விளையாட்டு பொருட்களை நிறைய வாங்கி ஒரு சின்ன குழந்தையிடம் கொடுத்தீர்களானால் அது என்ன செய்யும் தெரியும் தானே?
தனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு பொருட்களை மட்டும் எடுத்து அதனுடன் விளையாடும். அது போல, இறைவன் சில சமயம் தான் மிகவும் விரும்பும் மனிதர்களுடன் விளையாடுவது வழக்கம்.
குழந்தைகள் விளையாடுவது அவர்களின் மகிழ்ச்சிக்காக. இறைவன் விளையாடுவது தனது மகிழ்ச்சிக்காக அல்ல. நம் கர்மாவை கரைக்க. நம்மை பக்குவப்படுத்த.
இருந்தாலும் அவனது விளையாட்டு என்பது நமக்கு வாழ்க்கையல்லவா?
ஆனால் விளையாடுவது அவனாயிற்றே. அவனிடம் கேள்விகள் கேட்க முடியுமா? விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தடுத்து நிறுத்தத் தான் முடியுமா?
கவியரசர் இதை மிக அழகா ஒரு பாட்டில் சொல்லியிருப்பார்…
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனதும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா !
“நீ என்னை தேர்ந்தெடுத்து விளையாடுறதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும். உன் ஆசை தீர விளையாடிக்கோப்பா. ஆனா பார்த்து… எனக்கு அதிகம் தெம்பில்லை” என்று அவனிடம் தஞ்சம் புகுவதை தவிர வேறு வழி இல்லை நமக்கு என்பது தான் நிதர்சனம்.
உன் பிள்ளை உன்னையல்லால் வேறு எங்கும் தஞ்சம் புகேன்!
எனவே அவன் கால்களை பற்றிக்கொள்வோம். ஒரு நாள் அவன் மனம் இரங்கும். அன்று வாழ்வு சிறக்கும்.
———————————————————————————–
நமது பிரார்த்தனை கிளப்பின் அடுத்த பரிமாணம்!
நமது பிரார்த்தனை கிளப்பின் அடுத்த பரிமாணமாக இனி நாம சந்திக்கும் சமூக சேவர்கள் மற்றும் சாதனையாளர்கள் ஆகியோரை இதில் இணைக்கவிருக்கிறோம்.
முதல்படியாக சமூக சேவகர் திருவண்ணாமலை மணிமாறனும் இனி நம்முடன் இணைந்து பிரார்த்தனை செய்யவிருக்கிறார்.
அவரிடம் நமது பிரார்த்தனை கிளப் பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் எடுத்துக்கூறி அவரையும் இதில் இணைய அழைத்துள்ளேன். இணையத்தை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் இனி ஒவ்வொரு ஞாயிறும் மாலை 5.30 முதல் 5.45 மணிவரை நமது தளத்தில் பிரார்த்தனை சமர்பிக்கிறவர்களுக்காகவும் தள வாசகர்களுக்காகவும் தாம் பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார்.
நம்முடைய பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்கிறானோ இல்லையோ… ஆனால் தன்னலமின்றி இந்த சமூகத்துக்காக அருந்தொண்டுகளை செய்து வரும் – மணிமாறன் போன்றவர்களின் பிரார்த்தனை நிச்சயம் வீண்போகாது. கேட்பவர்கள் கேட்டால் கொடுப்பவன் கொடுத்து தானே தீரவேண்டும்?
இனி, நாம் சந்திக்கும் ஒவ்வொரு சேவை மனப்பான்மை கொண்டவர்களிடமும், சாதனையாளர்களிடமும் நம் பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி அதில் அவர்களையும் இணைக்க உறுதி பூண்டிருக்கிறேன். நல்லோர் சேர சேர நிச்சயம் இதன் வலிமை அதிகரிக்கும். நம் அனைவரின் பிரார்த்தனையும் ஒரு வேள்வித் தீ போல எழுந்து நிச்சயம் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் என்பது திண்ணம்.
எனவே உறுதி குலையாமல் நம்பிக்கை அகலாமல் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வாருங்கள்.
நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்… சற்று தாமதமானாலும்!
எல்லாரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
சர்வ ஜனோ சுகினோ பவந்து!
உங்கள் கவனத்திற்கு :
இங்கு பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு கோரிக்கைகளை அளிப்பவர்களுக்கு உங்களால் ஏதேனும் ஒரு வகையில் உதவ முடிந்தால் (உதாரணத்துக்கு தகுந்த வேலை இன்றி அவதிப்படுகிறவர்களுக்கு வேலை வாங்கி கொடுப்பது, அல்லது உங்களுக்கு தெரிந்த இடங்களில் சிபாரிசு செய்வது, மருத்துவ உதவி தேவைப்படுகிறவர்களுக்கு சிகிச்சை அளிப்பது அல்லது தகுந்த இடத்தை சுட்டிக்காட்டுவது etc.etc.) அவசியம் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவும்.
இறைவனிடம் நாம் என்ன வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
=======================================
பிரிவு நீங்க வேண்டும்; இறைவா உன் கருணை பிறக்கவேண்டும்!
நானும் என் மனைவியும் நன்றாக புரிந்துகொண்டு காதலித்து இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம். தற்போது விதிவசத்தாலோ அல்லது வேறு காரணங்களினாலோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாடுகிறோம். எங்கள் இருவராலும் ஒருவரையொருவர் பிரிந்திருக்க இயலது என்பது நாங்கள் அறிந்ததே. நாங்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து எங்கள் வாழ்க்கையை இனிதே தொடர பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஜி. நீலகண்டன்
=======================================
நலம் பெறவேண்டும் – உன் கருணை அதற்கு வேண்டும்!
எனது சக அலுவலக ஊழியர் திரு.கோவிந்தராஜன் அவர்களுக்கு இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு செயலிழந்துவிட்டது. அவர் வசதியானவர் அல்ல. அவருடைய மனைவியின் சிறுநீரகம் பொருந்தியிருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இவருக்கு சிறுநீரகத்தை பொருத்தியிருக்கிறார்கள். இருவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருவரும் நலம் பெறவேண்டும் திரு.கோவிந்தராஜன்அவர்கள் விரைவில் அலுவலகம் திரும்பி சராசரி வாழ்க்கை வாழவேண்டும். அதற்காக நமது வாசகர்களை பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
– செல்வி ராஜன்
=======================================
God, please give me pillar of strength!
Dear Sundarji and Rightmantra friends,
I had undergone surgery on both my legs at different interval ( in 2 years gap) from knee to ankle due to multiple muscle tear inside my calf muscle.
Evenhough with gods grace I could walk now without sticks (Elbow stick) and Knee caps.. still I couldn’t stand for more than 10 minutes and everyday I Feel the pain on legs and knee too heavy which I couldn’t bear. Physiotherapy exercises and medicines doesn’t work and it all were temprary..
I run my life always with this pain and I am too worried for repetition of such problems again which may affect my work life and personal life.
Request to pray for me to overcome this major obstacle
Thanks
Sankar S
=======================================
Oh God take care of this noble soul please!
Dear friends,
My friend Ganapathy Subramaniam has been without a job for the past 1.5 years and is going through financial crunch and mental agony. To enable him to get a good job and have peace of mind, I request all Rightmantra family members to pray for him and his family. May Kanchi Maha Periyava bless him with a good job, prosperity and peace of mind!
Regards,
Sriram (Baba Ram)
=======================================
திரு.நீலகண்டன் அவர்கள் விரைவில் தமது துணையுடன் சேர்ந்து இன்புற்று வாழவும், சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள திரு.கோவிந்தராஜன் தம்பதிகள் விரைவில் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் திரும்பவும், திரு.சங்கர் அவர்களுக்கு காலில் ஏற்பட்டுள்ள் பாதிப்பு முழுமையாக நீங்கி அவர் ஆரோக்கியத்துடன் வாழவும், திரு.கணபதி சுப்பிரமணியம் அவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து அவரது பிரச்னைகள் தீரவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
=============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
பிரார்த்தனை நாள் : ஜூலை 7, 2013 ஞாயிறு
நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=======================================================
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================
திரு.நீலகண்டன் அவர்கள் விரைவில் தமது மனைவியுடன் சேர்ந்து வாழவும், சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள திரு.கோவிந்தராஜன் தம்பதிகள் விரைவில் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் திரும்பவும், திரு.சங்கர் அவர்களுக்கு காலில் ஏற்பட்டுள்ள் பாதிப்பு முழுமையாக நீங்கி அவர் ஆரோக்கியத்துடன் வாழவும், திரு.கணபதி சுப்பிரமணியம் அவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து அவரது பிரச்னைகள் தீரவும் எல்லாம் வல்ல இறைவனை நாம் அனைவரும் வேண்டிக்கொள்வோம். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.
\\“நீ என்னை தேர்ந்தெடுத்து விளையாடுறதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும். உன் ஆசை தீர விளையாடிக்கோப்பா. ஆனா பார்த்து… எனக்கு அதிகம் தெம்பில்லை” என்று அவனிடம் தஞ்சம் புகுவதை தவிர வேறு வழி இல்லை\\.
பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை.
கேட்பவர்கள் கேட்டால் கொடுப்பவன் கொடுத்து தானே தீரவேண்டும்?
//எட்டி எட்டி நீ உதைத்தாலும் உன் பாதம் விலகேன்
உன் பிள்ளை உன்னையல்லால் வேறு எங்கும் தஞ்சம் புகேன்!
எனவே அவன் கால்களை பற்றிக்கொள்வோம். ஒரு நாள் அவன் மனம் இரங்கும். அன்று வாழ்வு சிறக்கும்.
அவன் விளையாட நாம் கொடுத்து வைத்தாலும் தாங்க மனம் வேண்டும் அல்லவா?//
இதுவரை நான் படித்து கண்ணில் நீர் வழிய வழிய படித்தது இதுதான்.
திரு.நீலகண்டன் அவர்கள் விரைவில் தமது துணையுடன் சேர்ந்து இன்புற்று வாழவும், சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள திரு.கோவிந்தராஜன் தம்பதிகள் விரைவில் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் திரும்பவும், திரு.சங்கர் அவர்களுக்கு காலில் ஏற்பட்டுள்ள் பாதிப்பு முழுமையாக நீங்கி அவர் ஆரோக்கியத்துடன் வாழவும், திரு.கணபதி சுப்பிரமணியம் அவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து அவரது பிரச்னைகள் தீரவும் மனமார பிரார்த்தனை செய்து
அவரவர்கள் பிரச்சினை தீர்ந்து வளமாக வாழ வேண்டி பிரார்த்தனை
செய்து கொள்வோம்.
சுந்தர்ஜி,
தாங்கள் பிரார்த்தனை போஸ்ட் செய்துள்ள நேரம்
பார்த்தால் பிரமிப்பாக உள்ளது. எல்லோரும் உறங்கும் நேரத்தில் தாங்கள் விழித்திருந்து தன்னலம் கருதாமல் பிறர் நலன் கருதும்
உங்களையும் பகவான் நலமாக வைப்பார். வாழ்த்துக்கள். take care of yourself.
நன்றி.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு சேவை மனப்பான்மை கொண்டவர்களிடமும், சாதனையாளர்களிடமும் நம் பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி அதில் அவர்களையும் இணைக்க உறுதி பூண்டிருக்கிறேன். இது ரொம்ப நல்ல விஷயம் சார் ஏன் என்றால்
கேட்பவர்கள் கேட்டால் கொடுப்பவன் கொடுத்து தானே தீரவேண்டும் – இவர்களுக்கு அந்த சக்தி உண்டு என நான் நினைக்கின்றேன்.முதல்படியாக சமூக சேவகர் திருவண்ணாமலை மணிமாறனும் இனி நம்முடன் இணைந்து பிரார்த்தனை செய்யவிருக்கிறார். என்பது மிகவும் சந்தோசமாக உள்ளது
நம்முடைய பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்கிறானோ இல்லையோ… ஆனால் தன்னலமின்றி இந்த சமூகத்துக்காக அருந்தொண்டுகளை செய்து வரும் – மணிமாறன் போன்றவர்களின் பிரார்த்தனை நிச்சயம் வீண்போகாது.
God always choose only the Right person for doing Right work.
Sundar sir, you are head of the department for US.
அன்புள்ள பிரார்த்தனை கிளப் நண்பர்களே
முன்பின் தெரியாத எனக்காக இன்று பிரார்த்தனையில் ஈடுபடும் நல்ல உள்ளங்களுக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.
இந்த இணையதளத்தில் தொடர்பு ஏற்படுத்திய திரு ஸ்ரீராம் மற்றும் திரு சுந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
மாயையின் வசத்தாலும் விதியின் விளையாட்டாலும் நித்தம் பல அல்லல் படும் எண்ணற்றோருக்கு நல்லதொரு மார்கத்தை காட்டி அவர்கள் செய்த பிழை பொறுத்து தடுத்தாட்கொண்டு என்றென்றும் துணை நின்று வழி நடத்திட எல்லாம் வல்ல இறைவன் எல்லோருக்கும் அருள் புரிவாராக !!!
வாழ்க வளமுடன் !!!