Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும் – MONDAY MORNING SPL 60

மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும் – MONDAY MORNING SPL 60

print
சிறு வயது முதலே அந்த சிறுவனுக்கு பியானோ வாசிப்பதில் ஆர்வம் உண்டு. அவனுக்கு தெரிந்த ஒரே பியானோ ஆசிரியர் அவன் அம்மா தான். ஒரு நாள் அம்மாவிடம் கேட்டான், “அம்மா நாமெல்லாம் ஏழைகளா?”

“ஆமாம்…  ஏழைகள் தான்!!!”

Nat King Cole“ஒரு நாள் நிச்சயம்  நான் உலகப் புகழ்  பெறுவேன். அன்று என் பெயர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்” என்றான்.

தன் அப்பா செல்லும் சர்ச்சில் ரெகுலராக பியானோ வாசித்து வந்தான். கிட்டத்தட்ட 11  வயதில், ஒரு கைதேர்ந்த பியானோ இசைக்கலைஞனாகி விட்டான்.

வாலிப பருவத்தை  அடைந்ததும், நிகழ்சிகளுக்கு சென்று வாசித்து பொருளீட்ட ஆரம்பித்தான். பார்களில் பியானோ வாசிக்க வந்த வாய்ப்பை கூட விடவில்லை. தனது நகரத்தில் உள்ள விடுதி (பார்) ஒன்றில் ஒருநாள் இவன் தந்து குழுவினருடன் பியானோ  வாசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு வாடிக்கையாளர்  வந்து, “எத்தனை நாள் தான் உன் பியானோ மியூசிக்கை கேட்டுகிட்டுருக்கிறது… காதே புளிச்சு போச்சு…… இன்னைக்கு நீ பாடனும்”

இளைஞன் திடுக்கிடுகிறான்.  என்னடா இது நம்ம பொழைப்புல மண்ணள்ளி போட்டுடுவான் .போலருக்கே… என்று நினைத்தபடி.. “சார்… எனக்கு பாடத்  தெரியாது. பியானோ தான் வாசிக்கத் தெரியும். நீங்க சொல்ற பாட்டை பியானோவுல வேணும்னா வாசிச்சு காட்டுறேன்”

“அதெல்லாம் முடியாது.. நீ பாடித் தான் ஆகணும்…” என்று கஸ்டமர் முரண்டு  பிடிக்க, இவர் முடியாது என்று  கூற, விஷயம் விடுதி உரியமையாளர் வரை சென்றது.

அவர் மிகவும் வசதியான, அந்த விடுதிக்கு அடிக்கடி வரும் கஸ்டமர்.

“தம்பி, எனக்கு கஸ்டமர்ஸ் தான் முக்கியம். சார்  கேட்கிற மாதிரி நீங்க பாடித் தான் ஆகணும். இல்லேன்னா நாளைல இருந்து நீங்க வேற இடம் பார்த்துக்கோ…” என்று கூறிவிட, அவமானத்தால் கூனி குறுகுகிறார் இவர். வரும் கொஞ்ச நஞ்ச வருமானத்திலும் மண் விழுந்துவிட்டால் என்ன செய்வது  என்ற யோசனையுடன் இவர் வேறு வழியின்றி பாடுகிறார். அதுவரை அவர் நான்கு பேர் இருக்கும் சபையில் பாடியதில்லை. தனது கேரியரையே புரட்டிப் போடப்போகும் ஒரு பாடலை தான் பாடிக்கொண்டிருக்கிறோம் என்பது அவருக்கு தெரியாது. அஞ்சுக்கும் பத்துக்கும் இன்று பப்புகளில் பாடும் இவர், பின்னாளில் உலகப் புகழ் பெற்று கோடிகளில் புரளப்போகிறார் என்பது அங்குள்ள வாடிக்கையாளர்களுக்கும் தெரியாது.

பாடலை இவர் பாட ஆரம்பித்தது தான் தாமதம்… பாரில் நடைபெற்றுகொண்டிருந்த சின்னச் சின்ன உரையாடல்கல்கள் கூட நின்றுபோயின. தனது அபாரமான குரலில் அவர் பாடிய பாடலை மெய்மறந்து அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். பாடலை பாடிமுடித்ததும், அந்த பாரே கைதட்டல்களால் அதிர்ந்தது. ஆளாளுக்கு தங்கள் இருக்கையைவிட்டு எழுந்து வந்து கைகுலுக்கினர்.

இவரது புகழ் திக்கெட்டும் பரவ, வெகு சீக்கிரம் நாடே போற்றும் ஒரு பாடகராக உயர்ந்துவிட்டார். அவர் தான் பிரபல பாடகர் நேட் கிங் கோல்.

தனக்கு மிகச் சிறப்பான ஒரு குரல் வளம் இருந்தும், நன்றாக பாடும் திறமை இருந்தும் அதை பற்றி அறியாமல் அதை வெளிப்படுத்தாமல் அதுவரை இருந்துள்ளார் நேட் கிங்.

Nat king cole collections‘ஒரே மாதிரி மொக்கை போடாதே…. நீ இன்னைக்கு பாடியே ஆகணும்’ என்று சட்டையை பிடித்த அந்த கஸ்டமரும், ‘பாடுறதா இருந்தா இங்கே இரு. இல்லேன்னா உனக்கு இனிமே இங்கே வேலை இல்லை’ என்று கழுத்தை பிடித்த அந்த முதலாளியும் இல்லையென்றால் நேட் கிங் என்கிற பாடகர் உலகிற்கு கிடைத்திருக்கமாட்டார். அவர்கள் அச்சுறுத்தியதாலேயே அவர் வேறு வழியின்றி பாடினார். பின்னாளில் அமெரிக்காவின் மிகப் பிரபலமான பாடகராக உயர்ந்தார். இல்லையெனில், தனது எஞ்சிய காலம் முழுக்க ஏதேனும் பப்புகளிலும் பார்களிலும் பியானோ வாசித்தே காலத்தை கழித்திருப்பார்.

நேட் கிங் மட்டுமல்ல, தங்கள் திறமை தங்களுக்கே தெரியாமல், இப்படி ஏதோ ஓர் சந்தர்ப்பத்தால் பலர் முன்னிலையில் அவமானபடுத்தப்பட்டு அதன் மூலம் வெடித்துக் கிளம்பிய பல சாதனையாளர்கள் சரித்திரத்தில் உண்டு.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

விதைக்குள் அடைப்பட்ட ஆலமரம் போல, நம் அனைவருக்குள்ளும் மிகச் சிறந்த திறமையும் ஆற்றலும் மறைந்துள்ளது. அதை உணரும் வரை நாம் குண்டு சட்டி குதிரை தான். அதை வெளியேகொண்டு வர, இது போன்ற கசப்பான சந்தர்ப்பங்கள், அவமானங்கள், வலிகள் உதவுகின்றன. சுடர்விளக்கானாலும் தூண்டுகோல் தேவையல்லவா? ஒரு வகையில் இவை BLESSING IN DISGUISE. இத்தகு அனுபவங்கள் எவருக்கேனும் ஏற்பட்டால் நிலைகுலையாது இருகரம் நீட்டி வரவேற்போம்.

Small plant on pile of soil

உங்கள் திறமை மிகச் சிறந்ததாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் நினைப்பதைவிட அது நிச்சயம் நன்றாக இருக்கலாம் அல்லவா? நம்மிடமுள்ள பல திறமைகள் நாம் மனது வைத்தால் விடாமுயற்சியுடன் மேற்கொண்டு வளர்த்துக் கொள்ள கூடியவைகளே.

மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா? துக்கமில்லை என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

==================================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==================================================================

[END]

14 thoughts on “மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும் – MONDAY MORNING SPL 60

  1. ///விதைக்குள் அடைப்பட்ட ஆலமரம் போல, நம் அனைவருக்குள்ளும் மிகச் சிறந்த திறமையும் ஆற்றலும் மறைந்துள்ளது. அதை உணரும் வரை நாம் குண்டு சட்டி குதிரை தான். அதை வெளியேகொண்டு வர, இது போன்ற கசப்பான சந்தர்ப்பங்கள், அவமானங்கள், வலிகள் உதவுகின்றன.///

    பொன்னான வார்த்தைகள் …

    -நன்றி.

  2. மிக அருமையான பதிவு . அவமானங்களும் ,அவமதிப்பும் நம்மை நாம் திருத்தி கொள்வதற்கே யன்றி நம்மை சிறுமை படுத்த அல்ல என உணர்ந்தால் வெற்றி நமக்கே . சிற்பி உளி கொண்டு செதுக்குவதால் தான் கல் சிலை ஆக மாறி பெருமை அடைகிறது . உளி கொண்டு செதுக்குவது வலியாக உணர்ந்து வேண்டாம் என நினைத்தால் அது வெறும் கல்லாகவே இருக்கும் . நன்றி சுந்தர்ஜி

  3. Dear sundarji,

    Monday morning special super.

    Each and every person should explore themselves to bring out their talent.

    Thanks and Regards

    V.HARISH

  4. நிச்சயமாக நமக்கு என்ன திறமை ஒளிந்திருக்கிறது என்று தெரியும் வரை நாமும் சராசரி வாழ்க்கைதான் வாழமுடியும். இதுதான் இறைவன் நமக்களிக்கும் வாய்ப்பு. மிக நன்று நண்பரே.

    எப்படி கோவையிலேயே சப்ஜெக்ட் தயார் செய்து விட்டீர்களா? மெய் சிலிர்க்கிறது உங்கள் அற்பணிப்பை பார்க்கும்போது. எங்களுக்கெல்லாம் சண்டே கிடைத்தால் என்ன pending வேலை முடிக்கலாம், யாரை பார்க்க வேண்டும், என்று தான் விடுமுறை கழிகிறது. உங்களை போல் சமுக பார்வையுடன் பணியாற்ற எங்களுக்கு வாய்பில்லாததை நினைத்து நொந்து கொள்வதா அல்லது எதுவரைகாவது எங்களை இறைவன் வைத்திருக்க வேண்டிகொள்வதா என்றே தெரியவில்லை. ஓம் நமசிவாய.

    1. சனிக்கிழமை கோவை புறப்படும் முன், கருவை தயார் செய்துவைத்துவிட்டேன். இன்று காலை வந்தவுடன், அலுவலகம் கிளம்புவதற்கு முன்பு பதிவை டெவலப் செய்து போஸ்ட் செய்தேன்.

      ஒவ்வொருவரும் அவர்களால் இயன்ற சமூக பணியை செய்வோமாக. அதுவே இந்த உலகம் இனிமையாக மாற போதுமானது.

      தங்கள் பாராட்டுக்கு நன்றி.

      – சுந்தர்

  5. இனிய காலை வணக்கம் . Monday Morning special very energetic special.

    //விதைக்குள் அடைப்பட்ட ஆலமரம் போல, நம் அனைவருக்குள்ளும் மிகச் சிறந்த திறமையும் ஆற்றலும் மறைந்துள்ளது//

    நாம் முன்னேர வேண்டும் என்ற சிந்தனை நமக்குள் இருந்தால் நமது திறமை கண்டிப்பாக வெளி வெளிவரும். அப்பொழுது நாம் பார் போற்றும் மக்களாக சரித்திறத்தில் இடம் பிடிப்போம். நமக்கு தேவை positive thinking

    நன்றி
    உமா

  6. Dear Sundarji,
    Very Nice MORNING. Very Nice Energetic Article. Just Spare a word with us how you Manage your time.
    S.Narayanan

  7. வணக்கம்……….

    இன்று காலையிலேயே ஒரு கசப்பான அனுபவம்……….மிகுந்த மனவலியுடன் நமது தளத்திற்கு வந்தால்…….இங்கே இப்படி ஒரு பதிவு…. ஏதோ எனக்காகவே இந்த பதிவு வந்திருப்பது போல் உணர்கிறேன்……….எனது திறமைகளை வளர்த்துக் கொள்ள இதை ஒரு வாய்ப்பாகக் கருதுகிறேன்……..எனக்குள் ஒரு புது உத்வேகம்………

    நன்றிகள் பல……..

    1. தோல்விகளோ அவமானங்களோ இன்றி வரலாறே கிடையாது. இந்த உலகில் சரித்திரம் படைத்த படைத்த சாதனையாளர்கள் உருவானது அனைத்தும் ஒரு அவமானத்தின் பின்ன்ணியில் தான். மகாபாரதத்தின் ஆணிவேறே இது தான். Don’t worry. March ahead.
      – சுந்தர்

  8. வாழ்க வளமுடன்

    ஐயா வணக்கம், நல்ல கருத்து, விதைக்குள் விருட்சம் , தங்கள் பதிவுகளில் ஆங்கில கலப்பு சில காணப்டுகின்றது , படிக்கும் போது மனதை நெருடுகின்றது கூடுமானவரை தவிர்க்கலாம் . அடைப்பு குறிக்குள் ஆங்கில வார்த்தைகளை போடலாம் . நம் தாய் மொழியில் கலப்படம் வேண்டாம். நன்றி

  9. ஜி,

    சில நேரம் நம் கண்களுக்கு எதிரியாக தெரிந்தவர்கள் இன்று நம்மை துண்டிவிட்ட குருவாக ஆகிவிடுகின்றனர். ஆக எல்லாம் நன்மைக்கே!

  10. சிறப்பான உற்சாகம் தரக் கூடிய பதிவு. அவமானங்களைக் கண்டு மனம் சலிக்காமல் முடிந்தவரை வாழ்க்கையில் போராட முயலவேண்டுமென்பதை நன்கு உணர்த்தியுள்ளது இப்பதிவு. நன்றிகள் பல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *