Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, July 21, 2024
Please specify the group
Home > Featured > திருவாசகம் கேட்டு பிறந்த குழந்தை! – Rightmantra Prayer Club

திருவாசகம் கேட்டு பிறந்த குழந்தை! – Rightmantra Prayer Club

print
சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர். பன்னிரு திருமுறைகளில் இவர் பாடிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளன. இவர் 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராக பணியாற்றினார்.

பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து போற்றப்படுகிறது.

Manickavasagar

ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சிவனடி சேர்ந்தார். இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், மணிவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, “உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை” என்று குறிப்பிடுகின்றார்.

இன்று ஆனி மகம் – மாணிக்கவாசகர் குருபூஜைத் திருநாள்!

IMG_20150103_060942

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

மாணிக்கவாசகர் பற்றியும் அவர் இயற்றிய திருவாசகம் பற்றியும் நமது தளத்தில் பல பதிவுகள் இதுவரை வெளிவந்துள்ளன. அவற்றில் 21,600 தரம் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்த பலனை கொடுக்கும் ஒரு அதிசய மந்திரம்! என்று ஒரு பதிவை அளித்திருந்தது நினைவிருக்கலாம்.

==========================================================

Also check :  திருவாசகம் முற்றோதலில் நடந்த அதிசயம் – வண்ணத்து பூச்சியாக வந்தது யார்?

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

==========================================================

ருவுற்ற தாய்மார்கள் திருவாசகத்தை அவசியம் கேட்கவேண்டும் என்று நாம் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு அதிசய நிகழ்வு பற்றி தினமலர் நாளிதழில் வெளியான செய்தி உங்கள் பார்வைக்கு…

திருவாசகம் கேட்டு பிறந்த குழந்தை!

ஜெர்மனியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், நிறை மாதம் ஆகியும் வயிற்றில் சிசுவின் அசைவையே உணராததால், பெர்லின் மருத்துவமனையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம் பரிசோதனை செய்துள்ளார். அவரும், பல்வேறு சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்து, ‘குழந்தை அசைவின்றி இருப்பதற்கு காரணம் தெரியவில்லை; ஆனால், சிசுவுக்கு உயிர் இருக்கிறது…’ என்று கூறி, அனுப்பி விட்டார்.

IMG_20150103_053722
மாணிக்கவாசகர் உற்சவர்

என்ன செய்வதென்று புரியாமல் தொடர்ந்து, ஒவ்வொரு மருத்துவராக பார்த்துள்ளனர், அப்பெண்ணும், அவர் கணவரும். இந்நிலையில், மன நிம்மதிக்காக, இளையராஜாவின் திருவாசகம் இசையை கேட்டுள்ளார்.

என்ன ஆச்சர்யம்! ‘திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்…’ என்ற சான்றோர் வார்த்தைக்கு இணங்க, சில நிமிடங்களில், வயிற்றில் அசைவு தெரிய, மகிழ்ச்சியில் இசையை நிறுத்தியுள்ளார். உடனே குழந்தையின் அசைவும் நின்று விட்டது. தொடர்ந்து, நான்கு முறை இப்படிப் போட்டு போட்டு நிறுத்தியுள்ளார். அதன்பின், தொடர்ந்து, வீடு முழுவதும் ராஜாவின் இசை தான் ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது.

சரியாக, பத்தாவது மாதம், அறுவை சிகிச்சையின்றி, குழந்தை ஆரோக்கியமாக பிறந்து, மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Ilaiyaraaja-Thiruvasagam-Feat.-Budapest-Symphony-Orchestra-2005-APEஅந்த ஜெர்மன் தம்பதியர், இளையராஜாவை சந்திக்க சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தனர். தம்பதியை சந்தித்து, குழந்தைக்கு ஆசி வழங்கினார், ராஜா.

தற்போது, ஜெர்மன் மருத்துவர்கள் பலரும், இந்த இசை அற்புதத்தை ஒப்புக்கொண்டுள்ளதோடு, ராஜாவின் திருவாசகம் சி.டி.,யை கேட்டு, மொழி புரியாவிட்டாலும், அந்த இசைக் கட்டுமானத்தில் வியந்து போயியுள்ளனர்.

அத்துடன், மருத்துவத்துறையில் இந்திய இசையால், என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற, ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர்.

