கடும்கோடையில் செல்லும் ஒரு வழிப்போக்கனுக்கு எப்படி குளிர்ந்த நீர் கிடைத்தால் அதை அள்ளி அள்ளிப் பருகி மகிழ்வானோ அதே போன்று ரமணரின் உபதேசங்கள் நிச்சயம் நமது தாகத்தை (ஆன்மாவின் தாகத்தை) தணிக்கும்.
படிக்கவும் பார்க்கவும் சிறிதாக இருக்கிறதே என்று நினைக்கக்கூடாது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதன்றோ? ஒவ்வொரு வார்த்தையும் அத்தனை இனிமை.
இதுவரை நாம் அளித்துள்ள ரமண திருவிளையாடல்கள் அனைத்தின் சுட்டியும் இந்தப் பதிவின் கடைசியில் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை அவசியம் மீண்டும் ஒரு முறை படியுங்கள்! குருவருள் திருவருளும் என்றும் நம் வாசகர்களுக்கு குறைவின்றி கிடைக்கட்டும்!
நல்லோரைக் காண்பதும் நன்று
ஒருமுறை பக்தர் ஒருவர் நண்பர் ஒருவரையும் பகவானைத் தரிசிக்க அழைத்து வந்தார். அவருக்கு மகான்கள் மீது நம்பிக்கை இல்லை. எளிதில் யாரையும் நம்பமாட்டார். தரிசிக்க வரும்போதே ‘நான் அங்கே யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது’ என்று கூறிவிட்டார். பக்தரும் சரி என்று அழைத்து வந்தார்.
நண்பரோ ஓல்டு ஹாலுக்கு வரவே இல்லை. ஹாலுக்கு வெளியில் அமர்ந்திருந்தார். சிறிது நேரம் சுற்றித் திரிந்தார். சாயங்காலம் கிணற்றுக்கு அருகில் பகவானுக்கு சேர் போடப்பட்டு வந்து அமர்ந்தார். பக்தர்கள் அவரைச் சுற்றி அமர்ந்தார்கள்.
அப்போது அந்த நண்பர் அங்கு வந்தார். பகவானைப் பார்த்தவுடன் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கினார். பகவான் பலமாக சிரித்தார். பகவானின் சிரிப்புக்கு காரணம் இருவரைத் தவிர யாருக்கும் தெரியவில்லை.
எல்லா தெய்வமும் நானே
ராமநாதபுரத்தில் நவராத்திரி உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். சாந்தம்மாளின் சொந்த ஊராகையால் அவளுக்கு நவராத்திரிக்கு ராமநாதபுரத்திற்கு சென்று அம்பாளைத் தரிசிக்க ஆவலாய் இருந்தது. ஆசிரமத்தில் வேலை சரியாக இருந்தது. ஒருவேளை பகவான் உத்தரவு கொடுத்தால் போகலாம் என்ற நினைப்போடு ஓல்டு ஹாலில் இருந்தபோது அவள் கண்ணெதிரே பகவானின் உருவம் மறைந்தது.
அழகிய சிறு பெண் குழந்தை பட்டுப்பாவாடையில் சோபாவில் மிகவும் கம்பீரமாக அமர்ந்திருந்தது. சிறிது நேரத்தில் அங்கே மீண்டும் பகவான் உருவம் வந்து விட்டது. பகவான் உணர்த்த வேண்டியதை உணர்த்தி விட்டார் என்று அவள் உத்தரவு ஏதும் கேட்கவில்லை.
இதுவா பிரயோஜனம்?
கே.ஆர் .கிருஷ்ணமூர்த்தி, மின்வாரியத் தலைமைப் பொறியாளர். பகவானைப் பற்றி 1937ல் செய்தி தாள்களில் வாசித்தார். அப்போது பகவானைப் பற்றி யாரோ ஒருவர், ”ரமண மகரிஷியாலே யாருக்கும் பிரயோஜனமில்லை. பேசாம சும்மா உட்காந்துருப்பார்” என்று கூறக் கேட்டார். அடுத்தடுத்து அவர் கேட்ட செய்திகள் அவரது கருத்தை பகவானை நோக்கி ஈர்த்தது.
பகவானைத் தரிசிக்க திருவண்ணாமலை சென்றார். நேராக ஓல்டு ஹால் சென்று பகவான் முன் அமர்ந்தார். பகவான் வெகு இயல்பாக தன்னுடைய இடது கை நடுவிரலை வலது கையால் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். சிலர் கவனித்திருக்கலாம். கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இதைக் கவனித்தார். அப்போது அவருடைய நீண்டகாலப் பிரச்சனையான இடது கை நடுவிரல் வலி நீங்கியிருந்தது. நிரந்தரமாய் அன்றிலிருந்து இல்லை.
உத்தரவு முறை
ஒருமுறை சாந்தம்மாள் தன்னுடைய ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது. சாயங்காலம் புகைவண்டி. காலை பத்துமணி அளவில் பகவானிடம்! ஊருக்குப்போயிட்டு வந்துடறேன்’ என்று உத்தரவு கேட்டாள். ”ஏன் இவ்வளவு சீக்கிரமா சொல்றே? சாயங்காலம் தானே போறே” என்றார் பகவான். ‘புறப்பட அவசரத்துலே சொல்லிக்க மறந்துட்டா என்ன பண்றது? அதான் இப்பவே சொல்லிடறேன்’ என்றாள் சாந்தம்மாள்.
பகவான் சிரித்துக் கொண்டே அருகில் இருந்த சுப்பராமையாவிடம், ”இதுக்கு ஒரு ஸ்லோகம் இருக்கு’ என்று அந்த ஸ்லோகத்தை கூறினார். ”இந்த உலகத்தை விட்டு பிரியும்போது உன் நாமத்தை நான் மறந்துடலாம். அதனாலே இப்பவே வேண்டிக்கறேன். சாகும்போது என்னைப் பொறுப்பெடுத்துக்கோ” என்பதே அந்த ஸ்லோகம்.
ஏதோ காரணத்தால் சாந்தம்மாளால் ஊருக்குப் போக முடியவில்லை.
அடுத்த நாள் காலை பகவானுக்கு இட்லி பரிமாறும்போது பகவான், ஜி.வி. சுப்பராமையாவிடம் ”பார்த்தேளா, சாந்தம்மாள் போறதுக்கு உத்தரவு கேட்டா. இருக்கறதுக்கு கேக்கலே” என்றார்.
– ரமண திருவிளையாடற் திரட்டு ¶¶
=========================================================
Also check : யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?
=========================================================
Help us to run this website…
We need your SUPPORT. Help Rightmantra in its functioning.
==========================================================
For earlier episodes…
ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?
ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு!
அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!
காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?
ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…
எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?
பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!
ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!
பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!
==========================================================
Also Check :
ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!
“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே!” .
கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!
மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!
=========================================================
ரமணர் தொடர்புடைய பதிவுகளுக்கு : http://rightmantra.com/?s=ரமணர்
=========================================================
[END]