Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

print
ம் தளத்தின் சார்பாக ஒவ்வொரு மாதமும் பல்வேறு அறப்பணிகள் நடைபெற்று வந்தாலும் அவற்றில் மிக முக்கியமானதாக நாம் கருதுவது கோ – சம்ரோக்ஷனம் எனப்படும் பசுக்களின் சேவையை தான். கர்மாவை உடைப்பதில் கோ-சம்ரோக்ஷனத்தின் பங்கு மிக மிக பெரியது. அல்லவை அனைத்தையும் நீக்கி நல்லவற்றை தரவல்லது. நமது அக்கவுண்டில் நாளுக்கு நாள் சேரும் மிகப் பெரும் தொகை போல, நமது புண்ணிய கணக்கில் நாளுக்கு நாள் புண்ணியம் சேர்க்கும் ஒரு ஒளஷதம் கோ-சம்ரோக்ஷனம்.

DSC00642
மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயம்

பசு நடக்கும் போது எழும் புழுதி மேலேபடுவது எட்டு வகை ஸ்னானங்களில் ஒன்றாகும். பசுவிற்கு பணிவிடை செய்ததால் தான் வெகுநாட்களாக குழந்தை இல்லாதிருந்த திலீபன், ஸுதக்ஷிணை தம்பதிகளுக்கு நல்ல புத்ரன் பிறந்தான் என்கிறார் காளிதாஸர்.

நாம் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளும் திருக்கோவில் உழவாரப்பணியின் போது அந்த ஆலயத்தில் கோ-சாலை இருந்தால் விசேஷ கவனம் செலுத்தி அது சுத்தம் செய்யப்படுகிறது.

இன்றும் ஒவ்வொரு மாதமும் நம் தளம் சார்பாக உயர் ரக தீவனம் இரண்டு மூட்டைகள் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கோ-சாலையில் இறக்கப்படுகிறது. நம் நண்பர்களின் / வாசகர்களின் வீட்டின் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளின் போது
அவர்கள் கேட்டுகொள்வதற்கிணங்க தீவனங்கள் இறக்கப்படுகிறது.

மேற்கொண்டு தொடர்வதற்கு முன்பு, பசுவின் மகிமை பற்றி 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டேஸ்வரர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

பசுவின் மகிமை

63 நாயன்மார்களுள் ஒருவரான விசாரசருமர் (சண்டேஸ்வர நாயனார்) ஒரு நாள் மற்றைய மாணவர்களுடன் வேதம் ஒதிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒர் இடையன் அவ்வூராரின் பசுக்களை மேய்ப்பதற்காக ஒட்டிப் போய்க்கொண்டிருந்தான். ஒரு பசு அவ்விடையனைத் தன் கொம்பால் குத்தப்போயிற்று. அவ்விடையன் சிறிதும் பாவத்திற்கு அஞ்சாமல், “என்னையே முட்டப் பார்க்கிறாயா? இரு உன்னை என்ன செய்கிறேன் என்று பார்!” என்று கூறி தன் கையிலுள்ள கோலால் அப்பசுவைத் நையப் புடைத்தான். வேதம் ஒதும் விசாரசருமர் இக்காக்ஷியைப் பார்த்தார். மனம் பதைபதைத்து எழுந்து இடையனை நோக்கி ஓடினார். மேலும் அடிக்காமல் தடுத்தார்.

