Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > ஆண்டவனை பகைத்தாலும் அவன் அடியவர்களை பகைக்காதே – Rightmantra Prayer Club

ஆண்டவனை பகைத்தாலும் அவன் அடியவர்களை பகைக்காதே – Rightmantra Prayer Club

print
து 17 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம். ‘சோழவளநாடு சோறுடைத்து’ என்று புகழ் பெற்றது.  சோழவள நாட்டின் தலை நகர் தஞ்சை.  17 ஆம் நூற்றாண்டில் அந்நாட்டை நாயக்க மன்னர்கள் ஆண்டனர்.  அவர்களுள் கடைசியாக ஒரு சிற்றரசன் ஆண்டுவந்தான்.  அவன் கல்வி கேள்விகளில் சிறந்தவன் அல்லன்.  கீழோர் நட்பைப் பெரிதும் கொண்டவன்,  ஆனால் தெய்வ பக்தி உடையவனாக இருந்தான்.

அந்த அரசன் பெயர் மன்னார் நாயுடு என்பது அவன் பெயர். அவனிடம் சேஷாசல செட்டியார் என்ற வளைச் செட்டி வகுப்பைச் சேர்ந்த ஒரு பெரியார் ‘ஷராப்’ ஆக இருந்து வந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன் அவன் பெயர் பெரியசாமி. பெரியசாமி சிறந்த அறிவாளியாகவும் தெய்வ பக்தி உள்ளவனாகவும் கல்வி கேள்விகளில் சிறந்தவனாகவும் விளங்கினான்.  உரிய வயது வந்ததும் தந்தை மகனை அரசாங்கச் சேவகத்தில் அமர்த்த விரும்பினார். ஆனால் மகனோ எவருக்கும் கைகட்டிச் சேவகம் செய்ய விரும்பவில்லை.  ஆகவே குலத்தொழிலாகிய வளையல் வியாபாரத்தையேனும் செய் என்று நல்லதொரு நாளில் வளையல் கடை வைத்துக் கொடுத்தார் தந்தையார்.

Narasimmarஏற்கனவே தெய்வ பக்தியும் தரும சிந்தனையும் மிகுந்த பெரியசாமி கடையிலேயே உட்கார்ந்ததும் பகவத் தியானமும் நாம ஸ்மரணமும் செய்வதிலேயே ஈடுபட்டான்.  மேலும் நம் நாட்டிலே புஷ்பம், குங்குமம், மஞ்சள் , கண்ணாடி , சீப்பு, வளையல்கள், காது ஓலை இவைகளைத் தானம் செய்வது புண்ணியம் என்று கருதப்படுகிறது,  ஆகவே கடைத் தெருவிற்கு வரும் ஏழை எளியவர்களை எல்லாம் அழைத்து பக்தி செய்வதே வாழ்கையின் குறிக்கோள் என்று போதித்து இலவசமாகவே தேவையான வளையல்களை எல்லாம் இட்டு அனுப்புவான் அவன்.  இப்படி செய்யவே கடையை மூட நேரிட்டது.

மகனது தெய்வ பக்தியை புகழ்ந்த செட்டியார் கடமை தெரியாமல் பித்தனாக இருப்பது கண்டு மனம் நொந்தார். பிறகு சில பாகவதர்களை அழைத்து எப்பொழுதும் கோவிலிலேயே குடியிருக்கும் தனது மகனை வீட்டிற்கு வந்து கடமையை ஒழுங்காகச் செய்யும் படி புத்தி புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாகவதர்களின் சொற்களைக் கேட்டுக் கடமையைப் பற்றிச் சிந்திக்கலானான் பெரியசாமி.  வீட்டிற்கு வந்து தந்தையிடம் மன்னிப்பும் பெற்று அரசாங்கத்திலேயே தந்தை வகித்த அந்த ஷராப் உத்தியோகத்தையே தானும் வகித்தான். அந்நாளில் அப்பதவி வகிப்பவர்கள் குதிரை மீது தான் செல்வது வழாக்கம்.

ஒரு நாள் பெரிய சாமி குதிரை மீது செல்லும் பொழுது வழியிலே சில சிறுவர் கோலி  விளையாடிக் கொண்டு இருந்தனர்.  குதிரை குறுக்கே புகுந்ததில் கோலிகள் சில உடைந்தன. கோபம் கொண்ட சிறுவர் பெரியசாமியைக் கீழே தள்ளி அடித்தும் விட்டனர்.  அந்தச் சமயம் யதவரங்கன் என்பவன் வந்து இவனுக்கு உதவியாய் நின்று அந்தச் சிறுவர் கூட்டத்தை விரட்டினான். அவனுக்கு நன்றி சொல்லி அரசவை சென்றான் பெரியசாமி. ஏற்கனவே பற்றற்று இருந்த அவனுக்கு குதிரை முதலிய ஆடம்பரங்கள் கசந்தன.  வேலையே ராஜினாமா செய்து விட்டுக் கோயிலே கதியாணன் மீண்டும். பெரியசாமி என்ற பெயரை விடுத்துப் பெரியதாசர் என்று மக்கள் அவரை அழைக்கலாயினர்.

பெரியதாசரை மக்கள் பித்தன் என்றனர். ஆனால் அவரோ பக்திப் பிரசாரம் செய்வதே தமது நோக்கமாகக் கொண்டிருந்தார்.

அரசனின் அழைப்பு

ஒரு நாள் ராஜ சபையிலே அரசன் அங்கிருந்த புலவர்களை நோக்கி “இங்கிருந்து வைகுண்டம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?” என்று கேட்டான்.  அவர்கள் தங்களுக்குத் தெரியாதென்றும் பெரியதாசர் போன்ற மகான்களைக் கேட்டால் தெரியலாம் என்றும் சொன்னார்கள்  உடனே பெரியதாசரை அழைத்து வர ஆள் அனுப்பினான் அரசன்.

அவரோ ”நான் ரரசிம்மப் பெருமானையே வழிபடுபவன்.  அரச சபையில் எனக்கு என்ன வேலை?” என்று சொன்னார்.  ஏவலாளர் தாம் எப்படியேனும் அழைததுச் செல்ல உறுதி பூண்டவராய் பலவாறு வேண்டி அவரை சபைக்கு அழைத்துச் சென்றனர்.

அரசன் தன பழைய கேள்வியைக் கேட்க பெரியதாசர் மனம் மகிழ்ந்தார். பிறகு அவனுக்கு இறைவனது பெருமையை எடுத்து சொல்லி “எனக்கும் வைகுண்டம் எங்கே இருக்கிறது என்று தெரியாது. நான் நம் ஊர்க் கோவிலை மட்டுமே அறிவேன்.  ஆனால் பல விஷயங்கள் நேர்முகமாகத் தெரியாவிட்டாலும் அனுமானத்தின் மூலம் நம்புகிறோம். அதுபோல பூவுலகிலிரூந்து  கஜேந்திரன் ‘ஆதிமூலமே’  என்று கூப்பிட்ட பொழுது  இறைவன் ஓடி வந்ததாகச் சரித்திரம் பேசுகிறது. ஆகவே ஸ்ரீ வைகுங்கம் கூப்பிடு தூரத்திலேயே இருக்கிறது என்றே தோன்றுகிறது” என்றார் பெரியார் தாசர்.

இந்தப் பதிலைக் கேட்டு அரசன் திருப்தி அடைந்தான்.  இது மற்றவர்கள் மனதில் பொறாமையை உண்டாக்கியது. அரசனே சன்மானங்கள் தந்து சிவிகையில் ஏற்றி பெரியதாசரை அனுப்பி வைத்தான்.

பெரியதாசன்  தன்னைப் புகழ்ந்து பாட வேண்டும் என்ற ஆசை மன்னன் மனத்துள் எழுந்தது.  அதைப் பற்றிக் கேட்க அவர் “இறைவனை அன்றி மனிதனைப் பாட மனம் ஒப்பாது!” என்றார்.

அரசனுக்கு அவர் மீது கோபம் உண்டாயிற்று. இதற்குத் தூபம் இடுவது போல் சில பொறாமைக்காரர்கள் “அரசே ஆழ்வார்கள்எ திருவுடை மன்னரைக் கானில் திருமாலைக் கண்டேனே என்று சொல்லி இருக்கிறார்கள்.  இந்த கர்வங் கொண்டவன் நரசிம்மனைப் பாடும் வாயால் நரனைப் பாடுவேநோ என்கிறானே இவனைக் கொஞ்சம் கண்டிக்க வேண்டியது தான்” என்றனர்

அவ்வளவு தான் தண்டனைக்கு உத்தரவுகள் பிறந்தன.  வீரர்களின் ஆயுதங்கள் அவர் மீது பாய்ந்து கூர் மழுங்கி விழுந்தன. அவரோ ஒரு நிலைப்பட்ட மனதோடு நரசிம்மனையோ தியானம் செய்து கொண்டு இருந்தார்.  ஆயுதங்கள் வலியிழந்த செய்தி கேட்ட அரசன் வெகுண்டான்.  புலிக் கூட்டிலே தள்ளுங்கள் என்றான். புலியோ அவரை வணங்கியது.

அரசனது ஆத்திரம் பொங்கி எழுந்தது  சூட்டுக்க் கோலால் மாடுகளைச் சூடு இடுவது போல இடுங்கள். என்னைப் பாடுகிறேன் என்று சொன்னால் நிறுத்தி விடுங்கள் என்றான்

முன்பு சீதா பிராட்டி அக்னி பகவானை நோக்கி சீதொபவ ஹனுமதே என்று சொன்னது போல இப்பொழுதும் பிராட்டியார் சொன்னாரோ என்று என்ணும்படி சூட்டுக் கோல்கள் குளிர்ந்து போயின பிறகு நஞ்சும் இட்டாரகள். அடியவர்க்கு நஞ்சு அமுதம் ஆவதும் அற்புதமோ? என்று சொல்லியபடி நஞ்சே அமுதாகிவிட்டது.  யானையை இடறும்படி ஏவினர். அந்த யானையோ இவரையே சிம்ம வடிவாகக் கண்டு பயந்து வீழ்ந்து இறந்து போயிற்று.

அரசனது பிடிவாதம் அதிகமாயிற்று.  கல்லிலே கட்டிக் குளத்திலே இடு என்றான்  இவன் மந்திரவாதி இவன் இருப்பதே ஊருக்குத் தீங்கு என்று சொல்லி கழுவில் ஏற்றும்படிக் கட்டளை இட்டான்.

வீரர்கள் புடை சூழ வீதியிலே நடந்து செல்லும் பெரியதாசரைக் கண்டு மக்கள் கண்ணீர் சொரிந்தனர் .  இந்த அரசனுக்குக் கேடு காலம் கிட்டி விட்டதென்று பழித்தனர். இவரோ நரசிம்மப் பெருமாளையே துதித்து நின்றார்.

தனக்கு எந்த ஊறு செய்தாலும் பொறுத்துக்கொள்ளும் இறைவன், தனது அடியவர்களுக்கு ஊறு செய்தால் பொறுப்பானா?

சபையிலே அரசன் மிகுந்த பெருமிதத்துடன் கொலு வீற்றிருந்தான்.

“திசை திறந்து அண்டங் கீறிச் சிரித்தது செங்கண் சீயம்” என்று கம்பர் பெருமான் இரணியவதை  படலத்திலே சொன்னது போல் இடியோசை போல ஒரு கர்ஜனை கேட்டது.  மறு வினாடி கம்பீரமாக அரசன் முன் தோன்றினார் நரசிம்ம மூர்த்தி.  பயத்தினால்  நடுங்கிய அரசன் அப்படியே குப்புற விழுந்து விட்டான். நரசிம்மரின் கையிலே இருந்த சாட்டையினால் சுளீர் சுளீர் என்று அவன் முதுகிலே அடிகள் விழுந்தன.  ஐயோ  அப்பப்பா  என்று அலறினான்  அவன்.  நரசிம்மர், “பெரியதாசனை அடித்தாயே, அவன் என்ன குற்றம் செய்தான்? சொல், சொல்!” என்று மேலும் இருமுறை சாட்டையை வீச அவன் துடி துடித்துப் போனான். “போ ஓடு, அவர் காலிலே விழுந்து மன்னிப்பு கேள்,  ஓடு ஓடு” என்று மேலும் ஓர் அடி அடித்து மறந்து போனார் நரசிம்மர்.

வாரிச் சுருட்டி கொண்டு எழுந்து ஓடி “பெரியதாசர் கழுவேற்றுவதை நிறுத்து, நிறுத்து” என்று கூவியவனேத் தானும் கழுமேட்டைத் நோக்கி ஓடலானான்.

http://rightmantra.com/wp-content/uploads/2012/11/Bhakta-Vijayam.jpgஅங்கே கழுமரத்தின் மேடையைச் சுற்றி மக்கள் கூட்டமாய் கூடி நின்றனர்.  பெரியதாசர் அப்பொழுதும் பரம சாந்தமாக நின்றிருந்தார்,  கோபுர வாயில்களிலே திருக்கார்த்திகை உற்சவத்திலே எரியவிடும் சொக்கப்பானை போல் கழு மரம் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது

விஷயம் விளங்காத மக்கள் இன்னது செய்வதென்று  விளங்காமல் கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.  அந்த சமயத்தில் அங்கு ஓடி வந்த அரசன் பெரியதாசரின் பாதங்களிலே வீழ்ந்தான் தான் செய்தய மாபெரும் தவறுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் சொல்லி மன்னிக்கும்படி கதறினான்.

அமைதி குலையாத பெரியதாசர் அவனை வாரி எடுத்து நிறுத்தி தானும் அவன் திருவடிகளிலே பணிந்து “அரசே நீர் பாக்கியசாலி எனக்கு காட்சி தராத நரசிம்ம மூர்த்தி உனக்கு காட்சி தந்தாரே நீயே பாக்யவான்!” என்று மீண்டும் வணங்க இப்படிக் கொலை களமாயிருந்த இடம் கோயில் போல் ஆகிக் காட்சி தந்தது  அரசனுக்கு ஞானோதயம் உண்டாயிற்று

பெரியதாசர் கோவிலுக்குத் திரும்பினார் ஊரெங்கும் அவர் புகழும் இறைவன் திருவருளுமே பேச்சாயின. இதன் பின் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளே அந்தணனாக வந்து ஸ்ரீ ரங்கம் வரும்படி அழைக்க இருவரும் பூலோகம் வைகுண்டம் என்னும் ஸ்ரீரங்கத்தை அடைந்தனர்.

தமிழிலும் தெய்வ வழிபாட்டிலேயும் சிறந்த பெரியதாசர்  ஆழ்வார்கள் ரங்கநாதப் பெருமாளைப் பாடிய பாடல்களை எல்லாம் இறைவன் திரு முன்னே படிப் பாடி பரவசமாவர்.

”நாடி நாடி நரசிங்கா” என்று குறித்தபடி எப்பொழுதும் அவனது பாத சேவையிலே ஈடு பட்டு மெய் மறந்திருக்க ஓர் இரவிலே எம்பெருமான் நரசிம்ம ரூபமாகவே வந்து பெரியதாசரைத் தம் திருவடிகளில் சேர்த்துக் கொண்டார் அவரது உறுதி மிக்க தளராத நெஞ்சம் இறைவன் அடியார்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக நின்றது.

– (திருமால் அடியவர்களின் திவ்ய சரித்திரங்களை கூறும் ஸ்ரீ மஹா பக்த விஜயத்தில் வரும் அற்புதமான சம்பவம் இது!)

நூலை வாங்க : http://www.lifcobooks.com/booktitles/details/138/6/devotional/sri-mahabaktha-vijayam.html

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலய டிரஸ்டி திரு.நந்தகுமார் அவர்கள்.

பேரம்பாக்கம் நரசிம்மர் ஆலயம் நமது வாழ்வோடு பின்னிப்பிணைந்த ஒன்று என்பதை அனைவரும் அறிவீர்கள். இந்த கறிவேப்பிலையை துளசியாக்கிய பெருமை நரசிம்மரையே சாரும். நமது முன்னேற்றம், வளர்ச்சி, இந்த தளம், வாசகர்கள், அனைத்தையும் நரசிம்மரின் காலடிகளிலேயே சமர்பிக்கிறோம்.

DSCN4904-copy-copy

திரு.நந்தகுமார் அவர்களை கடந்த மூன்றாண்டுகளாக நாம் அறிவோம். பழகுதற்கு மிகவும் இனிமையானவர். இதுவரை இரண்டு முறை அங்கு நமது உழவாரப்பணி நடைபெற்றுள்ளது. அதற்கு நமக்கு அனுமதி தந்தது இவர் தான். அனுமதி தந்ததோடல்லாமல் நமது குழுவினருக்கு ஆலயம் சார்பாக மடப்பள்ளியில் தயார் செய்த மதிய உணவும், ஏற்பாடு செய்து தந்தார்.

இந்த முறை உழவாரப்பணிக்கு நாம் அனுமதி கேட்டபோது தான், கோவிலுக்கு ஒரு பெரிய பெடஸ்ட்ரல் ஃபேனும். விளக்கு ஏற்ற ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தீப மேடையும் கேட்டு மிக பெரிய புண்ணிய காரியத்திற்கு நம் அனைவரையும் ஆளாக்கினார். அவர் கேட்டுக்கொண்ட படி இரண்டும் வாங்கி ஒப்படைக்கப்பட்டது. (அது பற்றிய பதிவு தனியாக வரும்).

DSCN4805

இன்று அற்புதமாக காட்சியளிக்கும் இந்த ஆலயம் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு புதர் மண்டி, சிதிலமடைந்திருந்தது. ஊர்மக்களுடன் கலந்து பேசி, ஒரு டிரஸ்ட் அமைத்து இந்த ஆலயத்தை புனருத்தாரணம் செய்த பெருமை இவரையே சாரும். இன்று. திருவள்ளூர்,  பேரம்பாக்கம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகிறார்கள்.

மேற்படி நாம் அளித்துள்ள பெரியதாசர் வரலாற்றில் நாம் அளித்திருக்கும் நரசிம்மர் படம் போலத் தான் இந்த ஆலயத்தின் நரசிம்மரும் காட்சியளிப்பார்.

இந்த வார கூட்டு பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். நரசிம்மர் சன்னதியிலேயே பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார்.

பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருப்பவர்கள், கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில் நரசிம்மரை சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

மழலைச் செல்வம் வேண்டும்!

டியர் சுந்தர் சார்,

நான் உங்கள் தளத்தினை வாசித்து வரும் வாசகிகளில் ஒருவர்.என்னுடைய பிரார்த்தனையையும் உங்கள் பிரார்த்தனையில் ஏற்று பிரார்த்திக்கும்படி அன்பாகவும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறேன். திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை பாக்கியமில்லை அத்துடன் மனதும் அமைதியில்லாமல் இருக்கின்றது.எனது மன நிம்மதிக்காகவும் வெகு விரைவில் மழலைச்செல்வம் கிடைப்பதற்காகவும் என் குடும்பத்திற்காகவும் பிரார்த்திக்கும்படி மிகவும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி

தர்ஷி

================================================================

தந்தை நலம் பெற வேண்டும்!

இது நாம் வைக்கும் கோரிக்கை.

நம் தள வாசகியரில் ஒருவரான நித்யா அவர்களின் தந்தைக்கு OPEN HEART SURGERY ஏற்கனவே நான்கு வருடங்களுக்கு முன்னர் வெற்றிகரமாக நடைபெற்றது. இதுவரை எந்த பிரச்சினையும் இல்லாமல் அவர் இருந்து வந்துள்ளார். தற்பொழுது (low suger and low BP). ICU இல் இருக்கிறார்.

மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

அவர் தந்தைக்கு பரிபூரண குணம் ஏற்பட்டு மருத்துவமனையிலிருந்து அவர் விரைவில் வீடு திரும்பவும், எஞ்சியுள்ள நாட்களை எந்த வித நோய் நொடியுமின்றி சந்தோஷமாகவும் சௌக்கியமாகவும் கழிக்கவும் இறைவனை வேண்டுவோம்.

அது தவிர, நித்யா அவர்கள் தனது மண வாழ்க்கை தொடர்பான ஒரு பிரச்சனையிலும் இருக்கிறார். நல்லதொரு முடிவு அதில் ஏற்பட்டு அவரது வாழ்க்கை சிறக்கவும், அவர் மன நிம்மதியுடனும், சந்தோஷமாகவும் வாழவும் இறைவனை வேண்டுவோம்.

================================================================

இந்த வார பொது பிரார்த்தனை

பெருகி வரும் விபத்துக்கள், இயற்கை சீற்றங்கள்!

நாட்டில் நாளுக்கு நாள் விபத்துக்கள் பெருகி வருகிறது. இயற்கையாக நடப்பவை ஒரு பக்கம், மனித தவறுகளால் நடப்பவை மறுபக்கம்.

சென்ற வாரம் தெலுங்கானாவில், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று ஆள்  கிராசிங்கை கடக்க முற்பட்ட பொது, அவ்வழியே வந்த ரயில் மோதி, 18 பிஞ்சு குழந்தைகள் பரிதாபமாக உயிரழந்துள்ளனர். முழுக்க முழுக்க இது வேன் ஓட்டுனரின் தவறே ஆகும்.

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற எண்ணற்ற விபத்துக்கள் ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் நடந்துவரும் நிலையில், புல்லட் ரயில் போன்றவை வந்தால் என்ன ஆகும் என்று சொல்ல முடியவில்லை? நம் நாட்டிற்கு இன்றைய தேவை, புல்லட் ரயில்கள் அல்ல. ஆளில்லா லெவல் க்ராசிங்குகளை முற்றிலும் ஒழித்து, படித்த வேலையில்லா பட்டதாரி இளைஞர்களை அங்கு பணி அமர்த்தவேண்டும். இது போன்ற விபத்துக்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

Telengana Tragedy

மேற்படி விபத்தில் பலியான குழந்தைகளின் ஆன்மா சாந்தியடையவும், அக்குழந்தைகளின் பெற்றோர்கள் ஆறுதல் பெறவும் எல்லாம் வல்ல  இறைவனை வேண்டுவோம்.

இது ஒரு புறமிருக்க, இயற்கையும் தன் பங்கிற்கு தனது சீற்றத்தை வெளிப்படுத்தி பல உயிர்களை பறித்துள்ளது.

மராட்டிய மாநிலம், புனே மாவட்டம் ஆம்பேகாவ் தாலுகாவில் மலையடிவாரத்தில் உள்ள மாலின் கிராமத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 44 வீடுகளும், ஒரு கோவிலும் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின. அந்தக் கிராமம், இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.

PTI7_30_2014_000234B

இந்த நிலச்சரிவு குறித்த தகவல் அறிந்ததும், பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த இயற்கைப் பேரிடரில் பலியானவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 15 பேர் பெண்கள், 5 பேர் குழந்தைகள்.

இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேற்படி விபத்தில் பலியான அனைவரது ஆன்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உரிய நிவாரணம் பெறவும் இறைவனை வேண்டுவோம்.

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgவாசகி தர்ஷி அவர்களுக்கு சந்தான ப்ராப்தி ஏற்பட்டு விரைவில் ஒரு ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கவும், ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் வாசகி நித்யா அவர்களின் தந்தை பரிபூரண குணம் பெற்று விரைவில் வீடு திரும்பவும், எஞ்சியுள்ள நாட்களை அவர் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் தமது குடும்பத்தினருடன் கழிக்கவும், தெலுங்கானா ரயில் கிராசிங் விபத்தில் பலியான குழந்தைகளின் ஆன்மா சாந்தியடையவும் அவர் தம் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும், நாட்டில் விபத்துக்களும் இயற்கை சீற்றங்களும் குறைந்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறோம். அதே போன்று இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் நரசிங்கபுரம் ஆலய டிரஸ்டி திரு.நந்தகுமார் அவர்கள் நரசிம்மர் அருளால் எல்லாம் வளமும் நலனும் பெற்று சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ இறைவனை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஆகஸ்ட் 3,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : ஆப்பூர் ‘நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்’ கோவிலில் பெருமாளுக்கு தொண்டு செய்து வரும் பாலாஜி பட்டர்.

12 thoughts on “ஆண்டவனை பகைத்தாலும் அவன் அடியவர்களை பகைக்காதே – Rightmantra Prayer Club

  1. பெரியசாமி பெரியதாசன் ஆன கதையை படித்து மெய் சிலிர்த்தோம். மிக நீண்ட பதிவு உண்மையான பக்தியுடன் இறைவனை நம்பினால் அவர் நம்மை தடுத்தாட்கொள்வார் என்பது இந்தக் கதையின் மூலம் உறுதி பட தெரிகிறது. நரசிம்மர் படம் அருமை

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு நந்தகுமார் அவர்களுக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    நம் வாசகி தர்ஷி அவர்களுக்கு குழ்ந்தை பாக்கியம் கிடைக்கவும், வாசகி நித்யகல்யாணி அவர்களின் தந்தை பூரண குணம் பெறவும் அவரது மண வாழ்கை சிறக்கவும் மற்றும் உலக ஷேமத்திற்காக பிரார்த்தனை செய்வோம்
    லோகா சமஸ்த சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா

  2. வணக்கம்…

    எங்கும் என்றும் நலமே சூழ இறைவனை பிரார்த்திப்போம்…அவர் அருளால் நல்லதே நடக்கும்……….

  3. நான் உங்கள் தள வாசகி நித்யகல்யாணியின் தோழி.
    தற்போது நாங்கள் பணிபுரியும் இடத்தில் நெருக்கடியான சூழ்நிலை உள்ளது. அதனால் பணக்கஷ்டமோ, மனக்கஷ்டமோ எதுவும் எங்களுக்கு வராமல் இருக்க பிராத்தனை செய்து கொள்ளவும்.

    1. கவலை வேண்டாம். உங்களுக்காக பிரார்த்திக்கும் அதே நேரம், இதே போன்று வேறு ஒரு வாசகியும் தெரிவித்திருக்கிறார். அது குறித்த உரிய தீர்வுடன் தனிப் பதிவு வெளிவரும்.
      – சுந்தர்

  4. வாசகி தர்ஷி அவர்களுக்கு சந்தான ப்ராப்தி ஏற்பட்டு விரைவில் ஒரு ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கவும், ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் வாசகி நித்யா அவர்களின் தந்தை பரிபூரண குணம் பெற்று விரைவில் வீடு திரும்பவும், எஞ்சியுள்ள நாட்களை அவர் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் தமது குடும்பத்தினருடன் கழிக்கவும், தெலுங்கானா ரயில் கிராசிங் விபத்தில் பலியான குழந்தைகளின் ஆன்மா சாந்தியடையவும் அவர் தம் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும், நாட்டில் விபத்துக்களும் இயற்கை சீற்றங்களும் குறைந்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறோம். அதே போன்று இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் நரசிங்கபுரம் ஆலய டிரஸ்டி திரு.நந்தகுமார் அவர்கள் நரசிம்மர் அருளால் எல்லாம் வளமும் நலனும் பெற்று சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ இறைவனை வேண்டுவோம்.

  5. வணக்கம்,

    எனது மகள் ஜ.ரத்னா பிரபாவிற்கு திருமணம் விரைவில் நடை பெற வேண்டி பிரார்த்தி கொள்ளும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

    நன்றி வணக்கம்

    க.த. janardhanan

    1. பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கைகளை பின்னூட்டத்தில் அளிக்கவேண்டாம். என்னால் நினைவில் வைத்திருப்பது கஷ்டம். சற்று விரிவாக உங்கள் கோரிக்கையை டைப் செய்து மின்னஞ்சல் அனுப்பவும். அடுத்து வரும் வாரங்களில் ஒன்றில் வெளியிடப்படும்.

      நல்லதே நடக்கும்.நன்றி.

      – சுந்தர்

  6. Dear Mr.Sundar, I have been following your website for more than Six months. You are doing a great job. Especially this prayer club. Each week u r bringing a stunning story. May god bless you and all right mantra readers all wealth and health.

  7. தர்ஷி அவர்கள்,திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருகோயில் சென்று அங்கு[ காலை 8,9 அல்லது 10 மணிக்கு மட்டுமே தினமும் ]பிரம்மஹத்தி தோஷம் பரிகாரம் செய்து கொள்ளவும் .[அலுவலகத்தில் 700 ரூபா கட்டணம்]………இந்த பரிகாரம் செய்தால் தங்களின் முன் ஜென்ம தோசம் இருந்தால் முற்றிலும் அகன்று விடும் ..பின்பு அங்கு உள்ள அஸ்வமேதப் பிரகாரம், கொடுமுடிப் பிரகாரம் 5 முறை வலம் வரவும் ..பின்பு அங்கிருந்து உடனே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் சென்று அங்கு உள்ள சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்[முக்குளம் ]நீராடி சுவாமி ,அம்பாள் ,புத பகவான் ,பிள்ளை இடுக்கி அம்மன் அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும் .பின்பு அங்கிருந்து மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் சென்று அங்கு உள்ள புத்திர காமேஸ்வர் தீர்த்தத்தில் நீராடி ஈசன் ,புதிய,பழைய அம்பாள்கள் அபிசேகம் ,அர்ச்சனை செய்து ,வெளி பிரகாரத்தில் தனி சன்னதி மற்றும் விமானத்தின் கீழ் உள்ள புத்திர காமேஸ்வர் அபிசேகம் ,அர்ச்சனை செய்து வழிபட்டு நெய் தீபம் ஏற்றி ,5 முறை வலம் வரவும் ..பின்பு அருகில் உள்ள திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் சென்று சுவாமி ,அம்பாள் வழிபட்டு ,பின்பு மூலவர் மாசிலாமணீஸ்வரர் அருகில் உள்ள தனி சன்னதியில் கோயில் கொண்ட புத்திரத் தியாகேசர்[இவர் முசுகுந்தனுக்கு மகப்பேறு அருளி இத்தலத்தைத் திருவாரூராகவும் தம்மைத் தியாகேசராகவும் காட்டிநார் ] அபிசேகம் ,அர்ச்சனை செய்து,நெய் தீபம் ஏற்றி வழிபடவும்..பின்பு அருகில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் திருமடம் சென்று திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசன்னிதானதிடம் ஆசி வாங்கி விடவும் …பின்பு அதே நாளிலோ அல்லது ஒரு அமாவாசை தினத்திலோ கும்பகோணம்சுவாமி மலை அருகில் உள்ள திருக்கருகாவூர் சென்று புத்திர பாக்கியம் தாமதமாகும் தம்பதியினர், இந்த கோவிலில் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் பாதத்தில் வைத்து பூஜித்துத் தரப்படும் நெய்யை இரவில் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும். [கண்டிப்பாக 48 நாட்கள் சாப்பிட வேண்டும் ,அசைவம்,மது ,புகை கூடவே கூடாது .பெண்கள் வீட்டுவிலக்கு நாட்களில் மட்டும சாப்பிட வேண்டாம் ..ஆனால் ஆண்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும் ] ….அருகில் உள்ள திருகோயில் ஒன்றில் காலபைரவர் வழிபாடும் செய்து வாருங்கள் …பதிகம் 48 நாட்கள் வீட்டில் எப்போதும் படித்து வரவும் …

    திருச்சிற்றம்பலம்

    மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
    பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை
    இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்
    துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.

    நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
    உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்
    கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனை
    நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே.

    பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி
    சீராலே பாடலா டல்சிதை வில்லதோர்
    ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச்
    சேராதார் இன்பமா யந்நெறி சேராரே.

    குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்
    மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்
    மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பஞ்
    சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே.

    சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தங்
    கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள்
    புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்
    உடையானை யல்லதுள் காதென துள்ளமே.

    மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
    கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை
    வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பந்
    தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே.

    விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார்
    கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை
    நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத்
    தண்ணலா ராடுகின் றவலங் காரமே.

    தூயானைத் தூயவா யம்மறை யோதிய
    வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
    தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
    மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.

    நாகம்பூண் ஏறதே றல்நறுங் கொன்றைதார்
    பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர்
    ஏகம்பம் மேவியா டுமிறை யிருவர்க்கும்
    மாகம்பம் அறியும்வண் ணத்தவ னல்லனே.

    போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
    வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்
    ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
    நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே.

    அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக்
    கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையால்
    சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்
    பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே.

    திருச்சிற்றம்பலம்

    திருச்சிற்றம்பலம்

    கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
    பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
    பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
    வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.

    பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
    வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
    வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
    தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

    மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதிஇரவி
    எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
    பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
    விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

    விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
    மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
    தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
    கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.

    வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
    மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
    மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
    ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.

    தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
    ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
    பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
    வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

    சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
    அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
    மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
    முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

    பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
    உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
    கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
    விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

    கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
    ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
    வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்(று)
    உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.

    போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
    பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
    வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டானென்
    றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.

    தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
    விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
    பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
    மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.

    திருச்சிற்றம்பலம்
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    1. சிறந்த பரிகாரங்களுக்கு நன்றி விஜய் பெரியசுவாமி அவர்களே.

      திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். வரகுண பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கியவராயிற்றே அவர்.

      நம் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் இந்த ஜென்மத்திலோ அல்லது முன் ஜென்மங்களிலோ பிரம்மஹத்தி தோஷம் இருக்க வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது மகாலிங்க சுவாமியை தரிசித்து பிரம்மஹத்தி தோஷ பரிகாரம் செய்துகொள்வது நல்லது. குறிப்பாக புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள்.

      – சுந்தர்

      1. சுந்தர் சார் ,நம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியின் திருகோயில் குறித்து,அவரது அற்புதங்கள் குறித்து விரிவான தகவல்களை நம் தளத்தில் அளியுங்கள் ….நன்றி சார் ..சிவாய சிவா

  8. நித்யா அவர்கள் ஒருமுறை உங்கள் தந்தையை அழைத்து கொண்டு [முடிந்தால் ]அல்லது குடும்பத்தில் யாராவது ஒருவர் மயிலாடுதுறை அருகில் உள்ள மூவலூர் மங்களாம்பிகை உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் திருகோயில் நெய் தீபம் ஏற்றி ,அர்ச்சித்து வழிபடவும் .பின்பு அங்கிருந்து நீடா மங்கலம் அருகில் உள்ள “கோயில் வெண்ணி” வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோயில் சென்று [அரை கிலோ வெள்ளை ரவை ,அரை கிலோ வெள்ளை சர்க்கரை [சீனி ] வாங்கி சென்று அங்கு உள்ள முறைப்படி வழிபடவும் ..பின்பு அருகில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சி நாதாச்வாமி திருகோயில் சென்று,குப்தகங்கையில் நீராடி , நெய் தீபம் ஏற்றி வழிபடவும் ..அது உங்கள் தந்தையின் நலத்தையும் காக்கும் ,உங்களையும் உங்கள் கணவருடன் சேர்த்து வாழசெய்யும் …அதாவது ஸ்ரீவாஞ்சியம் நம் நோய்களையும் தீர்கும் ;யம பயம் போக்கும் ;திருமண பிரச்சனைகளையும் அடியோடு நீக்கி தம்பதிகளை சேர்த்து வைகும்[மகாலக்ஷ்மியை[ஸ்ரீ ] திருமணம் செய்ய விரும்பி விஷ்ணு தவம் இருந்த தலம் என்பதால் ஸ்ரீ வாஞ்சியம் எனும் பெயர் வந்தது.]….. [கிருதயுகத்தில் விஷ்ணு பெருமானிடம் கோபம் கொண்ட மகாலட்சுமி அவரை விட்டுச் செல்ல, மனைவி இல்லாமல் வாடிய திருமால் இந்த திருவாஞ்சியம் வந்து தேவர்கள் புடை சூழ தவமிருந்து, இத்தீர்த்தத்தில் நீராடி வாஞ்சிநாதனை வழிபட, சிவபிரான் லக்ஷ்மி தேவியின் கோபம் தீர்த்து பெருமாளுடன் சேர்த்து வைத்தார். இதனாலேயே இத்தலம் திருவிழைந்ததென்று எனும் பொருள்படும் படியாக திருவாஞ்சியம் எனும் பெயருடன் விளங்குகிறது]…………..சென்னை அருகில் ,மேல்மருவத்தூர் அருகில் உள்ள சேயூர்[செய்யூர்] கந்தசுவாமி திருகோயில் சென்று தொடர்ந்து 8 தேய்பிறை அஷ்டமி நாளில் மாலை வேளையில் சென்று அங்கு நடை பெறும் “பூத வேதாள பைரவர் பூஜை “கலந்து உங்கள் நட்சத்திர பூத கணம் ,மூலவர் முருகன் ,பைரவர் நெய் தீபம் ஏற்றி வழிபடவும் ..நல்லது விரைவில் நடக்கும் ..பண
    கஷ்டம் ,மன கஷ்டம் அகலும் ..பதிகம் 48 நாட்கள் அசைவம் தவிர்த்து படித்தல் நலம் பயக்கும் ….

    வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக்
    கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்
    அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி
    எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே.

    வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச்
    சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்
    குருந்தம் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவந்
    திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.

    வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து
    பெண்ணமர்ந் தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
    விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள்
    திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.

    தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து
    காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்
    மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்
    ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே.

    தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து
    பாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ
    வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி
    சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.

    சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்
    தாகம்பெண் ணொருபாக மாக அரவொடு நூலணிந்து
    மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்
    ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே.

    வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து
    நாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந்
    தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர்
    சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.

    பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான்
    அரவஞ் சேர்சடை அந்தணன் அணங்கினொ டமருமிடம்
    கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்
    மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வில்வினை மாய்ந்தறுமே.

    குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்
    மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்
    விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றி னாலவியக்
    கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே.

    ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை
    காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்
    பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்
    சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே.

    திருச்சிற்றம்பலம்
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
    நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய்
    வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகேட்
    டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

    கேடும் பிறவியும் ஆக்கினாருங் கேடிலா
    வீடு மாநெறி விளம்பினாரெம் விகிர்தனார்
    காடுஞ் சுடலையும் கைக்கொண்டெல்லிக் கணப்பேயோ
    டாடும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

    கந்தங் கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி
    வெந்த பொடிநீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார்
    கொந்தண் பொழிற்சோலை யரவின்தோன்றிக் கோடல்பூத்
    தந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

    பால மதிசென்னி படரச்சூடி பழியோராக்
    கால னுயிர்செற்ற காலனாய கருத்தனார்
    கோலம் பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை
    ஆலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

    ஈர்க்கும் புனல்சூடி இளவெண்டிங்கள் முதிரவே
    பார்க்கு மரவம்பூண் டாடிவேடம் பயின்றாருங்
    கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த்
    தார்க்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

    பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
    மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
    பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
    டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

    நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும்
    இணங்கு மலைமகளோ டிருகூறொன்றாய் இசைந்தாரும்
    வணங்குஞ் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கேட்
    டணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

    கணையும் வரிசிலையும் எரியுங்கூடிக் கவர்ந்துண்ண
    இணையில் எயின்மூன்றும் எரித்திட்டாரெம் இறைவனார்
    பிணையுஞ் சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர்ந்
    தணையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

    கவிழ மலைதரளக் கடகக்கையால் எடுத்தான்றோள்
    பவழ நுனைவிரலாற் பையவூன்றிப் பரிந்தாரும்
    தவழுங் கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூத்
    தவிழும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

    பகலும் இரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா
    திகலும் இருவர்க்கும் எரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும்
    புகலும் வழிபாடு வல்லார்க்கென்றுந் தீயபோய்
    அகலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

    போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
    வேழம் வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும்
    கேழல் வினைபோகக் கேட்பிப்பாரும் கேடிலா
    ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

    சாந்தங் கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன்
    ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளை
    வேந்த னருளாலே விரித்தபாடல் இவைவல்லார்
    சேர்ந்த விடமெல்லாந் தீர்த்தமாகச் சேர்வாரே.

    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    திருச்சிற்றம்பலம்

    வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
    பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
    தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
    என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே.

    கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்
    மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்
    மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்
    ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே.

    மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்
    நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்
    தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
    பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.

    சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே
    சால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை
    சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்
    ஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே.

    கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்
    தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர்
    செய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சியத்
    தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே.

    அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும்
    இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே
    பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்
    மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே.

    விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே
    கண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார்
    பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சியத்
    தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே.

    மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்
    வாடி யூடவரை யாலடர்த் தன்றருள் செய்தவர்
    வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
    பாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.

    செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை
    கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
    நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத்
    தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே.

    பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்
    மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை
    வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத்
    தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே.

    தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத்
    தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால்
    நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
    ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே.

    திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *