கண்காட்சி நடைபெறும் நாட்கள் : ஜூலை 8 முதல் 14 வரை.
நேரம் : காலை 9.30 முதல் இரவு 9.00 மணி வரை.
இடம் : ஸ்ரீ ராமச்சந்திர கிரவுண்ட்ஸ், வாசுதேவன் நகர், திருவான்மியூர். சென்னை – 600041. (திருவான்மியூர் பஸ் நிலையம் பின்புறம்).
நம் தள வாசகர்கள் யாவரும் அவசியம் தங்கள் குடும்பத்தினருடன் இந்த கண்காட்சிக்கு செல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
(சென்ற ஆண்டு நடைபெற்ற கண்காட்சியின் புகைப்படங்களை இங்கே அளித்திருக்கிறோம்.)
பார்க்க பார்க்க தெவிட்டாத, அவசியம் பார்க்கவேண்டிய அற்புதம் இந்த கண்காட்சி. காஞ்சி மடம், மந்த்ராலயம், திருமலை-திருப்பதி, காலஹஸ்தி, கொல்லூர் மூகாம்பிகை மற்றும் தமிழகத்திலும் தென்னிந்தியாவிலும் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற ஆலயங்களின் ஸ்டால்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறும். அந்தாந்த கோவில்களின் மூலஸ்தானத்தை போன்றே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட இறை மூர்த்தங்களை கண்டு தரிசிக்கலாம். தவிர, பல்வேறு சித்தர் பீடங்களின் ஸ்டால்களும், மூலிகை பண்ணைகள், கோ-சாலைகள் இவற்றின் ஸ்டால்களும் உண்டு. பிரம்ம குமாரிகள் அமைப்பினர் நிறுவும் 12 ஜோதிர் லிங்கங்களின் ஸ்டாலை காணத் தவறாதீர்கள்.
இந்த ஆண்டிற்கான கண்காட்சி சென்னையில் ஜூலை 8-ந்தேதி தொடங்கி ஒரு வாரகாலம் நடக்கிறது. விழாவையொட்டி 25 சுவாமி விவேகானந்தர் ரதங்கள் ஆயிரம் பள்ளிகளுக்கு செல்கின்றன என்று பிரபல எழுத்தாளர் எஸ்.குருமூர்த்தி சென்னையில் கூறினார்.
இதுகுறித்து பிரபல எழுத்தாளார் எஸ். குருமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆன்மிக சேவை கண்காட்சி
இந்து மதத்திற்கு ஆன்மிக இயக்கங்கள் செய்து வரும் சமுதாய சேவைகள் மக்களுக்கு தெரியாமலே உள்ளது. இதனை மக்களுக்கு தெரியவைப்பதுடன், இந்த இயக்கங்கள் தொடர்ந்து சிறப்பான முறையில் சேவை செய்வதை மையமாக வைத்து இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி வரும் ஜூலை 8-ந்தேதி திருவான்மியூர் ராமச்சந்திரா மருத்துவகல்லூரி மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த ஆன்மிக கண்காட்சி சிறிய அளவில் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் ராமகிருஷ்ண மிஷன், சின்மயா மிஷன், திருப்பதி தேவஸ்தானம் உட்பட 30 ஆன்மிக இயக்கங்கள் கலந்து கொண்டன. தொடர்ந்து 2010-ம் ஆண்டு நடந்த கண்காட்சியில் இயக்கங்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்தது. 2011-ம் ஆண்டு 120-ம், 2012-ம் ஆண்டு 198 ஆக உயர்ந்தது. நடப்பாண்டு 250 இயக்கங்கள் கலந்து கொள்கின்றன. இதற்கான வருகை பதிவு தற்போது நடந்து வருகிறது.
விவேகானந்தர் ரதம்
கடந்த ஆண்டு சுவாமி விவேகானந்தர் 150-வது பிறந்த ஆண்டையொட்டி நம் நாட்டின் பண்பாடு, கலச்சாரம், பாரம்பரியம், நாட்டுபற்று உட்பட பல்வேறு நல்ல குணாதிசயங்கள் பள்ளி மாணவர்களுக்கு சென்று சேரவேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் 10 ரதங்கள் 360 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்தன.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளும் நடத்தப்பட்டன. சுவாமி விவேகானந்தர் போன்று உடையணிந்து 3 ஆயிரம் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
6 நல்ல குணங்கள்
இந்த ஆண்டு புதிய சித்தாந்தமாக, இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள இயற்கை வழிபாடு, பிற ஜீவராசிகளை வழிபடுவது, நதிகளை வழிபடுவது, பெற்றோர்கள், ஆசிரியர்களை தெய்வமாக போற்றுவது உட்பட 6 நல்ல குணங்களை மையமாக வைத்து இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடத்தப்படுகிறது.
முதலாவதாக மரத்தை வழிபடுவதன் மூலம் காடுகளை பேணுதல், 2-வதாக பிற ஜீவராசிகளை காக்கும் கடமை, இதில் கோ-பூஜை, கஜபூஜை, துளசி பூஜைகள் செய்வது, 3-வதாக நதிகள் மற்றும் பூமியை மாசுப்படுத்துவதை தடுக்கும் விதத்தில் பயிற்சி மற்றும் விவசாயிகளின் சிந்தனையை மேம்படுத்துவது, 4-வதாக பெற்றோரையும் ஆசிரியரையும் தெய்வமாக போற்றுவது, 5-வதாக பெண்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் கண்ணி பூஜை, அவர்களுக்கு உரிமையை விட மரியாதை அதிகம் செய்வது, 6-வதாக நாட்டு பற்றை அதிகரிக்கும் விதத்தில் பாரதமாதாவையும், பரம் வீர் சக்கரா விருது பெற்றவர்களையும் ஆராதனை செய்வது ஆகியவற்றை பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.
துளசி ஆராதனை
இதனை அனைத்து ஆன்மிக இயக்கங்களும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படும். குறிப்பாக 3 விதமான பண்புகள் குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்படுகிறது. குறிப்பாக வேலூர் நாராயணி பீடம் சார்பில் வரும் 11-ந்தேதி காலை 10.20 மணிக்கு 1,008 கண்ணி பெண்களை ஆராதனை செய்வது, காஞ்சீபுரம் காஞ்சி மடம் சார்பில் 1,008 துளசி ஆராதனை போன்ற நிகழ்வுகள் நடக்கிறது. 12-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் சார்பில் 1,008 தமிழாசிரியர்கள் ஆராதனை நடக்கிறது.
பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்களை மரியாதை குறைவாக நடத்துதல் போன்ற வக்கிரக குணத்தை மாற்றுவதற்காக இது போன்ற கண்காட்சி நடத்தப்படுகிறது. விழாவையொட்டி 25 சுவாமி விவேகானந்தர் ரதங்கள் இந்த சிந்தனையை பரப்பும் வகையில் 10 நாட்கள் ஆயிரம் பள்ளிகளுக்கு செல்கின்றன.
4 மத தலைவர்கள்
29-ந்தேதி ரதங்கள் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பூஜை செய்யப்பட்டு ஆன்மிக பயணத்தை தொடங்குகின்றன. ஜூலை 5-ந்தேதி ஆயிரம் மாணவர்கள் சுவாமி விவேகானந்தர் போன்று உடையணிந்து மெரினா கடற்கரையில் நடைபயணம் மேற்கொள்கின்றனர். நல்ல பண்புகளை புத்தகங்கள் மூலம் பெறமுடியாது. இதுபோன்ற ஆன்மிக கண்காட்சி மூலமே பெறமுடியும் என்பதால் ஆன்மிக கண்காட்சி நடத்தப்படுகிறது.
ஜூலை 8-ந்தேதி மாலை 6 மணிக்கு இந்து மதம், புத்த மதம், ஜயின மதம், சீக்கிய மதங்களை சேர்ந்த தலைவர்கள் விழாவை தொடங்கி வைக்கின்றனர். 14-ந்தேதி விழா நிறைவு பெறுகிறது.
இந்து ஆன்மிக சேவை கண்காட்சி அமைப்பு குழு தலைவராக வேலூர் வி.ஐ.டி, பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய தலைமையிலான குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நுழைவுக்கட்டணம் இல்லை. அனைத்து பொதுமக்களும் இதில் கலந்து கொள்வதன் மூலம் நல்ல பண்பு நலன்களை பெறமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
=============================================================
Also check :
இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி 2012 – ஒரு பார்வை!
இந்து ஆன்மீக & சேவை கண்காட்சி – பார்வையாளர்களை ஈர்த்த ஆந்திர கோவில்களின் ரதங்கள் – கவரேஜ் 1
=============================================================
பதிவு மிக அருமை. மகா பெரியவா போட்டோ தத்ரூபமாக உள்ளது. ஆன்மிக சேவை கண்காட்சி பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி. நாம் கண்டிப்பாக கண்காட்சியில் கலந்து கொள்வோம்.
நன்றி
உமா
Last year I came to know about this fair thru your website and went along my children.
It is very useful and informative. Definitely all should visit without fail.
As you say, it is indeed a pleasure and boon to watch 12 Jyothirlingas at one place.
அருமை…சுந்தர் சார்..நம் தளம் சார்பாக ஸ்டால் ஓன்று இருந்தால் நன்றாக இருகும் ..சிவாய சிவா
இந்த வருடமே இடம்பெறவேண்டியது. இறையருளால் அடுத்த ஆண்டு நிச்சயம் நம் தளத்தின் ஸ்டால் கண்காட்சியில் இடம்பெறும்.
– சுந்தர்
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல். நிச்சயம் இந்தமுறை கண்காட்சிக்கு செல்வேன். திருவான்மியூரில் இருந்துகொண்டு இதற்கு நான் செல்லவில்லையென்றால் மன்னிப்பே கிடையாது.
ஒரு மாத காலமாக சொந்த அலுவல்கள் காரணமாகவும் எனக்கும் வீட்டில் மற்றவர்களுக்கும் உடல் நலம் சரியில்லாத காரணத்தாலும் என்னுடைய கமெண்டை போட முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து நம் தளத்தின் பதிவுகளை படித்துக்கொண்டு நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டு தொடர்பில்தான் இருக்கிறேன். எத்தனையோ வேலைகளுக்கு நடுவில் என்னை தொடர்புகொண்டு பேசி நலம் விசாரித்த நண்பர் சுந்தருக்கு நன்றி.
Hare Srinivasa. A wonderful, Useful and Fentastic exhibition. Each and every stall is a valuable pokkisham. Mantralayam Stall is very Fine. The information in all Satalls are very very useful. We cannot hava that full such Information, if we actually go that places. Our pranams and Sincere Thanks to the Organisers. Hare Srinivasa.
Hi Good day!
I am raja from Chennai Arumbakkam. I am very interested to participating in Devotional exhibitions, homam and yagam in temple. But i am not aware when and where that happening. Is their any hindu websites to send alert messages or mail for devotional exhibition or yagas, homam. if have means kindly mail that website address for me. thanks.