அவனிடம் “நீ இனிமேல் பசுக்களை அடிக்காதே. பசுக்களின் மகிமையை நீ அறியமாட்டாய். வேதாகமங்களும் புராணஙங்களும் பசுக்களின் மகிமையை மிக விரிவாகக் கூறுகின்றன. பசுவினிடத்தில் எல்லாத் தேவதைகளும் குடிகொண்டிருக்கிறார்கள். எல்லாத் தீர்த்தங்களும் இருக்கின்றன. பசுக்கள் தரும் பஞ்ச கவ்யம் பால், தயிர், நெய், கோமயம், கோமூத்திரம், பரமசிவனுக்கு மிகப் பிரியமானது. சகல பாபங்களையும் போக்கவல்லது. ஈசன் அணியும் திருநீற்றின் மூலக்காரணமும் இதனிடமிருந்தே கிடைக்கிறது. அம்மையப்பன் சேர்ந்து எழுந்தருளும் காளையின் குலத்தைச் சேர்ந்தது. பசுக்களின் தலைவன் சிவபெருமான். பசுக்களின் வழிபாடே சிவவழிபாடு. அந்தணர்களின் வேள்விகளும், பசுக்கள் தரும் நெய்யினால்தான் நடை பெறவேண்டும். பசுக்கள் இல்லையேல் வேள்வி இல்லை. பசுக்கள் வாழ, தேவர்கள் வாழ்வார்கள். தேவர்கள் வாழ மாதமும்மாரி பெய்யும். தேசம் செழிக்கும். தேசத்தில் பஞ்சமில்லாமல் இருக்க, பசுக்களைக் காத்தல் அவசியம். பசுக்களின் சேவையே தேச சேவை. பசுக்களின் சேவையே சமூக சேவை. ஆகையால் இப்பசுக்களை இனி நானே மேய்ப்பேன். நீ மேய்க்கவேண்டாம்” என்றார். இடையன் பசுக்களின் மகிமையை கேட்டான். பயந்து விட்டான். மன்னிப்புக் கோரி வணங்கினான். திரும்பிப் போய்விட்டான்.

விசாரமருவர் பசுக்களின் சொந்தக்காரர்களிடம் சென்றார். பசுக்களை மேய்க்க தாம் கொண்டுள்ள ஆவலைத் தெரிவித்தார். அவர்களின் அனுமதியைப் பெற்றார். பசுக் கூட்டங்களை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றார். கிராமத்தினருகே மண்ணியாறு என்ற ஒர் ஆறு ஒடுகிறது. அதன் இருகரைகளிலும் பெரும் புல்வெளிகள் இருந்தன. தினந்தோறும் பசுக்கூட்டங்களை அவ்விடங்களுக்கு ஓட்டிச் சென்று வயிறார மேய விடுவார். தண்ணீர் காட்டுவார். நடுப்பகலில் மர நிழல்களில் பசுக்களைத் தங்க விடுவார். அத்துடன் தமக்கு வேண்டிய சமித்து முதலியவைகளை சேகரித்து எடுத்துக் கொள்வார். சூரியன் மறைவதற்று முன்பாகவே பசுக்களை கிராமத்திற்கு ஓட்டிவருவார். இவரின் விரிவான வரலாறு வேறொரு பதிவில் வெளியிடப்படும்.

கோ-சம்ரோக்ஷனம் செய்ய வேண்டும் என்றால் பல இடங்கள் உண்டு. ஆனால் தகுதியான இடத்தை தேர்வு செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. பல இடங்களுக்கு சென்று, பல விஷயங்களை ஆராய்ந்து, இறுதியில் நாம் தேர்ந்தெடுத்த இடம் தான் இந்த மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயம்.

இங்குள்ள கோ-சாலையில் உள்ள பசுக்கள் மூலம் கிடைக்கும் பால், முழுக்க முழுக்க சிவனின் அபிஷேகத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. திருவண்ணாமலை, திருச்செந்தூர் போன்ற பெரிய பெரிய ஆலயங்களிலேயே பசுக்களை முறைப்படி பராமரிக்காமல் அவற்றை துன்புறுத்துகிற சூழலில் பசுக்களை இங்கு சிறந்த முறையில் பராமரிப்பதால் தான் இங்குள்ள ஊழியர்கள் இருவருக்கும் அவர்களை உற்சாகமூட்டும் பொருட்டு சென்ற தீபாவளியை முன்னிட்டு நாம் வஸ்திரங்கள் எடுத்து தந்தோம் என்பதை அறிவீர்கள்.

இங்குள்ள துர்கா என்கிற பசு வேலன் என்கிற கன்றை சென்ற ஆண்டு ஈன்றது. தற்போது மற்றொரு பசு, பெண் கன்று ஒன்றை ஈன்றது. அதற்கு நாம் நந்தினி என பெயர் சூட்டினோம்.

கோ-சாலைக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாம் விரும்பிய போது கோடைக் காலமாய் இருப்பதாலும் பசுக்களை ஈக்கள் மொய்ப்பதாலும் கோ-சாலைக்கு பெரிய ஃபேன் ஒன்று தேவை என்று சொன்னார்கள்.

இதற்கான தொகையை நாம் நம் தளத்தின் அறப்பணிகளில் துணையாய் இருக்கும் சில வாசகர்களிடமே கேட்டு பெற்று செய்து விட முடியும் என்றாலும், ஒரு மிகப் பெரிய புண்ணியத்தின் பலன் அனைவருக்கும் போய் சேரட்டும் என்று கருதி தான் நம் தளத்தில் அது குறித்த செய்தியை வெளியிட்டு உதவி கோரினோம். ஆனால் ஓரிருவர் தவிர வேறு எவரும் அதற்கு உதவ முன் வரவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.

ஃபிட்டிங் காஸ்டோடு நாம் யூகித்த தொகை ரூ.6000/- முதல் ரூ.6500/-. ஆனால் ரத்னா பேன் ஹவுசில் விசாரித்தபோது ஃபேன் விலை ரூ.6700/- சொன்னார்கள். இது தவிர ஃபிட்டிங் தனி.

கோ-சாலைக்கு மின் விசிறியை அளிக்கும் பணியானது எப்படியும் ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமைக்குள் செய்து விடவேண்டும் என்று முடிவு செய்தோம். இல்லையெனில், அடுத்த ஞாயிறு தான் முடியும். ஏற்கனவே வெயில் சென்னையில் வறுத்தெடுக்கிறது. இந்நிலையில் குழந்தையை வேறு வைத்துக்கொண்டு அந்த பசு என்ன செய்யும்… எனவே செய்ய தீர்மானித்த நல்ல விஷயத்தை தாமதம் செய்திடாது செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டோம்.

இதற்கிடையே உழவாரப்பணி வேறு வந்தது.

உழவாரப்பணி மற்றும் சர்வே செய்யவும் கோவிலுக்கு தேவையான இதர விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்ளவும்  உழவாரப்பணிக்கு முதல் நாள் குறுங்காலீஸ்வரர் கோவில் சென்றோம். அங்கு குருக்களை சென்று சந்தித்து, மறுநாள் உழவாரப்பணி செய்ய நாம் நம் குழுவுடன் வரவிருப்பதாகவும் என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்று கேட்டபோது, பொதுவான துப்புரவு பணிகள் செய்தால் போதுமானது என்று கூறினார். நாம், மின்சார பல்பை மாற்றுவது, ஒயரிங்கை சரி செய்வது இப்படி எலக்ட்ரிகல் பணிகள் ஏதேனும் இருந்தால் கூறும்படியும், கேட்க அதற்கு அவர், ஆலயத்தில் சித்திரை உற்சவம் விரைவில் துவங்கவிருப்பதாகவும், கோவிலுக்கு ட்யூப் லைட் பிட்டிங்குகள் சுமார் 8 செட் மற்றும் சீலிங் ஃபேன் சுமார் 4 தேவைப்படுவதாகவும் கூறினார்.

குறுங்காலீஸ்வரர் கோவிலுக்கு ஃபேன்கள் மற்றும் ட்யூப் லைட் பிட்டிங்குகள் நம் நண்பர்கள் மூலம் வழங்கப்படுகின்றன
குறுங்காலீஸ்வரர் கோவிலுக்கு ஃபேன்கள் மற்றும் ட்யூப் லைட் பிட்டிங்குகள் நம் நண்பர்கள் மூலம் வழங்கப்படுகின்றன

சிறு சிறு தேவை ஏதேனும் இருந்தால் சொல்லுவார் என்று நினைத்தோம். ஆனால் இத்தனை பெரிய பட்டியலை அவர் அளிப்பார் என்று  நாம் கருதவில்லை. நாம் ஏதோ மிகப் பெரிய குழு என்று நினைத்துவிட்டார் போல… இருப்பினும் கேட்பது அவருக்காக இல்லை…. கோவிலுக்காக அதுவும் சிவனுக்காக…. சிவனுக்கு செய்யும் கடுகளவுக்கு தொண்டுக்கு கூட மலையளவு புண்ணியம் உண்டு.

அன்றைய தினம், உழவாரப்பணி செலவுக்கு வாசகர் ஒருவர் பணம் அனுப்பியிருந்தார். அதுமட்டுமல்லாமல் உழவராப்பணிகளில் தொடர்ந்து உதவும் நம் நண்பர் ஒருவரும் பணம் அனுப்பியிருந்தார். நந்தினிக்காக பேன் வாங்க அந்த தொகையை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்த நிலையில் இவர் இவ்வாறு கேட்க, நம்மால் மறுக்க முடியவில்லை.

“சரி…சுவாமி… நாளைக்கு வரும்போது எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துடுறோம்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டோம்.

அன்று மாலை கடைக்கு சென்று அவர் கூறியது போல எட்டு ட்யூப் லைட் பிட்டிங்குகள் மற்றும் 4 சீலிங் பேன்கள் வாங்கிக்கொண்டோம்.

கையில் இருக்கும் மீதி தொகையுடன் மேலும் கொஞ்சம் தொகை சேர்த்து எப்படியும் நந்தினிக்கு ஞாயிறு மாலைக்குள் பேன் வாங்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது.

மறுநாள் உழவாரப்பணி நடைபெற்றபோது, அந்த பேன்கள் மற்றும் லைட் பிட்டிங்குகளை குருக்களிடம் நம் நண்பர்கள் அனைவர் முன்னிலையிலும் ஒப்படைத்தோம். பின்னர் அங்கேயே வைத்து நந்தினியின் ஃபேன் தேவைக்காக அனைவரிடமும் தொகை வசூலிக்கப்பட்டது. ரூ.3500/- தேறியது. இன்னும் ரைட் மந்த்ரா அக்கவுண்டில் இருந்து ரூ.2000/- போட முடியும். மேலும் ஒரு 2000/- தேவை. சரி… சாயந்திரம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். (தளத்தில் இந்த மாதத்துக்கான ரெகுலர் பணிகளுக்கு மட்டுமே பணம் இருந்தது. பசு தீவனம், கிளிகளுக்கான அரிசி, அன்னதானம் இப்படி..!)

ரத்னா பேன் ஹவுஸில் கண்ட வாசகம்
ரத்னா பேன் ஹவுஸில் கண்ட வாசகம்

இதற்கிடையே நம்மை இரண்டு நாட்களாக தொடர்பு கொண்டு வந்த வாசகர் ஒருவர் (தன் பெயரை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்) கோ-சாலைக்கு பேன் வாங்குவது தொடர்பான முன்னேற்றங்களை விசாரித்துக்கொண்டிருந்தார். ஞாயிறு மாலை ரத்னா பேன் ஹவுஸ் சென்று வாங்கப்போவதாகவும் முடிந்தால் ஏதேனும் உதவும்படியும் கேட்டுக்கொண்டோம். அவர் பிடி கொடுத்து எதுவும் பேசவில்லை.

உழவாரப்பணி முடித்து வீட்டுக்கு வந்து அன்று மாலை பேன் வாங்க தி.நகர் செல்லவேண்டியிருந்தது. அப்போது அந்த வாசகர் நம்மிடம் பேசினார். “நீங்க எத்தனை மணிக்கு ரத்னா வருவீங்கன்னு சொல்லுங்க… நானும் வர்றேன் சுந்தர்” என்றார். நாம ஃபேன் வாங்கும்போது கூட இருக்க ஆசைப்படுறார் போல என்று நினைத்து “கரெக்டா 45 நிமிஷத்துல ரத்னாவுல இருப்பேன் சார்!” என்றோம்.

கோ-சாலையை பராமரித்து வரும் பாலாஜி அவர்களையும் ரத்னா வரச் சொல்லிவிட்டு நாமும் விரைந்தோம். பற்றாக்குறை தொகையை நமது கையில் இருந்து போடுவதாக பிளான்.

DSC00590

அங்கே நாம் செல்லும்போது அவர் நமக்காக காத்திருந்தார். அவரிடம் கடந்த ஒரு மாதமாகத் தான் பேசிவருகிறோம். ஆனால் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. அப்போது தான் முதன்முறை சந்திக்கிறோம். தனி மனிதராக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டு கைகுலுக்கிக்கொண்டோம்.

நாங்கள் மாடலை பார்த்துக்கொண்டிருக்கும்போது கோ-சாலையிலிருந்து பாலாஜியும் வந்துவிட்டார். மாடலை அவர் ஒ.கே. செய்யவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருந்தோம். ஏனெனில் அவருக்குத் தானே அது பற்றி முழுமையாக தெரியும்.

DSC00606

நாம் முன்பே குறிப்பிட்டது போல, ALMONARD 24″ AIR CIRCULATOR WALL MOUNTING FAN வாங்குவது என்று  செய்யப்பட்டது. ஃபேனின் விலை ரூ.6,660/-.

மாடலை ஓ.கே. செய்து பில்லுக்கு பனம் கட்ட செலுத்த சென்ற தருணம், அந்த நண்பர் தன்னுடைய கார்டை வெளியே எடுத்தார். “என்ன பேர்ல் பில் போடணும்னு மட்டும் சொல்லுங்க. நான் என் கார்ட்ல வாங்கித் தர்றேன். நீங்க ஒரு பைசா செலவழிக்க வேண்டாம்!” என்றார்.

“இல்லே…சார் ஏற்கனவே வாசகர்கள் சிலர் இது தொடர்பாக உதவியிருக்கிறார்கள். கூடுதல் தொகையை மட்டும் நான் செலுத்தி வாங்கப்போகிறேன்”

“இல்லை… இதுக்கு நான் ஃபுல்லா நான் PAY பண்ணிடுறேன்”

“ஃபுல்லாவா? வேணும்னா கூடுதல் தொகையை மட்டும் நீங்க கொடுத்தீங்கன்னா போதும் சார்”

“இல்லே… கலெக்ட் ஆன தொகையை இங்கே நீங்கே ரெகுலரா வாங்கித் தர்ற தீவனத்துக்கு வெச்சுக்கோங்க. இதுக்கு நான் PAY பண்ணிடுறேன்” என்றவர் சில வினாடிகளில் தன்னுடைய கார்ட் மூலம் பணத்தை செலுத்தி பில்லை கட்டியவர், “வீட்டுல எல்லாரும் வெளியே கிளம்பிட்டு இருந்தோம். நீங்க வர்றீங்கன்னு சொன்னதால உடனே வந்தேன். நான் வர்றேன். அப்புறம் பார்ப்போம்” என்று கூறி விடை பெற்றார்.

DSC00600

அவரை பாலாஜியிடம் மறக்காமல் அறிமுகப்படுத்தி, “சார் நம்மோட நண்பர். நம்ம கோ-சாலையின் ஃபேனுக்கான முழு செலவும் இவருடையது தான்.” என்று கூறினோம். பாலாஜி அவருக்கு நன்றி கூற, எதையும் எதிர்பாராமல் விருட்டென்று கிளம்பி போயேவிட்டார்.

நாம் பாட்டுக்கு தைரியமா கமிட் செய்துவிட்டோமே எப்படி முழு தொகையையும் கொடுத்து எப்படி ஃபேனை வாங்கப்போகிறோம் என்று மாலை வரை கவலையில் இருந்தோம். வேறு ஒரு வாசக நண்பர் காலை கொஞ்சம் தொகை அனுப்புவதாக சொல்லியிருந்தார். இப்போதைக்கு கையில் இருக்கும் பர்சனலாக நம் கணக்கில் இருக்கும் தொகையை போட்டு அட்ஜெஸ்ட் செய்துவிடுவோம். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது தான் பிளான்.

ஆனால் நடந்தது என்ன என்று பார்த்தீர்களா?

நல்லதை நாம் செய்ய நினைத்தால் போதும். இறைவன் அதை செய்வதற்குரிய சக்தியையும் வழி வகைகளையும் தானே வழங்குவான்.

DSC00617

குடோனில் காத்திருந்த சில நிமிடங்களில் ஃபேன் நம்மிடம் வந்தது. நாம் நினைத்ததைவிட பெரிதாக இருந்தது. எப்படி இதை கொண்டு போறது… ஆட்டோ தான் பிடிக்கணும் போல என்று தோன்றியது. ஆனால் நல்லவேளை. கூட இருந்து பேனை எடுத்துச் செல்ல வேறு ஒருவரை பாலாஜி அழைத்து வந்திருந்தார். இருவரும் சேர்ந்து பேனை எடுத்துச் சென்றனர்.

அவர்கள் முன்னே சென்றுவிட, நாம் ஒரு சில கால்கள் அட்டெண்ட் செய்யவேண்டியிருந்தது. சில நிமிட இடைவேளைக்கு பின்னர் நாம் கோ-சாலைக்கு சென்றோம்.

அங்கே ஃபேனை பிட்டிங் செய்யும் பணியில் மும்முரமாக இருந்தார் பாலாஜி. ஏ.ஸி.யை கூட ஈஸியா பிக்ஸ் பண்ணிவிடலாம் போல… ஆனால் இதை ஃபிட் செய்வது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.  பார்க்கும்போதே தலை சுற்றியது.

அன்னை மடியில்.... நந்தினி!
அன்னை மடியில்…. நந்தினி!

“நீங்க வேணும்னா கிளம்புங்க சார்… நான் ஃபிட் பண்ணிட்டு காலைல ஃபோன் பண்றேன்!” என்றார் பாலாஜி.

நமக்கு அதுதான் சரியெனப் பட்டது. வீட்டுக்கு போனால் மண்டே மார்னிங் ஸ்பெஷலாவது தயார் செய்யலாம். உடனே கிளம்பிவிட்டோம்.

மறுநாள் காலை சுமார் 11 மணியளவில் பாலாஜி போன் செய்தார்.

“சார்… ஃபேன் மாட்டியாச்சு… நல்லா ஓடுது… அதை சொல்லலாம்னு தான போன் பண்ணினேன்”

DSC00630

“சௌகரியமா இருக்கா? நல்லா காத்து வருதா?”

“பிரமாதம். எல்லா மாடுகளும் சுகமா காத்துல ரெஸ்ட் எடுத்துகிட்டு இருக்காங்க!”

இந்த வார்த்தையை கேட்டவுடன் தான் நாம் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.

மறுநாள் நமது மதிய உணவு இடைவேளையின் பொது (அதாவது நேற்று) மீண்டும் கோ-சாலைக்கு நேரில் சென்றோம். துர்கா, வேலன் மற்றும் நந்தனி அவள் அம்மா என அனைவரும் ஃபேன் காற்றில் ஒய்யாரமாக ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தது கண்கொள்ளா காட்சி.

ஒருகணம் அங்கு நின்று இந்த பணிக்கு துணை நின்ற, சாத்தியமாக்கிய அனைவருக்கும் குறிப்பாக முழு தொகையையும் கொடுத்த அந்த நண்பருக்கு நன்றி கூறினோம். (ஃபேன் வாங்க நிதி அளித்த மற்றவர்கள் வருந்தவேண்டாம். அந்த பாக்கி தொகையும் கோ சேவைக்கே செலவிடப்படும்.)

இந்த பெரிய பணியை சாதித்ததில், சரி பங்கு பசுமடத்தை பார்த்துக்கொள்ளும் பாலாஜிக்கும் உண்டு. கோ-சாலைக்கு தானே ஃபேன் மாட்டுறாங்க… இதுல நமக்கு என்ன பிரயோஜனம் என்று எண்ணாமல், முழு ஈடுபாட்டுடன் கடைக்கு வந்திருந்து ஃபேன் வாங்கியது முதல் அதை கொண்டு வந்து தானே ஃபிட்டிங் செய்தது வரை பாலாஜி அவர்களின் ஈடுபாட்டை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

DSC02235

மொத்தத்தில் நம் நண்பர் பாலாஜி இருவரும் சேர்ந்து நமக்கும் புண்ணியத்தை அள்ளி தெளித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் நன்றி.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு. (குறள் 211)

இதற்கெல்லாம் முழுமுதற்காரணமாக இருந்து மிக பெரிய வாய்ப்பை நமக்கு வழங்கி பிறந்த உடனேயே நாம் பெரும் புண்ணியம் சேர்க்க உதவிய நந்தினிக்கும் நன்றி!

=================================================================
அக்ஷய திரிதியை – சிறப்பு அறப்பணிகள்!

நாளை மறுநாள் அட்சய திரிதியை. முதலீட்டுக்கு உகந்த நாள். அதாவது புண்ணிய முதலீடு. அன்று நாம் செய்யும் அறப்பணிகள் பன்மடங்கு விருத்தியாகும். பன்மடங்கு பலனைத் தரும். அக்ஷயம் என்றால் ‘என்றும் குறையாத’ என்று பொருள். அன்று நமது அறப்பணிகளில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் நம் தளத்தின் வங்கிக் கணக்கில் தங்களால் இயன்ற தொகையை செலுத்திவிட்டு, நமக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும். அக்ஷய திரிதியை அன்று என்ன வாங்கலாம் என்று சிந்திப்பதைவிட, என்ன கொடுக்கலாம் என்று சிந்திப்பது சாலச் சிறந்தது! நம் மூலமாகத்தான் நீங்கள் அறப்பணிகளை செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்களால் முடிந்த அறப்பணிகளை நீங்களே முன்னின்று உங்கள் பகுதிகளில் செய்யலாம். (சரியான பயனாளிகளை அது சென்றடைகிறதா என்று மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்). பல்வேறு சூழ்நிலைகளால் நேரடியாக தங்களை அறப்பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள இயலாது தவிப்பவர்கள் நம்முடன் தாராளமாக இணைந்துகொள்ளலாம்.
=================================================================

Also check :
=================================================================

[END]

4 thoughts on “அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

  1. இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. இந்த அறப்பணியில் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. சில நாட்கள் முன்பு சுந்தரிடம் பேசும்போது துண்டு விழுந்தால் தகவல் சொல்வதாக கூறினார். ஆனால் இதை நான் எதிர்பார்கவில்லை. பசுக்களுக்காக ஈசன் செய்த திருவிளையாடல் இது.

    பெயர் வெளியிட விரும்பாத நம் தள நண்பருக்கு மிக்க நன்றி. கலியுகத்துல இன்னமும் மற்றவர் நலம் நாடும் நல்லவங்க இருக்காங்க.

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம், அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்!

  2. சுந்தர் சார், உங்கள் பசுவின் துயர் துடைக்கும் செயல் ,அதற்கு நீங்கள் பட்ட பாடுகள் அனைத்தும் உங்களுக்கு வட்டியும் முதலுமாக வந்து உங்கள் துணையை நல்விதமாய் தேடி தரும்…வளர்க வாழ்க …..சிவாய சிவ ……

  3. மகத்தாந பனி புரியும் திரு சுந்தர் அவர்களுக்கு,

    வணக்கம், நான் நங்கநல்லூரில் வசிக்கிறேன். இங்கு கடை வீதியில் சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. நான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கோவில் செல்வது வழக்கம், அனேகமாக திங்கள் கிழமையில். இங்கு உள்ள நவக்ரஹ சந்நிதியில் நிறைய ஒட்டடை பிடித்துள்ளது. மனதுக்கு வருத்தமாக இருந்தது. நான் அங்குள்ள பொறுப்பளர்களிடம் சொல்லிவிடுவேன் அது ஒன்றும் கஷ்டமில்லை ஆனால் அவர்கள் அதை உடனேவோ அல்லது உதசினபடுதிவிட்டாலோ மேற்கொண்டு என்ன செய்வேன். நான் ஒரு நான்-பிராமின் நான் சொல்வதை சரியாக அர்த்தம் செய்துகொள்வார்கள என்ற சந்தேகம்.. அதனால் தாங்கள் நங்கநல்லூரில் உள்ள கோவில்களிலும் முடிந்தால் எனக்காக பேசுவீர்கள. சில தவறுகளையும் முறைகேடுகளையும் என்னால் சிரநிகமுடியவில்லை. உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன். முயற்சி செய்யவும்.

    நன்றி.

    பின் குறிப்பு: எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *