Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, November 4, 2024
Please specify the group
Home > Featured > அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

print
ன்று ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம். சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம். ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் மட்டுமே புரியும் என்ற நிலையில் இருந்த ஆன்மீகத்தை குறிப்பாக நமது வேதங்கள் கூறிய அரிய விஷயங்களின் உட்கருத்தை பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் குறிப்பாக இளைஞர்களை கவரும் வண்ணம் கொண்டு சேர்த்தது சுவாமி விவேகானந்தர் என்றால் மிகையாகாது.

பகவான் ராமகிருஷ்ணரின் சீடராக இருந்து பக்தி மார்க்கத்தையும், ஞான மார்க்கத்தையும் கற்றுணர்ந்தவரும், இந்தியாவை காலால் அளந்தவரும், இளைஞர்களை தன் நாவால் கவர்ந்தவரும், 39 வயதில் மண்ணைவிட்டு பிரிந்தாலும், 150 ஆண்டுகளாகியும் மக்கள் மனதில் நின்று ஆள்பவருமான, சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினம் நாடுமுழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவரை நான் நினைக்காத நாளில்லை என்னுமளவுக்கு என் உடலிலும், இரத்தத்திலும் ஆன்மாவிலும் இரண்டறக் கலந்திருக்கிறார் சுவாமிஜி. இந்த தளம் தொடர்பாக என் முயற்சிகளுக்கு கிட்டி வரும் ஆதரவு மற்றும் கிடைக்கும் நட்பு மற்றும் தொடர்பு ,  நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி… நான் எதிர்பாராத ஒன்று.

மக்களின் ரசனை அற்ப விஷயங்களை நோக்கியே அதிகம் செல்லும் இன்றைய காலகட்டத்தில், தங்கள் வாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கு சிறிதும் தொடர்பற்ற விஷயங்களையே பெரும்பாலானோர் வரவேற்கும் ஒரு சூழ்நிலையில் மலிவான உணர்வுகளை வக்கிரங்களை தூண்டும் விஷயங்களை பதிவு செய்வதிலும் அதை பகிர்ந்துகொள்வதிலும் பெருமிதம் காணும் ஒரு சூழலில் இன்றைய இணைய உலகம் சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில் இப்படி ஆன்மிகம், சுயமுன்னேற்றம், உடல் நலம் போன்ற மகத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு ஒரு தளத்தை துவக்கி என்னால் வெற்றிகரமாக ஒரு மாதமாவது நடத்த முடியுமா என்ற ஐயப்பாடு எனக்கு ஆரம்பத்தில் இருந்தது.

ஆனால் எனக்குள் இருந்த தயக்கத்தையும் அவநம்பிக்கையையும் துடைத்தெறிந்து…. “ம்ம்…புறப்படு. உன்னால் முடியும் . ஒரு புதிய உலகத்தை புதிய மனிதர்களை நீ படைக்கப்போகிறாய். உனக்கு தேவையான அனைத்து சக்திகளும் உன்னிடமே இருக்கின்றன….!!” என்று என் உறக்கத்தை களைத்து தோளில் தட்டி என்னை அனுப்பி வைத்தவர் சுவாமிஜி.

[button bg_color=”#7600f5″]ஆனால் எனக்குள் இருந்த தயக்கத்தையும் அவநம்பிக்கையையும் துடைத்தெறிந்து…. “ம்ம்…புறப்படு. உன்னால் முடியும் . ஒரு புதிய உலகத்தை புதிய மனிதர்களை நீ படைக்கப்போகிறாய். உனக்கு தேவையான அனைத்து சக்திகளும் உன்னிடமே இருக்கின்றன….!!” என்று என் உறக்கத்தை களைத்து தோளில் தட்டி என்னை அனுப்பி வைத்தவர் சுவாமிஜி[/button].இறைவனை கோவில் கோவிலாக சென்று வணங்குவதே ஆன்மிகம் என்று கருதப்பட்டுவந்த காலத்தில், வறியவர்களுக்கு சேவை செய்வதே குறிப்பாக பிறர் துன்பம் தீர்த்தலே உண்மையான ஆன்மிகம் என்று உலகிற்கு உணர்த்திய உத்தமனல்லவா அவர்…

சிக்காகோவில் 1893 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச சமய மாநாட்டில் அனைவரும், “டியர் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென்” என்று கூறி உரையை துவக்க இவரோ “மை டியர் பிரதர்ஸ் & சிஸ்டர்ஸ்” என்று கூறி அமெரிக்காவையே ஏன் உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தவராயிற்றே?

எதிர்காலத்தில் இந்தியாவை பற்றி மேல்நாடுகள் குறிப்பிடும்போது  SWAMI VIVEKANANDA’S COUNTRY என்றே குறிப்பிடுவார்கள்.

2011 ஆம் ஆண்டு மத்தியில் சென்னைக்கு விவேகானந்தர் சிறப்பு ரயில் வந்தபோது நண்பர்களுடன் சென்றிருந்து அந்த நடமாடும் கருவூலத்தை கண்டு களித்தேன். ஒரு பவர் ஹவுசில் நுழைந்து வெளியேறியது போன்று உடம்பெங்கும் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு. பத்தாண்டுகளுக்கு தேவையான எனர்ஜியை எனக்குள் தந்தது. அந்த ரயிலை மட்டும் நான் பார்க்காதிருந்திருந்தால் மிகப் பெரிய விஷயங்களை தெரிந்துகொள்ள முடியாமலே போயிருக்கும்.

இன்றைக்கு இறை நம்பிக்கைக்கு இணையாக என் குருதியில் இரண்டற கலந்துள்ள சேவை மனப்பான்மைக்கு காரணமே இவர் தானே. இவர் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்த பிறகு தானே என்னை நானே உணர்ந்தேன். நான் இந்த பிறவி எடுத்ததன் நோக்கத்தை உணர்ந்தேன்.

நாம் வாழ்ந்துவரும் இந்த புனிந்த நாட்டை பற்றி நம் ஒவ்வொருக்கும் என்ன மதிப்பீடு தற்போது இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். இங்கிருந்து  வேலை அல்லது தொழில் நிமித்தமாக வெளிநாடுகள் குறிப்பாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சென்று செட்டிலாகிவிட்டவர்கள் நம் நாட்டை பற்றி தற்போது என்ன அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.

“வாழவே தகுதியில்லாத நாடு சார் அது…. ஒரே பொல்யூஷன், கரப்ஷன், ப்ரைபரி, சாலை வசதி கிடையாது… கொஞ்ச கூட ஹைஜீனே எங்கேயும் இல்லை… எப்படித் தான் இந்தியன்ஸ் அங்கே வாழ்றாங்களோ… O God Save India…” என்று கூறும் பல குரல்களை கேட்டிருப்பீர்கள். ஏன்… நீங்களே கூட அப்படி கூறியிருப்பீர்கள். (பழசை விட்டுத் தள்ளுங்க….இனிமே மாத்திக்கோங்க!)

சுவாமிஜி அமேரிக்கா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட பல அயல்நாடுகளுக்கும் முன்னேறிய நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு தாயகம் திரும்பிய தருணம். நண்பர் ஒருவர் விவேகானந்தரிடம், ‘சுவாமிஜி, ஆடம்பரமும் செல்வாக்கும் மிக்க மேலை நாடுகளில் நான்கு வருடங்கள் வாழ்ந்து விட்டீர்கள். இதோ இப்போது உங்கள் தாயகத்திற்குத் திரும்புகிறீர்கள். உங்கள் தாய்நாட்டைப்பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

விவேகானந்தரின் கண்களில் மகிழ்ச்சியின் கீற்றுகள் மின்னின. முகத்தில் ஆனந்த பரவசம் மிளிர்ந்தது. உணர்ச்சி பொங்கும் குரலில், ‘அங்கிருந்து வருமுன்பு நான் இந்தியாவை நேசித்தேன். இப்போதோ அதன் தூசி கூட எனக்கு புனிதமாகத் தெரிகிறது. அங்கு வீசும் காற்று புனிதம். அது ஒரு புண்ணிய பூமி. அது ஒரு தீர்த்தத்தலம்’ என்று கூறினார்.

இதை இந்த வார்த்தைகளை என்னன்னுங்க சொல்றது? தேசபக்தின்னு சொல்றதா? புரிதல்னு சொல்றதா? மெய்ஞானம்னு சொல்றதா? பக்தின்னு சொல்றதா?

சுவாமிஜியின் சிந்தனைகள் எந்தளவு நமது நாட்டை சுற்றி அமைந்திருக்கிறது. அவர் எந்தளவு நமது நாட்டை நேசித்திருக்கிறார் என்று இதன் மூலம் புரிகிறதா?

[END]

7 thoughts on “அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

  1. Hi Sundarji,

    I’m so happy to see this lovely article and to know about Vivekananda’s passion towards ours (his) own country.

    you have covered both – post related to Vivekananda for his b’day and as well patriotism inducing article for those think that India’s no future because of corruption, other illegal activities…etc.

    Even I too got inspired by his powerful messages and confidence. For me, he is very different – comprising both spiritual and self-being.

    If you ask any person who is so spiritual, he will depend on god alone for anything to be done. (mostly and not all). And if you ask person who is so confident and atheist, he will believe in himself not god.

    But Swami Vivekananda – believed in both. But as the quote says, “God helps only those who help themselves”,

    He always relied on his self confidence to do anything but so spiritual at the same time. He is exemplary person for the recent motivational/self help books which we’re reading/hearing/watching now. And also far more powerful and confident than these days motivators’.

    At last I’m finishing with my favourite quotes of his:
    1. “To succeed, you must have tremendous perseverance, tremendous will. “I will drink the ocean” says the persevering soul. “At my will, mountains will crumble up”. Have that sort of energy, that sort of will, work hard and you will reach the goal”.

    2. எவன் ஒருவனும் ஒன்றை விரும்பி விட்டால், அதை அடைவதில் இருந்து அவனை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது”.

    ****
    **Chitti**.
    Thoughts becomes things…

  2. எனக்கு இந்த பதிவின் மூலம் சென்ற உயிரை மீண்டும் எனக்கு கொடுத்ததற்கு நான் என்ன செய்வேன்? என் உயிர் தலைவனுக்கு இன்று பிறந்த நாள். சுவாமிஜியை பார்க்கும் பொது, அவர் என்னிடம் பேசுவது போலவே உள்ளது. எனக்கு நம்பிக்கை, பலத்தை கொடுக்கிறார். அடுத்த அடி எப்படி எடுத்து வைகபோகிறோம் என்று துன்பத்தில் இருந்தேன். ஆனால் சுவாமிஜி என்னோடு என்றும், கணமும் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். இந்த பதிவிற்கு நன்றி மட்டும் சொல்லி மறக்க போவதில்லை. வாழ்ந்து காட்டுவேன்! ஜெய் ஹிந்த்!

  3. சுவாமி விவேகானந்தர் போன்றவர்களை பற்றி அணைத்து பள்ளிகூடங்களிலும் தினம் அரைமணி நேரம் பாடம் நடத்த வேண்டும் அப்பொழுது தான் எதிர்கால இந்தியா மிக ப்ராகாசமாக இருக்கும்

  4. //விவேகானந்தரின் கண்களில் மகிழ்ச்சியின் கீற்றுகள் மின்னின. முகத்தில் ஆனந்த பரவசம் மிளிர்ந்தது. உணர்ச்சி பொங்கும் குரலில், ‘அங்கிருந்து வருமுன்பு நான் இந்தியாவை நேசித்தேன். இப்போதோ அதன் தூசி கூட எனக்கு புனிதமாகத் தெரிகிறது. அங்கு வீசும் காற்று புனிதம். அது ஒரு புண்ணிய பூமி. அது ஒரு தீர்த்தத்தலம்’ என்று கூறினார்.//

    இந்த ஆழ்ந்த கருத்துள்ள வார்த்தை புரிந்த என் போன்றோர் வெளிநாடு போய் வந்தாலும் மாறவே மாட்டோம் 12.01.2013 எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  5. சுந்தர் சார்,

    இன்னொரு விவேகனந்தர் மாதிரியே கை கட்டிட்டு நிக்கறீங்க ஐயா!! சூப்பர்.

    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *