மிகப் பெரிய பதிவுகள் எதையேனும் தயாரிக்கும்போது, ஆவலுடன் காத்திருக்கும் வாசகர்களுக்கு விருந்து படைக்க நமக்கு மகா பெரியவாவும், ரமணரும் தான் உதவுகிறார்கள். ஆனால் மெனக்கெட்டு தயார் செய்யும் விஷேஷ பதிவைவிட இவை அருமையாக அமைந்துவிடுகின்றன.
இன்றும் அப்படித்தான்!
ஸ்ரீ ரமணர் தொடர்புடைய அருள் விளையாட்டுக்களை தந்திருக்கிறோம். ஒவ்வொன்றும் எத்தனை இனிமை அருமை பாருங்கள். உங்கள் நீண்ட நாள் சந்தேகத்துக்கு இவற்றில் விடை ஒளிந்திருக்கலாம்.
சாநித்ய மகிமை!
ஒரு நாள் பக்தர் ஒருவர் பகவானிடம் மிகுந்த மனவேதையுடன் ஒரு சந்தேகம் கேட்டார். “பகவானே! நீங்க நினைச்சா பக்தர்களோட தலைஎழுத்தை மாத்த முடியுமா?” எனக் கேட்டார்.
பகவான் சிரித்தார்.. ”ஞானிக்கு சங்கல்பம் இருக்குமா? ஒரு ஜீவன் முக்தனுக்கு சங்கல்பம் இருக்கவே முடியாது. அது சாத்தியமில்லை” என்றார் பகவான்.
“அப்போ எங்க கதிதான் என்ன? எங்க கஷ்டங்களைப் போக்க உங்ககிட்ட தானே வேண்டறோம். அதுக்கு பலனில்லையா?”
பகவான் கருணை கூர்ந்தார், ”ஒருத்தனோட பாவச்சுமை ஒரு ஞானியோட சாந்நியத்துக்குள்ளே உட்கார்ந்தா கணிசமா குறையும். ஞானிக்கு சங்கல்பம் இல்லைன்னாலும் அவனோட சாந்நித்தியம் தலைஎழுத்தை மாத்தும்; காப்பாத்தும்; சாந்தி தரும்; பக்குவமானவனுக்கு ஆன்மானுபவம் தரும். எல்லாம் தானா நடக்கும். அவனுக்கும், அதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.”
”ஒரு ஞானியும் பக்தர்களைக் காப்பாத்துவான். சங்கல்பத்தாலே இல்லே, அவனோட சாந்நியத்தியத்தாலே” என்று கூறினார்.
அப்பாவைக் குறை சொல்லலாமா?
பலராமரெட்டி ஒருமுறை வடஇந்திய யாத்திரை முடித்துவிட்டு திருவண்ணாமலை திரும்பினார்.
பகவான் தன்னுடைய வழக்கமான… பலாக்கொத்திற்கு செல்லும் சமயம், பலராமரெட்டி தன்னுடைய பயண அனுபவங்களை பகவானிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது மே மாதம் கடும் வெயில். பலராமரெட்டி பகவானிடம், ‘பகவானே! திருவண்ணாமலையவிட அல்மோரா குளிர்ச்சியான சீதோஷணம். மனசுக்கு ரொம்ப சந்தாஷமாக இருந்தது’ என்றார்.
பகவான், “உண்மையான குளிர்ச்சி நமக்கு உள்ளே இருக்கு. அந்தக் குளிர்ச்சி இருந்தா எங்கே போனாலும் குளிர்ச்சியாவே இருக்கும். கல்லு குத்தமா இருக்க தரையெல்லாமா தோல் விரிப்பு விரிக்கறோம்? நம்ம காலுக்கு மட்டும் செருப்பு போட்டா போறாதா? வேலை முடிந்தது” என்றார்.
========================================================
Don’t miss this :
தெய்வங்களாலும் முடியாததை யார் சாதிப்பார்கள்?
யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?
========================================================
மருத்துவத் தொண்டர்!
பகவானுக்கு ஒருமுறை தொடர்ந்து விக்கல் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. ஆசிரம டாக்டர் எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி ஐயர் வைத்தியம் பார்த்தார். நாட்கள் சென்றதே தவிர விக்கல் ஓயவில்லை. அவருக்கு தெரிந்த மருந்துகள் எல்லாம் பயனற்றுப் போயின. என்ன செய்வதென்று தெரியாமல் பகவானிடம் மானசீகமாய், இந்த நோய்க்கு எது மருந்து? நீங்களே அருளனும்’ என்று பிரார்த்தித்தார். அவருக்கு முதன்முறையாக நாம் இறைவனுக்குத் தொண்டன் என்ற உணர்ச்சி வீடு திரும்பியதும் மேலோங்கியது.இரவெல்லாம் அழுதவண்ணம் இருந்தார். குழந்தையைப் போல் அழுதார். வீட்டில் யாவருக்கும் ஒன்றும் புரியவில்லை. கேட்கவும் துணிவில்லை.
எப்போது தூங்கினாரோ! அதிகாலை அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் பகவான் முன் எம்.ஆர் கிருஷ்ணமூர்த்தி ஐயர் அழுதுகொண்டிருந்தார். பகவான் அவரிடம், ”ஏன் அழறேள்?” என்றார். கிருஷ்ணமூர்த்தி ஐயர் ‘பகவானே! உங்களுக்கு தெரியுமே!’ என்றபடி தேம்பி அழுதார். பகவான், ”அழாதீங்கோ! உங்க வீட்டு கொல்லைப் பக்கம் சீந்தில் கொடின்னு ஒண்ணு இருக்கும். கொடியா இருக்கும். அதோட இலையை நெய்யில் வதக்கி கொஞ்சம் வெல்லம், சுக்கு, சேத்து உருண்டை பண்ணிக் கொண்டு வாங்கோ! கவலைப்படாதேள்!” என்றார்.
கிருஷ்ணமூர்த்தி ஐயர் திடுக்கிட்டு எழுந்தார். தன் மனைவியை எழுப்பி அரிக்கேன் விளக்கு கொண்டுவர சொல்லி வீட்டின் பின்புறம் சென்றார். அவரின் வீட்டின் பின்புறம் சிறு துண்டு இடத்தைத் தவிர மீதம் சிமெண்ட் தளத்தால் ஆனது. அந்தச் சிறு துண்டு இடத்தில் பலவகை செடிகள் தானாய் முளைத்து இருந்தன. கனவில் கூறியபடி கொடிவகை ஒன்று மட்டுமே இருந்தது. அதன் இலைகளைப் பறித்து பகவான் கூறியபடி செய்துகொண்டு அதிகாலையிலேயே ஆஸ்ரமம் சென்றார்.
பகவான் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். கிருஷ்ணமூர்த்தி ஐயரைக் கண்டதும் முகம் மலர்ந்தது. கை நீட்டினார். ”என்ன கொண்டு வந்திருக்கேள்? கொடுங்கோ!” என்றார்.
ஒரு உருண்டையை எடுத்துச் சாப்பிட்டார். கிருஷ்ணமூர்த்தி ஐயர் தன் கனவை விவரித்தார். பகவான் ஒன்றும் தெரியாதவர்போல் கேட்டுக் கொண்டார். கிருஷ்ணமூர்த்தி ஐயரின் நோய் நீங்கியது. அவருள் தொண்டு பழுத்தது.
– ரமண திருவிளையாடற் திரட்டு ¶¶
=========================================================
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?
We need your SUPPORT. Help Rightmantra in its functioning.
==========================================================
For earlier episodes…
குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும்
”இதுக்கு பதிலா ஒங் குழந்தையைத் தந்துடறியா?”
ஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி?
“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”
ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?
ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு!
அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!
காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?
ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…
எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?
பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!
ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!
பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!
==========================================================
Also Check :
ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!
“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே!” .
கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!
மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!
=========================================================
ரமணர் தொடர்புடைய பதிவுகளுக்கு : http://rightmantra.com/?s=ரமணர்
=========================================================
[END]