Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > மறுப்பதும் ஒரு கலை, அதை அழகாக செய்வோமே!

மறுப்பதும் ஒரு கலை, அதை அழகாக செய்வோமே!

print
வெறும் படிப்பும், உத்தியோகமும், செல்வமும், தோற்றமும், ஒரு ஆணையோ பெண்ணையோ முழுமையடைச் செய்வதில்லை. இவற்றுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு எத்தனையோ விஷயங்கள் உள்ளன.

ஒருவரின் படிப்பை மதிப்பவர்கள் அவரின் உத்தியோகத்தை மதிக்கமாட்டார்கள். உத்தியோகத்தை மதிப்பவர்கள் படிப்பை மதிக்கமாட்டார்கள். சரி இரண்டையுமே மதிப்பவர்கள் என்றால் தோற்றத்தை மதிக்கமாட்டார்கள். பணத்தை மதிப்பவர்கள் மற்ற எதையுமே மதிக்கமாட்டார்கள்.

இந்த மதிப்பீடு நாம் சந்திக்கும் மனிதர்களிடையே கலந்து தான் இருக்கும். எல்லாரும் எல்லாவற்றையும் மதிக்கமாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை. காரணம் எல்லாருக்கும் எல்லாம் தெரிந்துவிடாது. அவரவர் வளரும் சூழல் வாழும் சூழல் இவற்றை பொறுத்தே அவர்களது மனப்பக்குவமும் இருக்கும்.

இந்த சூழ்நிலையில், நம்மை சுற்றியிருப்பவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு நாசூக்காக நாம் நடந்துகொண்டால், நன்மைகள் நமக்குத் தான். இல்லையெனில் ஒற்றை மரமாகத் தான் நிற்க நேரிடும்.

நம்மை பொருத்தவரை நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு ஆசான் போலத் தான். சிலரிடம், ‘எப்படி இருக்கவேண்டும்” என்று கற்றுக்கொள்வோம். சிலரிடம் “எப்படி இருக்கக்கூடாது” என்றும் கற்றுக்கொள்வோம். அவர்கள் மூலம் நாம், நம்மை பக்குவப்படுத்திக்கொள்வோம். THAT’S ALL.

IMG_5763

இந்த கீதையை நாம் என்றோ உணர்ந்திருந்தாலும் ஒரு நாள் சென்னை நகர சாலையில் நமக்கு முன்னே சென்ற ஆட்டோ ஒன்றில் இந்த வாசகத்தை பார்த்தோம். அன்று முதல் பச்செக்கென்று நமது மனதில் இந்த வாசகம் ஒட்டிக்கொண்டுவிட்டது.

இந்த எண்ணம் மனதில் ஊன்றப்பட்டதில் இருந்து நாம் சந்திக்கும் / பழகும் ஒவ்வொருவரும் நமக்கு சுவாரஸ்யமாகத் தான் தெரிகிறார்கள்.

நம்மை பொருத்தவரை எவரேனும் நம்மை சந்தோஷப்படுத்தவோ அல்லது அறிந்தும் அறியாமலும் நம்மை காயப்படுத்தவோ முயற்சித்தால் அதை நாம் ஆக்கப்பூர்வமான முறையில் தான் எடுத்துகொள்வோம். பிரதிபலிப்போம். சில காயங்கள் நம்மை நிலை குலையவைத்துவிடும். ஆனால் சீக்கிரமே “இதுக்கு போய் அலட்டிக்கலாமா…. இன்னும் சாதிக்க எவ்வளவோ இருக்கு…” என்று நமக்கு நாமே கூறிக்கொண்டு எழுந்து நின்றுவிடுவோம். முன்பை விட பலசாலியாக.

இப்படி நம்மிடையே ஏதாவது ஒருவகையில் பாதிப்பு ஏற்படுத்திய விஷயங்களை பற்றிய தொகுப்பே இந்த ஆளுமை முன்னேற்றத் தொடர்!

இந்த தொடர், உறவுமுறைகளில், பழகுவதில் உள்ள நுட்பங்களை தெளிவாக விளக்கி நிச்சயம் உங்களை ஒரு முழுமனிதனாக்கும். அனைவரிடமும் நன்மதிப்பை பெற்றுத் தரும்.

இதுவரை நாம் கற்றது, தற்போது கற்றுக்கொண்டிருப்பது, எதிர்காலத்தில் கற்கப்போவது அனைத்தும் இந்த தொடரில் இடம்பெறும்.

உங்கள் கருத்துக்களை முடிந்தால் பகிர்ந்துகொள்ளவும்.

(இந்த தொடரின் முதல் நான்கு பகுதிகள் ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டது. இது ஐந்தாவது பகுதி.  இனி தொடர்ந்து அளிக்கப்படும். தொடராக படித்தாலும் சரி… தனியாக படித்தாலும் சரி… இதற்கு பொருள் இருக்கும். அதேபோல, மற்ற தொடர்களும் இனி ரெகுலராக அப்டேட் செய்யப்படும்.)

நன்றி!

======================================================================
மறுக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும்!

சமீபத்தில் நமது வாசக நண்பர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, “என் நெருங்கிய நண்பர் வீட்டில் அடுத்த வாரம் விசேஷம் ஒன்று வருகிறது. நான் முன்கூட்டியே அந்த நாளில் எதையும் திட்டமிட்டுவிடக்கூடாது என்று சென்ற வாரமே அது பற்றி கூறி எனக்கு தெரியப்படுத்திவிட்டார். அவசியம் நான் வரவேண்டும், வராமல் இருக்க எந்த சாக்கும் சொல்லக்கூடாது” என்றும் கூறியிருக்கிறார். நானும் போவதாகத் தான் இருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த நாளில்
உறவினர் ஒருவரின் வீட்டுக்கு குடும்பத்துடன் வெளியூர் செல்கிறேன். நண்பர் வீட்டு விசேஷத்திற்கு செல்லமுடியாத நிலையில் இருக்கிறேன். நான் போகவில்லை என்றால் நிச்சயம் கோபித்துக்கொள்வார். போனால் இங்கு நான் பார்க்கவேண்டிய வேலை பாதிக்கப்படும். இதை அவரிடம் எப்படி சொல்வதென்று தெரியவில்லை!” என்றார்.

“இது ஒரு விஷயமே இல்லை. நீங்கள் போகவில்லை என்பதால் உங்கள் நண்பர் கோபித்துக்கொள்வார் என்றால் அதற்காக நீங்கள் சந்தோஷப்படவேண்டும். அவர் அந்தளவு உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று பொருள். உங்கள் ABSENCE குறித்து அவர் கோபித்துக்கொள்ளவில்லை என்றால் தான் நீங்கள் கவலைப்படவேண்டும்” என்றோம்.

I am Sorry

“நீங்கள் சொல்வது புரிகிறது. அவர் என் மீது கோபப்பட்டால் கூட பரவாயில்லை. ஆனால் வருத்தப்பட்டால் என்ன செய்வது? என் நிலையை எப்படி அவருக்கு புரியவைப்பது என்று தெரியவில்லை” என்றார்.

“SIMPLE. உங்கள் நண்பருக்கு உங்கள் நிலையை விளக்கி ஒரு மின்னஞ்சலோ அல்லது எஸ்.எம்.எஸ்.ஸோ அனுப்பிவிடுங்கள். நிச்சயம் உங்கள் நண்பர் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார். பின்னர் நேரில் ஒரு நாள் அவரை சென்று பார்த்துவிட்டு வாருங்கள்.”

நாம் மேலும் தொடர்ந்தோம்…

“நம்மில் பலர் செய்யும் தவறு இது தான். நாம் விரும்பியும் கூட சில சமயங்களில் சில நிகழ்ச்சிகளில் சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் நம்மால் கலந்துகொள்ள முடியாது. அது போன்ற தருணங்களில் நம்மை மதித்து அழைப்பு விடுக்கிறவர்களுக்கு நமது நிலையை விளக்கி தகவல் அனுப்பிவிடவேண்டும். தினசரி கண்ணாடியில் முகம் பார்க்கிறார்களோ இல்லையோ மின்னஞ்சலை பார்க்காதவர்களோ அல்லது காலை எழுந்தவுடன் மொபலை பார்க்காதவர்களோ எவரும் கிடையாது. எத்தனை பரபரப்புடன் இருந்தாலும் இவை இரண்டையும் பார்த்துவிடுவார்கள். உங்கள் தகவல், அவர் உணவோ அல்லது வாகனமோ ஏற்பாடு செய்வதற்கு உதவியாக இருக்கும். போகப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டால் அதை உடனே தெரிவித்துவிடவேண்டும்.

கலந்து கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்யமுடியவில்லையா? அதையும் தெரிவித்துவிடவேண்டும். “இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன். முடிந்தால் கலந்துகொள்வேன். இல்லையென்றால் தவறாக நினைக்கவேண்டாம்” என்று ஒரு தகவல் அனுப்பினால் போதும். இதைக் கூட உங்களால் செய்ய முடியாதா? முன்பெல்லாம் இதை நான் செய்யத் தவறியது உண்டு. தற்போது இதை நான் தீவிரமாக கடைப்பிடித்து வருகிறேன்!” என்றோம்.

சிலருக்கு உலகிலேயே பிஸியான ஆட்கள் அவர்கள் தான் என்கிற நினைப்பு உண்டு. “தகவல் எல்லாம் சொல்லிகிட்டிருக்க என்னால முடியாது. எனக்கு என் வேலை தான் முக்கியம். அவங்களா புரிஞ்சிக்கணும்…” என்கிற மனப்பான்மை மிகப் பெரிய தவறு. நாகரீகமான மனிதர்களிடம் குறிப்பாக பெரிய மனிதர்கள் எவரிடமும் இந்த அணுகுமுறை இருக்காது!” என்றோம்.

“நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரி.. இப்போதே வீட்டுக்கு போனவுடன் நண்பருக்கு தகவல் அனுப்பிவிடுகிறேன்!” என்றார்.

மறுப்பதும் ஒரு கலை. அதை அழகாக எவர் மனமும் புண்படாதவாறு செய்வோமே!

அனுபவம் தொடரும்….

==============================================================
ஆளுமை முன்னேற்றத் தொடர் – முந்தைய பதிவுகளுக்கு :
http://rightmantra.com/?s=episode&x=0&y=0
==============================================================

[END]

10 thoughts on “மறுப்பதும் ஒரு கலை, அதை அழகாக செய்வோமே!

  1. மறுப்பதும் ஒரு கலை, அதை அழகாக செய்வோமே!

    தலைப்பிலே அனைத்தும் அடக்கிவிட்டீர்கள் .வரவர இருவரி கவியாக கொட்டுகிறீர்கள் .

    \\“இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன். முடிந்தால் கலந்துகொள்வேன். இல்லையென்றால் தவறாக
    நினைக்கவேண்டாம்” என்று ஒரு தகவல் அனுப்பினால் போதும். \\

    எல்லோருக்கும் உரைக்கும் விதமாக பதிவிட்டு ,அனுபவத்தை பகிர்தமைக்கு நன்றி…நன்றி …நன்றி

    -மனோகர்

  2. சிலருக்கு உலகிலேயே பிஸியான ஆட்கள் அவர்கள் தான் என்கிற நினைப்பு உண்டு. “ எனக்கு என் வேலை தான் முக்கியம். அவங்களா புரிஞ்சிக்கணும்…” என்கிற மனப்பான்மை மிகப் பெரிய தவறு. நாகரீகமான மனிதர்களிடம் குறிப்பாக பெரிய மனிதர்கள் எவரிடமும் இந்த அணுகுமுறை இருக்காது!”

    “நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரி.
    எதையும் சொல்லாமல் இருப்பதை விட” சரியான நேரத்தில்” சொல்லிவிடுவது மேலானது …

  3. டியர் சுந்தர்ஜி

    உங்கள் article மிக அற்புதம்.

    //மறுப்பதும் ஒரு கலை. அதை அழகாக எவர் மனமும் புண்படாதவாறு செய்வோமே!//

    இதன் மூலம் எதோ ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் போனால் கண்டிப்பாக sms அனுப்பும் பழக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தி கொள்வார்கள்.

    நன்றி
    உமா

  4. தலைப்பே பதிவை படிக்கும் ஆர்வத்தை தூண்டிகிறது..கவிதையான தலைப்பு. உங்கள் கருத்தும், எழுத்தும் நாளும் மெருகேறிக் கொண்டே போகிறது.

    நானும் ஒரு காலத்தில் நண்பர்களின் அழைப்பை தவிர்க்கவும் முடியாமல், போகவும் முடியாமல், மறுக்கவும் தெரியாமல் இருந்ததுண்டு. எங்கே போகவில்லை என்றால் கோபித்துக் கொள்வார்களோ, நட்பில் விரிசல் வந்து விடுமோ என்று பயந்ததுண்டு. (சில வருடங்களுக்கு முன்பு என்னை சுந்தர் அண்ணா கோவிலுக்கு அழைக்க , நான் வரமுடியாததை அவரிடம் சொல்ல பயந்து, வேறு விதமாக சொல்லி, கடைசியில் அது காமெடியில் முடிந்தது. இப்போதும் சிரிப்பை வரவழைக்கும்.) .ஆனால் தற்போது என் மறுக்கும் அணுகுமுறையில் மாற்றம் வந்துவிட்டது. எந்த மறுப்பையும் மறுக்காமல் சொல்லிவிடுகிறேன். காலம் தந்த பாடம் இது. !

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  5. சுந்தர் சார் வணக்கம் …..மறுப்பதும் ஒரு கலை. அதை அழகாக எவர் மனமும் புண்படாதவாறு செய்வோமே…..மிக அற்புதம் ….அருமையான தகவல்… நானும் பலமுறை பல நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத போது வருத்தப்பட்டு இருக்கிறேன்….இன்று நீங்கள் கொடுத்த தகவல் எனக்கு மிகவும் பயன் தரும் ….. இதன் மூலம் எதோ ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் போனால் கண்டிப்பாக sms அனுப்பும் பழக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தி கொள்வார்கள்.

    நன்றி

    தனலட்சுமி …….

  6. Dear Anna,

    Vazhga Valamudan,

    Very good message . I will start follow this method.

    With kind regards,
    Kannathasan

  7. மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது ,மன்னிக்கவும் தெரிய வேண்டும்

  8. சுந்தர் சார் வணக்கம்

    அருமையான பதிவு, அருமையான விளக்கம்

    நன்றி

  9. சுந்தர் சார் அருமையான பதிவு தொடரட்டும் !! வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *