Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > எப்போதும் பகவானின் நாமாவை உச்சரிப்பதால் என்ன பலன்? Rightmantra Prayer Club

எப்போதும் பகவானின் நாமாவை உச்சரிப்பதால் என்ன பலன்? Rightmantra Prayer Club

print
நாவை ஆண்டவன் படைத்தது சாப்பிடுவதற்கும் பேசுவதற்கும் மட்டும் அல்ல. அவன் நாமத்தை, அவனது பெயரை எப்போதும் நாம் உச்சரிக்கவேண்டும் என்று தான். ஆகையால் தான் நம்முடைய நா நாமோடு இருக்கிறதாம்.

‘கையெழுத்து போடுங்கள்’ என்றால் ‘ஆஹா பேனாவை எங்கேயோ வைத்து விட்டேன்’ என்று தப்பிக்கலாம். ‘இறைநாமம் சொல்லுங்கள்’ என்றால் ‘ஆஹா, நாவை எங்கோ கழற்றி வைத்துவிட்டேன்’ என்று தப்பிக்க முடியுமா? ‘புத்தகம் படியுங்கள்’ என்று அலுப்பேற்படுத்துகிற புத்தகம் கொடுத்தால் ‘கண்ணாடியைக் காணோமே’ என்று டபாய்க்கலாம். ஆனால் இறைநாமத்தைச் சொல்லுங்கள் என்று ஒருவர் கேட்டுக்கொள்ளும்போது ‘என் நாவு எங்கே?’ என்று ஏய்க்க முடியாது. அதனால்தான் ‘நாவுண்டு நமோ நாராயணா என்ன’ என்கிறார் ஆழ்வார். எப்போதும் ‘ராம்… ராம்’ என்றதால்தான் இறுதி நேரத்திலும் ‘ஹே ராம்’ என்றார் மகாத்மா காந்தி!

நாம் எந்த பணியை செய்தாலும், ‘சிவ சிவ’ என்றோ, ‘ராம் ராம்’ என்றோ, என்றோ சொல்லியபடி தான் செய்யவேண்டும். சரி… அப்படி செய்வதால் என்ன பலன் கிடைக்கும்? இது தானே உங்கள் கேள்வி.

Bhakta Tukaramபக்த துக்காராம் அவர்களின் வாழ்வில் உண்மையில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை உங்களுக்கு கூறவிரும்புகிறோம்.

இரண்டு பெண்கள் பசுஞ்சாணத்தில் வரட்டி தயாரித்து விற்பனை செய்து பிழைத்து வந்தனர். ஒருசமயம், ஒருத்தி தயார் செய்த வரட்டிகளை, மற்றொருத்தி, அவள் அறியாமல் எடுத்துக் கொண்டாள். இருவருக்கும் இதனால் பிரச்னை ஏற்பட்டது. இந்த சமயத்தில் கிருஷ்ண பக்தரான துக்காராம் அங்கு வந்தார். அவரிடம் திருட்டுக் கொடுத்தவள் முறையிட்டாள். “சுவாமி! நான் கஷ்டப்பட்டு தயாரித்த வரட்டிகளை இவள் திருடிக்கொண்டாள். என்னுடையதை வாங்கித் தாருங்கள்!” என்றாள்.

துக்காராம் அந்த வரட்டிகளை கையில் எடுத்து, ஒவ்வொன்றாக காதின் அருகில் கொண்டு சென்றார்.

பின், ஒரு பகுதியை வலதுபுறமாகவும், ஒரு பகுதியை இடதுபுறமாகவும் வைத்தார்.

“உங்களில் வரட்டி தட்டும்போது, ‘விட்டல! விட்டல!’ என சொன்னது யார்?” என்றார்.

திருட்டுக் கொடுத்த பெண், “நான் தான் அவ்வாறு சொன்னேன்”, என்றாள்.

“அப்படியானால், வலதுபக்கம் இருப்பவை உன்னுடையவை. இடப்பக்கம்  அவளுடையவை!” என்று கூறிவிட்டு, “திருடுவது மாபாவம். இனி அப்படி செய்யாதே” என்று திருடிய பெண்மணிக்கு அறிவுரை கூறினார்.

“ஒரு தொழிலைச் செய்யும் போது, கண்ணனின் திருநாமத்தை யார் உச்சரிக்கிறார்களோ, அது காற்றில் பரவி, அந்த இடம் முழுக்க எதிரொலிக்கும். அவ் வகையில் வரட்டிக்குள்ளும் கண்ணனின் திருநாமங்களில் ஒன்றான விட்டல என்பது ஒலித்தது!!” என்றார்.

திருட்டுக் கொடுத்தவள் தன் பொருளைத் திரும்பப் பெற்றதுடன், கண்ணனின் அனுக்கிரகமும் தனக்கு கிடைத்ததற்காக, நன்றியுடன் கண்ணீர் பெருக்கினாள்.

இப்போது புரிகிறதா அன்றாட வேலைகளை செய்யும்போது இறைவனின் நாமத்தை சொல்வதால் கிடைக்கும் பலனை?

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர்: ஆப்பூர் ‘நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்’ கோவிலில் பெருமாளுக்கு தொண்டு செய்து வரும் பாலாஜி பட்டர். சென்னை சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்து ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ள சிருவாஞ்சூரில் உள்ள இந்த தலம் அகத்தியர் தவம் செய்த ஔஷதகிரியில் அமைந்துள்ளது. 500 படிக்கட்டுக்களுடன் கூடிய அழகிய மலைக்கோவில் இது. கோவிலை பற்றிய விரிவான பதிவு நம் தளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. (http://rightmantra.com/?p=12579)

பாலாஜி அவர்கள் சிறு வயதிலிருந்தே தனது தந்தை திரு.முத்துராமன் பட்டர் அவர்களுடன் பல்வேறு கோவில்களுக்கு சென்று தொண்டாற்றியவர். அவருடைய தந்தை திரு.முத்துராமன் பட்டர் தான் ஆப்பூரிலும் பெருமாளுக்கு கைங்கரியம் செய்து வந்தவர். ஒரு கட்டத்தில் முதுமை காரணமாக தினசரி படியேறி வந்து பெருமாளுக்கு அவரால் தொண்டு செய்ய முடியவில்லை. எனவே தந்தையின் கைங்கரியத்தை தொடரும் பொருட்டு திரு.பாலாஜி அவர்கள் அந்த பணியை தற்போது செய்துவருகிறார்.

DSC03373

அனிமேஷன் படித்துள்ள இவர், பகுதி நேரமாக தான் இந்த தொண்டை செய்துவருகிறார். வெளியுலகிற்கு அரிதாகவே தெரிந்த கோவில் என்பதால் கூட்டமும் அவ்வளவாக வருவதில்லை. எனவே தட்டு வருமானமோ இதர வருமானங்களோ இவருக்கு கிடையாது. அந்த நிலையிலும் தினசரி படியேறி வந்து பெருமாளுக்கு நித்திய கைங்கரியங்களை செய்துவருகிறார்.

500 படிகள் தினசரி ஏறி, இறங்குவது என்பது சாதரணமானதல்ல. மேலும் இவரைப் போன்ற இளைஞர்கள் எல்லாம் பன்னாட்டு கம்பெனிகளில் வேலைக்கு போய் செட்டில்லாவதில் குறியாக இருக்க, இவரோ தந்தையின் கடமையை தொடரும் பொருட்டு இந்த கோவிலின் பட்டராக அந்த கோவிந்தனுக்கு தொண்டு செய்து வருகிறார்.

எப்படி பார்த்தாலும் இவரது தொண்டு மிக மிக பெரியது. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுகொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அந்நேரம் தான் சன்னதியில் தான் இருப்போம் என்றும் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்வதாகவும் கூறியிருக்கிறார்.  இதை விட நமக்கு வேறு என்ன வேண்டும்?

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

இந்த வார பிரார்த்தனைக்கு முதல் கோரிக்கையை அனுப்பியுள்ள அனுராதா அவர்கள், நமது தளத்தின் தீவிர வாசகி. நமது பல்வேறு அறப்பணிகளில் தாமாக முன்வந்து தோள்கொடுத்து வருபவர். பிரிந்திருந்த தன்னுடைய 3 வயது மகளுடன் சேரவேண்டும் என்கிற இவரது பிரார்த்தனை ஒன்று நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று, அது நிறைவேறிய கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். தற்போது, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தமது தந்தைக்காக பிரார்த்தனை சமர்பித்திருக்கிறார். நல்லதே நடக்கும். கவலை வேண்டாம்.

அடுத்த பிரார்த்தனையை சமர்பித்திருப்பவர் கருடா  காளிமுத்து. இவரது கதையை ஒரு நாள் தனியாக இந்த தளத்தில் பதிவு செய்கிறோம். உங்கள் அனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிக்கக்கூடியது. சென்ற வாரம், மனைவியை பிரிந்திருந்த தனது நண்பருக்காக பிரார்த்தனை சமர்பித்திருன்தவர் தற்போது தனக்கு தெரிந்த வேறு ஒரு நிராதரவற்ற முடிய தம்பதிகளுக்காக சமர்பித்திருக்கிறார். இவரது கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.

அப்புறம் ஒரு முக்கிய விஷயம்… நமது பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு அது நிறைவேறிய மகிழ்ச்சியான தகவல் நமக்கு கிடைத்துள்ளது. விபரங்கள் விரைவில்….!

================================================================

தாயுமானவர் விரைவில் நலம் பெற வேண்டும்

தாய் இழந்து தவித்த எங்களை, தாயுமானவராய் காத்த எங்களது தந்தை திரு. பாலசுந்தரம் அவர்கள், சிறுநீரக கோளாரால் சென்னை Apollo Hospital-ல் சிகிச்சை பெற்று வருகிறார். தேவைபட்டால், டயாலிசிஸ் செய்ய வேண்டி வரும் என மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

உங்கள் பிரார்த்தனை மிகவும் சக்தி வாய்ந்தது என பரிபூரணமாய் நான் அனுபவித்த வகையில்,  மீண்டும் உங்கள் பிரார்த்தனை, எங்கள் தாயுமானவரை டயாலிசிஸ் சிகிச்சை இல்லாமல்  மீட்டு கொடுத்துவிடும் என மிகவும் நம்புகிறேன். அவர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப, பிரார்த்தனை செய்யும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவருக்கும், பரிகாரம் பரிந்துரைக்கும் விஜய பெரியசாமி அவர்களுக்கும் மிக்க நன்றி.

அனுராதா
சிங்கப்பூர்

================================================================

நிராதரவாய் தவிக்கும் ஒரு வயதான தம்பதியினர்

வணக்கம் சார்,

சேலத்தில் வசிக்கும் ஒரு வயதான அம்மாவுக்காக வரும் ஞாயிற்று கிழமை பிராத்தனை செய்யும் படி கேட்டு கொள்கிறேன்.

அந்த அம்மாவின் பெயர் மல்லிகா. அவருக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு.  இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. அவருக்கு

மருமகனும் சரியில்லை. மகனும் சரியில்லை.

மகளின் நிலை:

மகளுக்கு மூளை வளர்ச்சி குன்றிய ஒரு பெண்பிள்ளை. ஆனால் மருமகனோ குடிகாரன் மற்றும் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருக்கிறார்.தற்போது மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது ,சரியான முறையில் மருமகன் குடும்பத்தை கவனிப்பது இல்லை. மருமகன் திருந்தி மகளுடன் நல்ல முறையில் வாழவேண்டும்.

மகன் நிலை :

மகனுக்கு ஒரு ஆண் குழந்தை,அம்மா ,அப்பாவை நன்றாக கவனித்து வந்த மகன் இப்போது ஏறெடுத்தும் பார்ப்பதே இல்லை பேர பிள்ளையயை கூட பார்க்க அனுமதிப்பது இல்லை, இத்தனைக்கும் அருகில் தான் மகன் வீடு.

அவருடைய கணவர் ராணுவத்தில் வேலை பார்த்தவர் அவர். தற்போது வயதாகி விட்டது. தீராத குடும்ப பிரச்னையால் மிகவும் மனஅழுத்தத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் உள்ளார். யாரும் கவனிப்பாரற்று அவரும் அவர் மனைவியும் உள்ளனர். மகளையும் மகனையும் நினைத்து ஏக்கத்தில் உள்ளனர். இவர்களின் குடும்பம் நல்ல முறையில் வாழவேண்டும் என்று பிராத்தனை செய்யும் படிகேட்டு கொள்கிறேன்.

– கருடா முத்து,
சேலம்

================================================================

பொது பிரார்த்தனை

பாதுகாப்பான விமான பயணம் அமையவேண்டும்!

நெதர்லாந்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான எம்.ஹச்.17 பயணிகள் விமானம்,  ரஷ்ய எல்லையை கடந்து உக்ரைன் நாட்டின் மீது பறந்துகொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 298 பேரும் உடல் கருகி பலியாகினர். விமானத்தை இன்னார் தான் சுட்டனர் என்று சரியான விபரம் தெரியவில்லை. உக்ரைன், ரஷ்யா, கிளர்ச்சியாளர்கள் என ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு வருகின்றனர்.

ஏற்கனவே மலேசிய பயணிகள் விமானம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு கடலில் வீழ்ந்து காணமல் போய்விட்ட நிலையில், இந்த விமான விபத்து (படுகொலை) மலேசிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விமான விபத்து குறித்து சர்வதேச விசாரணை நடத்தி குற்றவாளிகளை நீதியின் முன்னே நிறுத்தி தண்டிக்கவேண்டும் என்கிற குரல் உலகெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தின் நொறுங்கிய பாகங்களுக்கிடையே காணப்பட்ட இந்த கரடி பொம்மை கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது

அதே போன்று புர்கினா ஃபாúஸா நாட்டில் இருந்து பிரான்ஸ், ஸ்பெயின் நாட்டுப் பயணிகள் உள்பட 116 பேருடன் அல்ஜீரியாவுக்கு வந்துகொண்டிருந்த பயணிகள் விமானம் மாலி நாட்டில் சில நாட்களுக்கு முன்னர் நொறுங்கி விழுந்தது. விபத்தில் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தைவான் நாட்டிலும் இதே போன்று ஒரு விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகில் அன்றாடம் எத்தனையோ விபத்துக்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் இத்தகு விபத்துக்களில் பலியாகிவருகின்றனர். இருப்பினும் மற்ற விபத்துக்களைவிட விமான விபத்து மிகவும் கொடுமையானது. மற்ற விபத்துக்களில் இறந்தவர்களின் உடல், முழுமையாக கிடைத்துவிடும். விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தால் உடல் கிடைப்பது மிகவும் சிரமம். இதற்கு மேல் அதுகுறித்து விளக்க நாம் விரும்பவில்லை.

மேற்கண்ட விமான விபத்துக்களில் சிக்கி உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவர்கள் அனைவரின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுவோம். விபத்தில்லா விமான பயணத்தை அருளவேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது வாசகி அனுராதா அவர்களின் தந்தை திரு.பாலசுந்தரம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரக பிரச்னை விரைவில் முற்றிலும் நீங்கி அவர் சௌக்கியமாக சந்தோஷமாக தமது வாழ்நாளை கழிக்கவும், சேலத்தை சேர்ந்த மல்லிகா அவர்களின் மருமகனும் மகனும் மனம் திருந்தி குடும்பத்திற்கு ஏற்ற பிள்ளைகளாய் மாறவும், அவரது மகளுக்கு குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் நீங்கி சௌக்கியமான சந்தோஷமானதொரு வாழ்க்கை அமையவும் முதியவர்கள் இருவரும் எஞ்சியுள்ள நாட்களை எந்த வித நோய் நொடியுமின்றி குடும்பத்தினருடன் சந்தோஷமாக கழிக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். சமீபத்தில் நடைபெற்ற உலகை உலுக்கிய விமான விபத்துக்களில் பலியானோரின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் விமான பயணிகளுக்கு பாதுகாப்பான விபத்தில்லா பயணத்தை அருளவேண்டும் என்றும் இறைவனை வேண்டுவோம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருக்கும் திரு.பாலாஜி பட்டர் அவர்களின் குடும்பத்தினர் சகல வித ஷேமங்களையும் பெற்று சந்தோஷமாக வாழவும் அவர் தம் தொண்டு சிறக்கவும் இறைவனை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜூலை 27,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : ஈரோடு அரசு இசைப்பள்ளியில் தேவார ஆசிரியராக இருக்கும், பார்வைத்திறன் சவால் கொண்ட திரு.ஞானப்பிரகாசம் அவர்கள்.

13 thoughts on “எப்போதும் பகவானின் நாமாவை உச்சரிப்பதால் என்ன பலன்? Rightmantra Prayer Club

  1. பகவன் நாமாவை உச்சரிப்பதால் ஏற்படும் பலனை அறிந்து கொண்டோம்

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அனைவருக்காகவும் பிரார்த்திப்போம். லோக ஷேமத்திற்காக பிரார்த்தனை செய்வோம்

    இந்த வார பிரார்த்தனை கிளபிற்கு தலைமை தாங்கும் பாலாஜி பட்டர் அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    லோக சமஸ்த சுகினோ பவந்தோ

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா

  2. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு. பாலாஜி அவர்கள் உணமையிலேயே பாராட்டத்தக்கவர்
    இன்றைய சூழலில் தேவை அதிகமுள்ள போதிலும் தம் தந்தையின் தொழிலை விட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர் பகவானுக்கு செய்யும் சேவை மிக பெரியது.

    மல்லிகா அம்மாள் பற்றிய கோரிக்கை படிக்கும் போதே மனம் மிகவும் வேதனை அடைந்தது.
    மல்லிகா அம்மாவிற்கும், அனுராதா அவர்களின் பிரார்த்தனைக்கும் சேர்த்து கடவுளிடம் முறையிடுவோம்

  3. வரட்டியை காதில் வைத்து யார் தட்டிய வரட்டி அது என்று கண்டுபிடித்த துக்காராம் அவர்களின் சமயோசிதமும், வரட்டி தட்டிய பெண்ணின் பக்தியும்…. .அட..அட… சபாஷ். இன்று என் குழந்தைகளுக்கு சொல்ல மற்றுமோர் அற்புதமான கதை கிடைத்தது.

    பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள பாலாஜி பட்டர் அவர்களுக்கு என் நன்றி மற்றும் வணக்கங்கள். உண்மையில் தினசரி 500 படி ஏறி இறங்குவது சாதாரணமல்ல.

    இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கை சமர்பித்துள்ளவர்களுக்காக வேண்டிகொள்கிறேன். நீங்கள் சொல்வது போல, விமானம் ஏறினாள் பத்திரமாக இறங்குவோமா என்று தெரியாத நிலை இன்று நிலவுகிறது. அனைவருக்கும் பாதுகாப்பான விமான பயணம் அமையவேண்டும்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர், சேலம் மாவட்டம்.

  4. இந்த மெயில் அனுராதா அவர்களுக்கு,
    எனக்கு தெரிந்து HEALER BASKER என்பவர், கிட்னி, மற்றும் எல்லா நோய்க்கும் தீர்வு சொல்லுகின்றார். அவருடைய இணைய தளத்தில் சென்று பார்க்கவும். தமிழ் வீடியோஸ் அதிலேயே உள்ளது.
    அவருடைய முகவரி http://anatomictherapy.org

  5. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் பாலாஜி பட்டர் அவர்கள் வாழ்க வளமுடன்.
    இந்தவாரம் பிராத்தனைக்காக கோரிக்கை அனுப்பி இருக்கும் அனைவருக்காகவும் வேண்டிகொள்வோம்.

    ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்.

  6. வரட்டியை காதில் வைத்து யார் தட்டிய வரட்டி அது என்று கண்டுபிடித்த துக்காராம் அவர்களின் சமயோசிதமும், வரட்டி தட்டிய பெண்ணின் பக்தியும் போற்றுதலுக்குரியது. எந்த செயல் செய்தாலும் இறைவனின் திருநாமத்தை வாயார சொல்ல வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றது. இவ்வார பிரார்த்தனைக் கோரிக்கை அளித்திருக்கும் சகோதரி அனுராதா அவர்களின் வேதனை தீர இறைவன் அருள் புரிய வேண்டும். மற்றும் முதிர்ந்த வயதில் குழந்தைகளைப் போல் கவணித்துக்கொள்ள வேண்டிய பெற்றோரை நிராதரவாக விட்டு விட்ட மகனின் மனம் மாறவேண்டும், அவர்கள் குடும்பத்தில் உள்ள மற்ற அனைத்துப் பிரச்சினைகளும் தீரவேண்டும். இன்றுமாலை வீட்டிற்கு வந்த நண்பர், நாட்டில் நடக்கும் விபத்துக்களைக் குறித்தும், இந்த மாதத்தில் அதிகளவு விமான விபத்து நேர்ந்துள்ளது வேதனையுடன் குறிப்பிட்டர். விபத்து என்றாலே துயரம் என்றாலும், விமான விபத்தென்பது கொடூரம். இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் குறையவேண்டும் எனவும் மகாப்பெரியவா அவர்களின் பொற்பாதங்களைப் பணிந்து வேண்டிக்கொண்கிறேன். இந்த அவசர உலகத்திலும் நாள்தோறும் மலையில் ஏறி இறங்கி இறைவனுக்குத் தொண்டு செய்யும் குருக்கள் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.
    கடந்த வாரம் பிரார்த்தனைக்கு என் கணவரின் முன்னிலையில் எங்களுடைய வீட்டில் பதிகங்கள் பாடி இறைவனை வழிபட்டோம். முதலில் இடர்களையும் பதிகமான மறையுடையாய் எனத் தொடங்கும் திருநாவுக்கரசர் பதிகம் பாடினோம். மற்றும் துஞ்சலும் துஞ்சல் எனத் தொடங்கும் பதிகமும், செய்வினைதீர ஓத வேண்டிய பதிகமான வேயிறு தோளிபங்கன் எனும் கோளறு பதிகமும் ஓதப்பட்டது. அடுத்ததாக பிறிந்த தம்பதியர் ஒண்று சேர பாராயணம் செய்ய வேண்டிய பதிகமான அவ்வினைக்கு இவ்வினையாம் எனும் பாடலும். நிலைபெறுமாறெண்ணுதியேல் நெஞ்சே நீ வா…எனும் திருநாவுக்கரசர் பதிகமும், பற்றற்றார் சேர் பழம்பதியை எனும் பாவநாசப் பதிகமும், பத்திலனேனும் பணிந்திலனேனும் எனும் சுந்தரர் பதிகமும் பாடினார். அடுத்ததாக நம்மை கொண்ட அனைத்து துயரங்களிலிருந்தும் விடுவிக்குமாறு இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் பதிகம், மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பம் இறைவன் முன் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருப்பல்லாண்டு.பெரியபுராணம் ஆகிய திருமுறைகளிலிருந்து சில பாடல்கள் பாராயணம் செய்தோம். அம்மைக்கு விண்ணப்பம் வைக்கும் அபிராமி அந்தாதியும், முருகப்பெருமானின் புகழ்பாடும் காமியத்தழுந்தி இழையாதே எனும் திருப்புகழும், நிறைவாக வான்மழை வழாது பெய்க எனும் பாடலுடன் பிரார்த்தனைக் கோரிக்கைகளை நினைத்து அவ்விண்ணப்பங்கள் அனைத்தும் நன்முறையில் நிறைவேற வேண்டுமென்று வேண்டி, பூஜையை நிறைவு செய்தோம். மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. இவ்வாய்ப்பை நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!.

  7. உடல் வலிமை பெற, உணவு
    அது போல், மனம் திறன் பெற மந்திரம்!
    உரு ஏறத் திரு ஏறும் என்பது திருமூலரின் வாக்கு.

