நல்ல காலம் நிச்சயம் வரும்!
* பாமரன் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவன் தெய்வமாகவும் உயரவேண்டும். இதுவே ஆன்மிகத்தின் பயன்.
* மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுமானால் நரகத்திற்குக் கூட செல்வதற்குத் தயாராய் இருங்கள். மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது ஒரு நல்ல காரியத்திற்காக உயிரை விடுவது மேல்.
* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதற்காக உன்னை அர்ப்பணித்துக் கொள். பொறுமையுடன் விடாமுயற்சி செய்தால் உனக்கு ஆதரவான நல்ல காலம் நிச்சயம் வரும்.
* உலகில் நல்லவர்கள் பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் முழுவதும் அனுபவிக்கிறது.
* உலக வாழ்வில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ய வேண்டாம். வெற்றியோ தோல்வியோ போராடுங்கள்.
* தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறும் மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களை மிருகங்களாக்கி கீழ்நிலைக்குத் தள்ளிவிடும்.
* சுயநலம், சுயநலமின்மை இந்த இரண்டையும் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் வேறு எந்தவிதமான வேறுபாடும் கிடையாது.
– சுவாமி விவேகானந்தர்.
இந்த தளத்தில் நாம் அளிக்கும் ஒவ்வொரு பதிவுக்கும் எந்தளவு சிரத்தை எடுத்துக்கொள்கிறோம் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு பதிவும் அதன் உள்ளடக்கத்துக்கு ஏற்ப தயாரிக்க நேரம் பிடிக்கும். அதிலும் பிரார்த்தனை பதிவு தான் மிகுந்த நேரம் எடுத்துக்கொள்ளும். முதலில் பிரார்த்தனை பதிவுக்கு ஏற்ப ஒரு கதை தயார் செய்யவேண்டும். அடுத்து, பிரார்த்தனைக்கு தலைமை ஏற்க தகுதியுடையவரை அடையாளம் கண்டு அவரை பற்றிய அறிமுகம், அதற்கு புகைப்படத்தை ஏற்பாடு செய்வது, அடுத்து நமது மின்னஞ்சல்களில் இருந்து பிரார்த்தனை கோரிக்கையை தேடி எடுப்பது, மற்றும் பொதுப் பிரார்த்தனைக்கான கருவை தயார் செய்து அதற்கும் படங்களை அளிப்பது… இப்படி ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் ஒரு சுகமான சுமை தான் நமக்கு.
சில நாட்களில் பிரார்த்தனை பதிவை வெள்ளிக்கிழமை அளித்தே ஆகவேண்டும் என்கிற சூழ்நிலையில், விடிய விடிய நாம் கணினி முன்பு அமர்ந்து தயார் செய்த சம்பவமெல்லாம் உண்டு.
ஒவ்வொரு வாரமும் நமது வாசகர்கள், இறைவனுடன் பேசும் அதுவும் மற்றவர்களுக்காக பேசும் அந்த உன்னதமான தருணத்தை விட்டுவிடக்கூடாதே என்று மிகவும் பிரயத்தனப்பட்டு பிரார்த்தனை பதிவை தயார் செய்வோம்.
அதே போன்று நண்பர் சிவ.விஜய் பெரியசுவாமி. மத்திய அரசுப் பணியில் இருக்கும் அவர் தினத்தந்தி, தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார். மிகவும் பிஸியான மனிதர். எழுத்துக்களை அனைவரும் காசாக்க துடிக்கும் காலத்தில் நமக்காக ஒவ்வொரு வாரமும் நேரம் ஒதுக்கி பல அற்புதமான பரிகாரங்களை உரிய பதிகங்கள், பாசுரங்களுடன் இலவசமாக சொல்கிறார்.
எதற்கு பிரார்த்தனை பதிவின் பின்னணியில் உள்ள இந்த சிரமங்களை சொல்கிறோம் என்றால், நீங்கள் அதன் அருமை உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும் என்பதால் தான். எது இந்த உலகில் சுலபமாக கிடைக்கிறதோ அதன் அருமையை எவரும் உணர்வதில்லை.
வரும் ஞாயிறு கோவை செல்லவேண்டிய ஏற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டியிருப்பதாலும் வேறு சில முக்கியமான அலுவல்களில் ஈடுபட்டிருப்பதால் பிரார்த்தனை பதிவை தயார் செய்ய போதிய நேரமின்மையாலும் சென்ற வார பிரார்த்தனையே இந்த வாரமும் ரிப்பீட் செய்யப்படுகிறது. பொதுப் பிரார்த்தனை மட்டும் காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு நீங்க வைக்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற வள்ளி, லோச்சனாவே இந்த வாரமும் தலைமை ஏற்பார்கள்.
சென்ற வாரம், கடைசி நேரத்தில் பிரார்த்தனையில் சேர்க்கப்பட்ட வாசகி சுந்தரி வெங்கட் அவர்களின் தங்கை கணவர், கண்ணன் அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார். சென்ற ஞாயிறு நமது பிரார்த்தனை நேரம் வருவதற்கு முன்பே அதாவது ஞாயிறு காலையே அவர் உயிர் நீத்துவிட்டார். எனவே அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினரும் குழந்தைகளும் ஆறுதல் பெறவும் இறைவனை வேண்டுவோம். (வள்ளி லோச்சனாவுக்கு மட்டும் மேற்படி தகவலை தெரிவித்து அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டோம்.)
அதே போன்று நண்பர் பூமிநாதன் அவர்களின் முழுக்கதையை கேட்டால் ஆடிப்போவீர்கள். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ற அதிர்ச்சி தான் ஏற்படுகிறது. அவருக்காக நாம் அனைவரும் நிச்சயம் இறைவனிடம் மீண்டும் கோரிக்கை வைப்போம். அவர் மீண்டும் குடும்பத்துடன் ஒன்று சேரவேண்டும்.
நண்பர் சக்திவேல் அவர்களுக்காகவும் மீண்டும் பிரார்த்தனை செய்யவும். இக்கட்டான பல தருணங்களில் நமக்கு உதவியிருக்கிறார். நமது அறப்பணிகளிலும் பங்கேற்றுள்ளார். குணத்தால் உயர்ந்தவர். பண்பால் சிறந்தவர். பரோபகார சிந்தனை உடையவர். அவருக்கு இப்படி ஒரு குறை எனும்போது நெஞ்சம் பதறுகிறது. அவர் தங்கை கணவர் செந்தில்குமார். அவருக்காகவும் நாம் மீண்டும் பிரார்த்தனை செய்வோம். செந்தில்குமார் பண்பால் உயர்ந்தவர். பழகுதற்கு இனியவர். ஆசிரியப் பணி செய்துவருபவர். நல்லாசிரியர் என் பெயர் பெற்றவர்.
=================================================================
குறை நீங்க வேண்டும்; குடும்பம் தழைக்க வேண்டும்!
நண்பர் திரு. சுந்தர் மற்றும் ரைட் மந்த்ரா வாசகர்களுக்கு என் அன்பு வணக்கம்.
எங்களுக்கு (சக்திவேல் – ப்ரியதர்சனி) திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. எங்கள் இருவருக்கும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்ட வில்லை. அதே போல எனது தங்கைக்கு (செந்தில்குமார் – ஜெயலக்ஷ்மி) திருமணம் ஆகி மூன்றரை ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நாங்களும் பல ஆலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகிறோம். பித்ரு கடன் எல்லாம் தவறாமல் அந்தந்த திதிகளில் செய்து வருகிறோம். அந்த இறைவன் எப்போது வரமளிப்பான் என்று தெரியவில்லை. எங்கள் அம்மா இதே கவலையுடன் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கும் அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறது.
எனது தங்கையின் சார்பாக ஏற்கனவே நான் இந்த பிரார்த்தனை மன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். தற்போது எனக்கும் வைக்கிறேன்.
எனக்கு பிரார்த்தனையில் நம்பிக்கை உண்டு. நிச்சயம் எங்கள் குறை விரைவில் தீரும் என்று நம்புகிறேன்.
எங்களுக்கு கூடிய விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கவும், எங்கள் அம்மாவுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கவும் ரைட் மந்த்ரா வாசகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.
– சக்திவேல், கோவை
================================================================
குடும்ப ஒற்றுமை வேண்டும்; பிரிந்தவர்கள் சேரவேண்டும்!
ரைட்மந்த்ரா.காம் தளத்தின் பிரார்த்தனை கிளப்புக்கு
பூமிநாதன் விண்ணப்பித்துக் கொள்வது.
ஸ்ரீ ராமனின் வடிவங்களே ஆகிய அனைவரின் திருவடிக்கும் நமஸ்காரம்.
அன்பு மனைவி, அன்பு மகள் என்று சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் குரு என்ற போர்வையில் சில போலிகள் மனைவியின் மனதில் விஷ விதைகளை தூவ சுமார் மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறேன்.
மனநிலை பாதித்து உறவுகள் மனைவி என எல்லோராலும் கைவிடப்பட்டு என்னுடன் பணி புரிந்த ஆசிரியர்களின் உதவியாலும் ராம நாம ஜெபத்தாலும் மீண்டு வந்துள்ளேன்.
கடந்த 3 ஆண்டுகளாக நான் பெற்ற மகளை பார்க்க கூட மனைவி அனுமதிக்காமல் பலர் மூலமாக மிரட்டப்பட்டு ராம நாமமே கதியாக உள்ளேன்…….மீண்டும் குழந்தையுடன் ……சேர்ந்து வாழ்ந்து சேவைகள் செய்து………ராமனின் திருவடியே அடைய பிராத்திக்கிறேன் .
இறைவனின் அடியவர்களுக்கு சேவைகள் செய்து ………..மகளுக்கும் அதுவே தர்மமாய் கொடுத்து வாழ உங்களின் பிரார்த்தனைகளை இறைஞ்சுகின்றேன்.
ராம் ராம்
பூமிநாதன்
================================================================
பொதுப் பிரார்த்தனை
பொதுப் பிரார்த்தனையாக வெள்ளத்தில் மிதக்கும் காஷ்மீர் மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பவும், வெள்ளத்தால் பதிக்கப்பட்டு வீடிழந்து, உறவுகளை இழந்து வாடும் மக்கள் உரிய நிவாரணம் பெறவும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நம் இராணுவ வீரர்கள் சிரமமின்றி பணிகளை மேற்கொள்ளவும் இறைவனை பிரார்த்திப்போம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், கடந்த 109 ஆண்டுகளில், இது போன்றதொரு பெருவெள்ளத்தையும், பயங்கர மழையையும் சந்தித்ததில்லை. அந்த அளவுக்கு, கடந்த செப்., 2ல் துவங்கிய மழையால், அந்த மாநிலம் பாதிக்கப்பட்டது. ராணுவத்தினர் இல்லை என்றால், அங்கு ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க முடியாது என்ற நிலையில், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டும், பிற காரணங்களாலும், 200 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் அனைவரின் ஆன்மா சாந்தியடையவும் அம்மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவும் பிரார்த்திப்போம்.
பிரிவினை பேசியவர்கள், தூண்டியவர்கள், எல்லாம் இயற்கை சீற்றத்தில் ஓடிஒளிந்துகொள்ள, நமது இராணுவ வீரர்கள் தான் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றி வருகின்றனர்.
மழை வெள்ளத்தால் ஸ்தம்பித்து போன காஷ்மீரில் முப்படையினரும் முகாமிட்டு 24 மணி நேரமும் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ‘ஆபரேஷன் மெக்ரகத்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த மீட்புப்பணிகள் நேற்று 10–வது நாளை எட்டியுள்ளது.
மேலே நீங்கள் காண்பது 48 மணிநேரத்தில் நம் இராணுவ வீரர்கள் கட்டிய பாலம். பாலம் கட்டமுடியாத இடங்களில் தாங்களே பாலமாக இருந்து மக்களை காப்பாற்றி வருகின்றனர் நம் இராணுவத்தினர்.
வெள்ளத்திலும் விளைந்த நன்மையாக காஷ்மீர் மாநில மக்களிடம் நிலவி வந்த வேறுபாடுகளையும் வெள்ளம் அடித்து சென்று விட்டது. இன, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்து வருகிறார்கள். வேறுபாடுகளை மறந்து, வெள்ளத்தில் தவிப்பவர்களை மீட்டு அடைக்கலம் கொடுத்து வருகிறார்கள். அதேபோல, பல ஆண்டுகளாக எந்த இராணுவ வீரர்கள் மீது தாக்குதலும் கல்லெறிதலும் நடத்தி வந்தார்களோ அதே இராணுவத்தினர் தங்கள் உயிரை துச்சமென கருதி அவர்கள் உயிரை காப்பாற்றியதால் இராணுவத்தினர் மீது ஏற்பட்டிருந்த கசப்பு நீங்கிவிட்டது. மாறாக மக்களின் கோபம் அரசியல்வாதிகள் மீது திரும்பியுள்ளது. இதற்கிடையே, இன்னும் ஏராளமானோர் மீட்கவேண்டி உள்ளதால், மீட்புபணி பல நாட்களுக்கு தொடரும் என கருதப்படுகிறது.
============================================================
கடன் பிரச்னை காரணமாக மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ள வாசகி சுந்தரி வெங்கட் அவர்களின் தங்கை கணவர் கண்ணன் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், வாசகர் சக்திவேல்-பிரியதர்ஷினி தம்பதியினருக்கும், அவர் தங்கை (செந்தில்குமார் – ஜெயலக்ஷ்மி) தம்பதியினருக்கும் உள்ள குறைகள் யாவும் நீங்கி, அவர்களுக்கு சந்தான ப்ராப்தி ஏற்பட்டு அவர்கள் குடும்பம் தழைக்கவும், வாசகர் பூமிநாதனுக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைத்து அவருக்கு உரிய நீதி தாமதமின்றி கிடைக்கவும் பிரிந்துள்ள தம் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து குறைகள் நீங்கி, இன்பமாக வாழவும், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முற்றிலும் சீர்குலைந்துள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவும்,இறைவனை பிரார்த்திப்போம்.
சென்ற வார பிரார்த்தனைக்கும் இந்தவாரம் பிரார்த்தனைக்கும் தலைமை ஏற்றுள்ள வள்ளி, லோச்சனா சகோதரிகள் தேவாரத் திருப்புகழ் தொண்டில் மேன்மேலும் சிறந்து விளங்கவும்,அவர்கள் பெற்றோர் சீதாராமன்-காயத்ரி தம்பதியினர் மற்றும் தாத்தா சுவாமிநாதன் ஆகியோர் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : செப்டம்பர் 14, 2014 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
============================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=======================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர்கள் : தேவாரம், திருப்புகழ் பாடிவரும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் கொள்ளுப் பேத்திகள் வள்ளி மற்றும் லோச்சனா சகோதரிகள்.
வாழ்க வளமுடன்
ஐயா
கடவுளை மற, மனிதனை நினை என்றார் பெரியார் . அனால் நீங்கள் சக மனிதனுக்கு ஒரு குறை என்றவுடன் அவனுக்காக கடவுளை நினை , என்கிறீர்கள் இது தான் மனித பண்பு . வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் , நீங்கள் எல்லோரயும் அவ்வாறாக மாற்றுகின்றீர் . . காந்தி அடிகள் கூட்டு வழிபாட்டில் மிகுந்த நம்பிகை உடையவர். வாழ்க நின் பணி, வளர்க நின் தொண்டு
Wow..good news… Very happy to hear this that too on a Friday.
நல்ல காலம் நிச்சயம் வரும்! May be it is delayed.. will come in the right time.
Our prayers and wishes for the well being of our RM friends and our people at Kashmir.
Om Nama Sivaya
காசி விஸ்வநாதர் கோவில் பாஞ்சாலி என்ற பசு பெண் கன்றை ஈன்றி ருப்பது அறிய மிக்க மகிழ்ச்சி. மற்றொரு நந்தினி
விவேகானந்தரின் பொன்மொழிகள் மிகவும் அருமையாக உள்ளது. நாம் நம் வாழ்கையின் லட்சியத்தில் வெற்றி அடைய போராடுவோம்.
வேத புரீஸ்வர கோவில் படங்கள் கொள்ளை அழகு
திரு சக்திவேல் குடும்பத்திற்காகவும், திரு பூமிநாதன் தனது மனைவு மகளுடன் சேர்ந்து குடும்பம் நடத்தவும் பிரார்த்திப்போம்
.
திரு சுந்தரி வெங்கட்டின் தங்கை கணவர் திரு கண்ணன் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய நாம் பிரார்த்தனை செய்வோம். காஸ்மீர் மாநில மாநில மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுவோம்
நம் தளம் சார்பாக கோ சம்ப்ரோக்ஷணம் மற்றும் அன்ன தானம் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்
லோக சமஸ்த சுகினோ பவந்து
ராம் ராம் ராம்
நன்றி
உமா
Dear Sundarji,
Today i am in upset mood. When i opened this website i feel happy to see the headline of this article.
Merkonda pathivai padithen.Ellorukagavum andha agilanda kodi bramanda nayagan tiruchendur senthil andavarai vendi kozhgiren.
Thanks and Regards
V.HARISH
காசி விஸ்வநாதர் கோவில் பாஞ்சாலி என்ற பசு பெண் கன்றை ஈன்றிருப்பது நம் குடும்பத்தில் ஒருவர் இணைந்திருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற மகாபெரியவாவின் பாதம் பணிகிறேன்.
தேவகியும் (கன்று) பாஞ்சலியும் நலமாக வாழ அந்த விசாலாக்ஷி துணை இருப்பால் நேற்று உங்களை அற்புத கோயிலில் பார்பதற்கு அந்த விஸ்வனதரே அருள் புரிந்தார். உங்கள் சேவையில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.நன்றி.
கடன் பிரச்னை காரணமாக மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ள வாசகி சுந்தரி வெங்கட் அவர்களின் தங்கை கணவர் கண்ணன் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், வாசகர் சக்திவேல்-பிரியதர்ஷினி தம்பதியினருக்கும், அவர் தங்கை (செந்தில்குமார் – ஜெயலக்ஷ்மி) தம்பதியினருக்கும் உள்ள குறைகள் யாவும் நீங்கி, அவர்களுக்கு சந்தான ப்ராப்தி ஏற்பட்டு அவர்கள் குடும்பம் தழைக்கவும், வாசகர் பூமிநாதனுக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைத்து அவருக்கு உரிய நீதி தாமதமின்றி கிடைக்கவும் பிரிந்துள்ள தம் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து குறைகள் நீங்கி, இன்பமாக வாழவும், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முற்றிலும் சீர்குலைந்துள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவும்,இறைவனை பிரார்த்திப்போம்.
சென்ற வார பிரார்த்தனைக்கும் இந்தவாரம் பிரார்த்தனைக்கும் தலைமை ஏற்றுள்ள வள்ளி, லோச்சனா சகோதரிகள் தேவாரத் திருப்புகழ் தொண்டில் மேன்மேலும் சிறந்து விளங்கவும்,அவர்கள் பெற்றோர் சீதாராமன்-காயத்ரி தம்பதியினர் மற்றும் தாத்தா சுவாமிநாதன் ஆகியோர் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
இன்று பிரார்த்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரது குறைகளும் நீங்கி வளம் பெற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி பிரார்த்தனை செய்து கொள்ளுகிறோம் .
தன்னை உணர்ந்த தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த இறைவன் அருளாலே- திருமந்திரம்
குருவே சரணம், இறைவா சரணம்
மலர்கொடி & இராஜேந்திரன்