துரைசாமி குருக்கள் அவர்கள் வயதில் பெரியவர் என்பதால் மொபைலில் நெட்டை பார்க்கும் வழக்கமோ அல்லது இணைய வாசமோ அவரிடத்து இல்லை. எனவே பிரார்த்தனை கிளப் பதிவளித்த சென்ற வெள்ளி மதியமே அவரது மகன் திரு.நித்தியானந்தனிடம் (அவரும் குருக்கள் தான்) விபரத்தை சொல்லி, ஞாயிறு மாலை சரியாக 5.30க்கு நான் கோவிலில் இருப்பேன். உங்கள் அப்பாவின் தலைமையில் தான் இந்த வார பிரார்த்தனை என்பதால் அவரையும் குறித்த நேரத்திற்கு வரசொல்லிவிடுங்கள். பிரார்த்தனையில் பங்கேற்றவர்களின் பெயருக்கு அர்ச்சனை செய்யவேண்டும்” என்று விலாவரியாக அனைத்தையும் எடுத்துக்கூறினோம்.
=============================================================
சென்ற வார பிரார்த்தனை கிளப் பதிவுக்கு :
முருகா என்றதும் உருகாதா மனம்… Rightmantra Prayer Club
=============================================================
“நிச்சயம் வரச் சொல்றேன்… நீங்க வந்துடுங்கோ” என்றார். அவருக்கு நன்றி கூறிவிட்டு மொபைலை வைக்கிறோம்… துபாயிலிருந்து மகேஸ்வரி ராதாகிருஷ்ணன் லைனுக்கு வந்தார். பிரார்த்தனை கிளப் பதிவில் தனது கோரிக்கையை வைத்தமைக்கு நன்றி தெரிவித்துவிட்டு, முடிந்தால் தன் தங்கையின் பெயருக்கு அர்ச்சனை செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். அவரது தசாபுத்தி பலனுக்கேற்ப முருகனைத் தான் வழிபடவேண்டும் என்றும் அதே முருகன் கோவிலில் இந்த வார பிரார்த்தனை நடைபெறுவதும், முருகன் கோவில் குருக்கள் ஒருவரே இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பதும் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுப்பதாகவும் சொன்னார்.
நம்பிக்கையே வாழ்க்கை, நம்பிக்கை தான் வாழ்க்கை!
திருமதி.மகேஸ்வரி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிரார்த்தனை இந்த வாரம் தான் வரவேண்டும் என்பது இறைவன் விருப்பம் போல… ஏனெனில் அவர்கள் கோரிக்கை அனுப்பி ஒரு மாதத்திற்கும் மேல் இருக்கும். ஒவ்வொரு முறையும் அவர்கள் பிரார்த்தனை ஏதேதோ காரணங்களினால் வெளியிடப்படாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அது இடம்பெற்றதில் நமக்கும் மகிழ்ச்சி.
மேட்டருக்கு வருகிறோம்…
நேற்று (08/02/2015) ஞாயிறு மாலை நாம் பாலமுருகன் கோவிலுக்கு 5.15 மணிக்கெல்லாம் சென்றுவிட, “சித்த வெயிட் பண்ணுங்கோ… அப்பா வந்துக்கிட்டுருக்கார்” என்று காத்திருக்கச் சொன்னார் நித்யானந்தன்.
சரியாக 5.25 க்கெல்லாம் வந்துவிட்டார் துரைசாமி குருக்கள். அவருக்கு வணக்கம் கூறி வரவேற்றோம்.
யாருக்கு என்ன பிரார்த்தனை செய்யவேண்டும் உள்ளிட்ட விபரங்களை கேட்டார். முழு பதிவையும் நமது மொபைலில் இருந்து படித்துக்காட்டினோம்.
தொடர்ந்து பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்றிருந்த வாசகர்களின் பெயர்களுக்கு சங்கல்பம் செய்யப்பட்டது.
பொதுப் பிரார்த்தனையாக கோவிலில் குருக்களாக தொண்டாற்றுபவர்களின் நலன் குறித்து நாம் அளித்திருந்ததை கேட்டவர்… “ஒரு சங்கதி இருக்கு… அர்ச்சனை முடிஞ்சதும் சொல்றேன்” என்றார்.
முருகனுக்கு அர்ச்சனை நடைபெற்றது. அருமையான தரிசனம். அர்ச்சனை முடிந்ததும் பிரசாதம் பெற்றுக்கொண்டு தட்டில் தட்சணை அளித்ததும் சன்னதியை விட்டு வெளியே வந்தோம். நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
“மகா பெரியவாவை அடிக்கடி தரிசனம் பண்ண காஞ்சிபுரம் போவேன். நிறைய கோவிலுக்கு நான் கும்பாபிஷேகம் பண்ணியிருக்கேன். அப்போல்லாம் பெரியவா கிட்டே போய் பத்திரிகை கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிட்டு வருவேன்.”
“முந்தி ஒரு தரம் ஒரு பெரிய ஹோமம் காஞ்சிபுரத்துல நடந்தது. 27 வேத பிராமணாள் அதில் கலந்துகிட்டு ஹோமம் பண்ணாங்க. அத்தனை பேருக்கும் பெரியவா கையால பிரசாதம் கிடைச்சது. அதுல நானும் ஒருத்தன்” என்று தன் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டார்.
“இப்போ நீங்க பொது பிரார்த்தனையில சொல்லியிருக்குற இந்த விஷயம் (கோவில் அர்ச்சகர்கள் நலன்) பெரியவா தான் வாழ்ந்த காலத்தில நடத்திக் காட்டினார்.”
முந்தி ஒரு தரம் 70 கள்ல நினைக்கிறேன். பெரியவாவை பார்க்க டாட்டா பிர்லானு பெரிய பெரிய கோடீஸ்வரர்களெல்லாம் வருவா. அப்படி ஒரு தரம் யாரோ வந்தப்போ, மடத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் டொனேஷனா கொடுக்க முன்வந்தா. ஒரு சன்னியாசிக்கு எதுக்கு இவ்ளோ பணம்… எனக்கு வேண்டாம்னு அதை வாங்க மறுத்துட்டார் பெரியவா. அவங்க விடாப்பிடியா கொடுத்தே தீருவோம்னு சொல்ல, மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் பக்கத்துல எத்தனையோ கோவில்கள்ல வருமானம் இல்லாம தினசரி பூஜை நடக்குறதில்லே. இந்த பணத்தை பேங்க்ல போட்டு அதுல வர்ற வட்டியை அந்த கோவில்ல பூஜை பண்றாவளுக்கு மாசா மாசம் ஒரு உதவித் தொகை மாதிரி கொடுங்கோ… பூஜையும் தவறாம நடக்கும். ஏழை பிராமணாளுக்கும் வரும்படி வரும்” அப்படின்னு சொன்னா.
சும்மா கிடைக்கிறதேன்னு ஆளாளுக்கு இந்த பணத்தை வாங்கிக்க போட்டி போடுவா. தகுதியுடையவாளுக்குத் தான் இந்த உதவி போய் சேரனும். அதனால, இந்த உதவி வேணும்கிறவாளுக்கு ஒரு சின்ன டெஸ்ட் மாதிரி வைங்கோ. அவாளுக்கு அவங்க பூஜை செய்யக்கூடிய தேவதாக்களுக்குரிய நித்ய பூஜைகள் அனுஷ்டானங்கள் மந்திரங்கள் இதெல்லாம் சரியா தெரியுறதான்னு செக் செய்ங்கோ. டெஸ்ட்ல பாஸ் பண்றவா லிஸ்ட்டை மடத்துக்கு அனுப்புங்கோ. அப்புறம் அந்த பட்டியல் படி மாசா மாசம் அவாளுக்கு அந்த பணத்தை அவா பேருக்கு செக் மூலமா அனுப்புங்கோ! ஒரே அமௌண்டா அனுப்பாம வருஷா வருஷம் அம்பது அம்பது ரூபா ஏத்தி அனுப்புங்கோ!” என்றார்.
(ரூ.250/- அனுப்பப்பட்டு வந்தது என்று துரைசாமி குருக்கள் சொன்னார். அப்போதைய 250 இப்போதைய ரூ.5000/- க்கு சமம்!)
பணத்தை நன்கொடையாக தந்த தொழிலதிபர்களுக்கு அத்தனை சந்தோஷம்.
துரைசாமி குருக்கள் தொடர்ந்தார்….
“அப்படி பெரியவா ஏற்பாட்டின் பேரில் உதவித் தொகை பெற்றவர்களில் நானும் ஒருவன். நான் அப்போ மாயவரம் பெரிய கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பல கோவில்களில் அர்ச்சகராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். குறிப்பாக சிதம்பரம் அருகே ஒரு விளாகம் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவில் ஒன்றில் நான் பூஜை செய்துகொண்டிருந்தேன். காஞ்சி மடம் வைத்த டெஸ்ட்டில் பாஸ் செய்து உதவித் தொகைக்கு தகுதி பெற்றேன். அந்த உதவித் தொகை அரசாங்க சம்பளம் போல எனக்கு டான் டானென்று வந்துவிடும். ஆனால் அதன்பிறகு குடும்பத்தோடு சென்னை வந்து செட்டிலாகிவிட்டேன். அதன் பிறகு அந்த உதவித் தொகையை பெற்றுக்கொள்ளவில்லை. இன்றும் கூட பலருக்கு அந்த உதவித் தொகை மாதாம மாதம் சென்றுகொண்டிருக்கிறது!” என்று கூறி முடித்தார் துரைசாமி குருக்கள்.
மிக அருமையான ஒரு தகவலை பகிர்ந்தமைக்கு நமது நன்றியை திரு.துரைசாமி குருக்கள் அவர்களுக்கு தெரிவித்தோம்.
(பெரியவாவின் இந்த கைங்கரியம் பற்றி விரிவாக எங்கோ படித்ததாக ஞாபகம். மேல் விபரங்கள் எவருக்கேனும் தெரிந்திருந்தால் இங்கே கமெண்ட் செக்ஷனில் பகிரவும். மிக்க நன்றி!)
=============================================================
* நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்பும் அன்பர்கள் பெயர் ராசி நட்சத்திரம் மற்றும் கோத்திரம் ஆகியவற்றை அனுப்புவது மிகவும் நல்லது. ஏதேனும் ஒரு ஆலயத்தில் அந்த நேரம் நாம் இருந்தால் நிச்சயம் சம்பந்தப்பட்டவர்களின் பெயருக்கு அர்ச்சனை செய்வோம். அது அவர்களுக்கு கூடுதல் பலனையளிக்கும்.
* பிப்ரவரி 17 ஆம் தேதி மகா சிவராத்திரி வருவதையொட்டி வரும் ஞாயிறு பிப்ரவரி 15 ஆம் தேதி நமது தளத்தின் சிவராத்திரி சிறப்பு உழவாரப்பணி சென்னை திருமழிசையை அடுத்துள்ள சித்துக்காடு என்னும் ஊரில் உள்ள தாத்திரீஸ்வரர் கோவிலில் நடைபெறும். ஸ்வாதி நட்சத்திர பரிகாரத் தலம் இது. எனவே நம் வாசகர்களில் ஸ்வாதி நட்சத்திரத்துக்காரர்கள் எவரேனும் இருந்தால் நமக்கு அவர்கள் பெயர், ராசி & கோத்திரம் அடங்கிய விபரத்தை மின்னஞ்சல் அனுப்பவும். பணி தொடங்குவதற்கு முன்னர் தாத்திரீஸ்வரருக்கு விஷேட அர்ச்சனை செய்யப்படும்.
* உழவாரப்பணிக்கு எப்படி வருவது, போக்குவரத்து உள்ளிட்ட பிற விபரங்கள் இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும்.
================================================================
Also check from our archives…
பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)
இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)
ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)
சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)
மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)
சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)
இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)
பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)
கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)
குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)
மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)
“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)
வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!
வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)
“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)
காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
=================================================================
‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
================================================================
Also check :
Articles about Sri Ragavendhra Swamigal in Rightmantra.com
முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)
புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)
பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4
கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3
“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2
திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)
குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!
நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?
ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!
உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!
இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!
எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்
முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!
=================================================================
[END]
திரு துரைசாமி குருக்கள் மகா பெரியவாளை பற்றி சொல்வதை படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. மகா பெரியவா அனுக்ரஹம் பெற்ற அவர் நம் பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்று இருப்பது சாதாரண விசயமில்லை எல்லாம் அந்த நடமாடும் தெய்வத்தின் செயல். போன வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் வாசகர்களின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேறும்.
சரியான பேருக்கு உதவித் தொகை செல்ல வேண்டும் என்பதில் மகா பெரியவா எவ்வளவு அழகாக மெனக்கெட்டு இருக்கிறார். பெரியவா … பெரியவா தான்.
அழகிய தகவலை பகிர்ந்த திரு துரைசாமி குருக்க்களுக்கு எனது பணிவான நமஸ்காரம். அதை பதிவாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு நன்றிகள் பல
மகா ……..பெரியவா …….சரணம் …மகா …….பெரியவா…கடாக்ஷம்
நன்றி
உமா வெங்கட்
A trust by name Kachhi Moodoor Archakas Welfare Trust was started as per guidance of Mahaswamigal and it has been extending financial assistance to Archakas of small temples mainly in villages over all these years. Mahaswamigal had desired that everyone should contribute at least one month’s salary once in their life time for this noble cause.
Excellent sir. thanks so much. Shall i have any article reference and trust details so as i will carry a separate article on the same which will enable our readers to help for the same. Btw, i will also search infos regarding this.
குருக்கள் மாமாவிற்கு நமது நமஸ்காரங்கள். மஹா பெரியவா தரிசனம் பெற்ற அனைவரும் மஹா புண்ணியம் செய்தவர்கள்.
குருவன்றி திருவருள் ஏது.
எல்லாரும் நலன் பெற குருவடி பணிவோம் .
தங்கள் பதிவுக்கு நன்றி.
கே. சிவசுப்ரமணியன்.