Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74

வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74

print
“வாழ்க்கையில் உயர என்ன வழி?” என்று ஆசிரியரிடம் கேட்டனர் மாணவர்கள்.

“இரு கோடுகள் தத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டால் வாழ்க்கையில் உயரலாம்” என்றார் ஆசிரியர்.

“இரு கோடுகள் தத்துவமா? அதை கொஞ்சம் விளக்குங்களேன்” என்றான் ஒரு மாணவன் எழுந்து.

கரும்பலகையில் கோடு ஒன்றைப் போட்ட அவர், “இதன் அருகே சிறிய கோடு போட்டால் இந்தக் கோடு பெரிதாகி விடும். பெரிய கோடு போட்டால் முன்னமே உள்ள கோடு சிறியதாகி விடும். இதுதான் அதன் விளக்கம்” என்றார்.

“இதைப் புரிந்து கொள்வதால் வாழ்க்கையில் எப்படி உயர முடியும்?” என்றான் மாணவர்களில் ஒருவன்.

Black board

“நம்மை விடச் சிறியவர்களை பார்க்கும்போது இவர்களை விட இவ்வளவு உயர்ந்த நிலை அடைந்து உள்ளோமே என்று பெருமை கொள்ள வேண்டும்.நம்மை விட உயர்ந்தவர்களை பார்க்கும்போது இவர்களைப் போல உயர்ந்த நிலையை நாம் எப்பொழுது அடையப் போகிறோம்? என்று எண்ண வேண்டும் என்றார்.

ஆம்! உயர்ந்ததற்காகப் பெருமையும் இன்னும் உயர்வதற்கான முயற்சியும் சேரும் போது உங்கள் வாழ்க்கையின் தரம் உயர்ந்து கொண்டே போகும் என்றார் ஆசிரியர்.

உயர்ந்ததற்கான பெருமை & மேலும் உயர்வதற்கான முயற்சி இவை இரண்டும் எப்போதும் இருக்கட்டும்! இது தான் வாழ்க்கையில் உயர வழி.

மனதை கெடுக்கவும், மழுங்கடிக்கச் செய்யவும், சினிமா போதையை தரவும் இணையத்தில் எத்தனையோ விஷயங்கள் இருக்கும் சூழலில், இந்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருந்து நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் தேடல் உள்ள ஒரு தேனீ தான். நிச்சயம் உங்கள் வட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரைவிட நீங்கள் உயர்ந்தவர் தான். அந்த பெருமிதம் இருக்கட்டும். அதே சமயம், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சாதித்திருப்பவர்களை பார்த்து உங்களை உங்கள் உத்வேகத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். உங்களை நீங்கள் நம்பவேண்டும். உங்கள் திறமை, ஆற்றல் இவைகள் மீது உங்களுக்கு நம்பிக்கையும் மரியாதையும் இருக்கவேண்டும். ஒ.கே.?

பிறகென்ன…. 2015 ஆம் ஆண்டு உங்கள் இலட்சியங்கள் அனைத்தும் நிறைவேறும் ஆண்டாக நிச்சயம் இருக்கும்!

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

=================================================================

Also check :

கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா? – MONDAY MORNING SPL 72

பல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69

திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66

உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65

முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6

============================================================

[END]

11 thoughts on “வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74

  1. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

  2. இந்தவருடத்தின் முதல் monday morning ஸ்பெஷல் as usual சுபெர்ப்.

    //இந்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருந்து நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் தேடல் உள்ள ஒரு தேனீ தான். நிச்சயம் உங்கள் வட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரைவிட நீங்கள் உயர்ந்தவர் தான். அந்த பெருமிதம் இருக்கட்டும்// 100% உண்மை .

    வாழ்கையில் உயரவேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டு சூப்பர்.

    2015ம் ஆண்டின் இலட்சியங்கள் அனைவருக்கும் நிறைவேற வாழ்த்துக்கள்.

    “DO SOMETHING TODAY THAT YOUR FUTURE SELF WILL THANK YOU FOR’’

    “IF YOU CAN DREAM IT, YOU CAN DO IT”

    நன்றி
    உமா வெங்கட்

  3. sir
    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!
    2015 ஆம் ஆண்டு உங்கள் இலட்சியங்கள் அனைத்தும் நிறைவேறும் ஆண்டாக நிச்சயம் இருக்கும்! -selvi

  4. Thank U Sundar Sir. First Monday Special of 2015 is very good. With 2 simple lines it has been explained. Really superb.

    Happy New Year 2015.

    Usha

  5. தேடல் உள்ள தேனிக்களுக்காக தான் நம் rightmantra தான்.
    உங்கள் வாசகர்கள் நாங்கள் என்பதில் நாங்கள் 200% பெருமிதம் கொள்கிறோம் .
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *