Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > ஒரு சிறு புன்னகை செய்த மாயம்! – MONDAY MORNING SPL 86

ஒரு சிறு புன்னகை செய்த மாயம்! – MONDAY MORNING SPL 86

print
ல வியாபாரங்கள் செய்து தோற்றுவிட்ட ஒருவன் கடைசியில் என்ன வியாபாரம் செய்வதென்றே தெரியாத நிலையில் அந்த ஊருக்கு வந்த சந்நியாசி ஒருவரை சென்று சந்தித்து தனது நிலைமையை சொல்லி புலம்பினான்.

“நீ வியாபாரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்தது தவறல்ல. என்ன வியாபாரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்ததில் தான் தவறு. மக்களுக்கு எது அன்றாடம் தேவைப்படுகிறதோ எது வாங்க வாங்க தீர்ந்துபோகிறதோ அதை நீ வியாபாரம் செய் உன் பிரச்சனை முடிவுக்கு வரும். நான் வடக்கே யாத்திரை செல்கிறேன். இரண்டொரு மாதங்களில் திரும்ப வருவேன். அப்போது வந்து என்னை மீண்டும் பார்” என்று ஆசி கூறிவிட்டு சென்றார்.

இவனுக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. மக்களின் தேவையை அறிந்துகொள்ளாமல் நமக்கு சுலபமாக இருக்கிறதே என்று நாம் முடிவு செய்து இத்தனை நாள் வியாபாரம் செய்துவந்தோம் அதனால் தான் தோல்வி ஏற்பட்டது என்று உணர்ந்துகொண்டான்.

தொடர்ந்து தனது மனைவி மற்றும் நலம் விரும்பிகளுடன் ஆலோசித்து, அந்த ஊரில் ஒரு காய்கறி கடையை திறந்தான். பக்கத்து ஊர்களுக்கு சென்று காய்,கனி வகைகளை வாங்கி வந்து தனது கடையில் நியாயமான விலைக்கு விற்றான். இதைத் தொடர்ந்து வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அவனுக்கு வாடிக்கையாளர்கள் பெருகினர்.

Vegetable shop

துறவியின் வாக்கு பலித்ததை எண்ணி அகமகிழ்ந்தவன் அவருக்கு மானசீகமாக நன்றி சொன்னான்.

இந்நிலையில், இவனது வியாபாரத்தை பற்றி கேள்விப்பட்ட பக்கத்து ஊர் செல்வந்தர் ஒருவர், இவனது கடைக்கு எதிரே இருந்த ஒரு காலி நிலத்தை வாங்கி அந்த இடத்தில் மிக பிரமாண்டமான கட்டிடம் ஒன்றை கட்ட ஆரம்பித்தார். தனது கடைக்கு எதிரே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்படுவதை பார்த்த இவன் என்ன ஏது என்று விசாரித்தபோது, மிகப் பெரிய பல சரக்கு கடை ஒன்று அங்கு வரப்போவதாகவும், அங்கு காய்கறி முதல் மளிகை சாமான்கள், வீட்டு உபயோக வரை அனைத்தும் கிடைக்கும் என்றும் கூறினார்கள்.

அதைக் கேட்ட இவனுக்கு அடிவயிறு கலக்கியது. இத்தனை ஆண்டுகள் நஷ்டத்தில் வணிகம் செய்து வந்தோம். இப்போது தான் ஓரளவு வியாபாரம் ஆகிறது. இந்நிலையில் இப்படி ஒரு போட்டியா? இந்த கடை கட்டி முடிக்கப்பட்டால், எல்லோரும் இதற்கு செல்லவே விரும்புவார்கள்… என் கடையை யார் எட்டிப் பார்ப்பார்கள்? இறைவா இது என்ன சோதனை என்று கலங்கித் தவித்தான்.

இந்நிலையில், அந்த சந்நியாசியும் தனது யாத்திரை முடிந்து திரும்பினார். அவரிடம் சென்று நடந்ததை விளக்கி, “நான் இப்போது என்ன செய்யவேண்டும்?” என்றான்.

“ஒன்றும் வேண்டாம். நான் சொல்வதைப் போல செய். தினமும் காலை உன் கடையை திறக்கும்போது, ‘இன்று எனக்கு வியாபாரம் நன்றாக நடக்கவேண்டும்’ என்று கடவுளை பிரார்த்தனை செய். அப்படியே எதிர்புறமும் திரும்பி அந்த புதிய கடையிலும் நன்றாக வியாபாரம் நடக்கவேண்டும்’ என்று பிரார்த்தனை செய். ஒப்புக்காக பிரார்த்திக்காமல் மானசீகமாக அதை விரும்பு. நல்லதே நடக்கும்” என்றார்.

“என்னது எனது போட்டியாளரும் நன்றாக இருக்கவேண்டும்? அவருக்கும் நன்கு வியாபாரம் நன்கு நடக்கவேண்டும் என்று பிரார்த்திப்பதா?”

“ஆமாம்… நீ அவருக்கு கூறும் ஒவ்வொரு வாழ்த்தும் நல்லெண்ணமும் உனக்கே பன்மடங்கு திரும்ப வரும். அதே போல அதே போல அவருக்கு தீமை நினைத்தால் அதுவும் உனக்கே திரும்ப வரும்” என்றார்.

sMILE

“அதே போல அவரை எங்கேனும் சந்திக்க நேர்ந்தால், ஒரு போட்டியாளரை பார்ப்பது போல பார்க்காது, ஒரு நண்பரை நலம்-விரும்பியை பார்ப்பது போல பார்த்து ஒரு புன்னகை செய்.” என்றார்.

அந்த சந்நியாசி  மீதும் அவரது வார்த்தைகள் மீதும் இவனுக்கு பெரு மதிப்பு உண்டு என்பதால் அவர் கூறியதைப் போலவே தினமும் முழு  மனதுடன் தனக்காகவும் அந்த எதிர் கடைக்காரருக்காகவும் பிரார்த்தனை செய்து வந்தான். அந்த எதிர்கடைக்காரரை பார்க்கும்போதெல்லாம் புன்னகை செய்தும் வந்தான்.

இதன்பயனாக நாளடைவில் இருவரிடமும் ஒரு வித நட்பு ஏற்பட்டுவிட, தனது கடைக்கு காய்கறிகளை கொள்முதல் செய்யும் பொறுப்பை இவரிடம் விட்டுவிட்டார் அவர். விளைவு இவனுக்கு பன்மடங்கு பிஸ்னஸ் கிடைத்தது.

நாளடைவில் இவன் கடையும் வளர்ந்து ஒரு மிகப் பெரிய காய்கறி சந்தையாக மாறிவிட்டது. மெல்ல மெல்ல அந்த பகுதி முழுக்க வளர்ந்து அந்த பகுதியே ஒரு மிகப் பெரிய வணிக சந்தையாக மாறிவிட்டது.

mIND NOT DUSTBIN

எப்படி இது நிகழ்ந்தது என்று நாம் சொல்வதைவிட, இந்த இடத்தில் ஒரு உண்மை சம்பவத்தை குறிப்பிடவேண்டும்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது. அப்போது எங்கள் பகுதியில் ஒரு டெயிலர் இருந்தார். ஓஹோ என்று வருமானம் இல்லாவிட்டாலும் அவரிடம் ரெகுலர் வாடிக்கையாளர்கள் உண்டு. அவரிடம் காஜா எடுக்க மட்டும் ஒரே ஒரு பையன். நாம் பழகியது வரை அவரை ஓரளவு நமக்கு நன்கு தெரியும். நேர்மையானவர். நல்லவர்.

அவரது கடை பக்கம் போனால் ஒரு சில நிமிடங்கள் செலவழிக்காமல் நாம் போவது கிடையாது. அவர் தினசரி வாங்கும் செய்தித் தாளை படிக்க நாம் அடிக்கடி அவர் கடைக்கு செல்வதுண்டு.

பண்டிகை நாள் தவிர மற்ற நாட்களில் வியாபாரம் மிகவும் டல்லாக இருந்ததால் கடை வாடகை மற்றும் இதர செலவுகளை சமாளிக்க, அவர் தனது கடையில் PCO எனப்படும் பொதுத் தொலைபேசியை அப்ளை செய்து வைத்தார்.

அப்போதெல்லாம் PCO ரொம்ப பேமஸ். ஒரு காலுக்கு ஒரு ரூபாய் சார்ஜ். 25% லாபம் கிடைக்கும். இவர் பி.சி.ஓ.வை வைத்தது தான் தாமதம், போன் பேச கல்லூரி மாணவர்கள், மாணவிகள், காதலர்கள், பணிக்கு செல்வோர், என பலர் வருகை தர ஆரம்பித்தனர். அவர்களில் சிலர் இவரது டெயிலரிங் கடையில் வாடிக்கையாளராக மாறினர். இதையடுத்து துணி தைக்கும் வேலையும் பிக்கப் ஆக ஆரம்பித்தது.

இவரது கடையில் PCO சக்கை போடு போடுவதை பார்த்த எதிர்கடைக்காரர், அவரும் PCO அப்ளை செய்து PCO பூத் வைத்தார்.

இதைக் கண்டு நாம் தான் கலங்கிப் போனோம். “என்ன சார் இது… நம்ம கடையில வர்ற கஸ்டமர்ஸ்ஸை பார்த்து வேணும்னே அவங்களும் PCO பூத் போட்டிருக்காங்க போல. நம்ம பிழைப்புல மண்ணைப் போடறதுக்குன்னே கிளம்பி வர்றான்னுங்களே” என்றோம்.

“அப்படி சொல்லாதீங்க சுந்தர்… எல்லாம் நல்லதுக்கு தான்” என்றார்.

“அதெப்படி? உங்களுக்கு போட்டியா ஒருத்தன் வர்றான். உங்களோட கஸ்டமர்ஸ் இல்லே குறைஞ்சி போவாங்க?” நாம் விசித்திரமாக பார்த்தோம்.

“அப்படி கிடையாது. இங்கே இந்த பகுதியிலேயே ரெண்டு கடை இருக்குறதாலே… இங்கே வந்தா நிச்சயம் போன் பேசலாம்னு நம்பிக்கையோட இன்னும் நிறைய பேர் வருவாங்க… சொல்லப்போனா இனிமே எனக்கு இன்னும் பிஸ்னஸ் பிக்கப் ஆகும். எல்லாரும் நல்லா இருக்கட்டும்! அப்போ தான் நாமளும் நல்லா இருப்போம்!” என்றார்.

(அப்போதெல்லாம் ஒரு அவசரத்திற்கு பேசவேண்டும் என்றால் பி.சி.ஒ. பூத் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அங்கு யாராவது ஒருவர் நின்று ஃபோன் பேசிக்கொண்டிருப்பார்கள்.)

think good copy

அவர் சொன்னதை போல, நாளடைவில் இவர் பிஸ்னஸ் நன்கு பிக்கப் ஆகியது. மெல்ல மெல்ல அந்த இடத்தில் மேலும் நான்கு கடைகளில் PCO வந்துவிட்ட நிலையில், அனைவர் கடைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு குறைவின்றி பிஸ்னஸ் நன்கு நடந்தது.

பி.சி.ஒ மூலம் கிடைத்த வருவாயில், வங்கியில் லோன் போட்டு ஆட்டோமேட்டிக் காஜா மிஷின் ஒன்றை வாங்கினார். இந்த மிஷின் மூலம் சுற்றுப் பகுதியில் இருந்த பத்து பன்னிரெண்டு டெயிலரிங்  கடைகளின் காஜா பட்டன் ஆர்டரும் அவருக்கு கிடைக்க, வருமானம் குவிய ஆரம்பித்தது. மேலும் இரண்டு பையன்களை வேலைக்கு சேர்த்தவர், விரைவில் கடனை அடைத்துவிட்டு, மேலும் இரண்டு புதிய மிஷின்களை வாங்கிப் போட்டு, ஒரு பெரிய எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் ஆர்டரை பெற்றுவிட்டார். கடுமையாக உழைத்து ஒரு சொந்த வீட்டை வாங்கியவர், பிற்காலத்தில் அவர் முதலில் சிறியதாக கடை வைத்திருந்த அந்த கட்டிடத்தையே விலைக்கு வாங்கிவிட்டார் என்று கேள்விப்பட்டோம்.

ஒரு நேர்மறையான அணுகுமுறை, மனோபாவம் எந்தளவு அவரது வாழ்க்கையை மாற்றியிருக்கிறது பார்த்தீர்களா?

நாம் இந்த உலகத்தில் தனியாக இல்லை. ஒவ்வொரு விஷயமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. நமது எண்ணங்கள் நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதில் மிகப் பெரிய பணியை செய்கின்றன. ஒருவரைப் பற்றி நமக்கு ஏற்படும் நல்ல சிந்தனையோ கெட்ட சிந்தனையோ அவரை தீர்மானிப்பதில்லை. நம்மையே தீர்மானிக்கின்றன. எனவே வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறவர் என்றும் எப்போது நல்ல நேர்மறையான சிந்தனையையே வளர்த்துக்கொள்ளவேண்டும்.

மேற்படி கதையிலும் சரி, உண்மை சம்பவத்திலும் சரி… இருவரும் உணர்த்துவது அதைத் தான்.

* மண்டே மார்னிங் ஸ்பெஷல் பகுதியின் நோக்கமே அந்த வாரத்தை புத்துணர்வோடு ஒரு நேர்மறையான சிந்தனையில் துவக்குவது தான். சில சமயங்களில் கடும் பணி சுமை காரணமாக இந்த பகுதிக்கான பதிவை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இது போல மதியம் அளிக்க நேரிடுகிறது. எப்படியிருப்பினும் வாரத்தின் முதல் பதிவு இது தான். I WISH YOU ALL A GREAT WEEK AHEAD.

======================================================================

வெற்றிகரமாக அமைந்த பத்ராவதி பயணம்!

நமது பத்ராவதி பயணம் இறைவனருளால் மிக மிக சிறப்பாக நடந்து முடிந்தது. சிவசுப்ரமணிய ஆஸ்ரமதிற்கு சென்று சுவாமிஜியை பேட்டி கண்டு, பல தகவல்களை திரட்டி வந்திருக்கிறோம். அப்படியே அருகே உள்ள பத்திரகிரி சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் சிவ சுப்ரமணி சுவாமியையும் தரிசித்துவிட்டு வந்தோம்.

Badravati

பயணம் சிறக்க வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. தங்கள் நல்லாசிகளும் நல்லெண்ணங்களும் இருக்கும் வரை எல்லாம் சாத்தியமே. நன்றி.

விரைவில் விரிவான பதிவு…. சிறப்பு புகைப்படங்களுடன்…!

=====================================================================

இன்னும் நீங்கள் நம் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேரவில்லையா? நல்லவர்களை நம்பி நல்லவர்களுக்காக நடத்தபடுகிறது இந்த தளம். இந்த உலகில் நல்லதை விதைக்க, கை கொடுங்கள். இது உங்கள் கடமையல்லவா?

We are running full-time. Give us your hand. Help us to serve you better – Join our ‘Voluntary Subscription’ scheme. Also ask your near and dear ones to join. 

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

=====================================================================

Also check earlier Monday Morning Special articles:

ஒரு சாதாரண மனிதனை சாதிக்க வைத்தது எது ? MONDAY MORNING SPL 85

சுவாரஸ்யமான, மனநிறைவான வாழ்க்கை வேண்டுமா? – MONDAY MORNING SPL 84

‘அணுகுமுறை’ என்கிற மந்திரச்சொல் – MONDAY MORNING SPL 83

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? – MONDAY MORNING SPL 82

அகத்தின் அழகு முகத்தில் தெரியும், எச்சரிக்கை! MONDAY MORNING SPL 81

பராசக்தியின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் – MONDAY MORNING SPL 80

சிரித்தவர்களை பார்த்து சிரித்த நிஜ ஹீரோ – MONDAY MORNING SPL 79

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

ஒரு சிறிய பேட்ஜ் செய்த அற்புதம் – MONDAY MORNING SPL 77

மனுஷனா பிறந்துட்டு எதுக்குங்க மாட்டைப் போல உழைக்கணும்? MONDAY MORNING SPL 76

நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75

வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74

கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா? – MONDAY MORNING SPL 72

பல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69

திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66

உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65

முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6

======================================================================

[END]

11 thoughts on “ஒரு சிறு புன்னகை செய்த மாயம்! – MONDAY MORNING SPL 86

  1. monday மோர்னிங் ஸ்பெஷல் fantastic நேர்மறை எண்ணங்கள் நம்மிடம் இருந்தால் நாம் வாழ்கையின் வெற்றி பாதையை நோக்கி செல்லலாம் என்பதை இந்த ஸ்பெஷல் உணர்த்துகிறது.

    காலையிலிருந்து எதிர்பார்த்து இருந்த எங்களுக்கு மதியம் ஒரு அருமையான கதையை பப்ளிஷ் செய்தததில் அளவற்ற மகிழ்ச்சி. Hats off ……………

    பத்ராவதி பதிவை விரைவில் அளிக்கவும்

    நன்றி
    உமா வெங்கட்

  2. வணக்கம் சார்
    தலைப்பை பார்த்தவுடனே முகத்தில் என்னை அறியாமலேயே புன்னகை தோன்றியது.
    ஒரு புன்னகை செய்த மாயம் நிஜத்திலும் நிழலிலும் அட்டகாசம்.
    நன்றி

  3. நேர்மறை எண்ணங்கள் மற்றும் அணுகுமுறை நம்மை வாழ்வில் உயர்த்தும் என்பதை உணர்த்தும் அழகிய பதிவு………… இது போன்ற பதிவுகள் புது உத்வேகத்தை அளிக்கின்றன…….

    தங்களின் பத்ராவதி பயணம் இனிதே நடந்ததை அறிந்து மகிழ்கிறோம்………

  4. சுந்தர் அண்ணா..

    காலையில் இருந்து எதிர்பார்த்து காத்து இருந்தேன். மிகவும் உயர்ந்த கருத்தை வாழ்வியல்
    நடைமுறையோடு அறிந்து கொண்டேன்.

    late ஆ வந்தாலும் …தகவல்கள் latest தான் அண்ணா.

    மிக்க நன்றி.

  5. வாழ்க வளமுடன்

    சுந்தர் சார் ஓய்வுகே ஓய்வு கொடுப்பவர்

    ஓயாத அலைச்சலிலும் சளைக்காமல் சோமவாரம் பதிவை மிக சிறப்பாக அளிதுள்ளிர்கள்

    நன்றி

  6. ஜி,

    அறம் + பொருள் = இன்பம்

    பிண்ணீட்டிங்க பாஸ்….

    excellent article…!

  7. உயரிய எண்ணங்களே நம்வாழ்வின் அளவுகோல்.
    அற்புதமான ஒரு சிறப்பு பதிவு.
    முத்தாய்ப்பாக, பதிவின் இறுதியில் தாங்கள் summarize செய்துள்ள விதம், பதிவின் மணிமகுடம்

    இந்நேரத்தில், பசுமரத்து ஆணி போல் எனது மனதில் பதிந்து போன,என்னுடைய கல்லுரி நாட்களை நினைவு கூர்கிறேன். கல்லுரி இறுதி ஆண்டு farewell party யில் எனது பேராசிரயர் எழதி கொடுத்த ஆட்டோகிராப்

    “மிக உயரிய எண்ணங்களே நம் வாழ்வினை தீர்மானிக்கின்றன.எனவே அவற்றை இலட்சியமாக கொள்.இந்த இலட்சியத்தில் பாதியளவு அடைந்தால் கூட வாழ்வு வளம் பெரும்”

    காலத்தால் அழிக்க முடியாத கருத்து மணிகள்

    இரண்டு நாட்கள் பயணம், பேட்டி என்று பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் ஒரு மிக சிறப்பான பதிவினை கொடுத்த தாங்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்.

    நன்றிகள் பல .

  8. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினும் தள்ளாமை நன்று.

    Have a nice week.

  9. அருமையான பதிவு. Importance of positive thinking.

    ஆழமான கருத்துக்கள். மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    ஒவ்வோர் Monday Morning Special லும் புதுப்புது கருத்துக்களை கூறுகின்றன.

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  10. வணக்கம் சுந்தர். இதுவரை வந்த mor spl களில் எனக்கு மிகவும் பிடித்தது இது . பலசமயங்களில் அப்படி நினைக்க முடிவதில்லை ஆனாலும் முயற்சிப்பதில் தவறில்லை . அழகான கட்டுரை. வளமோடு இருக்க வாழ்த்துக்கள். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *