சிலருக்கு காலம் கடந்த பிறகு ஞானோதயம் வரும். அதில் தவறே இல்லை. சாதனையாளர்கள் என்று நாம் இன்று வியக்கும் பலர் காலம் கடந்த பின்னர் ஞானோதயம் பெற்றவர்கள் தான். அப்படி தெளிவு பெற்று இலக்கை நோக்கி உழைப்பவர்களை உடனிருப்பவர்கள் கேலி செய்வதுண்டு.
உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசிப் பழகவேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள், ப்ரோமோஷனுக்காக கணினி பயிற்சியோ அல்லது அக்கவுண்ட்ஸ் பயிற்சியோ அல்லது வேறு ஏதேனும் பயிற்சியோ பெற விரும்பி அதற்கு செல்பவர்கள் இப்படிப் பலர். இவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை கேலி மற்றும் கிண்டல்.
சாதிக்கத் துடிப்பவர்களுக்கு இறுதியில் அவர்கள் பெரும் வெற்றிக் கனி தான் மனதில் இருக்கவேண்டுமே தவிர, இடையே சந்திக்கும் கேலி கிண்டல்களோ மான அவமானங்களோ அல்ல.
கேலி என்பது கையாலாகாதவர்களின் ஆயுதம். அதை புறக்கணிப்பது ஒன்றே அதை வலுவிழக்கச் செய்யும் முறை.
கேலியை எதிர்கொண்டு சாதித்தது குறித்து ஒரு பிரபலம் தெரிவித்திருக்கும் கருத்தை பாருங்கள். (நம் முகநூல் நண்பர் பழனி என்பவர் பகிர்ந்திருந்தது இது.)
சிரிச்சவங்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்!
என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்கால குடியேற போறதா சொன்னேன்.
எல்லோரும் சிரிச்சாங்க …
ஆனா நான் அமெரிக்காவுல குடியேறினேன் !
என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதா சொன்னேன்.
எல்லோரும் சிரிச்சாங்க …
நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.!
அதன்பிறகு நான் சினிமால பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன்.
எல்லாரும் சிரிச்சாங்க …
நான் ஹாலிவுட்ல ஹீரோவா ஆனேன்.!
சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது
இவன் இனி அவ்வளவுதான் அப்டினு சொல்லி சிரிச்சாங்க …
நான் மீண்டும் மீண்டு வந்தேன்.!
என்னோட 50 வயசுல நான் கலிபோர்னியா கவர்னர் ஆகப்போறதா சொன்னேன்.
எல்லோரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க …
நான் கவர்னர் ஆனேன்.!
இப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நான் திரும்பி பார்த்து சிரிக்கிறேன் …
அவர்கள் எல்லாம் அதே இடத்துல தான் இருக்காங்க… ஆனால் நான் தன்னம்பிக்கையாலும் என்னோட கடின உழைப்பாலையும், நான் நினைச்சதெல்லாம் சாதிக்க முடிந்தது.!
எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த கூடாது.! அது அவர்களின் வியாதி. நம்மை பற்றியும் தன்னபிக்கையின் ஆற்றலை பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது.!
– கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு
==================================================================
Also check :
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78
ஒரு சிறிய பேட்ஜ் செய்த அற்புதம் – MONDAY MORNING SPL 77
மனுஷனா பிறந்துட்டு எதுக்குங்க மாட்டைப் போல உழைக்கணும்? MONDAY MORNING SPL 76
நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75
வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74
கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா? – MONDAY MORNING SPL 72
பல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71
ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70
நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69
திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68
வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66
உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65
முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==================================================================
[END]
Monday Morning ஸ்பெஷல் சூப்பர்.. அடுத்தவர்கள் கேலிக்கு ஆட்பட்டு நம் கொள்கையிலிருந்து வெளியே வந்தால் முன்னேற முடியாது என்பதற்கு ஆர்னால்ட் ஒரு சரியான உதாரணம். கேலி செய்தவர்களை நாம் திரும்பி பார்க்க வைக்க வேண்டும். நம் முன்னேற்றத்திற்கு தன்னம்பிக்கை தான் முதல் படியாக இருக்க வேண்டும்/
//கேலி என்பது கையாலாகாதவர்களின் ஆயுதம் . அதை புறக்கணிக்கப்பது ஒன்றே அதை வலுவிழக்கச் செய்யும் முறை /// சூப்பர்
இலக்குகளை நிர்ணயிப்பதற்கும் அவற்றை அடைவதற்குத் திட்டங்களை உருவாக்குவதற்குமான நம் திறன் தான் வெற்றிக்கான முக்கிய திறமையாகும்.
நன்றி
உமா வெங்கட்
அருமையான பதிவு.
போன பதிவில் சொன்னது போல நாம் கேலி செய்பவர்களைக் கண்டால் செவிடாக மாறிவிட வேண்டும்.
நமது கண் முன் தெரிவது நமது இலக்காக மட்டுமே இருக்க வேண்டும்.
24 மணி நேரமும் நமது சிந்தனை அதைப்பற்றியே இருக்க வேண்டும்.
அருமையான தலைப்பு
ஆணித்தனமான கருத்துக்கள்
கலிகாலத்தில் விடாமுயற்சி, சகிப்புத்தன்மை மற்றும் மனிதாபிமானம் ஆகியவை பல்முனைத்தாக்குதலுக்கு உள்ளாகின்றன
உணர்ச்சிவசப்படாமல் தெளிவான சிந்தனையுடன் லட்சியத்தை நோக்கி செய்யப்படும் பயணம் என்றைக்கும் சிதைந்ததில்லை
தடைகள் இல்ல வாழ்க்கை பயணம் அலைகள் இல்லா கடலைபோன்றது
அந்த தடைகளை படிகளாக்கி வாழ்க்கையில் முன்னேறிய புகழின் உச்சிக்கு சென்ற பலர் அவர்களின் கடந்து வந்த பாதையை அனுபவங்களை நமக்காக விட்டு சென்றுள்ளனர்
வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்
கடமையில் கண்ணாய் இலக்கை எட்டி பிடி – ஊரே உன்னை பற்றி பேசும்
எளிமையான பதிவின் மூலம் அற்புதமான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!!!