Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

print
சுமார் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் மடத்தில் பெரியவா அணுக்கத் தொண்டர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

“இங்கே ஏகாம்பரேஸ்வரர் கோவில் பக்கத்துல ஒரு தெருவுல ஒரு சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் இருக்குன்னு மடத்து குறிப்புக்கள் சொல்றது. உங்க யாருக்காச்சும் அது பத்தி தெரியுமா??”

சிஷ்யர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“எங்களுக்கு தெரிஞ்சி அப்படி எதுவும் இல்லியே பெரியவா”

பெரியவா தீர்க்கமாக யோசித்தார். “மடத்து குறிப்புக்கள் தப்பா இருக்காதே…”

“நேர்லேயே போய் பார்த்துடுவோமே…” என்றவர் உடனே பரிவாரங்களுடன் மடத்து குறிப்புகள் சுட்டிக்காட்டிய இடத்துக்கு சென்றார்.

Anandha Padma Naba Eswarar

அது ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு அருகே உள்ள லிங்கப்பன் தெரு.

அங்கு சென்றவுடன் ஒரு குறிப்பிட்ட வீட்டு முன் நின்றார்.

“குறிப்புக்கள் சொல்றது இந்த வீடு தான்!”

“இது சந்திரமௌலி ராவ் வீடோல்லியோ…” சிஷ்யர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

நடமாடும் தெய்வமே தங்கள் வீட்டு முன்னர் வந்து நிற்பதை கண்ட அந்த குடும்பத்தினர் பரவசமடைந்தனர்.

“பெரியவா பாதம் என் கிரகத்தில் பட நாங்கள் கொடுத்து வைத்திருக்கனும்…”

அவர்களுக்கு தனது ஆசிகளை வழங்கிய பெரியவா சட்டென்று தேங்காய் உடைப்பது போல விஷயத்தை உடைத்தார்.

“உன் வீட்டை மடத்துக்கு விற்க முடியுமா?”

மகா பெரியவா இப்படி திடுதிப்பென்று கேட்டவுடன் அந்த கிரகஸ்தரால் உடனே பதில் சொல்ல முடியவில்லே.

நாக்குழறி திக்கி திணறி “அது வந்து பெரியவா…. வந்து… இந்த வீடு ஒன்னு தான் எனக்குன்னு இருக்குற ஒரே சொத்து” என்றார்.

பெரியவா புன்முறுவல் செய்தபடி, “உன் குடும்பத்தார் கிட்டே கலந்து பேசு. உனக்கு எப்போ இந்த வீட்டை விற்கணும்னு தோணுதோ அப்போ என்னை வந்து பார்!” என்று கூறிவிட்டு புறப்பட்டார்.

சிறிது காலம் சென்றது.

ஒரு நாள் சந்திரமௌலி ராவ் பெரியவாவை தரிசிக்க வந்தார்.

ராவ் சவரம் செய்து பல நாட்கள் ஆகியிருப்பதை உணர்த்தும் விதமாக முகத்தில் தாடி முளைத்திருந்தது. கண்களில் சோகம்.

“சொல்லுப்பா… எப்படியிருக்கே?”

“மஹா சுவாமிகளுக்கு தெரியாததா? என் வீட்டை இப்போ விற்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்… என் பையனுக்கு உடம்பு சரியில்லே. ஆப்பரேஷன் செய்யவேண்டியிருக்கு. ட்ரீட்மெண்டுக்கு எதிர்பாராம நிறைய பணம் தேவைப்படுது!”

“ஒரு நல்ல காரியத்துக்காகத் தான் பகவான் இப்படி நாடகமாடுறான். உன் பையனுக்கு ஒன்னும் ஆகாது கவலைப்படாதே. எல்லாரும் சேஷமா இருப்பேள். மடம் சார்பா வேறு ஒரு நல்ல இடத்துல உனக்கு வீடு ஒதுக்கச் சொல்றேன்” என்று கைகளை உயர்த்தி ஆசி கூற, சாட்சாத் அந்த சர்வேஸ்வரனே கூறியது போலிருந்தது சந்திரசேகர் ராவுக்கு.

கண்களில் ஓரமாக வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு பெரியவாளை வணங்கிவிட்டு புறப்பட்டார்.

சற்று நேரத்திற்கெல்லாம் கணபதி ஸ்தபதி பெரியவாளை தரிசிக்க வந்தார்.

“நேரே காமாட்சியம்மன் கோவிலுக்கு போய் அம்பாளை தரிசனம் பண்ணிட்டு, லிங்கப்பன் தெருவில் இருக்குற சந்திரசேகர் ராவ் வீட்டுக்கு போய் நான் சொல்ற இடத்தை யோசிக்காம தோண்டு… ஒத்தாசைக்கு ஆளுங்களை கூட்டிகிட்டு போ”

Periya linga pooja

“பெரியவா உத்தரவு” என்று கூறி வணங்கிவிட்டு கணபதி ஸ்தபதி உடனே காமாட்சியை தரிசிக்க சென்றார்.

அவர் சென்றவுடன் பெரியவா நிஷ்டையில் ஆழ்ந்தார். அவர் மனம் இறைவனின் திருநாமத்தை ஜபித்தபடி இருந்தது.

சந்திரசேகர் ராவ் வீடு.

கணபதி ஸ்தபதி பெரியவா ஆட்களுடன் சென்று பெரியவா குறிப்பிட்ட இடத்தை பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்…. காரணம் அது கழிவறை. அந்த காலத்து கழிவறை.

“இந்த இடத்திலேயே தோண்டுறது?” கணபதி ஸ்தபதி தயங்கினார்.

“பெரியவா காரணமில்லாம சொல்லமாட்டாரே…”

==========================================================

Check our exclusive articles…

மார்கழியில் என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ?

விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன? 

ஆங்கிலப் புத்தாண்டை இப்படியும் வரவேற்கலாமே!

வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!

கோ பூஜையும் வேத சம்ரட்சணமும்

=========================================================

பின்னர் தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு “ம்…தோண்டுங்க…” ஆட்களை பணித்தார்.

ஆட்கள் மளமளவென தோண்ட ஆரம்பித்தார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் ‘டங்’ என்று சத்தம் கேட்க, ஆட்கள் தோண்டுவதை நிறுத்தினார்கள்.

பாதுகாப்பாக மண்ணை விலக்கிவிட்டு பார்த்தால் ஒரு அழகிய சிவலிங்கம்…!

“சம்போ மகா தேவா” கணபதி ஸ்தபதி கதறியே விட்டார்.

லிங்கம் இருக்கும் இடம் கழிவறை இருந்த பகுதியில் என்பதால் எத்தனை விரைவாக அதை அப்புறப்படுத்த முடியுமோ அத்தனை விரைவாக அதை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. லிங்கம் அசைந்து கொடுக்கவில்லை.

“பரமேஸ்வரனே அங்கே இருந்திருக்கான்… எனக்கு என்னடா அங்கே வர்றதுக்கு?”

லிங்கத்தை ஒரு பெரிய கயிற்றில் கட்டி இழுக்க முயற்சித்தார்கள். அப்போதும் முடியவில்லை.

கோவில் யானையை கொண்டு இழுக்கலாம் என்று யாரோ யோசனை கூற, ஏகாம்பரேஸ்வரர் கோவில் யானை கொண்டு வரப்பட்டு, ஒரு பெரிய தாம்புக் கயிற்றில் லிங்கம் கட்டப்பட்டு யானையை கொண்டு இழுக்கப்பட்டது. அப்போதும் லிங்கம் அசைந்து கொடுக்கவில்லை.

கணபதி ஸ்தபதி உடனே பெரியவாவை தரிசிக்க விரைந்தார்.

மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க… பெரியவா முன் நின்றவர்…. நடந்ததை விளக்கினார்.

“சரி… வா புறப்படு….”

கணபதி ஸ்தபதி திடுக்கிட்டார். “பெரியவா அது வந்து… நீங்கள்லாம் அந்த மாதிரி இடத்துக்கு வரவேண்டாமே…”

“நம்மை படைச்ச, நமக்கெல்லாம் படியளக்கும் பரமேஸ்வரனே அங்கே இருந்திருக்கார்… எனக்கு என்னடா அங்கே வர்றதுக்கு….” என்றவர் இறங்கி நடக்கத் துவங்க… அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினார் கணபதி ஸ்தபதி.

சந்திரசேகர் ராவ் வீட்டின் புழக்கடை.

தோண்டப்பட்ட இடத்தில் தட்டுப்பட்ட லிங்கத்தை பெரியவா பார்த்து பரவசமடைந்தார். அங்கேயே சிறிது நேரம் நின்று கண்களை மூடி ஜபித்தவர், ஒரு சில வில்வ இலைகளை சிவலிங்கத்தின் மீது போட்டு, பூஜை செய்து, கற்பூர ஹாரத்தி காண்பித்தார்.

“ம்… இப்போது லிங்கத்தை எடுங்கள்” கணபதி ஸ்தபதியிடம் கட்டளையிட்டார்.

யானை கட்டி இழுத்தபோது கூட அசைந்துகொடுக்காத லிங்கம் இந்த முறை சுலபமாக வந்தது.

“ஜெய ஜெய சங்கர… ஹர ஹர சங்கர….” கோஷம் அந்த பிரதேசத்தில் எதிரொலித்தது.

“இந்த இடத்தில் இன்னும் தோண்டுங்கள்… வேறு சில பொக்கிஷங்களும் இங்கு புதைந்துள்ளன” என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a non-commercial website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Rightmantra is running on readers’ contributions only. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details: 

Name : Rightmantra Soul Solutions   A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account   Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions, Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

ஆட்கள் மேலும் தீவிரமாக தோண்ட, அடுத்த நாள் “நங்” என்று கடப்பாரை கல்லின் மீது படும் சத்தம்…

சற்று எச்சரிக்கையாக மண்ணை விலக்கிவிட்டு பார்த்தபோது, ஆதிசேஷனின் ஐந்து தலைகள் தெரிந்தன. கூட்டத்தின் பரவசமடைந்தனர். சற்று மண்ணை விலக்கிவிட்டு பார்த்தால், பள்ளிக்கொண்ட நிலையில் ரங்கநாதர்!!!

சேற்றில் செந்தாமரை தான் கிடைக்கும். சர்வேஸ்வரனும் கூடவே செந்தாமரைக் கண்ணனும் கிடைத்ததும் இங்கே மட்டும் தான்!

ஸ்ரீமடத்தில் பெரியவாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Periyava Unearths Ranganathar
* இணைக்கப்பட்டுள்ள ஓவியம், நமது தளத்தின் ஓவியர் திரு.ரமீஸ் அவர்கள் இன்ஸ்டண்டாக வரைந்தது. நமது எண்ணத்திற்கு வடிவம் கொடுப்பதில் எக்ஸ்பர்ட். இவர் ஒரு இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய ஜெய சங்கர… ஹர ஹர சங்கர!!

To download and save the image : http://rightmantra.com/wp-content/uploads/2015/12/Periyava-Unearths-Ranganathar.jpg

பெரியவா விரைந்து வர, பெரியவா முன்னிலையில் அரங்கன் எந்த சேதாரமுமின்றி மீட்கப்பட்டான். அரங்கனின் உருவம் முழுதும் சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. பெரியவா பொறுமையாக காத்திருந்து கண்ணீர் மல்க அரங்கனை சேவித்துவிட்டு புறப்பட்டார்.

தொடர்ந்து பெரியவாவின் கட்டளைப்படி அந்த இடத்தில் ஒரு சிறுகோவில் கட்டப்பட்டு லிங்கமும், அதற்கு மேல் பள்ளிகொண்ட ரங்கநாதரும் பிரதிஷ்டை செய்யப்பட்டார்கள்.

அரங்கனோடு சேர்ந்து கிடைத்தபடியால் பெரியவா இந்த ஈஸ்வரனுக்கு “ஸ்ரீ அனந்த பத்ம நாப ஈஸ்வரர்” என்று திருநாமம் சூட்டினார்.

ஒவ்வொரு பிரதோஷமும், மாத சிவராத்திரியும் இங்கு மிகவும் விசேஷம். மடம் சார்பாக இங்கு தினமும் இரண்டு வேத வித்துக்கள் வந்து பூஜை செய்துவிட்டு செல்கிறார்கள். ♦

==========================================================

‘நேரில் பார்த்தது போல எழுதியிருக்கிறீர்களே…?’ என்பது தானே தற்போது உங்கள் மனதில் தோன்றும் கேள்வி.

பெரியவா கடாக்ஷத்தால் சென்ற வாரம் மேற்படி லிங்கப்பன் தெருவுக்கு சென்று சம்பந்தப்பட்ட கோவிலை தேடிக்கண்டுபிடித்து, ஸ்ரீ அனந்த பத்ம நாப ஈஸ்வரரை கண்குளிர தரிசித்து கோவிலின் வரலாற்றை பலரிடம் விசாரித்து, நடந்ததை நமது பாணியில் விவரித்திருக்கிறோம்.

இந்த கோவிலின் வரலாறு யாருக்கும் சரிவர தெரியவில்லை. எனவே பலரிடம் விசாரித்தோம். கோவிலுக்கு அந்த நேரம் வந்திருந்த பெரியவர் ஒருவர் நம்மிடம் லிங்கத்தை யானை கட்டி இழுத்த கதையை கூறினார். இப்படியாக கேட்டு கேட்டு தகவல்களை சேகரித்தோம்.

“நீங்கள் மட்டும் தரிசித்தால் போதுமா? நீங்கள் பெற்ற இன்பத்தை நாங்களும் பெறவேண்டாமா? நாங்களும் சேற்றில் கிடந்தச் சர்வேஸ்வரனையும் சக்ரதாரியையும் தரிசிக்க வேண்டாமா??” என்பது தானே உங்கள் அடுத்த கேள்வி!

பொறுமை… பொறுமை… நாளை புகைப்படங்களுடன் விரிவான பதிவு அளிக்கப்படும்!

==========================================================

Articles on Maha Periyava….

திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!

ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்!

மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!

நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

==========================================================

[END]

8 thoughts on “பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

 1. ரோமம் சிளிக்கிறது சார்//. பர பரமம் கடவுளேதான் சார்,

  தங்களின் படங்களை எதிர்பார்கிறேன் .

  நன்றி,

  தங்களின்
  சோ. ரவிச்சந்திரன்

 2. படிக்கும்போதே தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. விரைவில் கஞ்சி சென்று ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரனை தரிசிப்போம்.

  தங்களது எழுத்து நடை அற்புதம். தொடரட்டும் தங்களது தெய்வீக பணிகள்.

  நன்றி
  ப.சங்கரநாராயணன்

 3. படிக்கும்போதே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. விரைவில் காஞ்சி சென்று தரிசிக்க வேண்டும் என ஆவல் வருகிறது. தங்கள் எழுத்தை படிக்கும்போது நேரில் பார்ப்பதுபோல் உள்ளது.

  நன்றி.

 4. மிக அருமையான பதிவு, படிப்பதற்கே சிலிர்க்கிறது. பதிவிற்கு நன்றி சுந்தர் சார்.

 5. ஒவ்வொரு முறையும் தங்கள் பதிவுகள் மெருகேறி வருகிறது. தங்கள் பதிவை பார்க்கும்போது (ஆம் படிக்கும்போது அல்ல) அதற்க்கு பின் உள்ள உழைப்பும், வாசகர்களுக்கு மஹா பெரியவளின் திருவிளையாடல் தெரிய வேண்டும் புரிய வேண்டும் என்ற தங்கள் அவா புரிகிறது.

  மெய் சிலிர்க்கும் அனுபவம் தங்கள் எல்லா மஹா பெரியவளின் கதைகளில் (தத்துவங்களில்). தங்களுக்கும் நம் வாசகர் அனைவருக்கும் மஹா பெரியவா அருளாசி நிச்சயம் கிடைக்கும். தாங்களும் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ பெரியவளின் பாதம் பணிகிறேன்.

  ஒன்று மட்டும் உறுதி. இந்த அளவிற்கு எழுத்தாற்றல் இறையருள் ஒருவருக்கு தான் அருளப்படும். பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போல் நானும் கொஞ்சம் வாசம் வாங்கி கொள்கிறோம்.

  ஓவியம் வரைந்த கைகளுக்கும் தங்கள் வர்னைனை கொடுத்த கைகளுக்கும் தங்க காப்பு போடலாம். பெரியவளின் அருள் வேண்டும். சரணம் சரணம் சரணம். சாயி சரணம்.

 6. மிகவும் அருமையான உள்ளத்தை உருக்கும் அற்புத பதிவு. சுவாமிகள் பேசுவதை நேரில் கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள் காஞ்சி சென்றால் இந்த கோவிலுக்கும் அவசியம் செல்கிறேன். தெரியாத விசயங்களையும், கோவில்களைப் பற்றியும் அக்கு வேற ஆணி வேறாக ஆராய்ந்து பதிவு அளிப்பதில் ரைட் மந்த்ராவிற்கு நிகர் வேறு இல்லை

  வாழ்க .. வளமுடன்
  நன்றி
  உமா வெங்கட்

 7. மஹா ஸ்வாமிகளின் பேரருளால் சிறப்பான தெய்வப் பணியை மேற்கொண்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *