Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, June 18, 2024
Please specify the group
Home > Featured > கோத்திரம் தெரியாதவர்களுக்கு என்ன கோத்திரம்? வழிகாட்டும் மகா பெரியவா!!

கோத்திரம் தெரியாதவர்களுக்கு என்ன கோத்திரம்? வழிகாட்டும் மகா பெரியவா!!

print

கா பெரியவா தான் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ பேருக்கு எத்தனையோ விஷயங்களில் தீர்வு சொல்லியிருக்கிறார். சாஸ்திர சம்பிரதாயங்களை கரைத்து குடித்தவர் மட்டும் அல்ல, ஜோதிடமும் நன்கு அறிந்தவர் பெரியவா.  குருவார்த்தையே அருமருந்து அல்லவா?

பையனுக்கு என்ன கோத்திரம்?

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி, இரண்டு பையன்கள், ஒரு பெண்.

மகா சுவாமிகளிடம் அபார பக்தி.

பெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறை, குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். மின்னல் வேக தரிசனம் இல்லை. ஓரிரு நாள்கள் தங்கி, பெரியவாளின் நெருக்கத்தை நிதானமாக அனுபவித்து விட்டுத்தான் போவார்.

”இந்தப் பையனுக்கு ஒன்பது வயசாயிடுத்து. உபநயனம் நடத்தணும்” என்று பெரியவாளிடம் விக்ஞாபித்துக் கொண்டார், ஒரு முறை.

”செய்யேன்…”

”பையனின் கோத்திரம் – சூத்திரம் தெரியல்லே…”

பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள்.

”உன்னோட பையன்தானே?”

“இல்லை! பையனின் கர்ப்பவாச காலத்திலேயே தகப்பனார் சிவலோகம் போய்ச் சேர்ந்தார். இரண்டு மாதக் குழந்தையை விட்டுவிட்டுத் தாயாரும் போய்ச் சேர்ந்து விட்டாள். கிராமத்தில் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்?

”நாங்கள் குழந்தையை எடுத்துண்டு வந்தோம். ஊர், பெயர், பந்து, ஜனங்கள் தெரியலை. திருநெல்வேலி பக்கம் ஏதோ அக்ரஹாரம் என்று மட்டும் கேள்வி…”

பெரியவாள் முகத்தில் அசாதாரணமான புன்னகை. அருகிலிருந்த தொண்டர் கண்ணனிடம், ”பாரு… ஓர் அநாதைக் குழந்தையை எடுத்துண்டு வந்து, வளர்த்து, பூணூல் போடப் போறார்! என்ன மனஸ், இவருக்கு…”

கண்ணன் சொன்னார்: ”அவரோட சொந்தப் பிள்ளைனுதான் நாங்களும் நினைத்துக் கொண்டிருக்கோம்!”

பெரியவாள் மனசுக்குள்ளே ஆனந்தப்பட்டுக் கொண்டு சொன்னார்கள்: ”கோத்திரம் தெரியாதவர்களுக்கு, காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு, போதாயன ஸூத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கேன். அது மாதிரி சொல்லிப் பூணூல் போடு. ஆனா, குழந்தையை அந்நியமா நினைச்சுடாதே. உன் பையன்தான்.”

பிரசாதம் பெற்றுக் கொண்டு மன நிறைவுடன் நகர்ந்தார்கள்.

==========================================================

Don’t miss this…

‘ஆண்டவன் பிச்சி’ என்னும் அதிசயப் பிறவி – கந்தசஷ்டி SPL 3!

திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன பெரியவா!

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!

==========================================================

ஜட்ஜ்மெண்ட் வந்துடுத்து!

ஞ்சாவூர் மாவட்டம் பதினெட்டு கிராம வாத்திமர் குடும்பம் .செல்வச் செழிப்பு , ஈசுவர ஆராதனை , பெரியவாளிடம் பக்தி.

ஜாதகம் பார்த்து , பெண் பார்த்து , விமர்சையாக விவாஹம் நடந்தேறியது . மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கை .

எந்த கிரகம் இடம் பெயர்ந்ததோ ?

சாதாரணமாகத் தோன்றிய கசப்பு , விவாகரத்து வரை வந்து விட்டது .

விசாரணைகள் , ஆலோசனைகள், மறு ஆய்வுகள் …

ஊஹீம் .

நாளைக்குத் தீர்ப்பு .

பெண்ணும் பெற்றோரும் , பெரியவா தரிசனத்திற்கு வந்தார்கள் . “காமாக்ஷி தரிசனம் பண்ணிட்டு வாங்கோ “

சிறுது நேரத்துக்கு பின்னர் பையனும் பெற்றோரும் வந்தார்கள் .பெரியவருக்கு தொண்டையை அடைத்து கொண்டது .

“நாளைக்கு ஜட்ஜ்மெண்ட்…”

“காமாக்ஷி தரிசனம் பண்ணிட்டு வாங்கோ ….”

கோவிலில் ஏராளமான கூட்டம் அத்துடன், பக்தி பூர்வமான நிலையில் தரிசனம் செய்ய யாரும் இல்லை .’பெரியவா சொல்லிட்டா ; அதனால் வந்தேன்.’

ஸ்தானீகர் அர்ச்சனை செய்து விட்டு , ப்ரசாதத் தட்டை கொண்டு வந்தார் : ‘சேர்ந்து வாங்கிக்கோங்கோ .’

சேர்ந்து ?

“நான் … தனியாத்தான் வந்தேன்.’

சட்டென்று தலை நிமிர்த்த போது, அவர்… அவள் ….

“சேர்ந்து வாங்கிக்கோங்கோ …’ மறுபிடியும் !

காமாக்ஷியின் ஆணையா ?

கோவிலிலிருந்து வெளியே வந்த போது , இரண்டு குடும்பத்து பெரியவர்களும் நேருக்கு நேர் பார்த்து கொண்டார்கள் . பேசிக் கொண்டார்கள் .

விவாகரத்து, ரத்து ஆகிவிட்டது .

காமாக்ஷியல்லவா, ஜட்ஜ்மெண்ட் கொடுத்திருக்கிறாள் !

பெரியவா திருவடிகளில் விழுந்து எழுந்தார்கள் .

“ஜட்ஜமெண்ட் வந்துடுத்து போலிருக்கே ?”

எவ்வளவு புஷ்டியான சொற்கள் !

“எழுதினது பெரியவாதானே !” என்று அந்த இளம் தம்பதி நினைத்து கொண்டிருக்க மாட்டார்களா ?

==========================================================

Don’t miss this…

அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

விதி என்னும் விளையாட்டு பொம்மை மதியை எப்படி ஆட்டிப்படைக்கிறது?

“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!

கடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி!

==========================================================

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்…

ஐந்து வயதுக் குழந்தையுடன் வந்து பெரியவாளை நமஸ்காரம் செய்தனர் தம்பதியர்.

”விஜயதசமி அன்னிக்கு அக்ஷராப்யாசம் செய்யணும்… நவராத்திரியின்போது, வீட்டை விட்டு வர முடியாது. பெரியவா அனுக்ரஹம் செய்யணும். குழந்தைக்குப் படிப்பு நன்றாக வரணும்…” என்று தம்பதியர் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

தகப்பனார் மிகவும் பவ்யமாக ”பெரியவா…! ஏதாவது ஒரு வார்த்தை… குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கணும்” என்று குழைந்தார்.

பெரியவர் குழந்தையைத் தன் அருகில் அழைத்தார்கள். ”சொல்லு… வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது… பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. இது ஒளவை பாட்டி பாடினது, தெரியுமா? தினம் சொல்லு…” என்று கூறிக் கல்கண்டு கொடுத்து அனுப்பினார்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சில தமிழறிஞர்களும் இருந்தார்கள். பெரியவர் வடமொழியின்பால் பெரும்பற்றுக் கொண்டவர்கள் என்ற கருது பரவியிருந்ததால் (மூஷிக வாஹன… என்பது போன்ற) ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, ‘வாக்குண்டாம்…’ என்று திருவாய் மலர்ந்தருளியதால் தமிழறிஞர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்

”இது எங்களுக்கு ஓர் உபதேசம் மாதிரி; இனிமேல் எங்கள் வீடுகளில் வாக்குண்டாம்தான் முதல் பாடம்” என்று உள்ளார்ந்த பூரிப்புடன் பெரியவர்களிடம் தெரிவித்துக் கொண்டார்கள்.

– ஸ்ரீமடம் பாலு | ‘காஞ்சி மகான் தரிசனம்’

Rightmantra is now available in android. Go to google playstore and type ‘rightmantra’ and download our app.

==========================================================

Don’t miss this…

ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?

குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?

திரிபுரசுந்தரிக்கு செய்த உழவாரப்பணியும் அது அள்ளித்தந்த உற்சாகமும்!

==========================================================

நல்வாழ்வுக்கு சில டிப்ஸ் – 31

நமது பதிவுகளின் ஊடே அவ்வப்போது டிப்ஸ் அளித்து வருவது தெரிந்ததே.

படுக்கை முறை!

படுப்பது அதாவது தூங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இரவு படுக்கும் பலர் காலை விழிப்பதில்லை என்னும் நிலையாமை உடையது இவ்வுலகு.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339)

என்று சும்மா வள்ளுவர் கூறவில்லை.

படுப்பதிலும் கூட சாஸ்திரம் இருக்கிறது.

ஆண்களோ பெண்களோ அவர்கள் தூங்கும் அறையில் மெலிதான வெளிச்சம் இருக்கவேண்டும். கும்மிருட்டில் படுக்கவேகூடாது. கும்மிருட்டில் படுத்தால் தரித்திரம் பீடிக்கும். ஒரு ஜீரோ வாட்ஸ் பல்பாவது எரிவது அவசியம்.

வடக்கில் தலை வைத்துப் படுப்போர் காலையில் எமன் மூலை நோக்கி விழிப்பர், அதனால் உடல் நலம் கெடும். வடக்கு தெற்கில் மின்காந்த அலை இருப்பதால்  வடக்கே தலைவைத்துப்  படுக்கக்  கூடாது.

கிழக்கில் தலை வைத்து படுத்தால் ஐசுவரியம், தெற்கே தலை வைத்து படுத்தால் தனவிருத்தி ,ஆயுள், மேற்கே தலை வைத்தால் கீர்த்தி, புகழ், தான் இருக்குமிடத்தில் தெற்கேயும் , மாமியார் வீட்டில் கிழக்கேயும், வெளியூர் யாத்திரையில் மேற்கேயும் தலை வைத்து படுக்க வேண்டும் . வீட்டில் முன்புறம் வாழை மரம், முருங்கைமரம் இருக்கலாகாது.

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us. ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

For more information click here!

==========================================================

Also check –

ரைட்மந்த்ராவின் ஆலய தரிசனப் பதிவுகள் 

விபீஷண பட்டாபிஷேகம் நடந்த ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் – ஒரு நேரடி தரிசனம்!

நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!

திரிபுர தகனமும், கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில் சிறப்பும்!

பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!

எங்கு பார்த்தாலும் பிள்ளையார் – பிரமிக்கவைக்கும் ஒரு சோடச கணபதி தலம்!

==========================================================

Also check our earlier articles on Maha Periyava

பித்து பிடித்த உலகில் எந்த பித்தனுக்கு வைத்தியம் தேவை? – பெரியவா காட்டும் வழி!

திருப்பராய்த்துறையும் வான் மழையும்!

நடக்க முடியாதவருக்கு நாடிச் சென்று அருள்புரிந்த மகா பெரியவா!

காலனை திருப்பி அனுப்பிய காஞ்சி மகான் – நெரூரில் நடந்த அற்புதம்!

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வாராயோ….!

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்… பவித்ராவின் அண்ணனுக்கு பேச்சு வந்த கதை!!

இந்த குரு பார்க்க கோடி நன்மை உண்டு!

குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும் – குரு பூர்ணிமா SPL

“கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை!

தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!

பெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்!

காற்றை நிறுத்திய காத்தவராயன்!

”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!

தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *