Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, October 11, 2024
Please specify the group
Home > Featured > ஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி?

ஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி?

print
க்தியின் மூலம் முக்தியடைய விரும்பும் அனைத்து அன்பர்களுக்கும், இன்முகம் காட்டி நிறைவான அன்பு செலுத்தி, அவர்களை வழிநடத்திச் சென்றவர் ரமண மகரிஷி. பரம்பொருளின் சொரூபமாக விளங்கிய ரமணர், “நான் யார் என்ற கேள்வியை நமக்குள் கேட்க வேண்டும். இந்தக் கேள்வியே தேவையற்ற எண்ணங்களை எழவிடாமல், மனதை அடக்கும். அதுவே ஆத்ம தரிசனம்!” என்றார்.

ரமண ஜயந்தி

சிஷ்யர்கள் சந்தேகங்களை கேட்கும்போது மெய்ஞாநியானவன், மிகப் பெரிய நூல்களையும் வேத உபநிடதங்களையும் தேடவேண்டியதில்லை. அவர்கள் உள்ள சூழலில் இருந்தே அவர்களுக்கு விடையை தரமுடியும். கீழ்கண்ட சம்பவங்கள் உணர்த்துவது அது தான்.

ரமணரின் திருவிளையாடல்களை பொறுத்தவரை, அவரவருக்கு உள்ள பக்குவத்தை பொறுத்து, அதன் பொருள் விரியும். முன்பு படித்த ஒன்றை மறுபடியும் படித்துப் பாருங்களேன். நாம் சொல்வது எத்தனை உண்மை என்று புரியும்.

உதாரணத்திற்கு இந்த பதிவில் அளித்திருக்கும் முதல் அனுபவத்தில் ‘ஒன்றுக்கும் உதவாது’ என்று கூறப்பட்ட ஒன்று எப்படி அனைவரும் மெச்சும் விதமாக மாறியது என்று பாருங்களேன்…! இதை நாம் கூறாவிட்டால் உங்களுக்கு தோன்றியிருக்குமா என்று தெரியாது. இப்படி பல விஷயங்களை பட்டியலிடலாம். எனவே ஏற்கனவே நாம் அளித்த பதிவுகளை ஒரு முறை மீண்டும் நிதானமாக படிக்கவும்!

இரண்டாவது அனுபவம் வெடிச்சிரிப்பு ரகம். மனிதர்களின் சைக்காலஜியை எத்தனை அழகாக படம்பிடித்து காட்டிவிட்டார் பகவான்!

எது முக்கியம்?

கவானின் ஒரு ஜெயந்தியின்போது அன்பர்கள் போதுமான அளவு உணவுப் பண்டங்கள் அனுப்பியிருந்தார். ஓர் அன்பர் நிறைய கத்தரிக்காய் மூட்டைகள் அனுப்பியிருந்தார். அதனால் உணவில் தினமும் கத்தரிக்காய் தவிர்க்க முடியவில்லை. கத்தரிக்காய் காம்புகள் கடைசியில் பெரிய குவியலாக குவிந்தன.அதைக் கால்நடைகள் கூடச் சாப்பிடாது.

Ramanar

பகவான் கத்தரிக்காய் காம்புகளைக் கொஞ்சம் பட்டாணி வேக வைக்கச் சொன்னார். ஆறுமணி நேரமாகியும் வேகவில்லை. பகவான் சரியான தருணத்தில் வந்து, ”எப்படி வந்திருக்கு?” என்று கேட்டார். ‘நாம என்ன காயா வேக வைக்கறோம்? இரும்பு ஆணியையில்லே வேக வைக்கறோம்!’ என்றாள் சம்பூர்ணம்மாள். பகவான் ஒன்றும் கூறாமல் கரண்டியால் கிண்டி விட்டுச் சென்று விட்டார். சிறிது நேரத்தில் அது வெந்து அந்தக் கறி மிகப் பிரமாதமாக அமைந்தது.

”அதை என்ன கறின்னு யாராவது சொல்றாளான்னு பாப்போம்” என்றார் பகவான். யாராலும் கூற இயலவில்லை. எல்லோரும் அதை ரசித்து ருசித்து இரண்டுமுறை வாங்கிச் சாப்பிட்டு அதை செய்த சம்பூரணம்மாளைப் புகழ்ந்தனர். பகவான் மிகச் சிறிதளவே போட்டுக் கொண்டார். ஒரு வாய் அளவிருக்கும். சம்பூர்ணம்மாள் எவ்வளவு கேட்டும் பகவான் போட்டுக் கொள்ளவில்லை.

அடுத்த நாள் பகவான் கிச்சனில் ஒருவரிடம், ”சம்பூரணத்துக்கு ரொம்ப வருத்தம் நான் சாப்பிடலேன்னு. ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டவாளாம் பின்னே யாராம்? எல்லா வாயிலேயும் நான்தானே சாப்பிடறேன். யார் சாப்பிட்டா என்ன? ”சமைக்கறது தான் முக்கியம். சாப்பிடறவாளோ, சமைக்கறவாளோ இல்லை.

”பக்தி சிரத்தையா ஒரு கார்யத்தை பண்றதே தான் அதுக்கு பலன். அந்த கார்யம் பிறகு என்ன ஆகறதோ அது முக்கியமில்லை. ஏன்னா அது நம்ம கையிலே இல்லை” என்றார். சம்பூரணம்மாளின் சரணாகதி சம்பூரணமானது.

(இந்த ஒரு சம்பவத்திலேயே பல நீதிகளை சொல்ல முடியும். வாசகர்கள் யாராவது முயற்சித்து ஒன்றிரண்டு சொன்னால் மகிழ்ச்சி! திரும்ப படியுங்கள் புரியும்!!)

ஒருத்தர் செய்வது பிடிக்காமல் போவதற்கு முக்கிய காரணம்

ராஜா ஐயர் போஜனப் பிரியர். ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். கிச்சனுக்குள் எந்த நேரமும் சென்று ஏதாவது சமைத்ததோ சமைக்காததோ எடுத்துச் சாப்பிடுவார். இதை பக்தர் ஒருவர் பகவானிடம் கூறினார். “இந்த மனுஷன் எதையாவதுப் போய் சாப்பிட்டுக் கொண்டே இருக்கார். ஆசிரமத்து விதிமுறைன்னு ஒண்ணு இருக்கோல்லியோ” என்றார் பக்தர்.

பகவான், ”ஏன் நீயும் போய் சாப்பிட வேண்டியதுதானே!” என்றார்.

“என்னாலே முடியாது. நான் மத்த நேரம் கிச்சனுக்கு போகமுடியாது” என்றார்.

”அவர் எந்த நேரமும் எதையாவது சாப்பிடறது உனக்குப் பிரச்சனை இல்லே. உன்னாலே முடியாததை அவர் பண்றாரோல்லியோ… அதுதான் பிரச்சனை” என்றார் பகவான்.

– ரமண திருவிளையாடற் திரட்டு   ¶¶

=========================================================

Also check : யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

=========================================================

Help us to run this website… 

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. 

==========================================================

For earlier episodes…

“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”

ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு!

அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!

காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

==========================================================

Also Check :

ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!

“தன்னைப் போல பிறரை எண்ணும்  தன்மை வேண்டுமே!” .

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!

=========================================================

ரமணர் தொடர்புடைய பதிவுகளுக்கு : http://rightmantra.com/?s=ரமணர்

=========================================================

[END]

3 thoughts on “ஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி?

  1. முதல் கதையில் “நாம் காயா வேக வைக்கிறோம் இரும்பு ஆணியில்ல வேக வைக்கிறோம் ” என்பது நம்மை பக்குவபடுத்துவது அவ்வளவு சுலபமல்ல என்பது. அதே காய் பகவான் கரம் பட்டதும் உடனே வெந்துள்ளது என்பது உண்மையான குருவின் சாந்தித்யத்தில் நாமும் பக்குவம் பெறுவோம் என்பது நீதி. அடுத்து சமைப்பது மட்டும் நம் வேலை ! சாப்பிடும் பலன் நமக்கில்லை என்று பகவான் சொன்னது கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே ! எனும் நீதி ! (ஏதோ என் பக்குவத்திற்கு ஏற்ற முயற்சி ) நன்றி !!

  2. சுந்தர்ஜி
    கடமையை செய் பலனை எதிர் பாராதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *