Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, May 18, 2024
Please specify the group
Home > Featured > “பிரபு எந்தன் குறைகளை மனதிற்கொள்ளாதே…” – விவேகானந்தரை கலங்க வைத்த நடனமாது!

“பிரபு எந்தன் குறைகளை மனதிற்கொள்ளாதே…” – விவேகானந்தரை கலங்க வைத்த நடனமாது!

print
ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாற்றை படித்து வருவதாக நாம் கூறியது நினைவிருக்கலாம். கடவுளின் ஆசி, குருநாதரின் கட்டளை இந்த இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு உலகம் முழுதும் சுற்றிச் சுற்றி வந்து அவர் பார்த்த வைத்தியம் இருக்கிறதே, பிறர் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. சுவாமிஜியின் வரலாற்றை படிக்க படிக்க அத்தனை திகைப்பு, பிரமிப்பு, சுவாரஸ்யம். இன்று நாம் சரசாரி வாழ்க்கையில் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் சவாலுக்கும் சுவாமிஜியின் வாழ்க்கையில் விடை ஒளிந்திருப்பது தான் ஆச்சரியம். இறைவனையும் இந்து மதத்தையும் நமது வேதங்களையும் சரியாக புரிந்துகொள்ளவேண்டுமானால் விவேகானந்தரை படித்தாலே போதுமானது.

அவரது வாழ்க்கை வரலாற்றில் எத்தனையோ சம்பவங்கள் நம்மை கவர்ந்தாலும் கண்கலங்க வைத்தாலும் கீழ்கண்ட சம்பவம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இன்றைக்கு துறவறத்துக்கு ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கற்பித்துக்கொண்டு, துறவிகள் என்பவர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் சுகபோகங்களில் புரள்கிறார்கள் என்பதை பார்க்கிறோம். ஆனால், சுவாமி விவேகானந்தர் துறவறத்துக்கு கொடுக்கும் இலக்கணத்தை பாருங்கள். பதிவின் இரண்டாம் பாகத்தில் கண்கலங்கிவிடுவீர்கள்.

இன்றைக்கு நாடு இருக்கும் நிலையில் சுவாமி விவேகானந்தர் ஒருவேளை நம்முடன் இருப்பாரேயானால் அதைவிட மிகப் பெரிய வரம் நமக்கு வேறு எதுவும் இருக்கமுடியாது.

நமது தளத்தின் ஓவியர் பெரியவர் சசி அவர்களை கொண்டு இந்த ஓவியத்தை வரைந்து தந்திருக்கிறோம். சசி அவர்கள் ‘ஸ்ரீ ராகவேந்திர மகிமை’ நூல்களுக்கு ஓவியம் வரைந்து வருபவர்.

பிரபு எந்தன் குறைகளை மனதிற்கொள்ளாதே!

மௌண்ட் அபுவில் ஒரு பாழடைந்த குகையில் தங்கித் தவம் செய்தார் சுவாமிஜி. ஒருநாள் அரசாங்க வக்கீலான முஸ்லிம் ஒருவர் அந்த வழியாகப் போக நேர்ந்தது. சுவாமிஜியின் தோற்றத்தால் மிகவும் கவரப்பட்டார் அவர். எனவே அவரிடம் சென்று பேசினார். சுவாமிஜி ஒரு சாதாரணத் துறவியல்ல; அறிவிலும் ஆன்மீகத்திலும் மிக உயர்ந்தவர் என்பதைச் சிறிதுநேரத்தில் அவர் கண்டுகொண்டார். அதன்பின் தொடர்ந்து பலமுறை அவரைச் சந்திக்கலானார்.

swami-vivekananda-with-kethri-maharaj

ஒரு நாள் அவர் சுவாமிஜியிடம், “சுவாமிஜி, நான் உங்களுக்கு எந்த விதத்திலாவது உதவ முடியுமா?” என்று கேட்டார்.

அதற்கு சுவாமிஜி, “மழைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் குகைக்குக் கதவுகள் இல்லை. நீங்கள் கதவுகள் செய்து தந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

அதற்கு அந்த வக்கீல், “சுவாமிஜி, அத்தகைய ஒரு வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி. ஆனால் எனது தாழ்மையான வேண்டுகோள் ஓன்று உண்டு. எனக்கு பங்களா ஓன்று உள்ளது. அங்கே நான் தனியாகத்தான் வசித்து வருகிறேன். நீங்கள் சம்மதித்தால் அங்கே வந்து தங்கலாம். ஆனால் நான் ஒரு முஸ்லிம். உங்கள் உணவிற்குத் தனி ஏற்பாடு செய்கிறேன்’ என்றார். சுவாமிஜி உணவு பற்றிய விஷயத்தைப் பொருட்படுத்தாமல் வக்கீலுடன் அவரது மாளிகைக்குச் சென்றார்.

இங்கே சுவாமிஜிக்குப் பலர் அறிமுகமாயினர். அவர்களில் ஒருவர் முன்ஷி ஜக்மோகன் லால். இவர் கேத்ரி மன்னரின் தனிச் செயலர். ஜக்மோகன் வந்தபோது சுவாமிஜி கௌபீனம் மட்டும் கட்டியவராகத் தூங்கிக்கொண்டிருந்தார். அவரைக் கண்ட ஜக்மோகன், ‘ஓ! இது பத்தோடு ஒன்று பதினொன்றான துறவி! திருட்டுக் கூட்டம், ஏமாற்றுக் கும்பல் போன்றவற்றைச் சேர்ந்த இன்னொருவர்!’ என்று தமக்குள் எண்ணிக் கொண்டார்.

சுவாமிஜி கண் விழித்தார். உடனே ஜக்மோகன் அவரிடம், “சுவாமிகளே! நீங்கள் ஓர் துறவி. ஒரு முஸ்லிமுடன் தங்கியிக்கிறீர்களே, அது எப்படி? உங்கள் உணவை எல்லாம் அவர் தொட நேருமே!” என்றார்.

இந்தக் கேள்வி சுவாமிஜியிடம் ஒருவிதமான ஆவேசத்தை எழுப்பியதுபோல் இருந்தது. பெரு நெருப்பிலிருந்து சுடர்கள் தெறித்துக் கிளம்புவதுபோல் பேசினார் அவர்.

“என்ன சொல்கிறீர்கள்? நான் ஒரு துறவி. உங்கள் சமுதாயக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடந்தவன் நான். நான் ஒரு தோட்டியுடன்கூட உணவு கொள்ளலாம். எனக்குக் கடவுளிடம் பயமில்லை, ஏனெனில் அவர் அதை அனுமதிக்கிறார். எனக்கு சாஸ்திரங்களிடம் பயமில்லை, அவையும் அதை அனுமதிக்கின்றன. ஆனால் நான் உங்களுக்கு, இந்த மக்களுக்கு, இந்தச் சமுதாயத்திற்கு பயப்படுகிறேன். உங்களுக்குக் கடவுளைப்பற்றியோ சாஸ்திரங்களைப்பற்றியோ எதுவும் தெரியாது. நான் எங்கும் கடவுளைக் காண்கிறேன்; மிகச் சாதாரணமான பிராணியிடம்கூட அவரே நிறைந்திருப்பதைக் காண்கிறேன். உயர்ந்ததென்றும் தாழ்ந்ததென்றும் எனக்கு கிடையாது. சிவ சிவ!'”

ஜக்மோகன் அதிர்ந்து போனார். அவருக்கு சுவாமிஜியிடம் பெரிய மதிப்பு ஏற்பட்டது. கேத்ரி மன்னர் இத்தகைய துறவியைச் சந்தித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய அவர், சுவாமிஜியை அரண்மனைக்கு அழைத்தார். இரண்டு நாட்கள் கழித்து வருவதாக வாக்களித்தார் சுவாமிஜி.

அப்போது கேத்ரி மன்னராக இருந்தவர் ராஜா அஜித்சிங். அவரிடம் சுவாமிஜியைப்பற்றி தெரிவித்தார் ஜக்மோகன். சுவாமிஜியைத் தாமே சென்று காண்பதாகக் கூறினார் மன்னர். இதனைக் கேள்விப்பட்ட சுவாமிஜி தாமதிக்காமல் நேராக அரண்மனை சென்றார். அவரை மன்னர் அன்புடன் வரவேற்று உபசரித்தார்.

கேத்ரி மன்னரின் பல ஆன்மீக சந்தேகங்களுக்கு சுவாமிஜி அற்புதமான விடையளித்தார்.

இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது 1891 ஜூன் 4-இல். சுவாமிஜிக்கும் கேத்ரி மன்னருக்கும் இடையில் இவ்வாறு தொடங்கிய நட்பு சுவாமிஜியின் வாழ்க்கையில் கேத்ரி மன்னர் ஒரு விலக்க முடியாத அங்கமாக ஆகுமளவிற்கு வளர்ந்தது.

சுவாமிஜியால் கவரப்பட்ட மன்னர் ஒருநாள், “சுவாமிஜி, நீங்கள் என்னுடன் என் தலைநகருக்கு வந்து வசிக்க வேண்டும். நான் இதயபூர்வமாக உங்களுக்குச் சேவை செய்வேன்” என்று கேட்டுக்கொண்டார். ஒரு கணம் யோசித்தார் சுவாமிஜி. பிறகு சம்மதித்தார்.

ஜூலை 24-ஆம் நாள் மன்னருடன் புறப்பட்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் கேத்ரியை அடைந்தனர். வழியில் சுவாமிஜியிடம் பல்வேறு விஷயங்களைப் பேசவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் மன்னருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

கேத்ரியில் வேதாந்தப் பேச்சு,பாடல்கள், பஜனை என்று சுவாமிஜியின் நாட்கள் கழிந்தன. அவர் எதைப் பேசினாலும் அதிலெல்லாம் தொனித்தது இரண்டு விஷயங்கள்: தாய்நாடு மீதும் இந்துக் கலாச்சாரத்தின்மீதும் அவர் கொண்ட அன்பு அவரது பேச்சிலும் மூச்சிலும் தொனித்தது. கேத்ரியில் வாழ்ந்தபோது அரண்மனையில் மட்டும் தமது நேரத்தைச் செலவிடவில்லை. சாதாரண மக்களைத் தினமும் சென்று சந்தித்தார், அவர்களுடன் உணவு உண்டார், அவர்களின் வாழ்க்கை முறையை ஆழ்ந்து கவனித்தார்.

ஒரு நாள் அரச சபையில் நடன மாது ஒருத்தியின் சங்கீத நிகழ்ச்சி ஓன்று நடைபெற்றது. அதில் கலந்துகொள்ளுமாறு சுவாமிஜியை அழைத்தார் மன்னர். அதற்கு சுவாமிஜி, ‘தாம் ஒரு துறவி, இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கில்லை’ என்று கூறி விட்டார். இந்தச் செய்தி எப்படியோ அந்த நடனமாதிற்கு எட்டியது. ஒரு மகான் என்று கேத்ரி முழுவதும் பிரபலமடைந்த சுவாமிஜி தமது சங்கீத நிகழ்ச்சிக்கு வர மறுத்தத்தைக் கேள்விப்பட்ட அந்தப் பெண் மிகுந்த வேதனைக்கு உள்ளானாள். அவள் செய்வதற்கு எதுவுமில்லை. இருப்பினும் தனது மன வேதனையை சுவாமிஜிக்கு எப்படியாவது தெரிவிக்க வேண்டும் என்று மட்டும் உறுதி செய்து கொண்டாள்.

சங்கீத நிகழ்ச்சி தொடங்கியது. அவள் பாடியது சூர்தாசரின் ஓர் அருமையான பாடல்;

பிரபு எந்தன் குறைகளை மனதிற்கொள்ளாதே
சமபாவனை உனது பண்பல்லவா? நீ
திருவுளம் கொண்டால் என்னைக் கரை சேர்ப்பாய்!

வழிபடும் சிலையாய் எழுந்தருளுவதும்
கத்தியாக உயிரை வதைத்து மாய்ப்பதும்
ஒரே இரும்பு என்பதே உண்மை!

பரிசமணியால் தொட்டால் இரண்டும்
ஒருபோல் பொன்னாக ஆவதும் உண்மை.
பரிசமணியின் மனத்தில் வேற்றுமை உணர்வு
தகுமா, அது அழகா?

ஓடும் நீரில் ஒன்றை நதியாய்
ஒன்றைச் சாக்கடையாய் பெயர் வைக்கின்றோம்.
இரண்டும் நீரே அல்லவா! இரண்டும்
இன்னருள் கங்கையில் இணைகின்றபோது
பேதமுற்றும் நீங்கி புனித கங்கையாகும் அல்லவா?

ஒன்று ஜீவன், ஒன்று இறைவன்
இந்தப் பிரிவு, அறியாமை காரணமாக அல்லவா!
ஞானிக்கு இந்த வேற்றுமை வரலாமா?
இதை சூர்தாஸன் சொல்லித் தெரிய வேண்டுமா?

(* சூர்தாசர் இயற்றிய ‘ப்ரபு மேரே அவகுண் சித்த ந தரோ’ என்று தொடங்கும் இந்திப்பாடலின் தமிழாக்கம்!)

அருகிலுள்ள அறையில்தான் சுவாமிஜி தங்கியிருந்தார். இந்தப் பாடலின் ஆழ்ந்த கருத்து சுவாமிஜியைச் சிந்தனையில் ஆழ்த்தியது.

“இதுதான் என் துறவு நிலையா? நான் ஒரு துறவி. வேற்றுமை காணும் மனம் என்னிடம் இருப்பது தகுமா? ஒரு நடன மாது என்பதற்காக அந்தப் பெண்ணைப் பார்க்காதிருப்பது சரியாகுமா?’ எங்கும் இருப்பது இறைவனே என்றால், அந்த அனுபூதி எனக்கு இருப்பது உண்மை என்றால் நான் யாரையும் ஒதுக்கக் கூடாது.” இத்தகைய முடிவுக்கு வந்த சுவாமிஜி உடனடியாகச் சென்று சங்கீத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

(சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் சில பல காரணங்களுக்காக புறக்கணிக்கப்படுபவர்களுக்கே இந்த நடனமாது கொண்ட வேதனை புரியும்!)

==========================================================

Ramanar-with-Maruthiதுறவின் லட்சணம் என்ன தெரியுமா?

டுத்தும் உடையில் மாற்றம் மட்டும் துறவு ஆகாது!  வீட்டைத் துறப்பதும் துறவு ஆகாது!

உண்மையில் மனதில் உள்ள பந்த பாசங்களையும் ஆசைகளையும் துறப்பதே துறவு ஆகும்!

உலக வாழ்வைத் துறப்பவன் தன் அன்பின் பெருக்கால் உலகையே மூழ்கடிக்கிறான்!

துறவென்பது உலகைச் சுருக்கிக் கொள்வதல்ல! உலகளவு பரந்து விரிந்ததாய் ஆக்கிக் கொள்வதே துறவின் லட்சணம்!

– பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

==========================================================

koovam-thiripurandhakar

உழவாரப்பணி அறிவிப்பு! 

மது தளத்தின் அடுத்த உழவாரப்பணி வரும் ஞாயிறு 18/09/2016 அன்று திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோவில், திருவிற்கோலம் (கூவம்) என்னும் பாடல் பெற்ற தலத்தில் நடைபெறும். ஐயப்பன்தாங்களில் இருந்து வேன் காலை 6.45 க்கு புறப்படும். வரவிரும்பும் அன்பர்கள் அவசியம் மின்னஞ்சல் மூலமோ அல்லது எஸ்.எம்.எஸ். மூலமோ நமக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.

– ரைட்மந்த்ரா சுந்தர், ஆசிரியர், Rightmantra.com | E : editor@rightmantra.com | M : 9840169215

Please check  : உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

==========================================================

உங்கள் உதவி இந்த தளத்திற்கு அவசியம் தேவை…! 

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference. ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Kindly inform us via mobile or email once you transfer your fund. Thanks.

Rightmantra Sundar| E : editor@rightmantra.com | M : 9840169215

==========================================================

Also check… Articles on Swami Vivekananda in Rightmantra.com

ஒரு தொழிலதிபருக்கு விவேகானந்தரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்புமுனை!

எனக்கு ஒரு பிரச்சனை – தப்பு தப்பு – ‘சவால்’!

சேவைக்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்த பரிசு!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

யார் உங்கள் தலைவர்?

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்

நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ?

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *