கையில் ஒரு மெழுகுவர்த்தியாவது எரிந்துகொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம், ஷெரில் ஹப்டனும் அவரது அன்பு மகள் டெனிஸ் ஹப்டனும் தான்.

இன்று அவருக்கு ஃபோன் செய்து மகளிர் தின வாழ்த்து கூறினோம். உங்களை பற்றிய பதிவு தான் இன்றைய மகளிர் தின ஸ்பெஷல் பதிவாக வருகிறது என்றும் கூறினோம். அவர்களுக்கு தான் எத்தனை சந்தோஷம்.

“இனி எங்கள் வாசகர்களின் பிரார்த்தனையில் நீங்களும் உங்கள் நிறுவனமும் அதன் ஊழியர்களும் நிச்சயம் இடம்பெறுவீர்கள்.” என்றோம்.

DSCN0490ஷெரில் ஹப்டன் அவர்களுக்காகவும் அவரது நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் நம் வாசகர்களை அவசியம் அடிக்கடி பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பிரார்த்தனை மட்டும் அல்ல… அவருக்கு தேவை சில உதவிகளும் கூட.

ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் ஆர்டர் முழுவதையும் அவருக்கு பெற்றுத் தரும் முயற்சியில் நாம் ஈடுபட்டிருப்பதாகவும் விரைவில் அந்நிறுவனத்திடமிருந்து உங்களுக்கு அழைப்பு வரும் என்றும் கூறியிருக்கிறோம்.

“ரொம்ப தேங்க்ஸ் சார்.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே. அந்த ஆண்டவன் தான் உங்களை சரியான நேரத்துல அனுப்பி வெச்சிருக்கான்” என்றார்.

திருமதி.ஷெரில் ஹப்டன் அவர்களுக்கு நாம் தரும் சிறு உற்சாகமோ அல்லது உதவியோ தனிப்பட்ட ஒருவருக்கு தருவதல்ல. ஆதரவற்ற கைவிடப்பட்ட பல குடும்பங்களுக்கு தருவது!

விடைபெறும்போது, “மேடம்…பழங்களை அவசியம் சாப்பிடுங்க… உங்களுக்காக பார்த்து பார்த்து வாங்கிட்டு வந்தோம்!” என்றோம்.

“நிச்சயம் சார்… கட் பண்ணி எங்க STAFF எல்லாருக்கும் கொடுத்துட்டு நானும் அவங்க கூட சேர்ந்து சாப்பிடுறேன்!” என்றார்.

இந்த ஒரு எண்ணத்திற்காகவாவது இறைவன் அவர்களுக்கு எல்லா வளமும் தரவேண்டும்!

(என்ன இவங்க… எல்லா இடத்துலயும் அந்த ஷீல்டை தூக்கிட்டு போஸ் கொடுக்குறாங்க… நாம் ஏதாவது சொல்லியிருப்போமோ என்று நினைக்கவேண்டாம்.. அதை நாம் அளித்தபோது அவர் பட்ட சந்தோஷம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. தன்னுடைய பணியாளர்கள் ஒவ்வொருவரிடமும் காண்பித்து காண்பித்து “நம்ம கம்பெனிக்கும் எனக்கும் ரைட்மந்த்ரால இருந்து அவார்ட் கொடுத்திருக்காங்க… ரைட்மந்த்ரால இருந்து அவார்ட் கொடுத்திருக்காங்க…” என்று சொல்லி சொல்லி ஒரு சிறு குழந்தையை போல சந்தோஷப்பட்டார். உண்மையில் சொல்கிறோம்..அந்த மகிழ்ச்சியில் நாம் இறைவனை பார்த்தோம்! அவரை பொறுத்த வரை அது ஒரு ஆஸ்கார் போல!)

=============================================================
ஷெரில் அவர்களின் நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் இதர தகவல்களை கீழே தந்திருக்கிறோம்.

உங்களால் ஏதேனும் ஆர்டர் வாங்கிக் கொடுத்து உதவ முடியுமா என்று பாருங்கள்….

DREAM WEAVERS

With the support of expert professionals and their immense expertise, Dream Weaver has set benchmarks of excellence in the domain of a wide range of products. Since 2008, we have been offering quality Disposable Garments, Disposable Products, etc. for hospitals, body massage spas, parlors, hotels and for personal use. Backed by a strong infrastructural base, we offer qualitative and reliable products to the clients.

Our quality controllers ensure that the range is thoroughly tested for its quality before it gets delivered to the clients. Our product range is highly acknowledged for its superior quality, comfort and cost effectiveness. Our gamut of products is in compliance with the relevant health, safety and environmental protection norms. We have exporter and manufacturer license also.

few-pics-of-our-products-2
 Picture-018
We work with the under privileged sector of women and each item is hand made and manufactured in house. We have already carved a niche in Chennai and now, and looking forward  to expand our business to help out more under privileged women. Our consistent approach towards quality and perfection has assisted us in garnering a long list of esteemed clients, based nationwide.

DSC_0784Today, we have positioned ourselves as one of the key Manufacturers, Exporters, Suppliers and Traders of quality products. With complete dedication and sincerity towards providing complete satisfaction to the clients by rendering products on time at affordable prices, we have been growing in leaps and bounds.

Mrs.Sheryll -Denise &Cheryl Huffton,
Dream Weavers
M : 9600153022

=============================================================
[END]

7 thoughts on “ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!

  1. Right Mantra பெண் வாசகர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

    சுந்தர்ஜி, மிக நீண்ட பதிவை மகளிர் தின பதிவாக அளித்ததற்கு மிக்க நன்றி திருமதி ஷெரிலின் துணிச்சல் மிகவும் பாரட்டதக்கது. பார்த்த வேலையை விட்டு விட்டு business செய்வதற்கு மிக பெரிய தைரியம் வேண்டும். ஷெரில் குடும்டம் தான் மட்டும் உயராமல் மாற்று திறநாளிகளின் குடும்பத்தையும் உயர்த்துகிறார். அவர்களுக்கு எவ்வளவு பெரிய குணம்.

    நீங்கள் பேட்டி எடுத்த விதம் அருமை.
    இந்த இனிய நன் நாளில் ஷெரில் மற்றும் அவர் மகளையும் வாழ்த்துகிறேன். அவர்கள் மேலும் மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும்.

    நன்றி
    உமா

  2. மகளிர் தினத்திற்கு எற்ற மகளிரை பற்றிய சிறப்பான பதிவு.
    பார்த்துகொண்டு இருக்கும் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்து விட்டு மகளுக்காக களம் இறங்கி வெற்றி பெற்றுள்ள ஒரு தாய்க்கு ராயல் சல்யுட்.
    சிறு சிறு சோதனைகளுக்கே துவண்டுவிடும் எங்களை போன்ற சாதாரண பெண்களுக்கு மத்தியில், திருமதி.ஷெரில் ஹப்டன் ஒரு சாதனை பெண் தான். அவரும் அவர் மகளும் இன்னும் பல ஆர்டர்கள் பெற்று முன்னேற கர்த்தர் என்றும் துணை நிற்ப்பர்
    தான் மட்டும் முன்னேறாமல் மாற்று திரனளிகளுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை கை தூக்கி விடும் அவர்களின் உயர்ந்த பண்புக்கு தலை வணங்குகிறேன்.
    இவர் இன்னுமொரு பெட்ரிசிய மேடம் என்பதில் வியப்பில்லை.
    நம் தளம் சார்பாக நாங்களும் தாய்க்கும் மகளுக்கும் மற்றும் அங்கு பணி செய்யும் அனைத்து மகளிருக்கும் எங்கள் மகளிர் தின நல வாழ்த்துக்கள்.

  3. உள்ளத்தில் காயங்களையும் , நம்பிக்கையையும் ஒருங்கே சுமந்து கொண்டிருக்கும் அனைத்து மகளிருக்கும் , இங்கே உள்ளவர்கள் வாழ்க்கை துருவ நட்சத்திரமாய் , விடி வெள்ளியாய் இருக்கும் …

    வழக்கம் போல ஒரு நல்ல பதிவை கொடுத்த சுந்தருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  4. Dear Anna,

    Vazhga Valamudan.

    Very good article and very good message.

    Wish you and your family a very good health, long life, enough wealth,prosperity, wisdom and peace.

    With regards,
    Kannathasan

  5. ஒரு நல்ல குடும்பம் ஒரு நல்ல கம்பனியாக மாற உதவி செய்துள்ளீர்கள். அதிலும் மாற்று திரனளிகளுக்கு உதவும் அவர்கள்
    நீண்ட பயணத்தில் எல்லா உதவிகளையும் பெற இறைவன் அருள்புரிய
    வேண்டும்.

  6. God cannot be every where.
    So he created mother.
    Not only mother like these kind of people who spent their life for others.
    No words to praise them.
    God be with them always.
    My hearty wishes for their success and achievement.

  7. டியர் சிம்பிள் சுந்தர்,

    I have seen your Prayer song in Koyambedu temple.Really very nice line. Is wonderful. From i came to know your this big shop in perfect way. Like this many supporters will come for you and for them also. Rest in next.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *