ராமானுஜர் நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த ஒரு ஆளுமை. பன்மொழிப் புலமை மிக்கவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜனநாயகம், உரிமை, சமத்துவம், சாதிமத பேதமில்லாமல் இருக்க வேண்டும் என்ற கொள்கையை மக்களிடையே உபதேசம் செய்தவர் ராமானுஜர். சத்துணவுத் திட்டத்தின் முன்னோடி. தமிழ் மறையைத் (நாலாயிர திவ்யபிரபந்தங்கள்) தழைக்கச் செய்தவர். ஆதிதிராவிடர்களைத் ‘திருக்குலத்தார்’ என்று புகழ்ந்தவர் ராமானுஜர். உபதேசித்ததோடு இல்லாமல், அதை நடைமுறைப்படுத்தியும் காட்டியவர். இவரை வெறும் ஆன்மிகவாதி என்று ஒதுக்கிவிட முடியாது.
அவரின் இந்த ஜயந்தி திருநாளில் அவரது வாக்கின் சக்தியையும், அவரது அடியார் ஒருவர் பற்றியும், அந்த அடியாருக்கு ஏவல் செய்த அரங்கன் பற்றியும் பார்ப்போம்.
திரு.இரா.அரங்கராஜன் அவர்கள் எழுதிய ‘ஸ்ரீ வைஷ்ணவ தாஸர்கள் என்ற சீர்மிகு ராமானுஜ தாஸர்கள்’ என்கிற நூலிலிருந்து கீழ்கண்ட கதை அளிக்கப்படுகிறது.
உடையவரின் அடியாருக்கு அரங்கன் செய்த ஏவல்!
திருவரங்கத்தில் ஓர் ஏழை அந்தணர் வறுமையால் வாடினார். அவருக்கு பதினாறு பிள்ளைகள்; மிகவும் நலிவுற்ற அவ்வந்தணர் பசியால் வாடும் தன் பிள்ளைகளோடு கோயிலுக்குச் சென்று பிரசாத விநியோக கோஷ்டியில் சேர்ந்துகொண்டு பிரசாத விநியோகம் செய்யும் பரிசாரகரை மிகவும் தொந்திரவு செய்து பிரசாதத்தை மிகுதியாகத் தந்திட வற்புறுத்தி வந்தார்.
இதைக்கண்ட பரிசாரகர் பொறுக்கமுடியாது ஒருநாள் எம்பெருமானாரிடம் இதைத் தெரிவித்து வருந்தினர். எம்பெருமான் பிள்ளைகளின் தகப்பனாரான அந்தணரை அழைத்தார்.
”நீர் ஏன் உமது பிள்ளைகளை இவ்விதம் விட வேண்டும்? சர்வ ரக்ஷகனான எம்பெருமானிருக்க உமக்கு வந்த குறை என்ன? இனி நீர் உம் மனைவி மக்களோடு ஒருபுறம் தனித்திரும். உம்மை சர்வ பந்துவும் சர்வ ரக்ஷகனும், பக்தவத்சலனும், ஆபத்சகாயனுமாகிய நம்பெருமாள் உங்களைக் காப்பாற்றுவான்” என்று எம்பெருமானார் அறிவுறுத்தினார். அவ்வளவுதான்! அந்தணர் தன் மனைவி மக்களோடு வடதிருக்காவேரி கரையில் ஒரு தாழம்புதரில் சிறு குடிசை அமைத்துக் கொண்டு எம்பெருமானார் வார்த்தைகளே தஞ்சம் என்று கொண்டு மனைவி மக்களோடு அங்கு வாழ்ந்து வரலானார்.
பல தினங்கள் கடந்து விட்டன. ஸ்ரீரங்கநாதன் தனக்கு ஆராதனமாகும் தளிகையில் ஒரு தடா ஒருவருக்கும் தெரியாமல் அந்த அந்தணருக்கு தாமே கொண்டுபோய் கொடுத்து வந்தார். இவ்வண்ணம் சில நாட்கள், நடக்க, பெருமாளுக்கு படைக்கப்படும் தளிகை வரிசையில் ஒரு தடா தளிகை சில தினங்களாகக் காணாமற்போவதை அறிந்த பரிசாரகர்கள் ஆச்சரியமடைந்து எம்பெருமானாரிடத்தில் சென்று தெரிவித்தனர். எம்பெருமானார் உடனே அந்த ஏழை அந்தணரை பற்றி விசாரித்தார். ஒருவருக்கும் அவர் இருக்குமிடம் தெரியவில்லை. உத்தமர்கோயில் சென்று பணிமுடித்து திரும்பிய ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் தாழம்புதர் அருகில் அந்தணரின் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டதும் அச்செய்தியை உடனே எம்பெருமானார்க்கு அறிவித்தார்.
