மகான்களின் பாதம் பட்டாலே அந்த பூமி தோஷங்கள் நீங்கி, வளம் பெறும். வறண்ட பிரதேசங்களுக்கு மகான்கள் வருகை தந்தால் அப்பகுதியில் வறட்சி நீங்கி பசுமை தழைக்கும். ஆதிசங்கரர், ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திரர், காஞ்சி ஸ்ரீ மகாபெரியவா உள்ளிட்ட மகான்களின் வாழ்க்கையில் இது போன்ற சம்பவங்கள பல நடைபெற்றுள்ளன.
மேலும் துறவிகள் ஒரே இடத்தில் இல்லாது, அறிவு வெளிச்சமானது எட்டு திசைகளுக்கும் பரவவேண்டும் என்கிற காரணத்தினால் நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் அஞ்ஞான இருளை போக்கியபடி இருந்தார்கள்.
மதுரையை சேர்ந்தவர் பிரபல வழக்கறிஞர் சீனிவாச ராகவன். அந்த மகானை காணவந்தபோது அவரது கால்களில் வீழ்ந்து ஆசிபெற்றார்.
அப்பொழுது அம்மகான் இவரை ஆசீர்வதித்துப் திடீரென்று ”இன்று மாலை உன் வீட்டு பக்கம் வரவேண்டிய வேலை இருக்கிறது. அப்படியே உன் வீட்டிற்கும் வருகிறேன்!” என்றார்.
வழக்கறிஞர் சற்று அதிர்ந்து போனார். ஆச்சார்யாள் தம் இல்லத்துக்கு வருகை புரியத் தாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றாலும் சற்று தயங்கி தயங்கி… “சுவாமி, இந்த எளியோனின் கிரகத்துக்கு தாங்கள் எழுந்தருளுவது நாங்கள் செய்த பாக்கியம். இருப்பினும் நான் அதற்கு தகுதியுடையவன் அல்ல…” என்றார் விசும்பியபடி.
“ஏன்… உனக்கென்ன தகுதிக்குறைவு?”
“ஸ்வாமி… அடியேன் வீட்டு கிணறு நூறடிக்கும் மேல் ஆழம் கொண்ட கிணறு. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக நீரின்றி வறண்டு கிடக்கிறது. ஆச்சார்யாள் எழுந்தருளினால் நான் பூரண கும்பத்தில் நிரப்ப கிணற்று நீருக்கு எங்கே போவது? குழாய் நீரை நிரப்புவது தவறாயிற்றே….” என்றார்.
“ஏன் அந்த கிணற்றில் நீர் இருக்குமே…?”
“இல்லை சுவாமி”
”சரி மாலையில் நேரில் வந்து பார்க்கிறேன்!” என்றார் ஆசார்யர்.
அது நல்ல கோடைக் காலம்.
வழக்கறிஞர் வீட்டுக்கு போனவுடன் சற்றுசந்தேகப்பட்டு தமது கிணற்றை எட்டிப் பார்த்தார். துளி நீர் கூட இன்றி வறண்டிருந்தது.
அவர் கண்கள் கலங்கின. ஆச்சார்யாள் எவ்வளவு சொல்லியும் பிடிவாதமாக இருக்கிறாரே… இப்போது நாம் என்ன செய்வது?
ஆனது ஆகட்டும்…. எல்லாம் அரங்கன் செயல் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு ஆசார்யரை வரவேற்க எல்லா ஏற்பாடுகளையும் துரிதமாக செய்து முடித்தார். ஆசார்யர் தாம் சொன்னபடி, அங்கு குறித்த நேரத்தில் எழுந்தருளினார்.
“எங்கே கிணறு? அதில் நீர் இருக்குமே!”
மறுபடியும் இல்லை என்பதைத் தலையசைப்பால் வழக்கறிஞர் உணர்த்தினார்.
ஆசார்யர் கிணற்றை எட்டிப்பார்த்தார்.
பிறகு ஒரு புன்முறுவலுடன் ”அதில் ஜலம் இருக்கிறதே!” என்று கூறினார்.
வழக்கறிஞர் இப்பொழுது எட்டிப்பார்த்தார். பாதிக்கிணறு (அறுபதடி) வரை தண்ணீர் இருந்தது!
மழைப் பொழிந்து எங்கும் வெள்ளம் சூழ்ந்து கிணற்றில் நீர் வந்ததா?
இல்லை! பெருமழையால் தான் நீர் சுரந்தது. ஆம்! இது ஆசாரியாரின் கருணை மழை!
ஸ்ரீரங்கம் பெரிய ஆசிரமத்தில் பதினோராவது ஆசார்யராக இப்பொழுது வீற்றிருக்கும் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கராமானுஜ மஹாதேசிகனே அந்த ஆசார்யர்.
மகான்கள் பெரும்பாலும் நிலம், நீர், நெருப்பு, காற்று, வான் ஆகிய பஞ்ச பூதங்களின் இயக்கங்களில் தலையிடுவதில்லை. இருப்பினும் தேவைப்பட்டால் அவற்றையும் தங்கள் ஆளுமையால் சற்றே மாறுதல் அடையச் செய்து, நன்மை விளைவிக்கும் ஆற்றலும் அவர்கட்கு உண்டு.
வாசகர்கள் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.
மனிதர்களால் முடியாததை கிரகங்கள் சாதிப்பார்கள்.
கிரகங்களால் முடியாததை தெய்வம் சாதிக்கும்.
தெய்வங்களாலும் முடியாததை குருபக்தி சாதிக்கும்.
எனவே மகான்களின் ஆசியையும் அருளையும் பெற்றுக்கொள்ள தயங்கக்கூடாது. தவறக்கூடாது! குருவருளின்றி திருவருளில்லை!!
* எல்லாரும் மகான்களாகிவிடமுடியாது. யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது? இந்த பதிவு உங்களுக்கு இது விஷயத்தில் ஒரு தெளிவை ஏற்படுத்தக்கூடும்.
==========================================================
உங்கள் பங்களிப்பு இந்த தளத்திற்கு அவசியம் தேவை…!
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
உடையவரின் அடியாருக்கு அரங்கன் செய்த ஏவல் – ராமானுஜர் ஜயந்தி SPL
உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?
சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!
“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்!
ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)
அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)
ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)
கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)
உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )
கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!
==========================================================
Also check :
ஆச்சார அனுஷ்டானம், பக்தி – எது பிரதானம் ? – திருமால் திருவிளையாடல் (4)
ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)
பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)
விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)
==========================================================
பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!
மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !
திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)
ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)
ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!
==========================================================
[END]
குருவருள் இன்றி திருவருள் இல்லை.
கிணற்றுக்குள் குருவின் கடாக்ஷத்தால் நீர் நிரம்பியது எத்தனை பெரிய அற்புதம். அந்த குரு மட்டுமல்ல இந்த குரு பார்த்தாலும் கோடி நன்மை விளையும்.
ஸ்ரீ ஸ்ரீ ரகூத்தம சுவாமிகளின் பிருந்தாவன தரிசனத்திற்கு மிக்க நன்றி.
இனிமையான பதிவு. அருமையான நீதி. புதுமையான சம்பவம்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்