Home > ரமணர்

ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் என்ன தெரியுமா?- ஸ்ரீ ரமண ஜயந்தி SPL

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமென நான் தெரிந்தேன்… அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தைமிக விழைந்ததாலோ! - வள்ளலார்  பகவான் ஸ்ரீ ரமணர், சத்குரு சேஷாத்ரி சுவாமிகள், ஞானானந்தகிரி சுவாமிகள், மகா பெரியவா போன்ற ஞானிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்று கூறும் வரிகள் இவை. இன்று ஸ்ரீ ரமண ஜயந்தி. எல்லாரும் மற்றவர்களை ஆராய முற்பட்ட காலத்தில், 'நான் யார் என்று

Read More

ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்ரீராமநவமி சமயத்தின்போது, 'வைதேகி' என்கிற கன்று பிறந்ததை பற்றி சொல்லியிருந்தோம் அல்லவா? அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசேஷ கோ-சம்ரட்சணம் பற்றிய பதிவு இது. காசி-விஸ்வநாதர் கோவிலில் பிரதிமாதம் நாம் கோ சம்ரட்சணம் செய்துவந்தாலும், முக்கிய பண்டிகை நாட்கள், விஷேட நாள் கிழமைகள், குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி உள்ளிட்ட கிரகங்களின் பெயர்ச்சிகள் மற்றும் அங்கு கோ-சாலைப் பசுக்கள் கன்று ஈனும் தருணங்கள் ஆகியவற்றின்

Read More

ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு!

இன்று சித்ரா பௌர்ணமி. மிகவும் விசேஷம். அதுவும் திருவண்ணாமலையில் மிக மிக விசேஷம். எனவே இன்றைய குருவார சிறப்பு பதிவில், அருணாச்சலம் மற்றும் கிரி பிரதட்சிணம் தொடர்பான சில ரமண மகிமைகளை பார்ப்போம். கூடவே, தியானம் பற்றியும் யாரை குருவாக ஏற்றுகொள்வது என்பது பற்றியும் பகவான் ramanar தெளிவுபடுத்தியிருக்கும் சில முத்துக்களையும் பார்ப்(ரசிப்)போம். இவை மேலோட்டமாக படித்துவிட்டு செல்லக்கூடிய விஷயங்கள் அல்ல. ரமணரைப் பற்றிய பதிவுகளை அவசியம் திரும்ப திரும்ப படிக்க வேண்டியவை. பார்ப்பதற்கு சாதரணமாக

Read More

வான்மழையா அருள்மழையா? ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜயந்தி SPL

இன்று சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஜயந்தி. திருவண்ணாமலை என்றால் நினைவுக்கு வருபவர் பகவான் ஸ்ரீ ரமணர். ரமணருக்கும் மூத்தவர் சேஷாத்திரி சுவாமிகள். மஹா பெரியவா சேஷாத்ரி சுவாமிகள் மீது பெரும் பக்தி கொண்டிருந்தார். பல முறை பக்தர்களிடம் சுவாமிகள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து வலியுறுத்துவது எல்லாம், மனதை எப்பொழுதும் இறைவனோடு வைத்திருக்க வேண்டும், சிந்தனைகள் சிதறக்கூடாது என்பதுதான். கடந்த சில அத்தியாயங்களில், நாம் படித்த அவரது அறிவுரைகள், நமது முயற்சிக்குப்

Read More

ஞானிகள் மற்றும் தவசீலர்கள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்படுகின்றனர்?

இன்றைக்கும் ஆன்மீக அன்பர்களை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது தான். மாபெரும் ஞானிகள், யோகிகள், தவசீலர்கள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர்? அவர்களது சக்தியினால் தங்களது நோயை அவர்கள் போக்கிக்கொள்ளமுடியாதா? இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய ஞானிகளுள் ஒருவரும் தலைசிறந்த ஆன்மீகவாதியுமான ரமணர் முதல் பாம்பன் சுவாமிகள் வரை பலர் இறுதிக்காலத்தில் கொடுநோய் கண்டு போராடி பின்பே மடிந்திருக்கின்றனர். (வள்ளிமலை சுவாமிகள் உட்பட!) வாழும்காலத்தே அவர்கள் செய்த அற்புதங்கள் குறித்த பல

Read More

‘உள்ளம் உருகுதையா’ தந்த ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் – கந்தசஷ்டி SPL 2

கந்த சஷ்டியின் சிறப்பு தொடரின் இந்த இரண்டாம் நாள் பதிவை தயாரிப்பது மிக மிக சவாலாக இருந்தது. நதிமூலமும் ரிஷிமூலமும் கண்டுபிடிப்பது அத்தனை சுலபமா என்ன? இருப்பினும் கிடைத்த ஆதாரத்தை உறுதி செய்து கொள்ள பிராட்வேயில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கே நேற்று நேரில் சென்றுவிட்டோம். இந்த தொடரின் முதல் பாகத்திலேயே நாம் சொன்னது நினைவிருக்கிறதா? இந்த தொடர் சற்று கடினமான பணி தான். அதை நிறைவேற்றித் தரவேண்டியது அந்த முருகனின் பொறுப்பு!

Read More

குரு வார்த்தையே துன்பம் தீர்க்கும் அருமருந்து!

சில முக்கிய பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைவு பெறவில்லை. எழுதும் பதிவுகளில் தகுந்த புகைப்படங்கள் அல்லது ஓவியம்  சேர்த்து அனைத்தும் நன்றாக வந்த பிறகே பதிவை அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதனிடையே காத்திருக்கும் உங்களுக்காக ரமணர் தொடர்புடைய அருள் விளையாட்டுக்களை தந்திருக்கிறோம். யாரோ சிலருடைய கேள்விகளுக்கோ அல்லது ஆன்மாவின் விசும்பலுக்கோ இவை பதிலாக அமையலாம். எனவே கவனமாக படிக்கவும்! முடிந்தால் திருவண்ணாமலை சென்று ரமணாஸ்ரமத்தை தரிசித்துவிட்டு வரவும்! மேலும் இந்தப் பதிவை இன்று பகிர்வதில் காரணமிருக்கிறது.

Read More

தீதும் நன்றும் பிறர் தர வாரா! Rightmantra Prayer Club

சென்ற பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்த அனைவருக்காகவும் பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று அர்ச்சனை செய்தோம். தொடர்ந்து மறுநாள் திருநாவலூர் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் சென்றோம். அங்கும் சுவாமி சன்னதியில் பிரார்த்தனையை வைத்து அனைவருக்காகவும் அர்ச்சனை செய்தோம். இரண்டு ஆலயங்களிலும் உண்மையில் அப்படி ஒரு அற்புதமான தரிசனம். எனவே கோரிக்கைகள் நிறைவேறினால் சோளீஸ்வரருக்கு மட்டும் அல்ல, திருநாவலூர் பக்தஜனேஸ்வரருக்கும், திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரருக்கும் கூட உங்கள் நன்றியை தெரிவிக்கவேண்டும். சென்ற வார பிரார்த்தனைப்

Read More

நாளும் கிழமையும் நன்றாய் செல்ல மருந்தொன்று இருக்குதப்பா…!

அலுவலகமோ, வீடோ, இந்த சமூகமோ நம்முடன் பழகுபவர்கள் மற்றும் நமக்கு கீழ் உள்ளவர்களை சரியாக மேலாண்மை செய்து உறவுகளை தக்கவைத்துக்கொள்வது நமது காரியங்களை சாதித்துக் கொள்வது அத்தனை சுலபமல்ல. கொடிய காட்டு விலங்குகளிடம் கூட நட்பு வைத்து நம் காரியங்களை சாதித்துக்கொண்டுவிடலாம். ஆனால், இந்த மனிதர்களை டீல் செய்வது தான் மிக மிக சவாலான ஒன்று. யார் எப்போது மாறுவார்கள் என்று சொல்ல முடியாது. நமது வட்டம் விரிவடைய விரிவடைய

Read More

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்… பவித்ராவின் அண்ணனுக்கு பேச்சு வந்த கதை!!

ஆடி மாதம் துவக்கத்திலேயே இந்தப் பதிவை அளித்திருக்கவேண்டும். பரவாயில்லை. BETTER LATE THAN NEVER அல்லவா? இன்னும் ஒன்பது நாட்கள் இருக்கிறதே. பதிவு சற்று பெரிது. ஆனால், முக்கியமானது. இறுதிவரை படியுங்கள். அனைவருக்கும் நல்லதே நடக்கும்! (*இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள அனைத்து புகைப்படங்களும் நம் ரைட்மந்த்ரா அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் இருக்கும் மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி ஜெயமுத்து மாரியம்மன் ஆலயத்தின் ஆடி விழா புகைப்படங்கள்.) ஆடி

Read More

ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?

வீட்டில் சில சமயம் விருந்தினர்கள் சாப்பிட வரும்போது அவர்களை கவனிக்கும் மும்முரத்தில் நமக்கு எதுவும் கடைசியில் மிச்சமிருக்காது. நாம் எதுவும் சாப்பிட்டிருக்கமாட்டோம். அம்மா அந்த சூழ்நிலையை சமாளிக்க அவசர அவசரமாக ஏதோ ஒன்றை நமக்கு செய்து தருவாள். ஆனால் அது விருந்தைவிட பிரமாதமாக இருக்கும். இன்னும் கொஞ்சம் கேட்டால்... "இல்லையேடா கண்ணா... அவசரத்துக்கு இருந்த மிச்சம் மீதியை வெச்சு செஞ்சேன். நாளைக்கு பண்ணித் தரவா?" என்பாள். இது நம் எல்லார்

Read More

குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும் – குரு பூர்ணிமா SPL

19.07.2016 செவ்வாய்க்கிழமை அன்று குரு பூர்ணிமா. இரண்டு கண்களை போல நம்மை வழிநடத்தும் இரண்டு குருமார்களை பற்றி இந்நன்னாளை முன்னிட்டு பார்ப்போம். பகவான் ஸ்ரீ ரமணர் 1950 ஆம் ஆண்டு சித்தியானார். மகா பெரியவா அப்போது தான் ஸ்ரீ மடத்தில் தனது பாதி ஆயுளை நிறைவு செய்கிறார். இருவருக்கும் இடையேயான புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதை பற்றி நீங்கள் ஏற்கனவே பல சம்பவங்களை படித்திருப்பீர்கள். குறிப்பாக மகா பெரியவாவும் பகவான்

Read More

“கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை!

வானில் உள்ள நட்சத்திரங்களை கூட எண்ணிவிடலாம். ஆனால் மஹா பெரியவா தன் பக்தர்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை மட்டும் எண்ணமுடியாது. தோண்ட தோண்ட வைரச்சுரங்கம் போல வந்துகொண்டேயிருக்கும். (எது அசல் எது நகல் என்று கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம்!) கீழ்கண்ட அனுபவம், அசல் மட்டும் அல்ல நமக்கு பாடமும் கூட. மனிதர்கள் நன்றி மறப்பார்கள். ஆனால், மகான்கள் மறப்பதில்லை. தெய்வமும் மறப்பதில்லை. பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது (குறள்

Read More

தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!

'பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்?' என்கிற நமது முந்தைய பதிவில் - மகா பெரியவா ஆன்மீகத்தில் தொடாத விஷயங்களே இல்லை என்று கூறி - இது தொடர்பாக பெரியவாவின் மகிமை ஒன்றை பகிர்வதாக கூறியிருந்தோம். இதோ... ஒன்றல்ல இரண்டு பகிர்கிறோம். ஒன்று கருணை. மற்றொன்று பாடம். அதற்கு முன்: பரிகாரம் என்றால் என்ன? தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னிப்பது தான் தெய்வத்தின் குணம் என்று கூறுவார்கள். To err is human and to

Read More