Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

print
ம் வழிபாட்டு முறைகளில் உள்ள பல ஸ்லோகங்களின் மூலம் (ORIGINAL) தேவ பாஷை எனப்படும் சமஸ்கிருதம் தான். சமஸ்கிருதம் தெரியாதவர்களின் நன்மைக்காக சமஸ்கிருத எழுத்துக்கள் தமிழில் அச்சிடப்பட்டு பல நூல்கள் வெளியாகின்றன. ஆனால் அவற்றை உச்சரிப்பதில் உள்ள கஷ்டம் மற்றும் பயம் காரணமாக படிக்க பலர் தயங்குகின்றனர். பலருக்கு அர்த்தம் அனர்த்தமாகிவிட்டால் என்ன ஆகும் என்கிற அச்சம் வேறு உண்டு. அத்தகையவர்களின் மனக்குறையை போக்கவே இந்த பதிவு.

மேலும் இறைவன் நிகழ்த்தும் ஒவ்வொரு செயலிலும் அர்த்தம் உள்ளது. அதை இந்த மானிட அறிவால் புரிந்துகொள்ளமுடியாது. மேற்கூறிய இரண்டு விஷயங்களையும் இந்த பதிவு  தெளிவாக்கும்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் செய்த நாள்

ஆகஸ்ட் 22 – வியாழன் – ஆவணி மாதம் 6 ஆம் நாள் – ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் செய்த நாள். (1678 ஆம் ஆண்டு சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் செய்தார்.)

இது குறித்து காலையே பதிவளித்திருக்கவேண்டும். வேலைப் பளுவில் மறந்துவிட்டேன். மாலையானாலும் சரி நள்ளிரவு தாண்டி பொழுது புலர்ந்தாலும் சரி… ஒரு விசேஷ பதிவை சுவாமிகளின் பிருந்தாவனப் பிரவேச நன்னாளான இன்று (ஆகஸ்ட் 22) அளித்தே தீரவேண்டும் என்று விரும்பினேன்.

திரு.அம்மன் சத்தியநாதன் அவர்கள் தனது ‘ஸ்ரீ ராகவேந்திர மகிமை’ இரண்டாம் பாகத்தில் கூறியிருக்கும் நான் மிகவும் உருகி ரசித்த ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே தட்டச்சு செய்து தந்திருக்கிறேன்.

வடமொழி உச்சரிப்பு தொடர்பாக உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தை போக்கி, உங்கள் பக்தியை மேலும் செம்மைப்படுத்தும் இந்த பதிவு !!

இடையே ராயரை நேற்று தரிசனம் செய்த அனுபவத்தை உங்களிடம்  சொல்லிவிடுகிறேன்.

மஹா குருவை அவரது பிருந்தாவனப் பிரவேச நாளன்று தரிசிக்காமல் இருக்கமுடியுமா? மாலை அலுவலகம் முடித்து வீடு திரும்பும் போது வழியில் தி.நகர் ராகவேந்திர பிருந்தாவனம் சென்றேன். மொத்த வளாகமும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அலங்கார மின் விளக்குகள் ஜொலிக்க கூட்டம் ஜே ஜே என்று இருந்தது. டூ-வீலர் பார்க் செய்ய இடம் கிட்டவேயில்லை. ஒரு வழியாக கிடைத்த கேப்பில் பார்க் செய்து விட்டு பிருந்தாவனம் சென்றேன்.

ஸ்வாமிக்கு திவ்ய அலங்காரம். உள்ளே – பிருந்தாவனத்தின் எதிரே – பாட்டு கச்சேரி நடைபெற்றுகொண்டிருந்தது. ஸ்வாமிகளின் பாடல்களை ஒரு பெண் தன இசைக்குழுவினருடன் உருகி பாடிக்கொண்டிருந்தார். ஏற்கனவே அர்ச்சனை மற்றும் பூஜைக்கு கட்டளை செய்திருந்தவர்களுக்கு பிரசாதம் கொடுத்து கொண்டிருந்தார்கள்.

தீபாராதனை முடித்து அனைவருக்கும் புஷ்பம் உள்ளிட்டவைகளை கொடுத்துகொண்டிருந்தார் அர்ச்சகர். கூட்டம் அதிகம் இருந்தபடியால் முழுமையாக அதை செய்ய முடியவில்லை. திரும்பவும் உள்ளே சென்றுவிட்டார். என் முறை வரும்போது அப்படி உள்ளே சென்றுவிட எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. என் பக்கத்தில் நின்றிருந்த சிலரும் புஷ்பமும் கல்கண்டு பிரசாதமும் வாங்கிவிட துடித்தார்கள்.

நான் சுவாமியை தரிசனம் செய்து, நமது தளத்திற்காகவும் நம் நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்காகவும் சுவாமியிடம் பிரார்த்தனை செய்தபடி நின்றுகொண்டிருந்தேன். ஒரு பத்து நிமிடம் அப்படியே நின்றுகொண்டிருந்தேன். அர்ச்சகர் ஏதாவது தரும் வரை போகக்கூடாது என்று முடிவு. எவ்வளவு நேரம் தான் அப்படியே நின்றுகொண்டிருப்பது? ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தேன். ‘சரி… நாம் இன்னைக்கு கொடுத்து வெச்சது அவ்வளவு தான்’ என்று கருதி அங்கிருந்து நகர்ந்தேன்.

வெளியே வரமுடியாத அளவிற்கு சரியான கூட்டம்.  இன்ச் பை இன்ச்சாக கூட்டம் நகர்ந்தது. கடைசியில் தான் காரணம் புரிந்தது. வெளியே வரும் வழியில் – பிருந்தாவனத்தின் பின்புறம் – தீர்த்தமும் அட்சதை கல்கண்டும் பிரசாதம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பா… குருராஜர் நம்மை புறக்கணிக்கவில்லை என்று மனதில் நிம்மதி ஏற்பட்டது. தீர்த்தம் வாங்கி அருந்திவிட்டு, அட்சதை பெற்று தலையில் போட்டுக்கொண்டு – கல்கண்டை வாயில் போட்டுக்கொண்டு பின்னர் தான் கிளம்பினேன்.

சிறிய விஷயமோ பெரிய விஷயமோ ராகவேந்திரர் தன்னை நாடி வருபவர்களை எப்போதுமே வெறும் கையுடன் அனுப்பவே மாட்டார். ஏதோ ஒரு வகையில் அவரது ஆசியை அனைவரும் உணரலாம்.

சரி… விஷயத்திற்கு  வருகிறேன்!

================================================

உச்சரிப்பை விட உள்ளன்பே பெரிது!

ராஜசோர மஹாவ்யாக்ர ஸர்பநக்ராதி பீடனம்
ந ஜாயதேஸ்ய ஸ்தோத்ரஸ்ய ப்ரபாவான் னாத்ரஸம் ஷய:

ஸ்ரீ ராகவேந்த்ர சுவாமிகளின் முக்கிய சீடர்களில் ஒருவரான ஸ்ரீ அப்பண்ணாச்சார்யார் ஸ்வாமிகளின் மேல் பயபக்தியுடன் நெஞ்சுருக இயற்றிப் பாடிய ‘ஸ்ரீமத் ராகவேந்த்ர ஸ்தோத்ரம்’ பல அற்புத சக்திகளை தரக்கூடியது.

மனதிலுள்ள கிலேசங்கள் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் தீர்ந்துவிடும். ரோகங்கள் நீங்கும். ஷேமங்கள் ஓங்கும். பயம் விலகும். தைரியம் கூடும். தரித்திரம் மறையும். ஐஸ்வர்யம் நிறையும்.

‘ஸ்ரீ பூர்ணபோத’ என்று துவங்கும் இந்த ஸ்தோத்திரத்தின் தொடர்ச்சி தான் ‘பூஜ்யாய ராகவேந்த்ராய’ என்ற ஸ்லோகம் ஆகும்.

ஸ்ரீமத் ராகவேந்த்ர ஸ்தோத்ரம் சமஸ்க்ருத மொழியில் அமையபெற்றது. இதை பாராயணம் செய்து அனுகூலம் பெற்றோர் பல்லாயிரக்கணக்கானோர்.

சமஸ்கிருதம் தெரியாத அன்பர்களுக்காக இந்த ஸ்தோத்ரம் அப்படியே தமிழ் எழுத்துக்களில் பிரசுரம் செய்து நூல்கள் வெளிவந்துள்ளன. (அம்மன் பதிப்பகம் கூட வெளியிட்டுள்ளது.)

பல அன்பர்கள் இது குறித்து எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். நானும் பதில் எழுதியிருக்கிறேன்.

“ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யும்போது சப்தம் மாறி பொருள் மாறிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?” என்று ஒருவர் கேட்டிருந்தார்.

“எனக்கு சுட்டுப் போட்டாலும் வடமொழி வராது. அதானால் தமிழிலே உள்ள ஸ்லோகத்தை கூட என்னால் படிக்க முடியவில்லை. நான் என்ன செய்வது?” என்று ஒரு பக்தர் எழுதியிருந்தார்.

இந்த ஸ்தோத்திரம் குறித்தே இப்படி பலவாறாக கடிதங்கள்.

“சரியானபடி உச்சரிக்க முடியவில்லையே என்று கவலைப்படாதீர்கள். தற்போதெல்லாம் ஸ்தோத்திர கேசட் கிடைக்கிறது. நல்ல வித்வாம்சம் பொருந்தியவர்கள் பாடியுள்ளதை வாங்கி அதை ஒலிக்கச் செய்து நீங்களும் புத்தகத்தை வைத்து கொண்டு கூடவே சொல்லி வாருங்கள். நாட்பட நாட்பட உங்களுக்கே மனனம் ஆகிவிடும்” என்று பதில் எழுதியிருந்தேன்.

“இதற்கு கூட எனக்கு வசதியில்லை. நான் என்ன செய்வது? மடத்திற்கு செலும்போது அங்கிருப்பவர்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லும்போது கேட்க நன்றாக இருக்கிறது. நாமும் சொல்லலாம் என்றால் உச்சரிப்பில் தவறிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது.” என்று ஒருவர் எழுதியிருந்தார்.

இதற்கு என்ன பதில் எழுதுவதென்று தெரியாமல் நானும் அப்படியே விட்டுவிட்டேன். சமீபத்தில் எனக்கு இதற்கு நல்ல பதில் கிடைத்துவிட்டது. ஸ்ரீ ராகவேந்திரர் எல்லாவற்றுக்கும் விடையளித்து தெளிவுபடுத்திவிடுவார் என்று இதன் மூலம் தெளிவாகிறது.

மந்த்ராலய பிருந்தாவனத்திலே ஓர் அன்பர் சங்கல்ப சேவை செய்து வந்தார். பிரதக்ஷிணம் செய்யும்போது மேற்படி ஸ்ரீமத் ராகவேந்த்ர ஸ்தோத்திரத்தை நன்கு உரக்க பாராயணம் செய்து வந்தார்.

அந்த அன்பருக்கு சமஸ்கிருத ஞானம் அவ்வளவாக இல்லை. பிராந்திய மொழியிலே பிரசுரிக்கப்பட்டுள்ளதை மனனம் செய்து சப்தமாக ஒலித்தவாறு வளம் வந்து கொண்டிருந்தார்.

இவர் இவ்வாறு ஒரே ஸ்லோகத்தை (அதாவது ஸ்தோத்திரத்தின் சில வரிகளை) பலமுறை பாராயணம் செய்து செய்து பின்னர் அடுத்த ஸ்லோகத்திற்கு செல்வதை, ஒரு வித்வான் தானும் பிரகாரத்தை வலம் வந்தபோது கவனித்து வந்தார்.

அவரின் உச்சரிப்பை வைத்தே அவருக்கு பாஷா ஞான இல்லை என்று நன்கு தெரிந்துகொண்டார்.

ஒரு கட்டத்தில் அந்த வித்வானுக்கு பொறுமை எல்லை மீறியது.

‘ராஜசோர மஹாவ்யாக்ர ஸர்பநக்ராதி பீடனம்’ என்ற ஸ்லோகத்தை சொல்லியபோது வித்வானுக்கு தன் காதில் தேள் கொட்டுவது போன்று இருந்தது.

“இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் அரசாங்கத்திடமிருந்தோ திருடர்களிடமிருந்தோ எந்த வித கெடுதலும் வராது. புலி, பாம்பு, தேள் போன்ற இன்னபிற மிருகங்கள் மற்றும் ஜந்துக்களிடமிருந்தும் இன்னலே வராது – என்பது தான் மேலே உள்ள ஸ்லோகத்தின் பொருள்.

பொருளை உணராமல் ஸ்தோத்திரத்தை கண்டபடி உச்சரித்து பாராயணம் செய்து வந்த அந்த அன்பரை அந்த வித்வான் தடுத்து நிறுத்தி கோபக் கனலை வீசினார்.

“நீ இப்போ பாராயணம் செய்த ஸ்லோகத்தின் முதல் அடியை சொல்லு” என்றார்.

அவரும் “ராஜா சோரா…” என்றார்.

“மீண்டும் சொல்லு”

“ராஜா சோரா…”

“போதும் நிறுத்து. ‘ராஜ சோர’ என்று சொல்வதற்கு பதில் ‘ராஜா சோரா…’ என்று சொல்கிறாயே… இதனால் அர்த்தமே அனர்த்தமாகிவிடுகிறதே, இது உனக்கு தெரியாதா?

“தெரியாது சுவாமி. தெரிந்தால் ஏன் செய்கிறேன்.”

“சரியாக உச்சரிக்க தெரியாமல் இனி நீ இந்த ஸ்தோத்திரத்தை ஜெபிக்காதே. உனக்கு நல்லது நடப்பதற்கு பதில் கெட்டது தான் சம்பவிக்கும்” என்று வித்வான் சொன்னதும் அந்த அன்பர் ஸ்தோத்திரத்தை ஜபிக்காமல் வெறுமனே பிரகாரத்தை வலம் வந்தார்.

ஒரு தவறான காரியத்தை தடுத்து நிறுத்தினோம் என்று திருப்தியில் அந்த வித்வான் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

ஆனால் அன்றிரவே ஸ்ரீ ராகவேந்திரர் அந்த வித்வானின் கனவில் தோன்றினார்.

“வித்வாமசரே!” என்று ராகவேந்திரர் நவின்றார்.

“குருராஜா குருராஜா” அந்த வித்வான் நா குழறினார்.

“உங்கள் புலமையை கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சியாயிற்று.”

“எல்லாம் நீங்கள் இட்ட பிச்சை குருவே”

“இதெல்லாம் சரி! என் பக்தனொருவன் மிகுந்த ஈடுபாட்டோடு என் ஸ்லோகத்தை ஜெபித்து வந்ததை ஏன் நிறுத்தச் சொல்லிவிட்டாய்?”

