பயிற்சி வகுப்பு வந்த பயிற்சியாளர் அனைவரிடமும் சில நிமிடங்கள் பேசியதும் அவர்களின் பிரச்னைகளை புரிந்துகொண்டார்.
தனது பையிலிருந்து ஒரு சிறிய வெண்மை நிற பட்டுத் துணியை எடுத்து அனைவரிடமும் காட்டினார். பார்ப்பதற்கு பளப்பளவென இருந்த அந்த பட்டுத் துணியில், நடுவே ஒரு கரும்புள்ளி இருந்தது.
“இது என்ன?” என்று அனைவரிடம் கேட்கிறார்.
வேகமாக பதில் ஒருவரிடமிருந்து வந்தது. “இது ஒரு கரும்புள்ளி!”
உடனே வேகமாக ஏனையோரும் அவரை ஆமோதித்தனர். “ஆமா… இது ஒரு கரும்புள்ளி!”
“கரும்புள்ளியை தவிர வேறு ஏதாவது நீங்கள் பார்க்கிறீர்களா??”
ஒரு சில நிமிடங்கள் அமைதி. அனைவரும் மீண்டும் அந்த துணியை பார்க்கிறார்கள்.
“இல்லை…! வெறும் கரும்புள்ளியை தான் காணமுடிகிறது!”
“ஏன் இந்த பட்டுத் துணியை பற்றி எவரும் சொல்லவில்லை?”
“………………..”
“இது போன்ற அழகிய வெண்மையான பட்டுத் துணியை நீங்கள் இதுவரை பார்த்திருக்கிறீர்களா?”
“இல்லை….”
“அப்போது ஏன் பட்டுத் துணியை எவரும் குறிப்பிடவில்லை?”
“………………..”
“நீங்கள் அனைவரும் பட்டுத் துணியை இங்கே பார்த்திருப்பீர்கள்.ஆனால், அதில் கண்ட கரும்புள்ளி உங்கள் பார்வையை மாற்றிவிட்டது.”
“வாழ்க்கையும் இது போலத் தான். நமக்கு கிடைத்துள்ள வரங்களின் மதிப்பு நமக்கு தெரிவதில்லை. அந்த பட்டுத் துணியில் இருந்த சிறு கரும்புள்ளியை போன்று நமக்கு நிகழும் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் பெரிதுபடுத்தி நம்மை சுற்றிலும் நிகழும் பல அற்புதமான விஷயங்களை நாம் பார்க்கத் தவறிவிடுகிறோம். நமது அறிவையும் ஆற்றலையும் கவனத்தையும் ஏமாற்றங்களில் செலவழிக்கிறோம். குறுகிய வட்டத்துடன் பார்க்காமல் நமது பார்வையை சற்று அகலப்படுத்தினால் அந்த கரும்புள்ளியை போல நமது பிரச்சனைகளும் ஏமாற்றங்களும் சிறியதாகி மறைந்துவிடும்.”
அந்த பயிற்சியாளர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை நண்பர்களே. நாம் எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோமோ அதையே அதிகம் ஈர்க்கிறோம். நமது அறிவையும் ஆற்றலையும் ஏமாற்றங்களின் பக்கமே செலுத்தாமல் வெற்றியின் பக்கம் செலுத்தினால், மேலும் மேலும் வெற்றியை அதிர்ஷ்டத்தை ஈர்க்கலாம். தோல்வியை பற்றியும் ஏமாற்றங்ககளை பற்றியுமே சிந்தித்துக்கொண்டிருந்தால் மேலும் மேலும் அதைத் தான் ஈர்ப்பீர்கள்.
மேலோட்டமாக பார்த்தால் இது புரியாது.
நாம் கூறுவதை கடைப்பிடித்து பாருங்கள்.
“எனக்கு எல்லாவற்றிலும் தோல்வி தான்… வெற்றியையே நான் அறியாதவன்…. நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்ட கட்டை… நான் எப்படி வெற்றியை பற்றி சிந்திப்பது?” என்று யாராவது சொன்னீர்கள் என்றால், முழுக்க முழுக்க உங்கள் மனமும் சிந்தனையும் எதிர்மறையாகவே இயங்கிவருகிறது என்று பொருள்.
அப்படிப்பட்டவர்கள் தங்கள் பிரச்சனைகளை, குமுறல்களை சுமார் ஒரு மணிநேரம் மறந்துவிட்டு, தங்களுக்கு கிடைத்துள்ள ஆசிகளை மட்டும் ஒரு பட்டியலிடுங்கள்.
1) நல்ல உடல் 2) அதில் நல்ல கண் பார்வை 3) அப்பா அம்மா மற்றும் சகோதர சகோதரிகள் 4) வசிக்க வீடு 5) பேசும் சக்தி 6) கேட்கும் திறன் 7) அன்பை பொழியும் குழந்தைகள் & மனைவி 8) நமக்கு ஏதாவது ஒன்று என்றால் பதறிப்போகும் நண்பர்கள் இப்படிப் பலப் பல….
பட்டியலிட்டுக்கொண்டே செல்லுங்கள்….. நீங்கள் எழுதியுள்ள பட்டியலில் உள்ள பல பல ஆசிகள் இல்லாமல் இருப்பவர்கள் பலர் இந்த உலகில் உண்டு. பல கோடி உண்டு. ஏன் உங்களைச் சுற்றிலுமே பலர் உண்டு. அவர்களை காட்டிலும் நீங்கள் (BLESSED) ஆசீர்வதிக்கப்பட்டவர் தானே?
COUNT YOUR BLESSINGS; NOT TROUBLES.
BECAUSE WHETHER YOU COUNT BLESSINGS OR TROUBLE IT WILL MULTIPLY.
=================================================================
Also check :
திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68
வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66
உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65
முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==================================================================
[END]
.MONDAY MORNING SPECIAL SUPERB SPECIAL.
//நமது அறிவையும் ஆற்றலையும் ஏமாற்றங்களின் பக்கமே செலுத்தாமல் வெற்றியின் பக்கம் செலுத்தினால், மேலும் மேலும் வெற்றியை அதிர்ஷ்டத்தை ஈர்க்கலாம்.// அருமையான வரிகள்
//COUNT YOUR BLESSINGS; NOT TROUBLES. BECAUSE WHETHER YOU COUNT BLESSINGS OR TROUBLE IT WILL MULTIPLY.//
போன வாரம் சனிகிழமை அலுவலகத்தில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தேன். இந்த பதிவை படித்த உடன் எதையும் தைரியமாகவும் POSITIVE ஆகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறன் . வெரி ENERGETIC ஸ்பெஷல்
நன்றிகள் பல
உமா
சிறு கரும்புள்ளியை போல சில சிறிய விசயங்கள் வாழ்கையின் போக்கை மாற்றிவிடுகிறது… நீங்கள் சொன்னது போல நல்ல விசயங்களை பட்டியலிட்டால் இவை மிக குறைவு…
இறை வழிபாடு, நம்பிக்கை, பொறுமை.. இவைகளே நம்மை மாற்ற உதவும்..
Kindly give me your contact no sir
கார்த்திகை திங்கள் முதல் நாளில் அருமையான கருத்து.
பொருளும் செல்வமும் தான் சந்தோசம் தரும் என்று எண்ணுபவர்களுக்கு , கீழ்க்கண்டவற்றில் கிடைக்கும் சுகம் தெரியாது
“1) நல்ல உடல் 2) அதில் நல்ல கண் பார்வை 3) அப்பா அம்மா மற்றும் சகோதர சகோதரிகள் 4) வசிக்க வீடு 5) பேசும் சக்தி 6) கேட்கும் திறன் 7) அன்பை பொழியும் குழந்தைகள் & மனைவி 8) நமக்கு ஏதாவது ஒன்று என்றால் பதறிப்போகும் நண்பர்கள் இப்படிப் பலப் பல…. -”
குறையை குறையாக கருதாமல், இருக்கும் நிறையை நினைத்தாள் நம் வாழ்வு மேலும் சிறக்கும்
வாழ்க நலமுடன்
கண்ணன்
Hello Sundar sir,
Thanks very much for the Monday Morning Special post.
Be Good Do Good… Think Positive…..
very nice
திங்கள் அன்று காலை நல்லதொரு புத்துணர்ச்சியுடனும் மேலும் தங்களின் ஆசிர்வததுடனும் பிறக்கிறது.
உண்மையிலேயே நமக்கு கடவுள் நிறைய ஆசிர்வாதம் செய்துள்ளார்.
நாம் நம்மால் பார்க்கப்படும் அந்த கரும்புள்ளியை மட்டும் பார்க்காமல் நமக்கு கிடைத்துள்ள பல நல்லவற்றை மட்டும் பார்த்து சந்தோஷ பட வேண்டும்
நன்றி
அருமை
உண்மை. நமது எண்ணங்களே நமது வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கிறது.
ஓய்வு நேரத்தில் இந்த “ரகசியம்” The Secret ஆங்கில படத்தின் தமிழாக்கத்தை பாருங்கள். (1:30 மணி நேர படம்). மிகவும் உபயோகமாக இருக்கும்.
https://www.youtube.com/watch?v=fhB_D2qJt3w
Nice article.
Quotes from “The Secret”:
• The law of attraction says like attracts like, so when you think a thought, you are also attracting like thoughts to you.
• Thoughts are magnetic, and thoughts have a frequency. As you think thoughts, they are sent out into the Universe, and they magnetically attract all like things that are on the same frequency. Everything sent out returns to the source—you.
• You are like a human transmission tower, transmitting a frequency with your thoughts. If you want to change anything in your life, change the frequency by changing your thoughts.
• Your current thoughts are creating your future life. What you think about the most or focus on the most will appear as your life.
• Your thoughts become things.
I have applied this. Very very effective comment.
வணக்கம்…….
நாமெல்லாம் எவ்வளவு ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் என்று உணர முடிகிறது………..இருக்கும் நிறைகளை மறந்து குறைகளை எண்ணிக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம்…………நன்றிகள் பல………..
ஒரு அருமையான பதிவு .திங்கள் காலையில் இது போன்ற பதிவு புத்துணர்ச்சி அளிக்கிறது .
நன்றி
வெங்கடேஷ் பாபு
இந்த கதையை ஏற்கனவே படித்து இருந்தாலும், மறுபடியும் படிப்பதில் மகிழ்ச்சி.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் சொல்லியதை போல “தீதும் நன்றும் பிறர் தர வாரா”.
நமக்கு வரும் அனைத்திற்கும் நாம் மட்டுமே பொறுப்பு.
நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.
கடவுள் நமக்கு கேட்காமலேயே அனைத்தையும் கொடுத்து உள்ளார்.
கஷ்டம் வரும் போது மட்டும் கடவுளிடம் சண்டை போடும் நாம், மகிழ்ச்சியாக உள்ள தருணங்களில் அவரை நினைக்கிறோமா?
நாம் மற்றவருக்கு ஏதாவது சிறு உதவி செய்தாலும் கூட மறக்காமல் நன்றியை எதிர் பார்க்கிறோம்.
ஆனால் கடவுள் நமக்கு எண்ணிலடங்காத நல்லவற்றைக் கொடுத்தாலும் பல சமயங்களில் நாம் நன்றி மறந்தவர்களாக இருக்கிறோம்
“கொடுத்ததற்கு ஒரு முறையும், கொடுக்காததற்கு ஆயிரம் முறையும் நன்றிகள் சொல்வோம்”.
தினமும் நமது கோரிக்கைகளுக்கு மட்டும் கடவுளிடம் வேண்டாமல், கொடுத்தவைகளுக்காக மறக்காமல் சிறிது நேரம் செலவிட்டு நன்றி சொல்வோம்.
Thank u for giving this type of positive thinking thoughts to get more energy
சுந்தர்ஜி
இன்றுமுதல் நலதொரு ஆரம்பம். நம் வாழ்கை சீராக சுந்தர்ஜி மிகவும் தேடி தேடி ஒவ்வருபதிவாக பட்டை தீட்டிய வைரம் போல் அருமையாக பதிவளிகிறார்
நன்றி
Excellent article
What we think we become
Being negative all time ,only negative things will happen.
To break all these we have to involve our selves with
Mirror exercise
Meditation
Motivational books
Secret videos
Law of Attraction is very powerful
I have applied these things and I can find myself different.
Thanks
V HARISH
Monday morning special பதிவு தன்னம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. நன்றி.
///எனக்கு எல்லாவற்றிலும் தோல்வி தான்… வெற்றியையே நான் அறியாதவன்…. நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்ட கட்டை… நான் எப்படி வெற்றியை பற்றி சிந்திப்பது?” என்று யாராவது சொன்னீர்கள் என்றால், முழுக்க முழுக்க உங்கள் மனமும் சிந்தனையும் எதிர்மறையாகவே இயங்கிவருகிறது என்று பொருள்///.
நாம் எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோமோ அதையே அதிகம் ஈர்க்கிறோம். நமது அறிவையும் ஆற்றலையும் ஏமாற்றங்களின் பக்கமே செலுத்தாமல் வெற்றியின் பக்கம் செலுத்தினால், மேலும் மேலும் வெற்றியை அதிர்ஷ்டத்தை ஈர்க்கலாம். தோல்வியை பற்றியும் ஏமாற்றங்ககளை பற்றியுமே சிந்தித்துக்கொண்டிருந்தால் – மேலும் மேலும் அதைத் தான் ஈர்ப்பீர்கள்.
– சிந்திக்க வைத்துவிட்டீர்கள். நன்றி..
mmm simply superb…
சுந்தர் சார், உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்ல கருத்துக்களை உள்ளடக்கி உள்ளது. மிக அருமையான பதிவுகள். வாழ்த்துக்கள் சுந்தர் சார்.
ஜெயகுமார்
துன்பங்களை பற்றியே இதுவரை அதிகம் சிந்தித்திருக்கிறேனே தவிர வரங்களை அல்ல என்பது இப்போது புரிகிறது.
உண்மை தான்… உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்று கவியரசர் எழுதிய வரிகள் எத்தனை எத்தனை உண்மை.
நல்லதொரு பதிவுக்கு நன்றி.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
Wonderful post. yes, what we focus on, will get enlarged and manifest itself into reality.
Happy to see the people who know secret film/book and got benefited out of it.
More people should know about it, and should make their lives so happy.
Thanks so much for the great post.
**
**Chitti**.
Hello Sundar,
Very Good and Positive thinking article. After reading the article I get same positive energy, when I read “Ennangal” Book by M.S.Swaminathan. Great work, keep continuing.
With Regards,
S.Karthik
Sir,
Very very excellent article. Thank you very much