Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > ஜெயிப்பதற்கு இதுவும் ஒரு வழி தான் – MONDAY MORNING SPL 54

ஜெயிப்பதற்கு இதுவும் ஒரு வழி தான் – MONDAY MORNING SPL 54

print
ந்த சீன ரெஸ்ட்டாரண்ட்டுக்கு ஒரு நடுத்தர வயது ஆசாமி வந்தார். ரெஸ்ட்டாரண்ட்டின் மானேஜரை சந்தித்து, “சார்… உங்கள் ரெஸ்ட்டாரண்ட்டில் தவளைக் கால் சூப் ரொம்ப ஃபேமஸ் என்று கேள்விப்பட்டேன். என்னால் உங்களுக்கு தினசரி நூற்றுக்கணக்கான தவளைக் கால்களை சப்ளை செய்ய முடியும்.”

532104492

ரெஸ்ட்டாரண்ட் மானேஜருக்கு ஆச்சரியமாக இருந்தது. “தினமும் நூற்றுக்கணக்குல தவளைக் கால்களை உங்களால் எப்படி சப்ளை செய்ய முடியும்?”

“என் வீட்டின் அருகே ஒரு பெரிய குட்டை இருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான தவளைகள் வசிக்கின்றன. இரவு முழுதும் அவை எழுப்பும் ஒலிகளால் என்னால் தூங்கமுடியவில்லை. எனவே அவற்றை தினமும் உங்களுக்கு பிடித்து தர திட்டமிட்டுள்ளேன்.”

இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருகிறார்கள். ஒப்பந்தத்தின் படி, உணவகத்துக்கு ஒவ்வொரு ஞாயிறும் 500 தவளைகளை இவர் சப்ளை செய்யவேண்டும்.

முதல், ஞாயிறு வந்தது. தவளை பிடித்து கொண்டுவருவதாக சொன்ன ஆசாமி, கையில் மூன்றே மூன்று தவளைகளை மட்டுமே கொண்டு வந்தார்.

“எங்கே நீங்கள் கொண்டுவருவதாக சொன்ன 500 தவளைகள்?”

“என்னை மன்னிக்கணும். அந்த குட்டையில இருந்தது மொத்தம் இந்த மூணே மூணு தவளை தான். ஆனா இதுங்க தான் என்னை இத்தனை நாளா தூங்க விடாம சத்தம் செஞ்சிருக்கணும்!” என்றார்.

ஒரு பிரச்சனையின் உண்மையான பரிமாணத்தை புரிந்துகொள்ளாமல் தேவையற்ற பயத்திலேயே பலர் காலம்கழிக்கிறார்கள். அடுத்த முறை உங்களை யாராவது குறைகூறினாலோ, தவறாக விமர்சித்தாலோ, அவமதித்தாலோ அல்லது கேலி செய்தாலோ அவர்கள் இது போன்ற ஒரு சில தவளைகளாக இருக்கலாம். நாம்  இருளில் இருந்தால் எந்த பிரச்சனையுமே பெரிதாகத் தான் தெரியும்.

Criticism
இந்த தவளைகளின் சத்தம் போல உங்களை கலவரப்படுத்தும் சில விஷயங்களை நினைத்துக்கொண்டே நீங்கள் எப்போதாவது தூங்கப் போயிருக்கிறீர்களா? காலையில் எழுந்து ஜஸ்ட் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் புரியும், ‘இதுக்காகவா நாம் இவ்ளோ கவலைப்பட்டோம்!’ என்று.

உங்களை பற்றி வதந்திகளுக்கோ அல்லது விமர்சனங்களுக்கோ ஒரு போதும் செவி சாய்க்காதீர்கள்.

1) அவை பொய்யாக இருந்தால் அதை சட்டை செய்யவேண்டாம்.

2) அவை நியாயமற்றதாகவும், உங்களை காயப்படுத்துவதாகவும் இருந்தால் அது உங்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். யாரோ ஒரு சிலரின் அறியாமை அது என்று ஜஸ்ட் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு போய்விடுங்கள்.

3) ஆனால், அதில் நியாயம் இருந்தால் அது விமர்சனமல்ல. பாடம். அதிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். இதுவும் கூட ஜெயிப்பதற்கு ஒரு வழிதான்!

==============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==============================================================

[END]

8 thoughts on “ஜெயிப்பதற்கு இதுவும் ஒரு வழி தான் – MONDAY MORNING SPL 54

  1. இந்த MONDAY மோர்னிங் ஸ்பெஷல் சுபெர்ப் ஸ்பெஷல்

    // அடுத்த முறை உங்களை யாராவது குறைகூறினாலோ, தவறாக விமர்சித்தாலோ, அவமதித்தாலோ அல்லது கேலி செய்தாலோ அவர்கள் இது போன்ற ஒரு சில தவளைகளாக இருக்கலாம். நாம் இருளில் இருந்தால் எந்த பிரச்சனையுமே பெரிதாகத் தான் தெரியும்.//

    நாமை பற்றி அடுத்தவர்கள் குறை கூறி நாம் கண்டுகாமல் விட்டால் அதுவே அவர்களுக்கு மிக பெரிய அவமானம்.

    //NO MATTER ALREADY GOOD A PERSON YOU ARE. THERE WILL ALWAYS BE SOME ONE CRITICIZING YOU// சுபெர்ப் QUOTE

    நன்றி
    உமா

  2. வணக்கம்

    நல்ல பதிவு……. ஒவ்வொரு பதிவும் எங்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது……..

    எங்களைப் போன்ற விளக்குகளைத் தூண்டுகோலாக இருந்து சுடர் விளக்குகளாக பிரகாசிக்கச் செய்வதில் ரைட் மந்த்ராவின் பங்கு மகத்தானது.

    நன்றிகள் பல…….

  3. டியர் சுந்தர்,
    குட் morning.

    “ஒரு பிரச்சனையின் உண்மையான பரிமாணத்தை புரிந்துகொள்ளாமல் தேவையற்ற பயத்திலேயே பலர் காலம்கழிக்கிறார்கள். அடுத்த முறை உங்களை யாராவது குறைகூறினாலோ, தவறாக விமர்சித்தாலோ, அவமதித்தாலோ அல்லது கேலி செய்தாலோ அவர்கள் இது போன்ற ஒரு சில தவளைகளாக இருக்கலாம். நாம் இருளில் இருந்தால் எந்த பிரச்சனையுமே பெரிதாகத் தான் தெரியும்.”

    monday special as ususual சூப்பர்.

  4. வணக்கம் சார்,

    நல்ல பதிவு,

  5. ஒவ்வொரு மனிதனும் தானும் துன்பப்படாமல் பிறரையும் துன்பப்படுத்தாமல் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கையாகும்

  6. சுந்தர் சார்,

    நல்ல பதிவு. இதில் வரும் தவளைகளை எல்லாம் வாழ்கையில் கடந்து வந்து இருக்கிறேன். சிலவற்றை கண்டுகொள்ளாமல் போவதற்கு முடியவில்லை. அதற்கு இன்னும் பக்குவ நிலை அடையவில்லை என்று கருதுகிறேன்.

    நன்றியுடன் அருண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *