கீழே தேவியின் புனித சரிதம் ஒன்றை அளித்திருக்கிறோம். இதை கேட்பவர், படிப்பவர், பிறருக்கு சொல்பவர் யாவரும் எல்லா நன்மைகளையும் பெற்று, சகல விருப்பங்களும் ஈடேறி தேவியின் உலகை அடைவார்கள் என்பது உறுதி. (ஆடியின் சிறப்புக்களை ஏற்கனவே நமது தளத்தில் அளித்த பதிவுகளில் இருந்தும் இதர பல மூலங்களில் இருந்தும் கையாண்டுள்ளோம்!)
ஆடியின் சிறப்பு
தமிழ் வருடத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ணிய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது. இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும் விரத வழிபாடுகளும் களைகட்டும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.
* இந்த மாதத்தில் வரும் ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம் என விசேஷ வைபவங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும்.
* ஆடி வெள்ளியன்று, மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.
* ஆடி மாதச் செவ்வாய் அன்று செட்டி நாட்டு பகுதிகளில் பெண்கள் மட்டும் ஒரு சந்தி கொழுக்கட்டை பிடித்து வழிபாடு செய்வர். இதன்மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்கு தொழில் மேன்மையும் ஏற்படும்.
* ஆடி வெள்ளியன்று குத்து விளக்கு பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நல்ல பலன்கள் வந்து சேரும்.
* ஆடி அமாவாசை அன்று கடல் அல்லது நதியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால், அவர்களது ஆசி கிடைக்கும். அதன் மூலம் இல்லத்திலுள்ள தடைகள் அகன்று சுபகாரியங்கள் முடிவடையும்.
* ஆடி வெள்ளியன்று இலக்குமியை வழிபட்டால், நாம் பண மழையில் நனையலாம். அங்ஙனம் வரம் கொடுக்கும் லட்சுமியை ‘வரலட்சுமி’ என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள் ஆடி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையாகும்.
* பூச்சூட்டிய குடம், மாவிலை, தேங்காய் போன்றவற்றை சேர்த்து மஹாலக்ஷ்மி படத்தின் முன்னால் வைக்க வேண்டும். சந்தனம், குங்குமம் பொட்டு குடத்திற்கு வைத்து, தேங்காய், பழம் வெற்றிலை பாக்கு, இனிப்பு பொருள் நைவேத்தியத்தோடு லட்சுமி கவசம், லட்சுமி வருகை பதிகம் பாடி வழிபாடு செய்தால், பணத் தேவைகள் பூர்த்தி ‘அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பமெல்லாம் இன்றோடு விலக வேண்டும்’ என்று சொன்னால் இலக்குமியின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.
* ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. ‘ஆடிச் செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி. அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் நல்ல விஷயங்கள் செய்யலாமா?
சிறப்பு மிக்க ஆடி மாதத்தில் நல்ல விஷயங்கள் தொடங்கக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் இல்லை. இவையெல்லாம் அவரவர் வசதிக்கேற்ப பரப்பப்பட்ட வதந்திகளாகும். பொதுவாக இந்த மாதத்தில் கிராமங்களில் விரதங்கள், வழிபாடுகள், சாமி கும்பிடு விழாக்கள், பெரிய உற்சவங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். ஆன்மிகத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட வேண்டி இருப்பதால் அதற்கு இடையூறாக மற்ற சுபவிசேஷங்கள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆடி மாதத்தில் சுப விசேஷங்களை தவிர்த்து, அதற்கு அடுத்த மாதமான ஆவணியில் தொடங்கினார்கள்.
ஆடி மாதத்தில் தம்பதிகள் ஏன் விலகி இருக்கவேண்டும்?
ஆடி மாதத்தில் தம்பதிகள் கலந்தால் அவர்களுக்கு அடுத்த சித்திரை மாதம் கோடைக் காலத்தில் குழந்தை பிறக்கும். அது தாய்க்கும் சேய்க்கும் கஷ்டமாக இருக்கும் என்பதால் ஆடி மாதத்தில் தாம்பத்தியம் கூடாது என்று பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள்.
துர்முகனை வதைத்த சதாக்ஷி தேவியின் புனித சரிதம்!!
இரணியாக்ஷனின் குலத்தில் குரு என்பவனுக்கு மகனாக பிறந்தவன் துர்முகன் என்னும் அசுரன். தேவர்களுக்கு சக்தியாக விளங்குவது வேதம். அதை அவர்களிடமிருந்து பறித்துவிட்டால் அவர்களால் செயல்படவியலாது என்று கருதி, இமயமலைக்கு சென்று அங்கு பிரம்மதேவனை நோக்கி ஆயிரம் ஆண்டுகள் கடும் தவமிருந்தான். தவம் என்றால் சாதாரண தவம் அல்ல. காற்றையே ஆகாரமாக புசித்து கடும் தவம் இருந்தான்.
அவனது தவத்தை கண்டு மனமிரங்கிய பிரம்மா அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, மூவுலகளில் தேவர்கள் மற்றும் அந்தணர்களிடம் இருக்கும் வேதங்கள் அனைத்தும் தனக்கு வசமாகவேண்டும்” என்று வரம் கேட்டான். பிரம்மாவும் அப்படியே ஆகட்டும் என்று வரமளித்து மறைந்தார்.
வேதம் அவன் வசமானது முதல் பூவுலகில் அனைவருக்கும் வேதங்கள் மறந்துபோயின. நீராடுவது, ஜபங்கள், வேள்விகள், சந்தியாவந்தனங்கள், சிரார்த்தம் முதலிய பித்ரு காரியங்கள் அனைத்தும் வேத மந்திரங்கள இன்றி தடைபட்டன. அந்தணர்கள் யாவரும் வேதங்கள் இல்லாமல் என்ன செய்வோம் என்று வருந்தினர். தேவர்களோ தங்களுக்கு யாக யக்ஞம் முதலியவற்றால் கிடைக்கும் அவிர்ப்பாகம் கிடைக்காமல் அவதியுற்றனர். விளைவு… அனைவரும் முதுமைத் தோற்றத்தை அடைந்தனர்.
இது தான் தேவலோகத்தை கைப்பற்ற சரியான சமயம் என்றெண்ணிய துர்முகன் தேவலோகத்தின் மீது படையெடுத்து சென்றான். மிகுந்த பலசாலியும் பராக்கிரம சாளியுமான அவன் முன் நிற்க முடியாமல் தேவர்கள் அஞ்சியோடி மேரு மலையில் உள்ள குகைகளில் பதுங்கிக்கொண்டனர். அனைவரும் தங்களை இந்த ஆபத்திலிருந்து காக்கும்படி அன்னை பராசக்தியை வணங்க ஆரம்பித்தனர்.
பூவுலகில் பிராமணர்கள் யாகங்கள் செய்யமால் போனதால் மழை பொய்த்துப் போனது. ஆறு குளம் கண்மாய்கள் அனைத்தும்வ் வறண்டு போயின. எங்கும் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடியது. பசுக்கள், ஆடுகள் முதலிய கால்நடைகள் நீரின்றி மடிந்தன.
இது கண்டு கலங்கிய சில கருணையுள்ள அந்தணர்கள் இமயமலைச் சாரலுக்கு சென்று ஆகாரமின்றி தேவியை நோக்கி தவம் செய்தனர். பலர் நிஷ்டிகளில் ஆழ்ந்து தேவியை துதித்து வந்தனர். “அம்மா… இந்த நிலையில் நீயே எங்களை காக்கவேண்டும். உன் கோபம் தணியட்டும். பூமி குளிரட்டும்” என்று பலவாறாக பிரார்த்தித்தனர்.
அவர்களை கண்டு மனமிரங்கிய தேவி, நீலமலை போன்ற ஒளி பொருந்திய உடலோடும், நீலோத்பல மலர்கள் போன்ற விழியோடும், பாணம், பத்மம், மூப்பு, நரை, திரை முதலியவற்றை நீக்கவல்ல பழங்களோடும், ஒரு பூங்கொடியை ஒத்த வில்லோடும் தோன்றி, நான்கு திருக்கரங்கலோடும் கருணை பொங்கும் ஆயிரம் விழிகளோடும் தோன்றி, தன் பேரழகு வடிவத்தை அவர்களுக்கு காட்டி பின்னர் நீர்த்தாரைகளை தனது திருக்கரங்களிலிருந்து பொழிந்தாள்.
அம்பிகையிடமிருந்து புறப்பட்ட அந்த கருணை மழை பூமியில் பெருமழையாய் பொழிந்து நீர்நிலைகளை நிறைத்து, பார்க்கும் இடம் எங்கும் பசுமையை ஏற்படுத்தியது.
அதுவரை குகைகளில் பதுங்கியிருந்த தேவர்கள் எல்லாம் வெளியே வந்து தேவியை துதிக்கலானார்கள்.
“ஜகன்மாதா, வேதங்களாலும் பொருள் உணர முடியாத சக்தி படைத்தவளே, மூவுலகையும் படைத்து காத்து ரட்சிப்பவளே… எங்கள் துன்பங்களை தீர்ப்பதற்காகவே எண்ணற்ற விழிகளை கொண்டு தோன்றியமையால் நீ சதாக்ஷி என்று போற்றப்படுவாய். நாங்கள் பசியினால் வாடியுள்ளோம். வேதங்களை இழந்ததால் ஏற்பட்ட பசி இது. உன்னை துதிக்கக் கூட எங்களிடம் சக்தியில்லை. துர்முகன் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுத் தந்து எங்களை உய்விக்கவேண்டும்” என்று துதித்தார்கள்.
“ஜகன்மாதா, வேதங்களாலும் பொருள் உணர முடியாத சக்தி படைத்தவளே, மூவுலகையும் படைத்து காத்து ரட்சிப்பவளே… எங்கள் துன்பங்களை தீர்ப்பதற்காகவே எண்ணற்ற விழிகளை கொண்டு தோன்றியமையால் நீ சதாக்ஷி என்று போற்றப்படுவாய்.”
சதாக்ஷி என்ற திருநாமம் பெற்ற அம்பிகை அவர்களின் பால் கருணை கொண்டு, தனது திருக்கரத்தில் ஏந்தியிருந்த மலர்கொடியிலிருந்து, சுவையான பழங்களையும், அறுசுவை நிரம்பிய உணவு வகைகளையும் உருவாக்கி தந்தாள். பசும் பட்டினியால் வாடிய அனைவரிடத்திலும் மகிழ்ச்சியின் அலைகள் இதன் மூலம் பரவியதால் தேவிக்கு சாகம்பரி என்னும் திருநாமம் உண்டாயிற்று.
தேவர்கள் இவ்வாறு அம்பிகையை துதித்து வேதங்கள் இல்லாத நிலையிலும், தேக ஆரோக்கியம் பெற்று திகழ்கிறார்கள் என்கிற செய்தி துர்முகாசுரனிடம் தெரிவித்தார்கள்.
அவன் உடனே ஆயிரம் அக்ரோணி அசுர சைன்யங்களோடு புறப்பட்டு தேவி மீது போர் தொடுக்க வந்தான். தேவி முன்னாள் தொழுதுபடி நிற்பவர்களை விரட்ட ஆரம்பித்தான்.
அவர்கள் அனைவரும், “தேவி காப்பாற்று… தேவி காப்பாற்று” என்று அலறியபடி ஓடினார்கள்.
உடனே தேவி, தனது சக்ராயுதத்தை எடுத்து “என் பக்தர்களுக்கு அரண் போல அமைந்து காப்பாயாக” என்று கட்டளையிட்டு தான் துர்முகாசுரனுடன் போர் புரிய ஆயத்தமானாள். சக்ராயுதம் பக்தர்களை சுற்றி சுற்றி வந்து யாரும் அவர்களை அணுகாதவாறு பாதுகாத்தது.
தேவிக்கும் துர்முகாசுரனுக்கும் நடைபெற்ற போர் உக்கிரம் மிகுந்ததாக இருந்தது. அந்த போரின் அஸ்திரப் பிரயோகங்கள் மூலம் எழுந்த அக்னி ஜூவாலையானது சூரியமண்டலத்தைக் கூட மறைத்தது.
தேவி தன்னிடத்தே இருந்து காளிகா (காளிகாம்பாள்), தாரிணி, பாலா, திரிபுரை, பைரவி, ரமை, பகலை, மாதங்கி, திரிபுரசுந்தரி, காமாக்ஷி, துலாஜா தேவி, ஜம்பினி, மோஹினி, காளி முதலான் முப்பத்திரண்டு சக்திகளை தோற்றுவித்தாள். இது மட்டுமா, மேலும் 66 சக்திகள் அளவற்ற கைகளோடும் ஆயுதங்களோடும் தோன்றினர்.
தேவி உருவாக்கிய இந்த சக்திகளால் அசுர சைன்யங்கள் சின்னாபின்னமாகின. பத்து நாட்கள் கடும்போர் நடந்தது.
பத்து நாட்கள் முடிவில், பதினோறாம் நாள், சிவப்பு நிற ஆடை, சிவப்பு நிற மாலை, சிவப்பு நிற சந்தனம் அணிந்து தேவியின் சக்திகளை வென்று, சதாக்ஷி தேவியின் ரதத்திற்கு எதிரிலே நின்று தேவியோடு இரண்டு ஜாமம் வரை மகா யுத்தம் புரிந்தான். பொங்கியெழுந்த அன்னை, அவனை நோக்கி ஐநூறு அம்புகளையும், அவன் குதிரைகள் மீது நான்கு அம்புகளையும், அவன் சாரதி, கொடிக்கம்பம், கண்கள் முதல்வற்றை நோக்கி பல அம்புகளை எய்தாள். முடிவில் அவன் மார்பை நோக்கி ஐந்து அம்புகளையும், அவன் தோளை நோக்கி மூன்று அம்புகளையும் எய்தாள். உடனே துர்முகாசுரன் உதிரம் சிந்தியபடி தேவியின் முன்னால் வீழ்ந்தான். அவன் உடலிலிருந்து புறப்பட்ட ஒரு ஜோதி தேவியின் திருமேனியில் கலந்து மறைந்தது.
எம்மை நம்பியவரை நான் ஒருபோதும் கைவிடுவதில்லை. இந்த சரித்திரத்தை எப்பொழுது படித்து வந்தாலும் நான் அகமகிழ்ந்து உங்களை ஆபத்திலிருந்து விலக்கிவிடுவேன்.
பிரும்மா, விஷ்ணு முதலானவர்களும் தேவர்களும் அஷ்டதிக் பாலகர்களும் அன்னை மீது பூமாரி பொழிந்தனர்.
தேவி சதாக்ஷி, மகிழ்ச்சியுடன் வேதங்களை அந்தணர்களிடம் ஒப்படைத்து அவர்களை ஆசீர்வதித்தாள்.
“அந்தணர்களே, தேவர்களே, எம்மை நம்பியவரை நான் ஒருபோதும் கைவிடுவதில்லை. இந்த சரித்திரத்தை எப்பொழுது படித்து வந்தாலும் நான் அகமகிழ்ந்து உங்களை ஆபத்திலிருந்து விலக்கிவிடுவேன். நான் துர்முகாசுரனை வதைத்தால் துர்கி என்று அழைக்கப்படுவேன். இந்த துர்கி என்ற பெயரையும், சதாக்ஷி என்ற பெயரையும் எவன் பக்தியுடன் உச்சரிக்கிறானோ அவன் மாயையை வெல்வான். அத்தனை பேறுகளையும் பெற்று இன்புற்று வாழ்வான்!” என்று ஆசி கூறிவிட்டு மறைந்தாள்.
வியாசர் சூதமாமுனிவரிடம் கூறிய தேவியின் இந்த புனித சரிதத்தை கேட்பவர், படிப்பவர், பிறருக்கு சொல்பவர் யாவரும் எல்லா நன்மைகளையும் பெற்று, சகல விருப்பங்களும் ஈடேறி தேவியின் உலகை அடைவார்கள்.
வியாசர் சூதமாமுனிவரிடம் கூறிய தேவியின் இந்த புனித சரிதத்தை கேட்பவர், படிப்பவர், பிறருக்கு சொல்பவர் யாவரும் எல்லா நன்மைகளையும் பெற்று, சகல விருப்பங்களும் ஈடேறி தேவியின் உலகை அடைவார்கள்.
================================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
================================================================
Also check :
எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? ஆடி ஸ்பெஷல் !
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
அன்னையின் அருள் வெளிப்பட்ட ‘தை அமாவாசை’ – திருக்கடையூர் கோவில் குருக்கள் கூறும் தகவல்கள்!
சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)
உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1
திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!
வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
================================================================
[END]
வாவ் … எவ்வளவு அழகிய ஆடி மாத சிறப்பு அட்டகாச பதிவு
அன்னையை பற்றிய கதையை இப்பொழுதான் தங்கள் தளத்தின் மூலம் அறிந்து கொள்கிறேன்.எனக்கு கண்டிப்பாக இறைவியின் பரிபூரண ஆசிகள் கிடைக்கும் . ஆடி மாத சிறப்பு பலன்கள் சிறப்பாக தொகுத்து அளித்துள்ளீர்கள்.
தின நாளிதழிலும், வார நாளிதழிலும் கூட காண முடியாத பல அறிய தகவல்களை நம் வாசகர்களுக்காக அளிக்கிறீர்கள். தங்கள் சேவை மேலும் மேலும் உயர அன்னை அருள் புரிவாள்.
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
வணக்கம்………..ஆடி சிறப்பு பதிவு நன்று………. சதாக்ஷி அன்னையின் அருளுக்கு நாங்கள் பாத்திரமானோம்……….நன்றிகள் பல…………
புனிதமான இந்த ஆடி மாதத்திற்கான இந்த பதிவு மிக அருமை. ஆடி மாதத்திற்குதான் எத்தனை பெருமை ! அம்பாளை பற்றிய இந்த தொகுப்பு வரவேற்கத்தக்கது. அம்பாளின் திருவடிகளை அனைவரும் போற்றுவோம்.
நன்றி சுந்தர் அவர்களே.
அன்னையின் மகிமையை படிக்க படிக்க ஆனந்தம் தான். இதுவரை கேள்விப்படாத கதை. கதைக்கேற்ற படம்.
சதாஷி தேவியின் படம் கொள்ளை அழகு. பதிவில் விளக்கியபோதிலும் அந்த வர்ணனையை ஓவியமாக பார்க்கும்போது மனதுக்குள் அன்னையின் உருவம் ஆழ பதிந்துவிட்டது.
அன்னைக்குரிய இந்த ஆடி மாதத்தில் அனைவரும் சுகமோடு வாழ சதாக்ஷி தேவியை பிரார்த்திக்கிறேன்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
வணக்கம் சுந்தர்.அருமையான ,கேள்விபடாத கதைக்கு நன்றி.சாகம்பரி,சதகிஷி .துர்முகி எல்லோர் விருபங்களை நிறைவேற்றட்டும் .அழகான படத்துக்கும் நன்றி.
அன்னை சதாக்ஷியின் அருளுக்கு நம் அனைவரையும் பாத்திரமாக்கிய சுந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி
அன்னையை இந்த மகிமை மிகுந்த ஆடி மாதத்தில் மனதார வேண்டிடுவோம்
அன்னையின் கடைக்கண் பார்வை நம் மீது பதியட்டும்
எண்ணங்கள் நிறைவேறி துன்பங்கள் அகன்று என்றென்றும்
இன்பம் இன்பம் இன்பம் மட்டுமே எங்கும் நிலைத்து இருக்கட்டும்
லோகா சமஸ்த்தா சுகினோ பவந்து
வாழ்க வளமுடன் !!!
மிகவும் நன்றி! மிகவும் நன்றாக இருந்தது இந்த கதை.
ஆடி ஸ்பெஷல் பதிவில் சப்த கன்னிகைகள் பற்றி தெரிந்து கொள்ள ஆசை. அதைப் பற்றியும் பதிவாக எழுதவும். எழுதுவீர்களா. ……….
போன வருடம் வரை ஆடி என்றால் தள்ளுபடி ஞாபகம் தான் வரும் . ஆனால் இப்பொழுது ஆடி என்றால் ரைட் மந்த்ராவின் ஸ்பெஷல் பதிவுகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
தெரிந்த ஆடி..ஆனால் தெரியாத சேதி என்று தான் சொல்ல வேண்டும். எவளோ செய்திகள்.அனைத்தையும் தொகுத்தமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா.
நான் என் நண்பரிடம் ஆடி மாதம் – நல்ல விஷயங்கள் செய்யலாமா? என்பது பற்றி கேட்டு.நம் தல பதிலை அளித்த போது “அடடே! என்று சொன்னார். என்ன சொல்வது? அவளோ தான் நம் பணி ? என்று நினைக்க வேண்டியது தான்.
அன்னையின் அருட்கதையை படித்தும், அன்னையின் தரிசனத்தை பார்த்தும் பரவசப்பட்டேன். படத்தை தரவிறக்க வழி கிடைக்குமா?
அன்னையே ! இந்த ஆடி வெள்ளியில் தங்களை தரிசிக்கும் வாய்ப்பு பெற்றோம். எங்களிடம் உள்ள ஆணவம்,கன்மம் மற்றும் மாயை அளித்து,தாங்கள் விரும்பும் அருட்பரிசினை எங்களுக்கு வழங்குங்கள்.
ஓம் சக்தி ..பரா சக்தி..
அன்னையே ! இந்த ஆடி வெள்ளியில் தங்களை தரிசிக்கும் வாய்ப்பு பெற்றோம். எங்களிடம் உள்ள ஆணவம்,கன்மம் மற்றும் மாயை அழித்து ,தாங்கள் விரும்பும் அருட்பரிசினை எங்களுக்கு வழங்குங்கள்.
ஓம் சக்தி ..பரா சக்தி..
Dear Mr.Sundar,
This is an article par excellence. ☆☆☆☆☆☆☆
Ranjini
Chennai.
அருமை… நன்றி…