“காரணமாகத் தான் செய்தேன் குருவே. அர்த்தத்தை அனர்த்தமாக்கினான்.”

“அப்படியா சொல்கிறாய்?”

“ஆம் ஸ்வாமி! ராஜ சோர என்று சொல்வதற்கு பதில் ‘ராஜா சோரா’ ‘ராஜா சோரா’ என்று கூறி என்னை மிகவும் கஷ்டப் பட வைத்துவிட்டான். அதனால் தான் நிறுத்தினேன். அரசர்களிடமிருந்து எந்த வித பயமும் நமக்கு ஏற்படாது என்பதை திரித்துக் கூறியதோடு ராஜா சோரா என்றால் திருடர்களின் அரசனே திருட்டு அரசனே என்று உங்களை அவன் சொல்வதை போல் இருந்ததால் தான் கோபம் கொண்டு அவனை மேற்கொண்டு தோத்திரம் சொல்லாமல் தடுத்தேன்”

“அவன் மிகுந்த பக்தியோடு சொல்லிவந்தான். அவனுக்கு பாஷா ஞானம் இல்லாவிடினும் கூட அவனது பக்தியிலே போலித்தனம் இல்லை அப்பா! தனது உள்மனதில் இருந்து ஆழ்ந்த பக்தியோடு அவன் சொல்லி வந்ததை நீ நிறுத்தியதால் எனக்கு தான கஷ்டமாக இருக்கிறது”

“அவன் உங்களை திருட்டு ராஜாவே என்று சொல்வது எப்படி சரியாகும்?”

“ஆனால் நான் அதை ஏற்றுக்கொண்டேன். வெண்ணையை திருடிய கண்ணனை அவன் விளிப்பதாக எண்ணி அவன் பிரார்த்தனையை கிருஷ்ணரிடம் சேர்ப்பித்துவிட்டேன்.”

“ஸ்வாமி! இது எப்பேர்ப்பட்ட விளக்கம். நான் தான் அறியாமையில் தவறு செய்துவிட்டேன்.”

“ஸ்தோத்திரம் சொல்லத் தெரியாவிடினும் கவலை இல்லை. தவறாக உச்சரித்தாலும் தவறு இல்லை. எப்போது என்றால் அதில் ஆத்மார்த்தம் இருந்தால். ஆதலால் நீ அந்த பக்தனை மீண்டும் ஸ்தோத்திரம் சொல்லச் சொல்” என்றவாறு ஸ்ரீ ராகவந்திரர் மறைந்தார்.

மறுநாள் காலை அந்த பக்தனை தேடிப் பிடித்து உணர்ச்சி வசப்பட்டு அவரின் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்கினார்.

வித்வானின் செயல் அந்த பக்தருக்கு ஆச்சரியத்தை அளித்தது. நேற்று ‘ஸ்லோகத்தை சரியாகச் சொல்லத் தெரியாதவனே’ என்று மிகவும் கடுமையாக ஏசியவர் இன்று இப்படி செய்கிறாரே என்று ஒன்றும் புரியாமல் அவரை நோக்கினார்.

“ஐயா… உங்களுக்கிருக்கும் ஆத்மார்த்த பக்தியைப் புரிந்து கொள்ளாமல் உங்களை திட்டிவிட்டேன். தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள்”

“தாங்கள் சொல்வதின் பொருள் எனக்கு விளங்கவில்லை” என்ற பக்தருக்கு, நேற்று இரவு கனவில் ஸ்ரீ ராகவேந்திரர் தோன்றியதை கூறி, “நீங்கள் இனி தொடர்ந்து ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யுங்கள்” என்றதும் அந்த பக்தர் வித்வானின் கால்களில் வீழ்ந்துவிட்டார்.

“ஏனப்பா ஏனப்பா…”

“சுவாமி! நீங்கள் தான் பாக்கியசாலி. ஸ்ரீ ராயரை தரிசித்திருக்கிறீர்களே ”

“அந்த தரிசனத்திற்கு வழி வகுத்ததே நீ தானேயப்பா…”

இப்படியாக ஒருவருக்கொருவர் தமது அன்பை பரிமாறிக்கொண்டார்கள்.

உச்சரிப்பை விட மனதில் நாம் கொண்டிருக்கும் உண்மையான பக்திதான் சிறந்தது என்பது தான் இந்நிகழ்ச்சியின் மூலம் நாம் புரிந்துகொள்ளவேண்டியது.

ஆனால் நியாயமாக பார்த்தால் ஸ்ரீ ராயரின் தரிசனம் அந்த பக்தருக்கு தானே கிடைத்திருக்க வேண்டும். அவரை கண்டித்த வித்வானுக்கு ஏன் காட்சி தந்தார்?

வாசக அன்பர்கள் இங்கு தான் சிந்திக்கவேண்டும். ஸ்ரீ ராகவேந்திரர் ஏன் அவ்வாறு செய்தார் என்று யோசியுங்கள்.

அந்த பாஷா ஞானம் இல்லாத பக்தரின் கனவிலேயே தோன்றி, “அப்பா நீ தொடர்ந்து பாராயணம் செய். நீ செய்தது சரி தான்!” என்று சொல்லியிருக்கலாமே!

சொல்லியிருக்கலாம் தான். ஆனால் அந்த பக்தர் அடுத்த நாளே அவரை கண்டித்த வித்வானிடம், தான் கண்ட கனவை கூறினாலும் வித்வான் என்ன நினைப்பார்? தான் செய்த தவற்றினை மறைக்க அவர் மேலும் ஒரு பொய்யை சொல்வதாகத் தானே நினைப்பார்.

அதனால் தான் ஸ்ரீ ராகவேந்திரர் அந்த வித்வானுக்குக் காட்சி தந்து பக்தரிடம் சொல்லச் சொன்னார். அதை விட இது தான் உயர்ந்தது. தன் மீது உன்னத பக்தி கொண்டவருக்காக உடனேயே அநுக்ரஹம் புரிபவர் தான் ஸ்ரீ ராகவேந்திரர். மந்த்ராலயம் வந்தால் தான் இந்த அநுக்ரஹம் என்றில்லை. உண்மையான பக்தி பூண்டோர் உலகில் எந்த பகுதியில் இருந்து அழைத்தாலும் உடனுக்குடன் அருள்பாலிப்பவர் தான் ஸ்ரீ ராகவேந்திரர்.

(நன்றி :  ‘ஸ்ரீ ராகவேந்த்ர மகிமை’ இரண்டாம் பாகம்)

====================================================

ஸ்ரீ ராகவேந்த்ர குரு ஸ்தோத்ரம்

ஸ்ரீ பூர்ணபோத குரு தீர்த்த பயோப்தி பாரா
காமாரிமாக்ஷ விஷமாக்ஷ ஷிரஸ்ப்ருஷந்தி |
பூர்வோத்தராமித தரங்க சரத்ஸுஹம்ஸா
தேவாளி ஸேவித பராங்க்ரி பயோஜலக்னா || (1)

ஜீவேஷ பேத குணபூர்த்தி ஜகத் ஸுஸத்வ
நீசோச்ச பாவ முகநக்ர கணைஸ்ஸமேதா |
துர்வாத்யஜாபதி கிலை: குருராகவெந்திர
வாக்தேவதா ஸரித்மும் விமலீகரோது  || (2)

ஸ்ரீராகவேந்திரஸ் ஸகலப்ரதாதா
ஸ்வபாத கஞ்’ஜத்வய பக்தி மத்ப்ய: |
அகாத்ரி ஸம்பேதன த்ருஷ்டி வஜ்ர:
க்ஷமாஸுரேந்த்ரோ: அவதுமாம் ஸதாயம் || (3)

ஸ்ரீராகவேந்த்ரோ ஹரிபாத கஞ்’ஜ
நிஷேவணால்லப்த ஸமஸ்த ஸம்பத் |
தேவ ஸ்வபாவோ திவிஜ த்ருமோயம்
இஷ்ட ப்ரதோமே ஸததம் ஸபூயாத்  || (4)

பவ்யஸ்வரூபோ பவதுக்க தூல
ஸங்காக்னிசர்ய: ஸுகதைர்யஷாலி  |
ஸமஸ்த துஷ்டக்ரஹ நிக்ரஹேஷோ
துரத்யயோபப்லவ ஸிந்து ஸேது:  || (5)

நிரஸ்ததோஷோ நிரவத்யவேஷ:
ப்ரத்யர்த்தி மூகத்வ நிதான பாஷ:  |
வித்வத் பரிக்ஞேய மஹாவிஷேஷோ:
வாக்வைகரீ நிர்ஜித பவ்ய ஸேஷ:  || (6)

ஸந்தான ஸம்பத் பரிஸுத்த பக்தி:
விக்யான வாக்தேஹ ஸுபாடவாதீன் தத்வா  |
ஷரீரோத்த ஸமஸ்த தோஷான்
ஹத்வா ஸநோவ்யாத் குருராகவேந்த்ர:  || (7)

யத்பாதோதக ஸஞ்சய: ஸுரநதீ முக்யாபகாஸாதிதா:
ஸங்க்யாநுத்தம புண்ய ஸங்க விலஸத்ப்ரக்யாத புண்யாவஹ:  |
துஸ்தாபத்ரய நாஷனோ புவிமஹா வந்த்யாஸுபுத்ர ப்ரதோ
வ்யங்கஸ்வங்க ஸம்ருத்திதோ க்ரஹமஹா பாபாப ஹஸ்தம் ஷ்ரயே || (8)

யத்பாத கஞ்’ஜரஜஸா பரிபூஷிதாங்கா
யத்பாதபத்ம மதுபாயித மானஸாயே  |
யத்பாதபத்ம பரிகீர்த்தன ஜீர்ண வாச:
தத்தரிஷனம் துரிதகானன தாவபூதம்  || (9)

ஸர்வதந்திர ஸ்வதந்த்ரோஸௌ ஸ்ரீமத்வ மதவர்த்தன
விஜயீந்த்ர கராப்ஜோத்த சுதீந்த்ர வரபுத்ரக:  || (10)

ஸ்ரீராகவேந்திரோ யதிராட் குருர்மேஸ்யாத் பயாபஹ:
ஞானபக்தி சுபுத்ராயு: யஷஸ்ரீ புண்யவர்த்தன:  || (11)

ப்ரதிவாதி ஜயஸ்வாந்த பேத சின்ஹா தரோ குரு:
ஸர்வவித்யா ப்ரவீணோன்யோ ராகவேந்திராந்நவித்யதே  || (12)

அபரோக்ஷீக்ருத ஸ்ரீஷ: ஸமுபேக்ஷித பாவஜ:
அபேக்ஷித ப்ரதாதாந்யோ ராகவேந்திராந்நவித்யதே  || (13)

தயா தாக்ஷிண்ய வைராக்ய வாக்பாடவ முகாங்கித:
ஷாபானுக்ரஹ ஷக்தோன்யோ ராகவேந்திராந்நவித்யதே  || (14)

அக்யான விஸ்ம்ருதி ப்ராந்தி ஸம்ஷயாப ஸ்ம்ருதிக்ஷயா:
தந்த்ரா கம்பவச: கௌண்ட்ய முகா யே சேந்திரியோத் பவா:  || (15)

தோஷாஸ்தே நஷமாயாந்தி ராகவேந்திர ப்ரஸாதத:
ஓம் ஸ்ரீராகவேந்திராய நம: இத்யஷ்டர்க்ஷர மந்த்ரத:
ஜபிதாத் பாவிதாந்நித்யம் இஷ்டார்த்தாஸ்யு: ந ஸம்ஷய:  || (16)

ஹந்துந: காயஜான்’தோஷாந் ஆத்மாத்மீய ஸமுத்பவாந்
ஸர்வானபி புமர்த்தாம்ஸ்ச ததாது குருராத்மவித்  || (17)

இதி காலத்ரயேந்நித்யம் ப்ரார்த்தனாம் கரோதி ஸ:
இஹா முத்ராப்த ஸர்வேஷ்டோ மோததே நாத்ர ஸம்ஸய:  || (18)

அகம்ய மஹிமா லோகே ராகவேந்திரோ மஹாயஷா:
ஸ்ரீமத்வமத துக்தாப்தி சந்திரோவது ஸதாநக:  || (19)

ஸர்வயாத்ராபலாவாப்த்யை யதாஷக்தி ப்ரதஷிணம்
கரோமி தவஸித்தஸ்ய ப்ருந்தாவன கதம் ஜலம்
ஷிரஸா தாரயாம்யத்ய ஸர்வதீர்த்த பலாப்தயே  || (20)

ஸர்வாபீஷ்டார்த்த ஸித்யர்த்தம் நமஸ்காரம் கரோம் யஹம்
தவஸங்கீர்த்தனம் வேதஷாஸ்திரார்த்த ஞானஸித்தயே  || (21)

ஸம்ஸாரே க்ஷயஸாகரே ப்ரக்ருதிதோகாதே ஸதாதுஸ்தரே
ஸர்வாவத்யஜலக்ரஹைரனுபமை: காமாதிபங்காகுலே  |
நாநாவிப்ரம துப்ரமே அமிதபயஸ்தோமாதி பேனோத்கடே
துக்கோத்க்ருஷ்டவிஷே ஸமுத்தரகுரோ மாம்மக்னரூபம் ஸதா  || (22)

ராகவேந்திரகுருஸ்தோத்திரம் ய: படேத்பக்தி பூர்வகம்
தஸ்ய குஷ்டாதி ரோகாணாம் நிவ்ருதிஸ்த்வரயாபவேத்  || (23)

அன்’தோபி திவ்யத்ருஷ்டிஸ்யாத் ஏடமூகோபிவாக்பதி:
பூர்ணாயு: பூர்ணஸம்பத்தி: ஸ்தோத்ரஸ்யாஸ்யஜபாத்பவேத்  || (24)

ய: பிபேத்ஜலமேதேன ஸதோத்ரேணைவாபிமந்திரிதம்
தஸ்ய குக்ஷிகதாதோஷா: ஸர்வே நஷ்யந்திதத்க்ஷ்ணாத்  || (25)

யத்ப்ருந்தாவன மாஸாத்ய பங்கு: கஞ்’ஜோபிவாஜன:
ஸ்தோத்ரேணானேன ய: குர்யாத்ப்ரதக்ஷிண நமஸ்க்ருதீ
ஸ ஜங்காலோபவேதேவ குருராஜ ப்ரஸாதத:  || (26)

ஸோமஸூர்யோ பராகேச புஷ்யார்காதி ஸமாகமே
யோநுத்தமமிதம் ஸ்தோத்ரமஷ்டோத்தரஷதம்ஜபேத்
பூதப்ரேத பிஷாசாதி பீடாதஸ்ய ந ஜாயதே  || (27)

ஏதத்ஸ்தோத்ரம் ஸமுச்சார்ய குரோர்ப்ருந்தா வனாந்திகே
தீபஸம்யோஜனாத்ஞானம் புத்ரலாபோ பவேத்ருவம்  || (28)

பரவாதி ஜயோதிவ்ய ஞான பக்த்யாதி வர்தனம்
ஸர்வாபீஷ்டப்ரவ்ருத்தி ஸ்யாத் நாத்ரகார்யா விசாரணா  || (29)

ராஜசோரமஹாவ்யாக்ர ஸர்பநக்ராதி பீடனம்
ந ஜாயதேஸ்ய ஸ்தோத்ரஸ்ய ப்ரபாவான் னாத்ரஸம் ஷய:  || (30)

யோ பக்த்யா குருராகவேந்திரசரணத்வந்த்வம் ஸ்மரன் ய: படேத்
ஸ்தோத்ரம் திவ்யமிதம் ஸதா ந ஹி பவேத் தஸ்யா ஸுகம் கிஞ்சன  |
கிந்த்விஷ்டார்த்த ஸம்ருத்திரேவ கமலாநாத ப்ரஸாதோதயாத்
கீர்த்தி: திக்விதிதா விபூதிரதுலா ஸாக்ஷீஹயாஸ் யோத்ரஹி  || (31)

இதி ஸ்ரீராகவேந்திரார்ய குரு ராஜப்ரஸாதத:
க்ருதம் ஸ்தோத்ரமிதம் புண்யம் ஸ்ரீமத்பிர்யப்பணா பிதை:  || (32)

பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்மரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே  || (33)

துர்வாதித்வாந்தரவயே வைஷ்ணவேந்தீ வரேந்தவே
ஸ்ரீராகவேந்திர குரவே நமோத்யந்த தயாளவே  || (34)

– இதி ஸ்ரீராகவேந்திர குரு ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் –
====================================================

[END]

13 thoughts on “உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

  1. ///“ஸ்தோத்திரம் சொல்லத் தெரியாவிடினும் கவலை இல்லை. தவறாக உச்சரித்தாலும் தவறு இல்லை. எப்போது என்றால் அதில் ஆத்மார்த்தம் இருந்தால்///.

    சரியாக சொன்னீர்கள் சுந்தர் சார், அப்படிபார்த்தால் ஊமை பிறவி எடுத்த மனிதன் என்ன வார்த்தையை சொல்லி இறைவனை வணங்குவான் ,(மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கலாகாது ),இந்த மந்திரம், சுலோகம், ஜபம் எல்லாம் இறைவனிடம் மனதை ஒருமுக படுத்துவதர்க்குத்தாணே தவிர ,அந்த வார்த்தைகளே இறைவனாகாது ..

    இதை சரியாக புரிந்து கொண்ட எவரும் இறைவனின் அன்பை பெற்றவனாகிறான் என்பதே என் கருத்து ….

  2. காலை வணக்கம் சார்..

    பல நாள் குழப்பம் இன்று தெளிவு பண்ணிகிட்டேன் சார்..

    நன்றி நன்றி

    நல்ல பதிவு

  3. சுந்தர்ஜி ,
    பக்தர்கள் எல்லோருக்கும் வரும் முக்கிய சந்தேகத்திற்கு நல்ல ஒரு தெளிவான பதில் இன்றைய பதிவு. இந்த பதில் மகிமை மிக்க நம் குருராஜர் மூலம் அதுவும் அவரின் பிருந்தாவன பிரவேச நாளில் கிடைத்து இருக்கிறது எனும்போது நினைத்தாலே சிலிர்க்கிறது. உண்மையான பக்திக்கு குருராஜர் எவ்வளவு இறங்கி அருள் புரிகிறார். எப்படியோ நம் தளத்திற்கும் அடிக்கடி விசிட் செய்து விடுகிறார் உங்கள் மூலம். நன்றி.

  4. சுந்தர்ஜி,

    உண்மையான பக்திக்கு பகவான் என்றென்றும் துணை இருப்பார் என்பதற்கு அருமையான எடுத்து காட்டு. மஹா குருவான அவரது பிருந்தாவனப் பிரவேச நாளன்று ஸ்ரீ ராகவேந்த்ர குரு ஸ்தோத்ரம் கிடைக்க பெற்றோம். நன்றி. பூவோடு ( சுந்தர்) சேர்ந்து நாராகிய நாங்களும் உங்களோடு சேர்ந்து நல்லதொரு பக்தி கதைகளை படிக்கும் பாக்கியம் பெற்றோம்.

    வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும், நினைவுகளும் எல்லாம் சில காலம் !… இச்சில காலத்தில் சிந்தனையை செம்மையாக்கி .
    எந்த நேரமும் நல்ல சிந்தனைகளும், தூய மனமும் படைத்த தாங்கள்
    வரலாற்று சிலேட்டில் சாதனையாளனாக பதிவு செய்யும் காலம் விரைவில் ………….

    1. நன்றி. உங்கள் பாராட்டுக்கு தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள முயற்சிக்கிறேன்.

      ஒரு திருத்தம். மேலே கூறப்பட்டுள்ள நிகழ்வு கதையல்ல. உண்மையில் மந்த்ராலயத்தில் நடைபெற்ற சம்பவம்.

      – சுந்தர்

  5. ஸ்ரீராகவேந்திர குரு ஸ்தோத்ரம் எம்பி 3 ஆக இருந்தால் கேட்க நன்றாக இருக்கும்

  6. நன்றி ……ரொம்ப நன்றிஜி.. 20 தினங்கள் முன்பே …. ஸ்ரீ ராயரின் ஸ்லோகத்தில் தமிழில் எனக்கு அர்த்தம் தந்தமைக்கு, எல்லாம் ‘ஸ்ரீ அவர் செயல்’ நன்றியுடன் நாம்.

  7. சுந்தர் சார்,
    3 நாட்களாக ஊரில் இல்லை (ஓடி) இன்று தான் சென்னை வந்தேன். எனக்கும் இந்த குழப்பம் நீண்ட நாட்களாக இருந்தது. மிக திளிவான பதில் தந்தமைக்கு மிக்க நன்றி.
    நன்றியுடன் அருண்.

  8. dear Sundarji

    Nice article.. Im also having this Doubts which i got good answer today.. Good Work and keep doing…

    All is well.

    Gokul

  9. அன்புள்ள திரு சுந்தர்

    இரண்டு நாட்களுக்கு முன் உங்கள் இணைய தளத்தை பார்த்தேன்
    வெகு நன்றாக இருக்கிறது

    இனி தவறாமல் இதை பார்பேன்.

    நன்றி

    1. நன்றி! மீண்டும் வருக!! நல்லாதரவு தருக!!!

      – சுந்தர்

  10. நெடுநாள் சந்தேகம் நீங்கியது
    பயனுள்ள பதிவு
    குருவின் கருணையே கருணை

    வாழ்க வளமுடன் !!!

  11. Dear Shri Sundar,

    Am an ardent devotee of Mahaa Periyavaa. At the same time I have utmost devotion and bhakthi towards Raghavendra Swamigal, Shirdi Baba and Yogi Surat Ramkumar.

    For quite some time, say for about 5 years I have been constantly thinking, praying, talking about Mahaa Periyavaa. Yesterday, all of a sudden it looked to me as if Periyavaa was telling me to chant ” Poojyaaya Raghavendraaya ……. throughout the day which I started doing throughout my travel to office and in office also while attending to my duties.

    Somewhere at the deep of my heart, I had a feeling and watned to know if Periyavaa had spoken about Raghavendra Swaamigal and Shirdi Baba at any point in time.

    Secondly, about 4 years ago one of the ardent devotees of Raayaru from Australia had advised me to Chant ” Andhopi dhivya dhrishtithyaath eda mookopi “…….. (2 lines from Shree Raghavendra Guru Stotram) 11 times daily after taking bath for one of my ailments. I was chanting it for quite some time, but since I have included lot of other slokas and mantras slowly I have forgotten this verse.

    As I enter into Rightmantra.com today, I am dumb struck to see the answers for all my queries precisely you have posted this only yesterday.

    “……சொல்லப் போனால் மகா பெரியவா, ஸ்ரீ ராகவேந்திரர் மீது தீராத பக்தி செலுத்திவந்தார். இவர் நமக்கு குரு என்றால் அவர் மஹா குரு. ”

    “…ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அனைவரும் மனதில் கொள்ளவேண்டும். மகா பெரியவரோ, ஸ்ரீ ராகவேந்திரரோ, மகாவதார் பாபாஜியோ, ஷிர்டி சாயிபாபாவோ யாராகிலும் உங்கள் நம்பிக்கை எந்தளவு ஆழமாக உள்ளதோ, நீங்கள் எந்தளவு பரிசுத்தமாக அவர்கள் எதிர்பார்க்கும் ஒரு பரோபகார வாழ்க்கையை வாழ்ந்துவருகிறீர்களோ அந்தளவு அவர்கள் அருள் உங்கள் மீது வெளிப்படும் “…

    This is not all… Further I have got the forgotten verse of 2 lines from Shree Raghavendra Guru Stotram link which you have provided in the post ..

    … அன்’தோபி திவ்யத்ருஷ்டிஸ்யாத் ஏடமூகோபிவாக்பதி:
    பூர்ணாயு: பூர்ணஸம்பத்தி: ஸ்தோத்ரஸ்யாஸ்யஜபாத்பவேத்  || (24)

    Am still to come out of the surprise and the abundant grace Shri Raghavendra Swaamigal showered on me, by answering my sincere prayer through Mahaa Periyavaa. Am in tears….

    Best regards
    Swaaminathan N
    East Tambaram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *