Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, October 11, 2024
Please specify the group
Home > Featured > கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73

கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73

print
ந்த ஊர் சுவாமியை தொடர்ந்து மூன்று புத்தாண்டுகள் தரிசனம் செய்தால் கேட்டது கிடைக்கும் என்ற ஐதீகம் உண்டு. எனவே ஒவ்வொரு புத்தாண்டும் அந்த தலத்து இறைவனை தரிசிக்க கூட்டம் முண்டியடிக்கும். எங்கெங்கிருந்தோ மக்கள் படையெடுப்பார்கள். அதே ஊரில் ஒரு மிகப் பெரிய பக்தர் இருந்தார். அனைவர் மீதும் கள்ளங்கபடமற்ற அன்பை செலுத்தும் பண்பாளரான அவர் அடுத்தவர்களுக்கு ஒரு தேவை என்றால் ஓடோடிச் சென்று உதவும் மனப்பான்மை உள்ளவர். அவர் மீது அந்த ஊரில் கோவில் கொண்டுள்ள இறைவனுக்கு தனிப் பாசம் இருந்தது. எனவே கோவிலுக்கு வரும் அந்த பக்தரிடம் அடிக்கடி நேரில் தோன்றி இறைவன் அளவளாவுவதுண்டு.

அன்று புத்தாண்டு தினம். மக்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து இறைவனை தரிசித்தவண்ணம் இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் இப்படி படையெடுக்கும் மக்கள் கூட்டத்தை பார்த்து வரும் அந்த பக்தருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியும் மறுபக்கம் ஒரு சந்தேகமும் ஏற்பட்டது.

Thiruneermalai

அந்த சந்தேகம் என்னவென்றால் ‘பக்தர்கள் அனைவரும் திரண்டு வருகிறார்கள். ஆனால் ஒருவர் முகத்தில் கூட சந்தோஷம் இல்லையே. எதையோ பறிகொடுத்தது போல ஏன் இப்படி இருக்கிறார்கள்? அவர்கள் கேட்பதை இறைவன் தருவதில்லையா? அப்படி தரவில்லை என்றால் அது நம்பிக்கை துரோகம் அல்லவா?’ இப்படி பலவாறு சிந்தித்த அந்த பக்தர் இறைவனிடம் சென்று தனது சந்தேகத்தை கேட்டார். ” உன்னை நாடி வருவோருக்கு ‘வேண்டுவார் வேண்டியது ஈவான் கண்டீர்’ என்று தானே உன்னை போற்றுகிறார்கள். இத்தனை காலை வேளையிலும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் உன்னை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு நீ அவர்கள் கேட்பதை தருவதில்லையா? அது நம்பிக்கை மோசம் ஆகாதா?” கடவுளிடமே நியாயம் கேட்டார் அந்த பக்தர்.

பக்தரின் உள்ளக்கிடக்கையை புரிந்துகொண்ட இறைவன், அவர் முன் தோன்றி…”வத்ஸ…. யார் சொன்னது அவர்கள் கேட்பதை நான் தரவில்லை என்று? நீயே அவர்கள் சிலரிடம் சென்று கேட்டுப்பார். உண்மை புரியும்!” என்றான் சிரித்துக்கொண்டே.

இந்த பக்தரும் தரிசனம் நிறைவு செய்துவிட்டு வெளியே வந்த பக்தர்கள் ஒரு சிலரை அழைத்து, “சென்ற ஆண்டு நீங்கள் வரும்போது இறைவனிடம் என்ன கேட்டீர்கள்? நீங்கள் கோரியதை இறைவன் தந்துவிட்டானா?”

பெரும்பாலனோர் கார், பங்களா, நகை, தோட்டம், துரவு உள்ளிட்ட செல்வத்தை கேட்டதும் அவற்றை இறைவன் தந்துவிட்டதாகவும் கூறினர்.

Thiruvallur

இறைவனிடம் மீண்டும் சென்ற அந்த பக்தர், ‘இதென்ன அதிசயமாயிருக்கிறது? அவர்கள் கேட்டது  அனைத்தையும் நீ தந்துவிட்டது போல தெரிகிறது. அப்படியிருந்தும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகை தெரியவில்லையே ஏன்?” என்று கேட்டார்.

“அது என் தவறல்ல. என்னிடம் பிரார்த்தனை  செய்த யாரும், எனக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும், தேக ஆரோக்கியத்தையும் தா என்று கேட்கவில்லை. வீடு, வாசல், செல்வம் உள்ளிட்டவற்றை தான் கேட்டனர். இவையெல்லாம் கிடைத்தால்  நிம்மதி, சந்தோஷம் கிடைக்கும் என்று அவர்கள் தாங்களாகவே நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த சந்தோஷமோ நிம்மதியோ அவற்றால் கிடைக்கவில்லை. அதற்கு நான் என்ன செய்ய?” என்றாராம்.

எத்தனை உண்மை!

நாம் ஒரு பொருளை இறைவனிடம் கேட்கின்றோம்… அதனால் நமக்கு ஏதேனும் நன்மை உண்டா? நிம்மதி கிடைக்குமா? மகிழ்ச்சி உண்டாகுமா? என்று நமக்கு தெரியாது. ஆனால் ஆண்டவன் ஒருவனுக்கு தான் அதற்கு விடை தெரியும். எனவே என்றும் எப்போதும் இறைவனின் அருளையும், பரிபூரண கடாக்ஷத்தையும், நோயற்ற வாழ்வையும் மட்டுமே கேட்கவேண்டும்.

(இறைவனிடம் கேட்கக்கூடியவை என்று சில இருக்கிறது. அவற்றை மட்டுமே கேட்கவேண்டும். அந்த பட்டியலுக்கு : இறைவனிடம் இவற்றை கேட்கலாமே..!)

இறைவனின் அருள் ஒன்றே போதும் நாம் வாழ்வாங்கு வாழ!

இப்படி சொல்வதானால், மேற்படி உலகியல் சார்ந்த விஷயங்களை நாம் விரும்பக்கூடாது என்று பொருள் அல்ல. வாழ்க்கைக்கு அவையும் தேவை தான். ஆனால், இவை யாவும் நாம் உழைத்து பெறவேண்டியவை. இறைவனிடம் கேட்க்கூடியவை அல்ல. அவனிடம் நாம் கேட்க்கூடியது அவனது ‘அருள்’ ஒன்றே.

இறைவனின் அருள் நமக்கு கிடைக்கும் பட்சத்தில் நமக்கும் நமது கிரகத்திற்கும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தருபவைகள் தானாகவே சித்திக்கும்.

=================================================================

அறிவிப்பு : ஆங்கிலப் புத்தாண்டை நாம் கண் விழ்த்தெல்லாம் கொண்டாடுவது கிடையாது. ஆனால் அன்று, அதிகாலை இறைவனுக்கு அபிஷேகம், அன்னதானம், குன்றத்தூர் முருகன் தரிசனம், பின்னர் பேரம்பாக்கம் நரசிம்மர் கோவில் பயணம், கோ-சம்ரோக்ஷனம் என வழக்கமான அம்சங்கள் உண்டு. மேற்படி கைங்கரியங்களிலும், பயணத்திலும் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். விரிவான பதிவு இன்றோ நாளையோ வெளியிடப்படும்.

Pls check : ஆங்கிலப் புத்தாண்டை இப்படியும் வரவேற்கலாமே!

=================================================================

Also check :

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா? – MONDAY MORNING SPL 72

பல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69

திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66

உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65

முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6

============================================================

[END]

6 thoughts on “கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73

  1. எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்

    மிகவும் அருமையான பதிவு. இறைவனிடம் எதை கேட்க வேண்டும் என்பதை மிக அழகாக தெளிவு படுத்தி பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல

    நன்றி
    உமா வெங்கட்

  2. monday spl வழக்கம் போல அருமை.
    மற்றவர்களுக்கு நான் பணமாகவோ பொருளாகவோ எவ்வளவு கொடுத்தாலும் அவர்களுக்கு போதும் என்று சொல்ல மனம் வராது இன்னும் இன்னும் என்று தான் தோணும். ஆனால் ஒரு வேளை உணவு வாங்கிகொடுத்தால் அவர் வயிறு மட்டுமல்ல மனமும் நிறையும் வாங்கி கொடுத்தவரையும் வாழ்த்தும்.
    அதுபோல இறைவனிடம் நாம் கேட்டு அவர் தாரளமாக எவ்வளவு கொடுத்தாலும் இன்னும் கேட்க தோணும் திருப்தி நமக்கு வராது.
    ஆனால் அவர் சன்னதியில் நின்று அவர் தாழ் பணிந்து எனக்கு உன் அருள் போதும். இந்த பிறவிக்கு என் நன்றி என்று சொல்லி பாருங்கள் நம் மனம் அடையும் அமைதியில் அடுத்த முறை கடவுளை கண் நிறைய பார்க்க மட்டுமே தோணும். எதுவும் கேட்க தோணாது.
    எல்லாமுமான என் கடவுளுக்கு நன்றி.

  3. அருமையான பதிவு.
    குருவருளும் திருவருளும் கிடைத்தாலே நம் வாழ்வில் சகல சௌபாக்யங்களும் கிடைக்குமே!! இதையே வேண்டிப் பெறுவோம்.

    ஓம் நம சிவாய

  4. இறைவனிடம் என்ன வேண்ட வேண்டும் என்ற பதிவு மிக அருமை.தொரட்டும் உங்கள் ஆன்மீக பணி

  5. சீதாப்பிராட்டி சமேத ஸ்ரீ ராமரின் தரிசனம் அருமை…………அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்………..எதுவும் கேட்கத் தோன்றாது நமக்கு…………..எனினும் எதிர்வரும் புத்தாண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டுவோம்……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *