Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > கருவாய் உதித்த பொழுதே தொடுத்த கலியகற்ற வருவாய் கருணாம்பிகையே! Rightmantra Prayer Club

கருவாய் உதித்த பொழுதே தொடுத்த கலியகற்ற வருவாய் கருணாம்பிகையே! Rightmantra Prayer Club

print

விநாசி மிகப் பழமையான தலம். மிகுந்த வரலாற்று பெருமையை உடையது. கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் ஏழு. அவை: அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருநணா (பவானி), கொடுமுடி, திருச்செங்கோடு, கரூர், வெஞ்சமாங்கூடலூர். இந்த ஏழில் முதன்மையானது அவிநாசி ஆகும்.

அவிநாசியின் பழம்பெயர் திருப்புக்கொளியூர் ஆகும். இறைவன் ஆடிய அக்கினித்தாண்டவம் கண்டு அஞ்சிய தேவர்கள் புகுந்து ஒளிந்து கொள்ளவும், பின்னர் அவர்களுக்கு அருளவும் செய்த இடம்.

‘விநாசி’ என்றால் பெருங்கேடு என்று பொருள்படும். அவிநாசி என்றால் பெருங்கேட்டை நீக்கவல்லது என்று பொருள்படும். தேவார காலத்தில் இவ்வூரின் பெயர் திருப்புக்கொளியூர் என்றும், திருக்கோயிலின் பெயர் அவினாசி என்றும் வழங்கின. காலப்போக்கில் கோயிலை ஒட்டி வளர்ந்த நகரம் அவிநாசி என்று பெயர் பெற்றது. திருப்புக்கொளியூர் இன்று ஓர் சிற்றூராக உள்ளது. புக்கு ஒளி ஊர் என்பது புக்கொளியூர் ஆயிற்று.

மீன் வாயில் சிவலிங்கம்!

குருநாத பண்டாரம் என்னும் வீர சைவராகிய இலிங்கதாரி ஒருவர் அவிநாசியில் வாழ்ந்து வந்தார். அவர் செல்லங்க சமுத்திரம் என்னும் நீராழி மண்டபத்துடன் கூடிய தெப்பக்குளத்தில் நீராடிய பின்னர், தனது அங்கலிங்கத்தை அங்கு வைத்து பூஜை செய்து கொண்டிருந்தார். (இவர் பார்வையற்றவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அது குறித்த உறுதியான தகவல்கள் இல்லை.)

அந்த ஆண்டு பெருமழை பெய்து அவிநாசி கோவிலுக்கு அருகே உள்ள தாமரைக்குளம் உடைப்பு எடுத்ததால், அதை அடைக்க வேண்டி அரசாங்க அதிகாரிகள் மன்னனின் உத்தரவின் பேரில் அவிநாசி வந்தனர். வீட்டுக்கொரு ஆள் உடைப்பை அடைக்க வரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அப்படியிருந்தும் ஆட்கள் போதாதால் சிவபூஜை செய்து கொண்டிருந்த குருநாத பண்டாரத்தையும் கூப்பிட்டார்கள். இறையன்பில் ஈடுபட்டு பூஜையில் ஆழ்ந்திருந்த குருநாதருக்கு கூப்பிட்ட குரல் காதில் விழவில்லை. எனவே கோபமுற்ற அதிகாரிகள் அவர் வழிபட்ட அந்த லிங்கத்தை திருக்குளத்தில் வீசி எறிந்து அவரை இழுத்துச் சென்றனர்.

வேறு வழியின்றி, தாமரைக் குளத்து உடைப்பை அடைத்து மீண்ட குருநாத பண்டாரம், தெப்பக்குளக் கரையில் நின்று, ‘நான் வழிபட்ட லிங்கம் கிடைத்தால் தான் மீண்டும் உயிர் வாழ்வேன். இல்லையேல் உயிர் தரியேன்’ என்று உயிர் விட துணிந்தார். அப்போது அவிநாசியப்பர் திருவருளால், குளத்தில் உள்ள மீன் ஒன்று, அந்த சிவலிங்கத்தை வாயில் கௌவிக்கொண்டு வந்து, கரையிற் சேர்த்தது. குருநாதரும் கூடியிருந்தோரும் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவுண்டோ? இந்த நிகழ்ச்சியை கொங்கு மண்டல சதகம் பின்வருமாறு கூறுகின்றது:

தரிக்க புகழ் அவிநாசியில் வாழும் தவமுடையான்
நெருக்கும் அரண்மனையார்புரி வாதையுள் வாவிக்குள்ளே
திருத்து சிவலிங்கம் தன்னை ஏறிந்துயிர் சீவிக்குமுன்
வரிக்கையில் இலிங்கக் கொடுத்துதவும் கொங்கு மண்டலமே…

ஆலயத்தின் முன்னுள்ள தீபத் தூண் மண்டபத்திலும், தாமரைக்குளத்தருகில் உள்ள சுந்தரர் திருக்கோயிலிலும் இந்த நிகழ்ச்சியை சிற்பமாக காணலாம். குருநாத பண்டாரம் திருவுருவை, நாகக்கன்னி தீர்த்தத்தை ஒட்டியுள்ள வழிகாட்டி விநாயகர் கோயிலிலும் காணலாம்.

அவிநாசியப்பரின் பெருமைகளை நாளெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

அரிய பொருளே அவிநாசியப்பா போற்றி!

அவிநாசி கருணாகர மாலை!

கருவாய் உதித்த பொழுதே தொடுத்த கலியகற்ற
வருவாய் என்றெண்ணி உன்சந்நிதி வாசலில் வந்தவர்க்கு
திருவாய் மலர்ந்தொரு வார்த்தைசொன் னால்முத்தம் சிந்திடுமோ
உருவாய் நிறைந்த பெருங்கரு ணாகர உத்தமியே!
– கருணைதாஸர், வாசுதேவநல்லூர்

==========================================================

நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு! MUST READ

பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.

1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.

2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.

3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்!

4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.

5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.

6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.

7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.

ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?

நீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று இந்த அரிய இறைத்தொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

==========================================================

ஒரு முக்கியமான விஷயம்!

பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது!)

கோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

நன்றி!

==========================================================

நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : திரு.சுரேஷ் குமார் குருக்கள், கருணாம்பிகை உடனுறை அவிநாசியப்பர் திருக்கோவில், அவினாசி.

திரு.சுரேஷ் குமார் குருக்கள் அவர்களை சென்ற ஆண்டு இதே நேரம் (மகாமகத்துக்கு முந்தைய வாரம்) நாம் அவிநாசியப்பரை தரிசிக்க சென்றதிலிருந்து தெரியும். முதல் சந்திப்பிலேயே நமக்கு நெருக்கமாகிவிட்டார்.

நமது சமீபத்திய பாரதி விழாவுக்கு கூட அழைப்பிதழ் அனுப்பியிருந்தோம். வருவதாக இருந்தவர் கடைசி நேரம் தவிர்க்க இயலாத காரணத்தினால் வர இயலவில்லை.

ஏற்கனவே நமது பிரார்த்தனை கிளப் பற்றி இவருக்கு தெரியும். சென்ற முறை சென்றபோது கூட அது பற்றி தெரிவித்து விரைவில் நீங்கள் எங்கள் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டியிருக்கும் என்று கூறியிருந்தோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

நேற்று முன்தினம் அவரை தொடர்புகொண்டு இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று இறுதியாக சொன்னோம். அப்போது பல விஷயங்கள் இருவரும் பேசினோம்.

தேவார திருப்பதிகங்கள் பாடி சுந்தரர் பல அதிசயங்கள் செய்திருந்தாலும் அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்ற அதிசயமாக இந்த முதலையுண்ட மதலையை மீட்ட சம்பவம் கருதப்படுகிறது. ஏனெனில் முதலை வாயில் ஏதாவது போனால் அதை மீட்க இயலாது. இன்றும் கூட திரும்ப பெற முடியாததை குறிப்பிடும் விதமாக “முதலை வாயிற் போனார் போல” என்றொரு சொற்றொடர் வழக்கத்தில் உள்ளது.

மேலும் மற்ற சமயக் குரவர்களுக்கு இல்லாத சிறப்பு சுந்தருக்கு இருக்கிறது என்று சென்ற பதிவிலேயே குறிப்பிட்டிருந்தோம். தவிர, இறைவனிடம் நமக்காக தூது சொல்லக்கூடியவர் சுந்தரர்மூதி சுவாமிகள். பூவுலகில் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான துன்பங்கள் வரும் என்று அவருக்கு தெரியும். ஏனெனில் மற்ற மூன்று சமயக் குரவர்களை போலல்லாமல் இவர் மட்டுமே இல்லற தர்மத்தில் ஈடுபட்டு ஒன்றுக்கு இரண்டாக இரு பெண்களை திருமணமும் செய்துகொண்டவர்.

இவருடைய சொந்த ஊர் சென்னை மண்ணடி தான். இவர்து தந்தை, தாத்தா உள்ளிட்டோர் மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில் பூஜை செய்தவர்கள் தான். இவர் மட்டும் படித்து முடித்து திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனிக்கு பணிக்கு சென்றுவிட்டார். அங்கிருந்தபடி நண்பர்களுடன் கோவில் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தவரை அப்படியே அவிநாசியப்பர் ஈர்த்துவிட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளாக அவிநாசியப்பருக்கு தொண்டாற்றி வருகிறார். ஒன்றரை ஆண்டுகளாக சுந்தரர் கோவிலையும் பார்த்துக்கொள்கிறார்.

தமிழகத்தில் அறநிலையத்துறை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டாச்சாரியார்களுக்கு ஆகம விதிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில் புத்தொளி பயிற்சியிலும் இவர் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேசும்போது இன்னொரு விஷயம் சர்வசாதாரணமாக கூறினார். இவருக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட எட்டு மொழிகள் தெரியுமாம். அடேங்கப்பா… இது எவ்வளவு பெரிய விஷயம்.

இரு மொழி கற்றவன் இரு மனிதருக்கு சமம் என்று சொல்வார்கள். மொழி என்பது விழி போல.

குடும்பம் என்று பார்த்தால் இவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் கல்லூரியிலும் மற்றொருவர் பள்ளியிலும் படித்து வருகின்றனர். மனைவி இல்லத்தரசி.

மற்றபடி சுரேஷ்குமார் குருக்கள் அவர்களின் பொது வாழ்க்கையை பற்றி சொல்வதானால் அவிநாசியில் இன்முகத்தோடு தொண்டு செய்துவருபவர். மந்திரங்களை அட்சர சுத்தமாக உச்சரித்து சுத்த பக்கமாக பூஜைகள் செய்து வருபவர். சுப நிகழ்ச்சிகளுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது செல்கிறார்.

இந்த வார பிரார்த்தனையின் பொதுப் பிரார்த்தனையாக 10, +2 தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியர் நலனுக்காக நாம் ஒதுக்கியிருந்தாலும் இவரிடமும் பொதுப் பிரார்த்தனையாக என்ன கோரிக்கை வைக்கலாம் என்று அகருத்து கேட்டோம். எங்கு பார்த்தாலும் தண்ணீர் பிரச்சனையாக உள்ளது. மழை பொய்த்துவிட்டதால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. கோவில், குளங்கள், கண்மாய்கள் வறண்டுவிட்டன. எனவே பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் தவிர கூடுதலாக இந்த தண்ணீர் பிரச்சனை தீரவும் பொதுப் பிரார்த்தனை வைக்கலாம் என்றார்.

இவருக்கு ஏற்கனவே இந்த பதிவை அலைபேசியில் எப்படி பார்ப்பது என்று சொல்லியிருக்கிறோம். இருப்பினும் சுவாமியிடம் வைத்து பூஜை செய்ய, அர்ச்சனை செய்ய இந்த பதிவின் பிரிண்ட் அவுட் நாளை இவருக்கு கூரியர் மூலம் அனுப்பவிருக்கிறோம். தவிர அடுத்த வரம் புதிதாக பெயர்கள் சேர்க்கப்பட்டால் அதையும் அனுப்புவோம். மொத்தத்தில் அவிநாசியப்பரின் திருப்பாதத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாதத்தில் நமது பிரார்த்தனைகள் வைக்கப்படவிருக்கிறது.

நிச்சயம் நிறைவேறும் என்று நம்புவோமாக!

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்…

முதல் கோரிக்கை…

சில மாதங்களுக்கு முன்னர் கோரிக்கை இதே மன்றத்தில் பல்வேறு கோரிக்கைகள் சமர்ப்பித்த ஒரு பள்ளி ஆசிரியை தான். அவர் கோரிக்கையை நாம் இந்த மன்றத்தில் வைக்கும்போதே நமக்கு தெரியும் இவரது கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்று. அதே போல ஆனதில் மிக்க மகிழ்ச்சி.

நமக்கு அப்படி தோன்ற காரணம்?

நீங்களே அவர் முன்பு சமர்ப்பித்த கோரிக்கைகளையும் அந்த பிரார்த்தனை பதிவில் நாம் அளித்திருந்த கதையையும் படியுங்கள் புரியும்.

தற்போது மீண்டும் ஒரு கோரிக்கை அனுப்பியிருக்கிறார். நிச்சயம் இதுவும் கருணாம்பிகை அருளால் நிறைவேறிவிடும்.

(Please check : கற்பனைக்கு உயிர்கொடுத்த அன்னை கற்பகாம்பாள்!)

இரண்டாம் கோரிக்கை…

இவர் நம் நெருங்கிய நண்பர். நமது பணிகளில் உறுதுணையாய் இருப்பவர். நமது தளத்தை தொடர்ந்து படித்து வருகிறார். சில பல காரணங்களுக்காக பெயரை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். எனவே மேற்கொண்டு இவரைப் பற்றி பேச இயலாது.

மூன்றாம் கோரிக்கை…

இவரும் நம் நெருங்கிய நண்பர் தான். நமது தளத்தை கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து படித்து வருகிறார். சில பல காரணங்களுக்காக பெயரை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். எனவே மேற்கொண்டு இவரைப் பற்றியும் பேச இயலாது.

நான்காம் கோரிக்கை…

இந்த அன்பர் தளத்திற்கு புதியவர். நம் ரைட்மந்த்ரா அலுவலகத்துக்கே நேரில் வந்து பிரார்த்தனையை எழுதிக்கொடுத்துவிட்டு சென்றார். இவர் நம்மிடம் பிரார்த்தனையை கொடுத்து இரண்டு மாதங்கள் இருக்கும். தாமதமானாலும் சரியான பிரார்த்தனையில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி.

ஐந்தாம் கோரிக்கை….

கோவை அவிநாசி பயணத்திற்கு நம்முடன் வந்த ராதா அவர்களின் பிரார்த்தனை இது. நமது தளத்தின் சீனியர் வாசகியரில் ஒருவர். சில ஆண்டுகளுக்கு முன்பே இவர் நமது மன்றத்தில் பிரார்த்தனை சமர்பித்திருந்தாலும் அவிநாசி சுந்தரர் சன்னதியில் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை என்பதால் நிச்சயம் நீங்கள் உங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். பல்வேறு போராட்டங்களுக்கும் சோதனைகளுக்கு இடையே நம்பிக்கையோடு இருப்பவர். தளத்தையும் தொடர்ந்து படித்து வருபவர். நிச்சயம் இந்த பிரார்த்தனை இவருக்கு ஒரு நல்ல வழியை காட்டும் என்று நம்புகிறோம்.

ஆறாம் கோரிக்கை…

நாம் பல முறை சொல்லியிருக்கிறோம். நமது பிரார்த்தனை பதிவுக்கு யார் தலைமை ஏற்பது என்பது பெரும்பாலும் இறைவனின் திருவுள்ளம் என்றும் அது நம் கைகளில் இல்லை என்றும். ஏனெனில் சில பிரார்த்தனைகளில் அது தொடர்பான பொருத்தமான கோரிக்கைகள் தானே அமைந்துவிடும்.

அவிநாசி திரு.சுரேஷ்குமார் குருக்களை இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கத் செய்யலாம்; இழந்தவைகளை மீட்டுத் தரும் அவிநாசியப்பர் கோவிலிலும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சன்னதியிலும் இந்த வார பிரார்த்தனை நடைபெறட்டும் என்று நாம் முடிவு செய்த நேரத்தில் மிகச் சரியாக இவர் கோரிக்கை நமக்கு வந்தது.

இவர் அயல்நாட்டைச் சேர்ந்தவர். பெயரை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை தட்டச்சு செய்து (தங்கிலீஷ்) மின்னஞ்சலில் நான்கைந்து பக்கங்களுக்கு அனுப்பியிருந்தார் இந்த வாசகி. “இதெல்லாம் படிச்சு புரிஞ்சிக்க சிரமம். எனக்கு நேரமும் இல்லை. பேசாமல் ஒரு தாளில் கைப்பட எழுதி அதை உங்கள் அலைபேசியில் புகைப்படம் எடுத்து எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள். அப்போது தான் உங்கள் பிரார்த்தனை என்ன என்று தெளிவாக புரியும்” என்று சென்ற வாரம் இவர் நமக்கு ரைட்மந்த்ரா OFFICIAL முகநூலில் இன்பாக்ஸ் மெஸ்சேஜ் அனுப்பியபோது தெரிவித்தோம். அடுத்த சில நாட்களில் நாம் கூறியபடி தன் பிரார்த்தனையை குமுறல்களை நமக்கு அனுப்பிவிட்டார். [நமக்கு வாட்ஸ்அப் கணக்கு இல்லை. அதை டெலீட் செய்துவிட்டோம்!]

அவர் வார்த்தைகளை படிக்கும்போதே அவர் எந்தளவு துன்பத்தில் இருக்கிறார் என்று புரியும். அவரது IDENTITYயை காக்க பல வார்த்தைகளை எடிட் செய்தே அளித்திருக்கிறோம்.

இழந்தைவைகளை மீட்டு தரும் ஒரு அற்புதமான பதியில் பிரார்த்தனை நடைபெறுகிறபடியால் நிச்சயம் இவரது கோரிக்கைகள் நிறைவேறும் என்பது உறுதி.

* முன்னதாக இவருக்கு உடனடி ஆறுதல், தன்னம்பிக்கை, தைரியம் அளிக்கவேண்டி நமது “கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” நூலும், வேல்மாறல் மற்றும் தினசரி பாராயண பதிகங்கள் ஆகிய நூல்களும் சில நூறுகள் செலவு செய்து அஞ்சலில் அனுப்பினோம். அவரது சூழ்நிலை நமக்கு தெளிவாக தெரியும் என்பதால் அதற்காக எந்த பணமும் நாம் பெற்றுக்கொள்ளவில்லை. இவரைபோன்றவர்களிடம் ஒரு பைசா கூட நாம் எதிர்பார்ப்பதில்லை. அவர் பிரச்சனை தீர்ந்து சந்தோஷமாக இருப்பதே நமக்கு உண்மையான உதவி. அவிநாசியப்பர் அருளட்டும்!

பொதுப் பிரார்த்தனையில் முதல் பிரார்த்தனையாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்கு சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் பொதுப் பிரார்த்தனை சுரேஷ் குமார் குருக்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அளிக்கப்பட்டுள்ளது.

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

1) All my prayers are answered and another prayer now…!

Respected sir,

Long back (6 months b4) I submitted a prayer for my class children and for my family also. As a miracle almost all prayers become true. My younger sister who were conceived gave birth to a female child with normal delivery where it was expected cesarean. Many thanks for the group prayers.

My first younger brother got a good bride and got married recently with the blessings of almighty, as simple nearby our house. Hope in the same way they will be settled with a good job which was also asked. God knows what to give, when to give and how much to give. So I am waiting for that day. And let my heart earns the satisfaction.

My class children are now being my one (Won) of the best set for me. They are now the reasons for all my pleasure. Now its my humble request for their best performance in their exams. They should be healthy enough by both mental and physical. they should be careful enough in attending twisted questions where God’s support to be as intuitions. They should have presence of mind in approaching challenges. Kindly pray. After the result day I will definitely say the status.

Will support Rightmantra financially soon as I know your situation and need. Don’t under estimate me.

Vazhga Valamudan​

Friendly yours,
Don’t want to disclose the name

2) Prayer for my daughter

Dear Sundar sir and friends and team,

My 10 year old daughter is struggling from cold and cough from last 6 months. She is under medication repeatedly. At times she suffocates with heavy breath and chest constriction, sometimes even at school or during nights.

We are continuing the treatment by consulting pediatrician, pulmonologist, ENT etc.

In spite of medications for long time cold, cough and other symptoms are still persistent. Also we observed her strength has reduced .

We would like to seek your prayers for her complete recovery and remain healthy with God’s blessings.

With Best Regards
RM Reader

3) Prayer for my daughter

Dear RM Editor and readers,

I am one of the regular visitor of Rightmantra.com for the past few years.

I am herewith submitting my prathana for our Right mantra Prayer Club.

I am working in one of the leading company. One fine day i was forced to go out of my company due to recession in my company.

I lost my job and searching for suitable job for last 6 months. But i didn’t able to get that.

I was in very much trouble to run my family itself now.

I request all the RM viewers to pray to god to get me an Good job.

This is my Kind Request.

– Thank you all,
Rightmantra Reader
(Don’t want to disclose my name)

4) குடும்பம் சுபிக்ஷமாக இருக்கவேண்டும்!

அனைவருக்கும் வணக்கம்.

என் பெயர் ஆர்.சரவணன் (54). ONLINE COMMODITY TRADE செய்து கொண்டிருக்கிறேன். வரும் வருமானம் போதவில்லை. மேலும் சிறப்பாக செய்து நல்ல வருமானம் வந்து, எனக்கும் உதவி புரிந்து, பிறருக்கும் உதவிபுரியும் நிலையை நான் அடையவேண்டும்.

எனது மகன் தனசேகரன் (26) வாழ்க்கையில் நல்ல தகுதியுடன் கூடிய  நல்ல வேலை அமைய பிரார்த்திக்கிறேன்.

என்னுடைய மனைவி இந்திரா (52) இல்லத்தரசி. அவர் உடற்பிணிகள் ஏதும் இல்லாது ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும். அவரது பணிகளை திறம்பட செய்யவேண்டும்.

மொத்தத்தில் எங்கள் குடும்பம் சுபிக்ஷமாக ஷேமமாக இருக்கவேண்டும். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெருகவேண்டும்.

நன்றியுடன்…

ஆர்.சரவணன்,
மந்தைவெளி,
சென்னை – 28

5) மங்கலம் பொங்கி மறுவாழ்வு கிடைக்கவேண்டும்!

சுந்தர்ஜி அவர்களுக்கு,

தங்கள் ரைட்மந்திரா மூலம் பல ஆன்மீக பதிவுகளையும் மஹா பெரியவரின் மகிமைகளையும் படிக்கும் பாக்கியம் பெற்றேன். மிக்க நன்றி.

நான் கணவனை இழந்து வேலைக்கு சென்று வருகிறேன். எனக்கு மறுவாழ்வு அமைய (என் குழந்தைகளை நன்றாக பார்த்துகொள்பவரோடு) கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு வேண்டி கேட்டுக்கோள்கிறேன்.

எனக்கு இரு குழந்தைகள். ராகுல், பிரீத்தி.

என் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் நல்ல கல்விக்காகவும் ராகுலை கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் விடுதி மாணவனாக சேர்த்து இருந்தோம்.  என் குழந்தை ராகுல், பரிபூரண உடல்நலத்துடன் சந்தோஷமாக கல்வி பயில அவனுக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதே போல எனது மகள் ப்ரீத்தியும்  நன்கு படித்து ஆரோக்கியத்துடனும் நல்லோழுக்கங்களுடனும் வளர வேண்டும்.

எனக்கும் நல்லதொரு வாழ்க்கைத் துணை கிடைக்கவேண்டும்.

திருச்சிற்றம்பலம்

ராதாமணி,
கோவை

6) சோதனை மேல் சோதனை போதும் இறைவா…!

ஐயா வணக்கம்.

உங்கள் ரைட்மந்த்ரா தளத்தை தற்செயலாகத் தான் பார்த்தேன். ஆண்டவன் புண்ணியத்தில் தான் பார்த்தேன் என்று கருதுகிறேன். பார்த்ததும் உடனே இந்த கடிதம் வரைகின்றேன்.

ஒருவன் என்னை ஏமாற்றி பலப் பல லட்சங்கள் மோசடி செய்துவிட்டான். அதை மீட்க வழி தெரியாமல் தவிக்கிறேன். என் திருமணத்திற்காகவும் என் தங்கை திருமணத்திற்காகவும் சேர்த்து வைத்த பணம் இதில் அடங்கும். இந்த பணம் திரும்ப கிடைத்தால் தான் எனக்கு கல்யாணம் நடக்கும். என் தங்கைக்கும் கல்யாணம் நடக்கும்.

இந்த மோசடியால் நிலைகுலைந்த நான் என் நகைகளை எல்லாம் அடமானம் வைத்திருக்கிறேன். இப்போது தினசரி வாழ்க்கை நடத்தவே சிரமமாக உள்ளது. சொல்லப்போனால் சாப்பாட்டுக்கே கூட கஷ்டம் தான்.

மேலும் இந்த பணம் கூட என் பணமில்லை. நான் வேறு ஒருவருக்கு கொடுக்கவேண்டும்.

என் பிரச்னை தீர எனக்காக பிரார்த்திக்கவும்.

ஜோதிடம் பரிகாரம் என்று நான் பலரை அணுகியபோதும் மேலும் மேலும் ஏமாற்றப்பட்டேனே தவிர என் பிரச்னை தீர்ந்தபாடில்லை.

கடவுளே நான் என்ன செய்ய? என்னை எல்லாரும் ஏமாற்றிவிட்டார்களே…

கண்ணீரிலேயே என் காலம் கழிந்து வருகிறது. சாப்பிடும்போதும் தூங்கும்போது, கோவிலுக்கு செல்லும்போதும் எங்கும் எப்போதும் கண்ணீர் தான். அழுதுகொண்டே இருக்கிறேன். தினமும் கண்ணீரோடு தான் வாழ்ந்துவருகிறேன்.

இதனால் என் உடல் நலம் பாதிக்கப்பட்டு எலும்புக் கூடாய் இளைத்துவிட்டேன். உயிரை போக்கிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் என்னை நம்பி என் வயதான தாயார் இருப்பதால் அந்த யோசனையை விட்டுவிட்டேன்.

பொழுது விடிந்தால் கடன்காரர்கள் வீட்டு முன் வந்து நிற்கிறார்கள்.

என் அப்பா தோட்டவேலை செய்து கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமெல்லாம் அழித்த பாவியாகிவிட்டேன்.

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன் எனக்கு என் பணமெல்லாம் திரும்ப கிடைக்க, என் கடன்கள் தீர எனக்கொரு வழி சொல்லுங்கள்.

இந்த தளத்தை பார்த்ததும் தான் எனக்கிருக்கும் பிரச்சனை தீரும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்தது.

என் வாழ்க்கையின் சோகத்தை துயரத்தை சொல்ல இந்த ஒரு கடிதம் போதாது ஐயா…

எனக்காக என் பிரச்சனைகள் தீர பிரார்த்திக்கவும்.

இப்படிக்கு,
பெயர் ஊர் வெளியிட விரும்பாத
உங்கள் தள வாசகி!

  • இங்கே பிரார்த்தனை சமர்பித்துள்ள பிரார்த்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பிரார்த்தனை இடம் பெற்ற இந்த பிரார்த்தனையோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு வாரமும் நீங்கள் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று ஒரு பத்து நிமிடம் (பிரதி ஞாயிறு 5.30 PM – 6.௦௦ PM வரை உங்களுக்கு எந்த பத்து நிமிடம் சௌகரியமோ அந்தப் பத்து நிமிடம்) மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள கோரிக்கைகள் தானே நிறைவேறும்.
  • தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும்.

==========================================================

பொதுப் பிரார்த்தனை!

1) 10 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் நன்றாக தேர்வு எழுதவேண்டும்!

மாணவர்கள் வாழ்வில் 10, +1, +2 இந்த மூன்று கல்வியாண்டுகளும் மிக மிக முக்கியமானவை. அடுத்து நாம் என்னவாகப்போகிறோம், எதை தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்பதை தீர்மானிக்கும் மிக முக்கியமான காலகட்டம் இது.

இந்த நேரங்களில் மாணவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்காது, படிப்பில் கவனம் செலுத்தி தேர்வுகளை நல்ல முறையில் எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும். சில ஆண்டுகள் கஷ்டப்பட்டால் வாழ்நாள் முழுதும் சுகமாக இருக்கலாம்.

பெற்றோர்களும் தங்கள் செல்வங்களின் கல்விக்கு உதவ சில தியாகங்களை செய்யவேண்டும். கேபிள் டி.வி. இணைப்புக்களை துண்டித்துவிடுங்கள். அவர்கள் மனம் நோகுமாறு எதையும் பேசவோ செய்யவோ வேண்டாம். படி படி என்று குறிப்பாக நச்சரிக்கக்கூடாது. மாறாக அன்பாக சொல்லிப் பாருங்கள்.

“நீ நிச்சயம் எல்லா பாடத்துலயும் நூற்றுக்கு நூறு எடுக்கணும், 90க்கு மேலே எடுக்கணும்… இல்லேன்னா எம்.பி.பி.எஸ், என்ஜீனியரிங் கிடைக்காது…” அப்படி இப்படி என்று அவர்களுக்கு டார்கெட் பிக்ஸ் செய்யாதீர்கள். அது அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மாறாக “நீ என்ன மார்க் எடுத்தாலும் எனக்கு சந்தோஷம்! ஆனா நீ நிச்சயம் நல்ல மார்க் தான் எடுப்பே. ஏன்னா நீ மிக மிக திறமைசாலி. நீ பிறக்கும்போதே சொன்னாங்க நீ +2 எக்சாம்ல நல்லா படிச்சி நல்லா எழுதி ஒரு கலக்கு கலக்குவியாம்!” என்று கூறிப்பாருங்கள்.

இந்நேரத்தில், தினமும் காலை 5 அல்லது 10 நிமிடங்கள் தியானத்துக்கு ஒதுக்குவது மாணவர்களுக்கு நல்லது.

+2 தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும். குறிப்பாக எத்தனையோ போராட்டங்களுக்கிடையே பெற்றோர்கள் மெழுகுவர்த்திகளாக உருகி படிக்க வைக்கும் மாணவர்கள் அனைவரும் நன்கு தேர்வு எழுதவேண்டும். அவர்கள் கல்வியினால் தான் அந்த குடும்பமே தலை நிமிரவேண்டும் என்கிற நிலையில் உள்ள மாணவர்கள் யாவரும் எந்த கவனச் சிதறலும் இன்றி நன்கு படித்து நன்கு தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் கனவை நனவாக்கவேண்டும்!

2) ஏழைமக்களை அச்சுறுத்தும் குடிநீர் பஞ்சம் தீரவேண்டும்!

தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தவித்து வருகின்றனர். வசதி உள்ளவர்கள் கேன் வாட்டர் வாங்கிக்கொள்கின்றனர். ஆனால் கிராமபுறத்தில் இருப்பவர்கள் ஏழை பாழைகள் என்ன செய்வார்கள் ?

மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் பல ஆறுகள், ஏரிகள் வற்றிப் போய் விட்டன. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் கிராமங்களில் குடிநீருக்கு மக்கள் அல்லல் படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரி 912 செமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மழை குறைவு தான்.

வணிக நிறுவனங்கள் நிலத்தடி நீர் மட்டத்தை உறிஞ்சுவதால் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. ஏரி, குளங்கள் மட்டுமல்லாமல் கிணறுகள், போர்வெல் ஆகிறவற்றிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் உள்ளது. இதனால் கால்நடைகளுக்கு போதியளவு தண்ணீர் கிடைக்கவில்லை. மாடுகளுக்கு, உணவு பயிர்கள் கிடைக்கவில்லை. இதனால், பசுமாடுகள் வழக்கத்தைவிட, குறைந்த அளவே பால் கொடுக்கின்றன.

நிலத்தடி நீர் மட்டத்தை நம்பி விவசாயம் மேற்கொள்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இப்போதே பல இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பிரதான அணைகளின் நீர்மட்டமும் குறைந்த அளவே காணப்படுவதால் வறண்டு காட்சியளிக்கின்றன. குளங்களில் தண்ணீர் இல்லாத ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மேய்ச்சலுக்கு கூட கொண்டு செல்ல முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கடும் வறட்சி நிலவுவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் தலை தூக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே குடிநீர் பஞ்சம் தொடங்கி விட்டது. இதனால் மக்கள் குடிநீருக்காக அல்லல்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள் தூர்வாரப்பட்டிருந்தால் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கோடையை சமாளிக்கலாம். இப்போதே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இனி வரும் காலங்களில் வரலாறு காணாத வகையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வான்முகில் வழாது பெய்து மக்கள் துன்பம் தீரவேண்டும்.

இவையே இந்த வார பொது பிரார்த்தனை!

==========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgதங்களுக்கும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு உடற்பிணி, வேலை வாய்ப்பு, புத்திர சம்பத்து, நல்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இங்கு சமர்பித்திருப்பவர்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுவோம்.

நமக்கு சோறிடும் விவசாயியின் வாழ்க்கை சிறக்கவும் பசுமை தழைக்கவும், அவன் துயர்கள் யாவும் தீரவும் வான்முகில் வழாது பெய்யவும் இறைவனை வேண்டுவோம்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் சிவத்திரு வேதகிரி அவர்களின் தொண்டு சிறக்கவும், அவர் புகழ் பரவவும், அவரும் அவர் குடும்பத்தாரும், மகனும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ அனைத்தும் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் :  2017 மார்ச் 5, மார்ச் 12 & மார்ச் 19  – ஞாயிற்றுக் கிழமை

நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm  | இடம் : அவரவர் இருப்பிடங்கள்

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

==========================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

==========================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

==========================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : தேவார திருப்புகழ் சொற்பொழிவாளர் சிவத்திரு. வேதகிரி ஐயா அவர்கள்.

சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற பிரார்த்தனைக்கு வேதகிரி ஐயா அவர்கள் சைதை சுந்தரேஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களில் தான் சொற்பொழிவு செய்த இதர் கோவில்களில் நமக்காக அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தார். நாமும் சென்ற பல கோவில்களில் பிரார்த்தனை செய்தோம். அது குறித்து தனிப் பதிவை அளிக்கிறோம்!

நடுக்காவிரி பிள்ளையார் கோவில், திருவையாறு தியாகபிரும்மம் அதிஷ்டானம், வேதாரண்யம்  வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில், தஞ்சை பெரிய கோவில், திருத்துறைப்பூண்டி பவ ஒளஷதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனை சமர்பித்திருந்த அன்பர்கள் அனைவரின் பெயர்களுக்கும் இந்த ஆலயங்களில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலில் அர்ச்சனை செய்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு மேலே…!

ஈசனருளும் குபேர சம்பத்தும் பெற ‘அடியார்க்கு நல்லான்’ காட்டும் பாதை – Rightmantra Prayer Club

பசுவுக்கும் நீதி வழங்கிய மனுநீதிச் சோழனின் கதை + புகைப்படங்கள் – Rightmantra Prayer Club\

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

==========================================================

[END]

One thought on “கருவாய் உதித்த பொழுதே தொடுத்த கலியகற்ற வருவாய் கருணாம்பிகையே! Rightmantra Prayer Club

  1. Dear Sundarji,
    After reading our prayer club prayers which includes my prayer & general prayers, I thought yesterday very often and told about my children also. we had no rains for the past 5 months. Yesterday evening exactly at the prayer time, heavy rain was coming in our place and today also rain is coming now !! I am very happy now!! Thanks to all members for the prayers!! Namasivayam!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *