இந்த ஒன்மேன் ஷோவிற்கு உறுதுணையாக இருந்த நம் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்றும் நம்மை வழிநடத்தும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் எளிமையின் திருவுருவம் மகா பெரியவா அவர்களுக்கும், காக்கும் கடவுளாம் குன்றத்தூர் முருகனுக்கும், தளத்தை நாம் துவக்க காரணமாக இருந்த பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கும் இந்த நேரத்தில் நம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். (Check : ‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!)
நாம் இன்னும் சாதிக்கவேண்டியதும் போகவேண்டிய தூரமும் எட்டவேண்டிய இலட்சியங்களும் நிறைய இருக்கின்றன. திருவருள் துணைபுரியட்டும்!
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே!
===========================================================
முந்தைய பதிவில், திருமலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட ஸ்ரீராமுலு அவர்களை நாம் கௌரவிப்பது போன்ற புகைப்படம் எதிர்பாராதவிதமாக கேமிராவில் பதிவாகவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா?
அன்று மாலை ஸ்ரீராமுலு அவர்களை தொடர்புகொண்டு, எங்கு இருக்கிறார், யாத்திரை எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று விசாரித்தோம்.
தாமரைப்பாக்கத்தில் இருப்பதாகவும் இரவு அங்கு ஹால்ட் என்றும் கூறினார்.
****************************************************************************************
இந்தப் பதிவை தொடர்வதற்கு முன்பு இது தொடர்பான முந்தைய பதிவுகளை முதலில் படிக்கவும்:
திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)
அடியார்கள் வழியனுப்பு விழாவும், ஏமாற்றத்தில் வெளிப்பட்ட அருளும்! ஆடி ஸ்பெஷல் (3)
****************************************************************************************
காலை புகைப்படம் எடுப்பது தொடர்பாக நமக்கு கிடைத்த ஏமாற்றத்தை அவரிடம் பகிர்ந்துகொண்டோம்.
“அடடா… சாரி சுந்தர் சார்… வேற யாரையாவது நாம எடுக்கச் சொல்லியிருக்கலாம். நான் கூட அந்த ஃபோட்டோவை பார்க்க ரொம்ப இண்டரெஸ்ட்டா இருந்தேன்….” தனது வருத்தத்தையும் பகிர்ந்துகொண்டார்.
“ஏதோ ஒரு காரணத்தோட தான் அது நடந்திருக்கு. இல்லேன்னா இப்படி மிஸ்ஸாக வாய்ப்பில்லே…” என்றோம்.
“நிச்சயம் சார்… நிச்சயம் ஏதோ காரணம் இருக்கு!” என்று அவரும் ஆமோதித்தார்.
அடுத்த நாள் பிளான் என்ன? போகும் வழியில் யாத்திரைக் குழுவினர் எந்தக் கோவிலை தரிசிக்கப் போகிறார்கள் என்று விசாரித்தோம்.
மறுநாள் ‘சுருட்டப்பள்ளி தரிசனம்’ என்று கூறினார்.
சுருட்டப்பள்ளி என்று அவர் கூறியதும் நமக்கு முகம் மலர்ந்தது. சுருட்டப்பள்ளி பள்ளிகொண்ட ஈஸ்வரனை இதுவரை நாம் தரிசித்ததில்லை. மறுநாள் ஞாயிறு தானே… பேசாமல் சுருட்டப்பள்ளி சென்றால் என்ன? பள்ளிகொண்ட ஈஸ்வரனையும் தரிசித்தது போல இருக்கும், அப்படியே ஸ்ரீராமுலு அவர்களையும் பார்த்தது போல இருக்குமே என்று தோன்றியது.
நமக்கு அவரை மீண்டும் எப்படியாவது பார்த்து அவரை கௌரவிப்பது போல புகைப்படமெடுக்கவேண்டும் என்கிற ஆவல் தணியவில்லை.
“சார்… நான் சுருட்டப்பள்ளி வரலாமான்னு பார்க்கிறேன்… சுவாமியையும் தரிசினம் பண்ண மாதிரி இருக்கும்… உங்களையும் பார்த்த மாதிரி இருக்கும்…” என்றோம்.
“தாராளமா வாங்க சார்… நாங்க அங்கே மதியம் 1.00 மணிக்கு தான் வருவோம். நீங்க கொஞ்சம் முன்னாடி வந்தீங்கன்னா சுவாமியை தரிசனம் பண்ணிட்டு அப்படியே எங்ககூட மத்தியானம் சாப்பாடை சாப்பிட்டுட்டு கிளம்பலாம்” என்றார்.
நாம் யோசித்தோம்…..
“சரி சார்… நான் வர்றேன்… பூந்தமல்லியிலிருந்து எப்படி வர்றது அதான் யோசிக்கிறேன்”
உடனே அங்கு அவருடன் இருந்த சக யாத்ரீகர்களிடம் விசாரித்தார்.
“ஏம்பா… பூந்தமல்லியிலே இருந்து சுருட்டப்பள்ளி எப்படி வர்றது? பஸ் ஏதாவது இருக்கா?”
நேரடி பஸ் வசதி இருப்பதாக அவர்கள் சொன்னவுடன்… நம்மிடம் “சார்… பூந்தமல்லி பஸ் டெப்போவுல இருந்து ஸ்ட்ரெயிட் பஸ் இருக்காம். அதுல வந்துடுங்க” என்றார்.
“சரிங்க சார்… நான் நைட் உங்களுக்கு கன்ஃபர்ம் பண்றேன்” என்றோம்.
தொடர்ந்து கூகுள் மேப்பை பார்த்து சுருட்டப்பள்ளி எங்கேயிருக்கிறது என்று தெரிந்துகொண்டோம்.
‘நாளைக்கு சுருட்டப்பள்ளி போறதுன்னு முடிவாயிடுச்சு. ஆனா அவரு 12.30 மணிக்கு மேல தான் சுருட்டப்பள்ளி வருவோம்னு சொல்றாரு. எப்படி பிளான் செய்வது?’….. யோசித்தோம்…
ஏனெனில், இது போன்று ஞாயிறு வெளியே செல்லுமாறு நேர்ந்துவிட்டால் அதை மேக்ஸிமம் பயன்படுத்திக்கொள்வோம். காலை 7.00 அல்லது 8.00 மணி என்றால் கூட பரவாயில்லை… சுருட்டப்பள்ளியில் சுவாமியையும் அவரையும் பார்த்துவிட்டு வேறு ஏதாவது கோவிலுக்கு சென்றுவிட்டு வரலாம். மதியம் UN-TIME ஆக இருக்கிறதே என்று யோசித்தோம்.
இது போன்ற பயணங்கள் திட்டமிட்டால் தனக்கு தகவல் தெரிவிக்கும்படியும் முடிந்தால் காரை எடுத்துக்கொண்டு வருவதாகவும் நண்பர் செந்தில் ஏற்கனவே சொல்லியிருந்தார். அவருக்கு ஃபோன் செய்து நடந்த அனைத்தையும் கூறி, “சுருட்டப்பள்ளி வர முடியுமா?” என்று கேட்டோம்.
சுருட்டப்பள்ளி தானும் போனதில்லை என்றும் வருவதாகவும் சொன்னார்.
நமது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ‘அப்பாடா ஒரு பெரிய டென்ஷன் விட்டுது…’ நிம்மதி பெருமூச்சு விட்டோம்.
போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தாகிவிட்டது.
மறுபடியும் யோசனை… ‘மதியம் 1.00 க்கு தான் சுருட்டப்பள்ளிக்கே வருவேன் என்று ஸ்ரீராமுலு சொல்லியிருக்கார். நாம் ஒரு 11.00 மணிக்கு போனால் கூட போதும். ஆனால் நண்பர் கார் எடுத்து வருவதாக சொல்லியிருக்கிறாரே…. அதை பயன்படுத்திக்கொள்ளலாமே… வேறு எங்காவது அருகே போகமுடியுமா…?’ என்று யோசித்தோம்.
அப்போது தான் மத்தூர் நினைவுக்கு வந்தது. மத்தூர், சுருட்டப்பள்ளிக்கு அருகே இருந்தால் மத்தூருக்கு போய் அம்மனை தரிசித்துவிட்டு அப்படியே சுருட்டப்பள்ளி செல்லலாமே என்று கூகுள் மேப் பார்த்தபோது இரண்டும் வேறு வேறு மார்க்கத்தில் இருந்தது.
‘சரி அடுத்த முறை மத்தூரை பார்த்துக்கொள்ளலாம் இப்போதைக்கு சுருட்டப்பள்ளிக்கு மட்டும் போகலாம்’ என்று நினைத்தோம்.
அன்று இரவு ஸ்ரீராமுலு அவர்களிடம் இது பற்றி சொன்னபோது அவர் “ஏன் சார்… நீங்க மத்தூர் போய்ட்டு அப்படியே நகரி வழியா சுருட்டப்பள்ளி வரலாமே… அங்கேயிருந்து பக்கம் தானே” என்றார்.
“இல்லே சார்… பக்கம் இல்லே… மத்தூர்ல இருந்து திருவள்ளூர் வந்து அப்புறம் தான் சுருட்டப்பள்ளி வரணும்”
“யார் சொன்னது மத்தூர்ல இருந்து வழி இருக்கு. அங்கே போய் விசாரிங்க” என்றார்.
மீண்டும் கூகுள் மேப்பை பார்த்தபோது ஒன்றும் புரியவில்லை. தலை சுற்றியது.
‘சரி… எல்லாம் அம்மன் பார்த்துக்குவா… இப்போதைக்கு மத்தூர் புறப்படலாம். செந்திலிடம் மீண்டும் பேசுவோம்’ என்று கருதி நண்பர் செந்திலை தொடர்புகொண்டு, மத்தூர் போய் அங்கேயிருந்து சுருட்டப்பள்ளி போகலாமா என்று கேட்டோம்.
“தாராளமா… எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லே. காலைல எத்தனை மணிக்கு உங்க வீட்ல இருக்கணும்னு சொல்லுங்க!” என்றார்.
“ஒரு 5.30 AM க்கு வந்துடுங்க. முதல்ல மத்தூர் போய் மஹிஷாசுரமர்த்தனியை தரிசனம் பண்ணிட்டு அங்கியிருந்து சுருட்டப்பள்ளி போயிடலாம்”
இரவு நடந்த அனைத்தும் சிந்தித்தோம்.
அனைத்திற்கும் ஒரு சங்கிலி பிணைப்பு போன்ற காரணம் இருப்பது புரிந்தது.
"
ஸ்ரீராமுலு அவர்களுடன் புகைப்படம் எடுக்கும் விஷயத்தில் மட்டும் நமக்கு ஏமாற்றம் கிடைக்கவில்லை எனில், இப்போது மத்தூர் பயணமோ, அல்லது சுருட்டப்பள்ளி பயணமோ சாத்தியப்பட்டிருக்காது.
ஸ்ரீராமுலு அவர்களை சந்தித்தது போல ஆயிற்று, ஆடி ஸ்பெஷல் தொடருக்காக மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி கோவிலையும் பார்த்தது போல ஆச்சு. பள்ளிகொண்ட ஈஸ்வரனையும் தரிசனம் பண்ணது போல ஆச்சு…! ஆக… ஒரே கல்லில் ஒரு மாந்தோப்பே விழுந்துவிட்டது.
[pulledquote]இறைவன் தரும் ஒரு சிறிய ஏமாற்றம் எப்படி மிகப் பெரும் வாய்ப்பாக மாறுகிறது பார்த்தீர்களா?[/pulledquote]
இறைவன் தரும் ஒரு சிறிய ஏமாற்றம் எப்படி மிகப் பெரும் வாய்ப்பாக மாறுகிறது பார்த்தீர்களா?
இதையடுத்து அடுத்த நாள் காலை 6.00 மணிக்கு (ஜூலை 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை) எங்கள் மத்தூர் பயணம் தொடங்கியது.
ஐயப்பன்தாங்கலில் இருந்து திருமழிசை வழியாக திருவள்ளூர் சென்று பின் அங்கிருந்து திருப்பதி சாலையில் திருத்தணி வழியாக மத்தூர் பயணம்.
செல்லும் வழியில் திருத்தணிக்கு முன்பாக ஒரு சாலையோர ஹோட்டலில் காலை டிபனை முடித்துக்கொண்டோம். டிபன் நன்றாக அதே சமயம் விலையும் ஓரளவு எக்கானமியாக இருந்தது.
மத்தூர் செல்பவர்களுக்கு இந்த இடம் தான் உணவுக்கு ஏற்ற இடம்.
திருத்தணி ஊருக்குள் செல்லாமல் திருத்தணி – திருப்பதி சாலை வழியே சென்றால், பொன்பாடி ரயில்வே கேட் அருகே இடது புறம் திரும்பவேண்டும். அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் மத்தூர் அமைந்துள்ளது.
உலகங்கள் யாவற்றையும் கடைக்கண் அருட்பார்வையினால் காக்கின்ற தெய்வம் அம்பிகை. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம், மத்தூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் “மஹிஷாசுரமர்தினி அம்மன்”. பூமியில் இருந்து வெளிப்பட்டு சுமார் 55 ஆண்டுகளாகின்றன. இத்திருத்தலம் 64 சக்தி பீடங்களுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
அரக்கோணம் – ரேணிகுண்டா இருப்புப் பாதையை இரட்டைப் பாதையாக மாற்றும் பணி சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றபோது, திருத்தணியிலிருந்து பொன்பாடி வரையிலும் பழைய பாதைக்கு அருகிலேயே புதிய பாதை போடப்பட்டது. ஆனால், பொன்பாடியை அடுத்து அமைந்துள்ள மத்தூரை அடைந்தவுடன் இணையாக இல்லாமல் சற்று பிரிந்து சில கி.மீ.கள் தூரம் சென்று பின்னர் நகரி அருகே மீண்டும் அசல் பாதையுடன் இணையும் வண்ணம் புதிய இருப்புப் பாதை போடப்பட்டது.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மக்கள் கூறுவதும் கோவிலின் தல வரலாறு புத்தகம் கூறுவதும் கீழ்கண்ட காரணத்தைத் தான்.
மத்தூர் எல்லையில் 1962 ஆம் ஆண்டு அரக்கோணம் – ரேணிகுண்டா இரண்டாவது இருப்பு பாதை போடும் பணி நடைப்பெற்றபோது சக்திமேடு என்ற இடத்தில் கூலியாட்கள் கடப்பாறையால் மண்ணைப் பெயர்த்தார்கள். ஒரு கூலியாள் கடப்பாறையால் பூமியைக் குத்தும்போது “டங்”என்று சப்தம் கேட்டது. அந்த கூலித் தொழிலாளி தெய்வ அருளால் மயக்கமடைந்தான். கூட்டம் கூடி மண்ணை அகற்றினர். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஒரு பிரமாண்ட துர்க்கை விக்ரகம் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தோடு (மலர்ந்த முகத்தோடு), எட்டு கரங்களுடன் கம்பீரமான திரு உருவத்தோடு பூமியில் இருந்து நம்மை காக்க எழுந்தருளினாள்.
"
உடனே கிராம மக்கள் ஒரு ஓலைக் குடிசை வேய்ந்து அந்த துர்க்கைக்கு ‘காளி அம்மன்’ என்று பெயரிட்டு வழிபட்டு வந்தனர்.
அது பற்றி கேள்விப்பட்டு அடுத்தடுத்து அங்கு சென்ற விபரமறிந்த ஆன்மீக அன்பர்கள் கிராம மக்களிடம் அது மஹிஷாசுரமர்த்தினி அம்மன் என்று எடுத்துக்கூறி அந்தப் பெயரையே அந்த அம்மனுக்கு சூட்டினர்.
சக்தி பீடம்
அன்னை மஹிஷாசுரமர்தினி பல ஆண்டுகளாக பூமிக்குள் இருந்த போது அந்தபகுதி ‘சக்திமேடு’ என்று பெயர் பெற்று விளங்கியது. இங்கு உச்சிப்பொழுதிலோ, இரவு நேரத்திலோ வருபவர்களை அன்னை தனது மகா சக்தியால் மூர்ச்சையுறச் செய்து வந்தாள். அன்னையின் திருவுருவம் புதைந்து கிடக்கும் இரகசியம் தெரியாமல் மக்களிடத்தில் ஒருவித பயம் நிலவி வந்தது. அன்னையின் திருவுருவம் வெளிப்பட்ட பின் இன்றுவரை இதுபோன்ற நிகழ்ச்சிகள் இங்கு நிகழ்வதில்லை.
நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி பெரியவர் ஒரு முறை திருமலைக்கு யாத்திரை செல்லும் வழியில், பொன்பாடியை அடுத்து அமைந்திருந்த ஒரு தொழிற்சாலையில் தனது பரிவாரங்களோடு தங்கியிருந்தார்.
அப்போது அவருக்கு மத்தூரில் பூமியிலிருந்து மஹிஷாசுரமர்த்தினி அம்மன் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட செய்தி தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த மகா பெரியவா, அம்மனை தரிசித்து பலவாறாக துதித்தார்.
அவர் பொன்பாடியில் தங்கியிருந்த காலம் வரை, தன்னை காண வரும் பக்தர்கள் அனைவரிடமும் மேற்படி தகவலை தெரிவித்து மத்தூர் சென்று மஹிஷாசுரமர்த்தனி அன்னையையும் தரிசித்துவிட்டு போகும்படி கேட்டுக்கொள்வார்.
மகா பெரியவாவின் வழிகாட்டுதல்களின் படி, திருத்தணி சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் மத்தூர் கோவிலின் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு அங்கு வெகு சீக்கிரம் முறைப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர்.
ஆக… அன்னை இன்று பிரத்யேக கோவிலில் வீற்றிருக்கிறாள் என்றால் அதற்கு நம் மகா பெரியவாவும் ஒரு காரணம்.
Also check : மகா பெரியவா யார்? பரமேஸ்வரனா, பரந்தாமனா?? – குரு தரிசனம் (43)
மத்தூர் ஊருக்கு எல்லையிலேயே கோவில் அமைந்துள்ளது. ஏற்கனவே ஆலயத்தின் அர்ச்சகர் மணிகண்ட குருக்களிடம் பேசிவிட்டு தான் நாம் புறப்பட்டோம்.
கோவிலை அடைந்து வளாகத்தில் இருந்த கடையில் அர்ச்சனை பொருட்களை (தேங்காய், பூ, பழம்) வாங்கிக்கொண்டோம். விலை கொஞ்சம் அதிகம் தான்.
நாம் சென்ற நேரம் (9.00 AM) அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து அப்போது தான் அலங்காரம் நடைபெற்றுக்கொண்டிருந்தபடியால் எப்படியும் 10.45 ஆகும் என்றும் நம்மை காத்திருக்க முடியுமா என்றும் கேட்டார்.
இவ்வளவு தூரம் வந்துவிட்டு அம்மனை தரிசிக்காமல் செல்வதா? ஆனால் மதியம் 1.00 மணிக்கு சுருட்டப்பள்ளியில் இருக்கவேண்டுமே என்கிற டென்ஷன் வேறு.
பார்க்கலாம்…. அன்னை கைவிடமாட்டாள்…. என்று நம்பிக்கை இருந்தது.
“சுவாமி… நாங்க இருந்து அம்மனை தரிசனம் பண்ணி அர்ச்சனை பண்ணிட்டே போறோம்.”
“10.40 க்கு இங்கே சன்னதி வந்துடுங்க.. முதல்ல உங்களை அனுப்பி வெச்சிடுறேன்” என்றார்.
வெளியே வந்து கோவிலை சுற்றிப் பார்த்தோம்.
சற்று விசாலமான கோவில். காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் ஆனது தெரிந்தது.
ஏனெனில், நாம் இங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு வரும்போது, அம்பாளை சுற்றியுள்ள சன்னதி மட்டுமே இருக்கும்… முன் மண்டபம்… கடைகள் இதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட ஒரு மரத்தடி பிள்ளையார் கோவில் போலத் தான் இருந்தது. இந்த 20 ஆண்டுகளில் நன்கு டெவலப் ஆகியிருக்கிறது போல… ஆனால் அடிப்படை வசதிகள் இல்லை.
பெண்களுக்கு மட்டும் ஒரு தனியார் அமைப்பு கோவிலின் காம்பௌண்டை ஒட்டி ஒரு ஓரமாக கழிவறையும் குளியலறையும் கட்டித் தந்துள்ளது. மற்றபடி வேறு எந்த அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. எனவே உரிய ஏற்பாடுகளுடன் செல்வது நல்லது.
கோவிலை சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே… இருப்புப்பாதையில் ட்ரெயின் போனது.
பெண்கள் பலர் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தார்கள் . அதற்க்கு என்றே தனியாக ஒரு ஹால் போன்ற ஒரு அறை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். உள்ளே விறகு மூட்டி அடுப்பெறிக்க தேவையான வசதிகள் உள்ளன.
பெண்கள் சுள்ளி பொறுக்கி வந்து, அடுப்பை மூட்டி பொங்கல் வைத்துக்கொண்டிருந்தர்கள்.
இது போன்ற அம்மன் கோவிலில் பெண்கள் வைக்கும் பொங்கலுக்கென்றே தனி ருசி உண்டு. அதன் மகத்துவமே வேறு.
இந்த அம்மன் இங்கு சுற்றிலும் உள்ள பல கிராம மக்களுக்கு இஷ்ட தெய்வம் என்பதால் அம்மனுக்கு உகந்த நாட்களில் கூட்டம் அலைமோதும்.
கோவிலில் முடி காணிக்கை செலுத்தும் இடம் தனியாக உள்ளது. குழந்தைகள் குளிக்க குழாய் ஒன்று உள்ளது.
கோவிலை சுற்றிப் பார்த்தபடி இருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை.
எப்படி ஒன்றரை மணிநேரம் போனது என்பது இன்னும் நமக்கு ஆச்சரியம் தான். மணி 10.35 ஐ நெருங்க… நேரே சன்னதி அருகே சென்று நின்றுகொண்டோம்.
இரண்டு மணிநேரத்துக்கும் மேல் தரிசனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபடியால் கூட்டம் எக்கச்சக்கமாக சேர்ந்துவிட்டது.
நாம் முன்னரே பேசிவைத்து விட்டபடியால் பக்கவாட்டில் சன்னதி அருகே நின்றுகொண்டோம்.
உள்ளே அனுமதித்தவுடன் சென்று இரும்புக் குழாய் தடுப்புக்குள் முதல் நபர்களாக இடது ஓரம் நின்றுகொண்டோம்.
அன்றைக்கு அபிஷேக கட்டளைக்கு ஏற்பாடு செய்திருந்த சிலர் மட்டும் சன்னதியில் அம்மன் அருகே நின்றுகொண்டிருந்தார்கள்.
சற்று நேரத்தில் திரை விலக்கப்பட…. நல்ல ஆளுயர மஹிஷாசுரமர்த்தினி அம்மன் எட்டுக் கரங்களோடு திவ்ய ரூப சௌந்தரியாக காட்சியளித்தாள்.
“ஓம் சக்தி… ஓம் சக்தி…” நாம் கோஷமிட, எல்லா பக்தர்களும் அதை கூற அந்த பிரதேசமே “ஓம் சக்தி… ஓம் சக்தி…”என்ற கோஷத்தால் அதிர்ந்தது.
நமது டைரியை எடுத்து வாசகர்கள் சிலர் பெயருக்கு நமது வழக்கப்படி அர்ச்சனைக்கு சங்கல்பம் செய்தோம். மேலும் அந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பி-யிருந்தவர்களுக்காகவும் பிரார்த்தித்தோம்.
மஹிஷாசுரமர்த்தினி பார்ப்பதற்கு சிரித்தபடி காட்சியளிக்கிறாள் என்பது தான் இந்த ஆலயத்தில் விசேஷமே. மேலும், இவளிடம் குழந்தைக்குரிய குணம் தென்படுகிறது. எப்படி சொல்வது?…. ம்ம்ம்ம்…. ஒரு 12 வயது பெண் குழந்தைக்கு மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து அந்தக் குழந்தை சிரித்தபடி நின்றுகொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது.
அதாவது துர்க்கை உக்கிரமாக இல்லாமல் சிரித்தபடி சாந்த சொரூபியாக இங்கு மட்டுமே காணப்படுகிறாள் என்பது நம் கணிப்பு. நீங்களும் நேரில் பார்த்துவிட்டு வந்து சொல்லுங்களேன்.
அன்னையின் அருள் வடிவம்
எட்டு கரங்களில் சங்கு சக்கரம், வில், மாலை ஆகியவற்றை தரித்து மகிடாசுரனை தனது திருசூலத்தால் குத்தி வென்ற அருட்பார்வையால் உலகினை நோக்கும் சாந்த சொரூபினியாக அன்னை எழுந்தருள் புரிந்து வருகிறாள். ஏழு அடிக்கும் மேல் நெடிதுயர்ந்து மகிடாசுரனின் தலையின் மேல் அன்னை நடனம்புரியும் காட்சி காண்பவர்களுக்கு பக்திப் பரவசத்தையும் மற்றும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டி பிரமிப்பையும் மெய்சிலிர்ப்பையும் ஏற்படுத்தும்.
வேப்பிலை மகத்துவம்
அம்மனுக்கு நேர் எதிரே உள்ள வேப்ப மரம் இக் கோயிலின் ஸ்தல விருட்ஷமாகும். அம்மனின் அருள் நிறைந்த இந்த வேப்ப மரத்தின் வேப்பிலை கசப்பதில்லை. ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அன்னை இந்த வேப்ப மரத்தின் வேப்ப இலையில் உள்ள கசப்பை தான் ஈர்த்துக் கொண்டாள். இது போலவே தான் ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நல்லருள் வழங்குகின்றாள். ஸ்தல விருட்ஷமான வேப்பமரத்தின் வேப்பிலை பிரசாதத்தை உண்டு சகல சௌபாக்கியங்களையும் பெருவோமாக. அன்னை ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி சாந்த சொரூபினியாகவும், மலர்ந்த முகத்தோடும் மூலவராக வீற்றிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
மஹிஷாசுரனும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும்
எருமையின் வடிவம் கொண்ட (மகிடம் எருமை) மகிஷன் என்னும் அரசன் பல காலம் பிரம்மாவை நோக்கி தவமிருந்து பல்வேறு வரங்களுடன் ஒரு பெண்ணால் மட்டும் எனக்கு மரணம் வரலாம், வேறு யாராலும் எனக்கு மரணம் விளையக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். பெற்ற வரத்தால் தேவர்களை வாட்டி வதைத்து வந்தான். தேவர்கள் அத்த அசுரனை அழித்து தங்களைக் காக்க எலலாம் வல்ல அம்பிகையின் அருளை பெற வணங்கி வேண்டினார்கள். மகிடாசுரனை வதைக்க தேவி புறப்பட்டாள். பராசக்தியே தன்னை அழிக்க வந்திருப்பது தெரியாமல் “நீ என்னைத் திருமணம் செய்து கொண்டால் அகில உலகத்திற்கும் தலைவியாகலாம்”என்று பிதற்றினான். அம்பிகை மகிடாசூரனை அழிக்க ஒன்பது நாள் தவமிருந்து பேராற்றலைப்பெற்று ஒன்பதாம் நாள் மகிடாசுரனின் ஆணவத்தை அழித்து அவனுக்கும் அருள் புரிந்தாள். இவ்வாறு தேவர்களுக்கும், உலக மக்களுக்கும் நலம் விளைவித்து மகிடாசுரமர்தினி ஆனாள். அந்த நாட்களையே நாம் “நவராத்திரி” தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.
எட்டு கரங்களுடன், சிம்ம வாகனத்தில் வந்த அன்னையின் திருசூலம் அசுரனின் உடன்மீது பட்டதும், அவன் தனது தவறை உணர்ந்து தாயை வணங்கினான். அம்பிகை அவனை மன்னித்து அருள்புரிந்து அவன்மீதே ஆனந்த தாண்டவம் புரிந்தாள். எங்கும் காண்பதற்கரிய இத்திருக்கோலத்துடன் மஹிஷாசுரமர்தினி அம்மன இத்தலத்தில் எழ்ழுந்தருள் புரிகிறாள்.
இத்திருக்கோலத்தை அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டர்,
“சுந்தரி எந்தை துணைவி என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள் — மலர்த்தாள் — என் கருத்தனவே”
என்று பாடியுள்ளார்.
மஹிஷாசுரமர்தினி தத்துவ விளக்கம்
கடும் தவம் புரிந்து கிடைப்பதற்கரிய வரங்களைப் பெற்றாலும், பெற்றதன் நோக்கம் நல்லதாக இல்லாவிட்டால் அழிவு நிச்சயம் என்ற உண்மையைத்தான் இந்த மகிடாசுரவதம் விளக்குகிறது. மேலும், மகிடன் எனும் அரக்கனை அழித்து அன்னை அவன் தலைமீது திருநடனம் புரிவது போல் உள்ள அன்னையைத் தூய அன்போடும், பக்தியோடும் வழிபடும் அன்பர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பம் என்னும் அரக்கனை அழித்து, அவர்களின் உள்ளத்தில் அமைதியையும் மன மகிழ்ச்சியையும் ஏற்படுத்துபவளாக அன்னை என்றென்றும் விளங்கி அருள்புரிகிறாள் என்னும் தத்துவத்தை அன்னையின் திருவுருவம் விளக்கி நிற்கிறது.
ஓலைச்சுவடியில் அம்மனின் திருப்பெயர்
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால், அகத்தியர், கௌசிகர் போன்ற அருளாளர்களால் எழுதப்பெற்று பாதுகாத்து வரப்படும் ஓலைச்சுவடிகளின் மத்தூர் மஹிஷாசுரமர்தினி அம்மனின் பெயர் பதியப்பட்டு, உலகமக்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கும், அத்துன்பங்களில் இருந்து விடுபட அம்பிகைக்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்களும் அந்த ஓலைச் சுவடிகளில் பதியப்பட்டிருப்பது நம்மையெல்லாம் அதிசயிக்க வைக்கும் செய்தியாகும். இவ்வாறு வைத்தீஸ்வரன் ஓலைச் சுவடிகளில் மத்தூர் மஹிஷாசுரமர்தினி அம்மனின் திருப்பெயரையும் அம்பிகைக்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடனையும் பார்த்துத் தெரிந்து, அன்னையை வழிப்பட்டு, அவளது திருவருளைப் பெற்று வாழ்வில் வளமும் நலமும் பெற்றவர்கள் மிகப் பலர்.
திருக்கோயிலில் நிகழும் சிறப்பு நிகழ்ச்சிகள்
* ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படும் இராகு கால சிறப்பு அர்ச்சனைகள்.
* ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாட்களில் நண்பகல் 12.00 மணிக்கு அம்பிகைக்கு நடத்தப்படும் 108 குடம் பால் அபிஷேகம்.
* பௌர்ணமி நாட்களில் இரவில் 9.00 மணி முதல் 11.00 மணி வரை நடத்தப்படும் நவகலச யாக பூஜைகள், 108 சங்காபிஷேகம்.
* தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடத்தப்படும் 1008 பால்குட அபிஷேகம், சிறப்பு பூஜையும்
* ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகமும் பூஜையும், அதன் பின்பு அம்மனுக்கு செய்யப்படும் செம்பு கவச அலங்காரம் பார்க்க பரவசமூட்டும்.
* நவராத்திரி விழாவில் ஒன்பது நாட்களிலும் நிகழும் சிறப்பு பூஜைகள், சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு நடை பெரும். இதனை பார்க்க பரவசமூட்டும். விபூதி காப்பு, மலர் அலங்காரம், தேங்காய்ப்பூ அலங்காரம் நடைபெறும்.
இங்கே அம்மனை தரிசித்திவிட்டு அர்ச்சகர் கொடுத்த பிரசாதத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அர்ச்சகரிடம் விடைபெற்றுக்கொண்டு பிரார்த்தனை முடித்துவிட்டு வெளியே வந்தோம். மங்கள வாத்தியக்காரர்கள் இருவர் தென்பட்டார்கள். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு நூறு ரூபாய் கொடுத்துவிட்டு பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம்.
இதை எதற்கு சொல்கிறோம் என்றால், நீங்களும் இதை செய்யவேண்டும் என்பதற்காக! நாம் ஏற்கனவே பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறோம். (புல்லுக்கு இறைக்கும் நீரை கொஞ்சம் நெல்லுக்கும் இறைக்கலாமே?) ஆலயங்களில் மங்கள வாத்தியக்காரர்களை கண்டால் நிச்சயம் அவர்களுக்கு உதவுங்கள்! இவர்களெல்லாம் அரிதாகி வருகிறார்கள். இந்த கோவிலிலேயே பார்த்தீர்கள் என்றால், வெறும் தவில் வித்துவானும், ஜால்ரா வித்துவானும் தான் இருக்கிறார்கள். நாதஸ்வர வித்துவான் இல்லை! எனவே இருப்பவர்களையாவது மதிப்போம்!
காஞ்சி காமகோடி பீடத்தின் அதிகாரப்பூர்வ மங்கள வாத்தியக்காரர்!
அவரிடம் பேசும்போது தான் தெரிந்தது அவர் காஞ்சி காமகோடி பீடத்தின் அதிகாரப்பூர்வ மங்கள வாத்தியக்காராராம். மேலும் மடத்தின் பல்வேறு விருதுகள் வேறு பெற்றிருக்கிறாராம். பெயர் திரு.ஏ.ஜி.லோகநாதன்.
"
“ஐயா… நீங்க ஒவ்வொரு முறையும் அம்மனோட அபிஷேகம் மற்றும் இதர விசேஷங்களின் போது வாத்தியம் வாசிக்கிறப்போ, மழை நல்லா பெய்யணும், விவசாயிகள் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும்னு மனப்பூர்வமா வேண்டிக்கிட்டு வாசிக்கனும்.”
“நிச்சயம் சார்…! நான் ஒவ்வொரு முறை தவில் வாசிக்கும்போதும் நாடு நல்லாயிருக்கனும்னு அம்மன் கிட்டே பிரார்த்தனை பண்ணிகிட்டே தான் வாசிப்பேன்.” என்றார்.
அடுத்து எங்கே போகப்போகிறோம் என்று கேட்டார்.
நாம் உடனே சுருட்டப்பள்ளி என்றோம்.
“எந்த ரூட் போகப்போறீங்க?”
“அதான் ஐயா புரியலே…”
“நல்லாட்டூர், பிச்சாட்டூர், நாகலாபுரம் வழியா சுருட்டப்பள்ளி போங்க…. மொத்தமே 20 – 25 கி.மீ தான் வரும்”
தெய்வமே… நல்ல நேரம் பார்த்து சொன்னீங்க என்று கருதி அவரிடம் விரிவாக கேட்டுக்கொண்டோம்.
அப்போது அவர் கூடுதலாக ஒரு தகவல் சொன்னார்.
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
“சார்… நீங்க போற ரூட்ல நாகலாபுரத்துல வேதநாராயணப் பெருமாள் கோவில்னு ஒன்னு இருக்கு. தசாவாதார தலத்துல முதல் தலம். மச்சாவதாரத் தலம். அதையும் ஒரு எட்டுப் பார்த்துட்டு போய்டுங்க” என்றார்.
“இல்லே ஐயா… நாங்க 1.00 மணிக்கு முன்னே சுருட்டப்பள்ளியிலே இருக்கணும். அங்கே சுவாமியை தரிசனம் பண்ணிட்டு நண்பர் ஒருத்தரை பார்க்கணும்” என்றோம்.
“ஒன்னும் பிரச்சனையில்லே… நாகலாபுரம் கோவில்ல என்னோட தம்பி தான் வாத்தியக்காரரா இருக்கார். நான் அவர்கிட்டே போன் பண்ணி சொல்லிடுறேன்…. நீங்க உடனே தரிசனம் பண்ணலாம்” என்றார்.
நேரம் அப்போது 11.30 AM.
சரி… நாகலாபுரம் வேதநாராயணப் பெருமாளையும் தரிசனம் பண்ணிட்டு போய்டலாம் என்று முடிவு செய்து அவரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.
சென்னை வந்தால் அவசியம் நமது அலுவலகம் வந்து மங்கல வாத்தியம் இசைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்.
நிச்சயம் வருவதாக உறுதியளித்திருக்கிறார்.
மத்தூர் செல்லும் வழி
மத்தூர் அருள்மிகு மஹிஷாசுரமர்தினி அம்மன் ஆலயம், திருத்தணி – திருப்பதி நெடுஞ்சாலையில், திருத்தணியில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள பொன்பாடி இரயில் நிலையத்தில் இருந்து மேற்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. கோயில் முகப்புவரைச்செல்ல திருத்தணியில் இருந்து T71, 97E , 400JJ மற்றும் 97 M ஆகிய எண்கள் கொண்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. ம்ற்றும் பொன்பாடியிலிருந்து ஆட்டோக்களும் எந்த நேரமும் இயக்கப்படுகின்றன.
மணிகண்டன் குருக்கள், அலைபேசி : 94433 55835
* அடுத்த பதிவில்… நாகலாபுரம் வேதநாராயணப் பெருமாள் தரிசனமும், சுருட்டப்பள்ளியில் ஸ்ரீராமுலு அவர்களை சந்தித்து கௌரவித்த அனுபவமும்…!
================================================================
Also check :
அடியார்கள் வழியனுப்பு விழாவும், ஏமாற்றத்தில் வெளிப்பட்ட அருளும்! ஆடி ஸ்பெஷல் (3)
திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)
ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)
எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? ஆடி ஸ்பெஷல் !
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
அன்னையின் அருள் வெளிப்பட்ட ‘தை அமாவாசை’ – திருக்கடையூர் கோவில் குருக்கள் கூறும் தகவல்கள்!
சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)
உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1
திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!
வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
================================================================
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
================================================================
கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!
அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?
================================================================
Also check :
================================================================
கர்மவீரர் காமராஜர் மகா பெரியவாவை சந்தித்த போது
Also check : ஞானசூரியனும் தியாக சூரியனும் சந்தித்தபோது….! காமராஜர் B’DAY SPL 1
================================================================
எல்லா பிரச்சனைகளுக்கும் சேர்த்து ஒரே பதிகம் / ஸ்லோகம் இல்லையா?
எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??
================================================================
Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…
‘சில சமயம் பகவான் மீதே கோபம் வருகிறதே?’ – தெய்வத்திடம் சில கேள்விகள்! (Part II)
“தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி?” தெய்வத்திடம் சில கேள்விகள்!
தெய்வத்தின் குரலில் தெய்வக் குழந்தையின் வரலாறு!
தர்மம் தழைக்க தோன்றிய தயாபரன் – மகா பெரியவா ஜயந்தி Spl & Excl.Pics!
“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு!” – குரு தரிசனம் (37)
தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)
மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)
நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)
அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு! குரு தரிசனம் (33)
குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!! குரு தரிசனம் (32)
சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)
“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)
“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)
ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)
மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)
பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)
இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)
ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)
சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)
மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)
சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)
இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)
பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)
கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)
குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)
மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)
“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)
வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!
வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)
“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)
காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
================================================================
[END]
1000 பதிவுகள் மைல்கல்லை கடந்தமைக்கு வாழ்த்துக்கள். தாங்கள் இந்த மூன்று வருடங்களில் பலவித இன்னல்களுக்கு இடையேயும் தளத்தை ஒரு வெற்றிகரமான ஒரு தனி மனிதனாக உருவாக்கி இருக்கிறீர்கள் அதற்கு எனது பாராட்டுக்களையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
தாங்கள் மேலும் மேலும் பலவித ஆன்றோர் களையும் , சான்றோர்களையும் சந்தித்து பேட்டி எடுத்து பதிவாக அளிக்க வேண்டும் . பலவித தெரியாத கோவில்களைப் பற்றி தலத்தில் பதிவு செய்ய வேண்டும் இன்னும் பல பதிவுகள் வெளி வாராமல் பெண்டிங்கில் உள்ளது..
அதையும் வெகு விரைவில் பதிவு செய்யவும். நம் தளம் ஒரு மிகப் பெரிய தளமாக உருவாக எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிவான்.
தங்கள் பெற்றோருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.
அடுத்து மிக மிக அற்புதமான பதிவு இது. புகைப்படம் மிஸ் ஆனதால் கிடைத்த அம்மன் தரிசனம்! காரணமில்லாமல் காரியமில்லை
மத்தூரை எங்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். காலையில் இருந்து மகா பெரியவா தரிசனத்திற்கு காத்து இருந்தேன். பெரியவா அம்மனுடன் நமக்கு தரிசனம் தந்து விட்டார்.
ஒவ்வொரு படங்களும் கொள்ளை அழகு எங்களுக்கும் மத்தூர் சென்று அம்மனை கண் குளிர காண வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது .
ஆடி பதிவில் இந்த பதிவு ஒரு முக்கிய பதிவு
நாளை ஆடி வெள்ளியில் இன்றே அம்மன் தரிசனம் கண்டு உடலும் , மனம் குளிர்ந்து. இந்த பதிவு விறுவிறுவென்று செல்கிறது. தங்கள் எழுத்து நடைக்கு ஈடு இணை ஏதுமில்லை .
வாழ்க வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
nice and very informative article,keep it up sundar
வணக்கம் சுந்தர்.நானும் மத்தூர் ,சுருட்டபள்ளி கோவிலுக்கு சென்று உள்ளேன் .அருமையான கோவில்.அதிலும் சுருட்டபள்ளி அழகு.மகிசாசுரமர்தினி அன்னையின் சிலை மிகவும் அழகாக உள்ளது.எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடைய விசயங்களே.திரு ஸ்ரீராமுலு வை சந்திக்கும் வழியில் மூன்று கோவில்களின் தரிசனம்.வாழ்த்துகள் .நன்றி.
இந்த பதிவை படித்த பின்பு..ஆடி மாத அம்மன் திருவிழாவிற்கு சென்று வந்த திருப்தி ஏற்பட்டது.
அம்மன் தரிசனம், அம்மனின் தல வரலாறு, வேப்பிலை மகத்துவம்,அருட்பிரசாதம்,கோயிலை சுற்றிய வண்ணபடங்கள் என ஒவ்வொன்றையும் அணு அணுவாக ரசித்து,அம்மனின் அருள் பெற்றேன் என்பதே உண்மை.
இந்த பதிவு ஆரம்பித்த இடம் எங்கே..? அம்பாளின் கருணையால் நமக்கு அவள் காட்டிய வழி எங்கே !
பெருமாளின் பாத யாத்திரை நிகழ்விற்கு சென்று..அதில் கிடைத்த ஏமாற்றம்..அது எமாடம் இல்லை..அது ஒரு மாற்றம்..ஆம்! அம்மனை தரிசிக்க, அருள் கிடைத்திட வாய்த்த மாற்றம் என்பதே சிறப்பு.
சென்ற பதிவில் “அம்மன் அருள்” என்ற நிலையோடு முடித்து,எங்களுக்கு ஒரு புதிரை வைத்து,இந்த பதிவில்,புதிருக்கான விடையை , அம்மன் அருளோடு பகிர்ந்தமையை என்ன சொல்ல..எல்லாம் அம்மன் அருள்!
ஆடி மாத அம்மன் கோவில்கள் களை கட்டுகிறது.அது போல், நம் தள ஆடி மாத பதிவுகளும் களை கட்டி,திருவிழா கோலம் பூண்டிருக்கிறது.
34 மாதங்களில் 1001 பதிவு..ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு முத்துக்கள்.ஆன்மிகம்,தன்னம்பிக்கை,உடல் நலம்,மன வளம்,ஆலய தரிசனம்,பிரார்த்தனை பதிவு,முற்றோதல் என நம் தளம் தொடாத இடங்களே இல்லை.இந்த பதிவுகளை நம் வருங்கால சந்ததிக்கு கொண்டு செல்வது நம் கடமையும் கூட.
இந்த பதிவிற்கு பின்னால் உள்ள தங்கள் உழைப்புக்கு நன்றி.நண்பர் செந்தில் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Rightmantra தளம் மேலும் சிறப்புற்று,நம் தளஆசிரியர் மற்றும் அன்பர்கள் வாழ்வில் இன்ப ஒளி கிடைத்திட எல்லாம் வல்ல மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனை வேண்டுகிறேன்.
மகா பெரியவா சரணம்!
குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா!!
ஸ்ரீ லக்ஷிமி நரசிம்மர் போற்றி!!!
வணக்கம்
நமது தளத்தின் 1001 பதிவு இதுவரை வந்த பதிவுகளுக்கெல்லாம் உச்சி திலகம் வைத்தது போலே அமைந்துவிட்டது.
இந்த மூன்று ஆண்டுகளில் பல சந்தோசங்களையும், வருத்தங்களையும் ஏக்கங்களையும் சோகங்களையும் தாண்டி வந்து நல்லதொரு பாதை தங்களுக்கு அமைந்தது.
மேலும் பல பதிவுகளும் பாராட்டுகளும் பெற வாழ்த்துகிறோம்.
புகைப்படங்கள் அனைத்தும் அருமை.
எதோ நடக்க இறைவன் எதையோ நடத்துகிறான்.
உங்கள் கைவண்ணத்தில் மத்தூர் பதிவு ஜொலிக்கிறது.
முதல்முதல் பேரம் பாக்கம் பதிவு படிக்கும் போது ஏற்பட்ட உணர்வு வருகிறது.
இந்த ப்ரோக்ராம் இந்த சண்டே என்பதுதான் மண்டைக்குள் குடைகிறது.
எனிவே சந்தோசம் நன்றி
ஜூலை 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எங்கள் மத்தூர் பயணம் அமைந்தது.
சுந்தர்ஜி
மிக மிக அற்புதமான பதிவு. ஆயிரத்து ஒன்றாவது பதிவு ஆயிரத்தில் ஒன்றான பதிவு . படங்கள் கோவிலை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன! ஒரு புகைபடம் இல்லாதாதால் பல புகைப்படங்கள்(தரிசனங்கள்) எங்களுக்கு கிடைக்கவும் , நல்ல தரிசனம் உங்களுக்கு கிடைக்கவும் பெரியவா ஏற்பாடு செய்து விட்டார்!
ஆடி வெள்ளியன்று நல்ல அம்மன் தரிசனம் கிடைக்கவைத்த தங்களுக்கு நன்றி !
Rightmantra பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் பதிவுகளை பெற வாழ்த்துக்கள்
வணக்கம்……… மஹிஷாசுர மர்த்தனி அம்மன் பற்றிய பதிவு மிக மிக அருமை…… அம்மன் கோவிலுக்கு நேரில் சென்று வந்த உணர்வு…….. விரைவில் சுருட்டப்பள்ளி கோவிலையும் தரிசிக்க விழைகிறோம்……
நம் தளம் ஆயிரம் பதிவுகளைக் கண்டுள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி…….இன்னும் பல்லாயிரம் பதிவுகள் சிறப்புடன் வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்………
1001 உருப்படியான உபயோகமான பதிவுகளை நமக்கு தந்த சுந்தர் ஆயிரத்தில் ஒருவர். மனமார்ந்த வாழ்த்துக்கள் சுந்தர்!
மென்மேலும் நம் தளம் வளர்ந்து இன்னும் எத்தனையோ நல்ல காரியங்கள் செய்ய காஞ்சி மகா பெரியவரையும் ஷிர்டி சாய் பாபாவையும் வேண்டுகிறேன்.
மத்தூர் பதிவு இறைவனின் திருவுளத்தை அறிவது கடினம், ஆனால் கருணையே உருவானவன் என்பதை புரிய வைத்த பதிவு.
அன்புள்ள சுந்தர்
வாழ்த்துக்கள். 1001 என்ற மைல் கல்லை மிக குறுகிய காலத்திற்குள் தொட்டுவிட்டீர்கள். இதை விட வேகமாக 100001 என்ற சிகரத்தையும் தொட்டு மிக உயர்ந்த நிலையை அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். வழக்கம் போல் இந்த பதிவும் மிக அருமை.
சுந்தர்ஜி
தங்களின் 1001 பதிவு அம்மன் அருளோடு மணிமகுடம் தாங்கி நிற்கிறது. தங்களுக்கு எங்களின் வாழ்த்துகள். தங்களின் பதிவு படித்தவுடன் அம்மனை பார்க்க ஆவலாக உள்ளது.
மேலும் பல பதிவுகள் தாங்கி மென்மேலும் வளர வாழ்த்துகள்
நன்றி.
Dear SundarJi,
Outstanding article.. really impressed…
Thanks