  8. அனுராதா அவர்களின் தாயுமானவர் நன்முறையில் நலம் பெற ,திருச்சி தாயுமானவர் வழிபட்டு செய்து ,அங்கு உள்ள பாதாள அய்யனாரை தீபம் ஏற்றி வழிபடுங்கள் ..பின்பு ஸ்ரீரெங்கம் சென்று ரெங்கநாதர் திருகோயிலில் தனி சன்னதியில் உள்ள தன்வந்திரி பகவானை நெய் தீபம் ஏற்றி வழிபட்டு ,அர்ச்சனை செய்து ,அங்கு தரும் தீர்த்தத்தை வீட்டிற்க்கு வாங்கி வந்து தினமும் உங்கள் தாயுமானவருக்கு பருக கொடுத்து வாருங்கள்.பின்பு சமயபுரம் அருகில் உள்ள ஊட்டத்தூர் சுத்தரத்நேஸ்வரர் திருகோயில் சென்று அங்கு உள்ள நடராஜரை அத்தல முறைப்படி அபிசேகம் ,அர்ச்சனை செய்து வழிபடுங்கள் ..அங்கு தரும் வெட்டிவேர் தீர்த்தத்தை தினமும் வீட்டில் உங்கள் தாயுமானவரிடம் பருகி வர செய்யுங்கள் …தினமும் வீட்டில் பைரவர் வழிபாடு செய்யுங்கள் …சிறுநீரக சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும் …பதிகம் 48 நாட்கள் படித்துவாருங்கள் எப்போதும் …

    நன்று நாடொறும் நம்வினை போயறும்
    என்று மின்பந் தழைக்க இருக்கலாஞ்
    சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
    துன்று பொற்சடை யானைத் தொழுமினே.

    கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
    பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
    விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
    திருப்ப னாகில் எனக்கிட ரில்லையே.

    வேட்க ளத்துறை வேதியன் எம்மிறை
    ஆக்க ளேறுவர் ஆனைஞ்சு மாடுவர்
    பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
    காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.

    அல்ல லில்லை அருவினை தானில்லை
    மல்கு வெண்பிறை சூடு மணாளனார்
    செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
    வல்ல ராகில் வழியது காண்மினே.

    துன்ப மில்லை துயரில்லை யாமினி
    நம்ப னாகிய நன்மணி கண்டனார்
    என்பொ னாருறை வேட்கள நன்னகர்
    இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே.

    கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
    பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
    சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
    பட்ட வல்வினை யாயின பாறுமே.

    வட்ட மென்முலை யாளுமை பங்கனார்
    எட்டு மொன்றும் இரண்டுமூன் றாயினார்
    சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு
    திட்ட மாகி யிருமட நெஞ்சமே.

    நட்ட மாடிய நம்பனை நாடொறும்
    இட்டத் தாலினி தாக நினைமினோ
    வட்ட வார்முலை யாளுமை பங்கனார்
    சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே.

    வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
    சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
    குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ்
    சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே.

    சேட னாருறை யுஞ்செழு மாமலை
    ஓடி யாங்கெடுத் தான்முடி பத்திற
    வாட வூன்றி மலரடி வாங்கிய
    வேட னாருறை வேட்களஞ் சேர்மினே.
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை
    அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்
    தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
    திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
    கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
    கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
    பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
    காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
    அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
    ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
    மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
    வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப்
    பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
    கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி
    வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
    வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
    அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
    அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
    பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை
    அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
    மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் றன்னை
    மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணுந்
    திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
    திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
    பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
    அருமருந்தை அகல்ஞாலத் தகத்துள் தோன்றி
    வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
    வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
    பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
    பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
    பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னைக்
    கனவயிரக் குன்றனைய காட்சி யானை
    அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் றன்னை
    அருமறையோ டாறங்க மாயி னானைச்
    சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
    சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
    பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
    வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
    அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த
    அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் றன்னைச்
    சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கிற்
    துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
    பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    காரானை ஈருரிவைப் போர்வை யானைக்
    காமருபூங் கச்சியே கம்பன் றன்னை
    ஆரேனு மடியவர்கட் கணியான் றன்னை
    அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்
    பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
    பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
    பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    முற்றாத பால்மதியஞ் சூடினானை
    மூவுலகுந் தானாய முதல்வன் றன்னைச்
    செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னைத்
    திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
    குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் றன்னைக்
    கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
    பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்
    கடிக்கமலத் திருந்தயனுங் காணா வண்ணஞ்
    சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
    திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
    ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
    ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற
    பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    திருச்சிற்றம்பலம்

  9. சேலம் பெண்மணிக்காக,கருடா முத்து அவர்கள் பார்வைக்கு ,
    முதலில் அவர்களது குலதெய்வ வழிபாடு செய்ய சொல்லுங்கள் .குலதெய்வ கோயிலில் வழிபட்டு அங்கிருந்து மண் எடுத்து வந்து வீடு பூஜை அறையில் வைத்து தினமும் குலதெய்வ பூஜையை முறையாக செய்து வர சொல்லுங்கள் ..பின்பு தினமும் காகம் ,நாய்க்கு தங்கள் மூதாதையரை நினைத்து உணவிட சொல்லுங்கள் ..அமாவாசை நாட்களில் மூதாதையர் வழிபாடு கண்டிப்பாக செய்ய சொல்லுங்கள்…அம்மாசத்திரம் [திருவிடைமருதூர் அருகில்]சென்று அங்கு உள்ள சப்தரிஷிவரர் திருகோயிலில் உள்ள பைரவரை வழிபட சொல்லுங்கள் …அசைவம் கண்டிப்பாக தவிர்கவும் ….சுந்தர காண்டம் தினமும் ஒரு சர்கம் படித்து வரவும் [சுந்தரகாண்டம் பத்தி நம் சுந்தர் சார் நிறைய சொல்லி இருகிறார் ]..பதிகம் தினமும் மும் முறை படித்து வரவும் ..
    பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத்
    துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
    பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்
    டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

    கீர்த்திமிக் கவன்நகர் கிளரொளி யுடனடப்
    பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்
    போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை
    ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

    வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர்
    எரிந்தற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல்
    இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
    அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

    வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை
    மாய்ந்தற எய்தவன் வளர்பிறை விரிபுனல்
    தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்
    ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

    வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
    தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
    மானன மென்விழி மங்கையொர் பாகமும்
    ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே.

    முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும்
    இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்
    என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்
    அன்பன வளநகர் அந்தண் ஐயாறே.

    வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
    வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில்
    பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்
    அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே.

    விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும்
    அடித்தலத் தால்இறை யூன்றிமற் றவனது
    முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
    அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

    விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல்
    எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
    கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
    அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே.

    மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
    இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களுந்
    தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
    அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே.

    நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ்
    அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக்
    கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக
    நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.

    திருச்சிற்றம்பலம்

    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
    பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை
    இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்
    துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.

    நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
    உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்
    கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனை
    நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே.

    பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி
    சீராலே பாடலா டல்சிதை வில்லதோர்
    ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச்
    சேராதார் இன்பமா யந்நெறி சேராரே.

    குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்
    மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்
    மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பஞ்
    சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே.

    சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தங்
    கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள்
    புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்
    உடையானை யல்லதுள் காதென துள்ளமே

    மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
    கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை
    வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பந்
    தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே.

    விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார்
    கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை
    நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத்
    தண்ணலா ராடுகின் றவலங் காரமே.

    தூயானைத் தூயவா யம்மறை யோதிய
    வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
    தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
    மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.

    நாகம்பூண் ஏறதே றல்நறுங் கொன்றைதார்
    பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர்
    ஏகம்பம் மேவியா டுமிறை யிருவர்க்கும்
    மாகம்பம் அறியும்வண் ணத்தவ னல்லனே.

    போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
    வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்
    ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
    நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே.

    அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக்
    கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையால்
    சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்
    பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே.

    திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *