Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்தில் ஈழத் தமிழர்களுடன் நடைபெற்ற நம் முதல் பிரார்த்தனை

மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்தில் ஈழத் தமிழர்களுடன் நடைபெற்ற நம் முதல் பிரார்த்தனை

print
மது ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’ சார்பாக நேற்று துவங்கிய கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லமால் உலகம் முழுவதும் உள்ள நம் தள வாசகர்கள் பலர் இதில் கலந்துகொண்டு அவரவர் இடங்களில் பிரார்த்தனை செய்தனர்.

நேற்று பிரதோஷ தினம் என்பதால் பிரார்த்தனை நேரத்தில் (5.30 pm – 5.45 pm) சிவாலயங்களில் பிரார்த்தனை செய்ததாக நம்மை தொடர்பு கொண்ட பலர் கூறினர்.

நமது பிரார்த்தனை, மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்தில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுடனேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 4 மாதங்களுக்கு முன்பு, கனடாவை சேர்ந்த தமிழ் சகோதரி மனோன்மணி என்பவர் நமக்கு தன் கைப்பட ஒரு கடிதத்தை தமிழில் எழுதி அதே ஸ்கேன் செய்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். கைப்பட எழுதினால் தான் தமது உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என்றும் கூறியிருந்தார். அந்த கடிதத்தில் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு, நண்பர் ரிஷியின் Livingextra.com மூலம் நமது தளம் பற்றி தெரிய வந்ததாகவும், அது முதல் நமது தளத்தை தவறாது பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டு நமது பதிவுகளையும் நமது தளத்தின் பணிகளையும் வெகுவாக பாராட்டியிருந்தார். மகாகவி பாரதியை பலர் கிட்டத்தட்ட மறந்தேவிட்ட சூழ்நிலையில் அவருக்கு விழா எடுத்ததை கண்டு தாம் மிகவும் நெகிழ்ந்துவிட்டதாகவும் நமது பணிகளுக்கு என்றென்றும் திருவருள் துணையிருக்கும் என்றும், வருங்காலத்தில் நமது பயணத்தில் நல்லோர்கள் பலர் தங்களை இணைத்துக்கொள்வார்கள் என்றும் கூறியிருந்தார். மேலும் என் பெற்றோருக்கும் சில வார்த்தைகள் அதில் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தை பிரிண்ட் எடுத்து லேமினேட் செய்து என் பூஜையறையில் வைத்திருக்கிறேன்.

நிற்க…..

சென்ற மாதம் நமக்கு மெயில் அனுப்பியிருந்த அவர்கள் மார்ச் மாதம் 30 நாள் பயணமாக தமது சகோதரியுடன் தமிழகம் வரவிருப்பதாகவும் அப்போது என்னை சந்திப்பதாகவும் கூறியிருந்தார். இங்கு தமிழகத்தில் பல முக்கிய கோவில்களை தரிசிக்க திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தார்.

“அவசியம் வாருங்கள். என்னால் முடிந்தால் சென்னையில் நீங்கள் கோவில்களை தரிசிக்கும்போது உங்களுடன் இணைந்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தேன்.

இதற்கிடையே நான் என் பணிகளில் மூழ்கிவிட்டேன். நாட்கள் உருண்டன.

நமது பிரார்த்தனை கிளப் தொடர்பாக பதிவை அளித்து இரண்டு நாட்கள் இருக்கும் – சனிக்கிழமை காலை என் மொபைலுக்கு அழைப்பு வந்தது. என்னை தொடர்பு கொண்டவர் மனோன்மணி அவர்கள், தாம் தமிழகம் வந்துவிட்டதாகவும் இன்று காளஹஸ்தி மற்றும் திருத்தணி செல்லவிருப்பதாகவும்…. நாளை அதாவது ஞாயிறு சென்னையில் உள்ள பிரதான கோவில்களுக்கு செல்லவிருப்பதாகவும் நாம் இணைந்துகொள்ள முடியுமா என்றும் கேட்டார்கள். மேலும் பாலம் திரு.கலியாண சுந்தரம் ஐயாவை பார்க்க விரும்புவதாகவும் அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா? என்றும் கேட்டார்கள்.

“நான் பாலம் ஐயாவுடன் பேசிவிட்டு சொல்கிறேன்… மற்றபடி நாளை மதியத்திற்கு மேல் உங்களுடன் இணைந்துகொள்கிறேன். ஆனால் நீங்கள் என் வீட்டிற்கு வந்து, மதிய விருந்து சாப்பிட்டு விட்டு செல்லவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டேன்.

பேசும்போது நமது தளம் சார்பாக ஞாயிறு மாலை ஈழத் தமிழர்களின் நலன் வேண்டி அவரவர் இடங்களில் பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை கூறி அந்த நேரத்தில் நான் எங்கிருந்தாலும் பிரார்த்தனை செய்ய எண்ணியிருக்கிறேன். அநேகமாக நம் திட்டப்படி ஏதாவது கோவிலில் தான் இருப்போம். நீங்களும் எங்கள் வாசகர்களுடன் இந்த பிரார்த்தனையில் இணையவேண்டும் என்று அவர்களை கேட்டுக்கொண்டேன்.

தமிழர்கள் நலன் வேண்டி நாம் செய்யும் இந்த பிரார்த்தனை பற்றி புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒருவரான மனோன்மணி அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். நம்முடன் நாம் இருக்குமிடத்தில் நிச்சயம் பிரார்த்தனையில் பங்கு பெறுவதாகவும் கூறினார்கள்.

ஆனால் “விருந்தெல்லாம் எதுக்கு? எங்களுக்காக சிரமப்படவேண்டாம்” என்று விருந்துக்கு லேசில் ஒப்புக்கொள்ளவில்லை.

“அட… நம்ம கெஸ்ட் நீங்க… அங்கே என்ன சாப்பாடு எப்படி சாப்பிடுறீங்களோ தெரியாது… இங்கே நம்ம தமிழ்நாட்டு சைவ சமையலை சாப்பிட்டு பாருங்க… மறுக்காதீங்க ப்ளீஸ்” என்றேன். என் அன்புக்கு கட்டுப்பட்டு அவர்கள் இறுதியில் ஒப்புக்கொண்டார்கள்.

நானும் பாலம் ஐயாவிடம் விபரத்தை கூறி ஞாயிறு மாலை மேற்படி தமிழ நண்பர்களுடன் அவரை சந்திக்க விரும்புவதாக கூறினேன். அவரும் ஒப்புக்கொண்டு சைதைப்பேட்டையில் உள்ள ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு வருமாறு கூறினார்.

இதற்கிடையே… வீட்டில் அம்மாவிடம் விஷயத்தை கூறி அறுசுவை உணவு தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டேன். பாயசம், அவியலுடன் அருஞ்சுவை உணவு நம் சகோதரிகளுக்காக தயாரானது.

ஒரு கால் டாக்சி ஏற்பாடு செய்து ஞாயிறு காலை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்ற அவர்கள், மதியம் நம் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.

பெற்றோர்களிடம் பாராட்டு

அந்த சகோதரிகளுடன் அவர்கள் சென்னையில் தங்கியிருக்கும் அவர்கள் குடும்ப நண்பர் ஒருவரின் தாயாரும் உடன் வந்திருந்தார்கள். வந்தவர்களை வரவேற்று உபசரித்து என் பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன்.

பரஸ்பர நல விசாரிப்புக்கு பிறகு பொதுவான உரையாடல் நிகழ்ந்தது. நமது பணிகளை வெகுவாக பாராட்டி என் பெற்றோரிடம் பேசிய அவர்கள் நமது முயற்சிகள் யாவும் வெற்றி பெற்று எனக்கு நல்லதொரு வாழ்க்கை துணை அமையும் என்றும் வாழ்த்தினார்கள்.

தலைவாழை விருந்து

தொடர்ந்து நம் விருந்தினர்களுக்கு தலை வாழை இலையில் விருந்து பரிமாறப்பட்டது. அவர்களுடன் நாமும் உட்கார்ந்து சாபிட்டோம்.

சற்று ஓய்வுக்கு பின்னர் கோவில்களுக்கு கிளம்ப ஆயத்தமானோம். நம் வீட்டில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். தொடர்ந்து சகோதரிகளுக்கு தாம்பூலம் தரப்பட்டது.

வீட்டில் உள்ள எங்கள் பாட்டியின் (வயது 82) காலில் வீழ்ந்து ஆசிபெற்றார்கள்.

பிரதோஷ நேர தரிசனம்

அடுத்து எங்கள் பயணம் துவங்கியது. காரில் ஆன்மிகம் உள்ளிட்ட பொதுவான விஷயங்கள் பேசிகொண்டே சென்றோம். நாம் முதலில் சென்றது பூவிருந்தவல்லி வைத்தியநாத சுவாமி கோவில். நாம் சென்ற நேரம் பிரதோஷ பூஜையில் நந்திக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சிவராத்திரிக்கு நாம் விரதமிருந்து வழிபட்டது இந்த கோவில் தான் என்றும் அவர்களிடம் கூறினேன்.

திருமஞ்சனத்தில் பெருமாள்

சற்று நேரத்தில்  வைத்தியநாத சுவாமியை தரிசனம் செய்துவிட்டு (அபிஷேகம் நடந்துகொண்டிருந்தது) அடுத்து அதற்கு எதிரேயுள்ள வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சென்றோம். நாம் சென்ற நேரம் அங்கு திருமஞ்சனம் நடைபெற்றுக்கொண்டிருந்தமையால் பெருமாளை தரிசிக்க முடியவில்லை. கோவிலை சுற்றி வந்து நமஸ்கரித்துவிட்டு உடனே கிளம்பிவிட்டோம்.

அடுத்து… மாங்காடு!

அடுத்து சென்றது மாங்காடு. மாங்காடு கோவிலுக்கு நாம் சென்ற நேரம் நல்ல கூட்டம். மாங்காடு கோவிலுக்குள் நுழையவும் நம் பிரார்த்தனை நேரம் வரவும் சரியாக இருந்தபடியால் அங்கு உற்சவர் சன்னதி அமைந்துள்ள வெளி பிரகாரத்தில் (காமாட்சியம்மன், லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும்தேவியர்) சன்னதிக்கு முன்பாக அமர்ந்து பிரார்த்தனை செய்தோம்.

லோகநாயகியின் அருள்….

காமாட்சியம்மன் பரமேஸ்வரனை நோக்கி ஊசி முனையில் தவம் செய்த புனிதத் தலமான மாங்காட்டில் நமது பிரார்த்தனை கிளப்பின் முதல் பிரார்த்தனை அதுவும் பாதிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட தமிழர்களுடனேயே நடைபெற்றது உண்மையில் மிகப் பெரிய விஷயம் தான். நிச்சயம் இதற்கு சாட் சாத் அந்த லோகநாயகியின் திருவருள்ளல்லாமல் வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?

அடுத்து தர்ம தரிசனத்தில் நின்று அம்மனை தரிசக்க ஒரு மணிநேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இடையே ஐந்து கால பூஜையில் மாலை வேளை நடைபெறும் பூஜைக்காக சன்னதி சிறிது சாத்தப்பட்டது. எனவே நாங்கள் அம்மனை தரிசித்துவிட்டு வெளியே வரும்போது 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது.

ஆனால் திவ்ய தரிசனம். அன்னை மிக சிறப்பான அலங்காரத்தில் காட்சி தந்தாள். அம்மன் முன்பாக இருக்கும் ஸ்ரீசக்கரம் அமைந்த பீடம் மிகப் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு நான் இந்த கோவிலுக்கு பல முறை சென்றிருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு தரிசனம் கிடைத்ததில்லை. பீடத்தையும் இப்படி ஒரு அலங்காரத்தில் கண்டதில்லை.

இதற்கு கருவியாக இருந்த மனோன்மணி அம்மாவுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.

பாலம் ஐயாவுடன் சந்திப்பு

அடுத்து அங்கிருந்து நேரே பாலம் ஐயாவை சந்திக்க சென்றோம்.

அப்போது நடந்த நெகிழ்ச்சியான விஷயங்கள் அடுத்த பதிவில்….

===============================================================
பிரார்த்தனை கிளப் தொடர்பான முக்கிய அறிவிப்பு  :

நம் தளத்தின் பிரார்த்தனை கிளப்பில் இடம் பெறவேண்டி மிக முக்கியமான பிரார்த்தனை கோரிக்கைகள் வாசகர்களிடம் இருந்து சில வந்துள்ளது. அவற்றில் ஒரு சில மிக தீவிரமானவை. மருத்துவம் மற்றும் உடல்நலம் சம்பந்தப்பட்டவை. அந்த நண்பர்களுக்காகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ள சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்காகவும் உடனடியாக பிரார்த்தனை மேற்கொள்ளவேண்டியது அவசியம். அவற்றை காலம் கடந்து செய்து பயனில்லை. எனவே நமது பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனை வரும் ஞாயிறும் இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். தள வாசகர்களும் நண்பர்களும் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட அன்பர்கள் நலம் பெற உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் ஒதுக்கும் சில நிமிடங்கள் அவர்களுக்கு மிக மிக முக்கியமானவை!

இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் பெயர் மற்றும் விபரங்களுடன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்த விபரங்களுடன் விரிவான பதிவை இரண்டொரு நாளில் அளிக்கிறேன்.

(பிரார்த்தனையை ஒவ்வொரு வாரமும் வைத்துக்கொள்ளலாமா அல்லது ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வைத்துக்கொள்ளலாமா என்பது குறித்து உங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன். தயவு செய்து தெரிவிக்கவும்.)

நன்றி!
===============================================================

14 thoughts on “மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்தில் ஈழத் தமிழர்களுடன் நடைபெற்ற நம் முதல் பிரார்த்தனை

  1. சுந்தர்ஜி உங்களது பிரார்த்தனை ஈழ சகோதரிகளுடன் மாங்காட்டில் செய்தது கடவுளின் திருவுள்ளம் அன்றி வேறு ஒன்றும் இல்லை.
    இருந்தாலும் தக்க சமயத்தில் யாருக்கு என்ன வேண்டும் என்பதை தீர்மானிக்கும் ஆற்றலை கொடுத்து, உங்களுடன் நல்லதை பகிர்ந்து கொள்ளும் பாக்யத்தை கொடுத்த அந்த கடவுளுக்கு நன்றி. எது வாரம் ஒரு முறை பிரார்தனை வைத்து கொள்ளலாம். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.

  2. Let it be every Sunday.

    24.3.12 அன்று மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்தேன். கொடிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டினேன்

  3. Dear Sundar,

    My suggestion is every week “Prarthana” is good for all. It will be easily remember by all (Sunday 5-30PM to 5-45PM).

    One week after one weak means, it may be missed (if we unable to connect to net and refer your Rightmantra site).

    Thank you very much for your effort and service.

    Thanks and Regards,
    Amuthan Sekar

  4. சுந்தர் ..அருமையான பதிவு …

    பிரார்த்தனை ஒவ்வொரு ஞாயிறு கண்டிப்பாக இருத்தல் நல்லது ..அதே சமயத்தில் – உதாரணத்துக்கு உங்களுக்கு ஒரு பிராத்தனை விண்ணப்பம் திங்கள் அன்று வருகிறது என்றால் , மற்றும் அது உடனே செய்ய வேண்டிய பிராத்தனையாக இருந்தால் ( மிகவும் கவலைக்கிடமாக இருப்பவர்களுக்காக பிராத்தனை ஐந்து நாள் கழித்து செய்தல் கால தாமதம் அல்லவே)..அதை உடனே செய்யும் படி ஏற்பாடு செய்தால் நல்லது என்று எண்ணுகிறேன்….
    பெரியவர்கள் நலம் விரும்பிகளின் யோசனை கேட்டு கொள்ளுங்கள் …

    மற்றபடி ஒவ்வொரு ஞாயிறும் கண்டிப்பாக பிராத்தனை வைத்து கொள்ளலாம் …. பிராத்தனை செய்ய காரணம் இல்லாமல் போக வாய்ப்பே இல்லை …இது கலியுகம் சுந்தர்!

    One Suggestion For All : நான் என் mobileல் reminder அலாரம் சரியாக ஒவ்வொரு ஞாயிறு அன்று மாலை 5.29 க்கு அடிக்கும் படி செட் செய்து விட்டேன் …. பயணத்திலோ , ஏதோ ஒரு வேலையிலோ நாம் அந்த சமயம் இருக்க கூடும் …அப்பொழுது இந்த அலாரம் கை குடுக்கும்

  5. Dear Sundar

    Please read below email which I sent to our CEO.

    Dear Aashish
    Good Evening!

    My friend working as a print media designer started his own site called RightMantra.com (The right formula for the right life). The site is completely based on Spirituality, Self Development, Health, Moral and True Values. I am the one of the regular readers and reading his messages and latest post. Recently he started one new segment called PRARTHANA CLUB (PRAYER CLUB). On behalf of this site every month (1st and 3rd Sunday) this Prayer club will function. (it may be changed to weekly) There is no specific place for this prayer club and readers can do the Prayer from their sitting place or if anyone in out of station they can also do this Prayer accordingly. Interested readers also can do this Prayer along with their entire family members exactly between 5:30 PM to 5:45 PM. They can sit in the clean place and do the Prayer. The primary plot of the prayer will be announced 3 days before the prayer day to the reader.

    The objective of this segment is ”if our prayer for others then our pains will be taken care by God and it will be solved automatically.” No need any Mantras or Slokas for this prayer just raising our non-stop wordings from inside the heart.

    Last Sunday I (as a reader) did this prayer from my Home for Srilankan Tamilians Safety and their peace also to get justice for affected people. Also to add very soon Tenth and Matric students appearing board exams, I pray and wish everyone should pass the exams and continue the higher studies without any break.

    Highlight: “Sometimes, all it takes is just One Prayer to change everything”.

    Just to share

    Thank You

  6. இந்தவார பிராத்தனை நல்ல படியாக நடந்தது . பிராத்தனை முடித்தஉடன் நல்ல ஒரு சொற்பொழிவு கேட்கும் வாய்ப்பு கிடைத்தது .
    சுவாமிநாதன் அய்யா அவர்களின் மஹா பெரியவர் மகிமைகள் பற்றி கேட்கும் வாய்ப்பு கிடைத்தது . ஒவ்வொரு ஞாயிற்றிகிழமையும் பிராத்தனை தாராளமாக செய்யலாம் . தினமுமே அனைவருககவும் சில நிமிடங்கள் பிராத்தனை செய்யலாம்.இந்த நல்ல முயற்சியை கொடுத்த சுந்தருக்கு நன்றி .

  7. ஞாயிற்றுகிழமை மாலை நான் பிரார்த்தனை செய்த இடம் எது தெரியுமா? நாகபட்டினத்தில் குடிகொண்டுள்ள கருணையே வடிவான அன்னை வேளாங்கண்ணியின் தேவாலயம். அதுவும் அன்றைய தினம் குருத்தோலை ஞாயிறு என்பதால் இன்னும் விசேஷம். அன்னை தேரில் பவனி வந்த காட்சி அற்புதம். நம் தளம் மூலமாக நிச்சயம் நல்லதே நடக்கும் சுந்தர்.

  8. அன்புள்ள சுந்தர்

    ஒவ்வொரு ஞாயிறு அன்றும் வைத்து கொள்ளலாம். 15 நிமிடம் ஒதுக்க யாரும் தயங்கமாட்டார்கள் என்பது என் கருத்து.

    நன்றி

  9. ஒவ்வொரு ஞாயிற்றிகிழமையும் பிரார்த்தனையை வைத்து கொள்ளலாம். நன்றி.

  10. Dear sir,

    I was in my room that day, we did a prayer for them.

    Thanks for this pledge….!!!

    Uday

  11. மிக அருமையான விஷயம் இது போல் இனி நல்லதே நடக்கும்

  12. பதிவு நன்றாக இருக்கிறது சுந்தர். உலகமே இன்று பார்த்துக் கொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக இந்த பிரார்த்தனை அமைந்தது தெய்வ செயல்.
    பல அன்பர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வாரா வாரமும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *