சென்ற ஆண்டு இந்த கண்காட்சி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 200க்கும் மேற்ப்பட்ட அமைப்புக்கள் பங்கேற்று ஸ்டால்கள் அமைத்திருந்தன.
இந்த ஆண்டு மேற்படி ‘இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி’ பிப்ரவரி 19 முதல் இருந்து 24 வரை மீனம்பாக்கத்தில் உள்ள ஏம.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் 6 நாட்கள் நடைபெறும். நம் தள வாசகர்கள் குடும்பத்தோடு சென்று கண்காட்சியை ரசித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கண்காட்சி எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியவேண்டி சென்ற ஆண்டு எடுத்த புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.
ஆன்மீக அன்பர்களுக்கு பயனளிக்கும் விதமாக பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
சென்ற ஆண்டு அமைக்கப்பட்டிருந்த 12 ஜோதிர் லிங்கங்கள் கண்காட்சியில் ஹை-லைட்டாக அமைந்திருந்தது.
அதே போன்று மற்றொரு ஹை-லைட்டாக காஞ்சி காமகோடி ஸ்டாலில் அமைக்கப்பட்டிருந்த மகா பெரியவாவின் தத்ரூப சிலை பக்தர்களை பரவசப்படுத்தியது.
புத்தக சந்தையைப் போலவே இதற்கும் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை. புத்தகங்கள் நமது அறிவுப் பசியை தீர்கின்றன. இது போன்ற கண்காட்சிகள் நமது ஆன்மாவின் பசியை தீர்க்கும்.
இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சி குறித்து சமீபத்தில் தினத்தந்தியில் வெளியான செய்தியை பின்வருமாறு…
…………………………………………………………………………………………………………………….
தினத்தந்தி – 30/01/2013
சுவாமி விவேகானந்தரை மையப்படுத்தி – சென்னையில் இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி – அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்குகிறது !
சென்னை, ஜன.30-
சுவாமி விவேகானந்தரை மையப்படுத்தி, 5-வது ஆண்டாக, சென்னையில், இந்து ஆன்மிக சேவை கண்காட்சி, அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி தொடங்குகிறது.
ஆன்மிகத்துடன் கூடிய மக்கள் சேவை
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என மக்கள் சேவையை முன்னிறுத்தி, ஸ்ரீராமகிருஷ்ணா மடம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் என பல்வேறு மடங்கள், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை போன்ற அமைப்புகளும், ஆன்மிக பணிகளில் மட்டுமின்றி கல்வி, மருத்துவம், கலாசாரம், பொருளாதார மேம்பாடு என பல்வேறு சமுதாயப்பணிகளையும் நிறைவேற்றி வருகின்றன.
இவற்றின் ஆன்மிக பணிகள் மட்டும் வெளியே தெரிகின்றன. ஆன்மிகத்துக்கு அப்பாற்பட்டு மேற்கொள்ளும் சேவைகள் தெரிவதில்லை. பிற பணிகள் குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுழல்கின்றன. இந்து மடங்கள், அமைப்புகளின் சேவைகளை அனைத்து தரப்பினரும் அறியும் வகையிலும், அந்த சேவையில் நாமும் பங்கேற்க வேண்டும் என்ற உத்வேகம் மக்கள் மத்தியில் வரவேண்டும் என்ற அடிப்படையிலும், இந்த சேவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
6 நாள் கண்காட்சி
இதைக் கருத்தில் கொண்டு, இந்து ஆன்மிகம் மற்றும் சேவை அறக்கட்டளை அமைப்பு, ஆண்டுதோறும் இந்து ஆன்மிக சேவை கண்காட்சியை நடத்தி வருகிறது. 5-வது ஆண்டாக, இந்த கண்காட்சி, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதியில் இருந்து 24-ந் தேதி வரை 6 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.
கண்காட்சிக்காக, புரவலர் உறுப்பினர்கள் குழு ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் தலைவர் கவுதமானந்தா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், இந்து ஆன்மிக மற்றும் சேவை அமைப்புகளைச் சேர்ந்த இறையியல் முன்னோடிகள் இடம் பெற்றுள்ளனர்.
முன்னாள் மத்திய தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி தலைமையில் 20 ஆன்மிக ஈடுபாடு கொண்ட முன்னோடிகள் கொண்ட கண்காட்சி குழு அமைக்கப்பட்டுள்ளது.
200 ஸ்டால்கள்
கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெறுகின்றன. இவற்றில், நாட்டில் உள்ள இந்து மடாலயங்கள், அமைப்புகள் தாங்கள் ஆற்றிவரும் கல்வி, மருத்துவ சேவைகளையும், எதிர்காலத்தில் இந்த சேவையில் அனைவரும் தங்களையும் இணைத்துக்கொள்ளச்செய்யவேண்டும் என்பதையும் விளக்குகிறார்கள்.
அத்துடன், மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
விவேகானந்தரை மையப்படுத்தி
இந்த ஆண்டு, சுவாமி விவேகானந்தரின் 150-வது ஆண்டு பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு கண்காட்சி சுவாமி விவேகானந்தரை மையப்படுத்தி நடத்தப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, சென்னையில் முக்கியமான இடங்களில் 20 அடி உயரத்தில் விவேகானந்தரின் கட்-அவுட்டுகள் வைக்கப்படவுள்ளன. மைதானத்தில், Òசனாதன மரம்Ó அமைக்கப்பட்டு அதில், விவேகானந்தரின் பொன்மொழிகளையும் இடம்பெறச்செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சி மைதானத்தில், தினசரி ஆன்மிக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், திருப்புகழ், திவ்யபிரபந்தம், பன்னிரு திருமுறை பாராயணம் போன்றவையும், பரதநாட்டிய நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10 ரதங்கள்
மாணவர்கள் மத்தியில், விவேகானந்தரின் போதனைகளை விளக்கும் வகையில், 10 சிறப்பு ரதங்கள் உலா வர உள்ளன. இதில், விவேகானந்தரின் சிலையும், அவரின் போதனைகளும் இடம்பெற்றிருக்கும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 10 நாட்கள் ஏறக்குறைய 500 பள்ளிக்கூடங்களுக்கு இந்த ரதங்கள் செல்கின்றன.
விவேகானந்தர் பற்றிய கட்டுரை, பேச்சுப்போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நடைபயணம்
கண்காட்சியின் மற்றொரு அங்கமாக, ஏறக்குறைய 3000 மாணவர்கள் பங்கேற்கும் நடைபயணத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை கண்ணகி சிலையில் இருந்து, விவேகானந்தர் இல்லம் வரை இந்த பயணம் நடைபெறும். இதில் பங்கேற்கும் மாணவர்கள், விவேகானந்தரின் போதனைகள் அடங்கிய அட்டைகளை கைகளில் எடுத்துச்செல்வார்கள்.
…………………………………………………………………………………………………………………….
Full Gallery of 4th Hindu and Service Fair 2012 held @ Vaishnava College, Arumbakkam
[nggallery id=6]
[END]
Lovely Sundar. I believe that this spiritual exhibition will give experiences and learnings to go in the right path.
எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் கண்டிப்பாக சென்று வர வேண்டும்
சென்ற ஆண்டு நான் சென்று இருந்தேன் எல்லா மடாலயங்கள் மற்றும் அமைப்புகள் ,தங்களை முனிலை படுத்துவதில் மட்டும் குறியாக வுள்ளதாக நான் கருத்கிறேன் (புத்தக கண்காட்சி போல்) ஹிந்து மக்களை சரி யாக வலி நடத்த ஒன்று படுத்த யாரும் இல்லை ஒருசில தவிர நீங்கள் ,livingextra ,ஆண்மிககடல் ,சார்பாக எதாவது செய்யலாம்
நண்பரே வழிகாட்ட யாரும் இல்லை என்று எத்தனை நாளைக்குத்தான் சொல்லிக் கொண்டிருப்பது ….. என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்று ஏதேனும் திட்டங்களை சொல்லுங்கள் ஓன்று கூடுவோம் ..செயல் படுத்துவோம் …. தீதும் நன்றும் பிறர் தர வாரா …..