Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னைத் தீர்க்கும் – Rightmantra Prayer Club

ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னைத் தீர்க்கும் – Rightmantra Prayer Club

print
ரு பக்திச் சொற்பொழிவு நடைபெற்றுகொண்டிருந்தது. முருகப் பெருமானின் பெருமைகளை சொற்பொழிவாளர்  கூறிக்கொண்டிருந்தார். சிறியவர்களும் பெரியவர்களுமாக பலர் அமர்ந்து சொற்பொழிவை கேட்டுக்கொண்டிருந்தனர்.

சொற்பொழிவாற்றியவர், அரங்கத்தில் இருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார், ” முருகனுக்கு முகம் ஆறு, கரங்கள் பன்னிரெண்டு என்பதை அறிவீர்கள்! கால்கள் எத்தனை?”

அனைவரும்… “அட… ஆமாம் இல்லே…. ஆறு முகம், 12 கரங்கள் என்றால் கால்கள் எத்தனை இருக்கும்…” என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

சட்டென்று எழுந்த, ஒரு சிறுவன் சொன்னான். “கால்கள் இரண்டுதான்!”

OLYMPUS DIGITAL CAMERA

“விடை சரி தான். ஆனால் ஆறு முகங்களும் பன்னிரண்டு கரங்களும் உண்டென்றால்…. கால்கள் மட்டும் ஏன் இரண்டு?”

அவருடைய இந்த இந்தக் கேள்விக்கு அரங்கிலிருந்து பதில் இல்லை!

அவரே தொடர்ந்து சொன்னார்.

“பக்தி நிலையில் உன்னத நிலை இறைவனைச் சரணடைவதுதான். அப்படிச் சரணடையும் பக்தன் பன்னிரெண்டு கால்கள் இருந்தால் எந்த இரு கால்களில் விழுந்து ஆறுமுகனை வணங்குவதென்று தடுமாறிவிடுவான். குழம்பிவிடுவான்.ஆகவேதான்  ஆறுமுகனுக்குக் கரங்கள் பன்னிரெண்டானாலும், கால்கள் இரண்டுதான்!”

இதிலிருந்தே தெரியவில்லை கந்தன் எத்தனை பெரிய கருணாமூர்த்தி என்று….!

 சென்னிமலை முருகன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது...

சென்னிமலை முருகன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது…

நாம் சென்ற மாதம் சென்னிமலை சென்றபோது கும்பாபிஷேகத்துக்கு முந்தைய நாள் எடுத்த படம் இது. கோபுரத்தின் முன்பு கஜபிருஷ்டத்துடன் (யானையின் பின்புறம்) காணப்படும் இப்புகைப்படம் மிகவும் விசேஷமான ஒன்றாகும்.

“ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும் – துன்பம்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்”

=================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு  தலைமை தாங்குவது: தேவாரம், திருப்புகழ் பாடிவரும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் கொள்ளுப் பேத்திகள் வள்ளி  மற்றும் லோச்சனா சகோதரிகள்.  முறையே ஐந்தாம் வகுப்பும் மூன்றாம் வகுப்பும் படிக்கிறார்கள். பல கோவிகளில் நிகழ்சிகளில் தேவாரமும் திருப்புகழும் பாடிவருகிறார்கள்.

Valli Lochana

வள்ளி மற்றும் லோச்சனா இருவரும் தேவாரமும்  திருப்புகழும் பாடிவருகிறார்கள் என்பதை அறிந்ததும் இருவரையும் அவர்கள் வீடு தேடிச் சென்று கௌரவித்து, பேட்டி கண்டோம். வாரியார் சுவாமிகளே நமக்கு சொல்லியதை போன்று நம் வாசகர்களுக்கு ஏகப்பட்ட குறிப்புகளும் தீர்வுகளும் அப்பேட்டியில் அடங்கியுள்ளது. அவசியம் அப்பதிவை அனைவரும் படிக்கவேண்டும். (தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!)

குழந்தைகளின் தந்தை நண்பர் சீதாராமன் அவர்களிடம் நம் பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக் கூறி, இந்த வார பிரார்த்தனைக் வள்ளியும் லோச்சனாவும் தலைமை ஏற்க ஆவன செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். தங்கள் வீட்டிலுள்ள வாரியார் சுவாமிகளின் புகைப்படம் முன்பு விளக்கேற்றிவைத்து இந்த வார பிரார்த்தனையை அவர் முன்பு செய்வதாக கூறியிருக்கிறார்கள். என்னே நம் பாக்கியம்.

குழந்தைகளின் பெற்றோர்  சீதாராமன், மற்றும் காயத்ரி தம்பதியினருக்கு நம் நன்றி.

இந்த வார பிரார்த்தனைகளுக்கான கோரிக்கையை பார்ப்போமா?

=================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அளித்துள்ள இருவருமே நம் நெருங்கிய நண்பர்கள் தான்.

முதல் கோரிக்கை, வாசகி சுந்தரி வெங்கட் அவர்களிடமிருந்து பிராத்தனை பதிவை போஸ்ட் செய்த பின்பு வந்துள்ளது. சூழ்நிலையின் அவசரம் கருதி உடனடியாக இங்கு சேர்த்துள்ளோம்.

அடுத்து திரு.சக்திவேல்… இக்கட்டான பல தருணங்களில் நமக்கு  உதவியிருக்கிறார். நமது அறப்பணிகளிலும் பங்கேற்றுள்ளார். குணத்தால் உயர்ந்தவர். பண்பால் சிறந்தவர். பரோபகார சிந்தனை உடையவர். அவருக்கு இப்படி ஒரு குறை எனும்போது நெஞ்சம் பதறுகிறது. தனது தங்கை குடும்பத்தினரின்  மனக்குறை தொடர்பாக சென்ற ஆண்டு நமது பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை அளித்திருந்தார். இவரது மனக்குறை பற்றி அறிந்து நமது பிரார்த்தனை கிளப்புக்கு விண்ணப்பிக்கச் சொன்னோம். அவரது குடும்பத்தினருக்கு ஏதோ ஒரு சாபம் உள்ளது தெளிவாக தெரிகிறது. இருப்பினும் அவர்களுக்கு நல்ல நேரம் நெருங்கிவிட்டது. குறை நீங்கி, நிறை பெருகும் வேளை வந்துவிட்டது. நிச்சயம் திருமுருக.கிருபானந்த வாரியார் அருளால் பிரார்த்தனை நிறைவேறும் என்பது உறுதி.

பூமிநாதன் அவர்களை பற்றி நிறைய சொல்லவேண்டும். அதை வேறொரு பதிவில் சொல்கிறோம். இராம நாமமே மூச்சு என்று வாழ்ந்து வருபவர் அவர். அவருக்கும் நல்லநேரம் வந்தவிட்டது. கந்தன் அருளால் இராமபிரான் இவரை அருள் நோக்குவார் என்று நம்பலாம்.

=================================================================

ரைட்மந்த்ரா நண்பர்களுக்கு அவசர தகவல்

02.03.14 என் தங்கையின் கணவர் கண்ணன்[ஹரிணியின் அப்பா]கடன் பிரசணையால் மனம் உடைந்து பூசிகொல்லி மருந்து குடித்து மதுரை  G H  தீவீர  சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இன்னமும் ICU வார்டு தான் இருக்கிறார்.என் தங்கையின் கணவர் பூர்ண நலம் பெற  நம்  ரைட் மந்த்ரா வாசகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன். [ஹரிணி- இந்த குழந்தை நம் தளத்தின் மூலம் குணம் அடைத்தவர்]

நன்றி

சுந்தரி வெங்கட், மதுரை

=================================================================

குறை நீங்க வேண்டும்; குடும்பம் தழைக்க வேண்டும்!

நண்பர் திரு. சுந்தர் மற்றும் ரைட் மந்த்ரா வாசகர்களுக்கு என் அன்பு வணக்கம்.

எங்களுக்கு (சக்திவேல் – ப்ரியதர்சனி) திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. எங்கள் இருவருக்கும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்ட வில்லை. அதே போல எனது தங்கைக்கு (செந்தில்குமார் – ஜெயலக்ஷ்மி) திருமணம் ஆகி மூன்றரை ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நாங்களும் பல ஆலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகிறோம். பித்ரு கடன் எல்லாம் தவறாமல் அந்தந்த திதிகளில் செய்து வருகிறோம். அந்த இறைவன் எப்போது வரமளிப்பான் என்று தெரியவில்லை. எங்கள் அம்மா இதே கவலையுடன் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கும் அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறது.

எனது தங்கையின் சார்பாக ஏற்கனவே நான் இந்த பிரார்த்தனை மன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். தற்போது எனக்கும் வைக்கிறேன்.

எனக்கு பிரார்த்தனையில் நம்பிக்கை உண்டு. நிச்சயம் எங்கள் குறை விரைவில் தீரும் என்று நம்புகிறேன்.

எங்களுக்கு கூடிய விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கவும், எங்கள் அம்மாவுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கவும் ரைட் மந்த்ரா வாசகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.

– சக்திவேல், கோவை

================================================================

குடும்ப ஒற்றுமை வேண்டும்; பிரிந்தவர்கள் சேரவேண்டும்!

ரைட்மந்த்ரா.காம் தளத்தின்  பிரார்த்தனை  கிளப்புக்கு

பூமிநாதன் விண்ணப்பித்துக் கொள்வது.

ஸ்ரீ  ராமனின்  வடிவங்களே  ஆகிய  அனைவரின்  திருவடிக்கும்  நமஸ்காரம்.

அன்பு  மனைவி,  அன்பு  மகள்  என்று   சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் குரு  என்ற   போர்வையில் சில  போலிகள்  மனைவியின்   மனதில்  விஷ  விதைகளை  தூவ சுமார்  மூன்று  ஆண்டுகளாக  பிரிந்து  வாழ்கிறேன்.

மனநிலை பாதித்து உறவுகள் மனைவி   என   எல்லோராலும்   கைவிடப்பட்டு என்னுடன்  பணி புரிந்த  ஆசிரியர்களின்  உதவியாலும் ராம நாம  ஜெபத்தாலும் மீண்டு  வந்துள்ளேன்.

கடந்த  3  ஆண்டுகளாக  நான் பெற்ற மகளை  பார்க்க  கூட  மனைவி  அனுமதிக்காமல்  பலர்  மூலமாக  மிரட்டப்பட்டு ராம  நாமமே  கதியாக  உள்ளேன்…….மீண்டும்  குழந்தையுடன் ……சேர்ந்து  வாழ்ந்து  சேவைகள்  செய்து………ராமனின்  திருவடியே   அடைய பிராத்திக்கிறேன் .

இறைவனின்   அடியவர்களுக்கு   சேவைகள்  செய்து ………..மகளுக்கும்   அதுவே  தர்மமாய்   கொடுத்து   வாழ  உங்களின்  பிரார்த்தனைகளை  இறைஞ்சுகின்றேன்.

ராம் ராம்
பூமிநாதன்

================================================================

Sai Sajeethகுழந்தை சாய் சஜீத் கண்ணொளி பெறவேண்டும்!

கோவையை சேர்ந்த தேவேந்திரன், சௌம்யா தம்பதியினரின் குழந்தையின் கண்கள் பாதிக்கப்பட்டு இரு கண்களும் பார்வை இழந்த நிலையில் நமது பிரார்த்தனை கிளப்பில் சென்ற வாரம் இக்குழந்தை பற்றிய கோரிக்கை இடம்பெற்றதை நம் வாசகர் ஒருவர் எஸ்.எம்.எஸ். மூலம் இவருக்கு தகவல் தெரிவிக்க, தேவேந்திரன் நம்மை அலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தார். அப்போது தான், தொடர் விடுமுறை காரணமாக சென்ற வார பிரார்த்தனை இந்த வாரமும் ரிப்பீட் செய்யப்படும் விபரத்தை கூறினோம். மிக்க மகிழ்ச்சியடைந்தார். அவரும் குடும்பத்துடன் அந்நேரம் பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார். நேற்றைக்கு குழந்தையின் புகைப்படங்களை நமக்கு அனுப்பியிருந்தார்.

குழந்தையின் தாமரை முகத்தை பார்க்கையில் ஏனோ அக்குழந்தைக்காக மீண்டும் ஒரு முறை பிரார்த்தனை செய்ய விரும்புகிறோம். வாரியார் ஸ்வாமிகள் குழந்தைக்கு அருள் செய்ய வேண்டும்.

குழந்தையின் பெயர் : சாய் சஜீத் | தந்தை : தேவேந்திரன் | தாய் : சௌம்யா

இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்

================================================================

கடன் பிரச்னை காரணமாக மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வாசகி சுந்தரி வெங்கட் அவர்களின் தங்கை கணவர் கண்ணன் அவர்கள் விரைவில் பரிபூரண குணமடைந்து, தம் துன்பமும் வறுமையும் நீங்கி சந்தோஷமாக குடும்பத்துடன் வாழவும், வாசகர் சக்திவேல்-பிரியதர்ஷினி தம்பதியினருக்கும், அவர் தங்கை (செந்தில்குமார் – ஜெயலக்ஷ்மி) தம்பதியினருக்கும் உள்ள குறைகள் யாவும் நீங்கி, அவர்களுக்கு சந்தான ப்ராப்தி ஏற்பட்டு அவர்கள் குடும்பம் தழைக்கவும், வாசகர் பூமிநாதன் பிரிந்துள்ள தம் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து குறைகள் நீங்கி, இன்பமாக வாழவும், குழந்தை சாய் சஜீத்துக்கு பார்வை கிடைத்து அவர்கள் பெற்றோர் மகிழவும் இறைவனை பிரார்த்திப்போம். மற்றும் இந்தவாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள வள்ளி, லோச்சனா சகோதரிகள் தேவாரத் திருப்புகழ் தொண்டில் மேன்மேலும் சிறந்து விளங்கவும்,அவர்கள் பெற்றோர் சீதாராமன்-காயத்ரி தம்பதியினர் மற்றும் தாத்தா சுவாமிநாதன் ஆகியோர் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், பெற்று வாழ்வாங்கு வாழ  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : செப்டம்பர் 7, 2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : குமணன்சாவடி கண்ணபிரான்  திருக்கோவில் குருக்கள் திரு.திரு.சீனிவாசன் அவர்கள்

[END]

20 thoughts on “ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னைத் தீர்க்கும் – Rightmantra Prayer Club

  1. ஓம் சரவணபவ !

    முருகனே செந்தி முதல்வனே மாயோன்
    மருகனே யீசன் மகனே – ஒருகைமுகன்
    தம்பியே நின்னுடைய தண்டைக்கா லெப்பொழுதும்
    நம்பியே கைதொழுவே னான்…

  2. சுந்தர்ஜி
    இந்த நால்வரின் பிரச்சினைகள் நீங்கி நலமுடன் வாழ வேண்டுகிறேன்

    ர.சந்திரன்
    மகாராஷ்டிரா

  3. முருகனுக்கு ஆறு முகமும் பன்னிரண்டு கைகளும் உள்ள நிலையில் கால்கள் மட்டும் 2 என்பதன் விளக்கம் அருமை. முருகன் கையில் வேலுடனும் சேவர் கொடியுடனும் பார்பதற்கு ரம்யமாக உள்ளது.

    நாம் முருகனின் கால்களை பற்றினால் அவர் நம்மை இக்கட்டான சூழ் நிலைகளில் இருந்து காப்பாற்றுவார்.

    வேல் முருக மால் மருகா வாவா வா
    கால் பிடித்தோம் காத்தருள வா வா ஷண்முகா
    நால் வேதப் பொருளான நாதா ஷண்முகா
    நல்லதெல்லாம் உன்பால் கொண்டாய் நாதா ஷண்முகா

    சென்னி மலை கோபுரத்துடன் கஜேந்திரனையும் பார்ப்பதற்கு அழகாக உள்ளது

    இந்த வார பிரார்த்தனை கோரிக்கை வைத்தவர்கள் முருகன் பெயரில் வருவது இந்த பதிவிற்கு coinside ஆக உள்ளது.

    நாம் இந்த வாரம் சக்தி வேல் குடும்பத்திற்காகவும் திரு பூமிநாதன் அவர்களுக்காகவும் பிராத்தனை செய்வோம்

    பிஞ்சுக் குழந்தையின் படத்தைப் பார்க்கும் பொழுது மனது கனக்கிறது. வெகு விரைவில் சாய் சஜித்திற்கு கண் பார்வை கிடைக்கக எல்லாம் வல்ல மகா பெரியவா மற்றும் வாரியார் சுவாமிகள் அருள் புரிய வேண்டும்

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் வள்ளி லோச்சனாவிற்கு எமது வாழ்த்துக்கள். கண்டிப்பாக வள்ளி லோச்சனாவின் பிரார்த்தனை இறைவனின் காதில் எதிரொலிக்கும். இந்த வார பிரார்த்தனை கிளப்பிற்கு மிகவும் பொருத்தமானவர்கள்

    லோக சமஸ்தா சுகினோ பவந்து
    ராம் ராம் ராம்
    நன்றி
    உமா

  4. Dear Sundarji,

    Arumaiyana pathivu. Muruganuku en irandu kaalgal endru kooriya vidham arpudham.

    Ellorum nandraga irukavendum endru , agilanda kodi bramanda nayagan tiruchendur subramaniya swamiyai vendi kolgiren.

    Om Saravana பவ
    ரேகர்ட்ஸ்
    Harish.V

  5. I pray The Almighty to give His Blessings to all the Prarthanaigal and fulfill their Prayers.

    reg
    KK Navi mumbai

  6. வணக்கம்………

    எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும், நம் குருவருளாலும் உயிர்கள் யாவும் மண்ணில் நல்ல வண்ணம் வாழ பிரார்த்திப்போம்……….

  7. சுந்தரி வெங்கட் அவர்கள் ,உடனடியாக மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருகோயில் சென்று சுவாமி சன்னதி ,அம்பாள் சன்னதி ,அங்கு உள்ள பைரவர் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடவும் ..பின்பு மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் எல்லாம் வல்ல சித்தர் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து உட்கார்ந்து உங்கள் கோரிகையை கூறவும் …தினமும் எப்போதும் “சிவாய நம” சொல்லி வரவும் …திருமுறை பதிகம் படித்து வரவும் …

    இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால்
    பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
    மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
    கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.

    அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித் திராதுநீர்
    நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ
    வில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங்
    கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே.

    துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
    தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்
    அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல்
    கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே.

    பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை
    உண்டுமக் குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ
    மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதோர் பாகமாக்
    கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.

    முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா
    தின்னநீரி டும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ
    பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்
    கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.

    ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப்
    பாவமெத் தனையும்நீர் செய்தொரு பயனிலைக்
    காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்
    கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.

    ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர்
    மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ
    பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக்
    கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே.

    மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்
    பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ
    வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்
    குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே.

    மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்
    செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா
    வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்
    கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே.

    தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும்
    பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
    விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங்
    கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே.

    கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய
    செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை
    அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்
    பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே.
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண்
    குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்
    காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்
    கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
    நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்
    நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்
    ஏற்றவன்காண் எழிலாறும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

    பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்
    பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்
    துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்
    தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த
    மருந்தவன்காண் வையங்கள் பொறைதீர்ப் பான்காண்
    மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா
    திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

    நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண்
    நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில்
    தோற்றவன்காண் தோற்றக்கே டில்லா தான்காண்
    துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம்
    போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண்
    பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை
    ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

    தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத்
    தத்துவன்காண் மலைமங்கை பங்கா வென்பார்
    வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண்
    வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணு ளோர்க்குஞ்
    சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத்
    திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம்
    ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

    அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்
    ஐயாறும் இடைமருதும் ஆள்வான் றான்காண்
    பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள்
    பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்
    சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந்
    தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
    இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

    அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி
    அழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப்
    பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும்
    பான்மையன்காண் பரவிநினைந் தெழுவார் தம்பால்
    கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் றான்காண்
    கடலில்விட முண்டமரர்க் கமுத மீய
    இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

    முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால்
    வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்
    பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்
    பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி
    முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்
    முழங்கியுரு மெனத்தோன்று மழையாய் மின்னி
    இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

    வருந்தான்காண் மனமுருகி நினையா தார்க்கு
    வஞ்சகன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும்
    மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
    வானகமும் மண்ணகமு மற்று மாகிப்
    பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் றான்காண்
    பங்கயத்தோன் றன்சிரத்தை யேந்தி யூரூர்
    இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

    வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண்
    வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி
    விம்மாநின் றழுவார்கட் களிப்பான் றான்காண்
    விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத்
    தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண்
    அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற
    எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

    அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட
    ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை
    செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் றான்காண்
    திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையிற்
    பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து
    பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோள் நாலஞ்
    சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்
    பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
    கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்
    கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே.

    நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பற்குக்
    கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக்
    கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை
    இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே.

    கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
    சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார்
    ஆர்க ளாகிலு மாக அவர்களை
    நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே.

    சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன்
    சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
    ஆற்ற வுங்களி பட்ட மனத்தராய்ப்
    போற்றி யென்றுரைப் பார்புடை போகலே.

    இறையென் சொன்மற வேல்நமன் றூதுவீர்
    பிறையும் பாம்பு முடைப்பெரு மான்றமர்
    நறவம் நாறிய நன்னறுஞ் சாந்திலும்
    நிறைய நீறணி வாரெதிர் செல்லலே.

    வாம தேவன் வளநகர் வைகலுங்
    காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
    தாமந் தூபமுந் தண்ணறுஞ் சாந்தமும்
    ஏம மும்புனை வாரெதிர் செல்லலே.

    படையும் பாசமும் பற்றிய கையினீர்
    அடையன் மின்னம தீசன் அடியரை
    விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
    புடைபு காதுநீர் போற்றியே போமினே.

    விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
    நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
    அச்ச மெய்தி அருகணை யாதுநீர்
    பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.

    இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய
    மன்னன் பாதம் மனத்துட னேத்துவார்
    மன்னும் அஞ்செழுத் தாகிய மந்திரந்
    தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே.

    மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச்
    சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
    ஒற்றை யேறுடை யானடியே யல்லாற்
    பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே.

    அரக்கன் ஈரைந் தலையுமோர் தாளினால்
    நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலுஞ்
    சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர்
    சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே.

    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
    ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
    ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
    ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.

    இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம்
    இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்
    இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு
    இரண்டுகொ லாமவர் எய்தின தாமே.

    மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன
    மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை
    மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண்
    மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே.

    நாலுகொ லாமவர் தம்முக மாவன
    நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும்
    நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள்
    நாலுகொ லாமறை பாடின தாமே.

    அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம்
    அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன
    அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை
    அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே.

    ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன
    ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்
    ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்
    ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே.

    ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன
    ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல்
    ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள்
    ஏழுகொ லாமிசை யாக்கின தாமே.

    எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்
    எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்
    எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன
    எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே.

    ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
    ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
    ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
    ஒன்பது போலவர் பாரிடந் தானே.

    பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
    பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன
    பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
    பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.

    திருச்சிற்றம்பலம்

    தினமும் எப்போதும் ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி யையும் ,வாழ வந்த நாயகியையும் மனத்தால் வழிபட்டு வரவும் ..திருகடயூர் ஈசனையும் மனத்தால் வழிபடுங்கள் …குணமான பின்பு குடும்பத்துடன் சென்று ஸ்ரீவாஞ்சியம் அபயன்கர விநாயகர் ,எமன் ,சுவாமி ,அம்பாள் ,யோக பைரவர் அபிசேகம் செய்து வழிபடவும் …திருக்கடையூர் சென்றும் வழிபடவும் ….

  8. டியர் சுந்தர் சார் இந்த varam nanum உங்கள் பிரார்த்தனை கிளிபில் இணைகிறேன் இங்கு வந்துள்ள அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவற ஸ்ரீ சாய்பாபா அருள் புரிவர்.

  9. இந்த வாரம் பிரார்த்தனைக் கிளப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், நிறைவேறி இறைவன் அருளைப் பெற்று அனைவரும் வாழ்வாங்கு வாழ, மகாப்பெரியவா மற்றும் வாரியார் சுவாமிகளின் பொற்பாதங்களை வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.

  10. சுந்தர் சார் காலை வணக்கம்

    நாம் வணங்கும் தெய்வத்திடம் சமர்ப்பிக்கும் எந்த கோரிக்கைளும் வீண்போனதில்லை… இறைவன் காலடியில் சமர்ப்பிப்போம்…

    நன்றி

  11. திருமதி சுந்தரி வெங்கட்டின் தங்கை கணவர் திரு கண்ணன் வெகு விரைவில் பூரண நலம் பெற மற்ற பிரார்த்தனைகளுடன் பிரார்த்தனை செய்வோம். திரு விஜய் அவர்கள் கூறிய இம்மையில் நன்மை தருவார் கோயில் மிகவும் தொன்மையான ஆலயம். எல்லாம் வல்ல ஈசன் அவர்களைக் காக்கட்டும்

    நன்றி
    உமா

  12. மிக்க நன்றி சுந்தர். உங்களுக்கு உள்ள பல வேலைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு நடுவே இந்த தளத்தை நடத்தி வருகிறீர்கள். இதில் அடுத்தவர்களுக்கும் நேரம் ஒதுக்கி அவர்கள் பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்கள் நலுனுக்காக பிரார்த்தனை பதிவு வாரம் தோறும் அளித்து வருகிறீர்கள். இதற்காகவே உங்கள் பிரச்சனைகள், குறைகள் அனைத்தும் விரைவில் தீரும்.

    குழந்தை செல்வம் வேண்டிய இந்த பிரார்த்தனைக்கு தெய்வ குழந்தைகளே(வள்ளி, லோச்சனா சகோதரிகள் ) தலைமை தாங்குவது எங்கள் பாக்கியம். அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றி. இந்த பதிவில் கோரிக்கை அனுப்பியுள்ள அனைவரின் பிரார்த்தனைகளும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளாலும், மகா பெரியவா அவர்களின் நல்லசியாலும் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    எங்களுக்காக பிரார்த்தனை செய்யும் அனைத்து வாசக நண்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்க்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

  13. கூட்டு பிரதர்னை எப்பொழுதும் பொய்த்தது இல்லை . சுவாமியே சரணம் ஐயப்பா!

  14. பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே

  15. சக்திவேல் அவர்கள் ,குலதெய்வ வழிபாடு,மூதாதையர் வழிபாடு தினமும் காகம் ,நாய்க்கு தங்கள் மூதாதையரை நினைத்து உணவிடுங்கள் .ஒருமுறை ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்த மாடி,அங்கு கடற்கறை மணலில் சிவலிங்கம் பிடித்து வைத்து ,வில்வம்,நறுமண புஷ்பங்கள் தூவி “”சிவாயநம””கூறி தீபம் ஏற்றி வழிபடுங்கள்,ஈசனை துதியுங்கள்..ஒருநாள் கும்பகோணம் அருகில் உள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருகோயில் சென்றும் ஈசனை வழிபடுங்கள் ..அங்கு ஈசனை வழிபட செல்லும் வாசல் வழியே திரும்ப கூடாது ..அங்கு உள்ள அம்பாள் வாசல் வழி வெளியே வாருங்கள் ..அங்கு பிரம்மஹத்தி தோசம் பரிகாரம் பண்ணுங்கள் [இது தினமும் காலையில் 8,9,10 மணிக்கு மட்டுமே செய்வார்கள் ..800 ரூபாய் அலுவலகத்தில் கட்ட வேண்டும் 9443484655]..இதற்கு பின்பு ஒரு அமாவாசை நன்னாளில் காலையில் திருவெண்காடு திருகோயிலில் உள்ள முக்குள[மூன்று தீர்த்த குளம் ] தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டு ,பின்பு அங்கிருந்து மயிலாடுதுறை வழியாக திருவாலங்காடு செல்ல வேண்டும் .திருவாலங்காடு என்று இரண்டு சிவதலங்கள் உள்ளன ….ஓன்று திருவள்ளூர் அருகில் உள்ளது ,..இன்னொரு தலம் திருவாவடுதுறை அருகில் உள்ளது .இதில் காலை 9 மணியளவில் திருவாவடுதுறை சென்று திருவாவடுதுறை ஆதீனம் குரு மஹா சந்நிதானத்திடம் அருள் ஆசி வாங்கி ,பின்பு அருகில் உள்ள திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர், ஒப்பிலா முலைஅம்மை திருகோயில் சென்று வழிபட்டு ,அர்ச்சித்து அங்கு தனி சந்நிதியில் உள்ள புத்திர தியாகேசர்கு அபிசேகம் , அர்ச்சனை செய்து வழிபடவும் …பின்னர் அருகில் உள்ள திருவாலங்காடு[9751549549/9698563577] வடாரண்யேசுவரர் திருகோயில் சென்று அங்குள்ள புத்திர காமேச்வர தீர்த்தத்தில் நீராடி,வடாரண்யேசுவரர்,வண்டார்குழலி அம்மன்[புதிய பிரதிஷ்டை ] ,பழைய அம்மனையும் அபிசேகம் செய்து , வழிபட்டு பின்பு வெளி பிரகாரத்தில் தனி சந்நிதியில் உள்ள புத்திர காமேஸ்வர்ரை அபிசேகம் ,அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் .இதனை அமாவாசையில் செய்வது சிறப்பு …அதுவும் பங்குனி மாதம் அம்மாவாசை நாளில் இத்தல புத்திர காமேச்வர தீர்த்தத்தில் நீராடி வடாரண்யேசுவரர்,வண்டார்குழலி,புத்திர காமேஸ்வர்ரை வழிபட்டால்””மலடியும் குழந்தை பெறுவாள்”” என்கிறது இந்த ஆலய தலபுராணம் ……பின்பு அதே நாள் மாலையில் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருகோயில் சென்று கர்ப்பரட்சாம்பிகை அம்மன் ,மாதவிவநேஸ்வர் [முல்லை வன நாதர் ] வழிபட்டு ,அங்கு கர்ப்பரட்சாம்பிகை அம்மன் சந்நிதியில் தரப்படும் நெய் வாங்கி வந்து தம்பதியர் இருவரும் தினமும் 48 நாட்கள் உண்டு வர வேண்டும்.ஒரே வாரத்தில் நெய்யை சாபிட்டு விட கூடாது ..48 நாட்கள் வீதம் தினமும் சாபிட்டு வரவும் .இதில் பெண்கள் மட்டும் வீட்டுக்கு விலக்கு நாட்களில் இந்த நெய்யை சாப்பிடக்கூடாது .[ஒரே நாளில் 4 திருக்கோயில்களையும் வழிபடலாம் ]……
    பதிகம் 48 நாட்கள் படித்து வரவும் …அசைவம் விலக்குதல் நலம் பயக்கும் .பைரவர் வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் தங்கள் குலம் தழைக்கும் ……

    கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
    பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
    பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
    வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.

    பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
    வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
    வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
    தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

    மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதிஇரவி
    எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
    பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
    விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

    விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
    மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
    தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
    கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.

    வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
    மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
    மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
    ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.

    தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
    ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
    பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
    வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

    சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
    அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
    மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
    முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

    பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
    உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
    கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
    விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

    கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
    ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
    வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்(று)
    உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.

    போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
    பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
    வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டானென்
    றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.

    தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
    விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
    பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
    மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.
    [சம்பந்தர் ]
    திருச்சிற்றம்பலம்
    …………………………………………………………………………;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    திருச்சிற்றம்பலம்

    அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன்
    அதுவும் நான்படப் பாலதொன் றானால்
    பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
    பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன்
    வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்
    மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
    ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

    கட்ட னேன்பிறந் தேன்உனக் காளாய்
    காதற் சங்கிலி காரண மாக
    எட்டி னால்திக ழுந்திரு மூர்த்தி
    என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்
    பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்
    பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை
    ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

    கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே
    கட்டி யேபலர்க் குங்களை கண்ணே
    அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே
    அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்
    சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல
    வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி
    ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

    ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா
    லியாவ ராகிலென் அன்புடை யார்கள்
    தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற்
    சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்
    மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்
    கொள்வ தேகணக் குவழக் காகில்
    ஊன்று கோல்எனக் காவதொன் றருளாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

    வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்
    உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்
    சுழித்த லைப்பட்ட நீரது போலச்
    சுழல்கின் றேன்சுழல் கின்றதென உள்ளம்
    கழித்த லைப்பட்ட நாயது போல
    ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை
    ஒழித்து நீஅரு ளாயின செய்யாய்
    ஒற்றி யூர்எனும் ஊருறை வானே.

    மானை நோக்கியர் கண்வலைப் பட்டு
    வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்
    தேனை ஆடிய கொன்றையி னாய்உன்
    சீல முங்குண முஞ்சிந்தி யாதே
    நானும் இத்தனை வேண்டுவ தடியேன்
    உயிரொ டும்நர கத்தழுந் தாமை
    ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

    மற்றுத் தேவரை நினைந்துனை மறவேன்
    நெஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன்
    பெற்றி ருந்து பெறாதொழி கின்ற
    பேதை யேன்பிழைத் திட்டதை அறியேன்
    முற்றும் நீஎனை முனிந்திட அடியேன்
    கடவ தென்னுனை நான்மற வேனேல்
    உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

    கூடினாய் மலை மங்கையை நினையாய்
    கங்கை ஆயிர முகம்உடை யாளைச்
    சூடி னாயென்று சொல்லிய புக்கால்
    தொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே
    வாடி நீயிருந் தென்செய்தி மனனே
    வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி
    ஊடி னாலினி ஆவதொன் றுண்டே
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

    மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய்
    மைந்த னேமணி யேமண வாளா
    அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
    அழையேற் போகுரு டாஎனத் தரியேன்
    முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்
    முக்க ணாமுறை யோமறை யோதீ
    உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

    ஓதம் வந்துல வுங்கரை தன்மேல்
    ஒற்றி யூருறை செல்வனை நாளும்
    ஞாலந் தான்பர வப்படு கின்ற
    நான்ம றையங்கம் ஓதிய நாவன்
    சீலந் தான்பெரி தும்மிக வல்ல
    சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த
    பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப்
    பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே.[சுந்தர மூர்த்தி சுவாமிகள் ]
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிடநன்
    மதிபோன் மமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
    கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
    நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே.

    சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
    மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
    ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
    கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கின்றனவே.

    பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
    சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
    தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
    கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே.

    பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
    கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
    என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
    உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே.

    எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
    கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே
    தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது
    நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ

    முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
    வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
    சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
    வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ.

    ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
    வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
    மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள
    மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ

    பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
    இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
    அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
    துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ.

    கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
    கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
    பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
    தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே.

    மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
    காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
    ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
    வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ.

    ………………………………[இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்—ஸ்ரீமத் பாம்பன் சுவாமி]
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    1. மிக்க நன்றி ஐயா. தாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து பரிகாரங்களையும் செய்கிறோம். போன மாதம் திருக்கருகாவூர் சென்று வந்து நெய் சாப்பிட்டு வருகிறோம். எல்லாம் ஈசன் அருள் படி நடக்கட்டும்.

  16. பிரார்த்தனை செய்த அனைத்து ராமனின் வடிவங்களே ஆன வாசகர்களுக்கும் மிக்க நன்றி……….நண்பர் சுந்தர்,…..மிக்க ..மிக்க நன்றி……..

    திரு.கண்ணன் அதிவிரைவில் குணமடையவும்,…… திரு.சக்திவேல் – ப்ரியதர்சனி மற்றும் செந்தில்குமார் – ஜெயலக்ஷ்மி தம்பதிகளுக்கு விரைவில் சத் குழ்ந்தை செல்வம் பெற்று ……குழந்தை சாய் சஜீத்துக்கு பார்வை விரைவில் கிடைத்திடவும் …………..ஸ்ரீ ராமனின் அளப்பரும் கருணையாகிய அருளில் நனைந்திட ………….பிரார்த்தித்து …..

    ராம் ராம் ராம்
    பூமிநாதன்

  17. For Bhuminathan

    ஒருமுறை காலையில் திருவையாறு அருகில் உள்ள பெரும்புலியூர்[9443447826]சவுந்தரநாயகி உடனுறை வியாக்ரபுரீஸ்வரர் திருகோயில் சென்று வழிபட்டு ,அங்கு தனி சன்னதியில் உள்ள உமாசிவம் [உமா சமேத மூர்த்தி ]யை அபிசேகம் செய்து ,நெய் தீபம் ஏற்றி வழிபட்டு ,அங்கு உள்ள வாராகி ,பைரவர் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் மீண்டும் தம்பதியர் ஓன்று கூடலாம் .பின்பு அருகில் உள்ள திருக்கூடலூர் [ஆடுதுறை பெருமாள் கோயில்].ஜெகத்ரட்சக பெருமாள் திருகோயில் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும் ..பின்பு மாலையில் ராமபிரான் வழிபட்ட பட்டீஸ்வரம் அருகில் உள்ள திருச்சத்திமுற்றம் பெரியநாயகி உடனுறை தழுவக்குழைந்த நாதர் திருகோயில் சென்று அங்கு உள்ள முறைப்படி வழிபாடு செய்யவும் .ராமபிரானுக்கு சீதை சற்று தள்ளி நிற்பது போலவே, சிலைகள் வடிக்கப்படுவதுண்டு.ஆனால் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் திருக் கோயிலில் மூலஸ்தானத்தில், சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். ராமர் விபண்டகருக்கு காட்சி தந்தபோது, சீதையின் மீதான அன்பினை வெளிப்படுத்தும் விதமாக சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் காட்சி தருகிறார் .எனவே மேல்மருவத்தூர் அருகில் உள்ள மதுராந்தகம் ஏரி காத்த ராமர் திருகோயில் சென்று வழிபடுங்கள் .தொடர்ந்து பைரவர் வழிபாடு செய்து வரவும்..
    …பதிகம்களை படித்து வரவும் ……நல்லது விரைவில் நடைபெறும் …
    திருச்சிற்றம்பலம்

    மாதர்ப் பிறைக்கண்ணி யானை
    மலையான் மகளொடும் பாடிப்
    போதொடு நீர்சுமந் தேத்திப்
    புகுவா ரவர்பின் புகுவேன்
    யாதுஞ் சுவடு படாமல்
    ஐயா றடைகின்ற போது
    காதன் மடப்பிடி யோடுங்
    களிறு வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    போழிளங் கண்ணியி னானைப்
    பூந்துகி லாளொடும் பாடி
    வாழியம் போற்றியென் றேத்தி
    வட்டமிட் டாடா வருவேன்
    ஆழி வலவனின் றேத்தும்
    ஐயா றடைகின்ற போது
    கோழி பெடையொடுங் கூடிக்
    குளிர்ந்து வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    எரிப்பிறைக் கண்ணியி னானை
    யேந்திழை யாளொடும் பாடி
    முரித்த இலயங்க ளிட்டு
    முகமலர்ந் தாடா வருவேன்
    அரித்தொழு கும்வெள் ளருவி
    ஐயா றடைகின்ற போது
    வரிக்குயில் பேடையொ டாடி
    வைகி வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    பிறையிளங் கண்ணியி னானைப்
    பெய்வளை யாளொடும் பாடித்
    துறையிளம் பன்மலர் தூவித்
    தோளைக் குளிரத் தொழுவேன்
    அறையிளம் பூங்குயி லாலும்
    ஐயா றடைகின்ற போது
    சிறையிளம் பேடையொ டாடிச்
    சேவல் வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    ஏடு மதிக்கண்ணி யானை
    ஏந்திழை யாளொடும் பாடிக்
    காடொடு நாடு மலையுங்
    கைதொழு தாடா வருவேன்
    ஆட லமர்ந்துறை கின்ற
    ஐயா றடைகின்ற போது
    பேடை மயிலொடுங் கூடிப்
    பிணைந்து வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    தண்மதிக் கண்ணியி னானைத்
    தையல்நல் லாளொடும் பாடி
    உண்மெலி சிந்தைய னாகி
    உணரா வுருகா வருவேன்
    அண்ண லமர்ந்துறை கின்ற
    ஐயா றடைகின்ற போது
    வண்ணப் பகன்றிலொ டாடி
    வைகி வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    கடிமதிக் கண்ணியி னானைக்
    காரிகை யாலொடும் பாடி
    வடிவொடு வண்ண மிரண்டும்
    வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
    அடியிணை ஆர்க்குங் கழலான்
    ஐயா றடைகின்ற போது
    இடிகுர லன்னதோர் ஏனம்
    இசைந்து வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    விரும்பு மதிக்கண்ணி யானை
    மெல்லிய லாளொடும் பாடிப்
    பெரும்புலர் காலை யெழுந்து
    பெறுமலர் கொய்யா வருவேன்
    அருங்கலம் பொன்மணி யுந்தும்
    ஐயா றடைகின்ற போது
    கருங்கலை பேடையொ டாடிக்
    கலந்து வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    முற்பிறைக் கண்ணியி னானை
    மொய்குழ லாளொடும் பாடிப்
    பற்றிக் கயிறறுக் கில்லேன்
    பாடியும் ஆடா வருவேன்
    அற்றருள் பெற்றுநின் றாரோ
    டையா றடைகின்ற போது
    நற்றுணைப் பேடையொ டாடி
    நாரை வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    திங்கள் மதிக்கண்ணி யானைத்
    தேமொழி யாளொடும் பாடி
    எங்கருள் நல்குங்கொ லெந்தை
    எனக்கினி யென்னா வருவேன்
    அங்கிள மங்கைய ராடும்
    ஐயா ரடைகின்ற போது
    பைங்கிளி பேடையொ டாடிப்
    பறந்து வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.

    வளர்மதிக் கண்ணியி னானை
    வார்குழ லாளொடும் பாடிக்
    களவு படாததோர் காலங்
    காண்பான் கடைக்கணிக் கின்றேன்
    அளவு படாததோ ரன்போ
    டையா றடைகின்ற போது
    இளமண நாகு தழுவி
    ஏறு வருவன கண்டேன்
    கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.[அப்பர்]
    ”””’;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
    பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
    ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
    காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே
    ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே.

    பந்துங் கிளியும் பயிலும் பாவை
    சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
    எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்
    உந்துந் திரைவாய் ஒற்றி யூரே.

    பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
    கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
    தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்
    உகளுந் திரைவாய் ஒற்றி யூரே.

    என்ன தெழிலும் நிறையுங் கவர்வான்
    புன்னை மலரும் புறவிற் றிகழுந்
    தன்னை முன்னம் நினைக்கத் தருவான்
    உன்னப் படுவான் ஒற்றி யூரே.

    பணங்கொள் அரவம் பற்றிப் பரமன்
    கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி
    வணங்கும் இடைமென் மடவார் இட்ட
    உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே.

    படையார் மழுவன் பால்வெண் ணீற்றன்
    விடையார் கொடியன் வேத நாவன்
    அடையார் வினைகள் அறுப்பான் என்னை
    உடையான் உறையும் ஒற்றி யூரே.

    சென்ற புரங்கள் தீயில் வேவ
    வென்ற விகிர்தன் வினையை வீட்ட
    நன்று நல்ல நாதன் நரையே
    றொன்றை உடையான் ஒற்றி யூரே.

    கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
    பலரும் பரவும் பவளப் படியான்
    உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
    உலவுந் திரைவாய் ஒற்றி யூரே.

    பற்றி வரையை எடுத்த அரக்கன்
    இற்று முரிய விரலால் அடர்த்தார்
    எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
    ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே.

    ஒற்றி யூரும் அரவும் பிறையும்
    பற்றி யூரும் பவளச் சடையான்
    ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த
    கற்றுப் பாடக் கழியும் வினையே. [சுந்தரர்]
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
    பத்திமையும் அடிமையையும்
    கைவிடுவான் பாவியேன்
    பொத்தினநோ யதுவிதனைப்
    பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
    முத்தினைமா மணிதன்னை
    வயிரத்தை மூர்க்கனேன்
    எத்தனைநாட் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.

    ஐவணமாம் பகழியுடை
    அடல்மதனன் பொடியாகச்
    செவ்வணமாந் திருநயனம்
    விழிசெய்த சிவமூர்த்தி
    மையணவு கண்டத்து
    வளர்சடைஎம் ஆரமுதை
    எவ்வணம்நான் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.

    சங்கலக்குந் தடங்கடல்வாய்
    விடஞ்சுடவந் தமரர்தொழ
    அங்கலக்கண் தீர்த்துவிடம்
    உண்டுகந்த அம்மானை
    இங்கலக்கும் உடற்பிறந்த
    அறிவிலியேன் செறிவின்றி
    எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.

    இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப்
    பிறந்தயர்வேன் அயராமே
    அங்ஙனம்வந் தெனைஆண்ட
    அருமருந்தென் ஆரமுதை
    வெங்கனல்மா மேனியனை
    மான்மருவுங் கையானை
    எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.

    செப்பரிய அயனொடுமால்
    சிந்தித்துந் தெரிவரிய
    அப்பெரிய திருவினையே
    அறியாதே அருவினையேன்
    ஒப்பரிய குணத்தானை
    இணையிலியை அணைவின்றி
    எப்பரிசு பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.

    வன்னாகம் நாண்வரைவில்
    அங்கிகணை அரிபகழி
    தன்ஆகம் உறவாங்கிப்
    புரம்எரித்த தன்மையனை
    முன்னாக நினையாத
    மூர்க்கனேன் ஆக்கைசுமந்(து)
    என்னாகப் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.

    வன்சயமாய் அடியான்மேல்
    வருங்கூற்றின் உரங்கிழிய
    முன்சயமார் பாதத்தால்
    முனிந்துகந்த மூர்த்திதனை
    மின்செயும்வார் சடையானை
    விடையானை அடைவின்றி
    என்செயநான் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.

    முன்னெறிவா னவர்கூடித்
    தொழுதேத்தும் முழுமுதலை
    அந்நெறியை அமரர்தொழும்
    நாயகனை அடியார்கள்
    செந்நெறியைத் தேவர்குலக்
    கொழுந்தைமறந் திங்ஙனம்நான்
    என்னறிவான் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.

    கற்றுளவான் கனியாய
    கண்ணுதலைக் கருத்தார
    உற்றுளனாம் ஒருவனைமுன்
    இருவர்நினைந் தினிதேத்தப்
    பெற்றுளனாம் பெருமையனைப்
    பெரிதடியேன் கையகன்றிட்(டு)
    எற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.

    ஏழிசையாய் இசைப்பயனாய்
    இன்னமுதாய் என்னுடைய
    தோழனுமாய் யான்செய்யும்
    துரிசுகளுக் குடனாகி
    மாழையொண்கண் பரவையைத்தந்
    தாண்டானை மதியில்லா
    ஏழையேன் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.

    வங்கமலி கடல்நஞ்சை
    வானவர்கள் தாம்உய்ய
    நுங்கிஅமு தவர்க்கருளி
    நொய்யேனைப் பொருட்படுத்துச்
    சங்கிலியோ டெனைப்புணர்த்த
    தத்துவனைச் சழக்கனேன்
    எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
    என்னாரூர் இறைவனையே.

    பேரூரும் மதகரியின்
    உரியானைப் பெரியவர்தம்
    சீரூருந் திருவாரூர்ச்
    சிவன்அடியே திறம்விரும்பி
    ஆரூரன் அடித்தொண்டன்
    அடியன்சொல் அகலிடத்தில்
    ஊரூரன் இவைவல்லார்
    உலகவர்க்கு மேலாரே.[சுந்தரர்]
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
    திருமலர்க் கொன்றைமாலை திளைக்கும்மதி சென்னிவைத்தீர்
    இருமலர்க் கண்ணிதன்னோ டுடனாவது மேற்பதொன்றே
    பெருமலர்ச் சோலைமேகம் உரிஞ்சும்பெருஞ் சாத்தமங்கை
    அருமல ராதிமூர்த்தி அயவந்திய மர்ந்தவனே.

    பொடிதனைப் பூசுமார்பிற் புரிநூலொரு பாற்பொருந்தக்
    கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதே
    கடிமணம் மல்கிநாளுங் கமழும்பொழிற் சாத்தமங்கை
    அடிகள்நக் கன்பரவ அயவந்திய மர்ந்தவனே.

    நூனலந் தங்குமார்பில் நுகர்நீறணிந் தேறதேறி
    மானன நோக்கிதன்னோ டுடனாவது மாண்பதுவே
    தானலங் கொண்டுமேகந் தவழும்பொழிற் சாத்தமங்கை
    ஆனலந் தோய்ந்தஎம்மான் அயவந்திய மர்ந்தவனே.

    மற்றவின் மால்வரையா மதிலெய்துவெண் ணீறுபூசி
    புற்றர வல்குலாளோ டுடனாவதும் பொற்பதுவே
    கற்றவர் சாத்தமங்கை நகர்கைதொழச் செய்தபாவம்
    அற்றவர் நாளுமேத்த அயவந்திய மர்ந்தவனே.

    வெந்தவெண் ணீறுபூசி விடையேறிய வேதகீதன்
    பந்தண வும்விரலாள் உடனாவதும் பாங்கதுவே
    சந்தமா றங்கம்வேதம் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை
    அந்தமாய் ஆதியாகி அயவந்திய மர்ந்தவனே.

    வேதமாய் வேள்வியாகி விளங்கும்பொருள் வீடதாகிச்
    சோதியாய் மங்கைபாகந் நிலைதான்சொல்ல லாவதொன்றே
    சாதியால் மிக்கசீரால் தகுவார்தொழுஞ் சாத்தமங்கை
    ஆதியாய் நின்றபெம்மான் அயவந்திய மர்ந்தவனே.

    இமயமெல் லாம்இரிய மதிலெய்துவெண் ணீறுபூசி
    உமையையோர் பாகம்வைத்த நிலைதானுன்ன லாவதொன்றே
    சமயமா றங்கம்வேதந் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை
    அமையவே றோங்குசீரான் அயவந்திய மர்ந்தவனே.

    பண்ணுலாம் பாடல்வீணை பயில்வானோர் பரமயோகி
    விண்ணுலா மால்வரையான் மகள்பாகமும் வேண்டினையே
    தண்ணிலா வெண்மதியந் தவழும்பொழிற் சாத்தமங்கை
    அண்ணலாய் நின்றஎம்மான் அயவந்திய மர்ந்தவனே.

    பேரெழில் தோளரக்கன் வலிசெற்றதும் பெண்ணோர்பாகம்
    ஈரெழிற் கோலமாகி யுடனாவதும் ஏற்பதொன்றே
    காரெழில் வண்ணனோடு கனகம்மனை யானுங்காணா
    ஆரழல் வண்ணமங்கை அயவந்திய மர்ந்தவனே.

    கங்கையோர் வார்சடைமேல் அடையப்புடை யேகமழும்
    மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல லாவதொன்றே
    சங்கையில் லாமறையோர் அவர்தாந்தொழு சாத்தமங்கை
    அங்கையிற் சென்னிவைத்தாய் அயவந்திய மர்ந்தவனே.

    மறையினார் மல்குகாழித் தமிழ்ஞானசம் பந்தன்மன்னும்
    நிறையினார் நீலநக்கன் நெடுமாநக ரென்றுதொண்டர்
    அறையுமூர் சாத்தமங்கை அயவந்திமே லாய்ந்தபத்தும்
    முறைமையா லேத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே. [சம்பந்தர்]
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
    அய்யா ,தாங்கள் சுந்தர காண்டம் தினமும் பாராயணம் செய்யும் பொழுது இந்த திருமுறைகளையும் பாராயணம் செய்து வாருங்கள் ……அனுதினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்து வரும் தங்களின் திருவடி பணிந்து எழுகிறேன்…

    1. நன்றி …..சகோதரரே! …..ராமனின் கருணையால் விரைவில் சென்று விண்ணப்பம் செய்கிறோம்…..திருமுறைகளையும் பாராயணம் செய்கிறோம் …………ராம ராம் ராம ………

      சுந்தரகாண்டம் பாராயணமும் செய்கிறோம் …… 10 வயது பெண் குழ்ந்தையின் எதிர்காலம் ….தந்தையின் அன்பும் ,,.வழிகாட்டுதல் முக்கியம் ….எனபது நீங்கள் நன்கறிவீர்கள்…..இது மட்டுமே எம்மை தினமும் தூக்கமின்றி தவிக்கவைக்கிறது. எங்கள் இருவருக்கும் இடையில் மகள், தந்தை எனபது விட ……அற்புதமான நட்பு………..2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தபோது ……அப்பா உன்னிடம் பேசினால் அம்மா அடிக்கிறாள் ……என்று அழுதபோது……….அந்த கதறல்கள்…… எம்மால் தூங்க முடியவில்லை……

      இது தவிர இந்த உலகத்தில் வேறு எந்த பிடிப்பும் இல்லை நண்பரே!…நன்கு தெரியும் ….இதுவும் ராமனின் லீலையே! …அவர்களின் உள்ளும், வெளியும் இயக்கி , இயங்குபவனும் அவனே ……எதற்கோ ,,,எதனாலோ …எதென் பொருட்டோ ….

      இது இடைவிடாது ….உள்ளே …தூக்கமில்லாது ….ராமனின் திருவடியை பற்றவும், கதறிடவும்,,,,வைத்துள்ளது.

      ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஓம்!
      பூமிநாதன்

  18. For Sai Sajith

    தஞ்சாவூர் அருகில் உள்ள புன்னை நல்லூர் மாரிஅம்மன் திருகோயில் சென்று தீர்த்தமாடி வழிபட்டு ,வெள்ளியில் கண் மலர் சமர்ப்பித்து வழிபடவும் ..புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில் திருக்காரவாசல்[திருவாரூர் அருகில் உள்ளது,திருவாரூர் திருத்தலம் சென்றும் வழிபடுங்கள் ] கண்ணாயிரநாதர் திருக்கோயில் சென்று அங்கு உள்ள சேஷ தீர்த்தத்தில் நீராடி அங்கு உள்ள முறைப்படி வழிபாடு செய்யவும் .பின்பு வருகிற தை மாதம் அமாவாசை நன்னாளில் அவளிவணல்லூர்[கும்பகோணம் ஆவூர் பஞ்ச பைரவர் திருத்தலம் அருகில் ]சாட்சிநாதர் திருகோயில் சென்று அங்கு திருகோயில் எதிரில் உள்ள சந்திர தீர்த்த நீராடி ,அங்கு உள்ள முறைப்படி வழிபாடு செய்து வரவும் .திருப்பயத்தங்குடி[திருப்பயற்றூர்,திருவாரூர் அருகில் ] நேத்ராம்பிகை உடனுறை திருப்பயற்றுநாதர் திருகோயிலில் வழிபடவும் .இங்குள்ள கருணா தீர்த்தத்தில் மூழ்கி நேத்ராம்பிகையை வழிபட்டால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கி கண்டிப்பாக ஒளி பிறக்கும் …கண் கொடுத்த வனிதம் [திருவாரூர் கொரடாச்சேரிஅருகில் ]நயனவரதேஸ்வரர் திருக்கோயிலில் வழிபடவும் …கண்டிப்பாக வாழ்வில் ஒளி வீசும் ….ஒளிமையான வாழ்வு நம் ஈசன் அருளால் மலரும் ….நம்புங்கள் …தினமும் பைரவர் வழிபாடு செய்து வரவும் …அசைவம் விலக்கி பதிகம்கள் தொடர்ந்து எப்போதும் படித்து வாருங்கள் ..சத்தியமாய் ஒளி காட்டுவார் தன் நெற்றி கண் மூலம் நம் ஈசன் …….

    திருச்சிற்றம்பலம்

    ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
    ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்
    சீலந் தான்பெரி தும்முடை யானைச்
    சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
    ஏல வார்குழ லாள்உமை நங்கை
    என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
    கால காலனைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

    உற்ற வர்க்குத வும்பெரு மானை
    ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
    பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
    பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானை
    அற்ற மில்புக ழாள்உமை நங்கை
    ஆத ரித்து வழிபடப் பெற்ற
    கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

    திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்
    செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்
    கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
    காம னைக்கன லாவிழித் தானை
    வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
    மருவி யேத்தி வழிபடப் பெற்ற
    *பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

    குண்ட லந்திகழ் காதுடை யானைக்
    கூற்று தைத்த கொடுந்தொழி லானை
    வண்டலம் புமலர்க் கொன்றையி னானை
    வாள ராமதி சேர்சடை யானைக்
    கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
    கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற
    கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வறே.

    வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
    வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
    அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
    அரும றையவை அங்கம்வல் லானை
    எல்லை யிற்புக ழாள்உமை நங்கை
    என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
    *நல்ல கம்பனை எங்கள் பிரானை
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

    திங்கள் தங்கிய சடையுடை யானைத்
    தேவ தேவனைச் செழுங்கடல் வளருஞ்
    சங்க வெண்குழைக் காதுடை யானைச்
    சாம வேதம் பெரிதுகப் பானை
    மங்கை நங்கை மலைமகள் கண்டு
    மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
    கங்கை யாளனைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

    விண்ண வர்தொழு தேத்தநின் றானை
    வேதந் தான்விரித் தோதவல் லானை
    நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
    நாளும் நாம்உகக் கின்றபி ரானை
    எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
    என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
    கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

    சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
    சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
    பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
    பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை
    அந்த மில்புக ழாள்உமை நங்கை
    ஆத ரித்து வழிபடப் பெற்ற
    கந்த வார்சடைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

    வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
    வாலி யபுரம் மூன்றெரித் தானை
    நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
    நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்
    பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
    பரவி யேத்தி வழிபடப் பெற்ற
    கரங்கள் எட்டுடைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

    எள்க லின்றி இமையவர் கோனை
    ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
    உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
    வழிபடச் சென்று நின்றவா கண்டு
    வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
    வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட
    *கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

    பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
    பெரிய எம்பெரு மானென்றெப் போதுங்
    கற்ற வர்பர வப்படு வானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
    கொற்ற வன்கம்பன் கூத்தனெம் மானைக்
    குளிர்பொ ழிற்றிரு நாவலா ரூரன்
    நற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார்
    நன்னெ றிஉல கெய்துவர் தாமே.

    திருச்சிற்றம்பலம்
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
    திருச்சிற்றம்பலம்
    மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
    பிறரை வேண்டாதே
    மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
    முகத்தால் மிகவாடி
    ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
    அல்லல் சொன்னக்கால்
    வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
    வாழ்ந்து போதீரே.

    விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
    விரும்பி ஆட்பட்டேன்
    குற்றம் ஓன்றுஞ் செய்த தில்லை
    *கொத்தை ஆக்கினீர்
    எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
    நீரே பழிப்பட்டீர்
    மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
    வாழ்ந்து போதீரே.

    அன்றில் முட்டா தடையுஞ் சோலை
    ஆரூர் அகத்தீரே
    கன்று முட்டி உண்ணச் சுரந்த
    காலி யவைபோல
    என்றும் முட்டாப் பாடும் அடியார்
    தங்கண் காணாது
    குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால்
    வாழ்ந்து போதீரே.

    துருத்தி உறைவீர் பழனம் பதியாச்
    சோற்றுத் துறஆள்வீர்
    இருக்கை திருவா ரூரே உடையீர்
    மனமே எனவேண்டா
    அருத்தி யுடைய அடியார் தங்கள்
    அல்லல் சொன்னக்கால்
    வருத்தி வைத்து மறுமை பணித்தால்
    வாழ்ந்து போதீரே.

    செந்தண் பவளந் திகழுஞ் சோலை
    இதுவோ திருவாரூர்
    எந்தம் அடிகேள் இதுவே ஆமா(று)
    உமக்காட் பட்டோர்க்குச்
    சந்தம் பலவும் பாடும் அடியார்
    தங்கண் காணாது
    வந்தெம் பெருமான் முறையோ வென்றால்
    வாழ்ந்து போதீரே.

    தினைத்தாள் அன்ன செங்கால் நாரை
    சேருந் திருவாரூர்ப்
    புனைத்தார் கொன்றைப் பொன்போல்
    மாலைப் புரிபுன் சடையீரே
    தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து
    தங்கண் காணாது
    மனத்தால் வாடிஅடியார் இருந்தால்
    வாழ்ந்து போதீரே.

    ஆயம் பேடை அடையுஞ் சோலை
    ஆரூர் அகத்தீரே
    ஏயெம் பெருமான் இதுவே ஆமா
    றுமக்காட் பட்டோர்க்கு
    மாயங் காட்டிப் பிறவி காட்டி
    மறவா மனங்காட்டிக்
    காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்
    வாழ்ந்து போதீரே.

    கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்
    கலந்த சொல்லாகி
    இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை
    இகழா தேத்துவோம்
    பழிதான் ஆவ தறியீர் அடிகேள்
    பாடும் பத்தரோம்
    வழிதான் காணா தலமந் திருந்தால்
    வாழ்ந்து போதீரே.

    பேயோ டேனும் பிரிவொன் றின்னா
    தென்பர் பிறரெல்லாங்
    காய்தான் வேண்டிற் கனிதான் அன்றோ
    கருதிக் கொண்டக்கால்
    நாய்தான் போல நடுவே திரிந்தும்
    உமக்காட் பட்டோர்க்கு
    வாய்தான் திறவீர் திருவா ரூரீர்
    வாழ்ந்து போதீரே.

    செருந்தி செம்பொன் மலருஞ் சோலை
    இதுவோ திருவாரூர்
    பொருந்தித் திருமூ லத்தா னம்மே
    இடமாக் கொண்டீரே
    இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை
    இகழா தேத்துவோம்
    வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்
    வாழ்ந்து போதீரே.

    காரூர் கண்டத் தெண்டோள் முக்கண்
    கலைகள் பலவாகி
    ஆரூர்த் திருமூ லத்தா னத்தே
    அடிப்பே ராரூரன்
    பாரூர் அறிய என்கண் கொண்டீர்
    நீரே பழிப்பட்டீர்
    வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்
    வாழ்ந்து போதீரே.
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
    நன்று நாடொறும் நம்வினை போயறும்
    என்று மின்பந் தழைக்க இருக்கலாஞ்
    சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
    துன்று பொற்சடை யானைத் தொழுமினே.

    கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
    பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
    விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
    திருப்ப னாகில் எனக்கிட ரில்லையே.

    வேட்க ளத்துறை வேதியன் எம்மிறை
    ஆக்க ளேறுவர் ஆனைஞ்சு மாடுவர்
    பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
    காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.

    அல்ல லில்லை அருவினை தானில்லை
    மல்கு வெண்பிறை சூடு மணாளனார்
    செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
    வல்ல ராகில் வழியது காண்மினே.

    துன்ப மில்லை துயரில்லை யாமினி
    நம்ப னாகிய நன்மணி கண்டனார்
    என்பொ னாருறை வேட்கள நன்னகர்
    இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே.

    கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
    பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
    சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
    பட்ட வல்வினை யாயின பாறுமே.

    வட்ட மென்முலை யாளுமை பங்கனார்
    எட்டு மொன்றும் இரண்டுமூன் றாயினார்
    சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு
    திட்ட மாகி யிருமட நெஞ்சமே.

    நட்ட மாடிய நம்பனை நாடொறும்
    இட்டத் தாலினி தாக நினைமினோ
    வட்ட வார்முலை யாளுமை பங்கனார்
    சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே.

    வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
    சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
    குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ்
    சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே.

    சேட னாருறை யுஞ்செழு மாமலை
    ஓடி யாங்கெடுத் தான்முடி பத்திற
    வாட வூன்றி மலரடி வாங்கிய
    வேட னாருறை வேட்களஞ் சேர்மினே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *