இந்த பிரார்த்தனை கிளப் துவக்கப்பட்டதன் பின்னணி உங்களில் பலருக்கு தெரியாது. இதை ஏதேனும் ஒரு விழா மேடையில் சொல்ல நினைத்தோம். ஆனால் இங்கே சொல்ல வேண்டிய அவசியம். சொல்கிறோம்.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் வாரம். இலங்கைத் தமிழர் பிரச்சனை மிக மிக தீவிரமாக இருந்த நேரம் அது. தமிழகம் முழுக்க ஆங்காங்கே உண்ணாவிரதங்களும் போராட்டங்களும் நடைபெற்று வந்தன. ஊடகம் முழுக்க இது குறித்த செய்திகளே ஆக்கிரமித்திருந்தன.
இலங்கைத் தமிழர்களுக்கு நாம் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்பினாலும் நம்மால் என்ன செய்ய முடியும் என்று புரியவில்லை. உளப்பூர்வமாக அர்த்தமுள்ளதாக ஏதேனும் செய்ய விரும்பினோம். அது குறித்து தீவிர சிந்தனை இருந்து வந்தது.
இந்நிலையில் அப்போது நாம் அளித்த பதிவு ஒன்றில் கமெண்ட் பகுதியில் தன்னை கடவுள் மறுப்பாளர் என அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர், “நாடே ஒரே பரபரப்பா அடுத்து என்ன நடக்க போகுதோன்னு பதைபதைப்புல இருக்கு… ஆனா இவரு என்னடானா கோயிலு, கும்பாபிஷேகம்னு… ஏன் எதற்குமே பிரயோஜனம் இல்லாதத பண்ணிக்கிட்டு இருக்கீங்க… முடிஞ்சா ஈழ தமிழர்களுக்காக ஏதாவது செய்ய பாருங்க… அதா விட்டுட்டு சும்மா சாமி சாமினு நேரத்த வேஸ்ட் பண்ணாதீங்க… நல்லா தானே சுந்தர் இருந்தீங்க… ஏன் இப்டி மாறுனீங்க…..? எப்படியும் இதை நீங்க பப்ளிஷ் பண்ணப் போறதில்லை….” என்கிற ரீதியில் ஒரு கமெண்ட்டை அளித்திருந்தார்.
அந்த நபர் இத்தோடு நிற்காமல் அதற்கு பிறகு பல பதிவுகளில் வந்து கடவுள்மறுப்பு தொடர்பான கமெண்ட்டுகளை அளித்து வந்தார். நம்மை பர்சனலாக விமர்சிக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் அவர் தொல்லை அதிகமானது. வேறு வேறு பெயர்களில் இங்கு வந்து நமது கடவுள்களை குறித்தும் நம்மைக் குறித்தும் ஏடாகூடமான கமெண்ட்டுகளை அளித்து வந்தார். சைபர் கிரைமில் உள்ள சில போலீஸ் அதிகாரிகளை நமக்கு நன்கு தெரியும் என்றாலும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை அவர்கள் விசாரித்து வருவதால் இதையெல்லாம் புகாராக அளித்து அவர்கள் நேரத்தை நாம் வீணாக்க விரும்பவில்லை. எனவே நமக்கு தெரிந்த தொலைதொடர்பு துறை உயரதிகாரி ஒருவரிடம் சம்பந்தப்பட்ட நபரின் ஐ.பி. முகவரியை கொடுத்து, அவர் யார், என்ன என்று விசாரிக்கச் செய்தோம். அடுத்த சில நாட்களில் அவர் எந்த மாநிலம், எந்த ஊர், பணிபுரியும் இடம் உட்பட அவர் ஜாதகமே நம்மிடம் வந்துவிட்டது. சரி… ஆள் யார் என்று தெரிந்துவிட்டது. இது போதும், எல்லை மீறும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நாமும் விட்டுவிட்டோம். இதற்கிடையே அவரிடமிருந்து வரும் கமெண்ட்டுகள் தானாகவே நின்றுவிட்டது.
ஈழத் தமிழர்களுக்காக மட்டுமல்ல துன்பத்தில் சிக்கித் தவிக்கும் எல்லோருக்காகவும் ஆக்கப் பூர்வமாக ஏதேனும் செய்தே தீரவேண்டும் என்று ஏற்கனவே தீவிர யோசனையில் நாம் இருந்தோம். இந்தநிலையில் மேற்படி கமெண்ட் நமது யோசனையை அதிகப்படுத்தியது. அதன் பலனாக தோன்றியது தான் இந்த ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’ எனும் கூட்டுப் பிரார்த்தனை மன்றம். இன்று நமது தளத்தின் மிகப் பெரிய அடையாளமாக, தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக இது மாறி நிற்கிறது.
நம்மை கேலி செய்ய பயன்பட்ட வார்த்தைகள் இன்று ஒரு மிகப் பெரிய அடையாளமாக மாறி நிற்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை எதற்கு சொல்கிறோம் என்றால் நம்மை நோக்கி எந்த பந்தை எந்த மாதிரி வீசினாலும் அதை சிக்ஸருக்கு விளாசும் கலை நமக்கு நன்கு தெரியும். அந்த ஆற்றலை ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கிறான் என்பதை யாரும் மறக்கவேண்டாம். கடந்த காலங்களில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் அப்படி. எனவே அற்பத்தனமான சில செயல்கள் மூலம் நமது வேகத்தை குறைக்கவோ நமது பயணத்தில் தடை ஏற்படுத்தமுடியும் என்றோ எவரேனும் நினைத்தால் அது சிறுபிள்ளைத்தனமேயன்றி வேறொன்றுமில்லை.
கட். பிரார்த்தனை கிளப் செய்திக்கு வருகிறோம்…
இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், எந்த ஈழத் தமிழர்களுக்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றதோ அதே ஈழத் தமிழர்களை கொண்டே நமது முதல் பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனை நடைபெற்றது என்பது தான். ஆம் நமது தளத்தின் முதல் கூட்டுப் பிரார்த்தனையே ஈழத் தமிழர்களுக்காகவும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பல கொடுமைகள் செய்த ராஜபக்சே அரசு அகலவேண்டும், தவறிழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்பதாகவும் தான் இருந்தது. (இன்று நமது பிரார்த்தனை நிறைவேறி, ராஜபக்சே தேர்தலில் மண்ணைக் கவ்வியது அனைவருக்கும் பெரும் நிம்மதியளிக்கிறது.)
பிரார்த்தனை கிளப் துவக்கப்பட்ட காலகட்டத்தில் கனடாவில் வசிக்கும் நம் வாசகி ஒருவர் தமிழகத்தில் பல கோவில்களை தரிசனம் செய்ய அப்போது வந்திருந்தார். அவரை நமது வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு விருந்தளித்து சென்னையை சுற்றிலும் உள்ள சில தொன்மையான ஆலயங்களுக்கு அவர்களுடன் சென்றிருந்தோம். அவர்களுடன் மாங்காடு செல்லும்போது பிரார்த்தனை நேரம் வரவே அங்கே மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் அவர்களுடனேயே பிரார்த்தனை செய்தோம். முதல் பிரார்த்தனை இவ்விதமாக மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் இனிதே நடைபெற்றது.
(Check : மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்தில் ஈழத் தமிழர்களுடன் நடைபெற்ற நம் முதல் பிரார்த்தனை!)
முதலில் பிரார்த்தனை கிளப் துவக்கியபோது அதை வாரா வாரம் நடத்திடவேண்டும் என்கிற யோசனை நமக்கில்லை. ஆனால் ‘கூட்டுப் பிரார்த்தனை’ என்கிற ஒரு விஷயம் அனைவருக்கும் பிடித்துவிடவே அதற்கு பிறகு அது வாரமிருமுறையாக மாற்றப்பட்டது. வாசகர்களிடமிருந்து பிரார்த்தனைக்கான கோரிக்கை அதிகம் வரத் துவங்கியதையடுத்து வாரம் ஒருமுறை என்று மாற்றப்பட்டது. (இதற்கு ஏற்றார்ப் போல முதலில் அளிக்கப்பட பதிவுகள் திருத்தப்பட்டது.)
நாளடைவில் பிரார்த்தனை கிளப் பதிவை கோரிக்கைகளை மட்டும் அளிக்கும் ஒரு பதிவாக இல்லாமல் கூட்டுப் பிரார்த்தனையின் வலிமையை மகத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு கதையை தயார் செய்து அளிக்க ஆரம்பித்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே இன்றும் அது தொடர்கிறது.
ஒரு சில வாரங்கள் சென்றவுடன் பிரார்த்தனையை இறைவனிடம் கொண்டு சென்று பலன் பெற்றுத் தரவேண்டிய பொறுப்பு மகா பெரியவா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஏனெனில் திருமந்திரத்தில் கூறியுள்ளபடி,
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனருளாலே
– திருமந்திரம்
நம் வினையை பிடித்து பிசைந்து அதன் முடிச்சை அவிழ்க்க அவருக்கு தெரியும்.
மேலும் சில வாரங்கள் சென்ற பிறகு வேறு ஒரு யோசனை தோன்றியது. எத்தனையோ சாதனையாளர்களை, தன்னலமற்ற சேவையில் ஈடுபடும் சான்றோர்களை தளத்திற்காக சந்திக்கிறோம். நாம் செய்யும் பிரார்த்தனையை வாரம் ஒருவர் வீதம் அவர்களை தலைமையை ஏற்கச் செய்யலாமே என்று ஒரு யோசனை உதித்தது.
ஏனெனில், பசுவானது பாலைத் தந்தாலும் நாமே அதை கறக்கமுடியாது. கன்றுக்குட்டியின் உதவியுடன் தான் அதைக் கறக்க முடியும். இறையருள் அங்கிங்கெனாதபடி எங்கும் கொட்டிக்கிடந்தாலும் அதை ஒருமுகப்படுத்தி, தங்களது தவப்பயனால் புண்ணியத்தின் பலநாள் நமக்கு பரிபூரணமாக பெற்றுத்தர அருளாளர்களால் மட்டுமே முடியும். எனவே தான் ஒவ்வொரு வாரமும் தகுதியுடைய ஒருவரைக் கொண்டு நமது பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனை நடைபெறுகிறது. மேலும் சிலர் கோரிக்கை வைக்கும்போது இறைவன் தருகிறானோ இல்லையோ அதை அவன் கேட்டேயாகவேண்டும். கேட்டாலே நமக்கு போதுமே…. அதைவிட பெரிய பாக்கியம் வேண்டுமா என்ன?
(மேலே உள்ள படத்தில் காணப்படும் பசுவிற்கு பின்னே ஒரு மிகப் பெரிய அதிசயம் இருக்கிறது. இந்தப் படம் எங்கே எடுத்தது, அப்படி என்ன அதிசயம் என்பதை அடுத்து வரவிருக்கும் ஏதேனும் ஒரு பதிவில் சொல்கிறோம். இப்போதைக்கு இதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்!)
அப்படி துவங்கிய பிரார்த்தனைக் கிளபிற்கு முதன்முதலில் தலைமை தாங்கியது : திருவண்ணாமலையை சேர்ந்த திரு.மணிமாறன் அவர்கள்.
(Check : ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா….)
அதற்கு பிறகு ‘ஸ்ரீ ராகவேந்திர மகிமை’ புகழ் அம்மன் சத்தியநாதன் அவர்கள், ‘தெய்வத்தின் குரல்’ திரு.பி.சுவாமிநாதன்,
தேவார முரசு திரு.கி.சிவகுமார், திருவாசகத் தூதர் திரு.பிச்சையா, வேத அத்யபகர் திரு.சத்யமூர்த்தி சுவாமி, திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவில் குருக்கள் சச்சிதானந்தன் (வயது 91), வாழும் ஒளவை என்றழைக்கப்படும் பழனிப் பாட்டி, பசுமைக் காவலர் திரு.முல்லைவனம், வாரியாரின் வாரிசுகள் செல்வி.வள்ளி & லோச்சனா etc.etc. என இன்று வரை பலர் நமது பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை தாங்கி விட்டனர்.
ஒரு சில வாரங்கள் சென்றது. நம்மைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டால் எப்படி? நாட்டை பற்றியும் கொஞ்சம் கவலைப்படுவோமே இறைவனிடம் அதற்காக மன்றாடுவோமே என்று தேசத்தை உலுக்கும் பிரச்சனைகளான விவசாய பிரச்சனை, மழை வெள்ளம், விலைவாசி உயர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, விபத்துக்கள் போன்றவை குறித்தும் பிரார்த்தனைகள் அளிக்கப்பட்டு ‘பொது பிரார்த்தனை’ என்கிற தலைப்பின் கீழ் அது சேர்க்கப்பட்டது.
இப்படி நம் பிரார்த்தனை கிளப் நாளுக்கு நல மெருகேறிக்கொண்டே வந்தது.
இதுவரை நூற்றுக்கணக்கான வாசகர்கள் பிரார்த்தனைகளை சமர்பித்திருக்கிறார்கள். பலர் பிரார்த்தனை நிறைவேறியிருக்கிறது. மேலும் பலரது பிரார்த்தனை விரைவில் நிறைவேறவிருக்கிறது. சமர்பிக்கப்பட்ட அனைத்தும் பலித்ததாஎன்கிற கேள்வியே தேவையில்லை. ஏனெனில் இறைவனிடம் நமது கோரிக்கையை வைத்தாயிற்று.அவற்றை பார்த்துக்கொள்வது அவன் கடமை. நாம் நம் கடமையை செய்வோம். ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மந்திரவாதி மட்டுமே கேட்டதை தருவான். இறைவன் எதை தரவேண்டுமோ அதைத் தான் தருவான். அவனுக்கு தெரியும் எப்போது, என்ன, எதை, யாருக்கு கொடுக்க வேண்டும், கொடுக்கக் கூடாது என்று.
நான் கேட்டதெல்லாம் இறைவன் எனக்கு ஒருவேளை அளித்திருந்தால் நான் இன்றைக்கு எங்கேயோ என்னவோ செய்துகொண்டிருப்பேன். இப்படி ஒவ்வொரு நொடியும் அர்த்தமுள்ளதாக வாழும் ஒரு வாழ்க்கை கிடைத்திருக்காது. ரைட்மந்த்ரா பிறந்திருக்காது. நீங்களும் இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கமாட்டீர்கள்.
அதே போல பதிலளிக்கப்படாத பிரார்த்தனை என்ற ஒன்று கிடையவே கிடையாது. கொஞ்சம் பொறுமையோடும் நம்பிக்கையோடும் நாம் இருந்தால் போதும். உரியது தேடி வரும். கேட்பது கிடைக்கும். நினைப்பது நடக்கும்.
* புற உடலை சுத்தம் செய்ய எப்படி தினசரி குளிக்கிறோமோ அதே போல அக உடலை அதாவது மனதை சுத்தம் செய்யும் கருவி தான் பிரார்த்தனை.
* உலகம் கனவு காணும் அனைத்தையும் விட அதிகமாக பிரார்த்தனையால் சாதிக்க முடியும் என்றார் ஆங்கில கவிஞன் டென்னிசன்.
பிரார்த்தனை என்பதே உன்னதமான ஒரு விஷயம் என்றலும் கூட்டுப் பிரார்த்தனை என்பது அதைவிட சிறப்பானது. கூட்டுப் பிரார்த்தனையின் மகத்துவத்தை விவரிக்கும் பல கதைகளை நாம் நமது பிரார்த்தனை கிளப்பில் அளித்திருக்கிறோம்.
கூட்டுப் பிரார்த்தனையில் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் மட்டும் கடவுளின் விசேஷ கவனத்தை பெறுகின்றன. ஏன் தெரியுமா?
ஒரு கூட்டுப் பிரார்த்தனையில் சுமார் 2000 பேர் பங்கேற்று பிரார்த்தனை செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்…. அந்த 2000 பேரில் ஒருவர் புண்ணியாத்மாவாக இருந்து அவரது நேரமும், யோகமும் நன்றாக இருந்துவிட்டால் போதும் அவர் மூலம் நாம் கேட்பது நமக்கு சித்தியாகிவிடும். நமது கிளப்பிலோ வாரம் ஒரு புண்ணியாத்மா தலைமை தாங்குகிறார். பல புண்ணியாத்மாக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
பெரிய மனிதர்கள் சிலரிடம் நாம் கேட்க தயங்கும் விஷங்களை அவருக்கும் நமக்கும் நடுவில் பொதுவாக உள்ள சிலரைக்கொண்டோ, அவருக்கு பிரியமானவர்களைக் கேட்டு நாம் சாதித்துக்கொள்வதில்லையா? அதுப் போலத் தான் இதுவும். இந்த ஒரு காரணத்திற்க்காகத் தான் ஒவ்வொரு வாரமும் தகுதியும் அருளும் நிரம்பிய ஒருவரை நமது பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்கச் செய்கிறோம்.
அதுமட்டுமல்ல பிறருக்காக பிரார்த்திப்பவர்கள் என்றும் இறைவனின் நன்மதிப்பில் இருப்பார்கள். எனவே நம்பிக்கையோடு கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்போம். பிறருக்காக பிரார்த்தனை செய்வோம்.
உங்கள் நண்பர்களோ உற்றார் உறவினர்களோ பிரச்சனைகளில், நோய்களில் சிக்கித் தவித்தால் அவர்களுக்காக பிரார்த்தனையை சமர்பிக்கலாம். அவர்களிடம் பேசி அவர்கள் அனுமதி பெற்று கோரிக்கை அனுப்பவும். அப்படி அவர்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை என்றாலும் பரவாயில்லை. அதையும் குறிப்பிட்டு நமக்கு அனுப்பவும். பெயர்களை வெளியிடாமல் சம்பந்தப்பட்ட பிரார்த்தனை வெளியிடப்படும்.
பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்தாலே போதுமானது தான். அப்படியிருக்கையில் கமெண்ட் பகுதியில் நண்பர் திரு.விஜய் பெரியசுவாமி அவர்கள் கூறும் பரிகாரங்களை செய்தே தீரவேண்டும் என்கிற கட்டாயமில்லை. அது ஒரு போனஸ். அவ்வளவே. இயன்றவர்கள் செய்யலாம். இயலாதவர்கள் அதற்காக வருந்தத் தேவையில்லை. அந்த பிரச்சனை கொண்ட மற்றவர்களுக்கு அது உபயோகமாக இருக்கும். அதனால் தான் அதை வெளியிடுகிறோம்.
உங்கள் மொபலை ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மாலை 5.15 மணிக்கு அலாரம் செட் செய்துகொள்ளுங்கள். 5.30 – 5.45 என்கிற அந்த பதினைந்து நிமிட இடைவெளியில் ஒரு ஐந்து நிமிடம் நீங்கள் அந்த நேரம் எங்கு இருக்கிறீர்களோ அங்கு பிரார்த்தனை செய்யுங்கள். அது கோவிலாக இருக்கலாம், வீடாக இருக்கலாம், சாலையாக இருக்கலாம், பேருந்தாக இருக்கலாம், ரயிலாக இருக்கலாம். ஜஸ்ட் ஒரு சில நிமிடங்கள் நீங்கள் பிரார்த்தனை செய்தால் போதும். நமது பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்திருப்பவர்களுக்காகவும், பொதுப் பிரார்த்தனையாக இடம் பெற்றுள்ள நமது தேசத்தின் பிரச்சனைகள் மற்றும் இதர விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
உங்களால் அந்த வார பிரார்த்தனை பதிவை பார்க்க முடியவில்லையா? இந்த தளம் பார்க்கும் உங்கள் நண்பர்களையோ உறவுகளையோ அல்லது நம்மையோ அலைபேசியில் அழைத்து விபரத்தை கேட்டு தெரிந்துகொண்டு பிரார்த்தனை செய்யுங்கள்.
ரைட்மந்த்ரா வாசகர்கள் ஒவ்வொருவரின் தலையாய கடமை இது. நமது பிரார்த்தனை கிளப்பில் பங்கேற்று ஒவ்வொரு வாரமும் பிரார்த்தனை செய்பவர்களையே நாம் உண்மையான ‘ரைட்மந்த்ரா வாசகர்கள்’ என்று அழைக்க பிரியப்படுகிறோம்.
மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்து வாருங்கள். உங்கள் பிரார்த்தனைகள் தானாக நிறைவேறும். அது தான் கூட்டுப் பிரார்த்தனையின் மகத்துவம்.
மற்றவர்களுக்காக நாம் பிரார்த்திக்கும் கணங்களே உண்மையில் நாம் வாழும் கணங்கள். மற்றவை சும்மா மூச்சு விடுவது தான். நாம் ஒரு நாளைக்கு 23,040 முறை மூச்சுவிடுகிறோம். அப்படியெனில் ஒரு வாரத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறோம் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். ஆனால் சில நிமிடங்களாவது வாழ்கிறோமா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
பல வாசகர்கள் பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்தனை செய்வது நமக்கு தெரியும். அதே சமயம் சிலரிடம் பேசும்போது பிரார்த்தனை கிளப் பற்றியோ அல்லது பிரார்த்தனை செய்வது பற்றியோ கவலைப்படாமல் இருக்கிறார்கள். அது மிகவும் தவறு.
நமது பிரார்த்தனை கிளப் நேரத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இல்லையா… உங்களுக்கென்று சௌகரியப்பட்ட ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்து வாருங்கள். இறைவனிடம் மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கேளுங்கள்.
பிரார்த்தனை என்பது ஆன்மாவின் குரல். அது தன்னை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கொடுங்கள். உங்களுக்காக பிரார்த்தியுங்கள். தவறல்ல. அதே நேரம் மற்றவர்களுக்காகவும் பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை தானாக இறைவனின் மனதில் ஒரு உன்னத இடம் பெறும். அதற்கு ஒரு வழி ஏற்படுத்தி தருகிறது நமது பிரார்த்தனை கிளப். உங்களுக்காகவும் சரி மற்றவர்களுக்காகவும் சரி… பயன்படுத்திக்கொண்டு பலன் பெறுங்கள்.
=============================================================
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்கள் குறிப்பிடும் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=============================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
=============================================================
[END]
நம் தளத்தின் பிரார்த்தனை கிளப் கடந்து வந்த பாதையை படிக்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது.
//நம்மை நோக்கி எந்த பந்தை எந்த மாதிரி வீசினாலும் அதை சிக்ஸருக்கு விளாசும் கலை நமக்கு நன்கு தெரியும். அந்த ஆற்றலை ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கிறான்//- இந்த தன்னம்பிகையினால் தான் நம் தளம் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது .
//இறைவனிடம் மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கேளுங்கள். – // உண்மையான வரிகள். கண்டிப்பாக நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பேன். தவறு செய்தவன் வருந்தியாகணும் . தப்பு செய்தவன் திருந்தி ஆகணும் .
என்னுடைய கோரிக்கை கூட நம் பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற்றிருக்கிறது. அது எப்படியும் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாம் அடுத்தவர்களுக்காக பிரார்த்தனை செய்தால் இறைவன் நம் கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுவார்.
ஒவ்வொரு ஞாயிறும் பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற்று இருக்கும் வாசககளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.
பிரார்த்தனை கிளப்பின் ஹை லைட் டே தாங்கள் வார வாரம் கஷ்டப்பட்டு prepare செய்யும் கதை தான். பிரார்த்தனை தொடபான கதைகளை போடுவது தங்களுக்கு கை வந்த கலை
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
ராம் ராம் ராம்
மகா …பெரியவா ….சரணம்
நன்றி
உமா வெங்கட்
டியர் சுந்தர் சார்,
நான் தினமும் தங்கள் தளத்தின் பதிவுகளை தவறாமல் படித்துக் கொண்டு வருகின்றேன். வரும் ஞாயிறு முதல் நானும் கூட்டு பிரார்த்தனையில் பங்கெடுத்துக் கொள்வேன் என தங்களுக்கு தெரிவிக்கின்றேன்.
மிக அருமையான விபரங்களை அளித்து வருகின்றீர்கள்.
தங்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
திருமதி. ரமா ஷங்கர்.
ennudaiya mobilil 5:15pm sunday alaram set seithu vitten…
tanking for your alerts….
திங்கள் பதிவும், இன்று நீங்கள் போட்ட பதிவும் அருமை .
நம் தளத்தின் ஒவ்வொரு அசைவும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நல்ல நண்பர் நீங்கள்.
பிரார்த்தனை பதிவு ஏன் எப்படி எதற்காக என விரிவாக சொல்லி அதன் மகத்துவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
எங்களை போன்ற வாசகர்களுக்கு கம்ப்யூட்டர் ஆன் பண்ணியவுடன் rightmantra பார்ப்பது போல சண்டே 5.30 pm alerta இருப்போம்.
நன்றி
வாழ்த்துகள் சார், நமது பிரார்த்தனைக்கிளப் கடந்துவந்த பாதையைப் படிக்கும் பொழுது பிரமிப்பாக உள்ளது. மிக்க நன்றி.
அண்ணா
இந்த பதிவை பார்க்கும் போது கண்கள் நிறைகின்றன.உங்கள் சேவை மிகவும் பாராட்டுக்குரியது .கூட்டு பிரார்தனையின் மகிமை எனக்கு நன்றாக தெரியும் அதன் வேதனையும் புரியும் அண்ணா .என் இபோதைய பிரார்த்தனை எல்லோருக்கவும் வேண்டும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான்.
சுபா
Dear Sundar ji,
I have also set my alarm for prayer on sunday at 5.15 p.m.I appreciate your
dedication for prayer club. Turly speaking, all your articles are really superb
and touches the heart.
By God’s grace, Your Prarthanai club should grow and all readers Prayers
should be granted.
Yours truly,
Sankar J
Bangalore
I know where the picture – cow and it’s calf one – has been taken. ha…ha…ha…
Since I too have been there I guess or at least been there the place.
**
By the way, Post is excellent. You have given everything in a single article and cleansed and ignited few minds here I hope so.
**
Great. Keep up your work and I pray that god will take care of you – in terms of peace, finance and joy.
**
**Chitti**.
சுந்தர், நீங்கள் எந்த நிறைவேறிய பிரார்த்தனையை பற்றி குறிப்பிட்டுள்ளிர்கள் என்று தெரியாது. தெய்வ குழந்தைகள் வள்ளி, லோச்சனா சகோதரிகள் தலைமையேற்ற அதுவும் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் (Sep-7, 14- 2014) தலைமையேற்று நடத்திய பிரார்த்தனை நிறைவேறி உள்ளது (கீழே உள்ள லிங்கை பார்க்கவும்). ஆம். எங்களுக்கு சந்தான பாக்கியம் கிடைத்துள்ளது. எனது மனைவி இப்போது கருவுற்று இருக்கிறார். (4 மாதம்). இந்த தருணத்தில் எங்களுக்காக பிரார்த்தனை மேற்கொண்ட வள்ளி, லோச்சனா சகோதரிகள் மற்றும் நமது ரைட் மந்த்ரா வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இது ஒன்றே நமது பிரார்த்தனை மன்றத்தின் சக்திக்கு சான்று.
இந்த பிரார்த்தனை மன்றம் மூலம் மேலும் பலர் துயர் நீங்கி அவர்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற்று பயனடைய வேண்டும். இதற்காக நாம் அனைவரும் கூட்டு பிரார்த்தனையில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
நன்றி.
சக்திவேல்
http://rightmantra.com/?p=13526
http://rightmantra.com/?p=13674
வணக்கம் அய்யா,இன்று தான் உங்கள் தளத்தை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. உண்மையிலேயே மிக நல்ல சேவையை செய்து வருகிறீர்கள்.மிக்க நன்றி!
திரு சுந்தர் சார் அவர்களுக்கு,
கோவையிலிருந்து வரதராஜன் எழுதிக்கொள்வது, என்னவென்றால் நான் தங்களின் பிரார்த்தனை க்ளப் பகுதியை படித்து வருகிறேன். ஏற்கனவே அகத்தியரின் திருமகள் துதியும் சுந்தரகாண்டம் புத்தகமும் கேட்டு எழுதியுள்ளேன். என்னுடைய குறையையும் தாங்கள் கூட்டுப்ரர்த்தனை மூலம் தீர்த்துக் கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் 7 சகோதர சகோதரிகளுடன் பிறந்தவன். நானே மூத்தவன். எனக்கு வயது 63. உயில் சாசனப்படி எங்கள் 3 ஆன் வாரிசுகளுக்கு மட்டும் சொத்து சேரவேண்டியது என்று எழுதப்பட்டு உள்ளது. சகோதரிகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. எனது தந்தையார் இறந்து 35 வருடங்கள் ஆகிறது. எனது தாயாரும் நானும் மிகவும் சிரமப்பட்டு ஐந்து சகோதரிகளுக்கும் இரண்டு சகொதரர்களுக்கும் மிக மிக எளிய முறையில் திருமணம் செய்து வைத்தோம். சீர் சேணத்தை எதுவும் கொடுக்கவில்லை. இப்பொழுதும் கடைசி இரண்டு சகோதரிகள் மிகுந்த கஷ்டத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர். பூர்வீக சொத்தை சகோதரிகளுக்கும் சரி பாகம் இல்லாவிட்டாலும் எதாவது ஒரு தொகையை கொடுக்கலாம் என்று கூறினால் இரண்டு சகோதரர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சரி எனக்கு சொத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு உள்ள சொத்தாவது கொடுங்கள் நானாவது தங்கைகளுக்கு கொடுத்துவிடுகிறேன் என்று கூறினாலும் ஏற்றுக்கொள்வதில்லை. நானும் ஒரு தனியார் நிறுவனத்தில் ரிட்டயார் ஆகி குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறேன்.
எனது மருமகளை என்னுடைய மகளைப்போல பார்த்துக்கொண்டு வருகிறேன். காரணம் எனக்கு பெண்குழந்தை இல்லை. எனது மகன் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தோம். ஒரு பேரக்குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆகிறது. மருமகள் பிரச்சனை செய்து வருகிறார்கள். என் மகன் யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் தவிக்கிறான்.
பூர்வீக சொத்தை எல்லோரும் (சகோதர சகோதரிகள்) அனுபவிக்கும்படியும், எனது மருமகள் மனம் திருந்தி எங்களையும் மதித்து ஒரே குடும்பமாக சந்தோஷமாக வாழ தாங்கள் தயைகூர்ந்து பிரார்த்தனை க்ளப் மூலம் பிரார்த்தனை செய்து எங்கள் குறைகளை தீர்துக்கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றியுடனும், வணக்கத்துடனும்
வரதராஜன், கோவை.
பூர்வீக சொத்து பிரச்சனை
நான் வயது முதிர்தவன். நல்ல உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவன். இரு மகன்கள் இருந்தபோதிருலும் நானும் மனைவியும் தனியாக வாழ்கிறோம். சரீர உதவி செய்ய யாரும் இல்லை. மகன் ஒருவன் அயல் ஊரில் வேலை.மற்றவன் மனைவியின் சொல் தனியாக செல்கிறேன் எனச்சொல்ல, நான் என் வீட்டிலேயே கீழ் தளத்தில் குடி அமர்த்தி உள்ளேன். ஆனால் உதவி ஏதும் இல்லை. எங்களுக்கும் செய்து கொண்டு அவர்களுக்கும் உதவிகள் செய்கிறோம்.தேவை இல்லாத விவாதம். வாழ்கையில் சந்தோசம் நிம்மதி இல்லை.எல்லா முதியவர்களும் இதுபோல் தான் இருப்பார்கள் என எண்ணி முதியவர்களுக்கு என போராடி வருகிறேன். என் செயலில், கொள்கையில் ஊக்கம் பெறவும் வெற்றி பெறவும் பிராத்தனை செய்யுமாறு பணிவன்புடன் கோருகிறேன்.
சார்… என்னை எனது அலைபேசியில் அழைக்கவும்.
– சுந்தர், 9840169215