ஒரு காலத்தில் பிளாட்பாரத்தில் பொம்மைகளை விற்பனை செய்து வந்த அவர்கள் இன்று நகரின் பிரதான பகுதியில் தனியாக ஷோ-ரூம் வைக்குமளவிற்கு முன்னேறியிருக்கிறார்கள். தவிர அவர்களுக்கென்று தனியாக உற்பத்திக் கூடமும் உண்டு. பல நாடுகளுக்கு தங்கள் பொம்மைகளை ஏற்றுமதியும் செய்துவருகிறார்கள்.
அவர்களுக்கு போதும் போதும் என்கிற அளவிற்கு வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தபடியால் அவர்களிடம் வேலை செய்து வரும் பணியாளர்கள் முதல் விற்பனையாளர்கள் வரை அனைவரும் மிக சந்தோஷமாக இருந்தார்கள். வியாபாரமும் மிக மிக நல்ல முறையில் நடைபெற்று வந்தது. மக்களுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இவர்கள் என்றில்லை இவர்கள் தந்தை, பாட்டன், முப்பாட்டன் அனைவருமே இப்படித் தான் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். காரணம், மிக மிக லாபகரமான தொழிலை அவர்கள் நடத்தி வருவதாலேயே என்று கருதினார்கள்.
இதற்கு சான்றளிப்பது போல, அந்த நிறுவனத்தின் முதலாளியாக இருப்பவர்களுக்கு ஒரு வழக்கம் இருந்தது. “எங்கள் வியாபாரம் அமோகமாக இருக்கிறது. கடவுளுக்கு நன்றி!” என்று ஒரு பெரிய உலோக பட்டயத்தில் பொறித்து அதை ஒரு பேட்ஜ் போல சட்டையில் மாட்டியிருப்பார்கள். காலம்காலமாக அந்த கடையில் முதலாளியாக இருப்பவர்களுக்கு இந்த வழக்கம் இருந்து வந்தது. அவர்கள் கூறுவது போல வியாபாரமும் வர்த்தகமும் பொதுவாக நன்றாகத் தான் இருக்கும். ஆனால் எல்லா வியாபாரத்தைப் போலவும், இவர்களுக்கும் அவ்வப்போது சிறிது காலம் டல்லாக இருப்பதுண்டு. பொருளாதார மந்தநிலை (RECESSION), மின் வெட்டு போன்ற எதிர்பாரா சூழ்நிலைகள் இவர்கள் வியாபாரத்தை மட்டும் விட்டுவைக்குமா என்ன? ஆனால் சூழ்நிலை எப்படி இருந்தாலும் வியாபாரம் எப்படி இருந்தாலும் “எங்கள் வியாபாரம் அமோகமாக இருக்கிறது. கடவுளுக்கு நன்றி!” என்று கூறும் அந்த பேட்ஜை மட்டும் அந்த நிறுவனத்தின் முதலாளி கழட்டவே மாட்டார்.
அந்த பேட்ஜுடன் அந்த முதலாளியை பார்க்கும்போது சில சமயம் எவரேனும் கமெண்ட் அடிப்பதுண்டு.
“என்ன பெரிசா வியாபாரம் அமோகமா இருக்கு??”
“என்ன சார் அமோகமா இருக்கு வியாபாரம்னு சொல்றீங்க. ஆனா எனக்கு பிசினஸ்ல சரியான அடி சார். அஞ்சு லட்சம் லாஸ்.”
“அதெப்படி சார் உங்க பிசினஸ் மட்டும் எப்பவுமே அமோகாமா இருக்கு. அந்த ரகசியத்தை எங்களக்கு சொல்லுங்களேன்…”
இப்படி பலர் அவரிடம் கேட்பதுண்டு. இப்படி ஒரு நல்ல உரையாடல்களை (customer interaction) துவக்குவதில் அந்த பேட்ஜ் பெரும் பங்கு வகிப்பதுண்டு.
அந்த மாதிரி நேரங்களில், தன் வியாபாரத்தின் பாஸிட்டிவ்வான அனைத்து அம்சங்களையும் அவர் பட்டியலிடுவார்.
1) ஒவ்வொரு நாளும் புதுப் புது மனிதர்களை பார்ப்பது பேசுவது அவர்கள் அறிமுகம் கிடைப்பது.
2) புதுப் புது சவால்களையும் அனுபவங்களையும் எதிர்கொள்ள பணியார்களை தயார் செய்வது.
3) பணியாளர்களுடன் சிரித்து பேசியபடி கழிக்கும் ஒரு நல்ல சூழல்
4) கஷ்டமான காலகட்டங்களில் வியாபாரத்தை பெருக்க புதுப் புது உத்திகளை கற்றுகொள்வது
இப்படி பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ஒரு கஸ்டமர் எவ்வளவு தான் மோசமான மூடில் உள்ளே வந்தாலும் கடையில் சிறிது நேரம் நேரத்தை செலவிட்டுவிட்டு அந்த உரிமையாளரிடம் கொஞ்சம் பேசிவிட்டு வெளியே வந்தால் வரும்போது புதிதாக சார்ஜ் செய்யப்பட்டது போல உற்சாகத்துடன் வெளியே வருவார்.
ஒரு நாள் கஸ்டமர் கேட்டேவிட்டார். “உங்கள் பரம்பரையின் இந்த வெற்றிக்கு பின்னால் இருப்பது எது? நீங்கள் அணிந்திருக்கும் இந்த பேட்ஜா? அல்லது உங்கள் அணுகுமுறையா?”
ஒரு கணம் புன்னகை சிந்திய உரிமையாளர் சொன்னார் : “அந்த பேட்ஜ் தான் முதல் காரணம். அமோக வெற்றி என்பது அதற்கு பின்னால் தானாக வந்துவிட்டது! முதலில் நாங்கள் சொல்கிறோம். பிறகு ஊரே அதை சொல்கிறது. வேறு ஒன்றுமில்லை.” என்றார்.
வியாபரத்திலோ தனிப்பட்ட முறையிலோ என்ன நடந்தாலும் சரி… ஒரு நேர்மறையான எண்ணத்துடனேயே எதையும் அணுக வேண்டும்.
ஒரு வெற்றிகரமான நிறுவனத்திலோ வியாபாரத்திலோ அங்கமாக இருப்பது என்பது கடைசீயாக கிடைப்பது. ஆனால் முதலில் தேவை என்ன தெரியுமா? ‘சரியான பாஸிட்டிவ்வான அணுகுமுறை!’
நேர்மறையான எண்ணங்களை நீங்கள் விதைக்க ஆரம்பித்தால் அது உங்கள் இரத்தத்தில் ஊறி ஊறி மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த துவங்கிவிடும்.
பயத்தையும் தயக்கத்தையும் உதறிட்டு துணிந்து இறங்கிப் பாருங்கள்… வானமே எல்லை!
நேற்றைய உங்கள் செயல் இன்றைய உங்கள் வாழ்க்கை. இன்றைய உங்கள் செயல் நாளைய உங்கள் வாழ்க்கை.
இப்போது சொல்லுங்கள்… இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு யார் பொறுப்பு?
==================================================================
Also check :
மனுஷனா பிறந்துட்டு எதுக்குங்க மாட்டைப் போல உழைக்கணும்? MONDAY MORNING SPL 76
நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75
வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74
கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா? – MONDAY MORNING SPL 72
பல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71
ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70
நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69
திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68
வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66
உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65
முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==================================================================
[END]
அருமையான energetic ஸ்பெஷல் . பேட்ஜ் தத்துவம் அருமை ….சரியான positive approach இருந்தால்….. எதையும் சாதிக்கலாம் ……
//பயத்தையும் தயக்கத்தையும் உதறிட்டு துணிந்து இறங்கிப் பாருங்கள்… வானமே எல்லை! -//
‘’We can complain because rose bushes have thorns, or rejoice because thorn bushes have roses.” Abraham Lincoln
நன்றி
உமா வெங்கட்
“நேற்றைய உங்கள் செயல் இன்றைய உங்கள் வாழ்க்கை. இன்றைய உங்கள் செயல் நாளைய உங்கள் வாழ்க்கை. இப்போது சொல்லுங்கள்… இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு யார் பொறுப்பு?”
அற்புதமான வார்த்தைகள். நானும் எத்தனையோ பாசிடிவ் புத்தகம் படித்திருக்கிறேன் ஆனால் நடைமுறையில் சாத்தியப்படவில்லை.
இதை படித்த பிறகாவது நம்பிக்கை வருதா பார்க்கலாம். எங்களுக்கு என்னதான் நீங்க தார்குச்சி போட்டாலும் வண்டி நகர மாட்டேங்குதுமா. என்ன பண்றது நாங்க ஏற்கனவே அனுபவிச்ச மிச்சங்கள் எங்கள் எதிர்கால எண்ணங்கள் ஆகிறது. இதை மாற்றி எண்ணதான் இவ்வளுவு போராட்டம். ஓம் சாயி ராம்.
Dear Rajkumar,
I agree with you, it is not so easy to come out from the past. But, If you give a
good try and change your mind set, definitely you can come out it. Time is the solution for You along with your prayers and efforts.
People follow spiritualism due to bad debts, business loss, job, illness etc etc. What is required is Surrender to God for each and everything in BOTH GOOD AND BAD TIMES.
In the above article by Sundar Ji, the buisness family followed the ethics (Badge in their Shirt ) in good time as well as in bad and worst time. The secret is that keep sticking to our ethics and prayers will do wonders, miracles in life.
Om Sai Ram,
Sankar J
நல்ல கருத்து நன்றி
கிரேட் ஜி.
Simply superb. All of your monday morning special is unique and great.
**
And the attitude is so important. Whatever be the ‘with out’ condition is, you have to have inspiring ‘With in’.
If you be so, you will have acquired and mastered your life.
**
Inspiring article. Keep it up.
**
So many people are starting their week from Rightmantra’s morning special only. 🙂 God bless. Thanks so much for this continuous inspiration