Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, May 19, 2024
Please specify the group
Home > Featured > அவிநாசியப்பரை பூசித்து இழந்த பதவியை பெற்ற ஐராவதம்!

அவிநாசியப்பரை பூசித்து இழந்த பதவியை பெற்ற ஐராவதம்!

print

துவரை எத்தனையோ பாடல்பெற்ற தலங்களை நாம் தரிசித்திருந்தாலும் திருப்புக்கொளியூர் என்னும் அவிநாசி ஏற்படுத்திய பிரமிப்பும் நெருக்கமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. ஏற்கனவே இது பற்றி நாம் சில பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறோம்.

மற்ற தலங்களை போல அல்ல அவிநாசி. விதியையே மாற்றி இழந்தவைகளை மீட்டுத் தரும் தலம். (நம்பிக்கை இருந்தால்!) பொதுவாக எல்லா கோவில்களிலும் இறைவனுக்கு இடப்பக்கம் இருக்கும் அம்பாள் இங்கு வலப்பக்கம் இருக்கிறார். இப்படி பல சிறப்புக்கள் அவிநாசிக்கு உள்ளன.

மேலும் சுந்தரருக்கு என்று தனியாக கோவில் உள்ளது. முதலை வாயிலிருந்து வெளியே வந்த சிறுவன், அவன் உயிருடன் இருந்திருந்தால் எப்படி வளர்ந்திருப்பானோ அப்படி வெளியே வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது நடந்தது கி.பி. 760 என்று நம்பப்படுகிறது. சுந்தரர் பதிகம் பாடி மீட்ட அந்த குளம் இன்றும் அவிநாசியில் உள்ளது. அங்கு நமது தளத்தின் ஆலய தரிசன பதிவுக்காக சென்று வந்தது பற்றி மேற்படி சுந்தரர் பதிகம் பாடி பாலகனை மீட்ட வரலாற்றுடன் விரிவான பதிவு தளத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.

அவிநாசித் தலப் புராணத்தில் அவிநாசியின் மகத்துவம் பற்றி பல்வேறு சம்பவங்கள் காணப்படுகின்றன.

அவற்றுள் ஒன்றை பார்ப்போம்.

அவிநாசி தலப் புராணத்தை படிப்பது மிகவும் புண்ணியம் தரக்கூடியதாகும்.

கதையின் (சம்பவத்தின்) முடிவில் சில மாதங்களுக்கு முன்னர் நாம் இரண்டாம் முறை அவிநாசி சென்று வந்த அனுபவம் குறித்து விளக்கியிருக்கிறோம்.

அவிநாசி தல புராணத்தில் பல கதைகள் இருந்தாலும் ஐராவதம் அவிநாசியப்பரை பூஜித்து இழந்த தன் இந்திரலோகப் பதவியை மீட்டது பற்றிய கதையை ஓவியத்துடன் தந்திருக்கிறோம். பிற கதைகள் அவ்வப்போது அளிக்கப்படும்.

=========================================================

Also Check :

முதலை விழுங்கியச் சிறுவனை சுந்தரர் பதிகம் பாடி மீட்ட அவினாசி தாமரைக்குளம் – நேரடி ரிப்போர்ட்!

சிவனடியார் திருவோட்டில் விழுந்த சில பருக்கைககள்… என்ன ஆயிற்று பிறகு?

பதினோறாயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த ஏழை!  அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 2

காமுகன் கயிலை சென்ற கதை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1

மனிதன் நினைக்கிறான் அவிநாசியப்பன் முடிக்கிறான்!

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

========================================================

ஐராவதம் பூசித்துத் தன் பதவி அடைதல்!

ரு பிரமகற்பதில் சிவபெருமான் திருவருள் பெற்ற தேவேந்திரன் சுவர்க்க லோகத்தில் தனது இந்திராணியோடு தேவபோகங்களை இரவும் பகலுமாக அனுபவிப்பதிலேயே இருந்து விட்டான். அவனது ஐராவதம் என்ற வெள்ளை யானை மத மயக்கத்தால் மயங்கிப் பூலோகத்திற்கு வந்து மலைச்சாரல்களில் திரியலாயிற்று. அங்கே ஐராவதம் ஒரு பெண் யானையிடம் தொடர்பு கொண்டு, தனது நிலையையும் கற்பகத்தரு நிழலையும் மறந்து இருந்தது.

இத்தருணத்தில் தேவலோகத்தின் ஒரு பகுதியில் அசுரர் படையெடுத்து போருக்கு வந்து போர்ப்பறை முழங்கினர். அதனை அறிந்த ஒரு வித்யாதரன் இந்திரனிடம் ஓடிவந்து அசுரர் செயலை முறையிட்டான். உடனே இந்திரன் போருக்குச் செல்லும் பொருட்டு, ‘ஐராவதம் எங்கே’ என்று வினவினான்.

அருகே நின்ற தேவர்கள், “நெடுநாளாக இங்கே ஐராவதம் இல்லை என்றனர்.

இந்திரன் கோபங்கொண்டு நமக்கு மேகவாகனம் உள்ளது என்று கருதி வெறுத்துத் தனது ஞான திருஷ்டியால் யானையின் நிலையினை உணர்ந்தான். அந்த ஐராவதம் பூமியிலுள்ள காட்டு யானைகளோடு சஞ்சரித்துக் கொண்டு தன் பெருமை கெடக்கடவது என்று சாபமிட்டான்.

இந்திரன் சாபம் பற்றியதிலிருந்து ஐராவதம், தேவலோகத்தைத் துறந்து கவலைகொண்டு திரியும் போது ஒரு கந்தர்வன் கானகத்தில் ஐராவத்தைக் கண்டு, தேவலோகத்தின் நிலையையும், இந்திரன் சாபமிட்ட செய்தியையும் கூறிவிட்டுச் சென்றான்.

அப்போது, ஐராவதம் சோர்வுடன் இருந்த சமயம், நாரத முனிவர் வருகையைக் கண்டது. உடனே அவர் திருவடிகளில் வணங்கி நிற்க நாரதர், ‘அயிராவதமே! கவலை கொள்ளாதே’ என்று கூறி, இந்திரன் இட்ட சாபம் தணியச் சில வார்த்தைகள் கூறலானார்.

‘ஏ, ஐராவதமே! * மேரு மலையின் தெற்கே எண்ணிறந்த சிவத்தலங்கள் உள்ளன; அவற்றுள் முக்தியை அளிக்கும் தலங்கள் ஐந்து ஆகும். அவை, பிறக்க முக்தியைத் தரும் திருவாரூரும், தரிசிக்க முக்தியைத் தரும் சிதம்பரமும், நினைக்க முக்தியை தரும் அருணாசலமும், இறக்க முக்தியைத் தரும் காசிப்பதியும் அடைந்து வசிப்போர்க்கும் தலப் பெருமைகளைப் பேசுவோர்க்கும் முக்தியைத் தரும் அவிநாசியும் ஆகும். வெள்ளை யானையே! நீ அவிநாசித் தலத்தை அடைந்து இறைவனைப் பூசித்தால் நீ பெற்ற சாபம் நீங்கப் பெறுவாய்’ என்று கூறினார். (மேரு மலை = புராண காலத்தில் இருந்து மலைத் தொடர்!)

உடனே வெள்ளை யானையான ஐராவதம் நாரதர் திருவடிகளில் வணங்கி விடை பெற்றுத் தென்திசை நோக்கி புறப்பட்டு, மேல் கொங்கு நாட்டை அடைந்து திருப்புக்கொளியூர் அவிநாசித் தலத்திற்கு வந்து சேர்ந்தது.

அங்கு இறைவனைப் பூசித்து வழிபடச் சந்நிதிக்கும் கீழ்ப்பால் ஓடும் நள்ளாற்றில் தனது நான்கு கொம்புகளால் பூமியைக்குத்தித் தோண்டி ஆற்று நீர் பெருகும்படி செய்து (அயிராவத்துறை என்ற பெயருடையாதாகச் செய்து) அதில் ஸ்நானம் செய்து, காசிக் கங்கைக் கிணற்று நீரைத் துதிக்கையில் முகந்து கொண்டுபோய் அவிநாசி நாதருக்கு அபிஷேகம் செய்து மலர் கொண்டு பூசித்தது.

இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் பூசித்து வரும்போது ஒரு நாள் மூல லிங்கத்திற்கு அருகே ஈசான பாகத்தில் ஒரு சிவலிங்கம் (அயிராவதலிங்கம் என்ற பெயருடன்) ஸ்தாபித்து பூசித்து வந்தது.

அவிநாசியப்பர் யானையின் பூஜைக்கு மகிழ்ந்து, இந்திரன் உள்ளத்தில் ஒரு அதிசயம் தோன்றும்படி செய்ய, உடனே இந்திரன் பொன் விமானத்தில் ஏறி அவிநாசித் தலத்திற்கு வந்தான். அப்போது அவிநாசி நாதரையும், அவரை வெள்ளை யானை தொழுது நின்ற நிலையையும் கண்டு, மகிழ்ச்சியோடு ‘ஐராவதமே! வா’ என்று அழைத்து மத்தகத்தை தன் கையால் தடவ, அதன் சாபம் நீங்கி நின்ற அதிசயத்தையும் கண்டான்.

அப்போது ஐராவதம் இந்திரனை வணங்கி நின்றபோது இந்திரன், ‘ஐராவதமே! உன்னால் தான் இத்தலத்தை வந்தடைந்தேன்; என்னை இறைவன் திருவடிகளை வணங்கும்படி செய்வாய்’ என்றான்.

உடனே ஐராவதம் இந்திரனை அழைத்துக் கொண்டு போய் அவிநாசி நாதர் முன்னே விட, அவன் கருணாலயச் செல்வியை வலத்தே கொண்ட சிவபெருமானைத் தரிசித்துத் துதித்து நிற்க, அப்போது “இந்திரனே! நீயும் உன் வெள்ளை யானையும் பொன்னுலகத்தை அடைக” என்ற ஒரு அசரீரி வாக்கு எழுந்தது. அதனைக் கேட்ட இந்திரன் மகிழ்ந்து இறைவனை வணங்கி வெள்ளை யானையின் மீது ஏறித் தனது பொன்னுலகத்தை அடைந்தான்.

இவ்விதம் ஐராவதம் அவிநாசியப்பரை பூசித்து இழந்த பதிவியை பெற்றது.

அவிநாசியப்பரின் மகிமைகளில் ஒன்று இது.

========================================================

Please check ….

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை!

கனவில் தோன்றி கோவில் கட்டச் சொன்ன மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்!

புளிய மரப் பொந்தில் மறைக்கப்பட்ட அம்பலப் புளி!

========================================================

சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரின் தங்கை திருமணத்தில் கலந்துகொள்ள திருப்பூர் செல்லவேண்டியிருந்தது. திருப்பூரிலிருந்து அவிநாசி சுமார் 12 கி.மீ. தான். இங்கிருந்து புறப்படும்போதே தீர்மானித்துவிட்டோம் அவிநாசியப்பரை நிச்சயம் தரிசிக்கவேண்டும் என்று.

எனவே பல்லடத்தில் நண்பர் இல்ல திருமண வரவேற்பில் கலந்துகொண்டுவிட்டு அடுத்த நாள் காலை அவிநாசி புறப்பட்டோம். திருப்பூரை சேர்ந்த நண்பர் திரு.பாலாஜி மற்றும் கோவையை சேர்ந்ந்த வாசகி ராதா அவர்கள் இருவரும் நம்முடன் இந்த அவிநாசி தரிசனத்தில் இணைவதாக நாம் சென்னையிலிருந்து புறப்படும்போதே நமக்கு தெரிவித்துவிட்டார்கள்.

சென்ற முறை நாம் அவிநாசி சென்றபோது நண்பர் பாலாஜி அவர்களின் வீட்டில் தங்கி தான் அவருடன் சென்று அவிநாசியப்பரை தரிசித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை அவர் இணைந்துகொண்டார். ராதா அவர்கள் நேரடியாக அவிநாசி வந்துவிடுவதாக கூறினார்.

அவிநாசி புறப்படும் முன், சுரேஷ்குமார் குருக்களுக்கு போன் செய்தோம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவிலில் காத்திருக்கும்படியும் தாம் வந்துவிடுவதாகவும் சொன்னார்.

அவிநாசி சென்றதும், கோவில் வாசலில் அர்ச்சனைக்கு தேங்காய், பூ, பழம் முதலியவற்றை வாங்கிக்கொண்டு சுந்தரர் கோவிலுக்கு சென்றோம். (அவிநாசி செல்லும் பலர் சுந்தரர் கோவிலை தவற விட்டுவிடுகின்றனர்.)

நாம் அங்கு காத்திருந்த நொடியில் ராதா அவர்களும் வந்துவிட, சுந்தரரை தரிசித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிருக்கும்போதே சுரேஷ்குமார் குருக்கள் வந்துவிட்டார்.

நம்மை நலம் விசாரித்தவரிடம் நமது வாசக நண்பர்களை அறிமுகப்படுத்தினோம்.

தொடர்ந்து சில வினாடிகள் நலம் விசாரித்தவுடன், சுந்தரருக்கு அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது. தயாராக வைத்திருந்த அந்த வாரத்தின் பிரார்த்தனை பதிவின் பிரிண்ட் அவுட்டை அவரிடம் கொடுத்து சுந்தரரின் பாதத்தில் வைத்து தரும்படி கேட்டுக்கொண்டோம். பிரார்த்தனையாளர்களின் பெயர்களுக்கு அர்ச்சனையும் செய்தோம்.

(இந்த இடத்தில செய்யப்படும் பிரார்த்தனையானது தனித்துவம் மிக்கது. திருப்புக்கொளியூர் பதிகம் பிறந்த இடம் இது.)

சன்னதியை வலம் வந்து பிரசாதம் பெற்றுக்கொண்டோம்.

சுரேஷ் குமார் குருக்களையும் சால்வை அணிவித்து கௌரவித்தோம். தாம்பூலமும் வஸ்திரமும் அவரது தொண்டை பாராட்டி நமது வாசகர்களைக் கொண்டு வழங்கப்பட்டது.
இந்த இடத்தில் நமது உழவாரப்பணி குழு நண்பர்களை வைத்து ஒரு சுந்தரர் திருப்பாட்டு முற்றோதலும் உழவாரப்பணியும் செய்ய நீண்ட நாட்களாக ஆசை. அது பற்றி சுரேஷ் குமார் அவர்களிடம் தெரிவித்தபோது “தாராளமாக செய்யுங்கள். தேதியை முடிவு செய்துவிட்டு சொல்லுங்க. நான் ஏற்பாடுகளில் உதவுகிறேன்” என்றார்.

அடுத்து அனைவரும் சேர்ந்து அவிநாசியப்பரையும் கருணாம்பிகையையும் தரிசிக்க சென்றோம்.

கூட்டம் சற்று மிதமாகவே இருந்தது. அர்ச்சனை சீட்டு வாங்கிக்கொண்டு சுரேஷ் குமார் குருக்களுடன் அவிநாசியப்பர் சந்நதிக்கு சென்றோம்.

இறைவன் பிரமாதமான அலங்காரத்தில் இருந்தார்.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

என்று அப்பர் பெருமான் பாடியது எத்தனை பொருத்தம்.

சிவதரிசனம் கிட்டாத மேலுகத்தைவிட சிவதரிசனம் கிட்டும் இந்த மனிதப் பிறவியே எனக்கு வரம் என்கிறார் அப்பர் பெருமான்.

சைவ சமயக் குரவர்கள் நால்வரும் தங்களின் பல்வேறு பதிகங்களில் இந்த கருத்துக்களை கூறியிருக்கின்றனர்.

சிவதரிசனம் தேவர்களுக்கு கூட அத்தனை சுலபத்தில் கிட்டாது. ஆனால் நாம் கொடுத்து வைத்தவர்கள். அதை உணர்ந்திருக்கிறோமா?

பிரார்த்தனையாளர்களின் பெயர்களுக்கு அர்ச்சனையும் பிரார்த்தனையும் இங்கும் நடைபெற்றது.

பின்னர் அம்பாள் சன்னதிக்கு சென்றோம்.

அம்பாள் பெயரைக் கேட்டாலே பாபங்கள் பறந்தோடிவிடும். கருணையின் சிகரம் இந்த அன்னை. எனவே ‘கருணாம்பிகை’. (அன்னை இங்கு இறைவனின் வலப்பக்கம் கேட்டுப் பெற்றது ஒரு தனிக் கதை. அதை பின்னர் தருகிறோம்!)

இங்கும் அர்ச்சனை செய்து பிரசாதம் பெற்றுக்கொண்டு சன்னதியை வலம் வந்து பின்னர் வெளியே வந்து உப சன்னதிகளை தரிசித்துவிட்டு பிரகாரத்தை வலம் வந்தோம். ஆலயத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் அனைவரும் ரசித்தோம்.

கோவில் மண்டபத்தில் அவிநாசி தல புராணத்தின் பல்வேறு கதைகள் ஓவியங்களாக தீட்டப்பட்டிருந்தன. சென்ற முறை வரும்போது இதை பார்க்க முடியவில்லை. எனவே இம்முறை ஆற அமர அவற்றை பார்த்தோம். படமெடுத்துக்கொண்டோம்.

பின்னர் மீண்டும் சுரேஷ் குமார் குருக்களை சந்தித்து தரிசனம் செய்வித்தமைக்கு நன்றி தெரிவித்தோம்.

வெளியே வந்த பின்னர் அவிநாசியப்பர் கோவிலை ஒட்டியுள்ள, பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசித்தோம். திவ்ய தரிசனம். இதுவும் தொன்மையான ஆலயம் தான். அண்மையில் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள்.

ஹரிஹர தரிசனம் ஒரே நாளில் கிடைத்ததில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

பின்னர் அனைவரும் புறப்பட்டு திருப்பூர் திரும்பினோம். அவிநாசி தரிசன அனுபவம் மறக்க முடியாததாக அமைந்தது. மீண்டும் எப்போது அவிநாசியப்பரை தரிசிக்க செல்வோம் என்று மனம் எங்க ஆரம்பித்துவிட்டது.

முன்னதாக புறப்படுவதற்கு முன்னர் திரு.சுரேஷ் குமார் குருக்களிடம் நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, அவரும் ஒரு பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

நாளை (03/03/2017 வெள்ளிக்கிழமை) நாம் அளிக்கவிருக்கும் பிரார்த்தனை பதிவுக்கு இவர் தான் தலைமை ஏற்கிறார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் சன்னதியில் பிரார்த்தனை நடைபெறவிருக்கிறது. இழந்ததை மீட்டுத் தரும் தலம் என்பதால், இந்த பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்ப விரும்பும் அன்பர்கள் யாவரும் உடனே தங்கள் பிரார்த்தனைகளை நமக்கு அனுப்பவேண்டும். எப்படி பிரார்த்தனை கோரிக்கையை அனுப்புவது என்பது பற்றி கீழே தந்திருக்கிறோம்.

நாளை வெளியாகும் பிரார்த்தனையில் நான்கு கோரிக்கைகள் சமர்பிக்கப்படவிருக்கிறது. மேலும் வரும் கோரிக்கைகள் இதே பதிவில் அடுத்த வாரம் சேர்க்கப்படும்.

இழக்க கூடாததை இழந்ததாக கருதும் (எதுவாக இருந்தாலும்) வாசக அன்பர்கள் அவற்றை மீட்க இந்த சந்தர்ப்பத்தைபயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மற்ற எந்த நாயன்மாருக்கும் இல்லாத சிறப்பு சுந்தருக்கு உண்டு. மற்ற நாயன்மார்கள் யாவரும் ஜோதி ஸ்வரூபமாக்க இறைவனிடம் ஐக்கியமான நிலையில் அவர் மட்டுமே நேரடியாக பூதவுடலோடு கயிலை சென்றார். அந்த சிறப்பு சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு மட்டுமே உண்டு. மேலும் சிவபெருமான் இவரை தனது தோழன் என்றே அனைவருக்கும் கயிலையில் அறிமுகப்படுத்துகிறார். எனவே நமக்காக ஈஸ்வரனிடம் நிச்சயம் சுந்தரர் தூது செல்வார்.

நம்பிக்கை வைப்போம். இழந்தவற்றை பெறுவோம்.

நாளை பிரார்த்தனை பதிவில் பிற தகவல்கள் இடம்பெறும்.

==========================================================

இழந்ததை மீட்டுத் தரும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில் உங்கள் கோரிக்கைகள் இடம் பெற…

நாளை (03/03/2017) வெள்ளிக்கிழமை இடம்பெறவிருக்கும் இந்த சிறப்பு பிரார்த்தனை பதிவு இன்னும் சில வாரங்கள் அமலில் இருக்கும். இதில் உங்கள் பிரார்த்தனை (இழந்ததை திரும்பப் பெறுவது) இடம் பெறவேண்டும் என்றால் நமக்கு உடனே உங்கள் கோரிக்கைகளை தமிழிலோ ஆங்கிலத்திலோ மின்னஞ்சல் அனுப்பவேண்டும். அவசியம் உங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.

உங்கள் வேண்டுதல்கள் திருடு போன தொலைந்து போன பொருள் / உறவுகள் திரும்ப கிடைக்க,  குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு, வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் அதை குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பெயரை தளத்தில் வெளியிடமாட்டோம். சுவாமிக்கு அர்ச்சனை செய்யும்போது மட்டும் பயன்படுத்துவோம். உங்கள் ராசி, நட்சத்திர, கோத்திரம் உள்ளிட்ட விபரங்களையும் அனுப்பவேண்டும்.

ரைட்மந்த்ரா சுந்தர் |  E : editor@rightmantra.com  |   M : 9840169215

==========================================================

இந்த மாத விருப்ப சந்தாவை செலுத்திவிட்டீர்களா?

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support us in our mission. Donate us liberally.

Our A/c Details

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….

கண்ணைக் கட்டிக்கொண்டு துவங்கிய ஒரு சிவராத்திரி பயணம்! – சிவராத்திரி ஸ்பெஷல் FINAL

மனக்கோயில் கொண்ட மாணிக்கத்துடன் ஒரு மாலை! – சிவராத்திரி ஸ்பெஷல் 6

சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 5

சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்! சிவராத்திரி ஸ்பெஷல் 4

இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3

கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

========================================================

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

========================================================

[END]

One thought on “அவிநாசியப்பரை பூசித்து இழந்த பதவியை பெற்ற ஐராவதம்!

  1. i had gone for avinashi temple for 3 to 4 times in my life time. But i could not came to know about sundarar temple until first posting of the temple in oursite. After that also i could not go there. For the first time itself i had a chance to pray sundarar. i felf happy and came to know about how sundarji took efforts for our site prayers and members!! We called the main kovil as “Periya kovil ” here. There we had a very nice dharshan and came to know temple stories with the paintings! Thanks & Regards to Sundarji!! namasivayam!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *