காலை ஊர்வலம் முடித்துவிட்டு வந்து அமர்ந்தால் மாலை முடியும் வரை எழுந்திருக்காமல் அவர் பாடும் விதம் பிரம்மிப்பூட்டக்கூடியது. தேனினும் இனிய குரலில் நம்மை கட்டிப் போட்டுவிடுவார்.
குடியாத்தத்தில் ஆரம்பித்து பழனி, சீர்காழி, அரும்பாக்கம் என இதுவரை தாமோதரன் ஐயா அவர்களின் முற்றோதலில் நான்கு முறை கலந்துகொள்ளும் பெரும் பாக்கியம் நமக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
“தாமோதரன் ஐயா அவர்களின் முற்றோதல் எங்கும் நடந்தாலும் தளத்தில் வெளியிட்டு தெரியப்படுத்துங்கள். அந்தந்த பகுதிகளில் உள்ள நம் வாசகர்கள் கலந்துகொள்ள எதுவாக இருக்கும்!” என்று நம்மிடம் நம் வாசகர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.
இதோ நவம்பர் மாதம் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரிலும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி மதுரையிலும் தாமோதரன் ஐயாவின் திருவாசகம் முற்றோதல் நடைபெறவுள்ளது.
மேற்படி இரண்டு முற்றோதல் நிகழ்சிகளின் அழைப்பிதழும் கீழே தனித் தனியாக இணைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள நம் வாசகர்கள் பங்கேற்று ஈசனருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வெண்ணந்தூரில் நடைபெறும் முற்றோதலை அனைத்து சிவனடியார் திருக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது.
மதுரை முற்றோதலின் சிறப்பு!
மதுரை முற்றோதலை ‘குறள்நெறிச் செல்வர்’ – மதுரை டால்பின் பள்ளிக் குழுமத்தின் தாளாளர் திரு.அரு.ராமனாதன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். இடையில் உடல் நலம் குன்றியிருந்த பழனி அன்னை ராஜம்மாள் நலம் பெற்று மீண்டும் முற்றோதல் வைபவத்தில் திரு.தாமோதரன் ஐயாவுடன் பங்கேற்க உள்ளார்கள் என்பது தான் இதன் சிறப்பு.
முற்றோதலில் பங்கேற்க வருபவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முற்றோதல் நடைபெறும் இடம், நேரம் உள்ளிட்டவை கீழே இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் விரிவாக அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களில் பகிர்ந்துகொள்ளுங்கள்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
நவம்பர் 10, வெண்ணந்தூர் (நாமக்கல் மாவட்டம்)
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
டிசம்பர் 22, ஞாயிறு மதுரை
===================================================
நமது மதுரை பயணம்!
22/12/2013 அன்று மதுரையில் திரு.டால்பின் ராமநாதன் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் தாமோதரன் ஐயாவின் முற்றோதலில் ஈசனருளால் நாம் கலந்துகொள்ளவிருக்கிறோம். இதற்காக ஒரு நாள் முன்னதாக மதுரை செல்ல திட்டமிட்டிருக்கிறோம். அதாவது 20 ஆம் தேதி இரவு சென்னையிலருந்து கிளம்பி மறுநாள் (21 ஆம் தேதி) மதுரை அடைந்து, ஒரு நாள் முழுக்க செலவிட்டு அனைத்து திருக்கோவில்களையும் தரிசித்துவிட்டு, அதற்கடுத்த நாள் 22/12/2013 அன்று முற்றோதலில் கலந்துகொள்ளவிருக்கிறோம். திங்கள் காலை சென்னை திரும்புவதாக திட்டம்.
வாசகர்கள் மற்றும் நண்பர்கள் எவரேனும் நம்முடன் மதுரை வர விரும்பினால் உடனடியாக தொடர்புகொள்ளவும்.
டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டுமாதலால் நமக்கு விரைந்து தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தேவையற்ற சங்கடங்களை தவிர்க்க, தீர்க்கமான ஒரு முடிவு எடுத்துவிட்டு பின்னர் நமக்கு தகவல் தெரிவிக்கவும். அக்டோபர் 31க்குள் உங்கள் விருப்பத்தை எமக்கு தெரிவித்துவிடுங்கள்.
நன்றி!!
சுந்தர்
www.rightmantra.com
9840169215
===================================================
Also check :
அன்னையுடன் சில மணித்துளிகள் – குடியாத்தம் திருவாசகம் முற்றோதல் விழா அனுபவம்!
thiru palani thuraviyammal nalam petrathu ,magilchi…
சுந்தர்,
உங்கள் தயவால் அரும்பாக்கத்தில் நடந்த முற்றோதலில் பங்கேற்று பரவசம் அடைந்தேன் …. மறக்க முடியாத அனுபவம் .. மேலும் இப்படி முற்றோதல் களில் பங்கேற்க இறைவன் எனக்கு arul புரிய வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
Dear சுந்தர்ஜி
மிகவும் சந்தோஷமான செய்தி. மதுரைக்கு உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நம் தள வாசகர்கள் அனைவரும் இணைந்து திருவாசக அமுதம் பருகுவோம் மற்றும் நல்லோர்களின் ஆசியை பெறுவோம்