Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, May 20, 2024
Please specify the group
Home > Featured > “கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை!

“கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை!

print
வானில் உள்ள நட்சத்திரங்களை கூட எண்ணிவிடலாம். ஆனால் மஹா பெரியவா தன் பக்தர்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை மட்டும் எண்ணமுடியாது. தோண்ட தோண்ட வைரச்சுரங்கம் போல வந்துகொண்டேயிருக்கும். (எது அசல் எது நகல் என்று கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம்!)

கீழ்கண்ட அனுபவம், அசல் மட்டும் அல்ல நமக்கு பாடமும் கூட. மனிதர்கள் நன்றி மறப்பார்கள். ஆனால், மகான்கள் மறப்பதில்லை. தெய்வமும் மறப்பதில்லை.

பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது (குறள் # 103)

இந்தப் பதிவை படிக்கும்போது உங்களையுமறியாமல் கண்களில் நீர் பெருகி வழிந்தால், நாம் அனைவரும் ஓர் இனமே! அவரது அனுபவங்களை படித்து இன்புறுவதோடு அவரது உபதேசங்களை கூடிய மட்டும் நடைமுறைப்படுத்த முயற்சிப்போமாக!!

பெரியவா சரணம்!!!

– ரைட்மந்த்ரா சுந்தர்

==========================================================

நரம்பு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷேஷ பிரார்த்தனை!

நமது தளத்தின் பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பிக்கப்பட்டு அது நிறைவேறிய அனுபவங்கள் மேலும் இரண்டு கிடைத்துள்ளது. விபரங்கள் பின்னர். இதற்கிடையே நமது தளத்தில் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஷேஷ பிரார்த்தனை கிளப் பதிவு அளிக்கப்படவிருக்கிறது. பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜா குருக்கள் அந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவுள்ளார். எனவே நரம்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ள வாசகர்கள் தங்கள் பிரார்த்தனையை அவரவர் பெயர், ராசி, நட்சத்திரத்துடன் சற்று விரிவாக நமக்கு அனுப்பவும். உங்கள் அலைபேசி  எண்ணை மறக்காமல் குறிப்பிடவேண்டும்.

நாம் நேரில் சென்று பிரார்த்தனையை சமர்பித்துவிட்டு அர்ச்சனை செய்துவிட்டு வருகிறோம். நீங்களும் ஒரு முறை நேரில் சென்று விபரங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

சோளீஸ்வரரை தரிசிக்க செல்பவர்கள் அதே தெருவில் கடைசியில் இருக்கும் வைகுண்டப் பெருமாளையும் தரிசிக்கலாம். அதுவும் புனரமைக்கப்பட்ட ஒரு தொன்மை வாய்ந்த வைணவ ஆலயம். ஸ்த்ரீ தோஷ நிவர்த்தி தலம் அது. (அக்கோவில் பற்றி இதே மாதிரி ஒரு ஆலய தரிசனப் பதிவு விரைவில் வரும்!)

நரம்பு தொடர்பான பிரார்த்தனை கோரிக்கையை வரும் 20/07/2016 க்குள் editor@rightmantra.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். சந்தேகங்களுக்கு நம்மை தொடர்புகொள்ளலாம். அலைபேசி : 9840169215.

இது தொடர்பான ஆலய தரிசன பதிவுக்கு : சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!

சென்ற பிரார்த்தனை கிளப் பதிவுக்கு : திருவாசகம் கேட்டு பிறந்த குழந்தை! – Rightmantra Prayer Club

==========================================================

மடத்துக்கு உழைத்தவர்களை நினைச்சுண்டாலே புண்ணியம்!

1907ல் மகாசுவாமிகள், பீடாதிபதியாகப் பட்டம் ஏற்றார்கள். அப்போது ஸ்ரீமடம், கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்தது. ஸ்ரீமடத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது. முறையான வருமானம் இல்லாததாலும் ஸ்ரீமடத்தின் பூஜைப் பணிகளின் திட்டத்தை குறைத்துக் கொள்ள முடியாததாலும் அவ்வப்போது சில செல்வந்தர்களிடம் கடன் வாங்கும் நிலை இருந்து வந்தது.

Maha Periyava

சிப்பந்திகளுக்கு, சம்பளம் என்று பெருந்தொகை கொடுப்பது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஜகத்குருவிடம் இருந்த பக்தி காரணமாகவே, பலர் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்கள். ‘இது ஒரு புண்ணிய கைங்கர்யம் என்ற மனப்பான்மை. அந்தக் காலத்தில் வருமானத்தில் கண் வைக்காமல், ‘புண்ணிய பேறு’ என்ற மனப்பக்குவத்துடன் கணேசய்யர் என்பவர் சமையல் துறையை கவனித்துக் கொண்டிருந்தார். சமைப்பது அடியார்களுக்கு சாப்பாடு போடுவதும் தான் அவருக்குத் தெரிந்த வேலைகள். அப்போது நிகழ்ந்த ஒரு மகாமகத்தின்போது தான் ஒன்றியாகவே ஆயிரம் பேர்களுக்குச் சமையல் செய்து போட்டிருக்கிறார் என்றால் அவருடைய தியாகத்தையும் கடமை உணர்ச்சியையும் எவ்வாறு புகழ்வது?

வருடங்கள் கழிந்தன.

ஸ்ரீமடம், காஞ்சிபுரத்துக்கு வந்தாயிற்று. மக்கள் ஆதரவும் கணிசமாகக் கிடைத்தது. நிர்வாகத்தில், முற்போக்கான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஓர் அன்பர், பெரியவாளுக்கு வந்தனம் செய்துவிட்டு எழுந்து நின்றார்.

“என் பெயர் நடேசன், கும்பகோணம் மடத்தில் சமையல்காரராக இருந்த கணேசய்யரின் பிள்ளை.”

பெரியவாள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

‘நீ என்ன பண்றே?”

“சமையல் தான். வேறு எந்தத்தொழிலையும் கற்றுக் கொள்கிற அவகாசமே கிடைக்கல்லே… கஷ்ட ஜீவனம்.”

“பின் ஏன் சிலவு பண்ணிண்டு இங்கே வந்தே?”

“பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு. பெரியவா ஒத்தாசை பண்ணனும்.”

நாலைந்து நிமிடங்களுக்கு நிசப்தம்.

பெரியவா கண்களை மூடிக் கொண்டார்கள்…… சாம்பார் வாளியுடன் கணேசய்யர் தென்பட்டார்! ‘அப்பாடா… என்ன உழைப்பு! அவர் வேலை செய்யும்போது உடலில் வழியும் வேர்வை, ஓர் அண்டா நிறைய இருக்கும். அவர் பேத்திக்கு கல்யாணம்.’

அன்றைய தினம் பிக்ஷாவந்தனம் செய்வதற்காக ஒரு தனவந்தர் சென்னையிலிருந்து வந்திருந்தார்.

“ஜெகதீசா, உன் பிக்ஷனாந்தம் இன்னொரு நாள் செய்து கொள்ளலாம். இப்போ இந்தக் கல்யாணத்துக்கு ஏதாவது உதவி செய்யேன்.’ ஜகதீசன் ‘பரமபாக்கியம்’ என்று சொல்லி, கன்னத்தில் போட்டுக் கொண்டார். அவருடைய மனைவி உடன்வர நடேசனை அழைத்துக் கொண்டு ஓர் ஓரமாகப் போனார். மணி பர்ஸை திறந்து நடேசன் மேல் துண்டில் கொட்டினார். ‘ஒரு ரூபாய் மட்டும் வச்சுக்கிறேன். சரியா’?

அம்மையார், தன் பங்காக ஒரு ஜோடி வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார். ஆவணி மாத ஆரம்பத்தில், கல்யாணம். புரட்டாசி கழிந்து ஐப்பசி வந்தது. நடேசனும் வந்தார், பெரியவா தரிசனத்துக்கு! வந்தனம் செய்துவிட்டுக் கை கட்டிக்கொண்டு ஓரமாக நின்றார். பெரியவாளிடம் எதுவும் பேசவில்லை. பெரியவாள் எதிரில், புதிய வேஷ்ட்டி, புடவை, யாரோ ஒரு பக்தர், காணிக்கையாக சமர்பித்திருந்தார். எதிரிலிருந்த மற்றப் புதிய துணிகளையும் அவனிடம் கொடு என்று அணுக்கத் தொண்டருக்கு ஜாடை. கண்களை சுழற்றி எதிரே நின்றவர்களை நோக்கி ஒரு எக்ஸ்ரே பார்வை, யாரோ ஒருவரிடம் பார்வை நிலைத்தது.

“நீ, மோதிரம் போட்டுண்டு இருக்கியா?”

“ஆமாம்”

“அதை இவனுக்கு கொடுத்துடேன்”

அடுத்த வினாடி, ஆணை நிறைவேற்றப்பட்டது.

இன்னொரு பாக்கியசாலி பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தார்.

“அந்த ரிஸ்ட் – வாச்சை இவனிடம் கொடுத்து விடு. நீ வேறே வாங்கிக்கோ..”

ரிஸ்ட் வாச் கை மாறியது!

உடனே நடேசனுக்கு பிரசாதமும் வழங்கி உத்திரவு கொடுத்தாயிற்று.

அவர் போன பின்னர் பெரியவா சொன்னார்கள் : “இவன் பெண்ணுக்கு தலைத் தீபாவளி. அதை சொல்லத் தான் வந்தான்… இவன் அப்பா – கணேச அய்யர் அந்தக் காலத்திலேயே மடத்துக்கு ஏராளமா கைங்கர்யம் செய்திருக்கிறார். மாச சம்பளம் (தலைமை சமையல்காரருக்கு) மூணு ரூபாயோ, நாலு ரூபாயோ! இப்படி, வாழ்க்கையைத் தியாகம் பண்ணி மடத்துக்கு உழைத்தவர்களை நினைச்சுண்டாலே புண்ணியம்.”

பக்தர்கள் நெகிழ்ந்தே போனார்கள் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன?

– எஸ்.கோதண்ட ராம சர்மா தொகுத்த, ராயவரம் பாலு அவர்கள் எழுதிய ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ தொகுப்பிலிருந்து

==========================================================

Also check : பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

தீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்? மகா பெரியவா காட்டும் வழி!

அற்புதமான வாழ்க்கை வேண்டுமா? அரியத்துறைக்கு வாங்க!

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர்ந்திட உதவிடுங்கள்…!

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check our earlier articles on Maha Periyava

தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!

பெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்!

காற்றை நிறுத்திய காத்தவராயன்!

”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!

தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு

திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!

ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்!

மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!

நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

==========================================================

Don’t miss Maha Periyava’s miracle @ Kanchi Lingappan street

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு

==========================================================

Also check our earlier articles on Ramana Maharishi

ஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி?

“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”

ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு!

ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!

காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

==========================================================

[END]

One thought on ““கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *