Saturday, February 23, 2019
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா?

பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா?

print
ந்த குருகுலத்தில் தினமும் வேதபாராயணமமும் கீதை பாராயணமும் நடக்கும். குருநாதர் சொல்லச் சொல்ல, சீடர்கள் வேத மந்திரங்களை உச்சரிக்கவேண்டும். குரு வேத மந்திரங்களின் அர்த்தத்தை அவர்களுக்கு போதிப்பது கிடையாது. முதலில் அவர்கள் மந்திரங்களை மனப்பாடம் செய்துகொள்ளட்டும் பிழையின்றி உச்சரிக்க கற்றுக்கொள்ளட்டும் பிறகு அர்த்தம் சொல்லிக்கொடுப்பதை பார்த்துக் கொள்ளலாம் என்பது அவர் எண்ணம்.

ஒரே ஒரு சீடனுக்கு மட்டும் ஒரு சந்தேகம் எழுந்தது.

“குருவே என்னை தவறாக நினைக்கவேண்டாம்… பொருள் புரியாமல் அர்த்தம் தெரியாமல் மந்திரங்களை உச்சரிப்பதால் என்ன பலன்? மேலும் சுவடிகளை மூடிவைத்ததுமே அனைத்தும் மறந்துவிடுகிறது எனக்கு… நான் கற்பது வீணாக அல்லவா போய்விடுகிறது?”

“குழந்தாய்… கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை தயக்கிமின்றி ஆசிரியரிடம் கேட்டு தீர்த்துக்கொள்ளவேண்டும். சந்தேகம் கேட்பவன் அந்த நொடி வேண்டுமானால் முட்டாளாக அடுத்தவர்களுக்கு தெரியலாம். ஆனால் கேட்க்காதவர்கள் வாழ்க்கை முழுதும் முட்டாள்களாகத் தான் இருப்பார்கள். நீ சந்தேகம் கேட்டதற்கு மிக்க நன்றி. உன் மூலம் ஒரு அருமையான விஷயத்தை அனைவருக்கும் உணர்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் சொல்வதை சிரத்தையுடன் செய்வாயா?”

குரு கேட்க, “நிச்சயம் குருவே. தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறேன்” என்றான் சீடன்.

குரு உடனே ஆஸ்ரம சமையற்கூடத்துக்கு சென்று, அங்கு அடுப்பு கரி போட்டு வைக்கப்பட்டிருந்த மூங்கில் கூடை ஒன்றை கொண்டு வந்தார். கூடை முழுதும் கரி படிந்து அதன் நிறமே மாறியிருந்தது.

அந்த கூடையை சீடனிடம் கொடுத்தவர், “நீ நேரே ஆற்றுக்கு போய், இதில் தண்ணீர் கொண்டு வா” என்றார்.

சீடன் சற்றும் யோசிக்காமல், கூடையுடன் ஆற்றுக்கு விரைந்தான். மூங்கில் கூடையில் நீர் நிற்குமா என்ன? இவன் ஆஸ்ரமம் திரும்புவதற்குள் மொத்த நீரும் ஒழுகிவிட்டது.

bamboo basket test

குரு ஏன் இப்படி ஒரு வெட்டி வேலையை நம்மிடம் ஒப்படைத்தார் என்று எண்ணியபடியே வெறுங்கூடையுடன் சென்றான்.

குரு சிரித்தபடி, “உன் வேகம் பத்தாது. நீர் வடிவதற்குள் இங்கு இருப்பது போல வா” என்று மறுபடியும் ஆற்றுக்கு சென்று நீரை கொண்டு வர பணித்தார்.

இந்த முறை சீடன் வேகமாக ஓடி வந்தான். ஆனாலும், வந்து சேர்வதற்குள் கூடை காலியாகிவிட்டது.

கூடையில் தண்ணீர் கொண்டு வருவது ஒருபோதும் சாத்தியம் இல்லை என்று புரிந்துகொண்ட சீடன், வாளி ஒன்றைக் கையில் எடுத்தான். ஆனால் குருவோ, “எனக்கு வாளியில் நீர் வேண்டாம். கூடையில்தான் வேண்டும். நீ இன்னும் தீவிரமாக முயற்சி செய்… இன்னும் வேகமாக வா” என்று அவனை மறுபடியும் ஆற்றுக்கு அனுப்பினார்.

அந்த முறையும் அவனால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை.

“என்னை மன்னியுங்கள்… இது அர்த்தமற்ற செயல் போலத் தெரிகிறது. என்னால் மட்டுமல்ல எவராலும் இது முடியாது என்று கருதுகிறேன்” என்றான், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி.

அவனைப் பார்த்து புன்னகைத்த குரு, “நீ இதைப் அர்த்தமற்றது என்கிறாய். ஆனால், கூடையைப் பார், தெரியும்” என்றார்.

சீடன் கூடையைப் பார்த்தான். முதல் தடவையாக அது முற்றிலும் வேறாக மாறியிருப்பதைக் கண்டான். பழைய, கரி படிந்த கூடை, இப்போது உள்ளும் புறமும் சுத்தமாகிப் புத்தம் புதியது போல் காட்சியளித்தது!

குரு புன்னகை பூத்தபடி சொன்னார் : “மகனே… வேத மந்திரங்களும் கீதையும் படிக்கும்போது இதுதான் நமக்கும் நேர்கிறது. ஒருவருக்கு மந்திரங்களின் பொருள் புரியாமல் இருக்கலாம்; பொருள் புரியாமல் படிப்பது அர்த்தமற்றதாக தோன்றலாம். அவை நினைவில் நிற்காமல் போகலாம். ஆனால், இந்த கூடை, நீரை அள்ள எடுத்தக்கொண்ட முயற்சியில் சுத்தமானதை போல நாமும் உள்ளும் புறமும் அழுக்குகள் நீங்கி தூய்மையடைந்து முற்றிலும் புதிய மனிதனாக மாறிவிடுவோம்!” என்றார்.

“இப்போது புரிந்தது குருவே…!” என்று அவர் கால்களில் வீழ்ந்தான்.

மந்திரங்களை பொருள் தெரியாமல் உச்சரித்தாலும் அதில் பலனுண்டு என்பதற்கு இதைவிட சிறந்த விளக்கம் தரமுடியுமா என்ன?

(பொருள் புரியாமல் சுலோகம் சொன்னாலும் பலன் உண்டு என்று நமக்கு தெரியும். ஆனால், அது எப்படி சாத்தியம் என்கிற சந்தேகம் நமக்கு இருந்து வந்தது. மேற்படி கதை நமக்கு அதை மிக மிக தெளிவாக உணர்த்தியது. எனவே வாசகர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம். முகநூலில் நண்பர் கோபாலகிருஷ்ணன் பகிர்ந்திருந்த கதையை நமது ஸ்டைலுக்கு சற்று மாற்றி, பிரத்யேக படம் வரைந்து இங்கே அளித்திருக்கிறோம்!!)

[END]

15 thoughts on “பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா?

 1. வணக்கம்……

  நல்ல விளக்கம் ………….நன்றிகள் பல………..

  ஒரு படைப்பை தருவதற்கு தாங்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தை வியக்க வைக்கிறது……..தொடரட்டும் தங்கள் தொண்டு……….

 2. இந்த சந்தேகம் கடவுள் நம்பிக்கையுள்ள பலருக்கும் இருக்கிறது.

  வயிற்று வலிக்கு, தலை வலிக்கு மற்றும் பிற வியாதிகளுக்கு என்று மருத்துவர் எழுதிகொடுக்கும் மாத்திரைகளை உட்கொள்கிறோம். அந்த மாத்திரையில் என்ன என்ன மூலக்கூறுகள், வேதியல் பொருட்கள் இருக்கிறது என்று நாம் ஆராய்ந்து சாப்பிடுவதில்லை. அந்த மாத்திரையை சாப்பிட்டால் பலனுண்டு என்பது மட்டும்தான் நமக்கு தெரியும். சாப்பிட்ட மாத்திரை அதன் வேலையை சரியாக செய்து நோயை குணமாக்குகிறது.

  அதை போலத்தான் மந்திரங்களும் அதன் பலன்களும். அர்த்தம் புரிந்து சொன்னால் நல்லது. அர்த்தம் புரியா விட்டாலும் நாம் நம்பிக்கையுடன் சொல்லும்போது மந்திரங்கள் அதன் வேலையை செய்து பலனளிக்கும்.

 3. அருமையான விளக்கம் சுந்தர். பல சமையங்களில் எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது, இப்போது நிவர்த்தி ஆகிவிட்டது. முகநூல் நண்பர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. விளக்கத்திற்கு ஏற்ற அழகான படம். சீடரின் ஆடை, ஆசிரமத்தின் எளிமை, ஆற்றுக்கும் ஆசிரமத்துக்கும் நடுவில் உள்ள தூரம் மற்றும் சீடரின் முகத்தில் உள்ள கவலை எல்லாம் உயிரோட்டத்துடன் வந்துள்ளது. வரைந்தவருக்கு பாராட்டுக்கள்.

 4. அர்த்தம் புரியாமல் சுலோகம் சொன்னாலும் பலன் உண்டு என்பதற்கு இந்த கதையை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது, ஓவியருக்கு நமது பாராட்டுக்கள். மிகவும் தத்ரூபமாக வந்துள்ளது. எனக்கு இந்த பதிவை படிக்கும் பொழுது சைதன்ய மகா பிரபு கதை பற்றி தாங்கள் பதிவு செய்த கதை ஞாபகத்திற்கு வருகிறது.

  நன்றி
  உமா

 5. ராம ராம ராம

  ஆம், பொருள் தெரியாவிட்டால் என்ன, எமது முன்னோர்களாகிய ரிஷிகள் கூறியது…..எமது நன்மைக்கே…..சொல்ல சொல்ல ……….மனதில் ஒரு புத்துணர்வு, இனம் தெரியாத மகிழ்ச்சி தோன்றும்…….அந்த மகிழ்ச்சி மீண்டும் , மீண்டும் மந்திரங்கள் ….ஸ்லோகங்கள் சொல்ல தோன்றும். ஆம் , ஸ்லோகத்தால் மகிழ்ச்சி ……மகிழ்ச்சியால் சுலோகம் என ஒன்றுடன் ஒன்று தொடர்பு ……சித்தம் சுத்தமானால் கேட்டது கிடைக்குமே ………நினைத்த நல்லன எல்லாம் நடக்குமே ……..எமக்கு அப்போது தெரியவில்லை …..இதுதான் சித்த சுத்தி எனபது என்று ………..பின்னர் வளர்ந்த பின்பு தெரிந்தது

  ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஓம்

 6. நல்ல பதிவு …அருமையான விளக்கம்
  நன்றி
  பிரியதர்சினி

 7. Already you have published an article about the power of mantras shown by Sri Ragavendra – the plant came back to life and grown after the chanting of mantras.
  **
  Now this one – is also good.
  **
  Our site and also sites like ours (though they’re few) are much more important for the today’s entire generation in creating values and good qualities in us.
  **
  Thanks so much for doing extra-ordinary work to create us from this ‘destroying, competitive’ world.
  **
  **Chitti**.

 8. அருமையான கருத்தை மிக எளிதாக குரு சீடனுக்கு மட்டும் விளக்க வில்லை . நமக்கும் தான்.
  மிக்க நன்றி

 9. இந்த்த பதிவை படித்தவுடன் நான் எங்கயோ படித்த கதை ஞாபகத்திற்கு வருகிறது
  ரயிலில் ஓர் நாத்திகரும் வேதம் படிக்கும் மாணவரும் பிரயாணம் செய்கிறார்கள். அந்த மாணவன் வேதத்தை சொல்லிக்கொண்டு வரும்போது நாத்திகர், புரியாத இந்த மந்திரம் சொல்வதால் என்ன பயன் என்ன்றும், அவனை கிண்டல் செய்தும் வருகிறார்
  . ரயில் ஸ்டேஷன் நிற்கும்போது நாத்திகர் வாயில் உள்ள வெற்றிலை சாரை துப்புதும்போது ஓர் சிறுவன் மேல் விழுகிறது. அந்த சிறுவன் உடனே நாத்திகரை பார்த்து தேவ…………..பய என்ன்று கத்துகிறான். அப்போது வேதம் படிக்கும் மாணவன் நாத்திகரை பார்த்து அந்த சிறுவன் உங்களை திட்டிய வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் அவன் சொன்னதற்கே உங்களுக்கு கோபம் வருகிறது. அர்த்தம் புரிந்து சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். அதைப்போல மந்திரமும் அர்த்தம் தெரிந்தோ தெரியாமலோ சொன்னால் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

 10. வணக்கம் அண்ணா

  இப்பதிவு பல பேருக்கு சந்தேகத்தை நிவர்த்தி செய்திருக்கும் கண்டிப்பாக

  இதை படித்த அனைவருக்கும் தாங்கள் அளி்த்த பழைய பதிவு

  //உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது! (August 22, 2013)//

  எத்தனை பேருக்கு நினைவிற்கு வந்தது என்று தெரியவில்லை!?
  தவறாக ‘ஸ்ரீமத் ராகவேந்த்ர ஸ்தோத்ரத்தை” படித்த தன் பக்தருக்கா ராயர் கனவில் தோன்றி கனவில் தோன்றி அற்புதம் நடத்த நிகழ்ச்சி

  அந்த அற்புத வரிகள்
  ———————————-
  “ஸ்தோத்திரம் சொல்லத் தெரியாவிடினும் கவலை இல்லை. தவறாக உச்சரித்தாலும் தவறு இல்லை. எப்போது என்றால் அதில் ஆத்மார்த்தம் இருந்தால். ஆதலால் நீ அந்த பக்தனை மீண்டும் ஸ்தோத்திரம் சொல்லச் சொல்” என்றவாறு ஸ்ரீ ராகவந்திரர் மறைந்தார்.

  http://rightmantra.com/?p=6386

  படித்தவர்கள் படிக்காதவர்கள் இருந்தால் மீண்டும் இந்த பதிவை படித்தால் தங்களுடைய அனைத்து சந்தேகங்களும் நீங்கும்
  //உச்சரிப்பை விட உள்ளன்பே பெரிது!

  http://rightmantra.com/?p=6386

  நன்றி

  மு. பிரசன்னகுமார்

 11. Dear Sundar

  As i read in “Theivathin Kural ” of Maha Periava, the Vedam – sounds of akshrams are important rather than the meaning. Each aksharam has its own vibration and it has lot of impact on the person pronoucing it correctly, people hearing it and on the God Idol at temples. These are from God himself , it is his breath air from where we got Vedas. For our satisfaction one can pray in their mother tongue but at the same time, the power of pronoucing it from the heart in devanagari/Sanskrit has far reaching impacts.

  Sankar Seshadri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *