Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > மகா பெரியவா யார்? பரமேஸ்வரனா, பரந்தாமனா?? – குரு தரிசனம் (43)

மகா பெரியவா யார்? பரமேஸ்வரனா, பரந்தாமனா?? – குரு தரிசனம் (43)

print
ஹா பெரியவாள் ஸ்ரீ பரமேஸ்வரனின் அம்சம் என்று கூறுவதுண்டு. ஆனால் அவர் பரந்தாமனின் அம்சம் என்பதே நமது கருத்து. அதை மெய்பிபப்து போல சில சம்பங்களை இந்த வார குரு தரிசனத்தில் பார்ப்போம். இறுதியில் இது தொடர்பாக எழக்கூடிய சந்தேகங்களுக்கும் நமது சிற்றறிவுக்கு எட்டிய விளக்கங்களை கொடுத்துள்ளோம். நன்றி.

Kanchi Varadharaja perumal

“பெருமாளுக்கு இன்னைக்கு நைவேத்தியம் ஏன் செய்யலே?”

மகா பெரியவாள் தேனம்பக்கதில் தங்கியிருந்தார்கள். ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் சீமா பட்டச்சாரியரை அழைத்து வரும்படி ஆக்ஞையிட்டார்கள்.

அவரும் வந்து வந்தனம் செய்தார்.

“இன்னைக்கு என்ன திதி?”

பட்டர் மெதுவாக “ஏகாதசி” என்றார்.

“உபவாசம் நமக்கு மட்டும் தானா? இல்லை வரதனுக்கும் தானா?”

பட்டர் திகைத்துப் போய் நின்றார்.

“பெருமாளுக்கு இன்னைக்கு நைவேத்தியம் ஏன் செய்யலே?”

அதிர்ச்சியடைந்த பட்டர்…. “தெரியலே… விசாரிச்சிண்டு வர்றேன்…” என்று கலவரத்துடன் கோவிலுக்கு திரும்பிச் சென்றார்.

விசாரித்ததில் உள் அகத்தில் ஏதோ தவறு நடந்துள்ளது என்று விசாரணையில் தெரிய வந்தது. அதைச் சரிப்படுத்தி தக்க பிராயச்சித்தம் செய்து, பெருமாளுக்கு திருவமுது படைத்து, பிரசாதத்தை பெரியவாளிடம் கொண்டு வந்து சேர்த்தார் பட்டர்.

வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியம் நடக்கவில்லை என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? தெரிந்திருந்தாலும் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவானேன்?

தேவரகசியம் என்கிறார்களே…? இது தானோ?

இல்லை, இது தேவராஜ ரகசியம்!

(வரதராஜருக்கு தேவராஜன் என்கிற திருநாமம் உண்டு!)

******************************************************************************************

ஸ்ரீவேணுகோபாலர் உணர்த்திய பேருண்மை!

சீமா பட்டரின் சொந்த அனுபவம் அலாதியானது.

வரதர் கோவிலில் பிரம்மோத்ஸவம். ஆறாம் நாள். பெருமாள் ஸ்ரீவேணுகோபாலனாக சேவை சாதித்துக் கொண்டிருந்தார். அதி அற்புதமான அழகு.

ஸ்ரீமடம் எதிரில் வேணுகோபாலர் எழுந்தருளி நின்றார். பெரியவாள் பக்தி பரவசத்துடன் பரமனை தரிசித்துக்கொண்டிருந்தார்கள்.

சீமா பட்டர் பெரியவாளை பார்த்தார். திடீரென்று அவரை காணவில்லை. சாட்சாத் வேணுகோபால மூர்த்தியே அங்கு நின்றுகொண்டிருந்தது. ஷண நேர அற்புதத்தை தாங்காமல் பட்டர் திணறிப்போனார். பரவசத்தில் தோய்ந்தார்.

பெரியவாள் தன் ஸ்வய ஸ்வரூபத்தை பட்டருக்கு மட்டும் நொடிப்பொழுதில் காட்டி பெரும் தத்துவத்தை உணர்த்திவிட்டார்களோ?

================================================================

Also check : Success Stories where our Rightmantra Prayer Club prayers (சந்தான ப்ராப்தி, உத்தியோக ப்ராப்தி, ருண விமோசனம் etc. etc.) are answered….

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

================================================================

Periyava with jeeyar

விசிறியில் புலப்பட்ட பண்பு!

ஒரு முறை பெரியவாள் தரிசனத்துக்காக போன போது பெரியவாளுக்கு சமர்பிப்பதற்காக, வெல்வெட் துணியில் விசிறி தயாரித்து எடுத்துச் சென்றோம். ஓரங்களில், மயில் இறகுகள், நடுப்பகுதியில் ஜரிகையால் செய்யப்பட்ட சங்கு வடிவம் ஒரு புறம் மறுபுறம் ஸ்ரீ சக்கரம்.

பெரியவாள் விசிறியை வாங்கி வைத்துக்கொண்டார்கள். அதனை மனமுவந்து ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக ஓரிருமுறை கூட விசிறிக்கொள்ளவும் செய்யவில்லை.

“நீங்க, எப்போ, எப்படி ஊருக்கு போவேள்?”

“காலையில் புறப்பட்டு திருச்சி வழியாக புதுக்கோட்டை போவோம்…”

“திருச்சிக்கு பக்கத்திலே தான் ஸ்ரீரங்கம். அங்கே ஜீயர் ஸ்வாமிகள் இருக்கார். அவரிடம், இந்த விசிறியை, நான் கொடுத்ததாக சொல்லி கொடுத்துட்டு அப்புறம் புதுக்கோட்டை போங்கோ”

ஸ்ரீரங்கம் சென்று நாங்கள் விசாரித்தபோது, ஜீயர் ஸ்வாமிகள் கோவிலிலுள்ள தசாவதார சன்னதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

தசாவதார சன்னதியில் கொஞ்ச நேரம் காத்து நின்றோம். பின்னர், ஸ்ரீஸ்வாமிகள் எங்களை அழைப்பதாக ஒரு சிஷ்யர் வந்து தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம் தெற்கு கோபுரம் கட்டிய அவர்கள் ஒரு பழுத்த பழமாக அமர்ந்திருந்தார்கள்.

நாங்கள் சேவித்துவிட்டு, “இந்த விசிறியை, காஞ்சி பெரியவா தங்களிடம் செர்பிக்கச் சொன்னார்கள்.” என்று கூறி, விசிறியை அவர்கள் திருமுன் வைத்தோம். அவர்கள் அதை எடுத்து, கண்களில் ஒற்றிக்கொண்டு, அருகில் வைத்துக்கொண்டார்கள்.

பெரியவா தயவில், ஒரு வைஷ்ணவ ஆச்சார்யரின் தரிசனமும் கல்கண்டு பிரசாதமும் கிடைத்தன.

(மேற்கூறிய மூன்று அனுபவங்களும் : திரு.டி.எஸ்.கோதண்டராம சர்மா தொகுத்தளித்த மகா பெரியவாள் தரிசன அனுபவங்களில் காணப் பெற்றது.)

******************************************************************************************

Periyava thinkingசில சந்தேகங்கள் சில விளக்கங்கள்…

1) பெரியவா சிவஸ்வரூபம் என்று தான் சொல்வார்கள். மேற்கூறிய இந்த அனுபவங்களை படித்தால் அவர் ஸ்ரீமந்நாராயணனின் அம்சம் போல தெரிகிறதே….?

ரைட்மந்த்ரா பதில் : மகாவிஷ்ணு ஒவ்வொரு முறையும் அவதாரம் எடுக்கும்போதும், சிவபெருமானின் அம்சமாக தோன்றுபவர்கள் அவருக்கு நாராயண சேவை செய்வார்கள். உதாரணத்துக்கு : ராமாவதராரத்தில் அனுமன். அனுமன் ருத்ரனின் அம்சம். கிருஷ்ணாவதாரத்தில் ருத்ரனின் அம்சமாக பீமசேனன் தோன்றி நாராயண சேவை செய்தான். பதிலுக்கு பதில் செய்யவேண்டாமா? எனவே கலியுகத்தில் மகா பெரியவாள் ஸ்ரீமன்நாராயணனின் அம்சமாக தோன்றி ஸ்ரீமடத்தில் அமர்ந்து ருத்ர சேவை செய்தார் என்பது நம் தாழ்மையான அபிப்ராயம். ஏனெனில், மகா பெரியவா தொடர்புடைய பல்வேறு மகிமைகளை அற்புதங்களை படிக்கும்போது கேள்விப்படும்போது இந்த உண்மை நமக்கு புலப்பட்டது. இதே போல யாருக்கேனும் தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறோம்.

2) அப்படி அவர் நாராயண ஸ்வரூபம் எனில், ஸ்ரீமடத்துக்கு வரும்போது ஸ்ரீவேணுகோபாலர் எழுந்தருளி நின்றது ஏன்? பெரியவா வெளியே வந்து அதை தரிசித்தது ஏன்? தன்னைத் தானே யாரேனும் தரிசித்துக்கொள்வார்களா? இதில் உள்ள சூட்சுமம் என்ன?

ரைட்மந்த்ரா பதில் :  நாம் அலங்காரம் செய்துகொண்டு புறப்படுகிறோம். புறப்படும் முன், கண்ணாடி முன் நின்று அலங்காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வதில்லையா? அதுப் போலத் தான் இது. ஸ்ரீமடத்தில் இருக்கும் தனது பிம்பத்திடம் அலங்காரத்தை சரிப்பார்த்துக்கொண்டு வேணுகோபாலர் புறப்பட்டிருக்கிறார். சீமா பட்டரின் அனுபவம் நமக்கு இதையே உணர்த்துகிறது.

3) கடைசி அனுபவத்தில் விசிறியை ஜீயருக்கு கொடுத்ததில் கூட இது பற்றி ஏதேனும் HINT இருக்கிறதா?

ரைட்மந்த்ரா பதில் : பொதுவாக பெரியோர்களிடம் (தாய்மை குணம்) ஒரு பொருள் கொடுத்தால், அதை தனக்காக வைத்துக்கொள்ளாமல் தனது அன்புக்குரியவர்களிடம் அது கொடுத்து அழகு பார்ப்பதில்லையா? தெய்வாம்சத்திற்கு அப்படி தோன்றியதில் வியப்பில்லையே! திருவரங்கத்தில் தெற்கு கோபுரம் எழுப்ப காரணமான ஜீயரிடம் தனக்கு வழங்கப்பட்ட பரிசு போய் சேரவேண்டும் என்று பரம்பொருள் கருதியிருக்கலாம். எனவே சங்கு சக்கரம் பொரித்த விசிறியை தனக்கு பிரியமானவரிடம் அன்புப் பரிசாக சேர்பித்துவிட்டது.

================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

================================================================

கர்மவீரர் காமராஜர் மகா பெரியவாவை சந்தித்த போது

Also check : ஞானசூரியனும் தியாக சூரியனும் சந்தித்தபோது….! காமராஜர் B’DAY SPL 1

================================================================

எல்லா பிரச்சனைகளுக்கும் சேர்த்து ஒரே பதிகம் / ஸ்லோகம் இல்லையா?

எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

================================================================

Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…

‘சில சமயம் பகவான் மீதே கோபம் வருகிறதே?’ – தெய்வத்திடம் சில கேள்விகள்! (Part II)

“தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி?” தெய்வத்திடம் சில கேள்விகள்!

தெய்வத்தின் குரலில் தெய்வக் குழந்தையின் வரலாறு!

தர்மம் தழைக்க தோன்றிய தயாபரன் – மகா பெரியவா ஜயந்தி Spl & Excl.Pics!

எது நிஜமான பக்தி?

“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு!” – குரு தரிசனம் (37)

தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)

மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)

நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)

அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு!  குரு தரிசனம் (33)

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!!  குரு தரிசனம் (32)

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

================================================================

Also check short series on Kalady & Sornaththu Manai :

சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)

வையம் செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)

சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)

பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

================================================================

[END]

12 thoughts on “மகா பெரியவா யார்? பரமேஸ்வரனா, பரந்தாமனா?? – குரு தரிசனம் (43)

  1. Dear Sundarji,

    Maha Deiyvam Sir, antha Maha Periyva. Kan Kanda Kaduvalu அவர்.

    I am Crying after read this Article.

    Maha Periyva Thiruvadi Sarananam.

    Narayanan.

  2. அருமை.. அருமை … மகா பெரியவரும். ஜீயர் சுவாமிகளும் … இரண்டு மகான்களையும் பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சி. ஹரியும் … சிவனும் ஒன்று,

    கேள்வி பதில் விளக்கம் சிம்ப்ளி சுபெர்ப். மொத்தத்தில் அட்டகாசமான …குரு தரிசனம்

    மகா பெரியவா சரணம்

    வாழ்க .. வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  3. மகாபெரியவாளும் ஜீயரும் இணைந்து தரிசனம் தரும் இந்த புகைப்படம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பெரியவாளுக்கு இணை பெரியவா மட்டும்தான். கேள்விகளும் அதற்கு தாங்கள் அளித்திருக்கும் விளக்கங்களும் மிக பொருந்தும்.

    குருவின் திருவடிகளுக்கு நமஸ்காரம்.

  4. Paranam Sundar Ji,

    Very true. Our Maha Periyava is paranthaman only. Atleast I have no doubt in this. Even Angarai Periyava (one among 4, refered as Mahan by our Periyava itself) whose adhishtanam is in Pazhur -Trichy, always refer Maha Periyava is non other than Guruvayurappan itself.

    Interestingly Angarai Periyava took sanyasam from Maha periyava Padhuga and he is a stange devotee of Guruvayurappan.

    Thanks,
    Rajaraman A

  5. சுந்தர்ஜி
    மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு! உண்மையில் பெரியவா சிவா அம்சம் என்ற வகையிலே தான் அடியேன் பார்த்து வந்தேன்! ஆனால் இந்த பதிவை பார்த்த பின் நாராயணன் பெரியவா ஒற்றுமை புரிகிறது! ஏன் அவர் நிறைய பக்தர்களை ராம நாமம் சொல்லுவதை மற்றும் ஸ்ரீராமஜெயம் எழுதுவதை ஊக்குவித்தார் எனவும் புரிகிறது !
    அவர் விஷ்ணு அம்சம் எனும்போது காமாட்சி அம்பாளின் அம்சமும் அதில் வந்துவிடுகிறது ! அவர் சந்திரமௌலி பூஜா செய்யும் போது ஸ்ரீமன் நாராயணன் அல்லது அம்பாள் சிவபூஜை செய்வது போல் எனக்கும் மனதில் கற்பனை செய்ய தோன்றுகிறது ! இனிய பதிவினை பகிர்ந்த தங்களுக்கு பெரியவா பாதம் வணங்கி என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் !

  6. குருவே சரணம்………… நம் குருதேவர் இன்னாருடைய அம்சம் என்று என்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை…. அவரவருடைய இஷ்ட தெய்வத்தைப் போல் குருதேவர் காட்சியளித்திருப்பதாகவே தோன்றுகிறது…….ஆனால் ஒன்று மட்டும் உண்மை……. அவர் கண் கண்ட கடவுள்………

    அடியவளுக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்……….

    கடந்த ஜூன் 2 , மஹா பெரியவா ஜெயந்தியன்று குழந்தைகளுடன் காஞ்சி மடம் சென்றிருந்தேன்……. குருவை தரிசித்து விட்டு மறுநாளிலிருந்து குழந்தைகளுக்கு பள்ளி தொடங்கவிருந்ததால் அவர்களுக்கும் ஆசி பெற்று வரலாம் என்ற விருப்பத்துடன்………. குருதேவரின் ஜெயந்தி தினம் ஆகையால் அளவில்லா கூட்டம்…… குழந்தைகளை ஓரமாக நிற்க வைத்துவிட்டு நான் மட்டும் எப்படியோ கூட்டத்தில் புகுந்து கையிலிருந்த தாமரை மலர்களை அதிஷ்டானத்தில் சேர்த்து விட்டு மனக்குறையுடன் திரும்பி காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றோம்……..

    அங்கு காமாட்சி அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் கையில் வீணையுடன் அருமையான தரிசனம் தந்தார்………..ஏதோ நாங்கள் வருந்தக் கூடாது என்பதற்காகவே அம்மன் சரஸ்வதி தேவியாக எங்கள் குழந்தைகளுக்கு ஆசி வழங்கியதாக ஒரு திருப்தி ஏற்பட்டது…… கூடவே பிரசாதத்துடன் தாமரை மலரும் கிடைத்தது……..என் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை…… பெரியவா அதிஷ்டானத்தில் சமர்ப்பித்த மலர் இங்கு பிரசாதமாக கிடைக்கிறதே என்று……… அன்றிலிருந்து காமாட்சியும் காஞ்சிப் பெரியவரும் ஒருவரே என்ற எண்ணம் வலுத்து விட்டது………..

    நன்றி………….

    1. மிக அருமை. பெரியவா அவரவர் இஷ்ட தெய்வம் போல அவரவர்க்கு காட்சி தருகிறார். அதே சமயம் அவர் இயல்பில் நாராயண ஸ்வரூபம் என்பது அடியேன் கருத்து.

  7. வணக்கம் சுந்தர். திரு தாமரை வெங்கட் அவர்கள் கூறிய கருத்தே என் எண்ணமுமாக இருக்கிறது.படிக்க படிக்கச் திகட்டதாவை பெரியவை பற்றிய சம்பவங்கள்.புகைப்படங்களும் அருமை. நன்றி

  8. நம் தளத்திற்கு வருவதற்கு முன் “மகா பெரியவா” என்று வார்த்தை அளவில் தான் எனக்கு தெரியும். ஆனால் இப்போது தான் கண் கண்ட தெய்வம் மகா பெரியாவின் மகிமைகளை அறிந்து வருகிறேன். என்னை இந்த புனித பயணத்தில் இணைத்தமைக்கு நன்றி.

    முன்று நிகழ்வுகளையும்,அதனையொட்டிய கேள்வி -பதில் மூலம் எங்கள் தெளிவாக்கியது சிறப்பு.

    தேடல் தொடரும்- பரமேஸ்வரான மகா பெரியவா

    மகா பெரியவா பாத சரணம்.

  9. மஹா பெரியவர் சிவ சொரூபமாகவும் சில சமயங்களில் மாதவனின் மறுவுருவமாகவும் அன்பர்களுக்கு அருள் பாளித்துள்ளார் என்பதை மேலே கூறப்பட்டுள்ள சம்பவங்கள் வாயிலாக அறிய முடிகிறது

    ராமேஸ்வரத்தில் கூட ஸ்ரீ ராமர் சிவலிங்க பூஜை செய்து வழிபட்டிருக்கிறார்

    சந்தேகங்களும் விளக்கங்களும் பகுதியில் மஹா பெரியவரின் புகைப்படம் மிகபொருத்தமாக உள்ளது

    ஈஸ்வரோ மனுஷ ரூபேண – அவர் இப்போவுலகில் அவதரித்து நம்மோடு வாழ்ந்த நாட்களும், அத்தகைய காலகட்டத்தில் அவரோடு இருக்கும் பேரு பெற்றவர்களும் மஹா பாக்யசாலிகள்

    ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர !!!

  10. வணக்கம் சுந்தர் சார்,

    நான் மஹா பெரியவாவை உங்களால தான் கும்பிட ஆரம்பிச்சிருக்கேன்… இந்த அற்டிகில் படிக்கும்போது நான் இத்தனை நாள் வேஸ்ட் பண்ணினதுக்காக வெட்க படுகிறேன்… எப்படியும் சமயத்தை ஒதுக்கி பெரியவாவை பத்தின புக் வாங்கி படிக்கச் ஆசை வந்திருகிறது….மிக்க நன்றி… நீங்கலும் உங்கள சார்தவங்களும், ரைட்மந்திரவும்… நாலா இருக்கனும். என்னால இந்த வெப்சைட் பார்க்க நிறைய டைம் ஒதுகமுடியல… அதனால ஒரு சின்ன வேண்டுகோள்… ரைட்மந்திர புக்கும் பப்ளிஷ் பண்ணிநீகன நல்ல இருக்கும்…அந்த பெருமாள் படம் சூப்பர்….நீங்க புக் பப்ளிஷ் பன்னுநீங்கான அதுல நிறய பெரிய சாமி படங்கள் போடவும்…

    நன்றி
    பிரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *