வேலூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரது மாப்பிள்ளைக்கு திடீரென்று சிறு நீரகத்தில் கோளாறு. வேலூரில் பரிசோதனை செய்த டாக்டர் கையை விரித்துவிட்டார்.
அன்றிரவு மிகவும் துக்கத்துடன் இருந்த அந்த கேப்டனின் பெண் சொப்பனத்தில் ஸ்ரீ பெரியவாள் தோன்றி உன் மாங்கல்யத்தைத் தருகிறாயா? என்று கேட்டார்கள்.
விடிந்தவுடன், அப்போது உடனடியாக ஒரு மஞ்சள் கயிறு கூட இல்லாத நிலையில் ஒரு சணற் கயிற்றில் மஞ்சளைக் கோர்த்து அணிந்து கொண்டு, மாங்கல்யத்தைப் பெரியவாளுக்காக எடுத்து வைத்துவிட்டாள்.
பின் மௌளியிடம் போனில் விஷயத்தைச் சொன்னார்கள். மௌளி அவர்களை உடனே வந்து பெரியவாளை தரிசனம் செய்யச் சொன்னார். ஆனால், அவர்களுக்குப் பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் காஞ்சி மடத்திற்கு வர முடிந்தது.
உள்ளே படுத்துக் கொண்டிருந்த பெரியவாள் மௌளியிடம், ”யாராவது தரிசனத்திற்கு வந்திருக்கிறார்களா” என்று வினவினார்கள்.
மௌளி, பெரியவாளுக்குச் சிரமம் வேண்டாம்; வெளியில் வரும்போது தரிசனம் கொடுக்கலாம் என்று சொன்னார்.
அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் தம்பதிகளை உள்ளேயே அழைத்து வரும்படி உத்திரவிட்டார்கள்.
அவர்கள் உள்ளே வந்ததும் மௌளியின் மாமா பெண்ணைப் பார்த்து, ”அதைக் கொண்டு வந்திருக்கிறாயா? தா, தா ..” என்று கேட்டு மாங்கல்யத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
பின்பு பக்கத்திலிருந்த பாலுவிடம் ஒரு பழம் கொண்டுவரச் சொன்னார்கள்.
அவர் சாத்துக்குடி கொண்டு வந்ததும், இந்த புளிப்புப் பழம் வேண்டாம்; வேறு நல்ல பழம் கொண்டுவா என்றார்கள்.
ஒரு நல்ல ஆப்பிள் வந்தது. அதை நகத்தால் கிள்ளிக் கொண்டே வெகு நேரம் கேப்டனின் மாப்பிள்ளையையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாமிகள் அந்த ஆப்பிளை அவர்களிடம் கொடுத்துவிட்டு, ”உனக்கு ஒன்றுமில்லை, போ” என்று கூறினார்கள்.
வேலூர் சென்றவுடன் மாப்பிள்ளையை மறுபடியும் பரிசோதனை செய்த, சிறுநீரக சிறப்பு மருத்துவருக்கு ஒரே ஆச்சரியம்.
கிட்னி இரண்டும் ஒரு குறையுமில்லாமல் நன்றாக வேலை செய்தன.
என்ன நடந்தது? என்று கேட்டு விவரம் அறிந்தவுடன் அந்த டாக்டர்,
”Oh, HE is GOD; HE can do anything”என்று வியப்புடன் சொன்னார்.
20 வருஷத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை (2006) எந்தத் தொந்திரவும் இல்லாமல் இருக்கிறார்.
முன்பு பெரியவாள் என்றாலே உதாசீனமாக, அலட்சிய பாவத்துடன் இருந்த அவர்கள் வீட்டில் இப்போது பெரியவாள் படங்களைத் தவிர வேறு ஒரு படமும் கிடையாது!
([நன்றி : gopalakrishnan3.rssing.com | அம்ருத வாஹினி 24.07.13)
* நமது தளத்தில் துவங்கியுள்ள ‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் தொடர்பாக ராயரின் பக்தர்கள் கூறும் மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது. திரட்டிய தகவல்களை தட்டச்சு செய்யவேண்டியுள்ளது. எனவே தொடர் அடுத்த வாரம் இடம்பெறும்.
==============================================================
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
==============================================================
[END]
சுந்தர் சார் காலை வணக்கம்
அற்புதமான பதிவு
நன்றி
என் அப்பாவிற்கு open heart surgery நடந்து 4 வருடங்கள் ஆயிற்று. இதுவரை எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்து வந்தார்.
தற்பொழுது ICU இல் இருக்கிறார். (low suger and low BP).
மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.
இந்த பதிவு எனக்கு மிகுந்த ஆறுதல் தருவதாக உள்ளது.
“GOD cannot be everywhere, So he created mother”.
“GOD cannot speak directly to us, So he created saints”.
Don’t worry. Our prayers and our Guru’s blessings will be there.
– Sundar
மகா பெரியவாளின் பாதங்களை இறுக பற்றிக்கொள்ளுங்கள். அவருடைய திரு உருவப்படத்திற்கு முன் அமர்ந்தோ அல்லது எங்கு இருந்தாலும் மகா பெரியவா கராவலம்ப ஸ்தோத்திரத்தை விடாமல் பாராயணம் செய்யவும். ஒரு முறை பாராயணம் செய்வதற்கு குறைந்த பட்சம் 2 நிமிடங்கள் தான் ஆகும்.
நம்பிக்கையுடன் செய்யுங்கள். சர்வ நிச்சயமாக பெரியவாளின் அனுக்ரஹதால் ஆஸ்பத்திரியிலிருந்து நலமாக தங்கள் தந்தை திரும்பி விடுவார்.
சுந்தர் சார்
இன்று நாக சதுர்த்தி.
குருவே சரணம்……….
உம்மாச்சி தாதா சாட்சாத் வைத்தீஸ்வரர்
மற்ற மதங்கள் கடவுள் என்கிற ஒன்றை சொல்வதோடு நின்று விடுகின்றன. ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிற சனாதன தர்மம் அந்த ஒரே கடவுளை அவரவர் மனோபாவப்படி அன்போடு நெருங்கி வழி படுவதற்காக பல ரூபங்களில், பல தெய்வ வடிவங்களை நமக்கு காட்டுகிறது. இந்த ரூபங்கள் வெறும் கற்பனையில் உண்டாக்கப்பட்டவை அல்ல. ஒன்றாக இருக்கிற பரமாத்மாவே தான் இப்படி பல மகான்களுக்கு தரிசனம் தந்திருக்கிறார். அவரவர்கள் அந்தந்த மூர்த்திகளிடம் பிரத்யக்ஷமாக பழகி, உறவாடி, பக்தி செய்திருக்கிறார்கள் . அதே மாதிரி நாமும் தரிசிப்பதற்காக இன்ன மந்திரம், இன்ன விதமான உபசனையை பின்பற்றினால் இன்ன தேவதா ரூபத்தின் தரிசனத்தை பெறலாம் என்று வழிகளை வகுத்து கொடுத்திருக்கிறார்கள்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
குருவின் தரிசனம் பரிபூரணமாக உள்ளது. மகாபெரியவா அவர்களின் படம் அருமை.
எல்லோருக்கும் வணக்கம்.
தமிழ் z டிவியில் தினமும் காலையில் திரு.சுவாமிநாதன் என்பவர்.ஸ்ரீ மஹா பெரியவர் பற்றி சொற்பொளியற்றுவர்.நான் பூஜை செய்யும் பொழுதும்.அலுவலகம் செல்லும் முன் சொற்பொளிவை கேட்டு விட்டு தான் செல்வேன். அப்போது தான் எனக்கு ஸ்ரீ மஹா பெரியவர் பற்றி நிறையே தகவல் தெரிந்து கொள்வேன்.
ஸ்ரீ மஹா பெரியவர் பற்றி சொற்பொளிவை கேற்பதற்கு மன திருப்தி கிடைக்கும்.
திரு.சுவாமிநாதன் அய்யா அவர்களின் சொற்பொளிவை எல்லோரும் கேட்டு பயன்பெறுங்கள்.
நன்றி.
கருடா ட்ரடெர்ஸ்.
திருமுல்லைவாசல், சீர்காழி.
பதிவு அருமை.
சமீபத்தில் திரு.சுவாமிநாதன் எழுதிய மஹா பெரியவா புத்தகம் வாங்கிப் படித்தேன். மிக அருமையான புத்தகம். அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய புத்தகம்..
நம் தளம் வெளியிடும் விசயங்களை புத்தகமாக தொகுத்து வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
நீங்கள் கூறுவது உண்மை. அற்புதமான, அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் அது.
///நம் தளம் வெளியிடும் விசயங்களை புத்தகமாக தொகுத்து வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..///
நன்றி வால்டேர். என் லட்சியமே அது தான். தகுந்த பதிப்பகத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். விரைவில் அனைத்தும் கைகூடும்.
– சுந்தர்
நான் கூட நினைத்தேன் …….தங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் ..
மகா பெரியவா கராவலம்ப ஸ்தோத்திரம் கிடைத்தால் சொல்லவும். PLS