உடனே மறுகணமே உடையவர் மடத்திலிருந்து புறப்பட்டு வடதிருக்காவேரி கரையைச் சென்றடைந்தார். அங்கே விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளைக் கண்டார். அவர்களும் எம்பெருமானாரை தங்கள் தந்தையிடம் அழைத்துச் சென்றார்கள். அவ்வந்தணரும் ஓடிவந்து எம்பெருமானார் திருவடிகளிலே வீழ்ந்து தண்டனிட்டார். உடையவர் அவரை அன்புடன் திருக்கண் நோக்கி, ‘க்ஷேமமாயிருக்கிறீர்களா?” என்று விசாரித்தார். ‘தேவரீர் திருவடி பலத்தால் ஒரு குறையுமில்லை; க்ஷேமமாகவே வாழ்ந்து வருகிறோம்’ என்று பதிலுரைத்தார்.
”நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பசியாறியிருப்பதற்கு என்ன செய்கிறீர்கள்?” என்று எம்பெருமானார் கேட்டார். அதற்கு அந்த அந்தணர், ”தேவரீர் தினமும் ஒரு தடா நிறையப் பிரசாதம் அனுப்பி வருவதால் ஒரு குறையுமில்லை, தேவரீர் அனுப்பியதாக தினமும் ரங்கநாதன் என்ற பையன்தான் பிரசாதம் கொண்டு வருகிறான்” என்றார் அவ்வந்தணர்.
ஸ்ரீமத் ராமானுஜர் கண்ணீர் மல்கினார். தம்முடைய வாக்கை நிரூபிப்பதற்காக எம்பெருமான் தினமும் தளிகை சுமந்து சென்றதை நினைத்து மனமுருகினார். அவ்வந்தணர் கோயிலில் நித்யம் ஒரு தடா பிரசாதம் பெறுமாறு கோயில் நிர்வாகத்தில் ஏற்பாடு செய்து மகிழ்ந்தார். தாழம்புதர் தாசரும் உடையவர் திருவடிகளில் ஆசிரயித்து அடிமைகள் செய்து வாழ்ந்து வந்தார்.
நன்றி : திரு.இரா.அரங்கராஜன் |’ஸ்ரீ வைஷ்ணவ தாஸர்கள் என்ற சீர்மிகு ராமானுஜ தாஸர்கள்’
==========================================================
உங்கள் பங்களிப்பு இந்த தளத்திற்கு அவசியம் தேவை…!
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?
சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!
“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்!
ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)
அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)
ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)
கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)
உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )
கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!
==========================================================
Also check :
ஆச்சார அனுஷ்டானம், பக்தி – எது பிரதானம் ? – திருமால் திருவிளையாடல் (4)
ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)
பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)
விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)
==========================================================
பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!
மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !
திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)
ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)
ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!
==========================================================
[END]
சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் .
தஞ்சை ஆண்ட ராஜா ராஜா சோழன் காலத்தில் வாழ்ந்த மகான் ராமானுஜர் 120 ஆண்டுகள் வரை வாழ்ந்தார் .”தெருக்குல த்தாரை திருக்குலத்தராக்கிய” பெருமை மகானை சாரும் .
காஞ்சிபுரம் அருகில் மதுரமங்கலம் சென்று வந்தால் கண் சம்மந்தமான குறைபாடுகள் நீங்க பெறுவார்கள் .
இந்த பதிவில் ராமானுஜர் பற்றிய பாடல் எதாவது வரும் என எதிர் பார்த்தேன் . .
ராமானுஜர் 1000வது சதய விழா பதிவு மிக அருமை. வாழ்த்துக்கள் .
குருவின் வாக்கை காப்பாற்ற கோவிந்தன் ஓடி வருவான் என்பது உறுதியானது. ராமானுஜரைப் போன்றே இதை படித்த எங்கள் கண்களும் பனித்தன.
கேள்விப்பட்டிராத, வித்தியாசமான சம்பவம். மெய்சில்ரிக்கிறது.
ராமனுஜரின் ஜெயந்தி அன்றே இதை நான் படித்துவிட்டாலும் இப்போது தான் பின்னூட்டம் அளிக்க நேரம் கிடைத்தது.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்