இந்த அதிசயத்தையெல்லாம் விஞ்ஞானத்தின் துணையின்றி பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் இந்தியர்கள்; குறிப்பாக தமிழர்கள். ஆனால், நாம் நம் பாரம்பரியத்தை மறந்து போனதால், நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பு தெரியாமல் போய்விட்டது.

இதேபோன்று, நாம் போகர் மருத்துவத்தை ஓரங்கட்ட, அவர்களோ அதை வெற்றிகரமாகக் கையாண்டு சாதனைகள் புரிந்து வருகின்றனர்.

நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு 

பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.

1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.

2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.

3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்!

4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.

5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.

6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.

7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.

ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?

நீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று அரிய சிவதொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

==========================================================

ஒரு முக்கியமான விஷயம்!

பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது.)

பிரார்த்தனை செய்யும் நம் வாசகர்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கை அனுப்பியவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். எனவே கூடுதல் விபரங்கள் இருந்தால் தான் நினைவில் வைத்திருந்து பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்திக்க முடியும்.

கோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணைஅவசியம் குறிப்படவேண்டும். நமது நேரம் இதில் பெருமளவு வீணாவதால் அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் இனி பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.  

(இந்த வார பிரார்த்தனையாளர்களுக்கு மேற்படி மார்கெட் பிள்ளையார் கோவிலில் சிறப்பு அர்ச்சனை நாளை மறுநாள் நடைபெறவிருக்கிறது. அது சமயம், இந்த பிரார்த்தனையின் பிரிண்ட் அவுட் பிள்ளையாரிடம் வைத்து பிரார்த்தனை செய்யப்படவிருக்கிறது. பிரார்த்தனை நடைபெறும் ஞாயிறு மாலை அந்நேரம், கோரிக்கைகள் பிள்ளையாரின் முன்பாகத் தான் இருக்கும்!)

நன்றி!

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
M : 9840169215  |  E : editor@rightmantra.com

==========================================================

நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : பூவிருந்தவல்லி மார்க்கெட் பிள்ளையாருக்கு  தொண்டு செயதுவரும் திரு.பாலசுப்ரமணிய குருக்கள் அவர்கள். 

முறைப்படி ஆகமம், வேதம் இவற்றையெல்லாம் படித்து குருக்கள் தொண்டுக்கு வருபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.இருப்பவர்களுக்கோ போதிய வருவாய் இல்லை. பிரசித்தி பெற்ற கோவில்களை தவிர ஏனைய ஆலயங்களில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. தட்டில் விழும் வருமானத்தை நம்பியே அவர்கள் உள்ளனர். இதில் எப்படி தங்கள் குடும்பத்தை நடத்துவது? தங்கள் பிள்ளைகளை படிக்கவைப்பது? அவர்களை இந்த தொண்டுக்கு அழைத்து வருவது?

எனவே பெரும்பாலானோர் மலேசியா, சிங்கப்பூர், யூ.எஸ். என்று உள்ள கோவில்களுக்கு அர்ச்சகர் பணிக்கு சென்றுவிடுகின்றனர். விளைவு ஏற்கனவே பூஜை நடைபெற்று வரும் கோவில்கள் பூஜையின்றி தவிக்கின்றன.

விலைவாசி உயர்வு, தலைகீழாக மாறிவிட்ட திருமண சந்தை, என பல சமூக மாற்றங்களே இதற்கு காரணம்.

எனவே எஞ்சியிருப்பவர்களை பார்த்துக்கொள்ளவேண்டியது நம் தலையாய கடமை.

Market pillaiyar

திரு.பாலசுப்பிரமணிய குருக்களை பொறுத்தவரை அவர் மட்டுமல்ல அவரது மகன் கணேஷ்குமார் குருக்களும் தந்தை வழியில் கோவில்களில் குருக்களாக தொண்டாற்றுகிறார். அவரது மகன் சிறுவன் குருநாதனும் தாத்தாவுக்கும் தந்தைக்கும் உதவியாக பூஜையில் கலந்துகொள்வதை பார்த்திருப்பீர்கள்.

இந்த வார பிரார்த்தனைக்காக கோரிக்கைகளையும் சம்பந்தப்பட்டவர்கள் ராசி, நட்சத்திரத்தையும் நாளை (சனிக்கிழமை) காலை திரு.பாலசுப்ரமணிய குருக்கள் அவர்களை நேரில் சந்தித்து தரவிருக்கிறோம். பிரார்த்தனை நேரத்தில் மார்க்கெட் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்யவிருக்கிறார்.

இந்த வார பிரார்த்தனை கோரிக்கையாளர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறும் பட்சத்தில் மார்க்கெட் பிள்ளையாருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்: 

இந்த வார பிரார்த்தனையில் முதல் கோரிக்கை அனுப்பியிருக்கும் வாசகி சசிகலா அவர்கள் தள வாசகி ஒருவர் மூலம் நமது பிரார்த்தனை மன்றத்தை பற்றி கேள்விப்பட்டு இந்த கோரிக்கையை அனுப்பியிருக்கிறார். திருமணம் ஆகியும் பதினோரு ஆண்டுகளாக புத்திர பாக்கியம் இன்னும் கிடைக்காத சூழ்நிலையில் அவர்கள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டிருப்பார்கள்,என்னவெல்லாம் பரிகாரங்கள் செயதிருப்பார்கள் என்பதை சொல்லாத தேவையில்லை.

அவர்கள் தவம் முடிவுக்கு வந்து பலனை கிடைக்கும் காலம் இதுவென்றே சொல்லவேண்டும். எனவே தான் இந்த மன்றத்திற்கு வந்திருக்கிறார். நிச்சயம் பூவிருந்தவல்லி செல்வ விநாயகர் அருளால் அவர்களுக்கு ஒரு மழலைச் செல்வம் பிறக்கப்போவது உறுதி. அட்வான்ஸ் வாழ்த்துக்கள். இனியெல்லாம் சுபமே.

அடுத்து பிரார்த்தனை சமர்பித்திருக்கும் திருமதி. நவநீதம் அவர்கள் கடந்த ஒரு மாதமாகத் தான் நமக்கு பரிச்சயம். குன்றத்தூர் மற்றும் அரியத்துறை ஆகிய இடங்களில் நடைபெற்ற உழவாரப்பணிக்கு வந்திருந்தார். அப்போது தனது கைப்பட அவர் எழுதிக்கொடுத்த பிரார்த்தனையை தான் இங்கே வெளியிட்டிருக்கிறோம். எப்போது அவர் சிவலாய உழவாரப்பணிக்கு வந்து தொண்டு செய்தாரோ அப்போதே அவர் ஈசனின் வீட்டு பணியாட்களுள் ஒருவராக மாறிவிட்டார். அவருக்கு ஒரு அநீதி நடக்க விடுவானா நம் ஈசன்? எனவே கவலைவேண்டாம். வெற்றி உங்களுக்கே. உங்கள் பங்கும் உங்களுக்கே.

அடுத்து நமது குழு உறுப்பினரும் நண்பருமான கார்த்திக் அவர்கள். இவரைப் பற்றிய அறிமுகம் உங்களுக்கு தேவையில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள பிணி ஒன்றுக்காக அவர் சார்பாக நாம் இந்த கோரிக்கையை அளித்திருக்கிறோம்.

பொதுப் பிரார்த்தனை… மனதைப் பிசையும் ஒன்று. நாம் என்ன செய்வது? பிரார்த்திப்போம்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

(1) மழலை பாக்கியம் வேண்டும் !

அன்புடையீர் வணக்கம்!

என் பெயர் ஹெச். சசிகலா. என் கணவர், சி.ஹரிகிரிஷ்ணா. எங்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகியும் இன்று வரை குழந்தை பாக்கியம் இல்லை.

பல மருத்துவரிடம் சென்றும் எங்களிடத்தே எந்தவித குறையும் இல்லை என்று கூறிவிட்டார்கள். எங்களுக்கு தற்போது இருக்கும் ஒரே நம்பிக்கை இந்த பிரார்த்தனை மன்றம் தான்.

நாங்கள் தங்களுடைய பிரார்த்தனை பற்றி தோழி மூலம் கேள்விப்பட்டு தங்களை அணுகி உள்ளேன். எங்களுடைய நீண்டகால பிராத்தனையான சந்தான பாக்கியம் விரைவில் கிடைக்க எங்களுடைய கோரிக்கையை தங்களுடைய பிரார்த்தனை கிளப்பில் இடம் பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

சசிகலா & ஹரிகிருஷ்ணன்,
சென்னை – 600002

(2) சொத்தில் எனக்குரிய பங்கு தவறாமல் கிடைக்கவேண்டும்  !

ரைட்மந்த்ரா நண்பர்களுக்கும் ஆசிரியருக்கும் வணக்கம்.

என் பெயர் நவநீதம் (55). எனக்கு பாத்தியதை உள்ள ஒரு வீடு திருவல்லிக்கேணியில் உள்ளது. என் சகோதரர்கள் அந்த வீட்டை மிகப் பெரிய தொகைக்கு விற்று அவர்களுக்குள் பங்கு போட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளனர். என் தந்தை உயிலில் எழுதிய படி எனக்கு சேரவேண்டிய பங்கை அவர்கள் தர விரும்பவில்லை.

வீட்டில் உள்ள குடித்தனர் எல்லோரையும் காலி செய்து விட்டனர். ஒவ்வொருவருக்கும் 75 லட்சம் இல்லாமல் மூன்று தம்பிகளுக்கும் பில்டர், 25 லட்சம் அவர்கள் கையில் கொடுத்திருக்கிறார். நான் கேட்டால் மட்டும் ஒவ்வொரு தடவையும் பில்டர், ”லோன் கிடைக்கவில்லை” என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் தம்பிகளுக்கு மட்டும் 5 லட்சம் வரை அட்வான்ஸ் கொடுத்து இருக்கிறார். தயவு செய்து எனக்கு கொடுக்க வேண்டிய பங்கு தொகை, எனக்கு கிடைக்குமாறு பிராத்தனை மனம் கொண்ட நல்லிதயங்கள் பிரார்த்தனை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

குறிப்பு:- கடந்த ஐந்து மாதமாக பில்டர் கையில் வீட்டின் பத்திரம் உள்ளது. பில்டரும் தம்பிகளும், பணம் கொடுக்காமல், இப்போ தாரேன்! அப்போ தாரேன்! என்று இழுத்தடிக்கிறார்கள். ஆனால் இன்னும் கொடுக்கவில்லை.

உங்கள் பிரார்த்தனையின் பயனால் எனக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில், எதிர்பார்ப்பில், உங்கள் கருணையால், அன்பு மனத்தால், எனக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

திருமதி.நவநீதம்,
செங்குன்றம்

(3) நண்பர் கார்த்திக் அவர்களுக்கு கால்களில் ஏற்பட்டுள்ள  நரம்பு பிரச்சனை தீரவேண்டும்!

நமது உழவாரப்பணி குழு உறுப்பினர்களில் ஒருவர் கார்த்திக். பம்மலை சேர்ந்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக கால்களில் VERICOSE VEINS என்கிற பிரச்சனை ஒன்று உள்ளது. சற்று உடல் பருமனானவர்களுக்கு கால்களில் வரக்கூடிய ஒரு வித நரம்பு சம்பந்தமான குறைபாடு இது.

ஏற்கனவே இந்த பிரச்சனையில் அவதிப்பட்டு வந்த கார்த்திக் அவர்களுக்கு சமீபத்தில் இதனால் INFECTION ஏற்பட்டு, தற்போது வலது காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டி சென்னை கே.கே.நகரில் உள்ள எஸ்.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Rightmantra Deepavali Abishekam 3.

பத்தாண்டுகளுக்கு முன்னரே கார்த்திக்கின் தந்தை திரு.வைத்தியநாத ஐயர் புற்றுநோயால் இறந்துவிட்டார். திரு.வைத்தியநாத ஐயர் தேனம்பாக்கதில் உள்ள ஸ்ரீ மடத்தின் பாடசாலையில் மேனஜராக பணியாற்றியிருக்கிறார் (மஹா பெரியவாவுக்கு பிறகு) என்கிற விபரமே நமக்கு பின்னர் தான் தெரியும். கார்த்திக்கின் தாய் வழி தாத்தாவின் சகோதரர் திரு.ராமமூர்த்தி என்பவர் காஞ்சி ஸ்ரீமடத்தில் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக பெரியவாவுக்கு தொண்டாற்றியிருக்கிறார்.

கார்த்திக்கு இணையம், வாட்ஸ் ஆப் இதெல்லாம் பார்க்க வழியில்லை. நமது நிகழ்ச்சிகள் குறித்து எஸ்.எம்.எஸ். மற்றும் அலைபேசியில் தகவல் தெரிவித்து வருகிறோம். ஒரு வேளை குருக்கள் தொண்டுக்காக ஏதேனும் கோவிலுக்கு செல்ல நேர்ந்தால் அன்று அவரால் வரமுடியாது. மற்றபடி எந்த வித தயக்கமோ எதிர்பார்ப்போ இன்றி, எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் வருவார். வந்துகொண்டிருக்கிறார்.

நமது உழவாரப்பணியில் கார்த்திக் அவர்கள்..
நமது உழவாரப்பணியில் கார்த்திக் அவர்கள்..

சமீபத்தில் நடைபெற்ற உழவாரப்பணி தொடர்பான அலுவல்களில் நாம் மும்முரமாக இருந்த நேரத்தில், கார்த்திக் அவர்களிடமிருந்து இது பற்றிய தகவல் நமக்கு கிடைத்தது. நாம் அவருக்கு ஆறுதல் கூறி, மருத்துவமனையில் நாம் வந்து பார்ப்பதாக கூறியிருந்தோம். அதன் படி இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனைக்கு சென்று திருநீற்றுப் பதிகத்தை பாடி அப்படியே சோளீ ஸ்வரர் பிரசாதத்தை (வில்வப் போடி, திருநீறு) கொடுத்து, அவருக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளித்துவிட்டு வந்தோம்.

அவருக்கு சர்க்க்கரை நோய் இல்லை என்பது மிகப் பெரிய ஆறுதல். ஒருவேளை இருந்திருந்தால் மிகவும் கடினம்.

அடுத்து இடம்பெறக்கூடிய நரம்பு தொடர்பாக விசேஷ பிரார்த்தனை பதிவில் அவர் சார்பாக நாமே பிரார்த்தனை சமர்பிக்கவிருப்பதையும் தெரிவித்தோம். இருப்பினும் அவசரம் கருதி இந்த வாரமே அளித்திருக்கிறோம்.

– ரைட்மந்த்ரா சுந்தர்.
ரைட்மந்த்ரா.காம்

* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.

** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.

==========================================================

பொதுப் பிரார்த்தனை!

சுவாதி… வினுப்ரியா… எங்களை மன்னித்துவிடுங்கள்!

சுவாதி முதல் வினுப்ரியாவின் மரணம் வரை கடந்த சில வாரங்களாக தமிழகமும் சமூக ஊடகங்களும் பரபரப்பாக இருந்து வருகிறது. ஒரு பாவமும் அறியாத சுவாதியின் மரணத்தையும் அவர் கொலை செய்யப்பட விதத்தையும் நம்மால் இன்னும் ஜீரணிக்க இயலவில்லை. சுவாதியின் முகத்தை மறக்கவும் முடியவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று பல கனவுகளை சுமந்துகொண்டு பாடி பறந்துகொண்டிருந்த அந்த பறவையை ராம்குமார் வெறும் இனக்கவர்ச்சி காரணமாக ஈர்க்கப்பட்டே கொலை செய்யும் அளவிற்கு அதுவும் மிகக் கொடூரமாக வாயையை சிதைத்து கொல்லும் அளவுக்கு சென்றான் என்பதை அறிந்த போது நாம் அடைந்த துயருக்கு அளவே இல்லை. இதன் தாக்கம் காரணமாக சில நாட்கள் உறக்கமே வரவில்லை. நமக்கே இப்படி என்றால் சுவாதியின் பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் எப்படி இருந்திருக்கும்?

அதே போன்று தான் சேலம் வினுப்ரியாவின் மரணமும். வினுப்ரியாவின் மரணம் உண்மையில் சம்பந்தப்பட்டவர்கள் நியாயமாக செயல்பட்டு துரித நடவடிக்கையை எடுத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். ஆனால், கடமையை செய்யவேண்டியவர்கள் அந்த கடமையை செய்யவே கையூட்டு கேட்டார்கள் என்பதை அறிந்தபோது விரக்தியின் உச்சிக்கே சென்றோம். இவர்களின் மெத்தனத்தால் ஒரு உயிர் அநியாயமாக பறிபோனது. சம்பந்தப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றிய அந்த கொடூரனை தவிர வினுப்ரியாவின் நடத்தையை சந்தேகித்த அவர் பெற்றோரும், கடமையை செய்ய கையூட்டு கேட்ட காவலர்களும் கூட இங்கு குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியவர்கள் தான்.

மேலும் இந்த புரையோடிப்போன சமூகத்தின் அங்கத்தினர்களாக உள்ள நாமும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியவர்கள் தான்.

நம்மைப் பொறுத்தவரை பெருகி வரும் சமூக குற்றங்களுக்கும் திரைப்படங்களும், DOMESTIC குற்றங்களுக்கு டி.வி. சீரியல்களுமே காரணம் என்றால் மிகையாகாது. ஏற்கனவே எரியும் தீயில் எண்ணை ஊற்றும் வேலையை இவை செவ்வனே செய்கின்றன. இந்த சூழ்நிலையில் நாம் இறைவனிடம் என்ன கேட்பது? நாமும் தானே ஒருவகையில் இதற்கு உடந்தை?

சுவாதியின் ஆன்மாவும், வினுப்ரியாவின் ஆன்மாவும் இறைவனடி சேரவும், அவர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் அமைதி கிடைக்கவேண்டும்.

இனி இப்படி ஒரு முடிவு எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. இதுவே இந்த வார பொது பிரார்த்தனை.

==========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த திருமதி.சசிகலா மற்றும் ஹரிகிருஷ்ணன் தம்பதியினருக்கு விரைவில் புத்திர சம்பத்து கிடைக்கவும், அவர்கள் வீட்டில் மழலைச் சத்தம் கேட்டு அவர்கள் உள்ளம் மகிழவும், நம் உழவாரப்பணி குழு புது உறுப்பினர்களுள் ஒருவரான திருமதி.நவநீதம் அவர்களுக்கு அவருக்கு வரவேண்டிய சொத்தின் பங்கு சரியாக  வரவும், மற்றொரு உழவாரப்பணி குழு உறுப்பினரும் நண்பருமான திரு.கார்த்திக் அவர்களுக்கு  காலில் ஏற்பட்டுள்ள நீங்கி, அவர் பூரண குணம் பெறவும், முன்பு போல பணிக்கு விரைவில் செல்லவும் இறைவனை பிரார்த்திப்போம்..

சுவாதி, வினுப்ரியாவோடு இந்த பட்டியல் நிற்கட்டும். இனி வேண்டாம் இப்படி ஒரு இழப்பு நமக்கு. அவர்கள் ஆன்மா இறைவனடி சேரவும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் ஆறுதல் பெறவும் இறைவனை வேண்டுவோம்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.பாலசுப்ரமணிய குருக்கள் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜூலை 10, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….

We need your SUPPORT. Help Rightmantra in its functioning

==========================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

==========================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

==========================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

==========================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

==========================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோவில் பட்டர் திரு.சுரேஷ் பட்டர் அவர்கள்.

சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற வார பிரார்த்தனை விபரங்களை சமர்பிக்க நாம் சென்ற ஜூன் 26 சனிக்கிழமை மாலை திருவூரகப் பெருமாள் கோவிலுக்கு சென்றிருந்தோம். ரைட்மந்த்ரா கூட்டுப் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற திருஊரகப் பெருமாக் கோவிலின் சுரேஷ் பட்டர் அவர்களை சந்தித்து மேற்படி பிரிண்ட் அவுட்டை அளித்து பிரார்த்தனை சமர்பித்த அனைவரின் பெயர்களுக்கும் அர்ச்சனை செய்தோம். மிகப் பொறுமையாக அர்ச்சனை செய்ததோடு பிரார்த்தனை நேரத்தில் அவசியம் தாம் அதைப் படித்து பிரார்த்தனை செய்வதாகவும் அதுவரை அந்த நகல் பெருமாளின் திருவடிகளிலேயே இருக்கட்டும் என்று திருவாய் மலர்ந்தார் பட்டர். என்னே நம் பாக்கியம்! அவருக்கும் அவருக்குள் இருந்து ஆவன செய்த கோவிந்தனுக்கும் நம் நன்றி.

DSC07871

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
உன் 
சேவடி செவ்வித்திருக்காப்பு

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

==========================================================

[END]

2 thoughts on “திருவாசகம் கேட்டு பிறந்த குழந்தை! – Rightmantra Prayer Club

  1. திருவாசகம் இளைய ராஜாவுடன் நேர்காணல் தளம் சார்பாக செய்ய முயற்சிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *