ஜூ.வி. கழுகார் கேள்வி-பதில் பகுதி ஒன்றில் படித்த ஒன்று தான் நினைவுக்கு வருகிறது இங்கு.
எதற்கெடுத்தாலும் காந்தி, காந்தி என்கிறார்களே…. காந்தியைப் போல எல்லோரும் வாழ முடியுமா என்ன?
காந்தி என்றால் 21 நாள் உண்ணாவிரதம் இருப்பது, எரவாடா சிறைக்குள் போவது, தண்டிக்கு யாத்திரை நடத்துவது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். காந்தி என்பது எளிமையும் உண்மையும்தான். தினமும் நான்கு மணிக்கு எழுந்தார். வழிபாடு செய்தார். காபி, டீ குடிக்க மாட்டார். சுடுநீரில் எலுமிச்சை பழச்சாறு பிழிந்து அதில் கொஞ்சம் தேன் விட்டு அருந்தினார். எளிய காலை உணவு உண்டார். வேகவைத்த காய்கறிகளையே சாப்பிட்டார். நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, பூசணியை விரும்பி உண்டார். எதிலும் உப்பு சேர்ப்பது இல்லை. ஆடம்பர ஆடைகளை உடுத்த மாட்டார். இரண்டு உடுப்புகளை மட்டுமே வைத்திருந்தார். ஒருஜோடி செருப்புதான் அவரிடம் உண்டு. அனைத்து மத தெய்வங்களையும் வழிபட்டார். புலால் மறுத்தார். மதுவைத் தொடவில்லை. சிகரெட், பீடி கிடையாது. வாரத்துக்கு ஒருநாள் மௌனவிரதம் இருந்தார். கோபமே படமாட்டார். கோபம் வந்தால் அடக்கிக் கொள்வார். ஒருவரை முறைத்துப் பார்ப்பதுகூட தவறு என்று சொன்னார். தனது பொருட்களை தானே சுத்தம் செய்தார். தனது கழிவறையை சுத்தமாக வைத்துக்கொண்டார். இரண்டு கைகளாலும் எழுதுவார். ஒருகை வலித்தால் இன்னொரு கையைப் பயன்படுத்தி எழுதுவார். தண்ணீரைச் சிக்கனமாக செலவு செய்வார். முகம் கழுவும்போதும் இன்னொரு வாளியில் அந்தத் தண்ணீரைப் பிடித்து, மீண்டும் பயன்படுத்துவார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இதில் ஒன்றையாவது பின்பற்றிவிட்டு பின்னர் காந்தியை விமர்சிக்கலாம்.
காந்தி தவறுகளே செய்தது இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். தவறு செய்யாதவர் இங்கு யார்? இறைவன் ஒருவன் தான் தவறுகளுக்கு அப்பாற்ப்பட்டவன்!!!
தனது கொள்கையிலிருந்து அவர் எள்ளளவும் பின்வாங்காமல் இருந்ததே அவர் மீது கூறப்படும் பல குற்றச்சாட்டுக்களுக்கும் காரணம்.
போராட்டம் என்றால் வெட்டு, குத்து என்று ரத்தம் சிந்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் உலகிலேயே முதல்முறையாக ‘அஹிம்சை’ போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். “ஆயுதம் கொண்டு தாக்குவதைவிட, எதிரியின் முன் மனஉறுதியுடன் நின்று சாத்வீகமாக போராடுவது தான் உண்மையான வீரம். எதிரியிடம் காட்ட வேண்டியது எதிர்ப்பை மட்டுமே தவிர, வன்முறையல்ல” என்ற காந்தியின் அஹிம்சை போராட்டத்தை ஆரம்பத்தில் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால் இந்த கோட்பாடுதான் சிதறிக்கிடந்த இந்திய சுதந்திரதாகத்தை ஒன்று சேர்த்து வலிமையாக்கியது. அதிக எண்ணிக்கையில் பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்தது. ஆனாலும் இந்த போராட்டத்தின் வெற்றி குறித்து சந்தேகங்கள் எழும்போது, “மன உறுதியுடன் போராடினார், வெற்றி நிச்சயம்” என்று உறுதியுடன் சொன்னார் மகாத்மா காந்தி.
“100 பவுண்டே எடையுள்ள சிறு உருவத்தையுடைய அந்த மகான் உடல், மன, ஆன்மீக, ஆரோக்கிய ஒளியுடன் விளங்கினார். அவருடைய மிருதுவான பழுப்பு நிறக் கண்கள் கூரிய அறிவு, நேர்மை, விவேகம் இவற்றுடன் ஒளி வீசின. இந்த அரசியல் வல்லுனர் ஆயிரக்கணக்கான சட்ட, சமூக மற்றும் அரசியல் சச்சரவுகளுக்கு ஈடுகொடுத்து வெற்றிகரமாக வெளிவந்திருக்கிறார். இந்தியாவின் கோடிக்கணக்கான கல்வியறிவற்றவர்களின் இதயத்தில் காந்திஜி ஒரு நிரந்தரமான இடம் பிடித்துக்கொண்ட மாதிரி உலகத்தில் வேறு எந்தத் தலைவரும் தன் மக்கள் மனத்தில் இடம் பெற்றதில்லை. அவர்கள் சுயமாகவே அளித்த புகழாரம்தான் அவருடைய பிரபலமான பட்டம் மகாத்மா – “மிக உயர்ந்த ஆத்மா.” – இப்படி கூறியது யார் தெரியுமா? பரமஹம்ச யோகானந்தர்.
யோகத்திற்கு தன்னுடைய உடலைத் தயாராக்கும் முகமாகத்தானோ என்னவோ உணவுக் கட்டுப்பாட்டையும், உபவாசத்தையும் தீவிரமாகக் கடை ப்பிடித்தார் மகாத்மா. அவருடைய தினசரி உணவில் வேப்பம் விழுது ஒரு பகுதியாக இருந்தது. நாமெல்லாம் வாரம் ஒரு முறை வேப்பம் விழுதை சாப்பிடவே முகம் சுழிப்போம். ஆனால் மகாத்மா அதைத் தினசரி, துளித் துளியாக எந்த வித வெறுப்புமில்லாமல் சாப்பிட்டார்.
அவருக்கு யோகத்திலும் ஆன்மீகத்திலும் இருந்த ஆர்வத்தால் சுவாமி பரமஹன்ச யோகானந்தாவிடமிருந்து “கிரியா யோக” உபதேசத்தைப் பெற்றார்.
அவரது யோகப் பயிற்சியினால்தான் அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை நடந்த பொழுது தனக்கு மயக்க மருந்து தேவையில்லை என்று உறு தியாக மறுத்து, அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போதே தன் சீடர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க முடிந்தது. புலன்களிடமிருந்து மனத்தைப் பிரித்து வைக்கும் அவரது திறனால்தானே இது சாத்தியமாயிற்று! இது அவரது யோக வாழ்க்கைக்கு ஒரு சிறு சான்றுதான்.
தன் மரணத்தை முன்பே யூகித்த காந்தி!
அவரது மரணம் கூட அவருக்கு முன்பே தெரிந்திருந்தது. அவர் காலமான தினத்தன்று காலை தன் சகோதரனின் பேத்தியிடம் “நான் கையெழுத் திட வேண்டிய எல்லா முக்கியமான காகிதங்களையும் கொண்டு வா. நான் இன்று அவற்றுக்கெல்லாம் பதில் எழுதியே ஆகவேண்டும். நாளை இல்லாமலே போகலாம்” என்று குறிப்புடன் கூறியுள்ளார்.
காந்தியடிகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த சம்பவங்கள் எத்தனையோ உண்டு!
அப்போதைய கல்கத்தாவில் காங்கிரஸ் மகாசபை கூடியது. சபைக்கு வந்த உறுப்பினர்கள் தங்குவதற்காக தற்காலிக முகாம்கள் அமைக்கப் பட்டன. அந்த முகாம்கள் ஒரே குப்பைகூளமுமாக இருந்ததை கண்டார் காந்தியடிகள்.
தொண்டர்களிடம், “இவற்றை சுத்தப்படுத்துங்கள்” என்றார். அதற்கு தொண்டர்களோ, “இது துப்பரவு பணியாளர்களின் வேலை. நாங்கள் எப்படி சுத்தம் செய்வது?” என்றனர்.
காந்திஜி அவ்வேலையை செய்யும்படி அவர்களை வற்புறுத்த வில்லை. தானே அங்கிருந்த துடைப்பத்தை எடுத்து துப்பரவு பணியை மேற்கொண்டார். இதை கண்ட தொண்டர்கள் மற்றும் தலை வர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்தனர். உடனே அவர்களும் துப்பரவு பணியில் ஈடுபட்டனர். ‘ஒரு தலைவனாக இருப்பவன் எல்லா துறைகளிலும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்’ என்பதேகாந்திஜியின் கொள்கையாகும்!
இந்த கொள்கை மகாத்மாக்களின் உள்ளங்களில் மட்டுமே ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை..!
காந்திஜி கூறிய ஏழு பாவம்!
1) கொள்கை இல்லாத அரசியல்
2) வேலை செய்யாமல் வரும் செல்வம்
3) மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம்
4) பண்பு இல்லாத அறிவு
5) நியாயம் இல்லாத வணிகம்
6) மனிதம் மறந்த அறிவியல்
7) தியாகம் இல்லாத வழிபாடு.
இவை காந்தி குறிப்பிட்ட ஏழு சமூகப் பாவச் செயல்கள்!
காந்திஜி மீது மகா பெரியவா பெரு மதிப்பு வைத்திருந்தாராம். காந்தியின் கொள்கைகள் அத்தனையும் பெரியவா ஏற்றுக்கொண்டதில்லை என்றாலும் அவர் மீது வைத்திருந்த மதிப்பு மட்டும் அவருக்கு மாறவேயில்லை. அவர் இறந்தபோது பெரியவா 10 நாட்கள் உபவாசம் இருந்தாராம்.
தான் தவறு செய்தால், அதற்காக மெளன விரதம் ஏற்பதும்… பிறர் தவறு செய்தால், அந்தத் தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக்கொண்டு இருந்தார் காந்தி. இந்த குணம், அவர் தாய் புத்தலிபாயிடம் இருந்து வந்ததாகும்!.
இதே குணம் மகா பெரியவா அவர்களிடமும் இருந்தது நமக்கு தெரியும்.
மகாத்மாவைப் பற்றி, அவரது அரிய குணங்களைப் பற்றி பேசவேண்டுமென்றால் பேசிக்கொண்டே இருக்கலாம்… பேசுவோம்!
* காந்தியை பற்றி மேலும் தெரிந்துகொள்ள, அவரை பற்றிய கருத்துக்களை, கட்டுரைகளை படிக்க, காந்தியை பற்றிய விமர்சனங்களுக்கு உரிய விளக்கங்கள் பெற www.gandhitoday.in என்ற தளத்தை பார்க்கவும். நண்பர் சுனில் என்பவர் இதை நடத்திவருகிறார்.
================================================================
Also check (from our archives) :
உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!
இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!
“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?
================================================================
[END]
உண்மை. தான் சுந்தர் சார் கந்தியை. பற்றி
பல இழிவான. கருத்துக்களை என் முக நூலில். புகைபடத்துடன் பாத்துல்ளேன் .அதே போல். நேரும் ..இப்டிப்பட்ட விச கிருமிகள் நாட்டிற்காக என்ன. செய்தார்கள் அவர்கலைப்பற்றி இப்படி விமர்சிக்க …அப்படி அது உண்மையாகவே. இருந்தாலும் .அவர்களால் நம் நாட்டிர்கு ஏற்பட்ட நன்மை எவ்வளவு என்பதை நாம் பார்க்க வேண்டுமே தவிர எங்கு சிரு. குற்றம். கிடைக்கும் என்று தேடி அலையும் இவர்கலை
என்ன. சொல்ல…
காந்தி ஜெயந்தி அன்று காந்தியை பற்றிய பதிவு மிக அருமை. அவரிடம் உள்ள நல்ல குணங்கள் தான் அவரை மகாத்மா என்று நாடே போற்றும் நல்ல நில்லைக்கு உயர்ந்தார். மகா பெரியவரையும், மகாத்மா காந்தியையும் ஒப்பிடும் பாரா நன்றாக உள்ளது. தான் தவறு செய்தால் மௌன விரதம் இருப்பதும் ,அவர் அடுத்தவர்கள் தவறு செய்தால் தாம் உண்ணாவிரதம் இருக்கும் குணம் யாருக்கு வரும். காந்தியின் குணா நலன்களில் நாம் எதாவது ஒன்றையாவது பின் பற்றலாம்.
அவர் காலத்தில் நாம் வாழ வில்லை என்ற குறை நமக்கு உள்ளது. இல்லாவிட்டாலும் அவரது உயரிய கொள்கையை நாம் ஏற்றுக்கொண்டு அதன்படி வழிநடப்போம்.
‘ஒரு தலைவனாக இருப்பவன் எல்லா துறைகளிலும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்’ என்பதேகாந்திஜியின் கொள்கையாகும்! // சுபெர்ப் ……
ஜெய் ஹிந்த்
Very nice article
நன்றி
உமா
uma
உண்மைதான் காந்திபற்றி படிக்க படிக்க மேலும் படிக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அவர் பின்பற்றிய கொள்கைகள் எதாவது ஒன்றாவது நாம் பின்பற்ற வேண்டும் என்று நினைகேரன், பின்பற்ற முயற்சிகேரன்.
வணக்கம்…………
காந்தி அடிகளைப் பற்றிய கட்டுரை அருமை…………..எங்கள் அலுவலகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைவரும் “காந்தியத் தாயத்து” என்ற புத்தகம் வாங்கியுள்ளோம்……….31 தலைப்புகளில் காந்தி அடிகளின் குணாதிசயங்களைப் பற்றியும் அவர்களின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான விடயங்களையும் தெரிந்து கொண்டோம்………..போற்றத் தக்க மாமனிதர் காந்தியடிகள்………
வாழ்க அவர்களின் புகழ்………
அந்த நூல் எனக்கு ஒரு காப்பி வேண்டும். தருவீர்களா?
– சுந்தர்
மிக்க மகிழ்ச்சியுடன்………..
காந்தியை தேவையின்றி விமர்சிப்பவர்களுக்கு சரியான பதில். காந்தியைப் போல ஒரு நாள் அல்ல ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது என்பது உறுதி.
காந்தியை இன்றைய இளைஞர்கள் பலர் மறந்துவிட்ட நிலையில், காந்தி ஜெயந்தி அன்று மகாத்மாவை நினைவில் வைத்திருந்து அவரைப் பற்றிய அற்புதமான பதிவு ஒன்றை அளித்தமைக்கு நன்றிகள்.
காந்திஜி குறிப்பிட்டுள் ஏழு பாவங்கள் நச். ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த பொருள் உள்ளது.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்.
வாழ்க வளமுடன்
வாரியார் சுவாமிகள் ஒருமுறை காந்தியடிகளுக்கு கடிதம் எழுதினர் . தெய்வத்திற்கு முன் ” உயிர் பலி” இடுவது பற்றி தங்கள் கருத்து யாது ? என்று
காந்தியடிகள் அதற்கு ” கடவுள் பெயரால் பலியிடுவது
காட்டு மிராண்டிதனத்தின் கையிருப்பு ” என்று பதில் அளித்தார் .
இதன் மூலம் அப்போது நடைபெறவிருந்த உயிர் பலி தடுகபட்டது.
வாரியார் சுவாமிகள் வாழ்கை வரலாறு எனும் நூலிலிருந்து பக்கம் 49. தலைப்பு பலி விலக்கு . அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் ..
உங்கள் பதிவு மிக மிக அருமை
நல்ல பதிவு சுந்தர் ஜி ..சுட்டி அளித்தமைக்கு நன்றி..
மகாத்மா பற்றி சில செய்திகள் புதிது …