Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > உங்கள் பிள்ளை நன்றாக தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களை பெற…!

உங்கள் பிள்ளை நன்றாக தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களை பெற…!

print
ழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடப்பட்ட தொடர் விடுமுறையை ஈடுகட்ட பள்ளிகள் தற்போது கூடுதல் நாட்களும் கூடுதல் நேரமும் இயக்கப்படுகின்றன. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் எந்த சூழ்நிலையிலும் பாதித்துவிடக்கூடாதே என்று ஆசிரியர்களும், பிள்ளைகள் நன்றாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களை பெறவேண்டுமே என்று பெற்றோர்களும் கவலைப்படுகிறார்கள். மாணவர்களுக்கு இதனால் ஒருவித மன-அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்னையை எளிதில் சமாளித்துவிடலாம்.

முதற்கண் பெற்றோர்கள் செய்யவேண்டியது, மாணவர்களுக்கு பரீட்சை முடியும்வரை அவர்கள் சில தியாகங்களை செய்யவேண்டும். பிள்ளைகள் மனம் பாதிக்கும்படி பேசுவது, அவர்கள் எதிரில் சண்டையிடுவது, டி.வி. பார்ப்பது இதெல்லாம் தவர்க்கப்படவேண்டும். அவர்களை “படி… படி…” என்று நச்சரிப்பது கூடவே கூடாது. பாஸிட்டிவான உற்சாகப்படுத்தும் அணுகுமுறையே பலன் தரும்.

இது போன்ற தருணங்களில் மாணவர்களிடையே ஏற்படும் தேர்வு குறித்த பயத்தை போக்கவேண்டும். அதற்கு இந்த கட்டுரை உதவியாக இருக்கக்கூடும்.

(இறுதியில் இந்த பதிவின் PDF லிங்க் உள்ளது. பிள்ளைகளுக்கு கொடுப்பதற்கு வசதியாக அதை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்!)

– ரைட்மந்த்ரா சுந்தர், ரைட்மந்த்ரா.காம்

Please check : பிள்ளைகளின் படிப்பை பற்றி இனி கவலைப்படவேண்டாம் – கலைமகளார் திருப்பதிகம்

========================================================

உங்கள் பிள்ளை நன்றாக தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களை பெற…!

இன்றைய மாணவர்களின் கவனத்தை சிதறடிக்க பல வேண்டாத விஷயங்கள் அவர்களை ஆட்கொள்கின்றன. அவற்றுள் ஒன்று, மாணவ மாணவிகளிடத்தில் உள்ள வீண் பயம். அது அவர்களின் மனதின் ஆழத்தில் தேங்கிய குட்டையாக கிடக்கிறது. அந்த பயம் அவர்கது பரீட்சை நேரத்தில் அதிகமாக வெளிப்படுவது பலரும் அறிந்த ஒன்றாகி விட்டது.

மாணவர்களிடத்தில் படிக்கும் காலத்திலேயே தொடங்கும் பயம் அவர்களது அந்திமக்காலம் வரை அவர்களை அல்லல் படுத்திக் கொண்டே இருக்கிறது. தேர்வு பயம், நேர்முகத் தேர்வில் வளர்கிறது. பிறகு அலுவலகத்தில், சமுதாயத்தில் என்று அனைத்து இடங்களிலும் வியாபிக்கிறது.

பயத்தை முளையிலேயே கிள்ளி எறி என்பது சுவாமி விவேகானந்தரின் ஒரு முக்கிய சிந்தனை.

‘பயமற்றிரு’ என உபதேசமாக அல்ல, ஆசிர்வாதமாகவே சுவாமிஜி இளைஞர்களுக்கு கூறியுள்ளார். இந்த ஆசியை நம் மாணவ மாணவிகள் அனைவரும் பெற வேண்டும். அது போன்று, தேர்வில் மதிப்பெண்கள் பெறுவது எந்த அளவிற்கு முக்கியமோ, அதைவிட அதிக அளவிற்கு நம் மாணவர்கள் மதிப்பு மிக்கவர்களாக விளங்குவது முக்கியம்.

ஒரு லட்சியத்துடன் மாணவர்கள் படித்து தேர்வு எழுதும் போது அவர்களுக்கு Marks என்பது சிரமமிருக்காது. அப்போது அவர்கள் நல்ல Remarks வாங்கி Remarkable – குறிப்பிடத்தக்கவர் என்று போற்றும்படி வளர்வார்கள்.

பல வருடங்களாக தீவிரவாதிகளால் மணிப்பூர் மாநிலத்திற்கு கெட்டப் பெயரே நிலவி வந்தது. அந்த அவப்பெயரை நீக்கித் தன் மாநிலத்திற்கு நற்பெயரை ஏற்படுத்தவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் படித்து முகமது இஸ்மத் என்ற மாணவர் 2012- ல் சி.பி.எஸ்.இ +2 -ல் இந்தியாவிலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

இந்த பதிவில் இடம்பெற்றுள்ள கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் ‘சுவிர்’ எழுதும் மாணவர் சக்தி’ என்ற பகுதியில் வெளிவந்தவை.

கேள்வி: தேர்வு எழுத செல்லும்போது மனதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்?

பதில்: பரீட்சை என்ற வார்த்தையை இப்படி பிரித்து பார். பரிட்சை = பார் + இச்சை.

நல்ல மார்க் வாங்கி வாழ்வில் பெரிய நிலைக்கு வர வேண்டும் என்பது போன்ற உன் விருப்பங்களை இச்சைகளாகப் பார்.

அந்த இச்சைகள் நிறைவேறிட எப்படியெல்லாம் இப்போது செயல்பட வேண்டும்; முக்கியமாக இன்று இந்த நேரத்தில் பரிட்சைக்காக எப்படியெல்லாம் உழைத்தால் அந்த இச்சைகளை அடையலாம் என்று பார்.

Swami Vivekanandha rath

கேள்வி: நான் பரீட்சைக்கு நன்றாகப் படிக்கிறேன்.ஆனால் பரீட்சை ஹாலுக்குச் சென்றதும் படித்தது எல்லாத்தையும் மறந்து விடுகிறேன். ஏன்?

பதில்: நீ வீட்டில் இருந்தபடி படிக்கிறாய். படித்ததெல்லாம் நினைவிற்கு வருகிறது. வீட்டில் உன் மனம் அலைபாயவில்லை. அதனால் பயம் இல்லை.

இனி நீ படிக்கும் போதே பரீட்சை ஹாலில் இருப்பது போல் நினைத்துக் கொள். எதை படித்தாயோ அதை எழுதி பார்.

கேள்வி: நான் பாடங்களை முழுமையாக படித்து வருகிறேன். ஆனால் படித்ததை தேர்வில் எழுதி நல்ல மார்க் பெற முடியவில்லை?

பதில்: பரீட்சைக்கு முன்பு நீ செய்வதோ எழுதுவது. பரீட்சைக்கு முன்பு பலமுறை படித்து பயிற்சி பெறுகிறாய். ஆனால் பரிட்சைக்காக எத்தனை முறை எழுதி நீ பயிற்சி பெறுகிறாய் என்று யோசி. எழுதிப் பார்த்தால் அதுவே பரீட்சை நேரத்தில் உன்னை பாடாய் படுத்தும் பயத்திலிருந்து நீக்கும். தைரியமாக எழுதி நல்ல மதிப்பெண் பெறுவாய்.

Swami Vivekanandha rath2

 

கேள்வி: தேர்வுக்கு முன் பதற்றம், மறந்து போகுமோ என்ற பயம் வருவதை எப்படி தவிர்ப்பது?

பதில்: தேர்வு 10 மணிக்கு எனில் அதற்கு முன் குறைந்தது, ஒரு மணி நேரத்திற்கு முன்பே படிப்பதை நிறுத்தி விடு. மனதை டென்ஷன் இன்றி நெகிழ்ச்சியாக வைத்திரு. அது மகிழ்ச்சியை தரும்.

பரீட்சைக்கு முன் மகிழ்ச்சி வேண்டினால், அதற்குமுன் தளர்ச்சி இன்றி நீ படித்திருக்க வேண்டும். அதனால் பதட்டமும் பயமும் போய் விடும். தன்னம்பிக்கை பிறக்கும்.

மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் கொண்டு, தேர்வு கூடத்திற்கு போ. அங்கு ஐந்து R களை நினைவில் கொள். அவற்றின் படி நட. Relax, Receive, Read, Reflect & Respond .

Relax : மன உளைச்சல் அடையாதே. உன் மனம் பளுவின்றி, பஞ்சு போன்று இருப்பதை நினை.

Receive : கடவுளை வேண்டிக் கொண்டே வினாத்தாளை தைரியமாக வாங்கு.

Read : வினாக்களை அமைதியாகப் படி.

Reflect : விடைகளை இதுவரை படித்தவற்றிலிருந்து மனத்திரையில் பார்.

Respond : எந்தெந்த வினாக்களுக்கு உடனடியாக விடையளிக்க முடியும் என்பது உனக்கே தெரியும். அவற்றை முதலில் எழுதிவிடு.

நீ தைரியமாக விடையளித்தால் உன் மனதிலிருந்தே உனக்கு விடைகள் எளிதாக வரும். இவை இல்லாமல் நீ அங்கு சென்றால் அது தேர்வு கூடமாக இருக்காது. தேர்வுக் கூண்டாகி விடும். கூண்டில் சிக்கியவனின் கதி உனக்கு ஏன்?

Swami Vivekanandha rath7

கேள்வி: பரீட்சைக்கு செல்லும் முன் நாம் நம்மை எவ்வாறு தயார் செய்ய வேண்டும்?

பதில்: பரீட்சைக்கு தயார் செய்வது என்பது ஒரே நாளில் நடந்து விடாது. அர்ஜூனன் போருக்கு முதல் நாள் மட்டும் விற்பயிற்சி செய்தவனல்ல.

அதுபோல, நீயும் தினமும் உன் பாடங்களை படி. மனப்பாடம் செய்வதைவிட புரிந்துக் கொண்டு படிக்கும் பாடம் மறக்காது. படிப்பதற்கு ஒரு நிமிடமாவது இறைவனிடம் பிரார்த்தனை செய். படித்தப் பின் படித்தவற்றை எழுதிப் பார்.

சிலர் பரீட்சைக்கு போகுமுன் ஏதோ போருக்கு போவதாக நினைத்துக் கொண்டு பயத்துடன் புறப்படுகிறார்கள். வேறு சிலர் மதிப்பெண் சரியாக வராததால் பொசுங்கி போகிறார்கள். நீ பொறுக்கும் போகாதே, பொசுங்கியும் போகாதே. பரீட்சை உன் நினைவாற்றலை சோதிக்கிறது: குறைந்த நேரத்தில் நீ பயமில்லாமல் செயல்படுகிறாயா என உன்னைப் பரிசோதிக்கிறது.

தேர்வில் குறைந்த நேரத்தில் வேகமாகவும் தெளிவாகவும் நீ ஒன்றை கூற வேண்டும் என்றால், தேர்வுக்கு முன் நீ தினமும் படி. அவ்வாறு படித்ததை அடிக்கடி நினைவுபடுத்தி பார். அப்படி செய்தால் பரீட்சைக்கு போவது படுக்கப் போவதுபோல பரபரப்பின்றி இருக்கும்.

Swami Vivekanandha rath4

கேள்வி: தேர்வில் விடைகள் மறந்து விடுவது ஏன்?

பதில்: மூன்று மணி நேரம் பரபரப்பின்றித் தேர்வு எழுத வேண்டும் எனில், அதற்கு முன் நீ தினமும் மூன்று மணி நேரமாவது சுறுசுறுப்போடு படி. இந்த சுறுசுறுப்பைக் கொண்டு தேர்வு நேர பரபரப்பை முறியடி.

பரிட்சையின்போது நினைவாற்றலுடன் இருக்க வேண்டும் என்றால், மற்றத் தினங்களில் படித்ததை அடிக்கடி நினைவு படுத்திப் பார்.

ஒரு விளையாட்டு வீரன் கையில் வெற்றிக் கோப்பையுடன் 15 வினாடிகள் உலகம் போற்ற நிற்கிறான். அந்த சில வினாடிகளுக்காக அவன் எத்தனை ஆண்டுகளை செலவழித்து பயிற்சி செய்திருப்பான் என்பதை நினைத்துப் பார்.

விதைப்பதையே அறுக்கிறாய். பரிட்சைக்குமுன் நினைவாற்றலையும் படிப்புத் திறமையையும் விதை. பரிட்சையில் நல்ல மதிப்பெண்களை அறுவடை செய்.

Swami Vivekanandha rath5

கேள்வி: முந்தைய தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தும், வரப்போகும் தேர்வுகளை நினைத்தால் பயப்படுகிறேனே….?

பதில்: நல்லதுதானே! பயம் உடையார் பயன் அடைவார்.

அஞ்சுவதற்கு அஞ்சுவது அச்சமல்ல.

தேர்வுக்குமுன் உனக்கு வந்துள்ள பயம் உன்னை நன்கு படிக்க வைத்தால் அது ஒரு வரப்பிரசாதம்தான்.

– இராமகிருஷ்ண மடம் வெளியிட்ட ‘சாதனை மாணவர்களை உருவாக்கும் சுவாமிஜி ‘ என்னும் நூலிலிருந்து…!

To download the above article as pdf :
http://rightmantra.com/wp-content/uploads/2016/01/RightMantra_Exam-Guide.pdf

========================================================

Similar article…

பிள்ளைகளின் படிப்பை பற்றி இனி கவலைப்படவேண்டாம்

=======================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Donate us liberally. 

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

========================================================

Also check…

யார் உங்கள் தலைவர்?

விவேகானந்தர் செய்த சித்திகள் & நவக்கிரகங்களை குளிர்விக்கும் தசாவதார சுலோகம்!

சேவைக்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்த பரிசு!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

யார் உங்கள் தலைவர்?

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்

நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ?

========================================================

[END]

2 thoughts on “உங்கள் பிள்ளை நன்றாக தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களை பெற…!

  1. உண்மையில் இந்த பதிவு என் போன்றவர்களுக்கு ஒரு பொக்கிஷம். வரப்பிரசாதம்.

    நீங்கள் கூறியுள்ள படி என் பிள்ளைகளின் படிப்புக்காக நான் பல தியாகங்கள் செய்திருக்கிறேன். என்னதான் அவர்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் ஊட்டினாலும் அவர்களிடம் உள்ள அந்த தேர்வு பயத்தை போக்க முடியவில்லை.

    இந்த பதிவில் கூறியிருப்பவற்றை நடைமுறைப் படுத்தினால் நிச்சயம் அவர்கள் டென்ஷனின்றி தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் என்பது உறுதி.

    பதிவை pdf வடிவில் டவுன்லோட் செய்ய வசதி ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  2. முதற்கண் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு எழுதப் போகும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த பதிவு அனைத்து பெற்றோகளுக்கும், மாணவர்களுக்கும் உபயோகமான பதிவு. இந்த பதிவை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்பது நமது வாசகர்கள் கடமை. மாணவர்கள் தேர்வு பயம் இல்லாமல் பரீட்சை எழுத உபயோகமாக இருக்கும்

    வாழ்க வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *