Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > முருகா என்றதும் உருகாதா மனம்… Rightmantra Prayer Club

முருகா என்றதும் உருகாதா மனம்… Rightmantra Prayer Club

print
முருகப் பெருமானையையே சிந்தித்து வாழ்ந்து வந்த தம்பதிகள் அவர்கள். செல்வத்திற்கோ சுற்றத்திற்கோ பஞ்சமில்லை. ஆனால் ஆயிரம் இருந்தும் என்ன? கொஞ்சி மகிழ குழந்தை ஒன்று இல்லையே என்கிற குறை அவர்களுக்கு. முருகனிடம் கதறித் துடித்தார்கள். அவர்கள் நிலை கண்டு இரங்கிய கந்தக் கடவுள், அந்த கண்ணீர் பிரார்த்தனைக்கு செவி சாய்த்தான். அழகிய ஒரு பெண் குழந்தைக்கு தாயானாள் அவள்.

Thirupporur Temple
திருப்போரூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கோபுரம்

முருகப் பெருமானின் அருளால் பிறந்த குழந்தையாதலால் ‘முருகம்மை’ என்று முருகனின் பெயரையே மகளுக்கும் சூட்டினர்.  முருகம்மை இளமை முதலே பெற்றோரைப் போலவே முருக பக்தியில் திளைத்தார்.

நடந்தால் முருகா, படுத்தால் முருகா, அமர்ந்தால் முருகா, சாப்பிடும் போது முருகா, தந்தையையும் முருகா, தாயையும் முருகா, தோழியரையும் முருகா, விளையாடும்போதும் முருகா, என்றபடி முருகனின் திருநாமத்தை உச்சரித்தபடியே இருப்பார். இதுகண்டு பெற்றோர் அகமகிழ்ந்தனர்.

பெண் வயதுக்கு வந்ததும் ஏனைய பெற்றோர் போலவே இவர்களுக்கு ஒரு கவலை வந்தது. இவளுக்கு ஏற்ற ஒரு மணாளன் அமைய வேண்டுமே. சுற்றத்தில் பேசி தந்தையை இழந்த நிலையிலும் சிறப்பாக வாணிபம் செய்து வந்த செட்டிக் குளத்தில் பிறந்த குணத்தில் சிறந்த தனஞ்செயன் என்ற வாலிபனுக்கு இவளை மணம் முடித்து வைத்தனர்.

முருகம்மை கணவனின் மனம் கோணாமல், இல்லறம் நடத்தி வந்தால். கணவனின் தாய், உடன்பிறந்த சகோதரி உட்பட அனைவரிடமும் அன்புடன் நடந்து வந்தாள். தனஞ்செயனும் மனைவி மீது கொள்ளைப்பிரியம் வைத்திருந்தான். இது மாமியாருக்கும், நாத்தனாருக்கும் பொறுக்கவில்லை. “இவன் என்ன அவள் பின்னாலேயே சுற்றுகிறான். முந்தானை முடிச்சு போட்டு அவள் இவனை மயக்கி வைத்திருக்கிறாள். நாளைக்கே நாம்மை இவள் விரட்டிவிட்டால் நம் நிலை என்னாவது என தேவையில்லாமல் பொறாமைப்பட்டனர்.

முருகம்மையை பழிதீர்க்க ஏற்றதொரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர். இனம் இனத்தோடு சேரும் என்கிற பழமொழிக்கு இணங்க மற்ற உறவினர்களும் இதற்கு உடன்பட்டனர்.

எப்பேர்ப்பட்ட மனிதனையும் கெட்டநேரம் விதியில் சிக்க வைத்துவிடும். இவள் மட்டும் விதிவிலக்கா என்ன!

முருகம்மையின் கணவன் தனஞ்செயனின் வியாபாரத்தில் நஷ்டத்தில் ஏற்பட்டது. மனம் வெறுத்த அவன் பொருளீட்டும் பொருட்டு கடல் தாண்டி அயல்நாடு சென்றான்.

போகும்போது முருகம்மைக்கு துணையாக ‘முருகன்’ என்ற வேலைக்காரனை வீட்டுப்பணியில் அமர்ந்தினான்.

மணாளன் திரும்பும் வரை அவன் நினைவிலேயே இருந்தாள் முருகம்மை.

இயல்பாகவே அனைவரையும் முருகா, முருகா என அழைக்கும் வழக்கம் உள்ளவர் முருகம்மை. மேலும் தற்போது கணவனை வேறு பிரிந்திருந்தபடியல் இரவு கணவனின் நினைவு வரும்போதெல்லாம் தூக்கத்தினின்று எழுந்து முருகா… முருகா…. எனக்கு ஆறுதல் அளிக்க மாட்டாயா என்று புலம்பித் தவிப்பாள். இப்படி அடிக்கடி அவள் முருகன் பெயரை சொல்லி அழைப்பதைப் பயன்படுத்தி, அவளுக்கும், வேலைக்காரன் முருகனுக்கும் தொடர்பிருப்பதாக கட்டுக்கதை எழுப்பினர்.

குன்றத்தூர் அடிவாரம்
குன்றத்தூர் அடிவாரம் – இது கோவிலல்ல… நம்பிக்கையின் வாயில்…!

ஊர்திரும்பிய தனஞ்செயனிடம் இதைப் பற்றி கூறியபோது அவன் மனைவியை சந்தேகிக்கவில்லை. இருப்பினும் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமல்லவா? ஒரு கட்டத்தில் மனைவியை பற்றி உறவினர்கள் கூறும் அவதூறை நம்பத் துவங்கினான். ஒரு நாள் வழக்கம் போல இவள் தூக்கத்தில் முருகா முருகா என்று அழைக்க, இவன் நம் சந்தேகம் உறுதியாயிற்று என்று கருதி, “இனி அந்தப் பெயரை சொல்லாதே” என்றான்.

“முருகனின் பெயரைச் சொல்லாமல் இனி நான் எப்படி இருப்பேன். ஆனால் கணவனே கண்கண்ட தெய்வம் என்பதால் இனி அவன் பெயரைச் சொல்லமாட்டேன் முருகா…” என்று இறுதியாக கூறும் ஒரு வித ஏக்கத்தோடு மூன்று முறை “முருகா… முருகா… முருகா…” என்று அழைத்தாள்.

நான் அத்தனை கூறியும் அந்த பெயரை உரைத்தாயே என்று கூறி கோபம் கொண்டு அவளது கைகளை வெட்டிவிட்டான்  கணவன்.

“முருகா, உன் திருநாமம் சொன்னதற்காக எனக்கு இப்பேர்ப்பட்ட சோதனையைத் தந்தாயே” என அலறித்துடித்தாள் முருகம்மை.

தன் கற்புக்கு விளைந்த களங்கத்தை துடைக்க முருகனே கதியென உண்ணாமல் உறங்காமல் கிடந்தாள்.

புத்தாண்டு அன்று கிடைத்த வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி தரிசனம்
புத்தாண்டு அன்று குன்றத்தூரில் கிடைத்த வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி தரிசனம்

அவளது  நிலை கண்டு கருணை கொண்ட கந்தன், வள்ளி மணாளனாக அவள் முன் காட்சி தந்தார்.  இழந்த கைகளை திரும்பக் கொடுத்து அதிசயம் நிகழ்த்தினார்.

“முருகம்மை… உன் அப்பழுக்கற்ற பக்தியால் மனமகிழ்ந்தோம்… உனக்கு தீங்கிழைத்தவர்களை தண்டிப்போம். நீ வேண்டும் வரம் கேள்!” என்றவுடன், தனது கணவனுக்கு முருக பக்தி ஏற்பட்டு தம் இல்லறம் இனி சிறக்க உதவவேண்டும், மேலும் தனக்கு தீங்கிழைத்த மாமியார் மற்றும் நாத்தனாரை மன்னிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள்.

அவளது நல்ல மனதைப் பாராட்டிய முருகப் பெருமான் அப்படியே ஆகுக என்று கூறி தனஞ்செயனை நோக்க, முருகனின் பார்வை பட்ட மாத்திரம் தனஞ்செயனிடம் இருந்த தீய சிந்தனைகள் அகன்றன.

தம்பதிகளை நீண்டகாலம் பூமியில் வாழச் செய்து, இறுதியில் தன்னுலகில் சேர்த்துக் கொண்டார் முருகப் பெருமான்.

முருகம்மையின் திவ்ய சரிதத்தை கேட்டாலோ படித்தாலோ  உடல்நலமின்றி மருத்துவமனையில் இருப்போர், விபத்தாலோ நோயாலோ அங்கம் பாதிக்கப்பட்டு அவதியுறுவோர் ஆகியோர் நலம் பெறுவர். மாமியார் மற்றும் நாத்தனார்களால் துன்புறும் பெண்கள் இன்பம் பெறுவர்.

முருகம்மைக்கு முருகப்பெருமான் இவ்வாறு அருள் புரிந்த தலம் சிறுவாபுரி ஆகும். இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும். சர்வ மங்களம் உண்டாகும்.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவது : போரூர் பாலமுருகன் கோவிலின் அர்ச்சகர் திரு. துரைசாமி குருக்கள் (75) அவர்கள்.

துரைசாமி குருக்கள் அவர்களின் பூர்வீகம் மயிலாடுதுறை. சிறுவயது முதலே இறைவனுக்கு பூஜை செய்யும் அருந்தொண்டான குருக்கள் பணிக்கு  வந்துவிட்ட இவருக்கு மகன், மகள், பேரக்குழந்தைகள் என பலர் உண்டு. ஒரு பெரிய குடும்பத்தை கட்டிக்காத்து நிர்வகிக்கும் ஒரு சிறந்த குடும்ப தலைவர்.

நமது வாசகர்கள் மூலம் துரைசாமி குருக்கள் கௌரவிக்கப்படுகிறார்.
நமது வாசகர்கள் மூலம் துரைசாமி குருக்கள் கௌரவிக்கப்படுகிறார்.

இவரது சிறப்பு என்னவென்றால் பல திருக்கோவில்களுக்கு தனது கைகளால் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார் அதற்குரிய யாகங்களில் பங்கேற்றிருக்கிறார். கோவிலுக்கு குடமுழக்கு செய்வது என்பது சாதரணமான விஷயம் அல்ல. மிகப் பெரிய பாக்கியம் அது.

இந்த பாலமுருகன் கோவிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தொண்டாற்றி வருகிறார். இவரது மகன் நித்தியானந்தன் என்பவரும் இங்கு குருக்களாக இருக்கிறார். பரம்பரையே புனிதத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு உன்னத குடும்பம்.

சில வாரங்களுக்கு முன்பு இந்த கோவிலில் நமது தளம் சார்பாக உழவாரப்பணி நடைபெற்றது நினைவிருக்கலாம். அப்போது பணியில் பங்கேற்ற நம் வாசகர்களுக்கு ஸ்ரீ ராமர் ஜாதகத்துடன் கூடிய காரிய சித்தி ஆஞ்சநேயர் படமும் சுந்தரகாண்டம் நூலும் குருக்கள் அவர்களின் கரங்கள் மூலம் பரிசளித்தோம்.

முன்னதாக பங்கேற்ற அனைவரின் பெயரிலும் அவர்கள் குடும்பத்தினர் பெயரிலும் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சன்னதியில் அர்ச்சனை செய்யப்பட்டது. அப்போது சிறந்த முறையில் அனைவருக்கும் அர்ச்சனை செய்து தொண்டு சிறக்க உதவினார் திரு.துரைசாமி குருக்கள் அவர்கள்.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி திரு.துரைசாமி அவர்களிடம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். தற்போது அவர் மகன் திரு.நித்தியானந்தன் அவர்களிடமும் கூறியிருக்கிறோம். பிரார்த்தனை நடைபெறும் நேரம் நாமும் கோவிலுக்கு வருவதாக சொல்லியிருக்கிறோம். அவருக்கும் திரு.துரைசாமி குருக்கள் அவர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி.

==================================================================

* நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்பி இதுவரை இடம்பெறாதவர்கள் மீண்டும் நமக்கு அதே மின்னஞ்சலை அனுப்பி நினைவூட்டவும். தொலைபேசியில் கூறியிருந்தால் மீண்டும் தொடர்புகொண்டு நினைவுபடுத்தவும்.

** பிரார்த்தனை நிறைவேறிய வெற்றிக் கதைகள் அடுத்த  வாரம் வெளியிடப்படும்.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

அன்புள்ள சுந்தர் அண்ணாவிற்கு,

உங்கள் தளத்தின் வாசகன் கிருஷாந்த் எழுதுகின்றேன்.

நான் என்னுடைய பிரச்சனைகளை பற்றி உங்களோடு கதைத்து உள்ளேன்.

நேற்று எனது நண்பர் ஒருவர் என்னை சந்தித்தார். அவரோடு பேசும் போதே இதற்கு உங்களோடு தான் கதைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டேன். தற்போது பிரச்சனையை சுருக்கமாக கூறுகின்றேன்.

நண்பரின் பெயர்: ரஞ்சித்

இவருக்கு 25 வருடமாக நீரிழிவு( diabites)இருக்கின்றது. சில காலமாக  insulin injection பாவித்து வருகின்றார். 5 மாதம் முன்னால் அவருடைய காலில் ஏற்பட்ட ஒரு வித ஒவ்வாமை காரணமாக கால் பகுதியில் சிரங்கு தோன்றியது. அதற்கு உரிய treatment  எடுத்தும் அது முழுமையாக  சுகம் பெறவில்லை. ஓரளவு குறைந்து இருந்தது. ஆனால் இப்போது ஒரு சில நாட்களுக்குள் காலில் சிதல் தோன்றி இருக்கிறது. நேற்று அவர் surgeon  ஒருவரை சந்தித்து consult பண்ணினார். அப்போது அவர் உங்கள் ஒரு காலை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், உங்கள் kedney பாதிப்படைந்து உள்ளது. 3 மாதம் தான் உயிர்  வாழ முடியும் என்று காலகேடும் கொடுத்து இருக்கிறார். இதனால் அவர் மன ரீதியாக மிகவும் பாதிப்படைந்து உள்ளார்.

என்னிடம் நேற்று அவர் இதனை பற்றி கதைக்கும் போது நான் அவரிடம் எதுவும் இறைவன் கையில் தான் இருக்கிறது என்று கூறி தன்னம்பிக்கையினை இழக்க வேண்டாம் என்றும் கூறி நமது தள வெப்சைட் இனை அவரிடம் கூறி இதை பார்க்கும் படி கூறினேன்.

ஆனால் அவரின் இந்த நிலை என்னை மிகுந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது.

சுந்தர் அண்ணா அவர் தற்போது colomboசென்று treatmentஎடுக்க உத்தேசித்துள்ளார். அவருடைய நோய் குணமாகி அவர் சுகம் பெற்று மனைவி குழந்தைகளோடு நலமாக  வாழ நமது தளத்தில் பிராத்தனை  செய்யும் படி தாழ்மையாக கேட்டு கொள்கின்றேன்.

அன்புடன்,

கிருஷாந்த்,
பட்டிக்கோலா,
இலங்கை

==================================================================

Dear Sundar sir,

Every day I am reading rightmantra very use ful to me. Please explain how to pray Maha periyava  and also to do sai viratha pooja, ragavendara pooja.

Recently I read about Karthigai Deepam experience. It is very great, god bless all of u sundar.

When I am reading your site I am one of fan mahaperiyava,last 20 years I never pray mahaperiyava. but now I am starting and every sunday prarthana club iam praying.

This week pls pray my sister Sowmila Her marriage is getting very delayed. Horoscope coming very close, but not working. I want some miracle to happen.

I already started reading Velmaral and praying to Kundathur Murugan. Also i am reading mahaperiyava miracle in our site. Let us wait.

I believe our prayer club prayer will do wonder for her.

Congratulations for your s and successfully your aanmeega pani thodarattum. Pls this week place my sisters prarthana

regards
Maheswari Radhakrishnan
UAE

==================================================================

முகநூல் நண்பருக்கு ஒரு துன்பம்!

என் முகநூல் நண்பர்களில் ஒருவர் பூனாவை சேர்ந்த இந்து ஷங்கர் என்பவர் ஏதோ பிரச்னையில் சிக்கியிருக்கிறார். அது என்ன எது என்ற விபரம் தெரியவில்லை. தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று மட்டும் அவர் முகநூலில் நண்பர்களிடம் கேட்டிருந்தார். அவர் பிரச்சனை துன்பம் எதுவாக இருந்தாலும் சூரியனைக் கண்ட பனி போல விலக இறைவனை வேண்டுவோம்.

நன்றி,
ரைட்மந்த்ரா சுந்தர்

=================================================================

பொது பிரார்த்தனை

அர்ச்சகர்கள் நிலை மேம்படவேண்டும்! பூஜை நின்று போயுள்ள கோவில்களில் ஆறு கால பூஜைகள் நடக்கவேண்டும் !!

தமிழகத்தில் முன்னெப்போதையும் விட தற்போது அர்ச்சகர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. பல கோவில்களில் பூஜை செய்ய அர்ச்சகர்கள் இல்லை. இருப்பவர்களுக்கு சரியான ஊதியம் இல்லை. அதையும் மீறி அர்ச்சகர் தொழில் செய்பவர்களுக்கு எவரும் பெண் கொடுப்பதில்லை.

பிரபல கோவில்களில் மட்டும் தான் தட்டு வருமானம் உள்ளது. மற்ற கோவில்களில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எனவே தொன்மை வாய்ந்த பல கோவில்களில் ஆறு காலை பூஜைகள் நின்று போய் பல வருடங்களாகிவிட்டன. ஆறு காலம் விடுங்கள்… ஒரு கால பூஜைக்கே வழியின்றி பல கோவில்கள் தவிக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணம், அர்ச்சகர்களுக்கு உரிய வருவாய் இல்லை என்பதும் அந்த தொழிலுக்கு அரசின் ஆதரவு இல்லை என்பதும் தான். போதாக்குறைக்கு வேத ரட்சணை வேறு அடியோடு குறைந்துவிட்டது.

கோவில் அர்ச்சகர்களுக்கென்று உரிய பட்டயப்படிப்பை படித்து அந்த சேவையில் இருப்பவர்கள் குறைந்து வருகின்றனர். படிப்பெல்லாம் வேண்டாம்… ஒரு வேளை விளக்கேற்றி மந்திரம் சொன்னால் போதும் என்று கூறி ஆட்களை தேடிவருகிறார்கள். அப்படியும் பல கோவில்களுக்கு ஆள் கிடைக்கவில்லை.

எனவே எஞ்சியிருப்பவர்களையவது நாம் போஷிக்கவேண்டும். அவர்களது சிறு சிறு தேவைகளை நாம் நிறைவேற்றி தரவேண்டும்.

பெரும்பாலான கோவில்களில் கோவில் உண்டியலில் நீங்கள் போடும் பணம் அந்தக் கோவிலின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. எந்தக் கோவிலுக்கு போனாலும் அர்ச்சகரின் தட்டில் பணம் போடுங்கள்.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

அர்ச்சகர்களின் வருவாய் பெருக வேண்டும். பலர் அந்த தொழிலை வேண்டி விரும்பி ஏற்குமளவிற்கு அந்த தொழிலின் அந்தஸ்து சமூகத்தில் உயரவேண்டும். பூஜை நின்று போயுள்ள திருக்கோவில்களில் ஆறு கால பூஜைகள் தவறாமல் நடக்கவேண்டும். சைவமும் வைணவமும் தழைக்கவேண்டும்.

அதுவே இந்த வார பொது பிரார்த்தனை!

==================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgஇலங்கையை சேர்ந்த வாசகர் கிருஷாந்த் அவர்களின் நண்பர் திரு.ரஞ்சித் அவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பும் சிறுநீரக பாதிப்பும் நீங்கி அவர் ஆரோக்கியத்தோடு வாழவும், வாசகி மகேஸ்வரி ராதாகிருஷ்ணன் அவர்களின் சகோதரி சௌமிளா அவர்களுக்கு அவரது தோஷங்கள் யாவும் நீங்கி விரைவில் திருமணம் நிச்சயமாகவும் அவர் குடும்பத்தினர் சந்தோஷமடையவும், பூனாவை சேர்ந்த நண்பர் இந்து ஷங்கர் அவர்களுக்கு ஏற்பட்டு பிரச்னை நீங்கி அவர் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கவும் இறைவனை வேண்டுவோம். அதே போன்று பூஜை நின்று போயுள்ள ஆலயங்கள் அனைத்திலும் ஆறு கால பூஜைகள் தவறாமல் நடைபெறவும், அதற்கு ஆதாராமாய் இருக்கும் அர்ச்சகர்கள் சமூகத்தில் ஏற்றம் பெறவும் இறைவனை வேண்டுவோம்.

இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருக்கும்திரு.துரைசாமி குருக்கள் தன் தொண்டு சிறக்கும் வண்ணம் முருகனுக்கு பல பூஜைகள், சேவைகள் புரிந்து மேலும் பல எண்ணற்ற ஆலயங்களுக்கு தமது கரங்களால் கும்பாபிஷேகம் செய்திடவும் மேலும் பல்லாண்டு இந்த உலகில் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழவும் இறைவனிடம் வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : பிப்ரவரி 8, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் (Indian National Army) பணியாற்றிய தியாகி.திரு.முத்தப்பா அவர்கள்.

6 thoughts on “முருகா என்றதும் உருகாதா மனம்… Rightmantra Prayer Club

  1. இந்த வார பிரார்த்தனை கதை மிகவும் நன்றாக உள்ளது. முருகம்மையின் கடவுள் பக்தியை நினைத்தால் மெய் சிலிர்க்கிறது. கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதை உணர்த்தும் கதை. முருகம்மைக்கு முருகப் பெருமான் அருள் புரிந்த தலம் சிறுவாபுரிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இந்த முருகனை கீழ் வரும் பாடல் மூலம் வழிபட்டால் வீடு வாங்கும் யோகம் கண்டிப்பாக உண்டாகும் .

    //அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
    அண்டர் மன மகிழ் மீற அருளாலே
    அந்தறியோடு உட னாடு சங்கர்னு மகிழ் கூர
    ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
    மண்டலமும் முனிவோரும் எண்திசையில் உள பேரும்
    மஞ்சினும் அயனாரும் எதிர் காண
    மங்கையுடன் அறிதானும் இன்பமுடன் மகிழ் கூற
    மைந்து மயி லுடனாடி வர வேணும்
    புண்டரிக விழியாள ! உயர் தோளா
    பொங்குடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு
    பொன் பரவு கதிர் வீசு வடிவேலா
    தன் தாரண மணி மார்ப ! செம்பொன் எழில் செறி ரரூப
    தண்தமிழின் மிகு நேய முருகேசா
    சந்ததமும் அடியார்கள் சிந்தை யது குடியான
    தண் சிறுவை தனில் மேவு பெருமாளே !//

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு துரைசாமி குருக்களுக்கு என் பணிவான வணக்கங்கள்

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் வாசகர்களுகாக பிரார்த்தனை செய்வோம்/ அர்ச்சகர்கள் நிலை மேம்படவும் , பூஜை நின்று போயுள்ள கோவில்களில் ஆறு கால பூஜைகள் நடக்கவும் பிரார்த்தனை செய்வோம். குருவருளாலும் திருவருளாலும், அனைவரின் பிரார்த்தனையும் மகா பெரியவா நிறைவேற்ற வேண்டும் .

    குன்றத்தூர் முருகன் அழகு கொஞ்சுகிறது ..

    லோகா சமஸ்த சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    மகா பெரியவா சரணம் ….மகா பெரியவா கடாக்ஷம் …

    நன்றி
    உமா வெங்கட்

  2. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் போரூர் பாலமுருகன் கோவிலின் அர்ச்சகர் திரு. துரைசாமி குருக்கள் அவர்களுக்கு எங்கள் நன்றிகள். அவர் பணி சிறக்க வேண்டுவோம்.

    ரஞ்சித் அவர்கள் உடல் நலம் பெற்று, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் வாழவும்,
    சகோதரி சௌமிலாவிற்கு விரைவில் நல்ல வரன் அமைந்து, இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழவும்,
    பூனாவை சேர்ந்த இந்து ஷங்கர் அவர்களின் பிரச்சனை தீரவும்,
    அர்ச்சகர்களின் வருவாய் பெருகவும். பலர் அந்த தொழிலை வேண்டி விரும்பி ஏற்குமளவிற்கு அந்த தொழிலின் அந்தஸ்து சமூகத்தில் உயரவும், மகா பெரியவாவை வணங்கி மனமுருகி பிரார்த்தனை செய்வோம்.

  3. திரு கிருஷாந்த் அவர்களின் நண்பரின் கதையை கேட்கும்போது மனது வருத்தப்படுகிறது …பாதிக்கப்பட்ட வரின் நண்பருக்காகவும் ..வாசகி மகேஸ்வரி ராதாகிருஷ்ணன் அவர்களின் சகோதரி சௌமிளா அவர்களுக்கு அவரது தோஷங்கள் யாவும் நீங்கி விரைவில் திருமணம் நிச்சயமாகவும் அவர் குடும்பத்தினர் சந்தோஷமடையவும், பூனாவை சேர்ந்த நண்பர் இந்து ஷங்கர் அவர்களுக்கு ஏற்பட்டு பிரச்னை நீங்கி அவர் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கவும் இறைவனை வேண்டுவோம். அதே போன்று பூஜை நின்று போயுள்ள ஆலயங்கள் அனைத்திலும் ஆறு கால பூஜைகள் தவறாமல் நடைபெறவும், அதற்கு ஆதாராமாய் இருக்கும் அர்ச்சகர்கள் சமூகத்தில் ஏற்றம் பெறவும் இறைவனை வேண்டுவோம்.

    இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருக்கும்திரு.துரைசாமி குருக்கள் தன் தொண்டு சிறக்கும் வண்ணம் முருகனுக்கு பல பூஜைகள், சேவைகள் புரிந்து மேலும் பல எண்ணற்ற ஆலயங்களுக்கு தமது கரங்களால் கும்பாபிஷேகம் செய்திடவும் மேலும் பல்லாண்டு இந்த உலகில் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழவும் இறைவனிடம் வேண்டுவோம்.

    மனிதன் தன் பணத்தினாலும் ,தன்னாலும் இனி சாதிக்க முடியாது என எப்பொழுது நினைக்கின்றானோ அப்பொழுது தான் அவன் கடவுளே !!! என கதறுகிறான்…அப்படி பதிக்கபட்டவனில் நானும் ஒருவன் ..அப்படி கதறும் நேரத்தில் கண்ணீரை துடைக்கும் சிறந்த தளமாக நம் பிரார்த்தனை கிளப் விளங்குகிறது என்றால் அது மிகை அல்ல…எனக்காக அன்று பிரார்த்தனை செய்த நல்ல உள்ளங்கள் நம் தளம் மூலமாக எனக்கு கிடைத்தார்கள்..என்னைப்போல பாதிக்கபட்டவர்களுக்காக இன்று நான் நிச்சயம் பிரார்த்தனை செய்கிறேன் ..நன்றி..

  4. இந்த வார பிரார்த்தனையை செய்து கொள்கிறேன். அர்ச்சகர்களுக்கு கட்டாயம் தட்டில் பணம் வைக்க வேண்டும் என அனைவரையும், தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன்.

  5. முருகனின் திருவருள் உங்களுக்கும் எல்லோருக்கும் கிடைக்க பிரதர்தனை செய்வோமே

  6. Hello Sundar Sir,

    Murugammai story is sure to give me good health and prosperous life.. I am sure…and I would also like to inform that for the first time I prayed Maha Periyava yesterday in Nanganallur sivan temple… its all because of you RIGHTMANTRA… you are changing my life and views towards real life… I am excited… and god bless you and rightmantra.com…

    regards
    priya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *