Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > பௌர்ணமிகளில் சிறப்பு மிக்க சித்ரா பௌர்ணமி

பௌர்ணமிகளில் சிறப்பு மிக்க சித்ரா பௌர்ணமி

print
மாவாசைகளில் மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை போல பௌர்ணமிகளில்  சித்ரா பௌர்ணமிக்கென்று சில சிறப்புக்கள் உள்ளன. பூமியை சுற்றி வரும் சந்திரன் இன்று முழு பிரகாசத்துடன் காட்சி தருவார். அதாவது இன்றைய தினத்தின் சந்திர ஒளி (பூரண கலை) மற்ற பௌர்ணமிகளை விட பொலிவாக இருக்கும். பௌர்ணமி அன்று மலைக்கோவில்களுக்கு சென்று கிரிவலம் வருதல் சிறப்பு. சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் வருதல் பன்மடங்கு சிறப்பு. மேலும் இந்த நாளானது சித்திர குப்தனின் அவதாரத் திருநாளாகும்.

சித்திரை மாதத்தில் பவுர்ணமி அன்று சிவபெருமாள்- பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் சித்திரகுப்தன். சித்திரகுப்தன் எமதர்மனின் கணக்குப் பிள்ளை. நாம் செய்யும் பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்ப நமது சொர்க்க நரகத்தையும் அடுத்த பிறவியையும் முடிவு செய்பவர். எனவே அன்று கிரிவலம் வந்து இறைவனை வழிபடும் அதே வேளையில் சித்திரகுப்தனையும் மனதில் நினைத்து இப்பிறவியும் அடுத்த பிறவியும் நல்ல பிறவிகளாக அமையும்படி பிரார்த்திக்கவேண்டும். திருவண்ணாமலையிலும் காஞ்சிபுரத்திலும், சித்திரகுப்தனுக்கத் தனியாக ஒரு கோயில் உள்ளது.

சித்ரா பௌர்ணமி அன்று புண்ணிய நதிகளிலும் சமுத்திரத்திலும் நீராடுவது சிறப்பு. சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வருதலால் சித்ரா பௌர்ணமி அன்று கடல் நீராடுதல் சாலவும் சிறந்தது. காரணம் என்னவெனில் அன்றைய தினம் சமுதிரத்தில் நீராடுபவர்களின் பாவங்களை அகற்றி அவர்களுக்கு தூய்மை செய்ய பித்ரு தேவதைகள், மகரிஷிகள், சித்தர்கள், யோகியர்கள் தயாராக இருப்பார்கள் என்பது ஐதீகம்.

அம்மன் கோவில்களில் பொங்கலிட்டு வழிபடுவதும் சித்ரா பௌர்ணமி அன்று விசேஷம்.

அம்பிகை வழிபாட்டிற்கு சித்ரா பவுர்ணமி மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்று பரிபூரண விரதமிருந்து அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சுபிட்சம் பெருகும்.

@ Thiruvannamalai – Photograph Courtesy : Lotus IT Park

அனைவருக்கும் நல்லது என்றாலும் குறிப்பாக பெண்களுக்கு பன்மடங்கு நலன் தரக்கூடியது சித்ரா பவுர்ணமி பூஜையாகும்.

திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் கைகூடவும் இன்று விரதமிருந்து வழிபடுவார்கள். இன்றைய தினம் அம்பாளுக்கு புடவை, நகைகள், வஸ்திரம் போன்றவற்றை அவரவர் சக்திக்கு ஏற்ப வாங்கி தந்து சாற்றி வழிபடவேண்டும்.

மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

சந்தான பாக்கியம் நல்குவதிலும் சித்ரா பவுர்ணமி வழிபாட்டிற்கு ஈடு இணை இல்லை.

இன்றைக்கு ஏதாவது ஒரு மலைக்கோவில் அல்லது அம்மன் ஆலயத்திற்கு சென்று இறைவன்/இறைவியை தரிசிக்கவேண்டும் என்று நம் வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

(குறிப்பு : உலகப் பொதுமறை தந்த தெய்வப்புலவர் ஐயன் திருவள்ளுவர்- அன்னை வாசுகி திருக்கல்யாணம் இன்று சென்னை மயிலையில் உள்ள திருவள்ளுவர் திருக்கோவிலில் மாலை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று வள்ளுவர்-வாசுகி திருக்கல்யாணம் நடைபெறுவது சிறப்பு. நமது தளத்தில் விரிவான கவரேஜ் வரவிருக்கிறது.)

விஜய வருடத்தின் முதல் பவுர்ணமியானது 25.4.13 வியாழக்கிழமை இரவு மணி 2.08 க்குத் துவங்குகிறது;துவங்கி மறுநாள் 26.4.13 வெள்ளிக்கிழமை இரவு 12.10க்கு நிறைவடைகிறது;இந்த பவுர்ணமியில் வியாழக்கிழமை இரவு மணி 1.19க்கு சந்திர கிரகணம் துவங்கி இரவு 1.55க்கு நிறைவடைகிறது.

மேஷ ராசியில் கேது நிற்கிறது; கேதுவுடன் சூரியன் சித்திரை மாதம் முழுவதும் இணைந்திருக்கிறது;துலாம் ராசியில் ராகு நிற்கிறது;இந்த துலா ராகுவுடன் சந்திரன் 25.4.13 மற்றும் 26.4.13 இரண்டு நாட்களும் சேருகிறது.ராகுவுடன் சேரும் சந்திரன்,ஆத்மக்காரனாகிய சூரியனுக்கு நேர் ஏழாம் ராசிக்கு வருகிறது.எனவே,சந்திரன் முழுபலமான பவுர்ணமியை எட்டுகிறது.அவ்வாறு பவுர்ணமியாக
உதயமாகும்போது உடன் இருக்கும் ராகு அதை சந்திரக் கிரகணமாக மாற்றுகிறது.சாஸ்திரத்தை முழுமையாகவும்,சிரத்தையாகவும் பின்பற்றுவோர் இந்த 25.4.13 வியாழக்கிழமை மாலை 4 மணிக்குப் பிறகு எதுவும் சாப்பிடக் கூடாது;

கிரகண நேரத்தில் ஜபிக்கும் எந்த ஒரு மந்திரஜபமும் அளவற்ற தெய்வ சக்தியை நமக்கு ஈர்த்துத் தரும்;

எனவே,ஓம்சிவசிவஓம் ஜபிக்க விரும்புவோர்,25.4.13 வியாழக்கிழமை நள்ளிரவு மணி 1.20க்குப் பிறகு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தை நள்ளிரவு 1.50க்கு நிறைவு செய்ய வேண்டும்.மற்ற நாட்களில் நீங்கள் ஜபிக்கும்போது என்ன உணருகிறீர்களோ,அதை விடவும் வித்தியாசமான,அதே சமயம் அதிசயத்தக்க உணர்வுகளைப் பெறுவீர்கள்.

இந்த நிமிடங்களில் நீங்கள் ஒருமுறை ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,அது பல கோடி தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தமைக்கான பலன்களைப் பெறலாம்

9 thoughts on “பௌர்ணமிகளில் சிறப்பு மிக்க சித்ரா பௌர்ணமி

  1. உலகப் பொதுமறை தந்த தெய்வப்புலவர் ஐயன் திருவள்ளுவர்- அன்னை வாசுகி திருக்கல்யாணம் – விரிவான கவரேஜ் ஆவலுடன் எதிர்பார்கிறோம்.

  2. 4 ஆண்டுகள் முன்னர் , நான் என் தம்பி மற்றும் நண்பர்களுடன் ஒரு பௌர்ணமி அன்று கிரிவலம் போகலாம் என்று திருவண்ணாமலை க்கு சென்றோம்… நாங்கள் அதற்க்கு முன்பு இரு முறை சென்று இருக்கிறோம் (அதில் ஒன்று பௌர்ணமி )– ஆனால் நாங்கள் அன்று பார்த்தது போல் ஒரு கூட்டம் என்றுமே எங்குமே பார்த்ததில்லை …விசாரித்தால் தான் தெரிந்தது அன்று ‘சித்திரா பௌர்ணமி’ என்று ! ஒரு நண்பனோ சற்று தயங்கினான் – இந்த கூட்டத்தில் மாட்ட விரும்பாதவனா இருந்தான் …அவனை கொஞ்சம் சரி படுத்தி , கிரிவலம் தொடங்கினோம் ….என் வாழ்வில் மறக்க முடியாத நாள் ….

    அனைவரும் மாலை வேளைகளில் தி.நகர் – ரங்கநாதன் தெரு ஒரு முறையாவது போயிருப்பீர்கள் (குறைந்த பட்சம் கேள்வி பட்டிருப்பீர்கள் )– அதே போல இருந்தது கிரிவல பாதை ….

    ஒரு உதாரணம் : காலனி(செருப்பு) பாதுகாப்பு வைக்கும் ஒரு இடத்தில் , காலனிகளை இரண்டு ஆள் உயர மலையாக குமித்து வைத்திருந்தனர் ….

    கை வீசி நடந்தால் இன்னொருவர் மேல் இடி பட்டு விடும் …நம் கால் சற்று அகலமாக போனால் இன்னொருவரை மிதித்துவிடுவீர் ….இப்படி தான் முழு 17 கி,மீ தூரமும்… பொதுவாக நாங்க நடக்க ஆரம்பித்தல் ஒரு 4 -5 மணி நேரத்தில் முடித்து விடுவோம் (மிகவும் பொறுமையாக நடப்போம்)..ஆனால் அன்றோ சுமார் 8 மணி நேரம் ஆனது (இரவு 10 மணிபோல் ஆரம்பித்து – காலை 5 மணிப்போல் முடித்தோம் ..இரவில் தான் அநேகம் பேர் நடப்பர்)… உண்மையிலயே கடினமாக இருந்தது ….கடைசி ஒரு 2 கி.மீ உற்சாகம் குறைந்து ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள கூட இல்லை….சிரமப்பட்டு வந்து சேர்ந்தோம் கோபுர தரிசனம் முடித்தோம்…ஆனால் கிளம்பி செல்கையில் ஒரு பேரானந்தம் தொற்றி கொண்டது..ஏதோ சாதித்து விட்ட மாதிரி இருந்தது …. சித்திரா பௌர்ணமி அன்று கிரிவலம் – அனைவருக்கும் கிடைக்காது என்று சொல்ல கேட்டு மகிழ்ந்தோம் …. அந்த 8 மணி நேரம் கூட்டத்தில் சிக்கி சற்று அவதி பட்டாலும் – இந்த சாதனை எண்ணம் அவைகளை ஓரம் கட்டியது …. கிட்டா வரம் கிட்டிய சந்தோஷம் !
    அதன் பிறகு எனக்கு நடந்த விபத்தினால் அடுத்தடுத்து வருஷங்களில் கிரிவலம் செல்ல முடியாமல் போனது ….அதன் பிறகு இன்று வரை போக வில்லை , போக முடியவில்லை …. விபத்தினால் வந்த தயக்கம் – என்னால் அவ்வளவு தூரம் நடக்க இயலுமா என்ற சந்தேகம் உள்ளது …சீக்கிரம் கால்களை தயார் படுத்தி மறுபடியும் கிரிவலம் செல்ல ஆசை …முயற்ச்சிக்கிறேன் ….எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிய வேண்டும் !
    “” தென்னாடுடைய சிவனே போற்றி ….என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !! “”

    1. உங்களது கமெண்ட்டை பார்த்து இன்று கிரிவலம் போகாது போய்விட்டோமே என்று ஏங்குகிறேன்.

      உங்களது காலில் ஏற்பட்ட பிரச்னை என்னை பொருத்தவரை வேறு ஏதோ பெரிதாக உங்களுக்கு வந்து முடக்கவேண்டியது. ஆனால் ஈசன் அருளால் சிறிய பாதிப்போடு விட்டுவிட்டது என்றே தோன்றுகிறது.

      எனினும் அண்ணாமலையார் அருளால் அடுத்த சித்ரா பௌர்ணமி கிரிவலம் நிச்சயம் இருவரும் செல்வோம். நீங்களும் பூரண நலம் பெறுவீர்கள்.

      – சுந்தர்

    2. அய்யா,
      தங்களுக்காக நான் அந்த சிவனிடம் நீங்கள் விரைவில் பூரண குணமடைய பிராத்தனை செய்கிறேன்
      சிவாய நமக

  3. தகவல்களுக்கு மிக்க நன்றி !!!

    மகத்துவமான இந்த சித்ரா பௌர்ணமி தினத்தில் அவரவர் பிரார்த்தனைகளை எல்லாம் வல்ல இறைவன் விரைவில் நிறைவேற்றிட மனமுருகி வேண்டுவோம் !!!

  4. சுந்தர்ஜி,

    நன்றி,
    சித்ரா பௌர்ணமி அன்று ஓம் சிவ சிவ ஓம் ஜபித்து ஓரளவேனும் நம் பாவங்களை போக்கி கொள்வோம். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

  5. இன்றைக்கு ஏதாவது ஒரு மலைக்கோவில் அல்லது அம்மன் ஆலயத்திற்கு சென்று இறைவன்/இறைவியை தரிசிக்கவேண்டும் என்று நம் வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.
    //எனவே,ஓம்சிவசிவஓம் ஜபிக்க விரும்புவோர்,25.4.13 வியாழக்கிழமை நள்ளிரவு மணி 1.20க்குப் பிறகு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தை நள்ளிரவு 1.50க்கு நிறைவு செய்ய வேண்டும்.மற்ற நாட்களில் நீங்கள் ஜபிக்கும்போது என்ன உணருகிறீர்களோ,அதை விடவும் வித்தியாசமான,அதே சமயம் அதிசயத்தக்க உணர்வுகளைப் பெறுவீர்கள்.//

    சுந்தர் சார் அவர் கலுக்கு ஒரு வேண்டுகோள்!

    இது போன்ர விசேச தினங்கல் பற்றிய பதிவுகல் போடும்போது ஒருனாள் முன்னறே போடவேண்டும்..ஏனென்ரால் இன்ரய அவசரயுகத்தில்,இன்ரய தேதி கூட நம்மவர்க்கு (ஏண் எனக்குத்தான்)தெரிவதில்லை..அவ்ளோ பிசி..குடும்பம்.., வேலை… ,என..

    உங்கல் பதிவை பார்க்க நேரம் கிடைத்து பின் அதபடி நடப்பது காலம் கடந்துவிடுகிரது..

    நல்ல பதிவுக்கு நன்ரி…

    1. நீங்கள் கூறுவதை ஒப்புக்கொள்கிறேன். இது போன்ற பதிவுகளை ஓரிரு நாட்கள் முன்னர் அளித்தால் தான் அதன் படி அனைவரும் நடந்துகொள்ள முடியும் என்பது உண்மை.

      சித்ரா பௌர்ணமி குறித்து நான் முதலில் பதிவு அளிப்பதாக இல்லை. உஷா அவர்கள் கேட்டுக்கொண்டதையடுத்து கடைசி நேரத்தில் தயார் செய்து அளித்தேன். அதில் பிற்சேர்க்கையாக இடம் பெற்றுள்ள கிரகணம் குறித்த செய்தியை அவர்கள் எனக்கு பதிவளித்த பின்னர் மின்னஞ்சல் அனுப்பினார்கள். பயன்பெறுவோர் பயன்பெறட்டும் என்று அதை பதிவில் இணைத்தேன்.

      மற்றபடி, நிச்சயம் விசேட நாட்கள் குறித்த பதிவு முன்னரே அளிக்கப்படும். அதேபோல நமது தளத்தில் HOMEPAGE இல் SCROLLING TEXT போடப்படும்.

      நன்றி….

      – சுந்தர்

  6. நான் என் நண்பர்களோடு பல தடவை கிரிவலம் சென்றுளேன்,அது பௌர்ணமி அல்லாது சாதனா நாளில் செல்வோம் ,அறி பௌர்ணமி அன்று சென்று தான் பார்ப்போமே என்று சென்ற மாதம் பௌர்ணமி அன்று நானும் என் நண்பர் இன்னொருவரும் சென்றோம் ,அந்த ஆனந்தம் சந்தோசத்தால் இனி மாதம் தோறும் பௌர்ணமி கிரிவலம் செல்வது என்று முடிவெடுத்து விட்டோம் ,அதே போல் இந்த சித்திரா பௌர்ணமி அன்று கிரிவலம் சென்றோம் அப்பா என்ன ஒரு கூடம் எங்கு பார்த்தாலும் மனித தலைகள் தான் ,ஆனாலும் அப்படி ஒரு சந்தோசம்.எப்பொழுதும் ஐந்து முதல் ஐந்தரை மணி நேரம் ஆகும் எங்களுக்கு இந்த முறை வெறும் நாலு மணி நேரம் தான் பிடித்தது ,காரணம் கூட்டத்தினால் வேகமாக நடக்காமல் நிதானமாக நடந்தோம் எங்கும் நிற்கவில்லை ,உக்காரவில்லை அதனால் சீக்கிரம் நடந்து முடித்தோம்

    நண்பர்கள் அனைவருக்கும் பௌர்ணமி கிரிவலம் சென்று பாருங்கள் உங்களுக்கு எப்படி ஒரு மாற்றம் வருகிறது என்று தெரியும் நீங்கள் முடிக்க முடியுமா என்று சந்தேக பட்ட காரியங்கள் கூட இறைவன் அருளால் நடக்கும் அவ்வளவு சக்தி பௌர்ணமி கிரிவலம் மற்றும் அருணாச்சலேஸ்வரர் மகிமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *